"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Spirituality & the Tamil Nation > திருவிவிலியம் - பழைய ஏற்பாடு > புத்தகம் 1 - தொடக்கநூல் > புத்தகம் 2 - விடுதலைப் பயணம் > புத்தகம் 3 - லேவியர் > புத்தகம் 4. எண்ணிக்கை > புத்தகம் 5. இணைச் சட்டம் > புத்தகம் 6. யோசுவா > புத்தகம் 7. நீதித்தலைவர்கள் > புத்தகம் 8. ரூத்து > புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல் > புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல் > புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல் > புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல் > புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல் > புத்தகம் 14 - குறிப்பேடு - இரண்டாம் நூல் > புத்தகம் 15 - எஸ்ரா > புத்தகம் 16 - நெகேமியா > புத்தகம் 17 - எஸ்தர் > புத்தகம் 18 - யோபு > புத்தகம் 19 - திருப்பாடல்கள் > புத்தகம் 20 - நீதிமொழிகள்
Holy Bible - Old Testament
Book 17: Esther
விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 17 - எஸ்தர்
Acknowledgements:
Our sincere thanks to Rev.Fr. Adaikalarasa, SDB of the Don Bosco Mission, Madurai for providing us with the "bamini" Tamil font e-version of this work and for his help in proof-reading of the TSCII version.
PDF and Web versions Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
This Etext file has the verses in tamil script in unicode/utf-8 format
So you need to have a Unicode font with the Tamil character block and a unicode-compliant browser to view the Tamil part properly.
Several Unicode Tamil fonts are available free download at Tamil electronic library website (http://tamilelibrary.org/index.php?download)
In case of difficulties send an email request to kalyan@geocities.com or kumar@vt.edu
© Project Madurai 2006.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
1. இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரை இருந்த மற்றிருபத்தேழு மாநிலங்களையும் ஆட்சி செய்த மன்னர் அகஸ்வேரின் காலத்தில்,
2. அவர் சூசான் தலைநகரில் அரசுக் கட்டிலில் அமர்ந்து ஆட்சி புரிந்தார்.
3. மூன்றாம் ஆண்டில் தம் குறுநில மன்னர்கள், அலுவலர் அனைவருக்கும் விருந்தொன்று அளித்தார். பாரசீக, மேதியப் படைத் தளபதிகளும், உயர்குடி மக்களும், மாநிலத் தலைவர்களும் அவர்முன் வந்திருந்தனர்.
4. அவர் தம் அரசின் செல்வச் செழிப்பினையும், தம் மாண்பின் மேன்மைமிகு பெருமையையும் மற்றி எண்பது நாள்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார்.
5. அந்நாள்கள் அனைத்தும் நிறைவு பெற்றபின் சூசான் தலைநகரிலிருந்து சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் அனைவருக்கும் அரண்மனைத் தோட்ட வளாகத்தில் ஏழு நாள்களுக்கு அவர் விருந்து அளித்தார்.
6. அங்கு வெண்ணிற, நீல நிறத் தொங்கு திரைகள், வெள்ளித் தண்டுகளிலும் வெண்ணிறப் பளிங்குத் பண்களிலும் மென்துகிலாலும் கருஞ்சிவப்புப் பட்டாலும் பிணைக்கப் பெற்றிருந்தன. வெண்ணீலக் கற்கள், பளிங்கு, முத்துக்கள், விலைமதிப்பற்ற கற்கள் ஆகியவை பதிக்கப்பெற்ற பல வண்ண ஓட்டுத் தளத்தின் மீ£து பொன், வெள்ளி இழைகள் கலந்த மஞ்சங்கள் இருந்தன.
7. வெவ்வேறு வகையான பொற்கிண்ணங்களில் அனைவருக்கும் திராட்சை மது வழங்கினர். அரச மேன்மைக்கு ஏற்பப் பெருமளவில் திராட்சை மது வழங்கப்பட்டது.
8. திராட்சை மது அருந்துதல் சட்டப்படி ஏற்புடையதாக இருந்தது. ஒருவரும் வற்புறுத்தப்படவில்லை. விருந்தினரின் விருப்பத்திற்கிணங்கப் பரிமாறுமாறு அரண்மனையின் தலைமை அலுவலர்களுக்கு அரசர் கட்டளையிட்டிருந்தார்.
9. அவ்வாறே அரசி வஸ்தியும் மன்னர் அகஸ்வேரின் பெண்டிர்க்கு விருந்தளித்தாள்.
10. ஏழாம் நாளன்று திராட்சை மதுவினால் மனம் பூரித்திருந்த மன்னர் அகஸ்வேர் தம் முன்னிலையில் பணியாற்றிய அண்ணகர்களான மெகுமான், பிஸ்தா, அர்போனா, பிக்தா, அபக்தா, சேத்தார், கர்க்கசு ஆகியோருக்கு,
11. பேரழிகியான அரசி வஸ்தியின் எழிலை மக்களும் தலைவர்களும் காணுமாறு அவளை அரச மகுடம் சூட்டப்பட்டவளாகத் தம்முன் அழைத்து வரும்படி கட்டளையிட்டார்.
12. ஆனால் அரசி வஸ்தி அண்ணகர்களின் வழியாக வந்த மன்னரின் சொல்லுக்கு இணங்க மறுத்துவிட்டாள். எனவே மன்னர் கடுஞ்சினமுற்றார். பெரும் கோபக்கனல் அவர் மனத்தில் பற்றி எரிந்தது.
13. உடனே அவர் காலங்கள் பற்றிய நுண்ணறிவுடைய ஞானிகளிடம் கலந்துரையாடினார். ஏனெனில் சட்டங்களிலும், நெறிமுறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களிடம் கலந்துரையாடுவது மன்னரின் வழக்கம்.
14. கர்சனா, சேத்தார், அதிமாத்தா, தர்சீசு, மெரேசு, மர்சனா, மெமுக்கான் ஆகிய பாரசீகத்தையும் மேதியாவையும் சார்ந்த ஏழு தலைவர்களும் மன்னருக்கு மிக நெருக்கமானவர்கள்: ஆட்சிப் பொறுப்பில் முதன்மை பெற்றோர். அவர்கள் மன்னரின் முகமாற்றத்தைக் கண்டனர்.
15. மன்னர் அகஸ்வேர், அண்ணகர்களின் வழியாய் இட்ட கட்டளைப்படி செய்ய மறுத்த அரசி வஸ்திக்குச் சட்டப்படி செய்ய வேண்டியது என்ன? என்று வினவினார்.
16. மன்னருக்கும் ஏனைய தலைவர்களுக்கும் முன்பாக மெமுக்கான் கூறியது: அரசி வஸ்தி மன்னருக்கு எதிராக மட்டுமன்றித் தலைவர் அனைவர்க்கு எதிராகவும், அகஸ்வேரின் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநில மக்களுக்கு எதிராகவும், தவறிழைத்துவிட்டாள்.
