"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Unfolding Consciousness > Spirituality & the Tamil Nation > The Twelve Thirumurai - பன்னிரண்டு திருமுறைகள் > திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் > நான்காம் திருமுறை பாடல்கள் ( 1- 487 ) > நான்காம் திருமுறை பாடல்கள் (488 - 1070) > ஐந்தாம் திருமுறை பாடல்கள் (1 - 509 ) > ஐந்தாம் திருமுறை பாடல்கள் ( 510 -1016 ) > ஆறாம் திருமுறை பாடல்கள் ( 1-508) > ஆறாம் திருமுறை பாடல்கள் (509 - 981)
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி - பாடல்கள் (488 - 1070)
Acknowledgements:
Etext preparation (romanized/transliteration format) : Dr. Thomas Malten and Colleagues,
Institute of Indology and Tamil Studies, Univ of Koeln Germany.
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of romanized version to Tamil script version as per TSCII encoding. Proof-reading and addition of brief comments: Mr. P.K. Ilango, Erode, Tamilnadu, India
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland© Project Madurai 1999 - 2004 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
4.051 | திருக்கோடிகா | (488-497) | மின்பதிப்பு |
4.052 | திருவாரூர் | (498 -507) | மின்பதிப்பு |
4.053 | திருவாரூர் | (508 -517) | மின்பதிப்பு |
4.054 | திருப்புகலூர் | (518 - 527) | மின்பதிப்பு |
4.055 | திருவலம்புரம் | (528 -537) | மின்பதிப்பு |
4.056 | திருஆவடுதுறை | (538-547) | மின்பதிப்பு |
4.057 | திருஆவடுதுறை | (548- 557) | மின்பதிப்பு |
4.058 | திருப்பருப்பதம் | (558-567) | மின்பதிப்பு |
4.059 | திருஅவளிவணல்லூர் | (568-577) | மின்பதிப்பு |
4.060 | திருப்பெருவேளூர் | (578-587) | மின்பதிப்பு |
4.061 | திருஇராமேச்சுரம் | (588-598) | மின்பதிப்பு |
4.062 | திருவாலவாய் | (598 -608) | மின்பதிப்பு |
4.063 | திருவண்ணாமலை | (609-618 ) | மின்பதிப்பு |
4.064 | திருவீழிமிழலை | (619-628) | மின்பதிப்பு |
4.065 | திருச்சாய்க்காடு | (629-638) | மின்பதிப்பு |
4.066 | திருநாகேச்சரம் | (639-648) | மின்பதிப்பு |
4.067 | திருக்கொண்டீச்சரம் | (649-658) | மின்பதிப்பு |
4.068 | திருவாலங்காடு | (659-668) | மின்பதிப்பு |
4.069 | திருக்கோவலூர்வீரட்டம் | (669-678) | மின்பதிப்பு |
4.070 | திருநனிபள்ளி | (679-687) | மின்பதிப்பு |
4.071 | திருநாகைக்காரோணம் | (688-696) | மின்பதிப்பு |
4.072 | திருவின்னம்பர் | (697-706) | மின்பதிப்பு |
4.073 | திருச்சேறை | (707-716 ) | மின்பதிப்பு |
4.074 | நெஞ்சம்ஈசனைநினைந்த | (717-725) | மின்பதிப்பு |
4.075 | தனித் - திருநேரிசை | (726-735) | மின்பதிப்பு |
4.076 | தனித் - திருநேரிசை | (736-745) | மின்பதிப்பு |
4.077 | தனித் - திருநேரிசை | (746-753) | மின்பதிப்பு |
4.078 | குறைந்த - திருநேரிசை | (754-763) | மின்பதிப்பு |
4.079 | குறைந்த - திருநேரிசை | (764-769) | மின்பதிப்பு |
4.080 | கோயில் - திருவிருத்தம் | (770-779) | மின்பதிப்பு |
4.081 | கோயில் - திருவிருத்தம் | (780-789) | மின்பதிப்பு |
4.082 | திருக்கழுமலம் | (790-799) | மின்பதிப்பு |
4.083 | திருக்கழுமலம் | (800 ) | மின்பதிப்பு |
4.084 | ஆருயிர்த் - திருவிருத்தம் | (801-811) | மின்பதிப்பு |
4.085 | திருச்சோற்றுத்துறை | (812-821) | மின்பதிப்பு |
4.086 | திருவொற்றியூர் | (822-832) | மின்பதிப்பு |
4.087 | திருப்பழனம் | (833-842) | மின்பதிப்பு |
4.088 | திருப்பூந்துருத்தி | (843-852) | மின்பதிப்பு |
4.089 | திருநெய்த்தானம் | (853-862) | மின்பதிப்பு |
4.090 | திருவேதிகுடி | (863-872) | மின்பதிப்பு |
4.091 | திருவையாறு | (873-882) | மின்பதிப்பு |
4.092 | திருவையாறு | (883-892) | மின்பதிப்பு |
4.093 | திருவையாறு | (893-902 ) | மின்பதிப்பு |
4.094 | திருக்கண்டியூர் | (903-912) | மின்பதிப்பு |
4.095 | திருப்பாதிரிப்புலியூர் | (913-922) | மின்பதிப்பு |
4.096 | திருவீழிமிழலை | (923-932) | மின்பதிப்பு |
4.097 | திருச்சத்திமுற்றம் | (933-942) | மின்பதிப்பு |
4.098 | திருநல்லூர் | (943-952) | மின்பதிப்பு |
4.099 | திருவையாறு | (954-955) | மின்பதிப்பு |
4.100 | திருவேகம்பம் | (956-965) | மின்பதிப்பு |
4.101 | திருவின்னம்பர் | (966-975) | மின்பதிப்பு |
4.102 | திருவாரூர் | (976-985) | மின்பதிப்பு |
4.103 | திருவாரூர் | (986-992 ) | மின்பதிப்பு |
4.104 | திருநாகைக்காரோணம் | (993-1001) | மின்பதிப்பு |
4.105 | திருவதிகைவீரட்டானம் | (1002-1008) | மின்பதிப்பு |
4.106 | திருப்புகலூர் | (1009-1012) | மின்பதிப்பு |
4.107 | திருக்கழிப்பாலை | (1013-1015) | மின்பதிப்பு |
4.108 | திருக்கடவூர் | (1016-1025) | மின்பதிப்பு |
4.109 | திருமாற்பேறு | (1026-1027) | மின்பதிப்பு |
4.110 | திருத்தூங்கானைமாடம் | (1028-1030) | மின்பதிப்பு |
4.111 | பசுபதி | (1031-1038 | மின்பதிப்பு |
4.112 | சரக்கறை | (1039-1049) | மின்பதிப்பு |
4.113 | தனி - திருவிருத்தம் | (1050-1059 ) | மின்பதிப்பு |
4.114 | தனி - திருவிருத்தம் | (1060-1070) | மின்பதிப்பு |
488 | நெற்றிமேற் கண்ணி னானே நீறுமெய் பூசி னானே கற்றைப்புன் சடையி னானே கடல்விடம் பருகி னானே செற்றவர் புரங்கள் மூன்றுஞ் செவ்வழல் செலுத்தி னானே குற்றமில் குணத்தி னானே கோடிகா வுடைய கோவே. | 4.51.1 | ||||||||||||||||||||||||
489 | கடிகமழ் கொன்றை யானே கபாலங்கை யேந்தி னானே வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகத் தானே அடியிணை பரவ நாளும் அடியவர்க் கருள்செய் வானே கொடியணி விழவ தோவாக் கோடிகா வுடைய கோவே. | 4.51.2 | 490 | நீறுமெய் பூசி னானே நிழல்திகழ் மழுவி னானே ஏறுகந் தேறி னானே இருங்கடல் அமுதொப் பானே ஆறுமோர் நான்கு வேதம் அறமுரைத் தருளி னானே கூறுமோர் பெண்ணி னானே கோடிகா வுடைய கோவே. | 4.51.3 | 491 | காலனைக் காலாற் செற்றன் றருள்புரி கருணை யானே நீலமார் கண்டத் தானே நீண்முடி யமரர் கோவே ஞாலமாம் பெருமை யானே நளிரிளந் திங்கள் சூடுங் கோலமார் சடையி னானே கோடிகா வுடைய கோவே. | 4.51.4 | 492 | பூணர வாரத் தானே புலியுரி அரையி னானே காணில்வெண் கோவ ணமுங் கையிலோர் கபால மேந்தி ஊணுமூர்ப் பிச்சை யானே உமையொரு பாகத் தானே கோணல்வெண் பிறையி னானே கோடிகா வுடைய கோவே. | 4.51.5 | 493 | கேழல்வெண் கொம்பு பூண்ட கிளரொளி மார்பி னானே ஏழையேன் ஏழை யேன்நான் என்செய்கேன் எந்தை பெம்மான் மாழையொண் கண்ணி னார்கள் வலைதனில் மயங்கு கின்றேன் கூழைஏ றுடைய செல்வா கோடிகா வுடைய கோவே. | 4.51.6 | 494 | அழலுமிழ் அங்கை யானே அரிவையோர் பாகத் தானே தழலுமிழ் அரவம் ஆர்த்துத் தலைதனிற் பலிகொள் வானே நிழலுமிழ் சோலை சூழ நீள்வரி வண்டி னங்கள் குழலுமிழ் கீதம் பாடுங் கோடிகா வுடைய கோவே. | 4.51.7 | 495 | ஏவடு சிலையி னாலே புரமவை எரிசெய் தானே மாவடு வகிர்கொள் கண்ணாள் மலைமகள் பாகத் தானே ஆவடு துறையு ளானே ஐவரால் ஆட்டப் பட்டேன் கோவடு குற்றந் தீராய் கோடிகா வுடைய கோவே. | 4.51.8 | 496 | ஏற்றநீர்க் கங்கை யானே இருநிலந் தாவி னானும் நாற்றமா மலர்மேல் ஏறும் நான்முகன் இவர்கள் கூடி ஆற்றலால் அளக்க லுற்றார்க் கழலுரு வாயினானே கூற்றுக்குங் கூற்ற தானாய் கோடிகா வுடைய கோவே. | 4.51.9 | 497 | பழகநான் அடிமை செய்வேன் பசுபதீ பாவ நாசா மழகளி யானை யின்றோல் மலைமகள் வெருவப் போர்த்த அழகனே அரக்கன் திண்டோ ள் அருவரை நெரிய வூன்றுங் குழகனே கோல மார்பா கோடிகா வுடைய கோவே. | 4.51.10 |
498 | படுகுழிப் பவ்வத் தன்ன பண்டியைப் பெய்த வாற்றாற் கெடுவதிம் மனிதர் வாழ்க்கை காண்டொறுங் கேது கின்றேன் முடுகுவர் இருந்துள் ஐவர் மூர்க்கரே இவர்க ளோடும் அடியனேன் வாழ மாட்டேன் ஆரூர்மூ லட்ட னீரே. | 4.52.1 | ||||||||||||||||||||||||
499 | புழுப்பெய்த பண்டி தன்னைப் புறமொரு தோலால் மூடி ஒழுக்கறா ஒன்ப துவாய் ஒற்றுமை யொன்று மில்லை சழக்குடை இதனுள் ஐவர் சங்கடம் பலவுஞ் செய்ய அழிப்பனாய் வாழ மாட்டேன் ஆரூர்மூ லட்ட னீரே. | 4.52.2 | 500 | பஞ்சின்மெல் லடியி னார்கள் பாங்கரா யவர்கள் நின்று நெஞ்சில்நோய் பலவுஞ் செய்து நினையினும் நினைய வொட்டார் நஞ்சணி மிடற்றி னானே நாதனே நம்ப னேநான் அஞ்சினேற் கஞ்ச லென்னீர் ஆரூர்மூ லட்ட னீரே. | 4.52.3 | 501 | கெண்டையந் தடங்கண் நல்லார் தம்மையே கெழும வேண்டிக் குண்டராய்த் திரிதந் தைவர் குலைத்திடர்க் குழியில் நூக்கக் கண்டுநான் தரிக்க கில்லேன் காத்துக்கொள் கறைசேர் கண்டா அண்டவா னவர்கள் போற்றும் ஆரூர்மூ லட்ட னீரே. | 4.52.4 | 502 | தாழ்குழல் இன்சொல் நல்லார் தங்களைத் தஞ்ச மென்று ஏழையே னாகி நாளும் என்செய்கேன் எந்தை பெம்மான் வாழ்வதேல் அரிது போலும் வைகலும் ஐவர் வந்து ஆழ்குழிப் படுத்த வாற்றேன் ஆரூர்மூ லட்ட னீரே. | 4.52.5 | 503 | மாற்றமொன் றருள கில்லீர் மதியிலேன் விதியி லாமை சீற்றமுந் தீர்த்தல் செய்யீர் சிக்கன வுடைய ராகிக் கூற்றம்போல் ஐவர் வந்து குலைத்திட்டுக் கோகு செய்ய ஆற்றவுங் கில்லேன் நாயேன் ஆரூர்மூ லட்ட னீரே. | 4.52.6 | 504 | உயிர்நிலை யுடம்பே காலா உள்ளமே தாழி யாகத் துயரமே ஏற்ற மாகத் துன்பக்கோ லதனைப் பற்றிப் பயிர்தனைச் சுழிய விட்டுப் பாழ்க்குநீர் இறைத்து மிக்க அயர்வினால் ஐவர்க் காற்றேன் ஆரூர்மூ லட்ட னீரே. | 4.52.7 | 505 | கற்றதேல் ஒன்று மில்லை காரிகை யாரோ டாடிப் பெற்றதேற் பெரிதுந் துன்பம் பேதையேன் பிழைப்பி னாலே முற்றினால் ஐவர் வந்து முறைமுறை துயரஞ் செய்ய அற்றுநான் அலந்து போனேன் ஆரூர்மூ லட்ட னீரே. | 4.52.8 | 506 | பத்தனாய் வாழ மாட்டேன் பாவியேன் பரவி வந்து சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவுஞ் செய்ய மத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந் தானும் அத்தனே அமரர் கோவே ஆரூர்மூ லட்ட னீரே. | 4.52.9 | 507 | தடக்கைநா லைந்துங் கொண்டு தடவரை தன்னைப் பற்றி எடுத்தவன் பேர்க்க ஓடி இரிந்தன பூத மெல்லாம் முடித்தலை யனைத்துந் தோளும் முறிதர இறையே யூன்றி அடர்த்தருள் செய்த தென்னே ஆரூர்மூ லட்ட னீரே. | 4.52.10 |
508 | குழல்வலங் கொண்ட சொல்லாள் கோலவேற் கண்ணி தன்னைக் கழல்வலங் கொண்டு நீங்காக் கணங்களக் கணங்க ளார அழல்வலங் கொண்ட கையான் அருட்கதிர் எறிக்கும் ஆரூர் தொழல்வலங் கொண்டல் செய்வான் தோன்றினார் தோன்றி னாரே. | 4.53.1 | ||||||||||||||||||||||||
509 | நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை யென்று வேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்துப் பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின்னென் றஞ்சி ஆகத்திற் கிடந்த நாகம் அடங்கும்ஆ ரூர னார்க்கே. | 4.53.2 | 510 | தொழுதகங் குழைய மேவித் தோட்டிமை யுடைய தொண்டர் அழுதகம் புகுந்து நின்றார் அவரவர் போலும் ஆரூர் எழிலக நடுவெண் முத்த மன்றியும் ஏர்கொள் வேலிப் பொழிலகம் விளங்கு திங்கட் புதுமுகிழ் சூடி னாரே. | 4.53.3 | 511 | நஞ்சிருள் மணிகொள் கண்டர் நகையிருள் ஈமக் கங்குல் வெஞ்சுடர் விளக்கத் தாடி விளங்கினார் போலும் மூவா வெஞ்சுடர் முகடு தீண்டி வெள்ளிநா ராச மன்ன அஞ்சுடர் அணிவெண் டிங்கள் அணியும்ஆ ரூர னாரே. | 4.53.4 | 512 | எந்தளிர் நீர்மை கோல மேனியென் றிமையோ ரேத்தப் பைந்தளிர்க் கொம்ப ரன்ன படர்கொடி பயிலப் பட்டுத் தஞ்சடைத் தொத்தி னாலுந் தம்மதோர் நீர்மை யாலும் அந்தளிர் ஆகம் போலும் வடிவர்ஆ ரூர னாரே. | 4.53.5 | 513 | வானகம் விளங்க மல்கும் வளங்கெழு மதியஞ் சூடித் தானக மழிய வந்து தாம்பலி தேர்வர் போலும் ஊனகங் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளிகொள் நஞ்சம் ஆனகம் அஞ்சும் ஆடும் அடிகள்ஆ ரூர னாரே. | 4.53.6 | 514 | அஞ்சணை கணையி னானை அழலுற அன்று நோக்கி அஞ்சணை குழலி னாளை அமுதமா அணைந்து நக்கு அஞ்சணை அஞ்சும் ஆடி ஆடர வாட்டு வார்தாம் அஞ்சணை வேலி ஆரூர் ஆதரித் திடங்கொண் டாரே. | 4.53.7 | 515 | வணங்கிமுன் அமரர் ஏத்த வல்வினை யான தீரப் பிணங்குடைச் சடையில் வைத்த பிறையுடைப் பெருமை யண்ணல் மணங்கம ழோதி பாகர் மதிநிலா வட்டத் தாடி அணங்கொடி மாட வீதி ஆரூரெம் அடிக ளாரே. | 4.53.8 | 516 | நகலிடம் பிறர்கட் காக நான்மறை யோர்கள் தங்கள் புகலிட மாகி வாழும் புகலிலி இருவர் கூடி இகலிட மாக நீண்டங் கீண்டெழில் அழல தாகி அகலிடம் பரவி யேத்த அடிகள்ஆ ரூர னாரே. | 4.53.9 | 517 | ஆயிரந் திங்கள் மொய்த்த அலைகடல் அமுதம் வாங்கி ஆயிரம் அசுரர் வாழும் அணிமதில் மூன்றும் வேவ ஆயிரந் தோளும் மட்டித் தாடிய அசைவு தீர ஆயிரம் அடியும் வைத்த அடிகள்ஆ ரூர னாரே. | 4.53.10 |
518 | பகைத்திட்டார் புரங்கள் மூன்றும் பாறிநீ றாகி வீழப் புகைத்திட்ட தேவர் கோவே பொறியிலேன் உடலந் தன்னுள் அகைத்திட்டங் கதனை நாளும் ஐவர்கொண் டாட்ட வாடித் திகைத்திட்டேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே. | 4.54.1 | ||||||||||||||||||||||||
519 | மையரி மதர்த்த ஒண்கண் மாதரார் வலையிற் பட்டுக் கையெரி சூல மேந்துங் கடவுளை நினைய மாட்டேன் ஐநெரிந் தகமி டற்றே அடைக்கும்போ தாவி யார்தாஞ் செய்வதொன் றறிய மாட்டேன் திருப்புக லூர னீரே. | 4.54.2 | 520 | முப்பதும் முப்பத் தாறும் முப்பதும் இடுகு ரம்பை அப்பர்போல் ஐவர் வந்து அதுதரு கிதுவி டென்று ஒப்பவே நலிய லுற்றால் உய்யுமா றறிய மாட்டேன் செப்பமே திகழு மேனித் திருப்புக லூர னீரே. | 4.54.3 | 521 | பொறியிலா அழுக்கை யோம்பிப் பொய்யினை மெய்யென் றெண்ணி நெறியலா நெறிகள் சென்றேன் நீதனேன் நீதி யேதும் அறிவிலேன் அமரர் கோவே அமுதினை மண்ணில் வைக்குஞ் செறிவிலேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே. | 4.54.4 | 522 | அளியினார் குழலி னார்கள் அவர்களுக் கன்ப தாகிக் களியினார் பாடல் ஓவாக் கடவூர்வீ ரட்ட மென்னுந் தளியினார் பாத நாளும் நினைவிலாத் தகவில் நெஞ்சந் தெளிவிலேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே. | 4.54.5 | 523 | இலவினார் மாதர் பாலே இசைந்துநான் இருந்து பின்னும் நிலவுநாள் பலவென் றெண்ணி நீதனேன் ஆதி உன்னை உலவிநான் உள்க மாட்டேன் உன்னடி பரவு ஞானஞ் செலவிலேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே. | 4.54.6 | 524 | காத்திலேன் இரண்டும் மூன்றுங் கல்வியேல் இல்லை என்பால் வாய்த்திலேன் அடிமை தன்னுள் வாய்மையால் தூயே னல்லேன் பார்த்தனுக் கருள்கள் செய்த பரமனே பரவு வார்கள் தீர்த்தமே திகழும் பொய்கைத் திருப்புக லூர னீரே. | 4.54.7 | 525 | நீருமாய்த் தீயு மாகி நிலனுமாய் விசும்பு மாகி ஏருடைக் கதிர்க ளாகி இமையவர் இறைஞ்ச நின்று ஆய்வதற் கரிய ராகி அங்கங்கே யாடு கின்ற தேவர்க்குந் தேவ ராவார் திருப்புக லூர னாரே. | 4.54.8 | 526 | மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டள வுயரத் தூண்டி உய்வதோர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம் ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சாலச் செய்வதொன் றறிய மாட்டேன் திருப்புக லூர னீரே. | 4.54.9 | 527 | அருவரை தாங்கி னானும் அருமறை யாதி யானும் இருவரும் அறிய மாட்டா ஈசனார் இலங்கை வேந்தன் கருவரை எடுத்த ஞான்று கண்வழி குருதி சோரத் திருவிரல் சிறிது வைத்தார் திருப்புக லூர னாரே. | 4.54.10 |
528 | தெண்டிரை தேங்கி ஓதஞ் சென்றடி வீழுங் காலைத் தொண்டிரைத் தண்டர் கோனைத் தொழுதடி வணங்கி யெங்கும் வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம்புரத் தடிகள் தம்மைக் கொண்டுநற் கீதம் பாடக் குழகர்தாம் இருந்த வாறே. | 4.55.1 | ||||||||||||||||||||||||
529 | மடுக்களில் வாளை பாய வண்டினம் இரிந்த பொய்கைப் பிடிக்களி றென்னத் தம்மிற் பிணைபயின் றணைவ ரால்கள் தொடுத்தநன் மாலை ஏந்தித் தொண்டர்கள் பரவி யேத்த வடித்தடங் கண்ணி பாகர் வலம்புரத் திருந்த வாறே. | 4.55.2 | 530 | தேனுடை மலர்கள் கொண்டு திருந்தடி பொருந்தச் சேர்த்தி ஆனிடை அஞ்சுங் கொண்டு அன்பினால் அமர வாட்டி வானிடை மதியஞ் சூடும் வலம்புரத் தடிகள் தம்மை நானடைந் தேத்தப் பெற்று நல்வினைப் பயனுற் றேனே. | 4.55.3 | 531 | முளைஎயிற் றிளநல் ஏனம் பூண்டுமொய் சடைகள் தாழ வளைஎயிற் றிளைய நாகம் வலித்தரை யிசைய வீக்கிப் புளைகைய போர்வை போர்த்துப் புனலொடு மதியஞ் சூடி வளைபயில் இளைய ரேத்தும் வலம்புரத் தடிகள் தாமே. | 4.55.4 | 532 | சுருளுறு வரையின் மேலாற் றுளங்கிளம் பளிங்கு சிந்த இருளுறு கதிர்நு ழைந்த இளங்கதிர்ப் பசலைத் திங்கள் அருளுறும் அடிய ரெல்லாம் அங்கையின் மலர்கள் ஏந்த மருளுறு கீதங் கேட்டார் வலம்புரத் தடிக ளாரே. | 4.55.5 | 533 | நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால் நீண்டபுன் சடையி னானே அனைத்துடன் கொண்டு வந்தங் கன்பினால் அமைய வாட்டிப் புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை மெய்ம்மையைப் புணர மாட்டேன் எனக்குநான் செய்வ தென்னே இனிவலம் புரவ னீரே. | 4.55.6 | 534 | செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம்பழ மினிய நாடித் தங்கயந் துறந்து போந்து தடம்பொய்கை அடைந்து நின்று கொங்கையர் குடையுங் காலைக் கொழுங்கனி யழுங்கி னாராம் மங்கல மனையின் மிக்கார் வலம்புரத் தடிக ளாரே. | 4.55.7 | 535 | அருகெலாங் குவளை செந்நெல் அகவிலை யாம்பல் நெய்தல் தெருவெலாந் தெங்கு மாவும் பழம்விழும் படப்பை யெல்லாங் குருகினங் கூடி யாங்கே கும்மலித் திறகு லர்த்தி மருவலா மிடங்கள் காட்டும் வலம்புரத் தடிக ளாரே. | 4.55.8 | 536 | கருவரை யனைய மேனிக் கடல்வண்ண னவனுங் காணான் திருவரை யனைய பூமேல் திசைமுக னவனுங் காணான் ஒருவரை உச்சி ஏறி ஓங்கினார் ஓங்கி வந்து அருமையில் எளிமை யானார் அவர்வலம் புரவ னாரே. | 4.55.9 | 537 | வாளெயி றிலங்க நக்கு வளர்கயி லாயந் தன்னை ஆள்வலி கருதிச் சென்ற அரக்கனை வரைக்கீ ழன்று தோளொடு பத்து வாயுந் தொலைந்துடன் அழுந்த வூன்றி ஆண்மையும் வலியுந் தீர்ப்பார் அவர்வலம் புரவ னாரே. | 4.55.10 |
538 | மாயிரு ஞால மெல்லாம் மலரடி வணங்கும் போலும் பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலுங் காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன் ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே. | 4.56.1 | ||||||||||||||||||||||||
539 | மடந்தை பாகத்தர் போலும் மான்மறிக் கையர் போலும் குடந்தையிற் குழகர் போலுங் கொல்புலித் தோலர் போலுங் கடைந்தநஞ் சுண்பர் போலுங் காலனைக் காய்வர் போலும் அடைந்தவர்க் கன்பர் போலும் ஆவடு துறைய னாரே. | 4.56.2 | 540 | உற்றநோய் தீர்ப்பர் போலும் உறுதுணை யாவர் போலுஞ் செற்றவர் புரங்கள் மூன்றுந் தீயெழச் செறுவர் போலுங் கற்றவர் பரவி யேத்தக் கலந்துலந் தலந்து பாடும் அற்றவர்க் கன்பர் போலும் ஆவடு துறைய னாரே. | 4.56.3 | 541 | மழுவமர் கையர் போலும் மாதவள் பாகர் போலும் எழுநுனை வேலர் போலும் என்புகொண் டணிவர் போலுந் தொழுதெழுந் தாடிப் பாடித் தோத்திரம் பலவுஞ் சொல்லி அழுமவர்க் கன்பர் போலும் ஆவடு துறைய னாரே. | 4.56.4 | 542 | பொடியணி மெய்யர் போலும் பொங்குவெண் ணூலர் போலுங் கடியதோர் விடையர் போலுங் காமனைக் காய்வர் போலும் வெடிபடு தலையர் போலும் வேட்கையாற் பரவுந் தொண்டர் அடிமையை அளப்பர் போலும் ஆவடு துறைய னாரே. | 4.56.5 | 543 | வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச் சக்கரங் கொடுப்பர் போலுந் தானவர் தலைவர் போலுந் துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும் அக்கரை ஆர்ப்பர் போலும் ஆவடு துறைய னாரே. | 4.56.6 | 544 | விடைதரு கொடியர் போலும் வெண்புரி நூலர் போலும் படைதரு மழுவர் போலும் பாய்புலித் தோலர் போலும் உடைதரு கீளர் போலும் உலகமு மாவர் போலும் அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடு துறைய னாரே. | 4.56.7 | 545 | முந்திவா னோர்கள் வந்து முறைமையால் வணங்கி யேத்த நந்திமா காள ரென்பார் நடுவுடை யார்கள் நிற்பச் சிந்தியா தேயொ ழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும் அந்திவான் மதியஞ் சூடும் ஆவடு துறைய னாரே. | 4.56.8 | 546 | பானமர் ஏன மாகிப் பாரிடந் திட்ட மாலுந் தேனமர்ந் தேறும் அல்லித் திசைமுக முடைய கோவுந் தீனரைத் தியக் கறுத்த திருவுரு வுடையர் போலும் ஆனரை ஏற்றர் போலும் ஆவடு துறைய னாரே. | 4.56.9 | 547 | பார்த்தனுக் கருள்வர் போலும் படர்சடை முடியர் போலும் ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலுங் கூத்தராய்ப் பாடி யாடிக் கொடுவலி யரக்கன் றன்னை ஆர்த்தவாய் அலறு விப்பார் ஆவடு துறைய னாரே. | 4.56.10 |
