2671 | சீர்பூத்த திருமுகமுந்தேவிமுலைப் பால்பூத்த செய்ய வாயு, மேர்பூத்த வருள்பொழியு மிருவிழியும் பொற்றாள மேந்து கையும், பேர்பூத்த தமிழ்க்கூடற் றிருஞான சம்பந்தப் பெருமான் செம்பொற், றார்பூத்த சிறுதண்டைத் தாளுமுளத் துள்ளிவினை தள்ளி வாழ்வாம். | 1 |
2672 | வாழிநெடு வழுதிபுறக் கூனிமிர்த்த நினக்கரிதோ மாறாச் சன்ம, வாழியுழல் வேனகக்கூ னிமிர்ப்பதுதென் கூடலம ரமல வாழ்வே, வீழியித ழுமையளித்த வள்ளநிறை பரஞான வெள்ளமுண்டாய், காழிவளர் மாமணியே கவுணியர்தங் கற்பகமே கலைவ லோயெ. | 2 |
2673 | கலைபுகழா யிரமுகத்தெய் வதமந்தா கினியுடைய கடவுண் மற்றை, யலைபுனலாட் டவுமகிழு மதுபோற்றென் கூடலகத் தன்பர் வாழ்வே, விலையில்கவு ணியமணியே வேதாதி முழுதுடையவிமல நீயோ, தலையடையாச் சிறியேன்செய் புன்றுதிக்கு மகிழ்கூர்த றக்க தாமே. | 3 |
2674 | தக்கபடி யன்றியிரும் படியிடந்து வரையுருட்டிச் சலதி மோது, மிக்கபுனற் பேர்யாற்றிற் பல்லோருங் கரையேறி விளங்கச்செய்தாய், தொக்கசுவைத் தமிழ்க்கூடற் கவுணியக்கன் றேயொருவேன் றொடர்ந்து நாளும், புக்கபவப் பேர்யாறுங் கரையேறச் செயினினக்குப் புகழன் றாமோ. | 4 |
2675 | புகழ்பரவு தமிழ்மதுரைப் புகலிகா வலசலசப் பூந்தார்மார்ப, நிகழ்கருணைக் குரவமறை நிறைசெல்வ பரஞான நேய வாய, வகழ்வினைய ருளத்தமரு மமரசிறு சிலம்பொலிக்கு மம்பொற் றாள, திகழ்வினையி லமணரென வடியன்மல நினக்கெதிராய்ச் சிதைவ தென்றோ. | 5 |
2676 | என்றுநிகர் மணிமாடக் கூடலிட மோவிணையி லெண்டோ ளம்மா, னன்றுதிரு வரத்துறையி லளித்தமணிச் சிவிகைகொலோ வருநோன் புற்று, நன்றுமிகு சிவபாத விருதயர்தந் திருத்தோளோ நாயே னுள்ள, மொன்றுதலி னீயுறைய மழவிளங்கன் றேமணியே யுவட்டாத் தேனே. | 6 |
2677 | தேனார்க்கு மலர்த்தடத்து மோட்டெருமை பாயவெரீஇச்சினந்த வாளை, கானார்க்குங் கற்பகத்தின் கழுத்தொடிய மீப்பாயுங் கணிசூழ் கூடல், வானார்க்கும் பெரும்புகழாய் வண்புகலிப் பெருந்தகையே மறையோர் பேறே, யானார்க்குங் குடியல்ல னினக்கடியேனுய்யுநெறி யருள்க வின்றே. | 7 |
2678 | அருண்மிகுபொற் றில்லைமூ வாயிரருங் கணநாத ராக வாங்கே, தெருண்மிகுநன் னீலகண்டப் பாணருக்குக் காட்டியநீ தேமாஞ்சோலை, பொருண்மிகுவிண் ணுலகளக்கும் புகழ்க்கூடற் சம்பந்தாபுலவரேறே, வெருண்மிகுநா யேன்காண வொருநினைக்காட் டாதிருக்கும் விதமற் றென்னே. | 8 |
2679 | என்னையிவன் றனையடிமை கொள்கென்பா னடியார்தாமில்லை யோவென், றன்னையனை யாய்கூடற் சம்பந்தா நீநினையே லலகிலாச் செம், பொன்னையுடை யாருளதன் வரவைவெறுத் தாருமெவர் புத்த ரானோர், முன்னையடி யாராகக் கொண்டவனு நீயன்றி மொழியின் யாரே. | 9 |
2680 | மொழியுமறை யாயிரமு மெண்ணிறந்த மறையோர்க்கு மொழிந்தா சங்கை, யொழிதரவைந் தெழுத்துமே யந்தியின்மந் திரமென்று முணர்த்தி நின்றாய், பொழிநறவப் பூஞ்சோலைப் புகழ்க்கூடற் சம்பந்தா புகலடைந்தேன், வழிதருமத் துணைவேண்டா வைந்தெழுத்தே யுணர்த்து கெனின் வருத்தமென்னே. | 10 |