17. அரசி வஸ்தியின் நடத்தை எல்லாப் பெண்களுக்கும் தெரியவரும். அவர்கள் பார்வையில் அவர்களின் கணவர் இழிவுப்படுத்தப்படுவர். ஏனெனில், மன்ன+ அகஸ்வேர் அவளைத் தம்முன் வருமாறு பணித்தும்கூட அவர்முன் அவள் வரவில்லையே! என்பர்.
18. இன்றே அரசியின் நடத்தை பற்றிக் கேள்வியுறும் பாரசீக, மேதிய இளவரசிகளும் தம் தலைவர்களிடமும் இதுபோன்றே கூறுவர். ஆதலின் ஏளனத்திற்கும் சினத்திற்கும் முடிவே இராது.
19. எனவே, அரசே! உமக்கு நலமெனப்படின் தாங்கள் ஆணையொன்று பிறப்பிக்க வேண்டும். அவ்வாணை பாரசீக, மேதியச் சட்டங்களில் நிலையாய் இருக்கும்படி எழுதப்படல் வேண்டும். அரசராகிய தங்கள் முன் வஸ்தி இனிவருதல் கூடாது. அவளது அரசுரிமையை அவளைக் காட்டிலும் சிறந்த ஒருத்திக்குத் தாங்கள் கொடுப்பீராக!
20. அரசரால் பிறக்கப்படும் இந்த ஆணை உமது ஆட்சிக்குட்பட்ட, பரந்துகிடக்கும் நாடுகளில் அறிவிக்கப்பட்டவுடன் சிறியோர் பெரியோர் அனைவரின் மனைவியரும் அவர்களின் கணவருக்கு மரியாதை செலுத்துவர்.
21. இவ்வார்த்தை அரசர் மற்றும் தலைவர்களின் பார்வையில் நலமெனத் தோன்றியது. மெமுக்கானின் கருத்திற்கு ஏற்ப மன்னர் செயல்பட்டார்.
22. அவர் தம் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் அவரவர் மாநில வரிவடிவ வாரியாகவும், ஒவ்வொரு மக்களினத்திற்கும் அதனதன் மொழிவாரியகவும் எழுதிய மடல்களில், ஒவ்வொரு ஆண்மகனும் தனது வீட்டில் ஆளுகை செய்யவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்.அதிகாரம் 2.
1. இவற்றுக்குப்பின் மன்னர் அகஸ்வேர் சினம் தணிய அவர் வஸ்தியையும் அவளது செயலையும் அவளுக்கு எதிராய்த் தாம் விடுத்த ஆணையையும் எண்ணிப் பார்த்தார்.
2. அவ்வமயம் மன்னருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த பணியாளர் அவரை நோக்கிக் கூறியது: அரசராகிய உமக்கென அழகும் இளமையும் கொண்ட கன்னிப் பெண்களைத் தேடுவார்களாக!
3. அரசரின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து மாநிலங்களிலும் அழகும் இளமையும் கொண்ட கன்னிப் பெண்கள் அனைவரையும் ஒன்று கூட்டும்படி மேற்பார்வையாளர்களை மன்னர் நியமிப்பாராக! சூசான் அரண்மணையின் அந்தப்புரத்தில் மன்னரின் அண்ணகரான ஏகாயிடம் அப்பெண்களை ஒப்படைத்து, பய்மைப்படுத்தும் பொருள்களை அவர்களுக்குத் தர ஆவன செய்வாராக!
4. மன்னரின் கண்களில் இனியவளாய்க் காணப்படுகின்ற இளம் பெண்ணே வஸ்திக்குப் பதிலாக அரசி ஆவாள். இது மன்னருக்கு நலமெனப் பட்டதால் அவரும் அவ்வாறே செய்தார்.
5. சூசான் அரண்மனையில் மொர்தக்காய் என்னும் பெயர்கொண்ட யூதர் ஒருவர் இருந்தார்.
6. அவர் பென்யமினைச் சார்ந்த கீசின் மகனான சிமயியின் புதல்வரான யாயிரின் மைந்தர்: இந்தக் கீசு எருசலேமில் கைது செய்யப்பட்டு, பாபிலோன் மன்னன் நெபுகத்னேசரால் சிறைப்பிடிக்கப்பட்ட யூதாவின் அரசன் எக்கோனியாவுடன் நாடு கடத்தப்பட்டவர்களுள் ஒருவர்.
7. மொர்தக்காய் அதசா என்னும் மறுபெயர் கொண்ட எஸ்தர் என்பவரை எடுத்து வளர்த்தார். அவர் அவருடைய சிற்றப்பன் மகள்: தாய் தந்தையை இழந்தவர்: எழில்மிகு தோற்றமும் வடிவழங்கும் கொண்ட இளம் பெண்.
8. மன்னரின் சொற்களும் ஆணையும் அறிவிக்கப்பட்டபொழுது, இளம் பெண்கள் பலர் சூசான் அரண்மனைக்குள் ஒன்று சேர்க்கப்பட்டு ஏகாயிடம் ஒப்படைக்கப்பட்டனர். எஸ்தரும் அவ்வாறே அரண்மனையில் அந்தப்புரப் பொறுப்பேற்றிருந்த ஏகாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.
9. அவ்விளம் பெண் ஏகாயின் கண்களுக்கு இனியவளெனக் காணப்பெற்று, அவரது தயவைப் பெற்றார். அவரும் அவருக்குத் தேவையான அழகு சாதனங்களை உடனே தந்து, அரண்மனையில் சிறந்த செவிலியர் எழுவரையும் கொடுத்தார். மேலும் எஸ்தரையும் அவருடைய செவிலியரையும் அந்தப்புரத்தின் சிறந்த பகுதிக்கு மாற்றினார்.
10. யாரிடமும் சொல்லக்கூடாது என்று மொர்தக்காய் ஆணையிட்டிருந்ததால் எஸ்தர் தம் இனத்தையோ வழி மரபையோ வெளிப்படுத்தவில்லை.
11. ஒவ்வொரு நாளும் மொர்தக்காய் அந்தப்புர முற்றத்தில் அங்கும் இங்கும் உலவி, எஸ்தரின் நலன்பற்றியும் அவருக்கு என்னென்ன செய்யப்படுகிறது என்பதைப் பற்றியும் அறிந்து வந்தார்.
12. ஆறு மாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறு மாதம் பெண்டிர்க்கான வாசனைத் தைலங்கள், நறுமணத் பொருள்கள் ஆகியவற்றாலும் அழகுபடுத்தும் பன்னிரு மாதங்கள் நிறைவெய்தின. பின்னர் ஒவ்வொரு இளமங்கையும் மன்னர் அகஸ்வேரின் முன் செல்லும் சமயம் வந்தது.
13. மன்னரிடம் செல்லும் ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும், அந்தரப்புரத்திலிருந்தது அரச மாளிகைக்குச் செல்லும்போது, அவள் கேட்பதனைத்தும் கொடுக்கப்பட்டது.
14. அவள் மாலையில் சென்று, மறுநாள் காலையில் இரண்டாம் அந்தப்புரத்திற்குச் செல்வாள்: அங்கு வைப்பாட்டியரின் கண்காணிப்பாளரான அரச அண்ணகர் சாட்சகாசின் பொறுப்பில் விடப்படுவாள். மன்னர் அவள் மீது விருப்பம் கொண்டு பெயர் சொல்லி அழைக்கும் வரை மன்னிரிடம் அவள் மீண்டும் செல்ல இயலாது.