548 | மஞ்சனே மணியு மானாய் மரகதத் திரளு மானாய் நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வி னானே துஞ்சும்போ தாக வந்து துணையெனக் காகி நின்று அஞ்சலென் றருள வேண்டும் ஆவடு துறையு ளானே. | 4.57.1 | ||||||||||||||||||||||||
549 | நானுகந் துன்னை நாளும் நணுகுமா கருதி யேயும் ஊனுகந் தோம்பும் நாயேன் உள்ளுற ஐவர் நின்றார் தானுகந் தேயு கந்த தகவிலாத் தொண்ட னேன்நான் ஆனுகந் தேறு வானே ஆவடு துறையு ளானே. | 4.57.2 | 550 | கட்டமே வினைக ளான காத்திவை நோக்கி ஆளாய் ஒட்டவே ஒட்டி நாளும் உன்னையுள் வைக்க மாட்டேன் பட்டவான் தலைகை யேந்திப் பலிதிரிந் தூர்கள் தோறும் அட்டமா வுருவி னானே ஆவடு துறையு ளானே. | 4.57.3 | 551 | பெருமைநன் றுடைய தில்லை யென்றுநான் பேச மாட்டேன் ஒருமையால் உன்னை உள்கி உகந்துவா னேற மாட்டேன் கருமையிட் டாய வூனைக் கட்டமே கழிக்கின் றேன்நான் அருமையா நஞ்ச முண்ட ஆவடு துறையு ளானே. | 4.57.4 | 552 | துட்டனாய் வினைய தென்னுஞ் சுழித்தலை அகப்பட் டேனைக் கட்டனாய் ஐவர் வந்து கலக்காமைக் காத்துக் கொள்வாய் மட்டவிழ் கோதை தன்னை மகிழ்ந்தொரு பாகம் வைத்து அட்டமா நாக மாட்டும் ஆவடு துறையு ளானே. | 4.57.5 | 553 | காரழற் கண்ட மேயாய் கடிமதிற் புரங்கள் மூன்றும் ஓரழல் அம்பி னாலே யுகைத்துத்தீ எரிய மூட்டி நீரழற் சடையு ளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய் ஆரழல் ஏந்தி யாடும் ஆவடு துறையு ளானே. | 4.57.6 | 554 | செறிவிலேன் சிந்தை யுள்ளே சிவனடி தெரிய மாட்டேன் குறியிலேன் குணமொன் றில்லேன் கூறுமா கூற மாட்டேன் நெறிபடு மதியொன் றில்லேன் நினையுமா நினைய மாட்டேன் அறிவிலேன் அயர்த்துப் போனேன் ஆவடு துறையு ளானே. | 4.57.7 | 555 | கோலமா மங்கை தன்னைக் கொண்டொரு கோல மாய சீலமே அறிய மாட்டேன் செய்வினை மூடி நின்று ஞாலமாம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய் ஆலமா நஞ்ச முண்ட ஆவடு துறையு ளானே. | 4.57.8 | 556 | நெடியவன் மலரி னானும் நேர்ந்திரு பாலும் நேடக் கடியதோர் உருவ மாகிக் கனலெரி யாகி நின்ற வடிவின வண்ண மென்றே என்றுதாம் பேச லாகார் அடியனேன் நெஞ்சி னுள்ளார் ஆவடு துறையு ளானே. | 4.57.9 | 557 | மலைக்குநே ராய ரக்கன் சென்றுற மங்கை அஞ்சத் தலைக்குமேற் கைக ளாலே தாங்கினான் வலியை மாள உலப்பிலா விரலால் ஊன்றி ஒறுத்தவற் கருள்கள் செய்து அலைத்தவான் கங்கை சூடும் ஆவடு துறையு ளானே. | 4.57.10 |
558 | கன்றினார் புரங்கள் மூன்றுங் கனலெரி யாகச் சீறி நின்றதோ ருருவந் தன்னால் நீர்மையும் நிறையுங் கொண்டு ஒன்றியாங் குமையுந் தாமும் ஊர்பலி தேர்ந்து பின்னும் பன்றிப்பின் வேட ராகிப் பருப்பத நோக்கி னாரே. | 4.58.1 | ||||||||||||||||||||||||
559 | கற்றமா மறைகள் பாடிக் கடைதொறும் பலியுந் தேர்வார் வற்றலோர் தலைகை யேந்தி வானவர் வணங்கி வாழ்த்த முற்றவோர் சடையில் நீரை ஏற்றமுக் கண்ணர் தம்மைப் பற்றினார்க் கருள்கள் செய்து பருப்பத நோக்கி னாரே. | 4.58.2 | 560 | கரவிலா மனத்த ராகிக் கைதொழு வார்கட் கென்றும் இரவினின் றெரிய தாடி இன்னருள் செய்யும் எந்தை மருவலார் புரங்கள் மூன்று மாட்டிய நகைய ராகிப் பரவுவார்க் கருள்கள் செய்து பருப்பத நோக்கி னாரே. | 4.58.3 | 561 | கட்டிட்ட தலைகை யேந்திக் கனலெரி யாடிச் சீறிச் சுட்டிட்ட நீறு பூசிச் சுடுபிணக் காட ராகி விட்டிட்ட வேட்கை யார்க்கு வேறிருந் தருள்கள் செய்து பட்டிட்ட வுடைய ராகிப் பருப்பத நோக்கி னாரே. | 4.58.4 | 562 | கையராய்க் கபால மேந்திக் காமனைக் கண்ணாற் காய்ந்து மெய்யராய் மேனி தன்மேல் விளங்குவெண் ணீறு பூசி உய்யரா யுள்கு வார்கட் குவகைகள் பலவுஞ் செய்து பையரா அரையி லார்த்துப் பருப்பத நோக்கி னாரே. | 4.58.5 | 563 | வேடராய் வெய்ய ராகி வேழத்தி னுரிவை போர்த்து ஓடரா யுலக மெல்லா முழிதர்வர் உமையுந் தாமுங் காடராய்க் கனல்கை யேந்திக் கடியதோர் விடைமேற் கொண்டு பாடராய்ப் பூதஞ் சூழப் பருப்பத நோக்கி னாரே. | 4.58.6 | 564 | மேகம்போல் மிடற்ற ராகி வேழத்தி னுரிவை போர்த்து ஏகம்பம் மேவி னார்தாம் இமையவர் பரவி யேத்தக் காகம்பர் கழற ராகிக் கடியதோர் விடையொன் றேறிப் பாகம்பெண் ணுருவ மானார் பருப்பத நோக்கி னாரே. | 4.58.7 | 565 | பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் காருடைக் கண்ட ராகிக் கபாலமோர் கையி லேந்திச் சீருடைச் செங்கண் வெள்ளே றேறிய செல்வர் நல்ல பாரிடம் பாணி செய்யப் பருப்பத நோக்கி னாரே. | 4.58.8 | 566 | அங்கண்மா லுடைய ராய ஐவரா லாட்டு ணாதே உங்கள்மால் தீர வேண்டில் உள்ளத்தா லுள்கி யேத்துஞ் செங்கண்மால் பரவி யேத்திச் சிவனென நின்ற செல்வர் பைங்கண்வெள் ளேற தேறிப் பருப்பத நோக்கி னாரே. | 4.58.9 | 567 | அடல்விடை யூர்தி யாகி அரக்கன்றோள் அடர வூன்றிக் கடலிடை நஞ்ச முண்ட கறையணி கண்ட னார்தாஞ் சுடர்விடு மேனி தன்மேற் சுண்ணவெண் ணீறு பூசிப் படர்சடை மதியஞ் சேர்த்திப் பருப்பத நோக்கி னாரே. | 4.58.10 |
568 | தோற்றினான் எயிறு கவ்வித் தொழிலுடை யரக்கன் றன்னைத் தேற்றுவான் சென்று சொல்லச் சிக்கெனத் தவிரு மென்று வீற்றினை யுடைய னாகி வெடுவெடுத் தெழுந்த வன்றன் ஆற்றலை அழிக்க வல்லார் அவளிவ ணல்லூ ராரே. | 4.59.1 | ||||||||||||||||||||||||
569 | வெம்பினா ரரக்க ரெல்லாம் மிகச்சழக் காயிற் றென்று செம்பினா லெடுத்த கோயில் சிக்கெனச் சிதையு மென்ன நம்பினா ரென்று சொல்லி நன்மையான் மிக்கு நோக்கி அம்பினால் அழிய வெய்தார் அவளிவ ணல்லூ ராரே. | 4.59.2 | 570 | கீழ்ப்படக் கருத லாமோ கீர்த்திமை யுள்ள தாகிற் தோட்பெரு வலியி னாலே தொலைப்பன்யான் மலையை யென்று வேட்பட வைத்த வாறே விதிர்விதிர்த் தரக்கன் வீழ்ந்து ஆட்படக் கருதிப் புக்கார் அவளிவ ணல்லூ ராரே. | 4.59.3 | 571 | நிலைவலம் வல்ல னல்லன் நேர்மையை நினைய மாட்டான் சிலைவலங் கொண்ட செல்வன் சீரிய கயிலை தன்னைத் தலைவலங் கருதிப் புக்குத் தாக்கினான் தன்னை யன்று அலைகுலை யாக்கு வித்தார் அவளிவ ணல்லூ ராரே. | 4.59.4 | 572 | தவ்வலி யொன்ற னாகித் தனதொரு பெருமை யாலே மெய்வ்வலி யுடைய னென்று மிகப்பெருந் தேரை யூர்ந்து செவ்வலி கூர்வி ழியாற் சிரமத்தான் எடுக்குற் றானை அவ்வலி தீர்க்க வல்லார் அவளிவ ணல்லூ ராரே. | 4.59.5 | 573 | நன்மைதான் அறிய மாட்டான் நடுவிலா அரக்கர் கோமான் வன்மையே கருதிச் சென்று வலிதனைச் செலுத்த லுற்றுக் கன்மையான் மலையை யோடிக் கருதித்தான் எடுத்து வாயால் அம்மையோ வென்ன வைத்தார் அவளிவ ணல்லூ ராரே. | 4.59.6 | 574 | கதம்படப் போது வார்கள் போதுமக் கருத்தி னாலே சிதம்பட நின்ற நீர்கள் சிக்கெனத் தவிரு மென்று மதம்படு மனத்த னாகி வன்மையான் மிக்கு நோக்க அதம்பழத் துருவு செய்தார் அவளிவ ணல்லூ ராரே. | 4.59.7 | 575 | நாடுமிக் குழிதர் கின்ற நடுவிலா அரக்கர் கோனை ஓடுமிக் கென்று சொல்லி ஊன்றினான் உகிரி னாலே பாடுமிக் குய்வ னென்று பணியநற் றிறங்கள் காட்டி ஆடுமிக் கரவம் பூண்டார் அவளிவ ணல்லூ ராரே. | 4.59.8 | 576 | ஏனமா யிடந்த மாலும் எழில்தரு முளரி யானும் ஞானந்தா னுடைய ராகி நன்மையை அறிய மாட்டார் சேனந்தான் இலாவ ரக்கன் செழுவரை எடுக்க வூன்றி ஆனந்த அருள்கள் செய்தார் அவளிவ ணல்லூ ராரே. | 4.59.9 | 577 | ஊக்கினான் மலையை யோடி உணர்விலா அரக்கன் றன்னைத் தாக்கினான் விரலி னாலே தலைபத்துந் தகர வூன்றி நோக்கினான் அஞ்சத் தன்னை நோன்பிற வூன்று சொல்லி ஆக்கினார் அமுத மாக அவளிவ ணல்லூ ராரே. | 4.59.10 |
578 | மறையணி நாவி னானை மறப்பிலார் மனத்து ளானைக் கறையணி கண்டன் றன்னைக் கனலெரி யாடி னானைப் பிறையணி சடையி னானைப் பெருவேளூர் பேணி னானை நறையணி மலர்கள் தூவி நாடொறும் வணங்கு வேனே. | 4.60.1 | ||||||||||||||||||||||||
579 | நாதனாய் உலக மெல்லாம் நம்பிரான் எனவும் நின்ற பாதனாம் பரம யோகி பலபல திறத்தி னாலும் பேதனாய்த் தோன்றி னானைப் பெருவேளூர் பேணி னானை ஓதநா வுடைய னாகி உரைக்குமா றுரைக்கின் றேனே. | 4.60.2 | 580 | குறவிதோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை யென்று நறவிள நறுமென் கூந்தல் நங்கையோர் பாகத் தானைப் பிறவியை மாற்று வானைப் பெருவேளூர் பேணி னானை உறவினால் வல்ல னாகி உணருமா றுணர்த்து வேனே. | 4.60.3 | 581 | மைஞ்ஞவில் கண்டன் றன்னை வலங்கையின் மழுவொன் றேந்திக் கைஞ்ஞவில் மானி னோடுங் கனலெரி யாடி னானைப் பிஞ்ஞகன் றன்னை அந்தண் பெருவேளூர் பேணி னானைப் பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப் பொறியிலா அறிவி லேனே. | 4.60.4 | 582 | ஓடைசேர் நெற்றி யானை உரிவையை மூடி னானை வீடதே காட்டு வானை வேதநான் காயி னானைப் பேடைசேர் புறவ நீங்காப் பெருவேளூர் பேணி னானைக் கூடநான் வல்ல மாற்றங் குறுகுமா றறிகி லேனே. | 4.60.5 | 583 | கச்சைசேர் நாகத் தானைக் கடல்விடங் கண்டத் தானைக் கச்சியே கம்பன் றன்னைக் கனலெரி யாடு வானைப் பிச்சைசேர்ந் துழல்வி னானைப் பெருவேளூர் பேணி னானை இச்சைசேர்ந் தமர நானும் இறைஞ்சுமா றிறைஞ்சு வேனே. | 4.60.6 | 584 | சித்தராய் வந்து தன்னைத் திருவடி வணங்கு வார்கள் முத்தனை மூர்த்தி யாய முதல்வனை முழுது மாய பித்தனைப் பிறரு மேத்தப் பெருவேளூர் பேணி னானை மெத்தனே யவனை நாளும் விரும்புமா றறிகி லேனே. | 4.60.7 | 585 | முண்டமே தாங்கி னானை முற்றிய ஞானத் தானை வண்டுலாங் கொன்றை மாலை வளர்மதிக் கண்ணி யானைப் பிண்டமே ஆயி னானைப் பெருவேளூர் பேணி னானை அண்டமாம் ஆதி யானை அறியுமா றறிகி லேனே. | 4.60.8 | 586 | விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்து எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாகும் பரிவினாற் பெரியோ ரேத்தும் பெருவேளூர் பற்றி னானை மருவிநான் வாழ்த்தி உய்யும் வகையது நினைக்கின் றேனே. | 4.60.9 | 587 | பொருகடல் இலங்கை மன்னன் உடல்கெடப் பொருத்தி நல்ல கருகிய கண்டத் தானைக் கதிரிளங் கொழுந்து சூடும் பெருகிய சடையி னானைப் பெருவேளூர் பேணி னானை உருகிய அடிய ரேத்தும் உள்ளத்தால் உள்கு வேனே. | 4.60.10 |
588 | பாசமுங் கழிக்க கில்லா அரக்கரைப் படுத்துத் தக்க வாசமிக் கலர்கள் கொண்டு மதியினால் மால்செய் கோயில் நேசமிக் கன்பி னாலே நினைமின்நீர் நின்று நாளுந் தேசமிக் கான் இருந்த திருஇரா மேச்சு ரமே. | 4.61.1 | |||||||||||||||||||||||||||
589 | முற்றின நாள்கள் என்று முடிப்பதே கார ணமாய் உற்றவன் போர்க ளாலே உணர்விலா அரக்கர் தம்மைச் செற்றமால் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தைப் பற்றிநீ பரவு நெஞ்சே படர்சடை ஈசன் பாலே. | 4.61.2 | 590 | கடலிடை மலைகள் தம்மால் அடைத்துமால் கருமம் முற்றித் திடலிடைச் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தைத் தொடலிடை வைத்து நாவிற் சுழல்கின்றேன் தூய்மை யின்றி உடலிடை நின்றும் பேரா ஐவர்ஆட் டுண்டு நானே. | 4.61.3 | 591 | குன்றுபோல் தோளு டைய குணமிலா அரக்கர் தம்மைக் கொன்றுபோ ராழி யம்மால் வேட்கையாற் செய்த கோயில் நன்றுபோல் நெஞ்ச மேநீ நன்மையை அறிதி யாயிற் சென்றுநீ தொழுதுய் கண்டாய் திருஇரா மேச்சு ரமே. | 4.61.4 | 592 | வீரமிக் கெயிறு காட்டி விண்ணுற நீண்ட ரக்கன் கூரமிக் கவனைச் சென்று கொன்றுடன் கடற் படுத்துத் தீரமிக் கானி ருந்த திருஇரா மேச்சு ரத்தைக் கோரமிக் கார்த வத்தாற் கூடுவார் குறிப்பு ளாரே. | 4.61.5 | 593 | ஆர்வலம் நம்மின் மிக்கார் என்றஅவ் வரக்கர் கூடிப் போர்வலஞ் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித் தேர்வலஞ் செற்ற மால்செய் திருஇரா மேச்சு ரத்தைச் சேர்மட நெஞ்ச மேநீ செஞ்சடை எந்தை பாலே. | 4.61.6 | 594 | வாக்கினால் இன்பு ரைத்து வாழ்கிலார் தம்மை யெல்லாம் போக்கினாற் புடைத்த வர்கள் உயிர்தனை யுண்டு மால்தான் தேக்குநீர் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தை நோக்கினால் வணங்கு வார்க்கு நோய்வினை நுணுகு மன்றே. | 4.61.7 | 595 | பலவுநாள் தீமை செய்து பார்தன்மேற் குழுமி வந்து கொலைவிலார் கொடிய ராய அரக்கரைக் கொன்று வீழ்த்தச் சிலையினான் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தைத் தலையினால் வணங்கு வார்கள் தாழ்வராந் தவம தாமே. | 4.618 | 596 | கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை யெல்லாம் வீடவே சக்க ரத்தால் எறிந்துபின் அன்பு கொண்டு தேடிமால் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தை நாடிவாழ் நெஞ்ச மேநீ நன்னெறி யாகு மன்றே. | 4.61.9 | 597 | வன்கண்ணர் வாள ரக்கர் வாழ்வினை யொன்ற றியார் புன்கண்ண ராகி நின்று போர்கள்செய் தாரை மாட்டிச் செங்கண்மால் செய்த கோயில் திருஇரா மேச்சு ரத்தைத் தங்கணால் எய்த வல்லார் தாழ்வராந் தலைவன் பாலே. | 4.61.10 | 598 | வரைகளொத் தேயு யர்ந்த மணிமுடி அரக்கர் கோனை விரையமுற் றறவொ டுக்கி மீண்டுமால் செய்த கோயில் திரைகள்முத் தால்வ ணங்குந் திருஇரா மேச்சு ரத்தை உரைகள்பத் தாலு ரைப்பார் உள்குவார் அன்பி னாலே. | 4.61.11 |
599 | வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றென் றோதியே மலர்கள் தூவி ஒடுங்கிநின் கழல்கள் காணப் பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும் ஆதியே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே. | 4.62.1 | ||||||||||||||||||||||||
600 | நம்பனே நான்மு கத்தாய் நாதனே ஞான மூர்த்தி என்பொனே ஈசா என்றென் றேத்திநான் ஏசற் றென்றும் பின்பினே திரிந்து நாயேன் பேர்த்தினிப் பிறவா வண்ணம் அன்பனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே. | 4.62.2 | 601 | ஒருமருந் தாகி யுள்ளாய் உம்பரோ டுலகுக் கெல்லாம் பெருமருந் தாகி நின்றாய் பேரமு தின்சு வையாய்க் கருமருந் தாகி யுள்ளாய் ஆளும்வல் வினைகள் தீர்க்கும் அருமருந் தால வாயில் அப்பனே அருள்செ யாயே. | 4.62.3 | 602 | செய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவே மையணி கண்டத் தானே மான்மறி மழுவொன் றேந்துஞ் சைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன் ஐயனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே. | 4.62.4 | 603 | வெண்டலை கையி லேந்தி மிகவுமூர் பலிகொண் டென்றும் உண்டது மில்லை சொல்லில் உண்டது நஞ்சு தன்னைப் பண்டுனை நினைய மாட்டாப் பளகனேன் உளம தார அண்டனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே. | 4.62.5 | 604 | எஞ்சலில் புகலி தென்றென் றேத்திநான் ஏசற் றென்றும் வஞ்சக மொன்று மின்றி மலரடி காணும் வண்ணம் நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட் பதமே நாயேற் கஞ்சலென் றால வாயில் அப்பனே அருள்செ யாயே. | 4.62.6 | 605 | வழுவிலா துன்னை வாழ்த்தி வழிபடுந் தொண்ட னேன்உன் செழுமலர்ப் பாதங் காணத் தெண்டிரை நஞ்ச முண்ட குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தா யுள்ள அழகனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே. | 4.62.7 | 606 | நறுமலர் நீருங் கொண்டு நாடொறு மேத்தி வாழ்த்திச் செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம் மறிகடல் வண்ணன் பாகா மாமறை யங்க மாறும் அறிவனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே. | 4.62.8 | 607 | நலந்திகழ் வாயின் நூலாற் சருகிலைப் பந்தர் செய்த சிலந்தியை அரச தாள அருளினாய் என்று திண்ணங் கலந்துடன் வந்து நின்றாள் கருதிநான் காண்ப தாக அலந்தனன் ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே. | 4.62.9 | 608 | பொடிக்கொடு பூசிப் பொல்லாக் குரம்பையிற் புந்தி யொன்றிப் பிடித்துநின் றாள்க ளென்றும் பிதற்றிநா னிருக்க மாட்டேன் எடுப்பனென் றிலங்கைக் கோன்வந் தெடுத்தலும் இருப துதோள் அடர்த்தனே ஆல வாயில் அப்பனே அருள்செ யாயே. | 4.62.10 |
609 | ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க சோதியே துளங்கும் எண்டோ ள் சுடர்மழுப் படையி னானே ஆதியே அமரர் கோவே அணியணா மலையு ளானே நீதியால் நின்னை யல்லால் நினையுமா நினைவி லேனே. | 4.63.1 | ||||||||||||||||||||||||
610 | பண்டனை வென்ற இன்சொற் பாவையோர் பங்க நீல கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா அண்டனே அமரர் கோவே அணியணா மலையு ளானே தொண்டனேன் உன்னை அல்லாற் சொல்லுமா சொல்லி லேனே. | 4.63.2 | 611 | உருவமும் உயிரு மாகி ஓதிய உலகுக் கெல்லாம் பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க அருவிபொன் சொரியும் அண்ணா மலையுளாய் அண்டர் கோவே மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே. | 4.63.3 | 612 | பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால்வெண் ணீற்றாய் செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க அம்பொனே கொழித்து வீழும் அணியணா மலையு ளானே என்பொனே உன்னை யல்லால் யாதும்நான் நினைவி லேனே. | 4.63.4 | 613 | பிறையணி முடியி னானே பிஞ்ஞகா பெண்ணோர் பாகா மறைவலா இறைவா வண்டார் கொன்றையாய் வாம தேவா அறைகழல் அமர ரேத்தும் அணியணா மலையு ளானே இறைவனே உன்னை யல்லா லியாதுநான் நினைவி லேனே. | 4.63.5 | 614 | புரிசடை முடியின் மேலோர் பொருபுனற் கங்கை வைத்துக் கரியுரி போர்வை யாகக் கருதிய கால காலா அரிகுலம் மலிந்த அண்ணா மலையுளாய் அலரின் மிக்க வரிமிகு வண்டு பண்செய் பாதநான் மறப்பி லேனே. | 4.63.6 | 615 | இரவியும் மதியும் விண்ணும் இருநிலம் புனலுங் காற்றும் உரகமார் பவனம் எட்டுந் திசையொளி உருவ மானாய் அரவுமிழ் மணிகொள் சோதி அணியணா மலையு ளானே பரவுநின் பாத மல்லாற் பரமநான் பற்றி லேனே. | 4.63.7 | 616 | பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுப தத்தை ஈந்தாய் நீர்த்ததும் புலாவு கங்கை நெடுமுடி நிலாவ வைத்தாய் ஆர்த்துவந் தீண்டு கொண்டல் அணியணா மலையு ளானே தீர்த்தனே நின்றன் பாதத் திறமலாற் றிறமி லேனே. | 4.63.8 | 617 | பாலுநெய் முதலா மிக்க பசுவில்ஐந் தாடு வானே மாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய் ஆலுநீர் கொண்டல் பூகம் அணியணா மலையு ளானே வாலுடை விடையாய் உன்றன் மலரடி மறப்பி லேனே. | 4.63.9 | 618 | இரக்கமொன் றியாது மில்லாக் காலனைக் கடிந்த எம்மான் உரத்தினால் வரையை ஊக்க ஒருவிரல் நுதியி னாலே அரக்கனை நெரித்த அண்ணா மலையுளாய் அமர ரேறே சிரத்தினால் வணங்கி யேத்தித் திருவடி மறப்பி லேனே. | 4.63.10 |
619 | பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர் சீதத்திற் பொலிந்த திங்கட் கொழுந்தர்நஞ் சழுந்து கண்டர் கீதத்திற் பொலிந்த ஓசைக் கேள்வியர் வேள்வி யாளர் வேதத்தின் பொருளர் வீழி மிழலையுள் விகிர்த னாரே. | 4.64.1 | ||||||||||||||||||||||||
