3. காமத்துப்பால் - Nature of Love 3.1 களவியல் - On Secret Marriage 3.1.1 தகையணங்குறுத்தல் 3.1.1 Beauty's Dart
1081. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. Is it an angel? A fair peacock 1081 Or jewelled belle? To my mind a shock!
1082. நோக்கினான் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. The counter glances of this belle 1082 Are armied dart of the Love-Angel.
1083. பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையான் பேரமர்க் கட்டு. Not known before - I spy Demise 1083 In woman's guise with battling eyes.
1084. கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக்கு அமர்த்தன கண். This artless dame has darting eyes 1084 That drink the life of men who gaze.
1085. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து. Is it death, eye or doe? All three 1085 In winsome woman's look I see.
1086. கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்இவள் கண். If cruel brows unbent, would screen 1086 Her eyes won't cause me trembling pain.
1087. கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில். Vest on the buxom breast of her 1087 Looks like rutting tusker's eye-cover.
1088. ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு. Ah these fair brows shatter my might 1088 Feared by foemen yet to meet.
1089. பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணியெவனோ எதில தந்து. Which jewel can add to her beauty 1089 With fawn-like looks and modesty?
1090. உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று. To the drunk alone is wine delight 1090 Nothing delights like love at sight.
3.1.2 குறிப்பறிதல் 3.1.2 Signs Speak the Heart
1091. இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. Her painted eyes, two glances dart 1091 One hurts; the other heals my heart.
1092. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பொ¢து. Her furtive lightning glance is more 1092 Than enjoyment of sexual lore.
1093. நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அ·தவள் யாப்பினுள் அட்டிய நீர். She looked; looking bowed her head 1093 And love-plant was with water fed.
1094. யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும். I look; she droops to earth awhile 1094 I turn; she looks with gentle smile.
1095. குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும். No direct gaze; a side-long glance 1095 She darts at me and smiles askance.
1096. உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும். Their words at first seem an offence 1096 But quick we feel them friendly ones.
1097. செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. Harsh little words; offended looks, 1097 Are feigned consenting love-lorn tricks.
1098. அசையியற்கு உண்டாண்டோர் எஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும். What a grace the slim maid has! 1098 As I look she slightly smiles.
1099. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள. Between lovers we do discern 1099 A stranger's look of unconcern.
1100. கண்ணோடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல. The words of mouth are of no use 1100 When eye to eye agrees the gaze.
3.1.3 புணர்ச்சிமகிழ்தல் 3.1.3 Embrace-Bliss
1101. கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. In this bangled beauty dwell 1101 The joys of sight sound touch taste smell.
1102. பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து. The cure for ailment is somewhere 1102 For fair maid's ill she is the cure.
1103. தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. Is lotus-eyed lord's heaven so sweet 1103 As sleep in lover's arms so soft?
1104. நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள். Away it burns and cools anear 1104 Wherefrom did she get this fire?
1105. வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள். The arms of my flower-tressed maid 1105 Whatever I wish that that accord.
1106. உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள். My simple maid has nectar arms 1106 Each embrace brings life-thrilling charms.
1107. தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அ¡¢வை முயக்கு. Ah the embrace of this fair dame 1107 Is like sharing one's food at home.
1108. வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு. Joy is the fast embrace that doth 1108 Not admit e'en air between both.
1109. ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன். Sulking, feeling and clasping fast 1109 These three are sweets of lover's tryst.
1110. அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. As knowledge reveals past ignorance 1110 So is the belle as love gets close.
3.1.4 நலம்புனைந்துரைத்தல் 3.1.4 Beauty Extolled
1111. நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள். Soft blessed anicha flower, hail 1111 On whom I dote is softer still.
1112. மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று. You can't liken flowers by many eyed, 1112 To her bright eyes, O mind dismayed.
1113. முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. The bamboo-shouldered has pearl-like smiles 1113 Fragrant breath and lance-like eyes.
1114. காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று. Lily droops down to ground and says 1114 I can't equal the jewelled-one's eyes.
1115. அனிச்சப்பூக் கால்களையான் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை. Anicha flower with stem she wears 1115 To her breaking waist sad-drum-blares!