2681 | வேறு. வருந்துபொய்ப் பவஞ்ச வாழ்க்கையை மதித்துன் மலரடி யிணைமதி யாதே, யிருந்தஞர்ப் பிறந்தை யுற்றுழல் வேன்கொ லின்னமு மிடையறா வன்பி, னருந்தவர்க் கரசே யாலவா யமுதே யருட்கவு ணியர்குலக் கன்றே, திருந்துபல் லோர்க்குஞ் சிவகதிப் பரிசுசேர்தர நல்குதே சிகனே. | 11 |
2682 | தேசினாற் பொலிநின் றிருமணத் தடைந்த செழுந்தவத் தவரொடும் விரைந்து, கூசிலா தடியே னடைந்திலே னடையிற்குலவுவா னவர்க்கெலா மரிய, வாசிலாப் பதப்பே றெளிதினி முன்னியாவதெ ன்னாவவென் செய்கேன், மாசிலா மணியே மதுரைவாழ்தருவே வளர்கவு ணியர்குல விளக்கே. | 12 |
2683 | குலவுநின் கருணை பெரியர்பா லன்றிக் குணமிலாச் சிறியனேன் பாலு, நிலவுறப் புகுதல் வழக்கருண் மதுரை நிறைதிரு ஞானசம் பந்தா, மலர்தலை யுலகில் வருபெரு வெள்ளம் வாரிவாய்ப் புகுவதே யன்றிப், புலர்தரு முறவி யளையினு மோடிப் புகுதனீ யறிந்திலாய் கொல்லோ. | 13 |
2684 | கொல்லையா னுகைக்குங் குழகனா ரிடப்பால்குடிகொளுங்கோதைமெல் லருப்பு, முல்லைநேர் நகையாண் முலைபொழி தீம்பான்முற்றுமுண் டாங்குமிழ்ந் தாங்கு, வல்லமா மறைநற் றமிழ்பொழிமதுரை வள்ளலே புகலிமா மணியே, யில்லையன் பென்பா லாயினும் புரத்த லிலகுநின் னருட்கியல் பன்றே. | 14 |
2685 | இயறெரி புலவர் புகழுமோத் தூரி லேற்றுவன் பனையெலா மிலகி, மயலறு கதியிற் புகவருள் புரிந்தாய் மற்றவை செய்தவன் பென்னே, புயறவழ் குடுமி மாளிகை மதுரா புரியுறை முத்தமிழ் விரகா, வுயலுற வெனையு மங்ஙன நினைந்தாண் டுன்னடி யிருத்துத லழகே. | 15 |
2686 | அழகிய மயிலை யத்தியைப் பூவை யரசுசெய் தனையுதவாமை, பழகிய பெண்ணை பலவுமின் குரும்பை பலகொளப் பாடினைபற்பல், கழகமுற் றோங்கு மாலவா யமுதே கவுணியர் பெருங்குலவிளக்கே, மழவிளங் களிறே யென்மனந் திருத்தின் மற்றுமப் புகழொடொன் றாமே. | 16 |
2687 | ஒன்றுவெங் காமம் வெகுளியுண் மயக்க மோங்குமும்மதமெனக் கொண்டு, கன்றுமென் மனமாங் களிறகல் பவஞ்சக்காடெலா முழிதரு மதனை, வென்றியா னடக்க வலியிலா மையினான்மேதகு கூடலென் றுரைக்குங், குன்றில்வாழ் தெய்வக் குருபர சமயகோளரி சரணடைந் தனனே. | 17 |
2688 | அடையல ரஞ்சுஞ் சூற்படைச் சொக்க ரங்கயற் கண்ணியோ டமர்ந்த, நடைகெழு கூட னன்மறைக் கொழுந்தே நண்ணினர்க் கெய்ப்பினில் வைப்பே, யிடையறா வன்பி னெண்ணிலார் குழுமியேத்துநின் சந்நிதா னத்திற், கடையனேன் புரியன் பறுதுதி நாணங்கழித்தெதி ரடையவும் பெறுமே. | 18 |
2689 | பெறலருஞ் செல்வ நின்னடி யேத்தும் பெருமையேயென்பது தெரிந்துந், திறல்கொண்முற் றவமில் லாமையால் வருந்தித்திகைத்திடு நெஞ்சமென் செய்கே, னறவருள் விளக்கே யாலவாயமுதே யற்புதக் கற்பகக் கனியே, புறவவண் களிறே போற்றுவார்பொன்னே பொங்குபே ரருட்பெருங் கடலே. | 19 |
2690 | கடல்விளிம் புடுத்த கண்ணகன் புவியிற் கழிதரு பொய்யெனு மெய்யை, யடன்மிக யானென் றவாய்வினைச் சிமிழ்ப்புண்டவத்தைக டொறும்புகு மடியே, னுடலபி மான முதலிய வெறுத்துன் னொண்சிலம் படியடை குவனோ, மடல்விரி கமல வாவிசூழ் மதுரை மாநகர்க் கவுணியக் கன்றே. | 20 |