620 | காலையிற் கதிர்செய் மேனி கங்குலிற் கறுத்த கண்டர் மாலையின் மதியஞ் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும் ஆலையிற் பாகும் போல அண்ணித்திட் டடியார்க் கென்றும் வேலையின் அமுதர் வீழி மிழலையுள் விகிர்த னாரே. | 4.64.2 | 621 | வருந்தின நெருநல் இன்றாய் வழங்கின நாளர் ஆற்கீழ் இருந்துநன் பொருள்கள் நால்வர்க் கியம்பினர் இருவ ரோடும் பொருந்தினர் பிரிந்து தம்பால் பொய்யரா மவர்கட் கென்றும் விருந்தினர் திருந்து வீழி மிழலையுள் விகிர்த னாரே. | 4.64.3 | 622 | நிலையிலா வூர்மூன் றொன்ற நெருப்பரி காற்றம் பாகச் சிலையுநா ணதுவு நாகங் கொண்டவர் தேவர் தங்கள் தலையினாற் றரித்த என்பும் தலைமயிர் வடமும் பூண்ட விலையிலா வேடர் வீழி மிழலையுள் விகிர்த னாரே. | 4.64.4 | 623 | மறையிடைப் பொருளர் மொட்டின் மலர்வழி வாசத் தேனர் கறவிடைப் பாலின் நெய்யர் கரும்பினிற் கட்டி யாளர் பிறையிடைப் பாம்பு கொன்றைப் பிணையல்சேர் சடையுள் நீரர் விறகிடைத் தீயர் வீழி மிழலையுள் விகிர்த னாரே. | 4.64.5 | 624 | எண்ணகத் தில்லை அல்லர் உளரல்லர் இமவான் பெற்ற பெண்ணகத் தரையர் காற்றிற் பெருவலி யிருவ ராகி மண்ணகத் தைவர் நீரில் நால்வர்தீ யதனில் மூவர் விண்ணகத் தொருவர் வீழி மிழலையுள் விகிர்த னாரே. | 4.64.6 | 625 | சந்தணி கொங்கை யாளோர் பங்கினர் சாம வேதர் எந்தையும் எந்தை தந்தை தந்தையு மாய ஈசர் அந்தியோ டுதயம் அந்த ணாளர்ஆன் நெய்யால் வேட்கும் வெந்தழ லுருவர் வீழி மிழலையுள் விகிர்த னாரே. | 4.64.7 | 626 | நீற்றினை நிறையப் பூசி நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு ஏற்றுழி ஒருநா ளொன்று குறையக்கண் நிறைய விட்ட ஆற்றலுக் காழி நல்கி யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில் வீற்றிருந் தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே. | 4.64.8 | 627 | சித்திசெய் பவர்கட் கெல்லாஞ் சேர்விடஞ் சென்று கூடப் பத்திசெய் பவர்கள் பாவம் பறைப்பவர் இறப்பி லாளர் முத்திசை பவள மேனி முதிரொளி நீல கண்டர் வித்தினில் முளையர் வீழி மிழலையுள் விகிர்த னாரே. | 4.64.9 | 628 | தருக்கின அரக்கன் தேரூர் சாரதி தடைநி லாது பொருப்பினை யெடுத்த தோளும் பொன்முடி பத்தும் புண்ணாய் நெரிப்புண்டங் கலறி மீண்டு நினைந்தடி பரவத் தம்வாள் விருப்பொடுங் கொடுப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே. | 4.64.10 |
629 | தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண் டேயன் வீடுநாள் அணுகிற் றென்று மெய்கொள்வான் வந்த காலன் பாடுதான் செல்லு மஞ்சிப் பாதமே சரண மென்னச் சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவி னாரே. | 4.65.1 | ||||||||||||||||||||||||
630 | வடங்கெழு மலைமத் தாக வானவர் அசுர ரோடு கடைந்திட எழுந்த நஞ்சங் கண்டுபல் தேவ ரஞ்சி அடைந்துநும் சரண மென்ன அருள்பெரி துடைய ராகித் தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவி னாரே. | 4.65.2 | 631 | அரணிலா வெளிய நாவல் அருள்நிழ லாக ஈசன் வரணிய லாகித் தன்வாய் நூலினாற் பந்தர் செய்ய முரணிலாச் சிலந்தி தன்னை முடியுடை மன்ன னாக்கித் தரணிதான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவி னாரே. | 4.65.3 | 632 | அரும்பெருஞ் சிலைக்கை வேட னாய்விறற் பார்த்தற் கன்று உரம்பெரி துடைமை காட்டி ஒள்ளமர் செய்து மீண்டே வரம்பெரி துடைய னாக்கி வாளமர் முகத்தின் மன்னுஞ் சரம்பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவி னாரே. | 4.65.4 | 633 | இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்க ளோடு மந்திர மறைய தோதி வானவர் வணங்கி வாழ்த்தத் தந்திர மறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று சந்திரற் கருள்செய் தாருஞ் சாய்க்காடு மேவி னாரே. | 4.65.5 | 634 | ஆமலி பாலும் நெய்யும் ஆட்டிஅர்ச் சனைகள் செய்து பூமலி கொன்றை சூட்டப் பொறாததன் தாதை தாளைக் கூர்மழு வொன்றால் ஓச்சக் குளிர்சடைக் கொன்றை மாலைத் தாமநற் சண்டிக் கீந்தார் சாய்க்காடு மேவி னாரே. | 4.65.6 | 635 | மையறு மனத்த னாய பகீரதன் வரங்கள் வேண்ட ஐயமில் லமர ரேத்த ஆயிர முகம தாகி வையகம் நெளியப் பாய்வான் வந்திழி கங்கை யென்னுந் தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவி னாரே. | 4.65.7 | 636 | குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சிப் பாரந் துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித் தூயவாய்க் கலசம் ஆட்ட உவப்பெருங் குருதி சோர ஒருகணை யிடந்தங் கப்பத் தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவி னாரே. | 4.65.8 | 637 | நக்குலா மலர்பன் னூறு கொண்டுநன் ஞானத் தோடு மிக்கபூ சனைகள் செய்வான் மென்மல ரொன்று காணா தொக்குமென் மலர்க்கண் ணென்றங் கொருகணை யிடந்து மப்பச் சக்கரங் கொடுப்பர் போலுஞ் சாய்க்காடு மேவி னாரே. | 4.65.9 | 638 | புயங்கள்ஐஞ் ஞான்கும் பத்து மாயகொண் டரக்க னோடிச் சிவன்திரு மலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி யஞ்ச வியன்பெற எய்தி வீழ விரல்சிறி தூன்றி மீண்டே சயம்பெற நாம மீந்தார் சாய்க்காடு மேவி னாரே. | 4.65.10 |
639 | கச்சைசேர் அரவர் போலுங் கறையணி மிடற்றர் போலும் பிச்சைகொண் டுண்பர் போலும் பேரரு ளாலர் போலும் இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலுந் தம்மை நச்சுவார்க் கினியர் போலும் நாகஈச் சரவ னாரே. | 4.66.1 | ||||||||||||||||||||||||
640 | வேடுறு வேட ராகி விசயனோ டெய்தார் போலுங் காடுறு பதியர் போலுங் கடிபுனற் கங்கை நங்கை சேடெறி சடையர் போலுந் தீவினை தீர்க்க வல்ல நாடறி புகழர் போலும் நாகஈச் சரவ னாரே. | 4.66.2 | 641 | கற்றுணை வில்ல தாகக் கடியரண் செற்றார் போலும் பொற்றுணைப் பாதர் போலும் புலியத ளுடையார் போலுஞ் சொற்றுணை மாலை கொண்டு தொழுதெழு வார்கட் கெல்லாம் நற்றுணை யாவர் போலும் நாகஈச் சரவ னாரே. | 4.66.3 | 642 | கொம்பனாள் பாகர் போலுங் கொடியுடை விடையர் போலுஞ் செம்பொனா ருருவர் போலுந் திகழ்திரு நீற்றர் போலும் எம்பிரான் எம்மை யாளும் இறைவனே என்று தம்மை நம்புவார்க் கன்பர் போலும் நாகஈச் சரவ னாரே. | 4.66.4 | 643 | கடகரி யுரியர் போலுங் கனல்மழு வாளர் போலும் படவர வரையர் போலும் பாரிடம் பலவுங் கூடிக் குடமுடை முழவம் ஆர்ப்பக் கூளிகள் பாட நாளும் நடநவில் அடிகள் போலும் நாகஈச் சரவ னாரே. | 4.66.5 | 644 | பிறையுறு சடையர் போலும் பெண்ணொரு பாகர் போலும் மறையுறு மொழியர் போலும் மால்மறை யவன்ற னோடு முறைமுறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற நறவமர் கழலர் போலும் நாகஈச் சரவ னாரே. | 4.66.6 | 645 | வஞ்சகர்க் கரியர் போலும் மருவினோர்க் கெளியர் போலுங் குஞ்சரத் துரியர் போலுங் கூற்றினைக் குமைப்பர் போலும் விஞ்சையர் இரிய அன்று வேலைவாய் வந்தெ ழுந்த நஞ்சணி மிடற்றர் போலும் நாகஈச் சரவ னாரே. | 4.66.7 | 646 | போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும் வேகமார் விடையர் போலும் வெண்பொடி யாடு மேனிப் பாகமா லுடையர் போலும் பருப்பத வில்லர் போலும் நாகநா ணுடையர் போலும் நாகஈச் சரவ னாரே. | 4.66.8 | 647 | கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும் அக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும் வக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும் நக்கரை யுருவர் போலும் நாகஈச் சரவ னாரே. | 4.66.9 | 648 | வின்மையாற் புரங்கள் மூன்றும் வெந்தழல் விரித்தார் போலும் தன்மையால் அமரர் தங்கள் தலைவர்க்குந் தலைவர் போலும் வன்மையான் மலையெ டுத்தான் வலியினைத் தொலைவித் தாங்கே நன்மையால் அளிப்பர் போலும் நாகஈச் சரவ னாரே. | 4.66.10 |
649 | வரைகிலேன் புலன்க ளைந்தும் வரைகிலாப் பிறவி மாயப் புரையிலே அடங்கி நின்று புறப்படும் வழியுங் காணேன் அரையிலே மிளிரு நாகத் தண்ணலே அஞ்ச லென்னாய் திரையுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே. | 4.67.1 | ||||||||||||||||||||||||
650 | தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து பிண்டமே சுமந்து நைந்து பேர்வதோர் வழியுங் காணேன் அண்டனே அண்ட வாணா அறிவனே அஞ்ச லென்னாய் தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே. | 4.67.2 | 651 | கால்கொடுத் தெலும்பு மூட்டிக் கதிர்நரம் பாக்கை யார்த்துத் தோலுடுத் துதிர மட்டித் தொகுமயிர் மேய்ந்த கூரை ஓலெடுத் துழைஞர் கூடி ஒளிப்பதற் கஞ்சு கின்றேன் சேலுடைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே. | 4.67.3 | 652 | கூட்டமாய் ஐவர் வந்து கொடுந்தொழிற் குணத்த ராகி ஆட்டுவார்க் காற்ற கில்லேன் ஆடர வசைத்த கோவே காட்டிடை யரங்க மாக ஆடிய கடவு ளேயோ சேட்டிரும் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே. | 4.67.4 | 653 | பொக்கமாய் நின்ற பொல்லாப் புழுமிடை முடைகொள் ஆக்கை தொக்குநின் றைவர் தொண்ணூற் றறுவருந் துயக்க மெய்த மிக்குநின் றிவர்கள் செய்யும் வேதனைக் கலந்து போனேன் செக்கரே திகழும் மேனித் திருக்கொண்டீச் சரத்து ளானே. | 4.67.5 | 654 | ஊனுலா முடைகொள் ஆக்கை உடைகல மாவ தென்றும் மானுலா மழைக்க ணார்தம் வாழ்க்கையை மெய்யென் றெண்ணி நானெலா மினைய கால நண்ணிலேன் எண்ண மில்லேன் தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே. | 4.67.6 | 655 | சாணிரு மடங்கு நீண்ட சழக்குடைப் பதிக்கு நாதர் வாணிகர் ஐவர் தொண்ணூற் றறுவரும் மயக்கஞ் செய்து பேணிய பதியின் நின்று பெயரும்போ தறிய மாட்டேன் சேணுயர் மாட நீடு திருக்கொண்டீச் சரத்து ளானே. | 4.67.7 | 656 | பொய்மறித் தியற்றி வைத்துப் புலால்கமழ் பண்டம் பெய்து பைமறித் தியற்றி யன்ன பாங்கிலாக் குரம்பை நின்று கைமறித் தனைய வாவி கழியும்போ தறிய மாட்டேன் சென்னெறிச் செலவு காணேன் திருக்கொண்டீச் சரத்து ளானே. | 4.67.8 | 657 | பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம் மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து கோலனாய்க் கழிந்த நாளுங் குறிக்கோளி லாது கெட்டேன் சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே. | 4.67.9 | 658 | விரைதரு கருமென் கூந்தல் விளங்கிழை வேலொண் கண்ணாள் வெருவர இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்த ஞான்று பருவரை யனைய தோளும் முடிகளும் பாரி வீழத் திருவிர லூன்றி னானே திருக்கொண்டீச் சரத்து ளானே. | 4.67.10 |
659 | வெள்ளநீர்ச் சடையர் போலும் விரும்புவார்க் கெளியர் போலும் உள்ளுளே யுருகி நின்றங் குகப்பவர்க் கன்பர் போலுங் கள்ளமே வினைக ளெல்லாங் கரிசறுத் திடுவர் போலும் அள்ளலம் பழனை மேய ஆலங்காட் டடிக ளாரே. | 4.68.1 | ||||||||||||||||||||||||
660 | செந்தழ லுருவர் போலுஞ் சினவிடை யுடையர் போலும் வெந்தவெண் ணீறு கொண்டு மெய்க்கணிந் திடுவர் போலும் மந்தமாம் பொழிற் பழனை மல்கிய வள்ளல் போலும் அந்தமில் அடிகள் போலும் ஆலங்காட் டடிக ளாரே. | 4.68.2 | 661 | கண்ணினாற் காம வேளைக் கனலெழ விழிப்பர் போலும் எண்ணிலார் புரங்கள் மூன்று மெரியுணச் சிரிப்பர் போலும் பண்ணினார் முழவ மோவாப் பைம்பொழிற் பழனை மேய அண்ணலார் எம்மை யாளும் ஆலங்காட் டடிக ளாரே. | 4.68.3 | 662 | காறிடு விடத்தை யுண்ட கண்டரெண் தோளர் போலுந் தூறிடு சுடலை தன்னிற் சுண்ணவெண் ணீற்றர் போலுங் கூறிடு முருவர் போலுங் குளிர்பொழிற் பழனை மேய ஆறிடு சடையர் போலும் ஆலங்காட் டடிக ளாரே. | 4.68.4 | 663 | பார்த்தனோ டமர் பொருது பத்திமை காண்பர் போலுங் கூர்த்தவா யம்பு கோத்துக் குணங்களை அறிவர் போலும் பேர்த்துமோ ராவ நாழி அம்போடுங் கொடுப்பர் போலுந் தீர்த்தமாம் பழனை மேய திருவாலங் காட னாரே. | 4.68.5 | 664 | வீட்டினார் சுடுவெண் ணீறு மெய்க்கணிந் திடுவர் போலுங் காட்டில்நின் றாடல் பேணுங் கருத்தினை யுடையர் போலும் பாட்டினார் முழவ மோவாப் பைம்பொழிற் பழனை மேயார் ஆட்டினார் அரவந் தன்னை ஆலங்காட் டடிக ளாரே. | 4.68.6 | 665 | தாளுடைச் செங்க மலத் தடங்கொள்சே வடியர் போலும் நாளுடைக் காலன் வீழ உதைசெய்த நம்பர் போலுங் கோளுடைப் பிறவி தீர்ப்பார் குளிர்பொழிற் பழனை மேய ஆளுடை யண்ணல் போலும் ஆலங்காட் டடிக ளாரே. | 4.68.7 | 666 | கூடினார் உமைதன் னோடே குறிப்புடை வேடங் கொண்டு சூடினார் கங்கை யாளைச் சுவறிடு சடையர் போலும் பாடினார் சாம வேதம் பைம்பொழிற் பழனை மேயார் ஆடினார் காளி காண ஆலங்காட் டடிக ளாரே. | 4.68.8 | 667 | வெற்றரைச் சமண ரோடு விலையுடைக் கூறை போர்க்கும் ஒற்றரைச் சொற்கள் கொள்ளார் குணங்களை உகப்பர் போலும் பெற்றமே உகந்தங் கேறும் பெருமையை யுடையர் போலும் அற்றங்கள் அறிவர் போலும் ஆலங்காட் டடிக ளாரே. | 4.68.9 | 668 | மத்தனாய் மலையெ டுத்த அரக்கனைக் கரத்தோ டொல்க ஒத்தினார் திருவி ரலால் ஊன்றியிட் டருள்வர் போலும் பத்தர்தம் பாவந் தீர்க்கும் பைம்பொழிற் பழனை மேய அத்தனார் நம்மை யாள்வார் ஆலங்காட் டடிக ளாரே. | 4.68.10 |
669 | செத்தையேன் சிதம்ப நாயேன் செடியனேன் அழுக்குப் பாயும் பொத்தையே போற்றி நாளும் புகலிடம் அறிய மாட்டேன் எத்தைநான் பற்றி நிற்கேன் இருளற நோக்க மாட்டாக் கொத்தையேன் செய்வ தென்னே கோவல்வீ ரட்ட னீரே. | 4.69.1 | ||||||||||||||||||||||||
670 | தலைசுமந் திருகை நாற்றித் தரணிக்கே பொறைய தாகி நிலையிலா நெஞ்சந் தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும் விலைகொடுத் தறுக்க மாட்டேன் வேண்டிற்றே வேண்டி எய்த்தேன் குலைகொள்மாங் கனிகள் சிந்தும் கோவல்வீ ரட்ட னீரே. | 4.69.2 | 671 | வழித்தலைப் படவு மாட்டேன் வைகலுந் தூய்மை செய்து பழித்திலேன் பாச மற்றுப் பரமநான் பரவ மாட்டேன் இழித்திலேன் பிறவி தன்னை என்னினைந் திருக்க மாட்டேன் கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க் கோவல்வீ ரட்ட னீரே. | 4.69.3 | 672 | சாற்றுவர் ஐவர் வந்து சந்தித்த குடிமை வேண்டிக் காற்றுவர் கனலப் பேசிக் கண்செவி மூக்கு வாயுள் ஆற்றுவர் அலந்து போனேன் ஆதியை அறிவொன் றின்றிக் கூற்றுவர் வாயிற் பட்டேன் கோவல்வீ ரட்ட னீரே. | 4.69.4 | 673 | தடுத்திலேன் ஐவர் தம்மைத் தத்துவத் துயர்வு நீர்மைப் படுத்திலேன் பரப்பு நோக்கிப் பன்மலர்ப் பாத முற்ற அடுத்திலேன் சிந்தை யார ஆர்வலித் தன்பு திண்ணங் கொடுத்திலேன் கொடிய வாநான் கோவல்வீ ரட்ட னீரே. | 4.69.5 | 674 | மாச்செய்த குரம்பை தன்னை மண்ணிடை மயக்க மெய்து நாச்செய்து நாலு மைந்தும் நல்லன வாய்தல் வைத்துக் காச்செய்த காயந் தன்னுள் நித்தலும் ஐவர் வந்து கோச்செய்து குமைக்க வாற்றேன் கோவல்வீ ரட்ட னீரே. | 4.69.6 | 675 | படைகள்போல் வினைகள் வந்து பற்றியென் பக்கல் நின்றும் விடகிலா வாத லாலே விகிர்தனை விரும்பி யேத்தும் இடையிலேன் என்செய் கேன்நான் இரப்பவர் தங்கட் கென்றுங் கொடையிலேன் கொள்வ தேநான் கோவல்வீ ரட்ட னீரே. | 4.69.7 | 676 | பிச்சிலேன் பிறவி தன்னைப் பேதையேன் பிணக்க மென்னுந் துச்சுளே அழுந்தி வீழ்ந்து துயரமே இடும்பை தன்னுள் அச்சனாய் ஆதி மூர்த்திக் கன்பனாய் வாழ மாட்டாக் கொச்சையேன் செய்வ தென்னே கோவல்வீ ரட்ட னீரே. | 4.69.8 | 677 | நிணத்திடை யாக்கை பேணி நியமஞ்செய் திருக்க மாட்டேன் மணத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்ற மென்னுங் கணத்திடை ஆட்டப் பட்டுக் காதலால் உன்னைப் பேணுங் குணத்திடை வாழ மாட்டேன் கோவல்வீ ரட்ட னீரே. | 4.69.9 | 678 | விரிகடல் இலங்கைக் கோனை வியன்கயி லாயத் தின்கீழ் இருபது தோளும் பத்துச் சிரங்களும் நெறிய வூன்றிப் பரவிய பாடல் கேட்டுப் படைகொடுத் தருளிச் செய்தார் குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல்வீ ரட்ட னாரே. | 4.69.10 |
679 | முற்றுணை யாயி னானை மூவர்க்கு முதல்வன் றன்னைச் சொற்றுணை ஆயி னானைச் சோதியை ஆத ரித்து உற்றுணர்ந் துருகி யூறி உள்கசி வுடைய வர்க்கு நற்றுணை யாவர் போலும் நனிபள்ளி அடிக ளாரே. | 4.70.1 | |||||||||||||||||||||
680 | புலர்ந்தகால் பூவும் நீருங் கொண்டடி போற்ற மாட்டா வலஞ்செய்து வாயின் நூலால் வட்டணைப் பந்தர் செய்த சிலந்தியை அரைய னாக்கிச் சீர்மைகள் அருள வல்லார் நலந்திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிக ளாரே. | 4.70.2 | 681 | எண்பதும் பத்தும் ஆறு மென்னுளே இருந்து மன்னிக் கண்பழக் கொன்று மின்றிக் கலக்கநான் அலக்க ழிந்தேன் செண்பகந் திகழும் புன்னை செழுந்திரட் குரவம் வேங்கை நண்புசெய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிக ளாரே. | 4.70.3 | 682 | பண்ணினார் பாட லாகிப் பழத்தினில் இரத மாகிக் கண்ணினார் பார்வை யாகிக் கருத்தொடு கற்ப மாகி எண்ணினார் எண்ண மாகி ஏழுல கனைத்து மாகி நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிக ளாரே. | 4.70.4 | 683 | துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந் திராதே அஞ்செழுத் தோதின் நாளும் அரனடிக் கன்ப தாகும் வஞ்சனைப் பால்சோ றாக்கி வழக்கிலா அமணர் தந்த நஞ்சமு தாக்கு வித்தார் நனிபள்ளி அடிக ளாரே. | 4.70.5 | 684 | செம்மலர்க் கமலத் தோனுந் திருமுடி காண மாட்டான் அம்மலர்ப் பாதங் காண்பான் ஆழியான் அகழ்ந்துங் காணான் நின்மலன் என்றங் கேத்தும் நினைப்பினை அருளி நாளும் நம்மலம் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிக ளாரே. | 4.70.6 | 685 | அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோ டசுரர் கூடி அரவித்துக் கடையத் தோன்றும் ஆலநஞ் சமுதா வுண்டார் விரவித்தம் அடிய ராகி வீடிலாத் தொண்டர் தம்மை நரகத்தில் வீழ வொட்டார் நனிபள்ளி அடிக ளாரே. | 4.70.7 | 686 | மண்ணுளே திரியும் போது வருவன பலவுங் குற்றம் புண்ணுளே புரைபு ரையன் புழுப்பொதி பொள்ள லாக்கை ----- ----- ----- ----- இப்பதிகத்தில் 8-ம் செய்யுளின் பின்னிரண்டடிகளும் 9-ம்செய்யுளும் மறைந்து போயின. | 4.70.8-9 | 687 | பத்துமோர் இரட்டி தோளான் பாரித்து மலையெ டுக்கப் பத்துமோர் இரட்டி தோள்கள் படருடம் படர வூன்றிப் பத்துவாய் கீதம் பாடப் பரிந்தவற் கருள்கொ டுத்தார் பத்தர்தாம் பரவி யேத்தும் நனிபள்ளிப் பரம னாரே. | 4.70.10 |
688 | மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும் வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமா காதே கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானை நினையுமா வல்லீ ராகில் உய்யலாம் நெஞ்சி னீரே. | 4.71..1 | ||||||||||||||||||||||||
689 | வையனை வைய முண்ட மாலங்கந் தோண்மேற் கொண்ட செய்யனைச் செய்ய போதிற் திசைமுகன் சிரமொன் றேந்துங் கையனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட ஐயனை நினைந்த நெஞ்சே அம்மநாம் உய்ந்த வாறே. | 4.71..2 | 690 | நிருத்தனை நிமலன் றன்னை நீணிலம் விண்ணின் மிக்க விருத்தனை வேத வித்தை விளைபொருள் மூல மான கருத்தனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட ஒருத்தனை உணர்த லால்நாம் உய்ந்தவா நெஞ்சி னீரே. | 4.71.3 | 691 | மண்டனை இரந்து கொண்ட மாயனோ டசுரர் வானோர் தெண்டிரை கடைய வந்த தீவிடந் தன்னை யுண்ட கண்டனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட அண்டனை நினைந்த நெஞ்சே அம்மநாம் உய்ந்த வாறே. | 4.71.4 | 692 | நிறைபுனல் அணிந்த சென்னி நீணிலா அரவஞ் சூடி மறையொலி பாடி யாடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன் கறைமலி கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட இறைவனை நாளு மேத்த இடும்பைபோய் இன்ப மாமே. | 4.71.5 | 693 | வெம்பனைக் கருங்கை யானை வெருவவன் றுரிவை போர்த்த கம்பனைக் காலற் காய்ந்த காலனை ஞால மேத்தும் உம்பனை உம்பர் கோனை நாகைக்கா ரோண மேய செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணம்நாம் உய்ந்த வாறே. | 4.71.6 | 694 | வெங்கடுங் கானத் தேழை தன்னொடும் வேட னாய்ச்சென் றங்கமர் மலைந்து பார்த்தற் கடுசரம் அருளி னானை மங்கைமார் ஆட லோவா மன்னுகா ரோணத் தானைக் கங்குலும் பகலுங் காணப் பெற்றுநாங் களித்த வாறே. | 4.71.7 | 695 | தெற்றினர் புரங்கள் மூன்றுந் தீயினில் விழவோ ரம்பால் செற்றவெஞ் சிலையர் வஞ்சர் சிந்தையுட் சேர்வி லாதார் கற்றவர் பயிலும் நாகைக் காரோணங் கருதி யேத்தப் பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்தி லாரே. | 4.71.8 | இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 4.71.9 | 696 | கருமலி கடல்சூழ் நாகைக் காரோணர் கமல பாதத் தொருவிரல் நுதிக்கு நில்லா தொண்டிறல் அரக்க னுக்கான் இருதிற மங்கை மாரோ டெம்பிரான் செம்பொ னாகந் திருவடி தரித்து நிற்கத் திண்ணம்நாம் உய்ந்த வாறே. | 4.71.10 |
