Maaveerar Naal in the USA, November 2001 - Sangam.org Maaveerar Naal was observed at the following locations in the USA: San Francisco, Chicago, New Jersey, Los Angels, Ohio, Florida, New York, and Seattle. The following are select photos from various events.
|
மாவீரர் நாள் 2001, Denmark 24 November 2001.. தமிழீழ விடுதலைப்புலிகள் டென்மார்க் பணியக கலை பண்பாட்டுக்கழகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு 24.11.2001 சனிக்கிழமை அன்று கேர்ணிங் நகரில் மாவீரர் நாள் 2001 மிகவும் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டிருந்தது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கான தங்கள் வணக்கங்களை செலுத்தி கொண்டார்கள்.
மாவீர வணக்க நிகழ்வுகளின் ஆரம்பமாக தேசியஇனம், மக்களின் பண்பு, ஆட்சி இறமை, நாடு என்பவற்றை குறிக்கும் பொது சின்னமான தேசியக்கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. இதனை பூநகரி கூட்டுப்படை முகாம் தகர்ப்பின்போது வீரச்சாவை தழுவிக்கொண்ட ஆலங்கேணி பூநகரியை சேர்ந்த ஐpன்னா என்று அழைக்கப்படும் கலாலட்சுமி கணபதிப்பிள்ளை அவர்களின் தாயாராகிய செல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் ஏற்றி கொண்டார். கொடி வணக்கத்தை தொடர்ந்து அமைதி வணக்கம் எமது தேசம் விடியவேண்டி களமாடி வீழ்ந்த மாவீரர்களுக்கும் மரணித்துக் கொண்ட மக்களுக்குமாக அமைந்து கொண்டது.
இவற்றினை அடுத்து ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வு இதனை தொடக்கி கொண்டார் அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த ருபநிதி கந்தையா என்று அழைக்கப்படும் மேஐர் அல்பேட், நவநிதி கந்தையா என்று அழைக்கப்படும் லெப்டினன் பவான் ஆகிய மாவீரர்களின் சகோதரன் திரு கங்காநிதி கந்தையா அவர்கள் ஈகைச்சுடரேற்றி மாவீரர்களை கௌரவித்து கொண்டதை தொடர்ந்து மாவீரர் பாடல் ஒலிக்கவிடப்பட்டது அதன்போது திரையில் மாவீரர்நாள் காட்சிகள் காண்பிக்கப்பட்டு கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மாவீரர் குடும்பங்கள், மாலதி தமிழ்க்கலைக்கூட மாணவர்கள், மற்றும் பொதுமக்களாக ஈகைச்சுடர்களை அதற்கென அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் மாவீரர் படங்களுக்கு ஏற்றி கொண்டதோடு மலர் வணக்கமும் செலுத்தினர். இவ் நிகழ்வுகள் யாவும் நிறைவுக்கு வர மேடைநிகழ்வுகள் தொடங்கப்பட்டன. இதில் ஆரம்பமாக |விடுதலை வித்துஷ எனும் நாட்டிய நாடகம் இடம்பெற்றது. இதனை திருமதி சுமித்திரா சுகேந்திரா அவர்கள் தயாரி;த்து நெறியாழ்கை செய்திருந்தார். இதனூடாக விடுதலைப்போரின் வலுவையும் விடுதலையில் இணையும் வீரர்களின் உணர்வையும், எம்மக்கள் மீது எதிரி புரியும் கொடுமைகள் தாங்காது தங்கள் பிள்ளைகளை விடுதலைப் போராட்டத்தில், இணைக்கும் தாய்மார்களின் நிலமைகளையும் விளக்கி கொள்வதாக இது அமைந்திருந்தது;
நிகழ்வுகளில் அடுத்து கவிதை இதனை திருமதி சாந்தா செல்வம் தந்திருந்தார். மாவீரர்களின் உன்னதங்களை சொல்லும் கவிதையாக அமைந்திருந்தது. அடுத்து சிறப்பு பேச்சு இதனை பிரான்சில் இருந்து வருகைதந்த பேராசிரியர் திரு. சுகிர்தராஐ; அவர்கள் வழங்கி இருந்தார். அல்ஐPரிய நாட்டில் 13 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்ததோடு சரித்திரத்தில் டொக்டர் பட்டமும் பெற்றுக்கொண்டவர். கல்வித்துறை சேவைக்காக பிரான்ஸ் பிரதமரால் செவலியே விருதும் பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் மக்களுக்காக ஷஇலங்கையில் தமிழர் படுகொலைஷ எனும் நூலையும் எழுதி உள்ளார். இவர் தனது உரையில் தமிழீழ விடுதலைப்போர், அதன் தன்மை, தமிழீழ தேசிய தலைவர் திரு. மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றியும் தற்போதய சர்வதேச ஒழுங்கில் தமிழீழ விடுதலைப்போரி;ன் தன்மைபற்றியும் மிகவும் சிறப்புற விளக்கி கொண்டார்.
தொடர் நிகழ்வில் ஷகார்த்திகை 27ஷ எனும் எழுச்சிக்கோலங்கள் நிகழ்வு திரு. க ஆதவன் அவர்களின் நெறியாழ்கையில் மேற்கத்தேய கீழ்கத்தேய நடனங்களின் இணைவாக கூடிய கலைஞர்களின் இணைப்புடன் மேடையில் விரிந்திருந்தது. இது மாவீரர் நாளில் நாம் எதனை செய்யவேண்டும், எமது கடமை யாது, எமது இனத்தின் எழுச்சி, அவலம் என்பவற்றை சித்தரிப்பதாய் இருந்தது. இதனைத் தொடர்ந்து இடைவேளை. இதற்குப் பிற்பாடு டென்மார்க் தமிழீழ இசைக்குழுவின் மாவீரகானங்கள் இடம்பெற்றது. இறுதிப் பாடலாக ஷநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்ஷ எனும் பாடலுடன் இசை நிகழ்வு இறுதிக்கு வர மாவீரர் வணக்க நிகழ்வுகளின் இறுதியாக தேசியக்கொடி இறக்கும் வைபவம் இதனை பூநகரி கூட்டுப்படை முகாம் தகர்ப்பின்போது வீரச்சாவை தழுவிக்கொண்ட ஆலங்கேணி பூநகரியை சேர்ந்த ஐpன்னா என்று அழைக்கப்படும் கலாலட்சுமி கணபதிப்பிள்ளை அவர்களின் தாயாராகிய செல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் இறக்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து ஷபுலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்ஷ எனும் கோசத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுக்கு வந்தன. நிகழ்வுகள் யாவும் திரு. அன்புமயில் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டிருந்தது.
- செ ஆனந்தன் |