15. அபிகாயிலின் புதல்வியும், மொர்தக்காயின் வளர்ப்பு மகளுமாகிய எஸ்தர் மன்னருக்கு முன்னே செல்லும் முறை வந்தபொழுது, பெண்களைக் கண்காணிக்கும் அரச அண்ணகர் ஏகாயின் அறிவுரையைத் தவிர வேறெதையும் நாடாமல், காண்போர் அனைவரின் கண்களிலும் அவர் தயவு பெற்றிருந்தார்.
16. அகஸ்வேரின் ஆட்சியின் ஏழாம் ஆண்டில், பத்தாம் மாதமாகிய தேபேத்து மாதத்தில், அகஸ்வேரின் அரச மாளிகைக்குள் எஸ்தர் அழைத்துச் செல்லப்பட்டார்.
17. பெண்கள் அனைவரிலும் எஸ்தரையே மன்னர் மிகுதியாய் விரும்பினார். கன்னிப் பெண்கள் அனைவருள்ளும் அவரே மன்னரின் கண்களில் மிகுதியான தயவு பெற்றார். எனவே அவர் அவரது தலைமீது அரசியின் மகுடம் வைத்து, வஸ்திக்குப் பதிலாக அவரை அரசி ஆக்கினார்.
18. இவற்றிற்குப்பின், எஸ்தரை முன்னிட்டுக் குறுநில மன்னர்களுக்கும் தம் அலுவலர் அனைவருக்கும் பெரிய விருந்து வைத்தார். மேலும் அனைத்து மாநிலங்களுக்கும் மன்னர் விடுமுறை நாளை அறிவித்துத் தம் கைகளினால் அன்பளிப்புகள் வழங்கினார்.
19. கன்னிப் பெண்கள் இரண்டாம் முறையாய் ஒன்று கூட்டப்பட்டபொழுது, மொர்தக்காய் அரசவாயிலில் பணி புரிந்து கொண்டிருந்தார்.
20. மொர்தக்காய் கட்டளையிட்டவாறு, எஸ்தர் தம் வழிமரபிபையோ, இனத்தையோ வெளிப்படுத்தாதிருந்தார். அவரால் வளர்க்கப்பட்டபோது செய்தது போலவே, அப்பொழுதும், எஸ்தர் மொர்தக்காயின் கட்டளைக்கு இணங்கி நடந்தார்.
21. மொர்தக்காய் அரசவாயிலருகில் பணிபுரிந்த நாள்களில், பிகதான், தெ§ருசு என்ற இருவர் சினமுற்று மன்னர் அகஸ்வோரைத் தாக்க வகை தேடினர்.
22. இக்காரியம் மொர்தக்காய்க்குத் தெரிந்தது. இதனை அவர் அரசி எஸ்தரிடம் கூற, அவர் மொர்தக்காயின் பெயரால் அதனை மன்னரிடம் அறிவித்தார்.
23. உடனே அக்காரியம் புலனாய்வு செய்யப்பட, உண்மை வெளிப்பட்டது. அவர்கள் இருவரும் பக்கிலிடப்பட்டனர். இந்நிகழ்ச்சி மன்னர் முன்னிலையில் குறிப்பேட்டில் எழுதிவைக்கப்பட்டது.அதிகாரம் 3.
1. இந்நிகழ்ச்சிக்குப்பின், மன்னர் அகஸ்வேர் ஆகாகியனான அம்மதாத்தின் மகன் ஆமானை உயர்த்தி அவனுடன் இருந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மேலான பதவியில் அமர்த்தினார்.
2. மன்னரின் ஆணைப்படி, அரசவாயிலில் பணிபுரிந்த அனைத்து அலுவலர்களும் தலை வணங்கி ஆமானைப் பணிந்தனர். ஆனால் மொர்தக்காய் மட்டும் அவன்முன் மண்டியிட்டு வணங்கவில்லை.
3. அவ்வமயம் அரச வாயிலில் இருந்த அரசப் பணியாளர் மொர்தக்காயிடம், நீ ஏன் மன்னரின் ஆணைக்குக் கீழ்ப்படிவதில்லை? என வினவினர்.
4. ஒவ்வொரு நாளும் அவர்கள் இவ்வாறு சொல்லியும் மொர்தக்காய் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை. தாம் ஒரு யூதர் என்று மொர்தக்காய் அவர்களுக்கு அறிவிக்க, விளைவைக் காணுமாறு அவர்கள் அதை ஆமானுக்குத் தெரிவித்தனர்.
5. மொர்தக்காய் தம்முன் மண்டியிட்டு வணங்குவதில்லை என்பதைக் கண்ட ஆமானின் நெஞ்சில் வெஞ்சினம் நிரம்பியது.
6. மொர்தக்காயை மட்டும் அழிக்க அவன் விரும்பவில்லை. அவர்தம் இனத்தார் யார் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததால், அகஸ்வேரின் அரசெங்கும் இருந்த அவர்தம் இனத்தாராகிய யூதர் அனைவரையும் அழிக்க ஆமான் வழிதேடினான்.
7. அகஸ்வேரது ஆட்சியில் பன்னிரண்டாம் ஆண்டில், முதல் மாதமாகிய நீசானில், யூதரைப் கொன்று ஒழிப்பதற்கான மாதத்தையும், நாளையும் அறியுமாறு, ஆமானின் முன்னிலையில் “பூர்“ என்ற சீட்டுப் போடப்பட்டது. அதார் என் னும் பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளுக்குச் சீட்டுச் விழுந்தது.
8. ஆமான் அகஸ்வேரிடம், உம் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநிலங்களின் மக்களிடையே மாறுபட்ட மக்கள் சிதறுண்டு பரவியுள்ளனர். அவர்தம் நியமங்கள் மற்றெல்லா மக்களின் நியமங்களிலும் மாறுபட்டவை. அவர்கள் மன்னரின் நியமங்களின்படி செய்வதில்லை. அவர்களை அவ்வாறே விட்டுவைப்பதில் மன்னருக்கு நன்மை ஏதுமில்லை.
9. இது மன்னருக்கு நலமெனப்பட்டால், அவர்களை அழிக்கும்படி கட்டளையிடவேண்டும். இவ்வேலையைச் செய்வோருக்குக் கொடுக்குமாறு நாடீறு டன் வெள்ளியை நிறுத்து மன்னரின் கருவூலத்தில் சேர்ப்பேன் என்று கூறினான்.
10. அப்போது, மன்னர் தம் கணையாழியைக் கழற்றி, யூதரின் பகைவனாம் ஆகாகியனான அம்மதாத்தின் மகன் ஆமானிடம் கொடுத்தார்.
11. மன்னர் ஆமானிடம், வெள்ளியும், யூத மக்களும் உன் கையில்: உனக்கு நலமெனப்பட்டதை அவர்களுக்கச் செய் என்றார்.