697 | விண்ணவர் மகுட கோடி மிடைந்தசே வடியர் போலும் பெண்ணொரு பாகர் போலும் பேடலி யாணர் போலும் வண்ணமால் அயனுங் காணா மால்வரை எரியர் போலும் எண்ணுரு வநேகர் போலும் இன்னம்பர் ஈச னாரே. | 4.72.1 | ||||||||||||||||||||||||
698 | பன்னிய மறையர் போலும் பாம்பரை யுடையர் போலுந் துன்னிய சடையர் போலுந் தூமதி மத்தர் போலும் மன்னிய மழுவர் போலும் மாதிடம் மகிழ்வர் போலும் என்னையும் உடையர் போலும் இன்னம்பர் ஈச னாரே. | 4.72.2 | 699 | மறியொரு கையர் போலும் மாதுமை யுடையர் போலும் பறிதலைப் பிறவி நீக்கிப் பணிகொள வல்லர் போலுஞ் செறிவுடை அங்க மாலை சேர்திரு வுருவர் போலும் எறிபுனற் சடையர் போலும் இன்னம்பர் ஈச னாரே. | 4.72.3 | 700 | விடமலி கண்டர் போலும் வேள்வியை அழிப்பர் போலுங் கடவுநல் விடையர் போலுங் காலனைக் காய்வர் போலும் படமலி அரவர் போலும் பாய்புலித் தோலர் போலும் இடர்களைந் தருள்வர் போலும் இன்னம்பர் ஈச னாரே. | 4.72.4 | 701 | அளிமலர்க் கொன்றை துன்றும் அவிர்சடை யுடையர் போலுங் களிமயிற் சாய லோடுங் காமனை விழிப்பர் போலும் வெளிவளர் உருவர் போலும் வெண்பொடி யணிவர் போலும் எளியவர் அடியர்க் கென்றும் இன்னம்பர் ஈச னாரே. | 4.72.5 | 702 | கணையமர் சிலையர் போலுங் கரியுரி உடையர் போலுந் துணையமர் பெண்ணர் போலுந் தூமணிக் குன்றர் போலும் அணையுடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும் இணையடி உடையர் போலும் இன்னம்பர் ஈச னாரே. | 4.72.6 | 703 | பொருப்பமர் புயத்தர் போலும் புனலணி சடையர் போலும் மருப்பிள வாமை தாங்கு மார்பில்வெண் ணூலர் போலும் உருத்திர மூர்த்தி போலும் உணர்விலார் புரங்கள் மூன்றும் எரித்திடு சிலையர் போலும் இன்னம்பர் ஈச னாரே. | 4.72.7 | 704 | காடிடம் உடையர் போலுங் கடிகுரல் விளியர் போலும் வேடுரு வுடையர் போலும் வெண்மதிக் கொழுந்தர் போலுங் கோடலர் வன்னி தும்பை கொக்கிற கலர்ந்த கொன்றை ஏடமர் சடையர் போலும் இன்னம்பர் ஈச னாரே. | 4.72.8 | 705 | காறிடு விடத்தை யுண்ட கண்டரெண் டோ ளர் போலும் நீறுடை யுருவர் போலும் நினைப்பினை அரியர் போலும் பாறுடைத் தலைகை ஏந்திப் பலிதிரிந் துண்பர் போலும் ஏறுடைக் கொடியர் போலும் இன்னம்பர் ஈச னாரே. | 4.72.9 | 706 | ஆர்த்தெழு மிலங்கைக் கோனை அருவரை அடர்ப்பர் போலும் பார்த்தனோ டமர் பொருது படைகொடுத் தருள்வர் போலுந் தீர்த்தமாங் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும் ஏத்தஏ ழுலகும் வைத்தார் இன்னம்பர் ஈச னாரே. | 4.72.10 |
707 | பெருந்திரு இமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னை வருந்துவான் தவங்கள் செய்ய மாமணம் புணர்ந்து மன்னும் அருந்திரு மேனி தன்பால் அங்கொரு பாக மாகத் திருந்திட வைத்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே. | 4.73.1 | ||||||||||||||||||||||||
708 | ஓர்த்துள வாறு நோக்கி உண்மையை உணராக் குண்டர் வார்த்தையை மெய்யென் றெண்ணி மயக்கில்வீழ்ந் தழுந்து வேனைப் பேர்த்தெனை ஆளாக் கொண்டு பிறவிவான் பிணிக ளெல்லாந் தீர்த்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே. | 4.73.2 | 709 | ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பில் காலம் நின்றுதங் கழல்க ளேத்தும் நீள்சிலை விசய னுக்கு வென்றிகொள் வேட னாகி விரும்பிவெங் கான கத்துச் சென்றருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே. | 4.73.3 | 710 | அஞ்சையும் அடக்கி ஆற்ற லுடையனாய் அநேக காலம் வஞ்சமில் தவத்துள் நின்று மன்னிய பகீர தற்கு வெஞ்சின முகங்க ளாகி விசையொடு பாயுங் கங்கைச் செஞ்சடை யேற்றார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே. | 4.73.4 | 711 | நிறைந்தமா மணலைக் கூப்பி நேசமோ டாவின் பாலைக் கறந்துகொண் டாட்டக் கண்டு கறுத்ததன் தாதை தாளை எறிந்தமா ணிக்கப் போதே எழில்கொள்சண் டீசன் என்னச் சிறந்தபே றளித்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே. | 4.73.5 | 712 | விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை தரித்ததோர் கோல காலப் பயிரவ னாகி வேழம் உரித்துமை யஞ்சக் கண்டு ஒண்டிரு மணிவாய் விள்ளச் சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே. | 4.73.6 | 713 | சுற்றுமுன் இமையோர் நின்று தொழுதுதூ மலர்கள் தூவி மற்றெமை உயக்கொள் என்ன மன்னுவான் புரங்கள் மூன்றும் உற்றொரு நொடியின் முன்னம் ஒள்ளழல் வாயின் வீழச் செற்றருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே. | 4.73.7 | 714 | முந்தியிவ் வுலக மெல்லாம் படைத்தவன் மாலி னோடும் எந்தனி நாத னேயென் றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய அந்தமில் சோதி தன்னை அடிமுடி யறியா வண்ணஞ் செந்தழ லானார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே. | 4.73.8 | இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 4.73.9 | 715 | ஒருவரும் நிக ரிலாத ஒண்டிறல் அரக்கன் ஓடிப் பெருவரை யெடுத்த திண்டோ ள் பிறங்கிய முடிகள் இற்று மருவியெம் பெருமா னென்ன மலரடி மெள்ள வாங்கித் திருவருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே. | 4.73.10 |
716 | முத்தினை மணியைப் பொன்னை முழுமுதற் பவள மேய்க்குங் கொத்தினை வயிர மாலைக் கொழுந்தினை அமரர் சூடும் வித்தினை வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற அத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே. | 4.74.1 | ||||||||||||||||||||||||
717 | முன்பனை யுலகுக் கெல்லாம் மூர்த்தியை முனிக ளேத்தும் இன்பனை இலங்கு சோதி இறைவனை அரிவை யஞ்ச வன்பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை யுரித்த எங்கள் அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே. | 4.74.2 | 718 | கரும்பினு மினியான் றன்னைக் காய்கதிர்ச் சோதி யானை இருங்கட லமுதந் தன்னை இறப்பொடு பிறப் பிலானைப் பெரும்பொருட் கிளவி யானைப் பெருந்தவ முனிவ ரேத்தும் அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே. | 4.74.3 | 719 | செருத்தனை யருத்தி செய்து செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல் கருத்தனைக் கனக மேனிக் கடவுளைக் கருதும் வானோர்க் கொருத்தனை யொருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீரா நிருத்தனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த வாறே. | 4.74.4 | 720 | கூற்றினை யுதைத்த பாதக் குழகனை மழலை வெள்ளே றேற்றனை இமையோ ரேத்த இருஞ்சடைக் கற்றை தன்மேல் ஆற்றனை அடிய ரேத்தும் அமுதனை அமுத யோக நீற்றனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த வாறே. | 4.74.5 | 721 | கருப்பனைத் தடக்கை வேழக் களிற்றினை யுரித்த கண்டன் விருப்பனை விளங்கு சோதி வியன்கயி லாய மென்னும் பொருப்பனைப் பொருப்பன் மங்கை பங்கனை அங்கை யேற்ற நெருப்பனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த வாறே. | 4.74.6 | 722 | நீதியால் நினைப்பு ளானை நினைப்பவர் மனத்து ளானைச் சாதியைச் சங்க வெண்ணீற் றண்ணலை விண்ணில் வானோர் சோதியைத் துளக்க மில்லா விளக்கினை அளக்க லாகா ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே. | 4.74.7 | 723 | பழகனை யுலகுக் கெல்லாம் பருப்பனைப் பொருப்போ டொக்கும் மழகளி யானை யின்றோல் மலைமகள் நடுங்கப் போர்த்த குழகனைக் குழவித் திங்கள் குளிர்சடை மருவ வைத்த அழகனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே. | 4.74.8 | 724 | விண்ணிடை மின்னொப் பானை மெய்ப்பெரும் பொருளொப் பானைக் கண்ணிடை மணியொப் பானைக் கடுவிருட் சுடரொப் பானை எண்ணிடை யெண்ண லாகா இருவரை வெருவ நீண்ட அண்ணலை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே. | 4.74.9 | 725 | உரவனைத் திரண்ட திண்டோ ள் அரக்கனை யூன்றி மூன்றூர் நிரவனை நிமிர்ந்த சோதி நீண்முடி யமரர் தங்கள் குரவனைக் குளிர்வெண் டிங்கள் சடையிடைப் பொதியும் ஐவாய் அரவனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த வாறே. | 4.74.10 |
726 | தொண்டனேன் பட்ட தென்னே தூயகா விரியின் நன்னீர் கொண்டிருக் கோதி யாட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி இண்டைகொண் டேற நோக்கி ஈசனை எம்பி ரானைக் கண்டனைக் கண்டி ராதே காலத்தைக் கழித்த வாறே. | 4.75.1 | ||||||||||||||||||||||||
727 | பின்னிலேன் முன்னி லேன்நான் பிறப்பறுத் தருள்செய் வானே என்னிலேன் நாயி னேன்நான் இளங்கதிர்ப் பயலைத் திங்கட் சின்னிலா எறிக்குஞ் சென்னிச் சிவபுரத் தமர ரேறே நின்னலால் களைகண் ஆரே நீறுசே ரகலத் தானே. | 4.75.2 | 728 | கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித் தெள்ளியே னாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன் உள்குவார் உள்கிற் றெல்லாம் உடனிருந் தறிதி யென்று வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட் டேனே. | 4.75.3 | 729 | உடம்பெனு மனைய கத்துள் உள்ளமே தகளி யாக மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரிம யக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே. | 4.75.4 | 730 | வஞ்சப்பெண் ணரங்கு கோயில் வாளெயிற் றரவந் துஞ்சா வஞ்சப்பெண் இருந்த சூழல் வான்றவழ் மதியந் தோயும் வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன் வாழ்வினை வாழ லுற்று வஞ்சப்பெண் ணுறக்க மானேன் வஞ்சனேன் என்செய் கேனே. | 4.75.5 | 731 | உள்குவார் உள்ளத் தானை உணர்வெனும் பெருமை யானை உள்கினேன் நானுங் காண்பான் உருகினேன் ஊறி யூறி எள்கினேன் எந்தை பெம்மான் இருதலை மின்னு கின்ற கொள்ளிமேல் எறும்பென் னுள்ளம் எங்ஙனங் கூடு மாறே. | 4.75.6 | 732 | மோத்தையைக் கண்ட காக்கை போலவல் வினைகள் மொய்த்துன் வார்த்தையைப் பேச வொட்டா மயக்கநான் மயங்கு கின்றேன் சீத்தையைச் சிதம்பு தன்னைச் செடிகொள்நோய் வடிவொன் றில்லா ஊத்தையைக் கழிக்கும் வண்ணம் உணர்வுதா உலக மூர்த்தீ. | 4.75.7 | 733 | அங்கத்தை மண்ணுக் காக்கி ஆர்வத்தை உனக்கே தந்து பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைs சங்கொத்த மேனிச் செல்வா சாதல்நாள் நாயேன் உன்னை எங்குற்றாய் என்ற போதா இங்குற்றேன் என்கண் டாயே. | 4.75.8 | 734 | வெள்ளநீர்ச் சடைய னார்தாம் வினவுவார் போல வந்தென் உள்ளமே புகுந்து நின்றார்க் குறங்குநான் புடைகள் போந்து கள்ளரோ புகுந்தீ ரென்னக் கலந்துதான் நோக்கி நக்கு வெள்ளரோ மென்று நின்றார் விளங்கிளம் பிறைய னாரே. | 4.75.9 | 735 | பெருவிரல் இறைதா னூன்ற பிறையெயி றிலங்க அங்காந் தருவரை அனைய தோளான் அரக்கனன் றலறி வீழ்ந்தான் இருவரும் ஒருவ னாய உருவமங் குடைய வள்ளல் திருவடி சுமந்து கொண்டு காண்கநான் திரியு மாறே. | 4.75.10 |
736 | மருளவா மனத்த னாகி மயங்கினேன் மதியி லாதேன் இருளவா அறுக்கும் எந்தை இணையடி நீழ லென்னும் அருளவாப் பெறுத லின்றி அஞ்சிநான் அலமந் தேற்குப் பொருளவாத் தந்த வாறே போதுபோய்ப் புலர்ந்த தன்றே. | 4.76.1 | ||||||||||||||||||||||||
737 | மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப் பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப் பாய்ச்சித் தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச் செம்மையுள் நிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே. | 4.76.2 | 738 | எம்பிரான் என்ற தேகொண் டென்னுளே புகுந்து நின்றிங் கெம்பிரான் ஆட்ட ஆடி என்னுளே உழிதர் வேனை எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு மென்றால் எம்பிரான் என்னி னல்லால் என்செய்கேன் ஏழை யேனே. | 4.76.3 | 739 | காயமே கோயி லாகக் கடிமனம் அடிமை யாக வாய்மையே தூய்மை யாக மனமணி இலிங்க மாக நேயமே நெய்யும் பாலா நிறையநீர் அமைய வாட்டிப் பூசனை ஈச னார்க்குப் போற்றவிக் காட்டி னோமே. | 4.76.4 | 740 | வஞ்சகப் புலைய னேனை வழியறத் தொண்டிற் பூட்டி அஞ்சலென் றாண்டு கொண்டாய் அதுவுநின் பெருமை யன்றே நெஞ்சகங் கனிய மாட்டேன் நின்னையுள் வைக்க மாட்டேன் நஞ்சிடங் கொண்ட கண்டா என்னென நன்மை தானே. | 4.76.5 | 741 | நாயினுங் கடைப்பட் டேனை நன்னெறி காட்டி ஆண்டாய் ஆயிரம் அரவ மார்த்த அமுதனே அமுத மொத்து நீயுமென் னெஞ்சி னுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க நோயவை சாரு மாகில் நோக்கிநீ அருள்செய் வாயே. | 4.76.6 | 742 | விள்ளத்தா னொன்று மாட்டேன் விருப்பெனும் வேட்கை யாலே வள்ளத்தேன் போல நுன்னை வாய்மடுத் துண்டி டாமே உள்ளத்தே நிற்றி யேனும் உயிர்ப்புளே வருதி யேனுங் கள்ளத்தே நிற்றி அம்மா எங்ஙனங் காணு மாறே. | 4.76.7 | 743 | ஆசைவன் பாச மெய்தி அங்குற்றே னிங்குற் றேனாய் ஊசலாட் டுண்டு வாளா உழந்துநான் உழித ராமே தேசனே தேச மூர்த்தி திருமறைக் காடு மேய ஈசனே உன்றன் பாதம் ஏத்துமா றருளெம் மானே. | 4.76.8 | 744 | நிறைவிலேன் நேச மில்லேன் நினைவிலேன் வினையின் பாச மறைவிலே புறப்பட் டேறும் வகையெனக் கருளெ னெம்மான் சிறையிலேன் செய்வ தென்னே திருவடி பரவி யேத்தக் குறைவிலேன் குற்றந் தீராய் கொன்றைசேர் சடையி னானே. | 4.76.9 | 745 | நடுவிலாக் காலன் வந்து நணுகும்போ தறிய வொண்ணா அடுவன அஞ்சு பூதம் அவைதமக் காற்ற லாகேன் படுவன பலவுங் குற்றம் பாங்கிலா மனிதர் வாழ்க்கை கெடுவதிப் பிறவி சீசீ கிளரொளிச் சடையி னீரே. | 4.76.10 |
746 | கடும்பகல் நட்ட மாடிக் கையிலோர் கபால மேந்தி இடும்பலிக் கில்லந் தோறு முழிதரும் இறைவ னீரே நெடும்பொறை மலையர் பாவை நேரிழை நெறிமென் கூந்தற் கொடுங்குழை புகுந்த வன்றுங் கோவண மரைய தேயோ. | 4.77.1 | |||||||||||||||||||||
747 | கோவண முடுத்த வாறுங் கோளர வசைத்த வாறுந் தீவணச் சாம்பர் பூசித் திருவுரு இருந்த வாறும் பூவணக் கிழவ னாரைப் புலியுரி அரைய னாரை ஏவணச் சிலையி னாரை யாவரே எழுது வாரே. | 4.77.2 | 748 | விளக்கினாற் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றி யாகுந் துளக்கில்நன் மலர்தொ டுத்தால் தூயவிண் ணேற லாகும் விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞான மாகும் அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகள்தாம் அருளு மாறே. | 4.77.3 | 749 | சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாம வேதி அந்தரத் தமரர் பெம்மான் ஆன்நல்வெள் ளூர்தி யான்றன் மந்திரம் நமச்சி வாய ஆகநீ றணியப் பெற்றால் வெந்தறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகிட் டன்றே. | 4.77.4 | 750 | புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்திடைப் புகுந்து நின்று துள்ளுவர் சூறை கொள்வர் தூநெறி விளைய வொட்டார் முள்ளுடை யவர்கள் தம்மை முக்கணான் பாத நீழல் உள்ளிடை மறைந்து நின்றங் குணர்வினா லெய்ய லாமே. | 4.77.5 | 751 | தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து பிண்டமே சுமந்து நாளும் பெரியதோர் அவாவிற் பட்டேன் அண்டனே அமரர் கோவே அறிவனே அஞ்ச லென்னாய் தெண்டிரைக் கங்கை சூடுந் திகழ்தரு சடையி னானே. | 4.77.6 | 752 | பாறினாய் பாவி நெஞ்சே பன்றிபோல் அளற்றிற் பட்டுத் தேறிநீ நினைதி யாயின் சிவகதி திண்ண மாகும் ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே யொழுகும் வாசல் கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதி னாயே. | 4.77.7 | இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. | 4.77.8-9 | 753 | உய்த்தகால் உதயத் தும்பர் உமையவள் நடுக்கந் தீர வைத்தகா லரக்க னோதன் வான்முடி தனக்கு நேர்ந்தான் மொய்த்தகான் முகிழ்வெண் டிங்கள் மூர்த்தியெ னுச்சி தன்மேல் வைத்தகால் வருந்து மென்று வாடிநான் ஒடுங்கி னேனே. | 4.77.10 |
754 | வென்றிலேன் புலன்க ளைந்தும் வென்றவர் வளாகந் தன்னுள் சென்றிலே னாத லாலே செந்நெறி யதற்குஞ் சேயேன் நின்றுளே துளும்பு கின்றேன் நீசனேன் ஈச னேயோ இன்றுளேன் நாளை யில்லேன் என்செய்வான் தோன்றி னேனே. | 4.78.1 | ||||||||||||||||||||||||
755 | கற்றிலேன் கலைகள் ஞானங் கற்றவர் தங்க ளோடும் உற்றிலே னாத லாலே உணர்வுக்குஞ் சேய னானேன் பெற்றிலேன் பெருந்த டங்கண் பேதைமார் தமக்கும் பொல்லேன் எற்றுளேன் இறைவ னேநான் என்செய்வான் தோன்றி னேனே. | 4.78.2 | 756 | மாட்டினேன் மனத்தை முன்னே மறுமையை உணர மாட்டேன் மூட்டிநான் முன்னை நாளே முதல்வனை வணங்க மாட்டேன் பாட்டினாய் போல நின்று பற்றதாம் பாவந் தன்னை ஈட்டினேன் களைய மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே. | 4.78.3 | 757 | கரைக்கடந் தோத மேறுங் கடல்விட முண்ட கண்டன் உரைக்கடந் தோது நீர்மை யுணர்ந்திலே னாத லாலே அரைக்கிடந் தசையு நாகம் அசைப்பனே இன்ப வாழ்க்கைக் கிரைக்கிடைந் துருகு கின்றேன் என்செய்வான் தோன்றி னேனே. | 4.78.4 | 758 | செம்மைவெண் ணீறு பூசுஞ் ச்வனவன் தேவ தேவன் வெம்மைநோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக் கார்வ மெய்தி அம்மைநின் றடிமை செய்யா வடிவிலா முடிவில் வாழ்க்கைக் கிம்மைநின் றுருகு கின்றேன் என்செய்வான் தோன்றி னேனே. | 4.78.5 | 759 | பேச்சொடு பேச்சுக் கெல்லாம் பிறர்தமைப் புறமே பேசக் கூச்சிலே னாத லாலே கொடுமையை விடுமா றோரேன் நாச்சொலி நாளும் மூர்த்தி நன்மையை யுணர மாட்டேன் ஏச்சுளே நின்று மெய்யே என்செய்வான் தோன்றி னேனே. | 4.78.6 | 760 | தேசனைத் தேச மாகுந் திருமாலோர் பங்கன் றன்னைப் பூசனைப் புனிதன் றன்னைப் புணரும்புண் டரிகத் தானை நேசனை நெருப்பன் றன்னை நிவஞ்சகத் தகன்ற செம்மை ஈசனை அறிய மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே. | 4.78.7 | 761 | விளைக்கின்ற வினையை நோக்கி வெண்மயிர் விரவி மேலும் முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலேன் இயல வெள்ளந் திளைக்கின்ற முடியி னான்றன் திருவடி பரவ மாட்டா திளைக்கின்றே னிருமி யூன்றி என்செய்வான் தோன்றி னேனே. | 4.78.8 | 762 | விளைவறி விலாமை யாலே வேதனைக் குழியி லாழ்ந்து களைகணு மில்லேன் எந்தாய் காமரங் கற்று மில்லேன் தளையவிழ் கோதை நல்லார் தங்களோ டின்ப மெய்த இளையனு மல்லேன் எந்தாய் என்செய்வான் தோன்றி னேனே. | 4.78.9 | 763 | வெட்டன வுடைய னாகி வீரத்தால் மலை யெடுத்த துட்டனைத் துட்டுத் தீர்த்துச் சுவைப்படக் கீதங் கேட்ட அட்டமா மூர்த்தி யாய ஆதியை ஓதி நாளும் எட்டனை எட்ட மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே. | 4.78.10 |
764 | தம்மானங் காப்ப தாகித் தையலார் வலையு ளாழ்ந்து அம்மானை அமுதன் றன்னை ஆதியை அந்த மாய செம்மான ஒளிகொள் மேனிச் சிந்தையு ளொன்றி நின்ற எம்மானை நினைய மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே. | 4.79.1 | |||||||||||||||
765 | மக்களே மணந்த தார மவ்வயிற் றவரை யோம்புஞ் சிக்குளே யழுந்தி ஈசன் திறம்படேன் றவம தோரேன் கொப்புளே போலத் தோன்றி யதனுளே மறையக் கண்டும் இக்களே பரத்தை யோம்ப என்செய்வான் தோன்றி னேனே. | 4.79.2 | 766 | கூழையே னாக மாட்டேன் கொடுவினைக் குழியில் வீழ்ந்து ஏழினின் னிசையி னாலும் இறைவனை யேத்த மாட்டேன் மாழையொண் கண்ணின் நல்ல மடந்தைமார் தமக்கும் பொல்லேன் ஏழையே னாகி நாளு மென்செய்வான் தோன்றி னேனே. | 4.79.3 | 767 | முன்னையென் வினையி னாலே மூர்த்தியை நினைய மாட்டேன் பின்னைநான் பித்த னாகிப் பிதற்றுவன் பேதை யேன்நான் என்னுளே மன்னி நின்ற சீர்மைய தாயி னானை என்னுளே நினைய மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே. | 4.79.4 | 768 | கறையணி கண்டன் றன்னைக் காமரங் கற்று மில்லேன் பிறைநுதற் பேதை மாதர் பெய்வளை யார்க்கு மல்லேன் மறைநவில் நாவி னானை மன்னிநின் றிறைஞ்சி நாளும் இறையேயு மேத்த மாட்டேன் என்செய்வான் தோன்றி னேனே. | 4.79.5 | இப்பதிகத்தில் 6,7,8,9-ம்செய்யுட்கள் மறைந்து போயின. | 4.79.6-91 | 769 | வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத் தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில் திளைத்துநின் றாடு கின்ற ஆமைபோல் தெளிவி லாதேன் இளைத்துநின் றாடு கின்றேன் என்செய்வான் தோன்றி னேனே. | 4.79.10 |