2691 | வேறு. கன்றி யொருவே னிவண்வருந்தக் கடவ னோவங் கயற்கண்ணி, யொன்றிமகிழு மொருமுதல்வ னுறைதென் கூடற் சம்பந்தா, துன்றி வருத்து குளிர்க்கஞ்சித் தொண்டர் குழுமி முறையிடுமு, னன்றி யுகவு நீலகண்ட நவின்று தீர்த்த நல்லோயே. | 21 |
2692 | நல்லாய் கூடற் சம்பந்தா நல்லார் போல நமைத்தொழநீ கல்லாயென்று கைவிட்டாற் கடையே னுய்யு நெறியுளதோ, செல்லாமழைபெய் யாதொழியிற் றிரைசூழ் புவிக்குய் வகையுண்டோ, வல்லா யுறவென் றூழுதய மாகா விடிற்கண் ணறிவதெவன். | 22 |
2693 | அறிவ தறியும் வகையுணர்த்தி யால வாயி னகத்தொருநீ செறிய வுறைத லாற்புகலித் தேவர் வடியர் சிறந்துய்ந்தார், வெறியனாயி னேனொருவேன் வெய்யோ னுதயத் தெவர்விழியுங், குறிகொளொளியே யடைமவிருள் கூகை விழிக ளடைவனபோல். | 23 |
2694 | அடைய வினிமை யருளுநின்பொன் னடிக ளடைந்தேனதற்கேற்ப, விடைய றாத வன்பில்லே னெனினுங் கூடற் சம்பந்தா, தடையி லடியா னினக்கென்றே சாற்றா நிற்ப ரெனையுலகர், மிடைசில் லுறுப்பி லார்தமையு மக்க ளென்றே விளம்புதல்போல். | 24 |
2695 | விள்ளுங் கருணைப் பெருந்தகையே விண்டாழ் பொழில்சூழ் வியன்மதுரை, யுள்ளு மடியே னுள்ளுமுறை யொருவா பெருமுத் தமிழ்விரகா, தள்ளு மமணர் குலகாலா தண்டைத் தாளா தனிமுதலே, துள்ளுங் கயல்சேர் வயற்புகலித் தோன்றா லென்முன் றோன்றாயே. | 25 |
2696 | தோன்றாய் விழிமுன் மனமாசுந் துடையா யென்னோவருந்திமன, மான்றா யென்றும் வாய்மலராய் மன்னன் றென்னன்மதுரைவளர், சான்றாய் பெருமா னிடப்பாகத் தையன் முலைப்பாலுண்டனே, கான்றாய் போலின் றமிழ்பொழிந்த கருணாநிதியே யிதுதகவோ. | 26 |
2697 | தகவே யென்றுன் சரண்புகுந்தேன் றள்ளி விடநீ வல்லாயோ, நகவே திரிவா னடியார்போ னடிக்குங் கள்வ னிவனம்பாற், புகவே தகானென் றுளத்தெண்ணல் புகழ்த்தென் கூடற் புகலியாய் மிகவே யலைசெய் வாரிதியுள் விரைந்தங் கணநீ ரும்புகுமால். | 27 |
2698 | புகுமே பிறந்தை யென்பாலும் போமே பொறியின் வாய்மனமு, நகுமே சகமு மெனை நோக்கி நண்ணு மேயுண் மயக்கமுநீ, தகுமே யென்று தடுத்தாளிற் சம்பந் தாதோ மொருமூன்றுஞ், செகுமே லவர்க டொழுங்கூடற் றேவா குரவர் சிகாமணியே. | 28 |
2699 | மணியே யனையாய் திருப்புகலி மறையோர் பேறே மதுரைநகர்க், கணியே தோர் பலரையுநீ யடிமை கொண்டா யதற்காகத் தணியே முனிவென் றுனைவெறுக்கத் தக்கார் சிலரு மிருந்தாரோ, துணியே யெனையு மடிமைகொளத் துணிந்தால் வெறுப்பரெவரையா. | 29 |
2700 | ஐய வயனா னெடுமாலா லளந்து காணாப்பரம் பொருளைத் துய்ய வொருகை விரலாலே சுட்டிக் காட்டுஞ் சம்பந்தா வைய மதிக்குந் தென்கூடன் மணியே வயங்கு பொற்றாளக் கைய வுன்னை யெனக்கறியக் காட்டி லதுவே போதுமால். | 30 |
2701 | வேறு போது செறி பிரமபுரப் பொய்கையதன் கரையிடத்துத் தாது செறி மலர்ச்சோலைத் தண்கூடற் சம்பந்தர் யாதுரைசெய் கேன்ஞான வமுதுண்ட நாளமண ரோதுகொடுங் கடியவிட முண்டார்போன் றுலைந்தனரே. | 31 |
