Music - Painting in Oils by Jayalakshmi Satyendra
| "..இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும் ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று. சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது. அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம் ; தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும். அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே 'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது. புரியாத மொழியில் இசையைப் புகட்டல் கண்ணைக் கட்டிக் காட்சி காட்டுதல். தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில் இசையைக் கேட்க இச்சை கொள்வதே 'தமிழிசை' என்பதன் தத்துவ மாகும். Nammakal Kavijnar |
|
|
1 September 2007 | தமிழ்த்தாய் வாழ்த்து audio/video and in audio Lyric: Manonmaniam Pe. Sundaram Pillai |
| நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே. தமிழணங்கே. தமிழணங்கே. உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! |
9 July 2007 | சாதி மல்லிப் பூச்சரமே... - Lyric - Pulamaipithan - புலவர் புலமைப்பித்தன் |
| சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே ஆசையுள்ள ஆசையடி அவ்வளவு ஆசையடி எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம் கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தாலாட்டு (சாதி மல்லிப்)
எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா தேசம் வேறல்ல தாயும் வேறல்லா ஒன்றுதான் தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான் காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம் கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தாலாட்டு (சாதி மல்லிப்)
உலகமெல்லாம் உண்ணுப்போது நாமும் சாப்பிட எண்ணுவோம் உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம் யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி பாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது கண்மணி படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பார்த்தோமா படிச்சத புரிஞ்சு நாம் நடக்கத்தான் கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு (சாதி மல்லிப்) |
6 June 2007 | Yazh Suthakar Kavithaigal I - Sathyam |
9 April 2007 | Video அச்சம் என்பது .. மடமையடா.. அஞ்சாமை திராவிடர் .. உடமையடா.. ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா [Lyric - Kannadasan] |
|
| Naadu athai naadu [see also A Pledge Song for Eelam from Tamil Poet Laureate Kannadasan - Sachi Sri Kantha] நாடு, அதை நாடு, அதை நாடாவிட்டால் ஏது வீடு... பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு மானம் பெரிது என்று வாழும் பண்பாடு
பாலைவனம் என்றபொதும் நம் நாடு பாரை மலை கூட நம் எல்லை கோடு ஆறு நிலம் பாய்ந்து விழையாடும் தோட்டம் வீர சமுதாயமெ எங்கள் கூட்டம்... பசி என்று வருவோர்கு விருந்தாக மாறும் பகைவர் முகம் பார்த்து புலியாகச் சீரும் நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும் ஏதிர்த்து வருவொரை உரமாய் போடும். |
|
19 February 2007 | Sirkali Govindarajan - நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்... நீதிக்கு இது ஒரு போராட்டம், இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.. [see also One Hundred Tamils of 20th Century - Sirkali Govindarajan] |
29 October 2006 | Audio Visual Presentation: தேசத்தின் தலை மகனே... |
17 October 2006 | Audio Visual Presentation: உலகத்தமிழரை உயரவைத்தவன் பிரபாகரனே... |
31 July 2006 | நடடா ராசா மயிலைக்காளை நல்ல நேரம் வருகுது.. |
24 July 2006 | சாவிலும் வாழ்வோம் கனடிய கலை பண்பாட்டுக் கழகம் வழங்கிய பாடல், 2006 |
20 April 2005 | இனம் ஒன்று அழிவதா, இதை நாம் பொறுப்பதா... |
| கொடுமைக்கு முடிவு கட்டி, கொடுங்கோலார் கொடி இறக்கி நாம் தமிழர், நம் நாடு நமக்கென்று ஈழம், தமிழ் ஈழம் இனம் ஒன்று அழிவதா, இதை நாம் பொறுப்பதா இனம் ஒன்று அழிவதா, இதை நாம் பொறுப்பதா சதை கொண்ட மனிதர் அல்ல சரித்திரம் படைத்திட வா தமிழா சதை கொண்ட மனிதர் அல்ல சரித்திரம் படைத்திட வா தமிழா இனம் ஒன்று அழிவதா, இதை நாம் பொறுப்பதா இனம் ஒன்று அழிவதா, இதை நாம் பொறுப்பதா காட்டு விலங்கை சுட்டாலும், அட கரடி கழுதை சுட்டாலும் தப்பென்னு சொல்லுது சட்டம், இது உலகத்திலே பொது சட்டம் காட்டு விலங்கை சுட்டாலும், அட கரடி கழுதை சுட்டாலும் தப்பென்னு சொல்லுது சட்டம், இது உலகத்திலே பொது சட்டம் தமிழன் உயிரை கீழே மிதித்து அழிப்பது முறையா மனித உரிமையை மீறுதல் முறையா (இனம் ஒன்று அழிவதா...) உலகத்திலே பல நாடுகள், அவை விடுதலை அடைந்த காட்சிகள் சின்ன தேசங்கள் கூட கொடி கட்டி பறக்கிற காலம் யாகத்தில் சிறந்த ஈழத்தமிழன் மொத்ததில் விதைப்பது சரியா மனித உரிமையை மீறுதல் முறையா (இனம் ஒன்று அழிவதா...) தவிழ்ந்த குழந்தை கூட தலை வெடித்து சிதறிய கோலம் பதறித் துடித்து பார்ப்போம் உதவி கூட கேட்டோம் தமிழன் உயிரை கீழே மிதித்து அழிப்பது முறையா மனித உரிமையை மீறுதல் முறையா (இனம் ஒன்று அழிவதா...) |