770 | பாளையு டைக்கமு கோங்கிப்பன் மாடம்நெ ருங்கியெங்கும் வாளையு டைப்புனல் வந்தெறி வாழ்வயல் தில்லைதன்னுள் ஆளவு டைக்கழற் சிற்றம்ப லத்தரன் ஆடல்கண்டாற் பீளையு டைக்கண்க ளாற்பின்னைப் பேய்த்தொண்டர் காண்பதென்னே. | 4.80.1 | ||||||||||||||||||||||||
771 | பொருவிடை யொன்றுடைப் புண்ணிய மூர்த்தி புலியதளன் உருவுடை யம்மலை மங்கைம ணாளன் உலகுக்கெல்லாந் திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன் திருவடி யைக்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே. | 4.80.2 | 772 | தொடுத்த மலரொடு தூபமுஞ் சாந்துங்கொண் டெப்பொழுதும் அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்குங் காண்பரியான் பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய தில்லைச்சிற் றம்பலவன் உடுத்த துகில்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே. | 4.80.3 | 773 | வைச்ச பொருள்நமக் காகுமென் றெண்ணி நமச்சிவாய அச்ச மொழிந்தேன் அணிதில்லை யம்பலத் தாடுகின்ற பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி உந்தியின் மேலசைத்த கச்சின் அழகுகண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே. | 4.80.4 | 774 | செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற் றம்பலவன் மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்துநிற்க நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான் கைஞ்ஞின்ற ஆடல்கண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே. | 4.80.5 | 775 | ஊனத்தை நீக்கி உலகறிய என்னை யாட்கொண்டவன் தேனொத் தெனக்கினி யான்தில்லைச் சிற்றம் பலவனெங்கோன் வானத் தவருய்ய வன்னஞ்சை யுண்டகண் டத்திலங்கும் ஏனத் தெயிறு கண்டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே. | 4.80.6 | 776 | தெரித்த கணையாற் திரிபுர மூன்றுஞ்செந் தீயின்மூழ்க எரித்த இறைவன் இமையவர் கோமான் இணையடிகள் தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன் சிரித்த முகங்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே. | 4.80.7 | 777 | சுற்று மமரர் சுரபதி நின்திருப் பாதமல்லால் பற்றொன் றிலோமென் றழைப்பப் பரவையுள் நஞ்சையுண்டான் செற்றங் கனங்கனைத் தீவிழித் தான்றில்லை யம்பலவன் நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே. | 4.80.8 | 778 | சித்தத் தெழுந்த செழுங்கம லத்தன்ன சேவடிகள் வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன் முத்தும் வயிரமும் மாணிக்கந் தன்னுள் விளங்கியதூ மத்த மலர்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே. | 4.80.9 | 779 | தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி யுன்னித் தடவரையை வரைக்கை களாலெடுத் தார்ப்ப மலைமகள் கோன்சிரித்து அரக்கன் மணிமுடி பத்தும் அணிதில்லை யம்பலவன் நெருக்கி மிதித்த விரல்கண்ட கண்கொண்டு காண்பதென்னே. | 4.80.10 |
780 | கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச் செருநட்ட மும்மதி லெய்யவல் லானைச்செந் தீமுழங்கத் திருநட்ட மாடியைத் தில்லைக் கிறையைச்சிற் றம்பலத்துப் பெருநட்ட மாடியை வானவர் கோனென்று வாழ்த்துவனே. | 4.81.1 | ||||||||||||||||||||||||
781 | ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லை கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவற்காச் சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம் என்றுவந் தாயெனும் எம்பெரு மான்றன் திருக்குறிப்பே. | 4.81.2 | 782 | கன்மன வீர்கழி யுங்கருத் தேசொல்லிக் காண்பதென்னே நன்மன வர்நவில் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம் பொன்மலை யில்வெள்ளிக் குன்றது போலப் பொலிந்திலங்கி என்மன மேயொன்றிப் புக்கனன் போந்த சுவடில்லையே. | 4.81.3 | 783 | குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே. | 4.81.4 | 784 | வாய்த்தது நந்தமக் கீதோர் பிறவி மதித்திடுமின் பார்த்தற்குப் பாசு பதமருள் செய்தவன் பத்தருள்ளீர் கோத்தன்று முப்புரந் தீவளைத் தான்றில்லை யம்பலத்துக் கூத்தனுக் காட்பட் டிருப்பதன் றோநந்தங் கூழைமையே. | 4.81.5 | 785 | பூத்தன பொற்சடை பொன்போல் மிளிரப் புரிகணங்கள் ஆர்த்தன கொட்டி யரித்தன பல்குறட் பூதகணந் தேத்தென வென்றிசை வண்டுகள் பாடுசிற் றம்பலத்துக் கூத்தனிற் கூத்துவல் லாருள ரோவென்றன் கோல்வளைக்கே. | 4.81.6 | 786 | முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்புந் துடிகொண்ட கையுந் துதைந்தவெண் ணீறுஞ் சுரிகுழலாள் படிகொண்ட பாகமும் பாய்புலித் தோலுமென் பாவிநெஞ்சிற் குடிகொண்ட வாதில்லை யம்பலக் கூத்தன் குரைகழலே. | 4.81.7 | 787 | படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன் இடைக்கல மல்லேன் எழுபிறப் பும்முனக் காட்செய்கின்றேன் துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித்தூ நீறணிந்துன் அடைக்கலங் கண்டாய் அணிதில்லைச் சிற்றம் பலத்தரனே. | 4.81.8 | 788 | பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ றணிந்து புரிசடைகள் மின்னொத் திலங்கப் பலிதேர்ந் துழலும் விடங்கவேடச் சின்னத்தி னான்மலி தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம் என்னத்தன் ஆடல்கண் டின்புற்ற தாலிவ் விருநிலமே. | 4.81.9 | 789 | சாட எடுத்தது தக்கன்றன் வேள்வியிற் சந்திரனை வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனுந் தேட எடுத்தது தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம் ஆட எடுத்திட்ட பாதமன் றோநம்மை யாட்கொண்டதே. | 4.81.10 |
790 | பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின் பாதமெல்லாம் நாலஞ்சு புள்ளினம் ஏந்தின என்பர் நளிர்மதியங் கால்கொண்ட வண்கைச் சடைவிரித் தாடுங் கழுமலவர்க் காளன்றி மற்றுமுண் டோ அந்த ணாழி அகலிடமே. | 4.82.1 | ||||||||||||||||||||||||
791 | கடையார் கொடிநெடு மாடங்க ளெங்குங் கலந்திலங்க உடையா னுடைதலை மாலையுஞ் சூடி உகந்தருளி விடைதா னுடையவவ் வேதியன் வாழுங் கழுமலத்துள் அடைவார் வினைக ளவையெள்க நாடொறும் ஆடுவரே. | 4.82.2 | 792 | திரைவாய்ப் பெருங்கடல் முத்தங் குவிப்ப முகந்துகொண்டு நுரைவாய் நுளைச்சிய ரோடிக் கழுமலத் துள்ளழுந்தும் விரைவாய் நறுமலர் சூடிய விண்ணவன் றன்னடிக்கே வரையாப் பரிசிவை நாடொறும் நந்தமை யாள்வனவே. | 4.82.3 | 793 | விரிக்கும் அரும்பதம் வேதங்க ளோதும் விழுமியநூல் உரைக்கில் அரும்பொருள் உள்ளுவர் கேட்கில் உலகமுற்றும் இரிக்கும் பறையொடு பூதங்கள் பாடக் கழுமலவன் நிருத்தம் பழம்படி யாடுங் கழல்நம்மை ஆள்வனவே. | 4.82.4 | 794 | சிந்தித் தெழுமன மேநினை யாமுன் கழுமலத்தைப் பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானைப் பசுபதியைச் சந்தித்த கால மறுத்துமென் றெண்ணி யிருந்தவர்க்கு முந்தித் தொழுகழல் நாடொறும் நந்தம்மை ஆள்வனவே. | 4.82.5 | 795 | நிலையும் பெருமையும் நீதியுஞ் சால அழகுடைத்தாய் அலையும் பெருவெள்ளத் தன்று மிதந்தவித் தோணிபுரஞ் சிலையில் திரிபுரம் மூன்றெரித் தார்தங் கழுமலவர் அலருங் கழலடி நாடொறும் நந்தமை ஆள்வனவே. | 4.82.6 | 796 | முற்றிக் கிடந்துமுந் நீரின் மிதந்துடன் மொய்த்தமரர் சுற்றிக் கிடந்து தொழப்படு கின்றது சூழரவந் தெற்றிக் கிடந்துவெங் கொன்றளந் துன்றிவெண் திங்கள்சூடுங் கற்றைச் சடைமுடி யார்க்கிட மாய கழுமலமே. | 4.82.7 | 797 | உடலும் உயிரும் ஒருவழிச் செல்லும் உலகத்துள்ளே அடையும் உனைவந் தடைந்தார் அமரர் அடியிணைக்கீழ் நடையும் விழவொடு நாடொறும் மல்கும் கழுமலத்துள் விடையன் தனிப்பதம் நாடொறும் நந்தமை ஆள்வனவே. | 4.82.8 | 798 | பரவைக் கடல்நஞ்ச முண்டது மில்லையிப் பார்முழுதும் நிரவிக் கிடந்து தொழப்படு கின்றது நீண்டிருவர் சிரமப் படவந்து சார்ந்தார் கழலடி காண்பதற்கே அரவக் கழலடி நாடொறும் நந்தமை ஆள்வனவே. | 4.82.9 | 799 | கரையார் கடல்சூழ் இலங்கையர் கோன்றன் முடிசிதறத் தொலையா மலரடி ஊன்றலும் உள்ளம் விதிர்விதிர்த்துத் தலையாய்க் கிடந்துயர்ந் தான்றன் கழுமலங் காண்பதற்கே அலையாப் பரிசிவை நாடொறும் நந்தமை ஆள்வனவே. | 4.82.10 |
800 | படையார் மழுவொன்று பற்றிய கையன் பதிவினவிற் கடையார் கொடிநெடு மாடங்க ளோங்குங் கழுமலமாம் மடைவாய்க் குருகினம் பாளை விரிதொறும் வண்டினங்கள் பெடைவாய் மதுவுண்டு பேரா திருக்கும் பெரும்பதியே. | 4.83.1 |
801 | எட்டாந் திசைக்கும் இருதிசைக் கும்மிறை வாமுறையென் றிட்டார் அமரர்வெம் பூசல் எனக்கேட் டெரிவிழியா ஒட்டாக் கயவர் திரிபுரம் மூன்றையும் ஓரம்பினால் அட்டான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே. | 4.84.1 | |||||||||||||||||||||||||||
802 | பேழ்வாய் அரவின் அரைக்கமர்ந் தேறிப் பிறங்கிலங்கு தேய்வாய் இளம்பிறை செஞ்சடை மேல்வைத்த தேவர்பிரான் மூவான் இளகான் முழுவுல கோடுமண் விண்ணுமற்றும் ஆவான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே. | 4.84.2 | 803 | தரியா வெகுளிய னாய்த்தக்கன் வேள்வி தகர்த்துகந்த எரியார் இலங்கிய சூலத்தி னான்இமை யாதமுக்கட் பெரியான் பெரியார் பிறப்பறுப் பானென்றுந் தன்பிறப்பை அரியான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே. | 4.84.3 | 804 | வடிவுடை வாணெடுங் கண்ணுமை யாளையோர் பால்மகிழ்ந்து வெடிகொள் அரவொடு வேங்கை அதள்கொண்டு மேல்மருவிப் பொடிகொ ளகலத்துப் பொன்பிதிர்ந் தன்னபைங் கொன்றையந்தார் அடிகள் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே. | 4.84.4 | 805 | பொறுத்தான் அமரர்க் கமுதரு ளிநஞ்ச முண்டுகண்டங் கறுத்தான் கறுப்பழ காவுடை யான்கங்கை செஞ்சடைமேற் செறுத்தான் தனஞ்சயன் சேணா ரகலங் கணையொன்றினால் அறுத்தான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே. | 4.84.5 | 806 | காய்ந்தான் செறற்கரி யானென்று காலனைக் காலொன்றினாற் பாய்ந்தான் பணைமதில் மூன்றுங் கணையென்னும் ஒள்ளழலால் மேய்ந்தான் வியனுல கேழும் விளங்க விழுமியநூல் ஆய்ந்தான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே. | 4.84.6 | 807 | உளைந்தான் செறுத்தற் கரியான் றலையை உகிரொன்றினாற் களைந்தான் அதனை நிறைய நெடுமால் கணார் குருதி வளைந்தான் ஒருவிர லின்னொடு வீழ்வித்துச் சாம்பர்வெண்ணீ றளைந்தான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே. | 4.84.7 | 808 | முந்திவட் டத்திடைப் பட்டதெல் லாம்முடி வேந்தர்தங்கள் பந்திவட் டத்திடைப் பட்டலைப் புண்பதற் கஞ்சிக்கொல்லோ நந்திவட் டந்நறு மாமலர்க் கொன்றையு நக்கசென்னி அந்திவட் டத்தொளி யானடிச் சேர்ந்ததென் ஆருயிரே. | 4.84.8 | 809 | மிகத்தான் பெரியதோர் வேங்கை யதள்கொண்டு மெய்ம்மருவி அகத்தான் வெருவநல் லாளை நடுக்குறுப் பான்வரும்பொன் முகத்தாற் குளிர்ந்திருந் துள்ளத்தி னாலுகப் பானிசைந்த அகத்தான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே. | 4.84.9 | 810 | பைம்மா ணரவல்குற் பங்கயச் சீறடி யாள்வெருவக் கைம்மா வரிசிலைக் காமனை யட்ட கடவுள்முக்கண் எம்மான் இவனென் றிருவரு மேத்த எரிநிமிர்ந்த அம்மான் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே. | 4.84.10 | 811 | பழகவோ ரூர்தி யரன்பைங்கட் பாரிடம் பாணிசெய்யக் குழலும் முழவொடு மாநட மாடி உயரிலங்கைக் கிழவன் இருபது தோளும் ஒருவிர லாலிறுத்த அழகன் அடிநிழற் கீழதன் றோவென்றன் ஆருயிரே. | 4.84.11 |
812 | காலை யெழுந்து கடிமலர் தூயன தாங்கொணர்ந்து மேலை யமரர் விரும்பு மிடம்விரை யான்மலிந்த சோலை மணங்கமழ் சோற்றுத் துறையுறை வார்சடைமேல் மாலை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே. | 4.85.1 | ||||||||||||||||||||||||
813 | வண்டணை கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவுங் கொண்டணைந் தேறு முடியுடை யான்குரை சேர்கழற்கே தொண்டணைந் தாடிய சோற்றுத் துறையுறை வார்சடைமேல் வெண்டலை மாலையன் றோவெம் பிரானுக் கழகியதே. | 4.85.2 | 814 | அளக்கு நெறியினன் அன்பர்கள் தம்மனத் தாய்ந்துகொள்வான் விளக்கு மடியவர் மேல்வினை தீர்த்திடும் விண்ணவர்கோன் துளக்குங் குழையணி சோற்றுத் துறையுறை வார்சடைமேற் றிளைக்கும் மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே. | 4.85.3 | 815 | ஆய்ந்தகை வாளர வத்தொடு மால்விடை யேறியெங்கும் பேர்ந்தகை மானட மாடுவர் பின்னு சடையிடையே சேர்ந்தகைம் மாமலர் துன்னிய சோற்றுத் துறையுறைவார் ஏந்துகைச் சூல மழுவெம் பிரானுக் கழகியதே. | 4.85.4 | 816 | கூற்றைக் கடந்ததுங் கோளர வார்த்ததுங் கோளுழுவை நீற்றில் துதைந்து திரியும் பரிசது நாமறியோம் ஆற்றிற் கிடந்தங் கலைப்ப அலைப்புண் டசைந்ததொக்குஞ் சோற்றுத் துறையுறை வார்சடை மேலதோர் தூமதியே. | 4.85.5 | 817 | வல்லாடி நின்று வலிபேசு வார்கோளர் வல்லசுரர் கொல்லாடி நின்று குமைக்கிலும் வானவர் வந்திறைஞ்சச் சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத் துறையுறைவார் வில்லாடி நின்ற நிலையெம் பிரானுக் கழகியதே. | 4.85.6 | 818 | ஆய முடையது நாமறி யோம்அர ணத்தவரைக் காயக் கணைசிலை வாங்கியு மெய்துந் துயக்கறுத்தான் தூயவெண் ணீற்றினன் சோற்றுத் துறையுறை வார்சடைமேற் பாயும்வெண் ணீர்த்திரைக் கங்கையெம் மானுக் கழகியதே. | 4.85.7 | 819 | அண்டர் அமரர் கடைந் தெழுந் தோடிய நஞ்சதனை உண்டும் அதனை ஒடுக்க வல்லான் மிக்க உம்பர்கள்கோன் தொண்டு பயில்கின்ற சோற்றுத் துறையுறை வார்சடைமேல் இண்டை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே. | 4.85.8 | 820 | கடல்மணி வண்ணன் கருதிய நான்முகன் றானறியான் விடமணி கண்ட முடையவன் றானெனை ஆளுடையான் சுடரணிந் தாடிய சோற்றுத் துறையுறை வார்சடைமேற் படமணி நாகமன் றோவெம் பிரானுக் கழகியதே. | 4.85.9 | 821 | இலங்கைக் கிறைவன் இருபது தோளு முடிநெரியக் கலங்க விரலினா லூன்றி அவனைக் கருத்தழித்த துலங்கல் மழுவினன் சோற்றுத் துறையுறை வார்சடைமேல் இலங்கு மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே. | 4.85.10 |
822 | செற்றுக் களிற்றுரி கொள்கின்ற ஞான்று செருவெண்கொம்பொன் றிற்றுக் கிடந்தது போலும் இளம்பிறை பாம்பதனைச் சுற்றிக் கிடந்தது கிம்புரி போலச் சுடரிமைக்கும் நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்குமா லொற்றி யூரனுக்கே. | 4.86.1 | |||||||||||||||||||||||||||
823 | சொல்லக் கருதிய தொன்றுண்டு கேட்கிற் றொண்டாயடைந்தார் அல்லற் படக்கண்டு பின்னென் கொடுத்தி அலைகொள்முந்நீர் மல்லற் றிரைச்சங்க நித்திலங் கொண்டுவம் பக்கரைக்கே ஒல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை யுத்தமனே. | 4.86.2 | 824 | பரவை வருதிரை நீர்க்கங்கை பாய்ந்துக்க பல்சடைமேல் அரவ மணிதரு கொன்றை இளந்திங்கட் சூடியதோர் குரவ நறுமலர் கோங்க மணிந்து குலாய சென்னி உரவு திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை யுத்தமனே. | 4.86.3 | 825 | தானகங் காடரங் காக வுடையது தன்னடைந்தார் ஊனக நாறு முடைதலை யிற்பலி கொள்வதுந்தான் தேனக நாறுந் திருவொற்றி யூருறை வாரவர்தாந் தானக மேவந்து போனகம் வேண்டி உழிதர்வரே. | 4.86.4 | 826 | வேலைக் கடல்நஞ்ச முண்டுவெள் ளேற்றொடும் வீற்றிருந்த மாலைச் சடையார்க் குறைவிட மாவது வாரிகுன்றா ஆலைக் கரும்பொடு செந்நெற் கழனி அருகணைந்த சோலைத் திருவொற்றி யூரையெப் போதுந் தொழுமின்களே. | 4.86.5 | 827 | புற்றினில் வாழும் அரவுக்குந் திங்கட்குங் கங்கையென்னுஞ் சிற்றிடை யாட்குஞ் செறிதரு கண்ணிக்குஞ் சேர்விடமாம் பெற்றுடை யான்பெரும் பேச்சுடை யான்பிரி யாதெனையாள் விற்றுடை யானொற்றி யூருடை யான்றன் விரிசடையே. | 4.86.6 | 828 | இன்றரைக் கண்ணுடை யாரெங்கு மில்லை இமய மென்னுங் குன்றரைக் கண்ணன் குலமகட் பாவைக்குக் கூறிட்டநாள் அன்றரைக் கண்ணுங் கொடுத்துமை யாளையும் பாகம்வைத்த ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி யூருறை உத்தமனே. | 4.86.7 | 829 | சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங் காவுந் துதைந்திலங்கு பெற்றிகண் டால்மற்று யாவருங் கொள்வர் பிறரிடைநீ ஒற்றிகொண் டாயொற்றி யூரையுங் கைவிட் டுறுமென்றெண்ணி விற்றிகண் டாய்மற் றிதுவொப்ப தில்லிடம் வேதியனே. | 4.86.8 | 830 | சுற்றிக் கிடந்தொற்றி யூரனென் சிந்தை பிரிவறியான் ஒற்றித் திரிதந்து நீயென்ன செய்தி உலகமெல்லாம் பற்றித் திரிதந்து பல்லொடு நாமென்று கண்குழித்துத் தெற்றித் திருப்பதல் லாலென்ன செய்யுமித் தீவினையே. | 4.86.9 | 831 | அங்கட் கடுக்கைக்கு முல்லைப் புறவம் முறுவல்செய்யும் பைங்கட் டலைக்குச் சுடலைக் களரி பருமணிசேர் கங்கைக்கு வேலை அரவுக்குப் புற்று கலைநிரம்பாத் திங்கட்கு வானந் திருவொற்றி யூரர் திருமுடியே. | 4.86.10 | 832 | தருக்கின வாளரக் கன்முடி பத்திறப் பாதந்தன்னால் ஒருக்கின வாறடி யேனைப் பிறப்பறுத் தாளவல்லான் நெருக்கின வானவர் தானவர் கூடிக் கடைந்தநஞ்சைப் பருக்கின வாறென்செய் கேனொற்றி யூருறை பண்டங்கனே. | 4.86.11 |
833 | மேவித்து நின்று விளைந்தன வெந்துயர் துக்கமெல்லாம் ஆவித்து நின்று கழிந்தன அல்லல் அவையறுப்பான் பாவித்த பாவனை நீயறி வாய்பழ னத்தரசே கூவித்துக் கொள்ளுந் தனையடி யேனைக் குறிக்கொள்வதே. | 4.87.1 | ||||||||||||||||||||||||
834 | சுற்றிநின் றார்புறங் காவ லமரர் கடைத்தலையில் மற்றுநின் றார்திரு மாலொடு நான்முகன் வந்தடிக்கீழ்ப் பற்றிநின் றார்பழ னத்தர சேயுன் பணியறிவான் உற்றுநின் றாரடி யேனைக் குறிக்கொண் டருளுவதே. | 4.87.2 | 835 | ஆடிநின் றாயண்டம் ஏழுங் கடந்துபோய் மேலவையுங் கூடிநின் றாய்குவி மென்முலை யாளையுங் கொண்டுடனே பாடிநின் றாய்பழ னத்தர சேயங்கோர் பால்மதியஞ் சூடிநின் றாயடி யேனையஞ் சாமைக் குறிக்கொள்வதே. | 4.87.3 | 836 | எரித்துவிட் டாய்அம்பி னாற்புர மூன்றுமுன் னேபடவும் உரித்துவிட் டாய்உமை யாள்நடுக் கெய்தவோர் குஞ்சரத்தைப் பரித்துவிட் டாய்பழ னத்தர சேகங்கை வார்சடைமேற் தரித்துவிட் டாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே. | 4.87.4 | 837 | முன்னியும் முன்னி முளைத்தன மூவெயி லும்முடனே மன்னியு மங்கும் இருந்தனை மாய மனத்தவர்கள் பன்னிய நூலின் பரிசறி வாய்பழ னத்தரசே உன்னியும் உன்னடி யேனைக் குறிக்கொண் டருளுவதே. | 4.87.5 | 838 | ஏய்ந்தறுத் தாய்இன்ப னாய்இருந் தேபடைத் தான்றலையைக் காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று காமனைக் காலனையும் பாய்ந்தறுத் தாய்பழ னத்தர சேயென் பழவினைநோய் ஆய்ந்தறுத் தாயடி யேனைக் குறிக்கொண் டருளுவதே. | 4.87.6 | 839 | மற்றுவைத் தாயங்கோர் மாலொரு பாகம் மகிழ்ந்துடனே உற்றுவைத் தாய்உமை யாளொடுங் கூடும் பரிசெனவே பற்றிவைத் தாய்பழ னத்தர சேயங்கோர் பாம்பொருகை சுற்றிவைத் தாய்அடி யேனைக் குறிக்கொண் டருளுவதே. | 4.87.7 | 840 | ஊரினின் றாய்ஒன்றி நின்றுவிண் டாரையும் ஒள்ளழலாற் போரினின் றாய்பொறை யாயுயி ராவி சுமந்துகொண்டு பாரிநின் றாய்பழ னத்தர சேபணி செய்பவர்கட் காரநின் றாய்அடி யேனைக் குறிக்கொண் டருளுவதே. | 4.87.8 | 841 | போகம்வைத் தாய்புரி புன்சடை மேலோர் புனலதனை ஆகம்வைத் தாய்மலை யான்மட மங்கை மகிழ்ந்துடனே பாகம்வைத் தாய்பழ னத்தர சேயுன் பணியருளால் ஆகம்வைத் தாய்அடி யேனைக் குறிக்கொண் டருளுவதே. | 4.87.9 | 842 | அடுத்திருந் தாய்அரக் கன்முடி வாயொடு தோள்நெரியக் கெடுத்திருந் தாய்கிளர்ந் தார்வலி யைக்கிளை யோடுடனே படுத்திருந் தாய்பழ னத்தர சேபுலி யின்னுரிதோல் உடுத்திருந் தாய்அடி யேனைக் குறிக்கொண் டருளுவதே. | 4.87.10 |