12. உடனே அரச எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டனர். முதல் மாதம் பதின்மூன்றாம் நாளில் ஆமான் கட்டளையிட்ட அனைத்து அரசின் குறுநில மன்னர்களுக்கும், மாநிலங்களுக்கும் அனைத்து ஆளுநர்களுக்கும், அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும், அவர்தம் மக்களின் வரிவடிவ வாரியாகவும், மொழி வாரியாகவும் அரசரின் பெயரால் எழுதப்பெற்று, அரச கணையாழியால் முத்திரையிடப் பெற்று அனுப்பப்பட்டது.
13. அதார் என்ற பன்னிரண்டாம் மாதத்தின் பதின்மூன்றாம் நாளன்று, ஒரே நாளில், சிறுவர்முதல் பெரியோர் வரை, குழந்தைகளும் பெண்களும் உட்பட யூதர் அனைவரும் கொல்லப்பட்டு, அழிந்து ஒழிந்துபோகுமாறும், அவர்தம் உடைமைகள் கொள்ளையிடப்பட வேண்டும் எனவும் எழுதப்பட்ட மடல்கள் விரைவு அஞ்சலர் வழியே அரசின் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டன.
14. இம்மடலின் நகல் ஒவ்வொன்றும், ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டமாக அறிவிக்கப்பட்டு, மக்கள் அனைவரும் அந்நாளுக்கென ஆயத்தமாகும்படி அழைக்கப்பட்டனர்.
15. விரைவு அஞ்சலர் மன்னரின் ஆணையால் ஏவப்பட்டு விரைந்து வெளியேற, சூசான் அரண்மனையிலும் இச்சட்டம் அறிவிக்கப்பட்டது. மன்னரும் ஆமானும் மது அருந்துமாறு அமர்ந்தனர். சூசான் நகரே கலங்கிற்று.அதிகாரம் 4.
1. இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் அறிந்த மொர்தக்காய் தம் ஆடைகளைக் கிழித்து, சாக்கு உடை அணிந்து, சாம்பல் பூசிக்கொண்டு, வெளியே நகரின் மையத்திற்குச் சென்று ஓலமிட்டு, மனங்கசிந்து அழுதார்.
2. அரச வாயிலுள் சாக்கு உடை அணிந்து எவரும் நுழையக்கூடாது என்பதால் அவர் வாயில் வரை சென்றார்.
3. மன்னரின் வார்த்தையும் நியமமும் எந்தெந்த மாநிலங்களை அடைந்தனவோ, அங்கெல்லாம் இருந்த யூதரிடையே பெரும் புலம்பலும், நோன்பும், கண்ணீரும், அழுகையும் விளங்க, அனைவரும் சாக்கு உடை அணிந்து சாம்பல் பூசிக் கொண்டனர்.
4. எஸ்தரின் செவிலியரும் அண்ணகர்களும் வந்து இவற்றை அவரிடம் சொல்ல, அரசி பெரிதும் வாடித் துடித்தார். மொர்தக்காய் சாக்கு உடை களைந்து, நல்லாடை அணிந்து கொள்ளும்படி ஆடைகளை அவர் அனுப்பி வைத்தார். அவரோ அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.
5. எஸ்தருக்குப் பணிபுரியும்படி மன்னரால் நியமிக்கப்பட்டிருந்த அண்ணகர் அத்தாக்கை அவர் அழைத்து, மொர்தக்காயின் அவலநிலைக்குக் காரணம் யாதென அறிந்து வருமாறு அனுப்பினார்.
6. அத்தாக்கு அரச வாயிலுக்கு எதிரே நகர்ச் சந்தியில் இருந்த மொர்தக்காயிடம் சென்றார்.
7. மொர்தக்காய் தமக்கு நேரிட்ட அனைத்தைப்பற்றியும், யூதரை அழிக்கும்படி அரச கருவூலத்தில் சேர்ப்பதற்காக ஆமான் வாக்களித்த வெள்ளி பற்றியும் அவருக்குத் தெரிவித்தார்.
8. மேலும், சூசானில் பிறப்பிக்கப்பட்ட நியமத்தின் ஒரு நகலை எஸ்தரிடம் காட்டும்படி கொடுத்து, அலர் மன்னரிடம் சென்று மன்றாடி, அவர் முன்னிலையில் தம் மக்களுக்காகப் பரிந்து பேசுமாறு வேண்டினார்.
9. அத்தாக்கு அவ்வாறே சென்று, எஸ்தரிடம் மொர்தக்காயின் வார்த்தைகளை எடுத்துரைத்தார்.
10. எஸ்தர் மறுபடியும் அத்தாக்கு வழியாய் மொர்தக்காய்க்குச் சொல்லி அனுப்பியது:
11. மன்னரால் அழைப்புப் பெறாத ஆண், பெண் எவரும் மன்னரின் உள்முற்றத்திற்குச் சென்றால் கொல்லப்படுவர் என்பதும், யாருக்கு மன்னர் தம் பொற்செங்கோலை நீட்டுகிறாரோ அவரே பிழைப்பார் என்பதும் அரச நியமம்: இதனை மன்னரின் அனைத்து ஊழியர்களும், மாநில மக்கள் அனைவரும் அறிவர்.
12. அவரும் எஸ்தரின் வார்த்தைகளை மொர்தக்காயிடம் அறிவித்தார்.
13. அதற்கு மொர்தக்காய் எஸ்தரிடம் அறிவிக்கும்படியாகக் கூறியது: அனைத்து யூதருள்ளும் அரச மாளிகையில் உள்ள நீ மட்டும் காப்பாற்றப் பெறுவாய் என உனக்குள் கற்பனை செய்ய வேண்டாம்.
14. ஏனெனில், இவ்வமயம் நீ மெளனமாய் வாளாவிருப்பின், விடுதலையும் பாதுகாப்பும் யூதருக்குப் பிறிதொரு இடத்தினின்று தோன்றும். ஆனால் நீயும் உன் தந்தையின் வீட்டாரும் அழிவீர். யார் அறிவார்? ஒருவேளை இதுபோன்ற நேரத்திற்கெனவே நீ அரசியாகி உள்ளாய் போலும்! .
15. இது கேட்ட எஸ்தர் மொர்தக்காயிடம் சொல்லும்படியாகக் கூறியது:
16. சூசானில் காணப்படும் அனைத்து யூதரையும் ஒன்று சேர்ப்பீராக! எனக்காக நோன்பிருந்து, மூன்றுநாள் இரவு பகல் உண்ணாமலும், குடியாமலும் இருப்பீராக! நானும் என் செவிலியரும் அவ்வாறே நோன்பிருப்போம். சட்டத்திற்குப் புறம்பே எனினும் நான் மன்னரிடம் செல்வேன்! அழிவதாயின் அழிகின்றேன்.
17. மொர்தக்காய் அவ்வாறே சென்று, எஸ்தரின் வாக்கின்படியே அனைத்தையும் செய்தார்.அதிகாரம் 5.
1. மூன்றாம் நாள் எஸ்தர், அரசியின் ஆடையணிந்து அரச மாளிகைக்கு எதிரில் இருந்த உள்முற்றத்தில் நின்றார். அரண்மனை நுழைவாயிலின் எதிரில் இருந்த அரசவை மண்டபத்தில், அரியணை மீது மன்னர் வீற்றிருந்தார்.