8 January 2005 | நாளை நமதே இந்த நாளும் நமதே Lyric: Kavi Arasu Kannadasan |
| அன்பு மலர்களே நம்பி இருங்களே நாளை நமதே இந்த நாளும் நமதே தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே நாளை நமதே இந்த நாளும் நமதே தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே... காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கணியாகும் நமக்கென வழர்ந்து நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே பாசம் என்னும் நூல் வழி வந்து பாசமலர் கூட்டம் ஆடும் மழையில் அமைவது தானே வாழ்க்கை பூந்தோட்டம் மூன்று தமிழும் ஓர் இடம் நின்று பாடவேண்டும் காவியச் சிந்து அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது நாளை நமதே, நாளை நமதே வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே நல்ல குடும்பம் ஓளிமயமாக வெளிச்சம் தாருங்களே நாடும் வீடும் உங்களை நம்பி நீஙகள்தானே அண்ணன் தம்பி எதையுமே தாங்கிடும் இதையம் என்றும் மாறாது நாளை நமதே நாளை நமதே தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே... காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கணியாகும் நமக்கென வழர்ந்து நாளை நமதே நாளை நமதே நாளை நமதே |
23 December 2005 | நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா Lyric: Kavi Arasu Kannadasan |
| நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு தினம் அச்சப்பட்ட கோலைக்கு இல்லம் எதற்கு அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு நீ கொண்டு வந்தது என்னடா, மீசை முறுக்கு நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு இரண்டில் ஒன்று பார்பதற்கு தோழை நிமிர்த்து அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
|
20 November 2005 |
மண்ணில் விழைந்த முத்துக்களே... Lyric: Kanthan (Aly Khan) - Singer: Hariharan மாவீரர் சுமந்த கனவுகளில் ஒரு தேசம் தெரிகின்றது... மாவீரர் புகழ் பாடுவோம்... மாவீரர் யாரோ என்றால் - மரணத்தை வென்றோர்கள்... |
14 November 2005 | என்னதான் நடக்கும் நடக்கட்டுமே Lyric: Kavi Arasu Kannadasan |
| "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே.. தலைவன் இருக்கிறான் மயங்காதேஎன்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே பின்னாலே தெரிவது அடிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு நடுவினிலே நீ விளையாடு நல்லதை நினைத்தே நீ போராடு நல்லதை நினைத்தே போராடு உலகத்தில் திருடர்கள் சரி பாதி ஊமைகள் குருடர்கள் அதி பாதி கலகத்தில் பிறப்பதுதான் நீதி மனம் கலங்காதெ மதிமயங்காதே கலங்காதெ, மதிமயங்காதே மனதுக்கு மட்டும் பயந்துவிடு மானத்தை உடலில் கலந்துவிடு இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு இரண்டினில் ஒன்று பார்த்துவிடு இரண்டினில் ஒன்று பார்த்துவிடு என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே... |
24 September 2005 | உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் Lyric: Kavi Arasu Kannadasan |
| உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் (உன்னை) மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா (உன்னை) பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையா பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா
(உன்னை) மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு மாலைகள் விழவேண்டும் - ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும் உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் |
3 September 2005 | எங்கும் எதிலும் தமிழோசை Lyric: Kannadasan, Singer: Padmashri Isai Mani Dr. Sirkali Govindarajan in London |
| எங்கும் எதிலும் தமிழோசை லண்டன் எதிரொலிக்கும் அந்த மணியோசை பொங்கும் தமிழ்ப்பாட்டின் இன்னோசை மனம் பூரித்துப் பாடுதம்மா என்னாசை
சங்கம் வளர்த்த தமிழ் உலகமெங்கும் இங்கு தனிநடை போடுதம்மா வீறுகொண்டு சங்கக்குலவிளக்கை தமிழ்த்தாயை இந்த தலைநகர் பாடுதம்மா ஆவல் கொண்டு