843 | மாலினை மாலுற நின்றான் மலைமகள் தன்னுடைய பாலனைப் பான்மதி சூடியைப் பண்புண ரார்மதின்மேற் போலனைப் போர்விடை யேறியைப் பூந்துருத் திமகிழும் ஆலனை ஆதிபு ராணனை நானடி போற்றுவதே. | 4.88.1 | ||||||||||||||||||||||||
844 | மறியுடை யான்மழு வாளினன் மாமலை மங்கையோர்பால் குறியுடை யான்குண மொன்றறிந் தாரில்லை கூறிலவன் பொறியுடை வாளர வத்தவன் பூந்துருத் தியுறையும் அறிவுடை ஆதி புராணனை நானடி போற்றுவதே. | 4.88.2 | 845 | மறுத்தவர் மும்மதில் மாயவோர் வெஞ்சிலை கோத்தோரம்பால் அறுத்தனை ஆலதன் கீழனை ஆல்விட முண்டதனைப் பொறுத்தனைப் பூதப் படையனைப் பூந்துருத் தியுறையும் நிறத்தனை நீல மிடற்றனை யானடி போற்றுவதே. | 4.88.3 | 846 | உருவினை ஊழி முதல்வனை ஓதி நிறைந்துநின்ற திருவினைத் தேசம் படைத்தனைச் சென்றடைந் தேனுடைய பொருவினை யெல்லாந் துரந்தனைப் பூந்துருத் தியுறையுங் கருவினைக் கண்மூன் றுடையனை யானடி போற்றுவதே. | 4.88.4 | 847 | தக்கன்றன் வேள்வி தகர்த்தவன் சார மதுவன்றுகோள் மிக்கன மும்மதில் வீயவோர் வெஞ்சிலை கோத்தோரம்பால் புக்கனன் பொன்றிகழ்ந் தன்னதோர் பூந்துருத் தியுறையும் நக்கனை நங்கள் பிரான்றனை நானடி போற்றுவதே. | 4.88.5 | 848 | அருகடை மாலையுந் தானுடை யான்அழ காலமைந்த உருவுடை மங்கையுந் தன்னொரு பாலுல காயுநின்றான் பொருபடை வேலினன் வில்லினன் பூந்துருத் தியுறையுந் திருவுடைத் தேச மதியனை யானடி போற்றுவதே. | 4.88.6 | 849 | மன்றியுந் நின்ற மதிலரை மாய வகைகெடுக்கக் கன்றியுந் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனலம்பினாற் பொன்றியும் போகப் புரட்டினன் பூந்துருத் தியுறையும் அன்றியுஞ் செய்த பிரான்றனை யானடி போற்றுவதே. | 4.88.7 | 850 | மின்னிறம் மிக்க இடையுமை நங்கையோர் பான்மகிழ்ந்தான் என்னிற மென்றம ரர்பெரி யாரின்னந் தாமறியார் பொன்னிற மிக்க சடையவன் பூந்துருத் தியுறையும் என்னிற வெந்தை பிரான்றனை யானடி போற்றுவதே. | 4.88.8 | 851 | அந்தியை நல்ல மதியினை யார்க்கும் அறிவரிய செந்தியை வாட்டுஞ்செம் பொன்னினை சென்றடைந் தேனுடைய புந்தியைப் புக்க அறிவினை பூந்துருத் தியுறையும் நந்தியை நங்கள் பிரான்றனை நானடி போற்றுவதே. | 4.88.9 | 852 | பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு சடையிடையே வைக்கையும் வானிழி கங்கையும் மங்கை நடுக்குறவே மொய்க்கை அரக்கனை யூன்றினன் பூந்துருத் தியுறையும் மிக்கநல் வேத விகிர்தனை நானடி போற்றுவதே. | 4.88.10 |
853 | பாரிடஞ் சாடிய பல்லுயிர் வானம ரர்க்கருளிக் காரடைந் தகடல் வாயுமிழ் நஞ்சமு தாகவுண்டான் ஊரடைந் திவ்வுல கிற்பலி கொள்வது நாமறியோம் நீரடைந் தகரை நின்றநெய்த் தானத் திருந்தவனே. | 4.89.1 | ||||||||||||||||||||||||
854 | தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி யாய்நின் திருச்சடைமேற் பாய்ந்தகங் கைப்புனற் பன்முக மாகிப் பரந்தொலிப்ப ஆய்ந்திலங் கும்மழு வேலுடை யாயடி யேற்குரைநீ ஏந்திள மங்கையும் நீயும்நெய்த் தானத் திருந்ததுவே. | 4.89.2 | 855 | கொன்றடைந் தாடிக் குமைத்திடுங் கூற்றமொன் னார்மதின்மேற் சென்றடைந் தாடிப் பொருததுந் தேசமெல் லாமறியுங் குன்றடைந் தாடுங் குளிர்பொழிற் காவிரி யின்கரைமேற் சென்றடைந் தார்வினை தீர்க்குநெய்த் தானத் திருந்தவனே. | 4.89.3 | 856 | கொட்டு முழவர வத்தொடு கோலம் பலஅணிந்து நட்டம் பலபயின் றாடுவர் நாகம் அரைக் கசைத்துச் சிட்டர் திரிபுரந் தீயெழச் செற்ற சிலையுடையான் இட்ட முமையொடு நின்றநெய்த் தானத் திருந்தவனே. | 4.89.4 | 857 | கொய்மலர்க் கொன்றை துழாய்வன்னி மத்தமுங் கூவிளமும் மெய்மலர் வேய்ந்த விரிசடைக் கற்றைவிண் ணோர்பெருமான் மைமலர் நீல நிறங்கருங் கண்ணியோர் பால்மகிழ்ந்தான் நின்மல னாடல் நிலயநெய்த் தானத் திருந்தவனே. | 4.89.5 | 858 | பூந்தார் நறுங்கொன்றை மாலையை வாங்கிச் சடைக்கணிந்து கூர்ந்தார் விடையினை யேறிப்பல் பூதப் படைநடுவே போந்தார் புறவிசை பாடவும் ஆடவுங் கேட்டருளிச் சேர்ந்தார் உமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே. | 4.89.6 | 859 | பற்றின பாம்பன் படுத்த புலியுரித் தோலுடையன் முற்றின மூன்று மதில்களை மூட்டி யெரித்தறுத்தான் சுற்றிய பூதப் படையினன் சூல மழுவொருமான் செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த் தானத் திருந்தவனே. | 4.89.7 | 860 | விரித்த சடையினன் விண்ணவர் கோன்விட முண்டகண்டன் உரித்த கரியுரி மூடியொன் னார்மதில் மூன்றுடனே எரித்த சிலையினன் ஈடழியா தென்னை ஆண்டுகொண்ட தரித்த உமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே. | 4.89.8 | 861 | தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை துன்னிய செஞ்சடைமேல் வாங்கா மதியமும் வாளர வுங்கங்கை தான்புனைந்தான் தேங்கார் திரிபுரந் தீயெழ வெய்து தியக்கறுத்து நீங்கான் உமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே. | 4.89.9 | 862 | ஊட்டிநின் றான்பொரு வானில மும்மதில் தீயம்பினால் மாட்டிநின் றான்அன்றி னார்வெந்து வீழவும் வானவர்க்குக் காட்டிநின் றான்கத மாக்கங்கை பாயவோர் வார்சடையை நீட்டிநின் றான்றிரு நின்றநெய்த் தானத் திருந்தவனே. | 4.89.10 |
863 | கையது காலெரி நாகங் கனல்விடு சூலமது வெய்யது வேலைநஞ் சுண்ட விரிசடை விண்ணவர்கோன் செய்யினில் நீல மணங்கம ழுந்திரு வேதிகுடி ஐயனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே. | 4.90.1 | ||||||||||||||||||||||||
864 | கைத்தலை மான்மறி யேந்திய கையன் கனல்மழுவன் பொய்த்தலை யேந்திநற் பூதி யணிந்து பலிதிரிவான் செய்த்தலை வாளைகள் பாய்ந்துக ளுந்திரு வேதிகுடி அத்தனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே. | 4.90.2 | 865 | முன்பின் முதல்வன் முனிவனெம் மேலை வினைகழித்தான் அன்பின் நிலையில் அவுணர் புரம்பொடி யானசெய்யுஞ் செம்பொனை நன்மலர் மேலவன் சேர்திரு வேதிகுடி அன்பனை நம்மை யுடையனை நாமடைந் தாடுதுமே. | 4.90.3 | 866 | பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை யொன்றறுப்பான் முத்தர்கள் முன்னம் பணிசெய்து பாரிடம் முன்னுயர்த்தான் கொத்தன கொன்றை மணங்கம ழுந்திரு வேதிகுடி அத்தனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே. | 4.90.4 | 867 | ஆனணைந் தேறுங் குறிகுண மாரறி வாரவர்கை மானணைந் தாடு மதியும் புனலுஞ் சடைமுடியன் தேனணைந் தாடிய வண்டு பயில்திரு வேதிகுடி ஆனணைந் தாடு மழுவனை நாமடைந் தாடுதுமே. | 4.90.5 | 868 | எண்ணும் எழுத்துங் குறியும் அறிபவர் தாமொழியப் பண்ணின் இசைமொழி பாடிய வானவர் தாம்பணிவார் திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்றிரு வேதிகுடி நண்ண அரிய அமுதினை நாமடைந் தாடுதுமே. | 4.90.6 | 869 | ஊர்ந்த விடையுகந் தேறிய செல்வனை நாமறியோம் ஆர்ந்த மடமொழி மங்கையோர் பாகம் மகிழ்ந்துடையான் சேர்ந்த புனற்சடைச் செல்வப் பிரான்றிரு வேதிகுடிச் சார்ந்த வயலணி தண்ணமு தையடைந் தாடுதுமே. | 4.90.7 | 870 | எரியும் மழுவினன் எண்ணியும் மற்றொரு வன்றலையுள் திரியும் பலியினன் தேயமும் நாடுமெல் லாமுடையான் விரியும் பொழிலணி சேறு திகழ்திரு வேதிகுடி அரிய அமுதினை அன்பர்க ளோடடைந் தாடுதுமே. | 4.90.8 | 871 | மையணி கண்டன் மறைவிரி நாவன் மதித்துகந்த மெய்யணி நீற்றன் விழுமிய வெண்மழு வாட்படையான் செய்ய கமல மணங்கம ழுந்திரு வேதிகுடி ஐயனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே. | 4.90.9 | 872 | வருத்தனை வாளரக் கன்முடி தோளொடு பத்திறுத்த பொருத்தனைப் பொய்யா அருளனைப் பூதப் படையுடைய திருத்தனைத் தேவர் பிரான்றிரு வேதி குடியுடைய அருத்தனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே. | 4.90.10 |
873 | குறுவித்த வாகுற்ற நோய்வினை காட்டிக் குறுவித்தநோய் உறுவித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி அறிவித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே செறிவித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. | 4.91.1 | ||||||||||||||||||||||||
874 | கூர்வித்த வாகுற்ற நோய்வினை காட்டியுங் கூர்வித்தநோய் ஊர்வித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி ஆர்வித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே சேர்வித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. | 4.91.2 | 875 | தாக்கின வாசல மேவினை காட்டியுந் தண்டித்தநோய் நீக்கின வாநெடு நீரினின் றேற நினைந்தருளி ஆக்கின வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே நோக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. | 4.91.3 | 876 | தருக்கின நான்றக வின்றியு மோடச் சலமதனால் நெருக்கின வாநெடு நீரினின் றேற நினைந்தருளி உருக்கின வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே பெருக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. | 4.91.4 | 877 | இழிவித்த வாறிட்ட நோய்வினை காட்டி இடர்ப்படுத்துக் கழிவித்த வாகட்ட நோய்வினை தீர்ப்பான் கலந்தருளி அழிவித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே தொழுவித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. | 4.91.5 | 878 | இடைவித்த வாறிட்ட நோய்வினை காட்டி இடர்ப்படுத்து உடைவித்த வாறுற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி அடைவித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே தொடர்வித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. | 4.91.6 | 879 | படக்கின வாபட நின்றுபன் னாளும் படக்கினநோய் அடக்கின வாறது வன்றியுந் தீவினை பாவமெல்லாம் அடக்கின வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே தொடக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. | 4.91.7 | 880 | மறப்பித்த வாவல்லை நோய்வினை காட்டி மறப்பித்தநோய் துறப்பித்த வாதுக்க நோய்வினை தீர்ப்பான் உகந்தருளி இறப்பித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே சிறப்பித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. | 4.91.8 | 881 | துயக்கின வாதுக்க நோய்வினை காட்டித் துயக்கினநோய் இயக்கின வாறிட்ட நோய்வினை தீர்ப்பான் இசைந்தருளி அயக்கின வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களே மயக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. | 4.91.9 | 882 | கறுத்துமிட் டார்கண்டங் கங்கை சடைமேற் கரந்தருளி இறுத்துமிட் டார்இலங் கைக்கிறை தன்னை இருபதுதோள் அறுத்துமிட் டாரடி யேனைஐ யாறன் அடிமைக்களே பொறுத்துமிட் டார்தொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே. | 4.91.10 |
883 | சிந்திப் பரியன சிந்திப் பவர்க்குச் சிறந்துசெந்தேன் முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்திருண்டு பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்புசுற்றி அந்திப் பிறையணிந் தாடும்ஐ யாறன் அடித்தலமே. | 4.92.1 | ||||||||||||||||||||||||
884 | இழித்தன ஏழேழ் பிறப்பும் அறுத்தன என்மனத்தே பொழித்தன போரெழிற் கூற்றை யுதைத்தன போற்றவர்க்காய்க் கிழித்தன தக்கன் கிளரொளி வேள்வியைக் கீழமுன்சென் றழித்தன ஆறங்க மானஐ யாறன் அடித்தலமே. | 4.92.2 | 885 | மணிநிற மொப்பன பொன்னிற மன்னின மின்னியல்வாய் கணிநிற மன்ன கயிலைப் பொருப்பன காதல்செய்யத் துணிவன சீலத்த ராகித் தொடர்ந்து விடாததொண்டர்க் கணியன சேயன தேவர்க்கை யாறன் அடித்தலமே. | 4.92.3 | 886 | இருள்தரு துன்பப் படல மறைப்பமெய்ஞ் ஞானமென்னும் பொருள்தரு கண்ணிழந் துண்பொருள் நாடிப் புகலிழந்த குருடருந் தம்மைப் பரவக் கொடுநர கக்குழிநின் றருள்தரு கைகொடுத் தேற்றும்ஐ யாறன் அடித்தலமே. | 4.92.4 | 887 | எழுவாய் இறுவாய் இலாதன வெங்கட் பிணிதவிர்த்து வழுவா மருத்துவ மாவன மாநர கக்குழிவாய் விழுவார் அவர்தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்கவன்போ டழுவார்க் கமுதங்கள் காண்கஐ யாறன் அடித்தலமே. | 4.92.5 | 888 | துன்பக் கடலிடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர்தம்மை இன்பக் கரைமுகந் தேற்றுந் திறத்தன மாற்றயலே பொன்பட் டொழுகப் பொருந்தொளி செய்யுமப் பொய்பொருந்தா அன்பர்க் கணியன காண்கஐ யாறன் அடித்தலமே. | 4.92.6 | 889 | களித்துக் கலந்ததோர் காதற் கசிவொடு காவிரிவாய்க் குளித்துத் தொழுதுமுன் நின்றவிப் பத்தரைக் கோதில்செந்தேன் தெளித்துச் சுவையமு தூட்டி யமரர்கள் சூழிருப்ப அளித்துப் பெருஞ்செல்வ மாக்கும்ஐ யாறன் அடித்தலமே. | 4.92.7 | 890 | திருத்திக் கருத்தினைச் செவ்வே நிறுத்திச் செறுத்துடலை வருத்திக் கடிமலர் வாளெடுத் தோச்சி மருங்குசென்று விருத்திக் குழக்கவல் லோர்கட்கு விண்பட் டிகையிடுமால் அருத்தித் தருந்தவ ரேத்தும்ஐ யாறன் அடித்தலமே. | 4.92.8 | 891 | பாடும் பறண்டையு மாந்தையு மார்ப்பப் பரந்துபல்பேய்க் கூடி முழவக் குவிகவிழ் கொட்டக் குறுநரிகள் நீடுங் குழல்செய்ய வையம் நெளிய நிணப்பிணக்காட் டாடுந் திருவடி காண்கஐ யாறன் அடித்தலமே. | 4.92.9 | 892 | நின்போல் அமரர்கள் நீண்முடி சாய்த்து நிமிர்த்துகுத்த பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன பாங்கறியா என்போ லிகள்பறித் திட்ட இலையும் முகையுமெல்லாம் அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ யாறன் அடித்தலமே. | 4.92.10 |
893 | மலையார் மடந்தை மனத்தன வானோர் மகுடமன்னி நிலையா யிருப்பன நின்றோர் மதிப்பன நீணிலத்துப் புலையாடு புன்மை தவிர்ப்பன பொன்னுல கம்மளிக்கும் அலையார் புனற்பொன்னி சூழ்ந்தஐ யாறன் அடித்தலமே. | 4.93.1 | ||||||||||||||||||||||||
894 | பொலம்புண் டரீகப் புதுமலர் போல்வன போற்றியென்பார் புலம்பும் பொழுதும் புணர்துணை யாவன பொன்னனைய சிலம்புஞ் செறிபா டகமுஞ் செழுங்கிண் கிணித்திரளும் அலம்பும் திருவடி காண்கஐ யாறன் அடித்தலமே. | 4.93.2 | 895 | உற்றா ரிலாதார்க் குறுதுணை யாவன ஓதிநன்னூல் கற்றார் பரவப் பெருமை யுடையன காதல்செய்ய கிற்பார் தமக்குக் கிளரொளி வானகந் தான்கொடுக்கும் அற்றார்க் கரும்பொருள் காண்கஐ யாறன் அடித்தலமே. | 4.93.3 | 896 | வானைக் கடந்தண்டத் தப்பால் மதிப்பன மந்திரிப்பார் ஊனைக் கழித்துய்யக் கொண்டருள் செய்வன உத்தமர்க்கு ஞானச் சுடராய் நடுவே யுதிப்பன நங்கையஞ்ச ஆனை யுரித்தன காண்கஐ யாறன் அடித்தலமே. | 4.93.4 | 897 | மாதர மானில மாவன வானவர் மாமுகட்டின் மீதன மென்கழல் வெங்கச்சு வீக்கின வெந்நமனார் தூதரை யோடத் துரப்பன துன்பறத் தொண்டுபட்டார்க் காதர மாவன காண்கஐ யாறன் அடித்தலமே. | 4.93.5 | 898 | பேணித் தொழுமவர் பொன்னுல காளப் பிறங்கருளால் ஏணிப் படிநெறி யிட்டுக் கொடுத்திமை யோர்முடிமேல் மாணிக்க மொத்து மரகதம் போன்று வயிரமன்னி ஆணிக் கனகமு மொக்கும்ஐ யாறன் அடித்தலமே. | 4.93.6 | 899 | ஓதிய ஞானமும் ஞானப் பொருளும் ஒலிசிறந்த வேதியர் வேதமும் வேள்வியு மாவன விண்ணுமண்ணுஞ் சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு மொப்பன தூமதியோ டாதியும் அந்தமு மானஐ யாறன் அடித்தலமே. | 4.93.7 | 900 | சுணங்கு முகத்துத் துணைமுலைப் பாவை சுரும்பொடுவண் டணங்குங் குழலி யணியார் வளைக்கரங் கூப்பிநின்று வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும்வண் காந்தளொண்போ தணங்கும் அரவிந்த மொக்கும்ஐ யாறன் அடித்தலமே. | 4.93.8 | 901 | சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போதடித் தொண்டர்துன்னும் நிழலா வனவென்று நீங்காப் பிறவி நிலைகெடுத்துக் கழலா வினைகள் கழற்றுவ கால வனங்கடந்த அழலார் ஒளியன காண்கஐ யாறன் அடித்தலமே. | 4.93.9 | 902 | வலியான் றலைபத்தும் வாய்விட் டலற வரையடர்த்து மெலியா வலியுடைக் கூற்றை யுதைத்துவிண் ணோர்கள்முன்னே பலிசேர் படுகடைப் பார்த்துப்பன் னாளும் பலர்இகழ அலியா நிலைநிற்கும் ஐயன்ஐ யாறன் அடித்தலமே. | 4.93.10 |
903 | வானவர் தானவர் வைகல் மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித் தானவர் மால்பிர மன்னறி யாத தகைமையினான் ஆனவ னாதிபு ராணனன் றோடிய பன்றியெய்த கானவ னைக்கண்டி யூரண்ட வாணர் தொழுகின்றதே. | 4.94.1 | ||||||||||||||||||||||||
904 | வான மதியமும் வாளர வும்புன லோடுசடைத் தான மதுவென வைத்துழல் வான்றழல் போலுருவன் கான மறியொன்று கையுடை யான்கண்டி யூரிருந்த ஊனமில் வேத முடையானை நாமடி யுள்குவதே. | 4.94.2 | 905 | பண்டங் கறுத்ததோர் கையுடை யான்படைத் தான்றலையை உண்டங் கறுத்ததும் ஊரொடு நாடவை தானறியுங் கண்டங் கறுத்த மிடறுடை யான்கண்டி யூரிருந்த தொண்டர் பிரானைக்கண் டீரண்ட வாணர் தொழுகின்றதே. | 4.94.3 | 906 | முடியின்முற் றாததொன் றில்லையெல் லாமுடன் தானுடையான் கொடியுமுற் றவ்விடை யேறியோர் கூற்றொரு பாலுடையான் கடியமுற் றவ்வினை நோய்களை வான்கண்டி யூரிருந்தான் அடியுமுற் றார்தொண்டர் இல்லைகண் டீரண்ட வானவரே. | 4.94.4 | 907 | பற்றியோ ரானை யுரித்த பிரான்பவ ளத்திரள்போல் முற்றும் அணிந்ததோர் நீறுடை யான்முன்ன மேகொடுத்த கற்றங் குடையவன் றானறி யான்கண்டி யூரிருந்த குற்றமில் வேத முடையானை யாமண்டர் கூறுவதே. | 4.94.5 | 908 | போர்ப்பனை யானை யுரித்த பிரான்பொறி வாயரவஞ் சேர்ப்பது வானத் திரைகடல் சூழுல கம்மிதனைக் காப்பது காரண மாகக்கொண் டான்கண்டி யூரிருந்த கூர்ப்புடை ஒள்வாள் மழுவனை யாமண்டர் கூறுவதே. | 4.94.6 | 909 | அட்டது காலனை ஆய்ந்தது வேதமா றங்கமன்று சுட்டது காமனைக் கண்ணத னாலே தொடர்ந்தெரியக் கட்டவை மூன்று மெரித்த பிரான்கண்டி யூரிருந்த குட்டமுன் வேதப் படையனை யாமண்டர் கூறுவதே. | 4.94.7 | 910 | அட்டும் ஒலிநீர் அணிமதி யும்மல ரானவெல்லாம் இட்டுப் பொதியுஞ் சடைமுடி யான்இண்டை மாலையங்கைக் கட்டும் அரவது தானுடை யான்கண்டி யூரிருந்த கொட்டும் பறையுடைக் கூத்தனை யாமண்டர் கூறுவதே. | 4.94.8 | 911 | மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகிவிழத் தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் லாநம்மைச் செற்றநங்கைக் காய்ந்த பிரான்கண்டி யூரெம் பிரான்அங்க மாறினையும் ஆய்ந்த பிரானல்ல னோவடி யேனையாட் கொண்டவனே. | 4.94.9 | 912 | மண்டி மலையை யெடுத்துமத் தாக்கியவ் வாசுகியைத் தண்டி அமரர் கடைந்த கடல்விடங் கண்டருளி உண்ட பிரான்நஞ் சொளித்தபி ரான்அஞ்சி யோடிநண்ணக் கண்ட பிரானல்ல னோகண்டி யூரண்ட வானவனே. | 4.94.10 |
913 | ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய் மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த் தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே. | 4.95.1 | ||||||||||||||||||||||||
914 | பற்றாய் நினைந்திடப் போதுநெஞ் சேயிந்தப் பாரைமுற்றுஞ் சுற்றாய் அலைகடல் மூடினுங் கண்டேன் புகல்நமக்கு உற்றான் உமையவட் கன்பன் திருப்பா திரிப்புலியூர் முற்றா முளைமதிக் கண்ணியி னான்றன மொய்கழலே. | 4.95.2 | 915 | விடையான் விரும்பியென் னுள்ளத் திருந்தான் இனிநமக்கிங் கடையா அவலம் அருவினை சாரா நமனையஞ்சோம் புடையார் கமலத் தயன்போல் பவர்பா திரிப்புலியூர் உடையான் அடியார் அடியடி யோங்கட் கரியதுண்டே. | 4.95.3 | 916 | மாயமெல் லாமுற்ற விட்டிருள் நீங்க மலைமகட்கே நேயம் நிலாவ இருந்தா னவன்றன் திருவடிக்கே தேயமெல் லாநின் றிறைஞ்சுந் திருப்பா திரிப்புலியூர் மேயநல் லான்மலர்ப் பாதமென் சிந்தையுள் நின்றனவே. | 4.95.4 | 917 | வைத்த பொருள்நமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச் சித்த மொருக்கிச் சிவாய நமவென் றிருக்கினல்லால் மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர் அத்தன் அருள்பெற லாமோ அறிவிலாப் பேதைநெஞ்சே. | 4.95.5 | 918 | கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன் உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளாற் திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே. | 4.95.6 | 919 | எண்ணா தமரர் இரக்கப் பரவையுள் நஞ்சமுண்டாய் திண்ணார் அசுரர் திரிபுரந் தீயெழச் செற்றவனே பண்ணார்ந் தமைந்த பொருள்கள் பயில்பா திரிப்புலியூர்க் கண்ணார் நுதலாய் கழல்நங் கருத்தில் உடையனவே. | 4.957 | 920 | புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச் செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே. | 4.95.8 | 921 | மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும் விண்பால் திசைகெட் டிருசுடர் வீழினும் அஞ்சல்நெஞ்சே திண்பால் நமக்கொன்று கண்டோ ந் திருப்பா திரிப்புலியூர்க் கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே. | 4.95.9 | 922 | திருந்தா அமணர்தந் தீநெறிப் பட்டுத் திகைத்துமுத்தி தருந்தா ளிணைக்கே சரணம் புகுந்தேன் வரையெடுத்த பொருந்தா அரக்கன் உடல்நெரித் தாய்பா திரிப்புலியூர் இருந்தாய் அடியேன் இனிப்பிற வாமல்வந் தேன்றுகொள்ளே. | 4.95.10 |