2. உள்முற்றத்தில் நின்ற அரசி எஸ்தரைக் கண்டதும் மன்னரின் கண்களில் அவருக்குத் தயவு கிடைத்தது. மன்னர் தம் கைகளில் இருந்த பொற்செங்கோலை எஸ்திரிடம் நீட்ட, எஸ்தர் அருகில் சென்று செங்கோலின் நுனியைத் தொட்டார்.
3. மன்னர் அவரை நோக்கி, எஸ்தர் அரசியே! உனக்கு என்ன வேண்டும்? என் அரசின் பாதியேயாகிலும் அது உனக்களிக்கப்படும் என்றார்.
4. அதற்கு எஸ்தர், மன்னர் விரும்பினால், இன்று நான் வைத்திருக்கும் விருந்திற்குத் தாங்களும் ஆமானும் வருகை தர வேண்டும் என்று பதிலிறுத்தார்.
5. எஸ்தரின் அழைப்பிற்கிணங்கி மன்னர் ஆமானை விரைந்து வருமாறு பணித்தார். அவ்வாறே மன்னரும் ஆமானும் எஸ்தர் வைத்த விருந்திற்குச் சென்றனர்.
6. விருந்தில் திராட்சை மது அருந்துகையில், மன்னர் எஸ்தரை நோக்கி, உன் வேண்டுகோள் எதுவோ அது உனக்குக் கொடுக்கப்படும்: அது அரசின் பாதியே ஆனாலும் உனக்குக் கொடுக்கப்படும் என்றார்.
7. அதற்கு எஸ்தர், என் விண்ணப்பமும் வேண்டுகோளும் இதுவே: மன்னரின் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால், மன்னரின் பார்வையில் இது நலமெனத் தோன்றினால்,
8. மன்னரும் ஆமானும் நான் நாளைய தினமும் உங்களுக்காய் ஆயத்தம் செய்யும் விருந்திற்கு வருகை தருமாறு வேண்டுகின்றேன். அவ்வமயம் மன்னரின் வார்த்தையின்படி என் விண்ணப்பத்தைத் தெரிவிப்பேன் என்று பதிலிறுத்தாள்.
9. அன்று ஆமான் மகிழ்வுடனும் உவகையுடனும் வெளியே சென்றான். ஆயினும் அரச வாயிலருகில் பணிபுரிந்த மொர்தக்காய் எழுந்து நிற்காததையும் தன்னைக் கண்டு ஒதுங்கி நில்லாததையும் பார்த்தபொழுது அவருக்கெதிராய் ஆமானின் நெஞ்சம் வெஞ்சினத்தால் நிறைந்தது.
10. எனினும், ஆமான் தன்னைக் கட்டுப்படுத்தியவாறே வீட்டிற்கு வந்து, தன் நண்பர்களையும் மனைவி செரேசையும் வரும்படி அழைத்தான்.
11. ஆமான் அவர்களிடம் தன் செல்வச் சிறப்பைப் பற்றியும், தன் மைந்தர்களின் எண்ணிக்கையைப் பற்றியும், மன்னர் தன்னை எவ்வாறு அனைத்துத் தலைவர்களுக்கும் அரச அலுவலர்களுக்கும் மேலாய் உயர்த்தியுள்ளார் என்பதைப் பற்றியும் விரித்துரைத்தான்.
12. மேலும் அவன், அரசி எஸ்தர் ஆயத்தம் செய்த விருந்திற்குத் தன்னையன்றி வேறெவரையும் மன்னருடன் வரும்படி அனுமதியாமல், நாளையும் விருந்திற்கு என்னை மன்னருடன் வருமாறு அழைத்திருக்கிறாள்.
13. எனினும், அரசவாயிலருகில் அமர்ந்திருக்கும் யூதனாகிய மொர்தக்காயைக் காண்கையில் இவையனைத்தும் எனக்கு ஒன்றும் இல்லை எனவும் கூறினான்.
14. இதைக் கேட்ட அவன் மனைவி செரேசும், நண்பர்களும் அவனை நோக்கி, ஜம்பது முழ உயரத் பக்கு மரம் செய்து, நாளை மன்னரிடம் கூறி மொர்தக்காயை அதில், பக்கிலிட்டுப் பின்னர் அரசருடன் விருந்துண்டு மகிழச் செல்லும்! என்றனர். இவ் வார்த்தை ஆமானுக்கு நலமெனப்பட்டதால் அவன் பக்குமரம் ஒன்று செய்வித்தான்.அதிகாரம் 6.
1. அன்றிரவு மன்னருக்குத் பக்கம் வரவில்லை. எனவே அவர் தம் ஆட்சியின் குறிப்புகள் அடங்கிய ஏட்டைத் தம்மிடம் கொண்டுவந்து வாசிக்குமாறு பணித்தார்.
2. அரண்மனை வாயிற் காவலர்களான அலுவலர் பிக்தானாவும், செரேசும் மன்னர் அகஸ்வோரை கொல்ல வகை தேடினதை மொர்தக்காய் அறிவித்ததாக அதில் எழுதப்பட்டிருந்தது.
3. அச்சமயம் மன்னர், இதற்காக மொர்தக்காய்க்கு என்ன மரியாதையும் சிறப்பும் செய்யப்பட்டடன? என்று வினவ, மன்னரின் பணியாளர் அவருக்கு யாதென்றும் செய்யப்படவில்லை என்றனர்.
4. முற்றத்தில் இருப்பது யார்? என்று மன்னர் வினவினார். தான் நாட்டிய பக்கு மரத்தில் மொர்தக்காயை பக்குலிட வேண்டும் என்று மன்னரிடம் வேண்டுவதற்காய் ஆமான் அவ்வமயம் அரசமாளிகையின் வெளிமுற்றத்தில் வந்து நின்றான்.
5. மன்னரின் பணியாளர் மன்னரை நோக்கி, இதோ, ஆமான் முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார் என்றனர். உடனே மன்னர் அவனை உள்ளே வரச் சொன்னார்.
6. ஆமானிடம், மன்னர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்கு என்ன செய்ய வேண்டும்? என்று மன்னர் வினவினார். என்னைவிட வேறு எவருக்கு மன்னர் மரியாதை செய்ய விரும்புவார்? என்று ஆமான் தன் உள்ளத்தில் நினைத்துக் கொண்டான்.
7. எனவே ஆமான் மன்னரை நோக்கி, மன்னர் தாம் மரியாதை செய்ய விரும்பும் ஒருவருக்கென,
8. மன்னர் அணிகின்ற ஆடைகளும், அமர்கின்ற புரவியும், தலையில் சூடும் மகுடமும் கொண்டுவரப்பட வேண்டும்.
9. அந்த ஆடைகளும் புரவியும் அரசரின் தலைமை அதிகாரிகளுள் சிறந்த உயர்குடிமகன் ஒருவரிடம் ஒப்படைக்கப்படவேண்டும். மன்னர் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்கு அவர் அந்த ஆடைகளை அணிவித்து, புரவியின்மீது, அமர்த்தி அவரை நகர் வீதிகளில் வரம் வரச் செய்து, “இதுவே அரசர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்குச் செய்யும் சிறப்பாகும்!“ என, அவருக்கு முன்னால் அறிவிக்கவேண்டும் என்று பதிலிறுத்தான்.