முருகன் கழுத்துக்கொரு மணியாரம் அவன் முன்னின்று பாடுதற்கு தேவாரம் நிறுமித்த நெஞ்சினிற்குப் புகழாரம் இந்த நேரத்தில் நான் இசைக்கும் தமிழாரம்
ஆக்கத்திரைக் கடலும் தமிழ் ஒலிக்கும் அதில் ஆடிடும் மீன்களெல்லாம் தமிழ்ப்படிக்கும் தீர்த்தக்கரையில் பெண்கள் குரல் ஒலிக்கும் அது திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலிக்கும் எங்கும் எதிலும் தமிழோசை
உலகம் முழுதும் சென்றான் தொழில் நடத்த தமிழன் உள்ளமும் சென்றதம்மா தமிழ் நடத்த கலையில் சிறந்த இசைக்கலை நடத்த நானும் கடலைக் கடந்து வந்தேன் தமிழ் வளர்க்க
எங்கள் குலத்துதித்த சோதரரே தினம் இன்முகம் காட்டி வரும் அன்னையரே உம்மை நினைத்திருக்கும் தாயகமே இந்த உலகத்திலே சிறந்த தமிழகமே தமிழகமே
அன்றொரு நாள் நம்மை அடிமைகொண்டார் முருகன் அவரையும் சேர்த்து இன்று அடிமை கொண்டார் இன்பத்தமிழர் தங்கள் கடமை கண்டார் கோவில் எழுப்பிவிட்டார் தமிழை ஏற்றிவைத்தார்
மலைக்குடி வேலன் இன்று கடல் தாண்டினான் லண்டன் மாநகரில் வந்து குடியேரினான் சிலைவடிவாக வந்து வரம் நல்கினான் தமிழர் திருவருள் கொள்வதற்குத் துணையாகினான்
எங்கிருந்தும் அவனை மறப்பதில்லை தமிழர் ஏற்றும் திருவிளக்கு அணைவதில்லை பொங்கும் தரும வெள்ளம் குறைவதில்லை தமிழர் புகழும் பொருளும் என்றும் அழிவதில்லை
நாகரீகம் வளர்ந்த மேற்கினிலே குமர நாயகன் கோவில் கண்டார் ஆசையிலே தேக உழைப்பை சிலர் உவந்தளித்தார் சிலர் திரவியம் தந்ததுடன் தம்மை தந்தார்
அறுபடை வீடு என்று அழைத்துவந்தோம் ஒரு அற்புத வீட்டை இங்கே படைத்துவிட்டோம் ஏழுபடைவீடு என்று தொடர்ந்து சொல்வோம் லண்டன் எழுப்பிய கோவிலையும் சேர்த்துக்கொள்வோம்
இலங்கை முருகனுக்கோர் கதிர்காமம் பொருள் இலங்கும் மலேசியாவில் பலகிராமம் துலங்கிடும் லண்டனுக்கும் தொடர்ந்துவந்தார் எங்கள் சுவாமிநாதன் அருளை சுரக்க வந்தார்
அருணகிரி ஒரு நாள் வரைந்துவைத்தார் அவர் அடிச்சுவட்டில் பலபேர் புகழ்ந்து வைத்தார் கருணை முருகன் தன்னை ஏற்றிவைத்தார் கவிஞர் கண்ணதாசன் இதனை பாட்டில் வைத்தார் உங்கள் சிர்காழி நானும் இங்கே பாடிவைத்தேன் |
7 August 2005 | புற்றிள்வாள் அரவும் அஞ்சேன்... மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம் - Clip from Ilayaraja's 'Thiruvasakam in Symphony' [Buy the CD Online at Thiruvasakam in Symphony Foundation, USA ] |
| புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன் இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம் திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன் வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித் துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன் துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால் திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன் தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன் தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும் ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன் புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும் முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன் வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச் செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன் நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச் செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன் நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. |
10 July 2005 | தூங்காதே தம்பி, தூங்காதே - Lyric: Pattukotai Kalyanasunderam |
| தூங்காதே தம்பி தூங்காதே - நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே! (தூங்....) நீ - தாங்கிய உடையும் ஆயுதமும் - பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும், சக்தியிருந்தால் உன்னைக்கண்டு சிரிக்கும் சத்திரந்தான் உனக்கு இடம் கொடுக்கும் (தூங்.....) நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார், சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லா யிருந்துவிட்டு அதிர்ஸ்டமில்லையென்று அலட்டிக் கொண்டார் விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் - உன்போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்! (தூங்....) போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான் - உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான்! கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் - கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் - இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் - பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா! (தூங்....)