923 | வான்சொட்டச் சொட்டநின் றட்டும் வளர்மதி யோடயலே தேன்சொட்டச் சொட்டநின் றட்டுந் திருக்கொன்றை சென்னிவைத்தீர் மான்பெட்டை நோக்கி மணாளீர் மணிநீர் மிழலையுள்ளீர் நான்சட்ட வும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே. | 4.96.1 | ||||||||||||||||||||||||
924 | அந்தமும் ஆதியு மாகிநின் றீரண்டம் எண்டிசையும் பந்தமும் வீடும் பரப்புகின் றீர்பசு வேற்றுகந்தீர் வெந்தழல் ஓம்பு மிழலையுள் ளீரென்னைத் தென்றிசைக்கே உந்திடும் போது மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே. | 4.96.2 | 925 | அலைக்கின்ற நீர்நிலங் காற்றனல் அம்பர மாகிநின்றீர் கலைக்கன்று சேருங் கரத்தீர் கலைப்பொரு ளாகிநின்றீர் விலக்கின்றி நல்கும் மிழலையுள் ளீர்மெய்யிற் கையொடுகால் குலைக்கின்று நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே. | 4.96.3 | 926 | தீத்தொழி லான்றலை தீயிலிட் டுச்செய்த வேள்விசெற்றீர் பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடை யீர்பிடித் துத்திரியும் வேய்த்தொழி லாளர் மிழலையுள் ளீர்விக்கி அஞ்செழுத்தும் ஓத்தொழிந் தும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே. | 4.96.4 | 927 | தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ் சுத்தியும் பத்திமையான் மேற்பட்ட அந்தணர் வீழியும் என்னையும் வேறுடையீர் நாட்பட்டு வந்து பிறந்தேன் இறக்க நமன்தமர்தம் கோட்பட்டு நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே. | 4.96.5 | 928 | கண்டியிற் பட்ட கழுத்துடை யீர்கரி காட்டிலிட்ட பண்டியிற் பட்ட பரிகலத் தீர்பதி வீழிகொண்டீர் உண்டியிற் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மையைவர் கொண்டியிற் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே. | 4.96.6 | 929 | தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண் டீர்தூய வெள்ளெருதொன் றேற்றங்கொண் டீரெழில் வீழி மிழலை இருக்கைகொண்டீர் சீற்றங்கொண் டென்மேல் சிவந்ததோர் பாசத்தால் வீசியவெங் கூற்றங்கண் டும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே. | 4.96.7 | 930 | சுழிப்பட்ட கங்கையுந் திங்களுஞ் சூடிச்சொக் கம்பயின்றீர் பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடை யீர்படர் தீப்பருக விழிப்பட்ட காமனை வீட்டீர் மிழலையுள் ளீர்பிறவிச் சுழிப்பட்டு நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே. | 4.96.8 | 931 | பிள்ளையிற் பட்ட பிறைமுடி யீர்மறை யோதவல்லீர் வெள்ளையிற் பட்டதோர் நீற்றீர் விரிநீர் மிழலையுள்ளீர் நள்ளையிற் பட்டைவர் நக்கரைப் பிக்க நமன்தமர்தங் கொள்ளையிற் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே. | 4.96.9 | 932 | கறுக்கொண் டரக்கன் கயிலையைப் பற்றிய கையுமெய்யும் நெறுக்கென் றிறச்செற்ற சேவடி யாற்கூற்றை நீறுசெய்தீர் வெறிக்கொன்றை மாலை முடியீர் விரிநீர் மிழலையுள்ளீர் இறக்கின்று நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே. | 4.96.10 |
933 | கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன் பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடின் மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழங் குந்தழற்கைத் தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. | 4.97.1 | ||||||||||||||||||||||||
934 | காய்ந்தாய் அனங்கன் உடலம் பொடிபடக் காலனைமுன் பாய்ந்தாய் உயிர்செகப் பாதம் பணிவார்தம் பல்பிறவி ஆய்ந்தாய்ந் தறுப்பாய் அடியேற் கருளாயுன் அன்பர்சிந்தை சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. | 4.97.2 | 935 | பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப மத்தார் தயிர்போல் மறுகுமென் சிந்தை மறுக்கொழிவி அத்தா அடியேன் அடைக்கலங் கண்டாய் அமரர்கள்தஞ் சித்தா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. | 4.97.3 | 936 | நில்லாக் குரம்பை நிலையாக் கருதியிந் நீணிலத்தொன் றல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு வேனைவந் தாண்டுகொண்டாய் வில்லேர் புருவத் துமையாள் கணவா விடிற்கெடுவேன் செல்வா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. | 4.97.4 | 937 | கருவுற் றிருந்துன் கழலே நினைந்தேன் கருப்புவியிற் தெருவிற் புகுந்தேன் திகைத்தடி யேனைத் திகைப்பொழிவி உருவிற் றிகழும் உமையாள் கணவா விடிற்கெடுவேன் திருவிற் பொலிசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. | 4.97.5 | 938 | வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன்முன் இம்மையுன் தாளென்றன் நெஞ்சத் தெழுதிவை ஈங்கிகழில் அம்மை அடியேற் கருளுதி யென்பதிங் காரறிவார் செம்மை தருசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. | 4.97.6 | 939 | விட்டார் புரங்கள் ஒருநொடி வேவவோர் வெங்கணையாற் சுட்டாயென் பாசத் தொடர்பறுத் தாண்டுகொள் தும்பிபம்பும் மட்டார் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்தருளுஞ் சிட்டா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. | 4.97.7 | 940 | இகழ்ந்தவன் வேள்வி அழித்திட் டிமையோர் பொறையிரப்ப நிகழ்ந்திட அன்றே விசயமுங் கொண்டது நீலகண்டா புகழ்ந்த அடியேன்றன் புன்மைகள் தீரப் புரிந்துநல்காய் திகழ்ந்த திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. | 4.97.8 | 941 | தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந் துன்றன் சரண்புகுந்தேன் எக்காதல் எப்பயன் உன்றிற மல்லால் எனக்குளதே மிக்கார் திலையுள் விருப்பா மிகவட மேருவென்னுந் திக்கா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. | 4.97.9 | 942 | பொறித்தேர் அரக்கன் பொருப்பெடுப் புற்றவன் பொன்முடிதோள் இறத்தாள் ஒருவிரல் ஊன்றிட் டலற இரங்கிஒள்வாள் குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய் குற்றக் கொடுவினைநோய் செறுத்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. | 4.97.10 |
943 | அட்டுமின் இல்பலி யென்றென் றகங்கடை தோறும்வந்து மட்டவி ழுங்குழ லார்வளை கொள்ளும் வகையென்கொலோ கொட்டிய பாணி யெடுத்திட்ட பாதமுங் கோளரவும் நட்டநின் றாடிய நாதர்நல் லூரிடங் கொண்டவரே. | 4.98.1 | |||||||||||||||||||||||||||
944 | பெண்ணிட்டம் பண்டைய தன்றிவை பெய்பலிக் கென்றுழல்வார் நண்ணிட்டு வந்து மனைபுகுந் தாரும்நல் லூரகத்தே பண்ணிட்ட பாடலர் ஆடல ராய்ப்பற்றி நோக்கிநின்று கண்ணிட்டுப் போயிற்றுக் காரண முண்டு கறைக்கண்டரே. | 4.98.2 | 945 | படவேர் அரவல்ன்ற் பாவைநல் லீர்பக லேயொருவர் இடுவார் இடைப்பலி கொள்பவர் போலவந் தில்புகுந்து நடவார் அடிகள் நடம்பயின் றாடிய கூத்தர்கொலோ வடபாற் கயிலையுந் தென்பால்நல் லூருந்தம் வாழ்பதியே. | 4.98.3 | 946 | செஞ்சுடர்ச் சோதிப் பவளத் திரள்திகழ் முத்தனைய நஞ்சணி கண்டன்நல் லூருறை நம்பனை நானொருகாற் துஞ்சிடைக் கண்டு கனவின் றலைத்தொழு தேற்கவன்றான் நெஞ்சிடை நின்றக லான்பல காலமும் நின்றனனே. | 4.98.4 | 947 | வெண்மதி சூடி விளங்கநின் றானைவிண் ணோர்கள்தொழ நண்ணில யத்தொடு பாட லறாதநல் லூரகத்தே திண்ணிலை யங்கொடு நின்றான் திரிபுர மூன்றெரித்தான் கண்ணுளும் நெஞ்சத் தகத்தும் உளகழற் சேவடியே. | 4.98.5 | 948 | தேற்றப் படத்திரு நல்லூ ரகத்தே சிவனிருந்தாற் தோற்றப் படச்சென்று கண்டுகொள் ளார்தொண்டர் துன்மதியால் ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய ஆதரைப்போற் காற்றிற் கெடுத்துல கெல்லாந் திரிதர்வர் காண்பதற்கே. | 4.98.6 | 949 | நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ் சூழ்ந்த நல்லூரகத்தே கீட்கொண்ட கோவணங் காவென்று சொல்லிக் கிறிபடத்தான் வாட்கொண்ட நோக்கி மனைவியொ டுமங்கோர் வாணிகனை ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் றோவிவ் வகலிடமே. | 4.98.7 | 950 | அறைமல்கு பைங்கழ லார்ப்பநின் றானணி யார்சடைமேல் நறைமல்கு கொன்றையந் தாருடை யானும்நல் லூரகத்தே பறைமல்கு பாடலன் ஆடல னாகிப் பரிசழித்தான் பிறைமல்கு செஞ்சடை தாழநின் றாடிய பிஞ்ஞகனே. | 4.98.8 | 951 | மன்னிய மாமறை யோர்மகிழ்ந் தேத்த மருவியெங்குந் துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடித் தொழுதுநல்லூர்க் கன்னியர் தாமுங் கனவிடை யுன்னிய காதலரை அன்னியர் அற்றவர் அங்கண னேயருள் நல்கென்பரே. | 4.98.9 | 952 | திருவமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொள்நெய்தல் குருவமர் கோங்கங் குராமகிழ் சண்பகங் கொன்றைவன்னி மருவமர் நீள்கொடி மாட மலிமறை யோர்கள்நல்லூர் உருவமர் பாகத் துமையவள் பாகனை உள்குதுமே. | 4.98.10 | 953 | செல்லேர் கொடியன் சிவன்பெருங் கோயில் சிவபுரமும் வல்லேன் புகவும் மதில்சூழ் இலங்கையர் காவலனைக் கல்லார் முடியொடு தோளிறச் செற்ற கழலடியான் நல்லூ ரிருந்த பிரான்அல்ல னோநம்மை ஆள்பவனே. | 4.98.11 |
954 | அந்திவட் டத்திங்கட் கண்ணியன் ஐயா றமர்ந்துவந்தென் புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ சிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த நந்திவட் டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே. | 4.99.1 |
955 | பாடகக் கால்கழற் கால்பரி திக்கதி ருக்கவந்தி நாடகக் கால்நங்கை முன்செங்கண் ஏனத்தின் பின்னடந்த காடகக் கால்கணங் கைதொழுங் காலெங்க ணாய்நின்றகால் ஆடகக் காலரி மான்றேர் வலவன்ஐ யாற்றனவே. | 4.99.2 |
956 | ஓதுவித் தாய்முன் அறவுரை காட்டி அமணரொடே காதுவித் தாய்கட்ட நோய்பிணி தீர்த்தாய் கலந்தருளிப் போதுவித் தாய்நின் பணிபிழைக் கிற்புளி யம்வளாரால் மோதுவிப் பாய்உகப் பாய்முனி வாய்கச்சி யேகம்பனே. | 4.100.1 | ||||||||||||||||||||||||
957 | எத்தைக்கொண் டெத்தகை ஏழை அமணொ டிசைவித்தெனைக் கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்தென்னைக் கோகுசெய்தாய் முத்தின் திரளும் பளிங்கினிற் சோதியும் மொய்பவளத் தொத்தினை யேய்க்கும் படியாய் பொழிற்கச்சி யேகம்பனே. | 4.100.2 | 958 | மெய்யம்பு கோத்த விசயனோ டன்றொரு வேடுவனாய்ப் பொய்யம்பெய் தாவ மருளிச்செய் தாய்புர மூன்றெரியக் கையம்பெய் தாய்நுன் கழலடி போற்றாக் கயவர்நெஞ்சிற் குய்யம்பெய் தாய்கொடி மாமதில் சூழ்கச்சி யேகம்பனே. | 4.100.3 | 959 | குறிக்கொண் டிருந்துசெந் தாமரை ஆயிரம் வைகல்வைகல் நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறையழிப்பான் கறைக்கண்ட நீயொரு பூக்குறை வித்துக்கண் சூல்விப்பதே பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங் காஞ்சியெம் பிஞ்ஞகனே. | 4.100.4 | 960 | உரைக்குங் கழிந்திங் குணர்வரி யான்உள்கு வார்வினையைக் கரைக்கு மெனக்கை தொழுவதல் லாற்கதி ரோர்களெல்லாம் விரைக்கொண் மலரவன் மால்எண் வசுக்கள்ஏ காதசர்கள் இரைக்கும் அமிர்தர்க் கறியவொண் ணானெங்கள் ஏகம்பனே. | 4.100.5 | 961 | கருவுற்ற நாள்முத லாகவுன் பாதமே காண்பதற்கு உருகிற்றென் னுள்ளமும் நானுங் கிடந்தலந் தெய்த்தொழிந்தேன் திருவொற்றி யூரா திருவால வாயா திருவாரூரா ஒருபற் றிலாமையுங் கண்டிரங் காய்கச்சி யேகம்பனே. | 4.100.6 | 962 | அரிஅயன் இந்திரன் சந்திரா தித்தர் அமரரெல்லாம் உரியநின் கொற்றக் கடைத்தலை யார்உணங் காக்கிடந்தார் புரிதரு புன்சடைப் போக முனிவர் புலம்புகின்றார் எரிதரு செஞ்சடை ஏகம்ப என்னோ திருக்குறிப்பே. | 4.100.7 | 963 | பாம்பரைச் சேர்த்திப் படருஞ் சடைமுடிப் பால்வண்ணனே கூம்பலைச் செய்த கரதலத் தன்பர்கள் கூடிப்பன்னாள் சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் றாள்சரணென் றேம்பலிப் பார்கட் கிரங்குகண் டாய்கச்சி யேகம்பனே. | 4.100.8 | 964 | ஏன்றுகொண் டாயென்னை எம்பெரு மானினி யல்லமென்னிற் சான்றுகண் டாய்இவ் வுலகமெல் லாந்தனி யேனென்றென்னை ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத் தாய்பின்னை ஒற்றியெல்லாஞ் சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப மேய சுடர்வண்ணனே. | 4.100.9 | 965 | உந்திநின் றாருன்றன் ஓலக்கச் சூளைகள் வாய்தல்பற்றித் துன்றிநின் றார்தொல்லை வானவ ரீட்டம் பணியறிவான் வந்துநின் றாரய னுந்திரு மாலும் மதிற்கச்சியாய் இந்தநின் றோமினி எங்ஙன மோவந் திறைஞ்சுவதே. | 4.100.10 |
966 | மன்னு மலைமகள் கையால் வருடின மாமறைகள் சொன்ன துறைதொறுந் தூப்பொரு ளாயின தூக்கமலத் தன்ன வடிவின அன்புடைத் தொண்டர்க் கமுதருத்தி இன்னல் களைவன இன்னம்ப ரான்றன் இணையடியே. | 4.101.1 | ||||||||||||||||||||||||
967 | பைதற் பிணக்குழைக் காளிவெங் கோபம்பங் கப்படுப்பான் செய்தற் கரிய திருநடஞ் செய்தன சீர்மறையோன் உய்தற் பொருட்டுவெங் கூற்றை யுதைத்தன உம்பர்க்கெல்லாம் எய்தற் கரியன இன்னம்ப ரான்றன் இணையடியே. | 4.101.2 | 968 | சுணங்குநின் றார்கொங்கை யாள்உமை சூடின தூமலரால் வணங்கிநின் றும்பர்கள் வாழ்த்தின மன்னு மறைகள்தம்மிற் பிணங்கிநின் றின்னன வென்றறி யாதன பேய்க்கணத்தோ டிணங்கிநின் றாடின இன்னம்ப ரான்றன் இணையடியே. | 4.101.3 | 969 | ஆறொன் றியசம யங்களின் அவ்வவர்க் கப்பொருள்கள் வேறொன் றிலாதன விண்ணோர் மதிப்பன மிக்குவமன் மாறொன் றிலாதன மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும் ஈறொன் றிலாதன இன்னம்ப ரான்றன் இணையடியே. | 4.101.4 | 970 | அரக்கர்தம் முப்புரம் அம்பொன்றி னாலட லங்கியின்வாய்க் கரக்கமுன் வைதிகத் தேர்மிசை நின்றன கட்டுருவம் பரக்கவெங் கானிடை வேடுரு வாயின பல்பதிதோ றிரக்க நடந்தன இன்னம்ப ரான்றன் இணையடியே. | 4.101.5 | 971 | கீண்டுங் கிளர்ந்தும்பொற் கேழல்முன் தேடின கேடுபடா ஆண்டும் பலபல வூழியு மாயின ஆரணத்தின் வேண்டும் பொருள்கள் விளங்கநின் றாடின மேவுசிலம் பீண்டும் கழலின இன்னம்ப ரான்றன் இணையடியே. | 4.101.6 | 972 | போற்றுந் தகையன பொல்லா முயலகன் கோபப்புன்மை ஆற்றுந் தகையன ஆறு சமயத் தவரவரைத் தேற்றுந் தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே ஏற்றுந் தகையன இன்னம்ப ரான்றன் இணையடியே. | 4.101.7 | 973 | பயம்புன்மை சேர்தரு பாவந் தவிர்ப்பன பார்ப்பதிதன் குயம்பொன்மை மாமல ராகக் குலாவின கூடவொண்ணாச் சயம்புவென் றேதகு தாணுவென் றேசதுர் வேதங்கள்நின் றியம்புங் கழலின இன்னம்ப ரான்றன் இணையடியே. | 4.101.8 | 974 | அயன்நெடு மால்இந் திரன்சந்தி ராதித்தர் அமரரெல்லாஞ் சயசய என்றுமுப் போதும் பணிவன தண்கடல்சூழ் வியனில முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியன்நகர்க்கும் இயபர மாவன இன்னம்ப ரான்றன் இணையடியே. | 4.101.9 | 975 | தருக்கிய தக்கன்றன் வேள்வி தகர்த்தன தாமரைப்போ துருக்கிய செம்பொன் உவமன் இலாதன வொண்கயிலை நெருக்கிய வாளரக் கன்றலை பத்தும் நெரித்தவன்றன் இருக்கியல் பாயின இன்னம்ப ரான்றன் இணையடியே. | 4.101.10 |
976 | குலம்பலம் பாவரு குண்டர்முன் னேநமக் குண்டுகொலோ அலம்பலம் பாவரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான் சிலம்பலம் பாவரு சேவடி யான்றிரு மூலத்தானம் புலம்பலம் பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே. | 4.102.1 | ||||||||||||||||||||||||
977 | மற்றிட மின்றி மனைதுறந் தல்லுணா வல்லமணர் சொற்றிட மென்று துரிசுபட் டேனுக்கு முண்டுகொலோ விற்றிடம் வாங்கி விசயனோ டன்றொரு வேடுவனாய்ப் புற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே. | 4.102.2 | 978 | ஒருவடி வின்றிநின் றுண்குண்டர் முன்னமக் குண்டுகொலோ செருவடி வெஞ்சிலை யாற்புரம் அட்டவன் சென்றடையாத் திருவுடை யான்றிரு வாரூர்த் திருமூலத் தானன்செங்கட் பொருவிடை யானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே. | 4.102.3 | 979 | மாசினை யேறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரைவிட் டீசனை யேநினைந் தேசறு வேனுக்கும் உண்டுகொலோ தேசனை ஆரூர்த் திருமூலத் தானனைச் சிந்தைசெய்து பூசனைப் பூசரர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே. | 4.102.4 | 980 | அருந்தும் பொழுதுரை யாடா அமணர் திறமகன்று வருந்தி நினைந்தர னேயென்று வாழ்த்துவேற் குண்டுகொலோ திருந்திய மாமதில் ஆரூர்த் திருமூலத் தானனுக்குப் பொருந்துந் தவமுடைத் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே. | 4.102.5 | 981 | வீங்கிய தோள்களுந் தாள்களு மாய்நின்று வெற்றரையே மூங்கைகள் போலுண்ணு மூடர்முன் னேநமக் குண்டுகொலோ தேங்கமழ் சோலைத்தென் னாரூர்த் திருமூலத் தானன்செய்ய பூங்கழ லானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே. | 4.102.6 | 982 | பண்ணிய சாத்திரப் பேய்கள் பறிதலைக் குண்டரைவிட் டெண்ணிற் புகழீசன் றன்னருள் பெற்றேற்கு முண்டுகொலோ திண்ணிய மாமதில் ஆரூர்த் திருமூலத் தானனெங்கள் புண்ணியன் றன்னடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே. | 4.102.7 | 983 | கரப்பர்கள் மெய்யைத் தலைபறிக் கச்சுகம் என்னுங்குண்டர் உரைப்பன கேளாதிங் குய்யப்போந் தேனுக்கும் உண்டுகொலோ திருப்பொலி ஆரூர்த் திருமூலத் தானன் திருக்கயிலைப் பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே. | 4.102.8 | 984 | கையி லிடுசோறு நின்றுண்ணுங் காதல் அமணரைவிட் டுய்யும் நெறிகண் டிங்குய்யப் போந்தேனுக்கு முண்டுகொலோ ஐயன் அணிவயல் ஆரூர்த் திருமூலத் தானனுக்குப் பொய்யன் பிலாவடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே. | 4.102.9 | 985 | குற்ற முடைய அமணர் திறமது கையகன்றிட் டுற்ற கருமஞ்செய் துய்யப்போந் தேனுக்கும் உண்டுகொலோ மற்பொலி தோளான் இராவணன் றன்வலி வாட்டுவித்த பொற்கழ லானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே. | 4.102.10 |
986 | வேம்பினைப் பேசி விடக்கினை யோம்பி வினைபெருக்கித் தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந் துணையென் றிருத்திர்தொண்டீர் ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடிநிழற்கீழ்ச் சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட் டுய்ம்மின்களே. | 4.103.1 | ||||||||||||||||||
