தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Tamil Language & Literature > Thirukural >Thirukkural in Tamil with English Translation by Kaviyogi Maharishi Shuddhananda Bharatiar >  அறத்துப்பால்-  பாயிரவியல் > அறத்துப்பால் -  இல்லறவியல் > அறத்துப்பால் - துறவறவியல் > அறத்துப்பால் - ஊழியல் > பொருட்பால் - அரசியல > பொருட்பால்  - அமைச்சியல் > பொருட்பால்  - அங்கவியல் >பொருட்பால் - ஒழிபியல் > காமத்துப்பால் - களவியல் > காமத்துப்பால் - கற்பியல்

Thirukkural in Tamil with English Translation by
Kaviyogi Maharishi Shuddhananda Bharatiar

குறட்பாக்கள் தமிழிலும்
கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியாரின்
ஆங்கில மொழியாக்கமும்

[to read the Tamil text you may need to download & install a Tamil Unicode font from here -
for detailed instructions please also see Tamil Fonts & Software]

1. அறத்துப்பால்
1.4 ஊழியல் - Destiny

1.4.1 ஊழ்
1.4.1 Destiny


371. ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.
Efforts succeed by waxing star 371
Wealth-losing brings waning star.

372. பேதைப் படுக்கும் இழவுஊழ் அறிவுஅகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை.
Loss-fate makes a dull fool of us 372
Gain-fate makes us prosperous, wise!

373. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.
What matters subtle study deep? 373
Levels of innate wisdom-keep.

374. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
Two natures in the world obtain 374
Some wealth and others wisdom gain.

375. நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
In making wealth fate changes mood; 375
The good as bad and bad as good.

376. பா¢யினும் ஆகவாம் பாலல்ல உய்த்துச்
சொ¡¢யினும் போகா தம.
Things not thine never remain 376
Things destined are surely thine.

377. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அ¡¢து.
Who crores amass enjoy but what 377
The Dispenser's decrees allot.

378. துறப்பார்மன் துப்பரவு இல்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.
The destitute desire will quit 378
If fate with ills visit them not.

379. நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர் அன்றுஆங்கால்
அல்லற் படுவது எவன்
Who good in time of good perceive 379
In evil time why should they grieve?

380. ஊழின் பெருவலி யாஉள மற்றுஒன்று
சூழினும் தான்முந் துறும்.
What power surpasses fate? Its will 380
Persists against the human skill.

ஊழியல் முற்றிற்று


அறத்துப்பால் முற்றிற்று
 

Mail Usup- truth is a pathless land -Home