10. உடனே மன்னர் ஆமானை நோக்கி, ஆடைகளையும் புரவியையும் விரைவாய்க் கொணர்ந்து நீ கூறியவாறே அரசவாயிலில் நிற்கும் யூதராகிய மொர்தக்காய்க்குச் செய். நீ கூறியவற்றில் எதையும் விட்டுவிடாதே என்று கூறினார்.
11. அவ்வாறே ஆமான் ஆடைகளையும் புரவியையும் கொணர்ந்து, மொர்தக்காய்க்கு அந்த ஆடைகளை உடுத்துவித்து, புரவியின் மீது அமர்த்தி, நகர் வீதிகளில் வலம் வரச் செய்து, இதுவே அரசர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்குச் செய்யும் சிறப்பாகும் என்று அவருக்கு முன்பாய் அறிவிக்கப்படுமாறு செய்தான்.
12. இதற்குப்பின் மொர்தக்காய் அரச வாயிலுக்குச் சென்றார். ஆமானோ புலம்பிக்கொண்டு, தன் தலைக்கு முக்காடிட்டுத் தன் வீட்டிற்கு விரைந்தான்.
13. ஆமான் தன் மனைவி செரேசு, நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு நேரிட்ட அனைத்தையும் கூறினான். ஊடனே அந்த ஆலோசகர்களும் அவன் மனைவி செரேசும் அவனை நோக்கி, யூத குலத்தினனாகிய மொர்தக்காய்க்கு முன்பாக நீ வீழ்ச்சியுறத் தொடங்கிவிட்டாய்: நீ அவனை எதிர்த்து நிற்க மாட்டாய்: அவனுக்கு முன்பாய் முற்றிலும் வீழ்வது திண்ணம் என்றனர்.
14. இவ்வாறு அவர்கள் அவனிடம் பேசிக்கொண்டிருக்கையில், மன்னரின் அலுவலர் அவ்விடம் வந்து, எஸ்தர் ஏற்பாடுசெய்திருந்த விருந்திற்கு வருமாறு ஆமானை விரைவுப்படுத்தினர்.அதிகாரம் 7.
1. மன்னரும் ஆமானும் அரசி எஸ்தர் வைத்த விருந்துக்கச் சென்றனர்.
2. மன்னர் இரண்டாம் நாள் விருந்தில் திராட்சை மதுவை மீண்டும் அருந்துகையில், எஸ்தரிடம், எஸ்தர் அரசியே உன் விண்ணப்பம் யாது? அது உனக்கு அளிக்கப்படும். நீ வேண்டுவது என் அரசின் பாதியே ஆனாலும் அது உனக்குக் கொடுக்கப்படும் என்றார்.
3. அப்பொழுது, அரசி எஸ்தர், உம் கண்களில் எனக்குத் தயவுகிடைத்திருப்பின், அரசே! உமக்கு நலமெனப்பட்டால் எனது விண்ணப்பத்திற்கிணங்க எனக்கும் என் வேண்டுகோளின்படி என் மக்களுக்கும் உயிர்ப்பிச்சை அருள்வீராக!
4. என் மக்களும் நானும் கொலையுண்டு அழிந்து ஒழிந்து போகும்படி விலை பேசப்பட்டிருக்கிறோம்: ஆண்களும் பெண்களுமாக நாங்கள் அடிமைகளாய் விற்கப்பட்டிருந்தால்கூட நான் மெளனமாய் இருந்திருப்பேன். ஆனால் மன்னருக்கு உண்டாகும் இழப்பிற்கு எதிரியால் ஈடு செய்ய முடியாது என்று பதிலிறுத்தார்.
5. மன்னர் அகஸ்வேர் அரசி எஸ்தரை நோக்கி, இப்படிச் செய்தவன் எவன்? தன் இதயத்தில் செருக்குற்று இவ்வாறு செய்யும்படி நினைத்த அவன் எங்கே? என வினவினார்.
6. எதிரியும் வஞ்சகனுமாகிய மனிதன் இந்த ஆமானே: இவனே அந்தத் தீயவன்! என்று எஸ்தர் பதிலுரைத்தார். இது கேட்ட ஆமான், மன்னருக்கும் எஸ்தருக்கும் முன்பாகப் பேரச்சம் கொண்டான்.
7. மன்னர் கடுஞ்சினமுற்று, விருந்தில் திராட்சைமது அருந்துவதை விட்டுவிட்டு: எழுந்து அரண்மனைப் பூங்காவில் நுழைந்தார். தனக்குத் தீங்கிழைக்க மன்னர் முடிவு செய்துவிட்டார் என்று கண்ட ஆமான் அரசி எஸ்தரிடம் தன் உயிருக்காய் மன்றாட எண்ணிப் பின்தங்கினான்.
8. மன்னர் அரண்மனைப் பூங்காவிலிருந்து விருந்து நடைபெற்ற இடத்திற்குத் திரும்பிய பொழுது, எஸ்தரின் மெத்தையில் ஆமான் வீழ்ந்து கிடக்கச் கண்டனர். என் மாளிகையில நான் இருக்கும் போதே, இவன் அரசியைக் கெடுப்பானோ? என்ற சொற்கள் மன்னரின் வாயினின்று வெளிப்பட காவலர் ஆமானின் முகத்தை மூடிவிட்டனர்.
9. அச்சமயம், மன்னருக்குப் பணிவிடை செய்த அர்பேனா என்ற அலுவலர் மன்னரை நோக்கி, அதோ! ஆமானின் வீட்டெதிரே மன்னருக்கு நல்லது செய்த மொர்தக்காயைத் பக்கிலிட ஆமான் நாட்டிய ஜம்பது முழத் பக்குமரம்! என்றார். அதற்கு மன்னர், அதிலேயே அவனைத் பக்கிலிடுங்கள்! என்றார்.
10. மொர்தக்காயைக் பக்கிலிட அவன் நாட்டிய பக்கு மரத்திலேயே ஆமான் பக்கிலிடப்பட்டான். மன்னரின் சீற்றமும் தணிந்தது.அதிகாரம் 8.
1. சில நாள்களில் மன்னர் அகஸ்வேர், யூதரின் பகைவனான ஆமானின் இல்லத்தை அரசி எஸ்தருக்கு வழங்கினார். மொர்தக்காய்க்கும் தமக்கும் உள்ள உறவை எஸ்தர் வெளிப்படுத்த, அவரும் மன்னரின் முன்னிலைக்கு வந்தார்.
2. ஆமானிடமிருந்து கழற்றப்பெற்ற தம் கணையாழியை மன்னர் எடுத்து மொர்தக்காய்க்கு அளித்தார். எஸ்தரும் மொர்தக்காயை ஆமான் வீட்டின் பொறுப்பாளராக நியமித்தார்.