2702 | உலையாத புகழ்க்கூட லுவமையின்முத் தமிழ்விரகர் கலையாரு மதியனைய காமர்மணிச் சிவிகைமிசை யிலையார்தண் பொழிலுலக மேத்தவே றியஞான்று கொலையாரு மனத்தமணர் கூர்ங்கழுவே றினரொத்தார். | 32 |
2703 | ஒத்தபுக ழாலவா யுறையுமறைக் கவுணியனார் சித்தமகிழ் திருமுனெழு திருச்சின்னப் பெருக்கோசை வித்தகமி லமணருக்கு வெங்கூற்றி னோசைகொலோ குத்திரவம் மறலிகடாக் குரலோசை யோவறியேம். | 33 |
2704 | அறிவுருவ னாலவா யாண்டகைமுத் தமிழாளி செறிநிழல்செய் மணிமுத்தின் சிவிகைகுடை செழும்பந்தர் பறிதலைய ரூற்றைவாய்ப் பதகர்முதற் பரசமய வறியவருக்கு வேனில்வெயில் வயங்குதலொத் திருக்குமால். | 34 |
2705 | இருக்குமுத லோதாம லெளிதுணர்ந்த கவுணியர்கோன் குருக்கிளர்சண் பையினின்றுங் கூடலடைந் திருந்தவுடன் றருக்கமிகப் பேசிமயிர் தலைபறித்திட் டுழலமணக் குருக்கள்புவி நின்றுகழுக் கூடலடைந் திருந்தனரே | 35 |
2706 | இருந்தவர்க ளேத்தெடுக்கு மெம்மிறைமுத் தமிழாளி யருந்தமிழ்நா வலருறையு மாலவா யமரண்ணல் பொருந்துதிரு மறைக்காட்டிற் புகல்சதுர மறைப்பாடல் வருந்துமனப் பரசமயர் வாயடைத்த பாட்டன்றோ. | 36 |
2707 | பாட்டுவரிச் சுரும்புளரும் பைம்பொழிலிற் பசுமயிலிற் கோட்டுமுலை யார்பயிறென் கூடன்மறைக் குலக்குருளை வாட்டுவினை கடிமயிலை மட்டிட்ட வெனப்புகல்பா வூட்டுபுகழ்ப் பெருஞ்சைவர்க் குயிர்கொடுத்த பாவன்றோ. | 37 |
2708 | அன்றுகனி வொடுபோக மார்த்தபூண் முலையாண்மற் றென்றுகவு ணியாமதுரைக் கிறைவாரு ளியபதிக நன்றுசெறி நெறியொருவா நல்லறிவி னோர்முகங்கட் கொன்றுபொலி வுறுத்தியதே லுவமையதற் குளதாமோ. | 38 |
2709 | உளரளிவண் பொழின்மதுரை யொப்பிலா மணிபுகலிப் பளகில்கவு ணியக்கன்று பாலறா வாய்க்குருளை வளமலிபா சுரமொன்றே வான்சைவ மீடேற வளவிலமண் கழுவேற வாற்றெதிரே றியதம்மா | 39 |
2710 | மாமேவு திருவால வாய்ஞான சம்பந்தர் பூமேவு திருக்காத்தாற் புரிந்தளித்த திருநீறு கோமேவு வுழுதியுடல் குளிர்தரச்செய் தாங்கிருந்த தீமேவு தொழிலமணர் சிந்தையில்வெப் புறுத்தியதே. | 40 |
2711 | வேறு தேவர் தானவர் சித்தர்வித் தியாதரர் திசைபுரப் பவர்மற்றும் யாவருள்ளவ ரவரெலாம் வந்துவந் தடியிணை தொழமேவு மூவா தம்பிரா னாலவா யினிதமர் முத்தமிழ் விரகாயான் பாவரோடுற வுறறுழ வாதுநின் பதத்துற வுறவுன்னே. | 41 |
2712 | உன்னு வார்பிறப் பொழித்திடு மொருவனை யுத்தமர்பெருமானைப், பன்னு வார்க்கினிப் பானைமெய்ஞ் ஞானவின் பாலறாவாயானை, மன்னு வார்பொழின மதுரையா சிரியனை வழிபடா தவரெல்லாந், றுன்னு வார்பிறப் பொழிவரோ வொழிவார் தொழுதவத்தவரேனும். | 42 |
2713 | தவரெனப்படு வார்களு மும்மலத் தடையறு சிவஞானத், தவரெனப்படு வார்களு மிருவளி யடைத்தொரு வழிநிற்பா, ரிவரெனப்படு வார்களுஞ் சிவகதிக் கெதுவழி யென்றோயாய், பவரெனப்படு வார்களு மதுரைச்சம் பந்தன்மெய் யடியாரே. | 43 |