1116. மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன். Stars are confused to know which is 1116 The moon and which is woman's face.
1117. அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து. Are there spots on the lady's face 1117 Just as in moon that changes phase?
1118. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி. Like my lady's face if you shine 1118 All my love to you; hail O moon!
1119. மலரன்ன கண்ணான் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி. Like the face of my flower-eyed one 1119 If you look, then shine alone O moon!
1120. அனிச்சமும் அன்னத்தின் தூவியம் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். The soft flower and the swan's down are 1120 Like nettles to the feet of the fair.
3.1.5 காதற்சிறப்புரைத்தல் 3.1.5 Love's Excellence
I - He 1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர். Like milk and honey the dew is sweet 1121 From her white teeth whose word is soft.
1122. உடம்பொடு உயி¡¢டை என்னமற் றன்ன மடந்தையடு எம்மிடை நட்பு. Love between me and this lady 1122 Is like bond between soul and body.
1123. கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம். Depart image in my pupil 1123 Giving room to my fair-browed belle!
1124. வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து. Life with my jewel is existence 1124 Death it is her severance.
1125. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம். Can I forget? I recall always 1125 The charms of her bright battling eyes.
II - She 1126. கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார் நுண்ணியர்எம் காத லவர். So subtle is my lover's form 1126 Ever in my eyes winking, no harm.
1127. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து. My lover in my eyes abides 1127 I paint them not lest he hides.
1128. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து. My lover abides in my heart 1128 I fear hot food lest he feels hot.
1129. இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ் வூர். My eyes wink not lest he should hide 1129 And him as cruel the townsmen chide.
1130. உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னும் இவ் வூர். He abides happy in my heart 1130 But people mistake he is apart.
3.1.6 நாணுத்துறவுரைத்தல் 3.1.6 Decorum Defied
I - He 1131. காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி. Pangs of passion find no recourse 1131 Except riding *`palmyra horse'.
* Palmyra horse or 'Madal' is a torture expressive of the burning passion of the lover to the beloved. The lover's body is laid on a rough pricking palmyra bed and he is carried along the street with songs of love pangs. The parents of the lovers first reproach them and then consent to their marriage.
1132. நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து. Pining body and mind lose shame 1132 And take to riding of the palm.
1133. நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல். Once I was modest and manly 1133 My love has now Madal only.
1134. காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை. Rushing flood of love sweeps away 1134 The raft of shame and firmness, aye!
1135. தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர். Palm-ride and pangs of eventide 1135 Are gifts of wreath-like bracelet maid.
1136. மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்கென் கண். Madal I ride at midnight for 1136 My eyes sleep not seeing this fair.
1137. கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில். Her sea-like lust seeks not Madal! 1137 Serene is woman's self control.
II - She 1138. நிறையா¢யர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும். Lust betrays itself in haste 1138 Though women are highly soft and chaste.
1139. அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு. My perplexed love roves public street 1139 Believing that none knows its secret.
1140. யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு. Fools laugh at me before my eyes 1140 For they feel not my pangs and sighs.
3.1.7 அலரறிவுறுத்தல் 3.1.7 Public Clamour
I - He 1141. அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால். Rumour sustains my existence 1141 Good luck! many know not its sense.
1142. மலரென்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததிவ் வூர். Rumour gives me the flower-like belle 1142 People know not what rare angel.
1143. உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து. I profit by this public rumour 1143 Having not, I feel, I have her.
1144. கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து. Rumour inflames the love I seek 1144 Or else it becomes bleak and weak.
1145. களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது. Drink delights as liquor flows 1145 Love delights as rumour grows.
II - She 1146. கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று. One lasting day we met alone 1146 Lasting rumours eclipse our moon.
1147. ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய். Scandal manures; mother's refrain 1147 Waters the growth of this love-pain.
1148. நெய்யால் எ¡¢நுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல். To quench the lust by rumour free 1148 Is to quench fire by pouring ghee.
1149. அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை. Who said "fear not" flared up rumour 1149 Why then should I blush this clamour?
1150. தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும்இவ் வூர். Town raising this cry, I desire 1150 Consent is easy from my sire.
களவியல் முற்றிற்று |