3. மீண்டும் எஸ்தர், யூதருக்கு எதிராய்ச் சதிசெய்த தீயோன் ஆகாகியனான ஆமானின் திட்டங்கள் யாவும் குலைந்து போகுமாறு, மன்னரின் காலடிகளில் வீழ்ந்து, அழுது மன்றாடி, அவரது தயவினை நாடினார்.
4. உடனே மன்னர் தம் பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்ட, அவர் எழுந்து மன்னர்முன் நின்றார்.
5. அவர், மன்னருக்கு இது நலமெனப்பட் டால், அவர்தம் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால், அரசருக்கு இது சரியெனத் தோன்றினால், நானும் உம் பார்வையில் இனியவளெனப்பட்டால் மன்னரின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள யூதர் அழிந்துபோகமாறு வஞ்சனையாய்த் திட்டமிட்ட அம்மதாத்தின் மகனும் ஆகாகியனுமான ஆமான் எழுதிய மடல்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பும்படி எழுதுவீராக!
6. என் மக்களுக்கு நேரிடும் தீங்கனையும், என் உறைவினரின் படுகொலையினையும் நான் எவ்வாறு காண இயலும்? என்று கூறினார்.
7. அப்பொழுது மன்னர் அகஸ்வேர், அரசி எஸ்தரையும் யூதரான மொர்தக்காயையும் நோக்கி, இதோ! ஆமானின் இல்லத்தை எஸ்தருக்கு அளித்தேன்: யூதருக்கு எதிராய்க் கை நீட்டிய ஆமான் பக்கிலிடப்பட்டான்.
8. மன்னரின் பெயரால் எழுதப்பட்டு, அவர் கணையாழியின் முத்திரை பதிக்கப்பெற்ற எம்மடலும் திருப்பிப் பெற இயலாதபடியால் உங்கள் பார்வையில் நலடிமனத்தோன்றும் அனைத்தையும் மன்னரின் பெயரால் நீங்கள் யூதருக்கு எழுதி, மன்னரின் கணையாழியால் முத்திரையிடுங்கள் என்று கூறினார்.
9. சீவான் என்ற மூன்றாம் மாதத்தில், இருபத்து மூன்றாம் நாளன்று மன்னரின் எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டனர். மொர்தக்காய் இட்ட ஆணையின்படியே யூதர் அனைவருக்கும் இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரையிலுள்ள மற்றிருபத்தேழு மாநிலங்களின் குறுநில மன்னர்களுக்கும், மாநிலங்களின் ஆளுநர் அனைவர்க்கும் மாநிலத் தலைவர்கள் அனைவருக்கும் அவர்தம் மக்களின் வரிவடிவ வாரியாகவும், மொழி வாரியாகவும் மடல்கள் வரையப் பெற்றன.
10. மன்னர் அகஸ்வேர் பெயரால் எழுதப் பெற்று, அரச கணையாழி முத்திரையிடப்பெற்ற இம்மடல்கள், அரசக் கொட்டிலைச் சார்ந்த அரசப் பணிக்குரிய புரவிகள் மீது அமர்ந்தேகும் விரைவு அஞ்சலர் மூலம் அனுப்பப்பட்டன.
11. ஒவ்வொரு நகரிலும் உள்ள யூதர் ஒன்றுதிரண்டு தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், அவர்களையும் அவர்களின் குழந்தைகள், பெண்கள் ஆகியோரையும் தாக்கக்கூடிய எந்த நாட்டையும் மாநிலத்தையும் சார்ந்த படைகளை அழித்துக் கொன்று ஒழிக்கவும், அவற்றின் உடைமைகளைக் கொள்ளையிடவும், தேவையான அதிகாரத்தை மன்னரின் பெயரால் எழுதப்பட்ட இம்மடல்கள் அளித்தன.
12. மன்னர் அகஸ்வேரின் மாநிலங்கள் அனைத்திலும், அதார் என்ற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளன்று, ஒரே நாளில் இவ்வாறு செய்வதென அறிவிக்கப்பட்டது.
13. அம்மடலின் நகல் ஒவ்வொரு மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் சட்டமாக அறிவிக்கப்பட்டது. யூதரும் தம் பகைவரைப் பழிதீர்க்க இந்நாளில் ஆயத்தமாகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
14. அரசப் பணிக்குரிய புரவிகள் மீது அமர்ந்தேகும் விரைவு அஞ்சலர் மன்னரின் ஆணையால் ஏவப்பட்டு, வெளி மாநிலங்களுக்கு விரைந்தனர். சூசான் அரண்மனையிலும் இச்சட்டம் அறிவிக்கப்பட்டது.
15. நீலமும் வெண்மையுமான அரச உடையணிந்து, பெரிய பொன் மகுடம் சூடி, கருஞ்சிவப்பு மென்துகில் அணிந்தவராய் மொர்தக்காய் மன்னரின் முன்னிலையிலிருந்து வெளியேற, சூசான் நகர் மகிழ்ந்து களிகூர்ந்தது.
16. இச்செய்தி யூதருக்கு நம்பிக்கை ஒளியாகவும், மகிழ்வுக்கும், அக்களிப்புக்கும் மதிப்பிற்கும் உரிய ஒன்றாகவும் விளங்கியது.
17. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரிலும், எங்கெல்லாம் மன்னரின் இந்த வாக்கும் நியமமும் எட்டினவோ, அங்கெல்லாம் வாழ்ந்த யூதர் மகிழ்ந்து களிகூர்ந்தனர். அந்நாள் விருந்தாடும் விழா நாளாக விளங்கியது. யூதரைப்பற்றிய அச்சம் பிறர்மீது விழ, நாட்டு மக்களில் பலர் யூதாராயினர்.அதிகாரம் 9.
1. மன்னரின் வாக்கும் நியமும் நிறைவேற்றப்படவேண்டிய அதார் என்ற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாள் வந்தது. எதிரிகள் யூதரை மேற்கொள்ளலாம் என்று நம்பியிருந்த அந்த நாள், யூதர் தம் பகைவரை மேற்கொள்ளும் நாளாக மாறியது.
2. அகஸ்வேர் மன்னரின் மாநிலங்களில் இருந்த யூதர் அனைவரும் தமக்குத் துன்பம் விளைவிக்க எண்ணியோர்க்கு எதிராயத் தம் கைகளை நீட்ட அவரவர் தம் இடங்களில் ஒன்று திரண்டனர். வேற்றினத்தாரை அச்சம் ஆட்கொள்ள, அவர்களுள் எவராலும் யூதரை எதிர்த்து நிற்க இயலவில்லை.
3. மொர்தக்காயைப் பற்றிய அச்சம் மன்னரின் அலுவல்களில் உதவி செய்கின்ற மாநிலத் தலைவர்கள், குறுநில மன்னர்கள், ஆளுநர்கள், அரச ஊழியம் செய்வோர் அனைவரையும் ஆட்கொள்ள, அவர்களும் யூதருக்கு உதவி செய்யலாயினர்.
4. மொர்தக்காய் அரச மாளிகையில் வல்லவரானார். அவரது புகழ் அனைத்து மாநிலங்களிலும் பரவியது. அவரது ஆற்றல் மென்மேலும் வளர்ந்தது.