2714 | அடியா செல்வமே யாலவாய் முத்தமி ழாளிகேண் மதிபொல்லாக, கொடிய நாயினேன் விண்ணப்ப மொன்றுவான் குளிர்மதி நதிசூடு, முடிய னையநிற கெனையனெற கனையைநீ முடிவினமறறவற்***, நெடிய சீர்புனை யெனையனமற் றனையனோ நினக்கியானலலேனே. | 44 |
2715 | அல்லை நேர்களத் தண்ணறன் றிருவடிக் கருகரா யனைவோருந், தொல்லை மாவினைத் தொடரோழிந் தானந்தந் துயத்திடவருள்கூர்ந்து, வில்லை வீசுபஞ் சாக்கர மோதிய வித்தக வியன்கூட, னல்லை நீயடி யேற்குமவ் வாறரு ணலகிடி னுயவேனே. | 45 |
2716 | உய்ய லாம்வகை யொன்றுகண் டேனஃ துண்மையேயின்தோமன், வைய வாழ்வடை மயங்கியே யுழிதரு மாந்தாகாண் மடைநண்ணான் ... .... .... ... சம்பந்தன், .... ..... .... ..... தொழும்புபூண்றேறானே. | 46 |
2717 | உறவும் வேனினண் பகலழ லிடைப்புகுந் துணங்குதலுணாநீத்தே, யறவும் வாடுதன் மூச்சவித் திருத்தல்கா லாதிதுய்த்தலுமோவ, லிறவு நேருமென் றிடக்குகை வனம்புகல் யாவுநீத்திடும்வம்மின், புறவ நாயகன் கூடல்வாழ் புண்ணியன் பொன்னடி யடைவீரே. | 47 |
2718 | அடையு நற்பசு விருக்கயான் கற்பசு வடைந்தனென் கறந்தெய்த்தே, னடைகொ ளாலவா யிடையமர் தருபர ஞானபோனகக்கன்றே, குடையும் யானமும் பந்தரு முத்தமாக் கொண்டமுத்தேபொன்னே, மிடையு மும்மல மகன்றருள் பெறும்வகை மெய்யருள் புரிவாயே. | 48 |
2719 | வாய்ந்த செம்பொனாற் செய்கொழுக் கொண்டியான் வரகினுக் குழலுற்றே, னேய்ந்த தீஞ்சுவைக் கனியொரீஇக் காய்கவர்ந்தென்றுமுண் பவன்போன்றே, னாய்ந்த நாவலர் புகழ்மது ராபுரியண்ணலே யடல்கொண்டு, காய்ந்த காமத்தர் கருதிடுங் கவுணியர் காவலா வருள்வாயே. | 49 |
2720 | அருந்து தற்கமை பாலைவிட் டருந்தினே னமைதராப் புளிங்காடி, பொருந்து கங்கையா டப்புகுந் தள்ளலைப் பூசிடு பவன்போன்றேன், றிருந்து மாலவாய்த் தெள்ளமு தேவர சிரபுரத் தவரேறே, மருந்து நேருன தருண்மொழி பெற்றியான் மலமறுத் துயலென்றே. | 50 |
2721 | வேறு. என்றவ றனைத்து மெண்ணா தின்னருள் புரிய வேண்டு நின்றசீர் நெடிய மாற னிலவுநன் னெறிக்க ணேவந் தொன்றமுன் றடுத்தாட் கொண்டா யுவமைதீர் புகலி வாழ்வே வென்றசீ ருடையாய் கூடல் விளக்கமே மெய்மமை யானே. | 51 |
2722 | யானென தெனுங்கோண் ஞான வழல்கொடு நிமிர்க்க வல்லான் ஞானசம் பந்த னன்றி நாடின்மற றகிலத் தியாவ ரீனமி லறவொர் சூழு மிருந்தமிழ்க் கூடல் சார்ந்து மானமா ரனையா வள்ளன் மலரடி வணங்கு வீரே. | 52 |
2723 | வணங்குவா ருள்கு வார்வாய் வாழ்த்துவார் வழுத்து வாரோ டிணங்குவார் நின்பொற் பாத மெய்துவா னெண்ணி யன்பர் குணங்குலாந் துவாத சாந்தக் கூடனமே வியசம் பந்தா விணங்குறாப் பவஞ்ச வாழ்க்கை யேட்டையே னென்செய் கேனே. | 53 |
2724 | செயம்மலி துவாத சாந்தத் திருநக ரொருசம் பந்தா ..... .... .... .... .... மெய்யம்மலி செல்வ ரின்பம் விழைத்தனர் புகுநின் றாளிய பொயம்மலி யேழை வாழ்க்கைப் புன்மையென புகலொ ணாதோ. | 54 |
2725 | ஒண்ணுத லுமையாள் கொங்கை யூறிய பரமெய்ஞ் ஞானங் கண்ணுத லருளா லுண்ட கவுணியர் காளாய் மேலோ ரெண்ணுதல் செய்யுங் கூட லுடையநீ யென்னோ டூடல் பண்ணுத றகாதுன் றீராப் பரவருட் பெருமை நோக்கின். | 55 |