|
5 June 2005 | இனம் ஒன்று அழிவதா, இதை நாம் பொறுப்பதா... |
1 June 2005 | அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்... Lyric: Kannadasan |
| அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே போகும்போது வேறுபாதை போகவில்லையே கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
|
23 May 2005 | அச்சம் என்பது மடமையடா - தாயகம் காப்பது கடமையடா Lyric: Kannadasan |
| அச்சம் என்பது .. மடமையடா.. அஞ்சாமை திராவிடர் .. உரிமையடா
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா
கனக விசயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேரமகன் ஆ...ஆ...ஆ.... ஆ...ஆ......... கனக விசயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேரமகன் இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா
கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பான் தமிழன்னை ஆ...ஆ...ஆ....ஆ...ஆ..... கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உரிமையடா
|
16 May 2005 | ஆண்டவன் உலகத்தின் முதலாளி... |
9 May 2005 | சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்... Lyric: Kannadasan |
| சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
(சிலர் சிரிப்பார்)
பாசம் நெஞ்சில் மோதும் அந்தப்பாதையை பேதங்கள் மூடும் உறவை எண்ணி சிரிக்கின்றேன் உரிமையில்லாமல் அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
(சிலர் சிரிப்பார்)
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் கருணை மறந்தே வாழ்கின்றார் கடவுளைத்தேடி அலைகின்றார் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
(சிலர் சிரிப்பார்)
காலம் ஒருனாள் மாறும் - நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
(சிலர் சிரிப்பார்) |
2 May 2005 | மூன்று எழுத்தில் என் மூச்சு இருக்கும் - அது கடமை |
24 April 2005 | செந்தமிழ் நாடெனும் போதினிலே Lyric: Bharathy Singer: M.S. Subbulakshmi |
| செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)
வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல காதல் புரியும் அரம்பையர் போல் - இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)
காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி - என மேவிய யாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)
முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம் எத்தனையுண்டு புவிமீதே - அவை யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)
நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் - மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)
சிங்களம் புட்பகம் சாவக - மாதிய தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)
விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும் வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர் பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)
சீன மிசிரம் யவனரகம் - இன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்) |
10 April 2005 | ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? Lyric: Kannadasan Singer: T.M.S. |
| ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன? கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?
வீடுவரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா? (வீடு)
தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி! (வீடு)
சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான் வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்! (வீடு)
விட்டுவிடும் ஆவி பட்டுவிடும் மேனி சுட்டுவிடும் நெருப்பு சூனியத்தில் நிலைப்பு! (வீடு) |
10 March 2005 | என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? பாடகர்: K.J.Yesudas இயற்றியவர்: Amara Kavi Bharathiar |
| என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்றெம தன்னைகை விலங்குகள் போகும்? என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்? பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ? பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ? தஞ்ச மடைந்தபின் கை விடலோமோ? தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ? நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! நாளில் மறப்பா ரடீ
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்றெம தன்னைகை விலங்குகள் போகும்? என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்? |
28 February 2005 | தமிழீழம்: தாய்நாடு வணக்கப் பண் - "வாழ்க் ஈழத் தமிழகம், வாழ்க இனிது வாழ்கவே, மலைநிகர்த்திவ் வுலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே.".. more |
| இன்பத் தமிழ் - தமிழுக்கும் அமுதென்று பேர்! பாட்டு - பாரதிதாசன் தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்! தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
|
24 February 2005 | தமிழனுக்குக் குரல் கொடுக்கும் பாட்டாளியே, ஈழத் தமிழனுக்கு என்றென்றும் கூட்டாளியே.. இசை - தயாரிப்பு: சி.ஆர்.பாஸ்கரன் |
| தமிழ் நாட்டு விடுதலை, தமிழ் புலவர் விடுதலை, நமக்கென்ன என்று இருப்பாரோ.. பாடகர் - தேனிசை செல்லப்பா, பாட்டு - பாரதிதாசன் |
| பொங்கி எழுகின்ற கடல் அலையே... - S.P.Balasubramaniam |
17 February 2005 | தமிழா, நீ பேசுவது தமிழா - பாடகர்: தேனிசை செல்லப்பா, இயற்றியவர்: காசி ஆனந்தன் |
| சின்னப் பயலே, சின்னப் பயலே - ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி - இயற்றியவர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - audio presentation by Karaikal Raseena சின்னப் பயலே, சின்னப் பயலே சேதி கேளடா - நா- சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா, நீ எண்ணிப் பாரடா
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி - உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் நாலும் தரும் பயிற்சி - உன் நரம்போடு தான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி (சின்னப் பயலே )
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா - தம்பி மனதில் வையடா வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா - நீ வலது கையடா தனி உடைமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா - நீ தொண்டு செய்யடா தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா - எல்லாம் பழைய பொய்யடா (சின்னப் பயலே)
வேப்ப மர உச்சியில் நின்னு பேய் ஒன்னு ஆடுதுன்னு விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க - உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க - அந்த வேலையற்ற வீணர்களின் முளையற்ற வார்த்தைகளை வேடிக்கை யாகக் கூட நம்பி விடாதே -உந்தன் வீட்டுக் குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே - நீ வெம்பி விடாதே (சின்னப் பயலே)
|