5. எனவே, யூதர் தம் பகைவருக்கு எதிராய்த் தாம் விரும்பியபடி செய்தனர். அவர்களை வாளால் தாக்கி வெட்டி வீழ்த்தினர்.
6. சூசான் அரண்மனையில் ஜந்மறு பேரை யூதர் கொன்றொழித்தனர்.
7. பர்சந்தத்தா, தல்போன், அஸ்பாத்தா,
8. போராத்தா, அதலியா, அரிதாத்தா,
9. பர்மஸ்தா, அரிசாய், அரிதாய், வய்சாத்தா ஆகிய
10. யூதரின் எதிரியும் அம்மதாத்தின் மகனுமான ஆமானின் புதல்வர் பதின்மரையும் அவர்கள் கொன்றனர்: ஆயினும், அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடிக்கவில்லை.
11. மன்னரின் பிற மாநிலங்களில் வாழ்ந்த யூதர் ஒன்று திரண்டு தம்மைப் பாதுகாத்துக்கொன்டனர். தம் பகைவரிடமிருந்து விடுதலை பெறுமாறு அவர்கள் எழுபத்தைந்து ஆயிரம் பேரைக் கொன்றனர்: ஆயினும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையடிக்கவில்லை.
12. அதார் மாதம் பதின்மூன்றாம் நாளையடுத்த பதினான்காம் நாளன்று அவர்கள் ஓய்வெடுத்தனர். அந்நாளை விருந்துண்டு மகிழும் விழாவாக ஆக்கினர்.
13. சூசான் வாழ் யூதரோ அதார் மாதம் பதின்மூன்றாம் பதினான்காம் நாள்களில் ஒன்றுகூடி அடுத்துவந்த பதினைந்தாம் நாளை ஒய்வெடுத்து, விருந்துண்டு மகிழும் விழாவாக ஆக்கினர்.
14. அரணற்ற நகர்ப்புறச் சிற்டிர்களில் வாழந்த யூதர், அதார் மாதம் பதினான்காம் நாளை விருந்துண்டு மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுத்துக் கொள்ளும் விழாவாக ஆக்கினர்.
15. மொர்தக்காய் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் மடல்களில் வரைந்து, அவற்றை அருகிலும் தொலையிலும், மன்னர் அகஸ்வேரின் அனைத்து மாநிலங்களிலும் வாழந்த யூதருக்கு அனுப்பி,
16. ஆண்டுதோறும் அதார் மாதம் பதினான்காம், பதினைந்தாம் நாள்களை
17. யூதர் தம் பகைவரின் தொல்லையினின்று விடுதலை பெற்ற நாள்களாகவும், அவர்களின் துன்பம் மகிழ்ச்சியாகவும், புலம்பல் விழாக் கோலமாகவும் மாறின மாதமாகவும் கொண்டு, அந்நாள்களில் விருந்துண்டு மகிழவும், ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுத்துக் கொள்ளவும், ஏழைகளுக்கு உணவளிக்கவும், வேண்டுமென்று நியமம் தந்தார்.
18. யூதர்கள் தாம் செய்யத் தொடங்கியவாறும், மொர்தக்காய் தங்களுக்கு எழுதியவாறும் செய்ய உடன்பட்டார்கள்.
19. ஆகாகியனும் அம்மதாத்தின் மகனுமான ஆமான், யூதர்க்கெல்லாம் எதிராய் இருந்து, அவர்களை அழிக்கவும், அடியோடு ஒழிக்கவும் பூர் என்ற சீட்டைப் போட்டான்.
20. அப்போது எஸ்தர், மன்னரின் உதவியை நாட, யூதருக்கு எதிராய்ச் சதிசெய்த ஆமானின் தீவினை அவன் தலைமேல் விழுமாறு அவர் கட்டளை பிறப்பித்தார். அதன்படி அவனும் அவன் புதல்வரும் பக்கிலிடப்பட்டனர்.
21. எனவே, யூதர் இந்நாள்களை பூர் என்ற சொல்லினின்று எழுந்த பூரிம் என்ற பெயரால் அழைக்கலாயினர். பூரிம் என்ற இவ்விழாவிற்கு மொர்தக்காயின் மடலின் வாசகமும் அவர்கள் கண்டவையும் அனுபவித்தவையுமே அடிப்படை ஆயின.
22. அவர்களும் அவர்களின் வழிமரபினரும் அவர்களைச் சார்ந்தோர் அனைவரும், இந்த இரு நாள்களை அவை பற்றிய மடல்களின்படியும் குறிக்கப்பட்ட காலத்திலும் கண்டிப்பாய்க் கொண்டாடுவது என்று கீழ்க் கண்டவாறு உறுதி பூண்டனர்:
23. இந்நாள்கள் தலைமுறைதோறும், ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரிலும் நினைவுகூரப்பட்டுக் கொண்டாடப்படவேண்டும். பூரிம் என்ற இந்நாள்கள் யூதரிடையே கொண்டாடப்படாமல் போகா. இவற்றின் நினைவு அவர்களின் வழிமரபினரிடையிலும் ஒழிந்து போகாது .
24. அபிகாயிலின் மகளான அரசி எஸ்தரும் யூமராகிய மொர்தக்காயும் பூரிம் பற்றிய இந்த இரண்டாம் மடலை முழு அதிகாரத்துடன் எழுதி உறுதிப்படுத்தினர்.
25. அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அம்மடல் எழுதப்பட்டு, அகஸ்வேரின் ஆட்சிக்குட்பட்ட மற்றிருப்பத்தேழு மாநிலங்களிலும் வாழ்ந்த யூதருக்கு அனுப்பட்டது.
26. யூதராகிய மொர்தக்காயும் அரசி எஸ்தரும் இட்ட ஆணையின்படி, பூரிம் என்ற இந்த நாள்களை யூதரும் அவர்களின் வழிமரபினரும் குறிக்கப்பட்ட காலத்தில் நோன்பு, புலம்பல் நாள்களாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
27. இந்தப் பூரிம் விழாப்பற்றிய ஒழுங்குமுறைகள் யாவற்றையும் உறுதிப்படுத்திய எஸ்தரின் ஆணை ஓர் ஏட்டுச் சுருளில் எழுதி வைக்கப்பட்டது.அதிகாரம் 10.
1. மன்னர் அகஸ்வேர் நிலங்களின் மீதும், கடலின் தீவுகளின்மீதும் தீர்வை விதித்தார்.
2. அவருடைய ஆற்றலும் வலிமைமிகு செயல்களும், அவர் மொர்தக்காய்க்கு அளித்த மேன்மையின் முழு விவரமும், மேதியா மற்றும் பாரசீக மன்னர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன அல்லவா?
3. யூதராகிய மொர்தக்காய், மன்னர் அகஸ்வேருக்கு அடுத்த நிலைபெற்று, யூதருள் மேன்மை நிறைந்தவராகவும், தம் சகோதரர் பலருக்கு இனியவராகவும், தம் மக்களின் நன்மையை நாடுபவராகவும், தம் இனத்தார் அனைவரின் நல்வாழ்வுக்காகப் பரிந்துரை செய்பவராகவும் விளங்கினார்.