2726 | நோக்குயர் கூடல் வாழ்வே நோன்மைசா லருட்சம் பந்தா தேக்குசீர் வீரட் டானச் சிவபிரா னாடல் கண்டா யாக்கிய புகழின் மேலா மையநின் சித்த மென்றன் பாக்கிய மலர ருட்கட் பார்வைக்கே பார்வை வைத்தேன். | 56 |
2727 | வையகத் தன்பு பூண்டார் குற்றமு மற்றஃ தில்லார் செய்யநற் குணமு முள்ளஞ் செறித்திடாக் கருணை வாழ்வே பொய்யகன் மதுரை மூதுர்ப் புகலியாய் நின்றா ளன்றி வெய்யவேழ் பிறவி யென்னும் வீரைக்கோர் மதலை யின்றே. | 57 |
2728 | இன்றடம் பொழில்சூழ் கூட லெழிற்கவு ணியர்தங் கன்றே யொன்றவைந் தெழுத்தி னுள்ளே யோதுமுப் பொருளுந்தேற நன்றடி யவர்க்கு ணர்த்தி நலமுறுத் திடுதல் போலெற் கென்றருள் புரிவை யென்றே யிருந்தன னெதிர்பார்த் தம்மா. | 58 |
2729 | அம்மைபா லுண்ட ஞான வருட்பெருங் குருளை கூட லெம்மையா ளுடைய தெய்வ மிலகரு ணோக்கஞ் செய்ய நம்மையாய் புரிந்த பாச நசித்திடு நம்பு நெஞ்சே வெம்மையார் கதிரோன் றோன்ற வீடிடா விருளு முண்டோ. | 59 |
2730 | உண்டுடுத் துழல்வேன் றெய்வ முண்டெனு முறுதி நெஞ்சுட் கொண்டுசற் றறியேன் காமக் கொள்கல னாகி நிற்பேன் றொண்டுபட் டுன்றா ளேத்தத் துணிவனோ கணித மில்லா வண்டுதுற் றியபூஞ் சோலை மதுரைமா ஞான வாழ்வே. | 60 |
2731 | வேறு. வாழு மாறுளத் தெண்ணினன் மற்றது மருவத் தாழு மாறுனைத் தாழ்ந்தில னாகிலென் றவறே சூழு மாதவிச் சோலையின் மலர்தொறுந் தும்பி வீழு மாலவாய் மேவிய சிரபுர வேந்தே. | 61 |
2732 | வேந்த ராகிலென் முப்பகையறுத்தற விளங்குஞ் சாந்த ராகிலென் றக்கவ ராகிலென் றவஞ்செய் மாந்த ராகிலென் மதுரையிற் கவுணியன் மலர்த்தா ளேந்த வாய்ந்தநெஞ் சுடையரே சிறந்தவ ரென்றும். | 62 |
2733 | என்று நேர்மணி மாளிகைக் கூடல்வா ழிறையை யன்று ஞானபோ னகமினி துண்டவா ரமுதைக் கன்று சூழ்வினை களைந்தடி யார்க்கருள் கனியை நன்று கண்டுதோத் திரஞ்செயார் நாவென்ன நாவே. | 63 |
2734 | நாவ லோர்புகழ் ஞானசம் பந்தனை நல்லோ ராவ லோடணை யாலவா யிருந்தரு ளமுதைத் தேவ லோகமே யெனச்சொலுஞ் சிரபுரச் செல்வர் காவ லோனைநேர் கண்டிடார் கண்ணென்ன கண்ணே. | 64 |
2735 | கண்ண கன்புவி தொழுதெழ வாலவாய் கலந்தே யெண்ண வம்புரி யமணரைக் கழுவில்வைத் தியார்க்கும் வண்ண நீறளித் திருந்தருண் ஞானமா மணியின் றிண்ண வண்புகழ் கேட்டிடார் செவியென்ன செவியே. | 65 |
2736 | செவிய வாவுமின் றமிழ்பொழி செய்யவாய்த் தேனைப் புவியு ளோர்புகழ் மதுரைமா நகருறை பொன்னைச் சவிவி ராங்கவு ணியர்குல மணியைவெண் டாளக் கவிகை யாளியை யருச்சியார் கையென்ன கையே. | 66 |
2737 | ஏல வார்குழ லுமையருண் ஞானமுண் டெழுந்து சால வெங்கணும் பொழிதமிழ்க் கொண்டலைத் தாவாச் சீல மாதவ ராலவாய் மேவிய கேவைத் தால மேலுற வணங்கிடார் தலையென்ன தலையே. | 67 |
2738 | தலைமை வைதிக மெய்தவுந் தெய்வமாச் சைவ நிலைமை யெய்தவு ஞானவா ரமுதுண்ட நிதியை யிலைகு லாம்பொழில் சூழ்மது ராபுரி யிறையைக் கலைவ லாளனைச் சூழ்தரார் காலென்ன காலே. | 68 |
2739 | காலி னார்பொழிற் கனியுதிர் தரவெழுங் கடுப்பிற் சேலி னார்வயற் றிருமது ராபுரித் தேவைச் சாலி னார்மறைக் கவுணியன் றனைத்தொழச் சாரா மாலி னாருடைப் பிறப்பையெப் பிறப்பென வகுக்கேன். | 69 |
2740 | வகைசெய் மூலமா விலக்கிய மாகவு மறையிற் றகைசெய் பல்பொருண் முற்றவுந் தமிழ்பொழி தருவை முகைசெய் வான்பொழி லாலவாய் மேவிய முதலைத் தொகைசெ யுந்துதி சொற்றனன் சிறந்ததென் றுணிவே. | 70 |
2741 | வேறு. துணியு மாறொன்று சொல்லுவன் யார்க்கும்வான் பணியுங் கூடற்சம் பந்த னடிதொழிற் றணியும் வெவ்வினை சார்த லறும்பவ மணியு மொன்றியொன் றாக்கதி யாருமே. | 71 |
2742 | யாரு மேத்து மியன்மது ராபுரிச் சீருந் தேசுந் திருந்துசம் பந்தர்தா மூரும் யானமுன் றாங்கின ரொண்பதந் தேரு நீரிலென் சிந்தையுந் தாங்குமே. | 72 |
2743 | தாங்கு பேரருட் சம்பந்தன் கூடலா னோங்கு மாமுறை யோதி யெழுதினோ ரேங்கு வேனுக் கெழுவகைச் சன்மமுந் தேங்கு மாறெழு தாவகை தீர்ப்பரே. | 73 |
2744 | தீரன் ஞான சிகாமணி பூந்தரா யூரன் கூட லொருக்கன் றிருமுன ரார வொண்டிருச் சின்னம தூதுவார் வீர மல்கென் வினையையு மூதுவார். | 74 |
2745 | வாரு மன்பினர் வாழ்த்தும் பகலியார் தேருங் கூடற் றிகழ்கரு பிள்ளையார்க் கோரு மன்பின் விருந்தமு தூட்டினா ராரு மெற்கரு ளாரமு தூட்டுவார். | 75 |
2746 | ஊட்டி யன்புயிர்க் கோரெழு சன்மமும் வீட்டி யாளும் விரகர்சம் பந்தர்க்கு நாட்டின் மிக்கநல் லாலவா யீதென்று காட்டி னாரெற் கருங்கதி காட்டுவார். | 76 |
2747 | வார மிக்க மதுரையிற் சம்பந்தர் சேர வாற்றியெண் ணாயிரந் தீக்கழு வார வஞ்ச வமணருக் கூன்றினார் பார வாங்கதிப் பாடெனை யூன்றுவார். | 77 |
2748 | ஊன்ற வுள்ளத்தி னுள்ள பொருளெலா மீன்ற மாதொடு மின்றமிழ்க் கூடல்வா ழான்ற சம்பந்தர்க் காக வொதுக்கினார் மான்ற வென்னை மலநின் றொதுக்குவார் | 78 |
2749 | குவல யம்புகழ் கோமது ராபுரித் தவல ரும்புகழ்ச் சம்பந்தப் பிள்ளையா ருவமை தீரடித் தொண்டருக் கொல்லையே கவலி றொண்டுசெய் வார்கன வானரே. | 79 |
2750 | வான வாழ்வு மதிப்பரி தாஞ்சிவ மோன வாழ்வெனு முத்தியு நல்குமிக் கான கூடன்மெய் யாறு முகத்திரு ஞான சம்பந்தர் நாண்மலர்ப் பாதமே. | 80 |
2751 | வேறு. பாதக மும்மல பந்தத் தாலுறு நோதக வொழிதர நூலு ணர்ச்சிசான் மேதக வோர்குழு மேவு மாலவாய்ப் போதகன் கவுணியன் புகழ்வி ரும்புவாம். | 81 |
2752 | விரும்பிடப் படுவது மெய்ம்மை யாவதுங் கரும்பினு மினிப்பதுங் கவலை தீர்ப்பதுஞ் சுரும்புளர் நறுமலர்ச் சோலை யாலவா யிரும்புகழ்ப் பிள்ளையா ரிணையில் சீர்த்தியே. | 82 |
2753 | சீர்மலி யாலவாய் திகழும் வானகம் பேர்மலி கவுணியப் பிள்ளை யார்மதி யார்மலி யவர்புக ழம்ம திக்கதிர் நார்மலி யடியவர் சகோர நாளுமே. | 83 |
2754 | நாள்பல கண்டதென் மதுரை நற்றட நீள்பல விதழ்மலர் நிலவு சம்பந்த ராள்பல சீர்த்தியவ் வலரி லூறுதேன் றாள்பல வளிக்குலந் ததைந்த வன்பரே. | 84 |
2755 | அன்பமை யாலவா யவிரு மோர்சிலம் பின்பமை சம்பந்த ரினிய நீர்முகின் மன்பெருங் கருணையம் மங்குல் பெய்யுநீர் துன்பமி லடியவர் சூழு மாமயில். | 85 |
2756 | மயலகல் கூடல்லாள் வழங்கு வானக முயல்புரி கவுணிய ரோங்கு கற்பகஞ் செயன்மிகு பொருட்கொடை திருவ ருட்கொடை யயல்விரா வடியவ ரளவில் வானவர். | 86 |
2757 | வானமும் புகழ்திரு மதுரை பாற்கடல் ஞானசம் பந்தனார் நயக்கு நல்லமு தூனமில் சைவர்க ளுவந்த வானவர் தீனவெவ் வமணரே திதிதன் மைந்தர்கள். | 87 |
2758 | மைந்துசே ருதயமால் வரைதென் னாலவாய் நந்துசீர் மழகதிர் ஞான சம்பந்தர் முந்துபு முகமலர் முளரி சைவரே சிந்திரு ளறிவிலா வமணர் தேரரே. | 88 |
2759 | தேருமின் கவுணியர் செய்ய சீரினி தோருமி னவர்கனிந் துரைத்த மாமறை சாருமி னாலவாய் சார்ந்து தாழ்வற வாருமி னருங்கதி யகிலத் தியாருமே. | 89 |
2760 | மேவுதென் னாலவாய் விரும்பு புண்ணியன் மூவுல கும்புகழ் முதல்வன் சம்பந்தன் பூவுயர் பொன்னடி போற்று வார்மல நோவுதீர்ந் துய்வது நுவல வேண்டுமோ. | 90 |
2761 | வேறு. வேண்டாமை வேண்டேன் விழைந்தே திரிந்தேன் பூண்டார் நினக்கன்பு பொய்ப்பாச மற்றா ராண்டா தரிப்பா யருட்கூடன் மேய தூண்டா விளக்கே தொழுஞ்சண்பை யானே. | 91 |
2762 | யானேது செய்கேனென் மனமெங்கு மோடுங் கோனே தடுத்தாட் கொளிற்பொய்ய னுய்வேன் றேனே கரும்பே திருக்கூடல் வாழம் மானே பெருஞ்சண்பை வள்ளற்பி ரானே. | 92 |
2763 | பிரான்வேறும் வேண்டேன் பிதற்றித் திரிந்தே னிராதார னாகாம னீயாண்டு கொள்வாய் குராவாச மென்சோலை கொள்கூடன் மேவும் பராஞான சம்பந்த பண்பாளர் பேறே. | 93 |
2764 | பேறே துதிப்பார் பெருஞ்சண்பை யாள ரேறே தமிழ்க்கூட லின்பப் பிரானே மாறே படும்புன் மனத்தேன் மதித்துன் னாறே யடைந்துய்வ தறிகின்றி லேனே. | 94 |
2765 | ஏமங் குறித்தே யிருந்தே னதற்குன் னாமங் குறித்தோத நாவைத் திருப்பேன் பூமங்கை மேவும் புகழ்க்கூடல் வைப்பே காமங்கை யாருட்பு காச்சண்பை வாழ்வே. | 95 |
2766 | வாழ்வான திருண்மாய மென்றெண்ண மாட்டேன் றாழ்வான தேகொண்டு தடுமாறு கின்றேன் சூழ்வான ரேத்தித் தொழுங்கூடல் வாழ்வே யாழ்வாரி சூழ்காழி யாள்வார்க டேவே. | 96 |
2767 | தேவே கரும்பே தெவிட்டா ததேனே கோவே திருக்கூடல் குடிகொண்ட பொன்னே மாவேரி யொண்டா மரைத்தொங்கன் மார்பா நீவேறு செய்தென்னை நீக்காம லாளே. | 97 |
2768 | ஆளா னவர்க்கே யருட்டே சுறுத்துந் தோளாத முத்தே தொழுங்கூடல் வைப்பே நீளாத ரத்தியாரு நின்றேத்து காழிக் காளா யெனைக்கா கருப்பால் கடிந்தே. | 98 |
2769 | கடிமா மலர்ச்சோலை ககனந் துழாவும் படிமே லெழுந்தண் பழங்கூடல் வைப்பே கொடிமாட மிகுவெங் குருக்கொண்ட லேநின் னடிமா மலர்க்கென்னை யான்செய்த பிழையே. | 99 |
2770 | பிழையாது செயினும் பிறக்கா தகற்று மழையா ரருட்பெருமை வாழ்கவளர் கூடற் றழையாறு முகஞான சம்பந்த குரவன் விழையாறு நனிவாழ்க மிகவாழ்க சீரே. | 100 |