987 | ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப் பாரூர் பரிப்பத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தா னாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி நீரால் திருவிளக் கிட்டமை நீணா டறியுமன்றே. | 4.103.2 | 988 | பூம்படி மக்கலம் பொற்படி மக்கலம் என்றிவற்றால் ஆம்படி மக்கல மாகிலும் ஆரூர் இனிதமர்ந்தார் தாம்படி மக்கலம் வேண்டுவ ரேல்தமிழ் மாலைகளால் நாம்படி மக்கலஞ் செய்து தொழுதுய் மடநெஞ்சமே. | 4.103.3 | 989 | துடிக்கின்ற பாம்பரை ஆர்த்துத் துளங்கா மதியணிந்து முடித்தொண்ட ராகி முனிவர் பணிசெய்வ தேயுமன்றிப் பொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர் பாதம் பொறுத்தபொற்பால் அடித்தொண்டன் நந்தியென் பானுளன் ஆரூர் அமுதினுக்கே. | 4.103.4 | 990 | கரும்பு பிடித்தவர் காயப்பட் டாரங்கோர் கோடலியால் இரும்பு பிடித்தவர் இன்புறப் பட்டார் இவர்கள்நிற்க அரும்பவிழ் தண்பொழில் சூழணி ஆரூர் அமர்ந்தபெம்மான் விரும்பு மனத்தினை யாதொன்று நானுன்னை வேண்டுவனே. | 4.103.5 | 991 | கொடிகொள் விதானங் கவரி பறைசங்கங் கைவிளக்கோ டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர் எய்தியும் ஊனமில்லா அடிகளும் ஆரூர் அகத்தின ராயினும் அந்தவளப் பொடிகொண் டணிவார்க் கிருளொக்கு நந்தி புறப்படிலே. | 4.103.6 | இப்பதிகத்தில் 7,8,9-ம்செய்யுட்கள் சிதைந்து போயின. | 4.103.7-8 | 992 | சங்கொலிப் பித்திடு மின்சிறு காலைத் தடவழலில் குங்கிலி யப்புகைக் கூட்டென்றுங் காட்டி இருபதுதோள் அங்குலம் வைத்தவன் செங்குரு திப்புன லோடஅஞ்ஞான் றங்குலி வைத்தான் அடித்தா மரையென்னை ஆண்டனவே. | 4.103.10 |
993 | வடிவுடை மாமலை மங்கைபங் காகங்கை வார்சடையாய் கடிகமழ் சோலை சுலவு கடல்நாகைக் காரோணனே பிடிமத வாரணம் பேணுந் துரகநிற் கப்பெரிய இடிகுரல் வெள்ளெரு தேறுமி தென்னைகொல் எம்மிறையே. | 4.104.1 | ||||||||||||||||||||||||
994 | கற்றார் பயில்கடல் நாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலே விற்றாங் கியகரம் வேல்நெடுங் கண்ணி வியன்கரமே நற்றாள் நெடுஞ்சிலை நாண்வலித் தகர நின்கரமே செற்றார் புரஞ்செற்ற சேவக மென்னைகொல் செப்புமினே. | 4.104.2 | 995 | தூமென் மலர்க்கணை கோத்துத்தீ வேள்வி தொழிற்படுத்த காமன் பொடிபடக் காய்ந்த கடல்நாகைக் காரோணநின் நாமம் பரவி நமச்சிவா யவென்னும் அஞ்செழுத்துஞ் சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே. | 4.104.3 | 996 | பழிவழி யோடிய பாவிப் பறிதலைக் குண்டர்தங்கள் மொழிவழி யோடி முடிவேன் முடியாமைக் காத்துக்கொண்டாய் கழிவழி யோதம் உலவு கடல்நாகைக் காரோணவென் வழிவழி யாளாகும் வண்ணம் அருளெங்கள் வானவனே. | 4.104.4 | 997 | செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை வெண்ணகைத் தேமொழியார் வந்து வலஞ்செய்து மாநட மாட மலிந்தசெல்வக் கந்த மலிபொழில் சூழ்கடல் நாகைக்கா ரோணமென்றுஞ் சிந்தைசெய் வாரைப் பிரியா திருக்குந் திருமங்கையே. | 4.104.5 | 998 | பனைபுரை கைம்மத யானை யுரித்த பரஞ்சுடரே கனைகடல் சூழ்தரு நாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலே மனைதுறந் தல்லுணா வல்லமண் குண்டர் மயக்கைநீக்கி எனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி யான்செயும் இச்சைகளே. | 4.104.6 | 999 | சீர்மலி செல்வம் பெரிதுடை யசெம்பொன் மாமலையே கார்மலி சோலை சுலவு கடல்நாகைக் காரோணனே வார்மலி மென்முலை யார்பலி வந்திடச் சென்றிரந்து ஊர்மலி பிச்சைகொண் டுண்பது மாதிமை யோவுரையே. | 4.104.7 | 1000 | வங்கம் மலிகடல் நாகைக்கா ரோணத்தெம் வானவனே எங்கள் பெருமானோர் விண்ணப்பம் உண்டது கேட்டருளீர் கங்கை சடையுட் கரந்தாயக் கள்ளத்தை மெள்ளவுமை நங்கை அறியிற்பொல் லாதுகண்டா யெங்கள் நாயகனே. | 4.104.8 | இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று. | 4.104.9 | 1001 | கருந்தடங் கண்ணியுந் தானுங் கடல்நாகைக் காரோணத்தான் இருந்த திருமலை யென்றிறைஞ் சாதன் றெடுக்கலுற்றான் பெருந்தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்தலற இருந்தரு ளிச்செய்த தேமற்றுச் செய்திலன் எம்மிறையே. | 4.104.10 |
1002 | மாசிலொள் வாள்போல் மறியும் மணிநீர்த் திரைத்தொகுதி ஊசலை யாடியங் கொண்சிறை அன்னம் உறங்கலுற்றால் பாசறை நீலம் பருகிய வண்டுபண் பாடல்கண்டு வீசுங் கெடில வடகரைத் தேயெந்தை வீரட்டமே. | 4.105.1 | ||||||||||||||||||
1003 | பைங்காற் றவளை பறைகொட்டப் பாசிலை நீர்ப்படுகர் அங்காற் குவளைமேல் ஆவி உயிர்ப்ப அருகுலவுஞ் செங்காற் குருகிவை சேருஞ் செறிகெடி லக்கரைத்தே வெங்காற் குருசிலை வீரன் அருள்வைத்த வீரட்டமே. | 4.105.2 | 1004 | அம்மலர்க் கண்ணியர் அஞ்சனஞ் செந்துவர் வாயிளையார் வெம்முலைச் சாந்தம் விலைபெறு மாலை யெடுத்தவர்கள் தம்மருங் கிற்கிரங் கார்தடந் தோள்மெலி யக்குடைவார் விம்மு புனற்கெடி லக்கரைத் தேயெந்தை வீரட்டமே. | 4.105.3 | 1005 | மீனுடைத் தண்புனல் வீரட்ட ரேநும்மை வேண்டுகின்ற தியானுடைச் சில்குறை ஒன்றுள தால்நறுந் தண்ணெருக்கின் தேனுடைக் கொன்றைச் சடையுடைக் கங்கைத் திரைதவழுங் கூனுடைத் திங்கட் குழவியெப் போதுங் குறிக்கொண்மினே. | 4.105.4 | 1006 | ஆரட்ட தேனும் இரந்துண் டகமக வன்றிரிந்து வேரட்ட நிற்பித் திடுகின்ற தால்விரி நீர்ப்பரவைச் சூரட்ட வேலவன் தாதையைச் சூழ்வய லாரதிகை வீரட்டத் தானை விரும்பா வரும்பாவ வேதனையே. | 4.105.5 | 1007 | படர்பொற் சடையும் பகுவாய் அரவும் பனிமதியுஞ் சுடலைப் பொடியு மெல்லா முளவேயவர் தூயதெண்ணீர்க் கெடிலக் கரைத்திரு வீரட்ட ராவர்கெட் டேனடைந்தார் நடலைக்கு நற்றுணை யாகுங்கண் டீரவர் நாமங்களே. | 4.105.6 | 1008 | காளங் கடந்ததோர் கண்டத்த ராகிக் கண்ணார்கெடில நாளங் கடிக்கோர் நகரமு மாதிற்கு நன்கிசைந்த தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு மியாழ்கொண்டுந் தாமங்ஙனே வேடங்கள் கொண்டும் விசும்புசெல் வாரவர் வீரட்டரே. | 4.105.7 | இப்பதிகத்தில் 8,9,10-ம் செய்யுட்கள் மறைந்து போயின. | 4.105.8-10 |
1009 | தன்னைச் சரணென்று தாளடைந் தேன்றன் அடியடையப் புன்னைப் பொழிற்புக லூரண்ணல் செய்வன கேண்மின்களோ என்னைப் பிறப்பறுத் தென்வினை கட்டறுத் தேழ்நரகத் தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத் திருத்திடுமே. | 4.106.1 | ||||||||||||
1010 | பொன்னை வகுத்தன்ன மேனிய னேபுணர் மென்முலையாள் தன்னை வகுத்தன்ன பாகத்தனே தமியேற் கிரங்காய் புன்னை மலர்த்தலை வண்டுறங் கும்புக லூரரசே என்னை வகுத்திலை யேலிடும் பைக்கிடம் யாதுசொல்லே. | 4.106.2 | இப்பதிகத்தில் 3-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. | 4.106.3 | 1011 | பொன்னள வார்சடைக் கொன்றையி னாய்புக லூர்க்கரசே மன்னுள தேவர்கள் தேடு மருந்தே வலஞ்சுழியாய் என்னள வேயுனக் காட்பட் டிடைக்கலத் தேகிடப்பார் உன்னள வேயெனக் கொன்றுமி ரங்காத உத்தமனே. | 4.106.4 | இப்பதிகத்தில் 5,6,7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. | 4.106.5-9 | 1012 | ஓணப் பிரானும் ஒளிர்மா மலர்மிசை உத்தமனுங் காணப் பராவியுங் காண்கின் றிலர்கர நாலைந்துடைத் தோணற் பிரானை வலிதொலைத் தோன்தொல்லை நீர்ப்புகலூர்க் கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே. | 4.106.10 |
1013 | நெய்தற் குருகுதன் பிள்ளையென் றெண்ணி நெருங்கிச்சென்று கைதை மடற்புல்கு தென்கழிப் பாலை யதனுறைவாய் பைதற் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசறியோம் எய்தப் பெறின்இரங் காதுகண் டாய்நம் மிறையவனே. | 4.107.1 | ||||||
1014 | பருமா மணியும் பவளமுத் தும்பரந் துந்திவரை பொருமால் கரைமேற் றிரைகொணர்ந் தெற்றப் பொலிந்திலங்குங் கருமா மிடறுடைக் கண்டனெம் மான்கழிப் பாலையெந்தை பெருமா னவனென்னை யாளுடை யானிப் பெருநிலத்தே. | 4.107.2 | 1015 | நாட்பட் டிருந்தின்பம் எய்தலுற் றிங்கு நமன்தமராற் கோட்பட் டொழிவதன் முந்துற வேகுளி ரார்தடத்துத் தாட்பட்ட தாமரைப் பொய்கையந் தண்கழிப் பாலையண்ணற் காட்பட் டொழிந்தவன் றேவல்ல மாயிவ் வகலிடத்தே. | 4.107.3 | இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின. | 4.107.4-10 |
1016 | மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய் இருட்டிய மேனி வளைவாள் எயிற்றெரி போலுங்குஞ்சிச் சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே உருட்டிய சேவடி யான்கட வூருறை உத்தமனே. | 4.108.1 | ||||||||||||||||||||||||
1017 | பதத்தெழு மந்திரம் அஞ்செழுத் தோதிப் பரிவினொடும் இதத்தெழு மாணிதன் இன்னுயிர் உண்ண வெகுண்டடர்த்த கதத்தெழு காலனைக் கண்குரு திப்புன லாறொழுக உதைத்தெழு சேவடி யான்கட வூருறை உத்தமனே. | 4.108.2 | 1018 | கரப்புறு சிந்தையர் காண்டற் கரியவன் காமனையும் நெருப்புமிழ் கண்ணினன் நீள்புனற் கங்கையும் பொங்கரவும் பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன் காலனைப் பண்டொருகால் உரப்பிய சேவடி யான்கட வூருறை உத்தமனே. | 4.108.3 | 1019 | மறித்திகழ் கையினன் வானவர் கோனை மனமகிழ்ந்து குறித்தெழு மாணிதன் ஆருயிர் கொள்வான் கொதித்தசிந்தைக் கறுத்தெழு மூவிலை வேலுடைக் காலனைத் தானலற உறுக்கிய சேவடி யான்கட வூருறை உத்தமனே. | 4.108.4 | 1020 | குழைத்திகழ் காதினன் வானவர் கோனைக் குளிர்ந்தெழுந்து பழக்கமோ டர்ச்சித்த மாணிதன் ஆருயிர் கொள்ளவந்த தழற்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் தானலற உழக்கிய சேவடி யான்கட வூருறை உத்தமனே. | 4.108.5 | 1021 | பாலனுக் காயன்று பாற்கடல் ஈந்து பணைத்தெழுந்த ஆலினிற் கீழிருந் தாரண மோதி அருமுனிக்காய்ச் சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந் தோடிவந்த காலனைக் காய்ந்த பிரான்கட வூருறை உத்தமனே. | 4.108.6 | 1022 | படர்சடைக் கொன்றையும் பன்னக மாலை பணிகயிறா உடைதலைக் கோத்துழல் மேனியன் உண்பலிக் கென்றுழல்வோன் சுடர்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் துண்டமதா உடறிய சேவடி யான்கட வூருறை உத்தமனே. | 4.108.7 | 1023 | வெண்டலை மாலையுங் கங்கைக் கரோடி விரிசடைமேற் பெண்டனி நாயகன் பேயுகந் தாடும் பெருந்தகையான் கண்டனி நெற்றியன் காலனைக் காய்ந்து கடலின்விடம் உண்டருள் செய்தபி ரான்கட வூருறை உத்தமனே. | 4.108.8 | 1024 | கேழல தாகிக் கிளறிய கேசவன் காண்பரிதாய் வாழிநன் மாமலர்க் கண்ணிடந் திட்டவம் மாலவற்கன் றாழியும் ஈந்து அடுதிறற் காலனை அன்றடர்த்து ஊழியு மாய பிரான்கட வூருறை உத்தமனே. | 4.108.9 | 1025 | தேன்றிகழ் கொன்றையுங் கூவிள மாலை திருமுடிமேல் ஆன்றிகழ் ஐந்துகந் தாடும் பிரான்மலை ஆர்த்தெடுத்த கூன்றிகழ் வாளரக் கன்முடி பத்துங் குலைந்துவிழ ஊன்றிய சேவடி யான்கட வூருறை உத்தமனே. | 4.108.10 |
முதலிரு செய்யுட்கள் சிதைந்து போயின | 4.109.1-2 | |||||||
1026 | மாணிக் குயிர்பெறக் கூற்றை யுதைத்தன மாவலிபால் காணிக் கிரந்தவன் காண்டற் கரியன கண்டதொண்டர் பேணிக் கிடந்து பரவப் படுவன பேர்த்துமஃதே மாணிக்க மாவன மாற்பே றுடையான் மலரடியே. | 4.109.3 | 1027 | கருடத் தனிப்பாகன் காண்டற் கரியன காதல்செய்யிற் குருடர்க்கு முன்னே குடிகொண் டிருப்பன கோலமல்கு செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கம லக்கரத்தால் வருடச் சிவப்பன மாற்பே றுடையான் மலரடியே. | 4.109.4 | இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின. | 4.109.5-10 |
1028 | பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல் துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே. | 4.110.1 | ||||||
1029 | ஆவா சிறுதொண்ட னென்நினைந் தானென் றரும்பிணிநோய் காவா தொழியிற் கலக்குமுன் மேற்பழி காதல்செய்வார் தேவா திருவடி நீறென்னைப் பூசுசெந் தாமரையின் பூவார் கடந்தையுள் தூங்கானை மாடத்தெம் புண்ணியனே. | 4.110.2 | இப்பதிகத்தில் 3,4,5,6,7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. | 4.110.3-9 | 1030 | கடவுந் திகிரி கடவா தொழியக் கயிலையுற்றான் படவுந் திருவிர லொன்றுவைத் தாய்பனி மால்வரைபோல் இடபம் பொறித்தென்னை ஏன்றுகொள் ளாயிருஞ் சோலைதிங்கள் தடவுங் கடந்தையுள் தூங்கானை மாடத்தெந் தத்துவனே. | 4.110.10 |
1031 | சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் றாள்பரவி ஏம்பலிப் பார்கட் கிரங்குகண் டாயிருங் கங்கையென்னுங் காம்பலைக் கும்பணைத் தோளி கதிர்ப்பூண் வனமுலைமேற் பாம்பலைக் குஞ்சடை யாயெம்மை யாளும் பசுபதியே. | 4.111.1 | |||||||||||||||||||||
1032 | உடம்பைத் தொலைவித்துன் பாதந் தலைவைத்த உத்தமர்கள் இடும்பைப் படாமல் இரங்குகண் டாயிரு ளோடச்செந்தீ அடும்பொத் தனைய அழன்மழு வாவழ லேயுமிழும் படம்பொத் தரவரை யாயெம்மை யாளும் பசுபதியே. | 4.111.2 | 1033 | தாரித் திரந்தவி ராவடி யார்தடு மாற்றமென்னும் மூரித் திரைப்பௌவ நீக்குகண் டாய்முன்னை நாளொருகால் வேரித்தண் பூஞ்சுடர் ஐங்கணை வேள்வெந்து வீழச்செந்தீப் பாரித்த கண்ணுடை யாயெம்மை யாளும் பசுபதியே. | 4.111.3 | 1034 | ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன் பாத மிறைஞ்சுகின்றார் அருவினைச் சுற்றம் அகல்விகண் டாயண்ட மேயணவும் பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்துவேய்த் தோளியஞ்சப் பருவரைத் தோலுரித் தாயெம்மை யாளும் பசுபதியே. | 4.111.4 | 1035 | இடுக்கொன்று மின்றியெஞ் சாமையுன் பாத மிறைஞ்சுகின்றார்க் கடர்க்கின்ற நோயை விலக்குகண் டாயண்டம் எண்டிசையுஞ் சுடர்த்திங்கள் சூடிச் சுழற்கங்கை யோடுஞ் சுரும்புதுன்றிப் படர்க்கொண்ட செஞ்சடை யாயெம்மை யாளும் பசுபதியே. | 4.1115 | 1036 | அடலைக் கடல்கழி வான்நின் னடியிணை யேயடைந்தார் நடலைப் படாமை விலக்குகண் டாய்நறுங் கொன்றை திங்கள் சுடலைப் பொடிச்சுண்ண மாசுணஞ் சூளா மணிகிடந்து படரச் சுடர்மகு டாயெம்மை யாளும் பசுபதியே. | 4.111.6 | 1037 | துறவித் தொழிலே புரிந்துன் சுரும்படி யேதொழுவார் மறவித் தொழிலது மாற்றுகண் டாய்மதின் மூன்றுடைய அறவைத் தொழில்புரிந் தந்தரத் தேசெல்லு மந்திரத்தேர்ப் பறவைப் புரமெரித் தாயெம்மை யாளும் பசுபதியே. | 4.111.7 | இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. | 4.111.8-9 | 1038 | சித்தத் துருகிச் சிவனெம் பிரானென்று சிந்தையுள்ளே பித்துப் பெருகப் பிதற்றுகின் றார்பிணி தீர்த்தருளாய் மத்தத் தரக்கன் இருபது தோளு முடியுமெல்லாம் பத்துற் றுறநெரித் தாயெம்மை யாளும் பசுபதியே. | 4.111.10 |
1039 | விடையும் விடைப்பெரும் பாகாவென் விண்ணப்பம் வெம்மழுவாட் படையும் படையாய் நிரைத்தபல் பூதமும் பாய்புலித்தோல் உடையு முடைதலை மாலையும் மாலைப் பிறையொதுங்குஞ் சடையு மிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. | 4.112.1 | |||||||||||||||||||||||||||
1040 | விஞ்சத் தடவரை வெற்பாவென் விண்ணப்பம் மேலிலங்கு சங்கக் கலனுஞ் சரிகோ வணமுந் தமருகமும் அந்திப் பிறையும் அனல்வா யரவும் விரவியெல்லாஞ் சந்தித் திருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. | 4.112.2 | 1041 | வீந்தார் தலைகல னேந்தீயென் விண்ணப்பம் மேலிலங்கு சாந்தாய வெந்த தவளவெண் ணீறுந் தகுணிச்சமும் பூந்தா மரைமேனிப் புள்ளி யுழைமா னதள்புலித்தோல் தாந்தா மிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. | 4.112.3 | 1042 | வெஞ்சமர் வேழத் துரியாயென் விண்ணப்பம் மேலிலங்கு வஞ்சமா வந்த வருபுனற் கங்கையும் வான்மதியும் நஞ்சமா நாகம் நகுசிர மாலை நகுவெண்டலை தஞ்சமா வாழுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. | 4.112.4 | 1043 | வேலைக் கடல்நஞ்ச முண்டாயென் விண்ணப்பம் மேலிலங்கு காலற் கடந்தா னிடங்கயி லாயமுங் காமர்கொன்றை மாலைப் பிறையும் மணிவா யரவும் விரவியெல்லாஞ் சாலக் கிடக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. | 4.112.5 | 1044 | வீழிட்ட கொன்றையந் தாராயென் விண்ணப்பம் மேலிலங்கு சூழிட் டிருக்குநற் சூளா மணியுஞ் சுடலைநீறும் ஏழிட் டிருக்குநல் லக்கு மரவுமென் பாமையோடுந் தாழிட் டிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. | 4.112.6 | 1045 | விண்டார் புரமூன்று மெய்தாயென் விண்ணப்பம் மேலிலங்கு தொண்டா டியதொண் டடிப்பொடி நீறுந் தொழுதுபாதங் கண்டார்கள் கண்டிருக் குங்கயி லாயமுங் காமர்கொன்றைத் தண்டார் இருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. | 4.112.7 | 1046 | விடுபட்டி ஏறுகந் தேறீயென் விண்ணப்பம் மேலிலங்கு கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல்தாளம் வீணைமொந்தை வடுவிட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவுந் தடுகுட்ட மாடுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. | 4.112.8 | 1047 | வெண்டிரைக் கங்கை விகிர்தாவென் விண்ணப்பம் மேலிலங்கு கண்டிகை பூண்டு கடிசூத் திரமேற் கபாலவடங் குண்டிகை கொக்கரை கோணற் பிறைகுறட் பூதப்படை தண்டிவைத் திட்ட சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. | 4.112.9 | 1048 | வேதித்த வெம்மழு வாளீயென் விண்ணப்பம் மேலிலங்கு சோதித் திருக்குநற் சூளா மணியுஞ் சுடலைநீறும் பாதிப் பிறையும் படுதலைத் துண்டமும் பாய்புலித்தோல் சாதித் திருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. | 4.112.10 | 1049 | விவந்தா டியகழல் எந்தாயென் விண்ணப்பம் மேலிலங்கு தவந்தா னெடுக்கத் தலைபத் திறுத்தனை தாழ்புலித்தோல் சிவந்தா டியபொடி நீறுஞ் சிரமாலை சூடிநின்று தவந்தா னிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. | 4.112.11 |
1050 | வெள்ளிக் குழைத்துணி போலுங் கபாலத்தன் வீழ்ந்திலங்கு வெள்ளிப் புரியன்ன வெண்புரி நூலன் விரிசடைமேல் வெள்ளித் தகடன்ன வெண்பிறை சூடிவெள் ளென்பணிந்து வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம் பூசிய வேதியனே. | 4.113.1 | ||||||||||||||||||||||||
1051 | உடலைத் துறந்துல கேழுங் கடந்துல வாததுன்பக் கடலைக் கடந்துய்யப் போயிட லாகுங் கனகவண்ணப் படலைச் சடைப்பர வைத்திரைக் கங்கை பனிப்பிறைவெண் சுடலைப் பொடிக்கட வுட்கடி மைக்கண் துணிநெஞ்சமே. | 4.113.2 | 1052 | முன்னே யுரைத்தால் முகமனே யொக்குமிம் மூவுலகுக் கன்னையும் அத்தனு மாவா யழல்வணா நீயலையோ உன்னை நினைந்தே கழியுமென் னாவி கழிந்ததற்பின் என்னை மறக்கப் பெறாயெம் பிரானுன்னை வேண்டியதே. | 4.113.3 | 1053 | நின்னையெப் போது நினையலொட் டாய்நீ நினையப்புகிற் பின்னையப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி உன்னையெப் போதும் மறந்திட் டுனக்கினி தாயிருக்கும் என்னையொப் பாருள ரோசொல்லு வாழி இறையவனே. | 4.113.4 | 1054 | முழுத்தழல் மேனித் தவளப் பொடியன் கனகக்குன்றத் தெழிற்பெருஞ் சோதியை எங்கள் பிரானை யிகழ்ந்திர்கண்டீர் தொழப்படுந் தேவர் தொழப்படு வானைத் தொழுதபின்னை தொழப்படுந் தேவர்தம் மால்தொழு விக்குந்தன் தொண்டரையே. | 4.113.5 | 1055 | விண்ணகத் தான்மிக்க வேதத் துளான்விரி நீருடுத்த மண்ணகத் தான்திரு மாலகத் தான்மரு வற்கினிய பண்ணகத் தான்பத்தர் சித்தத் துளான்பழ நாயடியேன் கண்ணகத் தான்மனத் தான்சென்னி யானெங் கறைக்கண்டனே. | 4.113.6 | 1056 | பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய் இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமுங் கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு கங்காளராய் வருங்கடல் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே. | 4.113.7 | 1057 | வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையுந் தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும் மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண் டூனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே. | 4.113.8 | 1058 | சிவனெனும் நாமந் தனக்கே யுடையசெம் மேனியெம்மான் அவனெனை ஆட்கொண் டளித்திடு மாகில் அவன்றனையான் பவனெனு நாமம் பிடித்துத் திரிந்துபன் னாளழைத்தால் இவனெனைப் பன்னாள் அழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே. | 4.113.9 | 1059 | என்னையொப் பாருன்னை எங்ஙனம் காண்பர் இகலியுன்னை நின்னையொப் பார்நின்னைக் காணும் படித்தன்று நின்பெருமை பொன்னையொப் பாரித் தழலை வளாவிச்செம் மானஞ்செற்று மின்னையொப் பார மிளிருஞ் சடைக்கற்றை வேதியனே. | 4.113.10 |
4.114 தனி - திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
1060 | பவளத் தடவரை போலுந்திண் டோ ள்களத் தோள்மிசையே பல்சடை அச்சடைமேற் நாகமந் நாகத்தொடும் சூடும் பனிமலரே. | 4.114.1 | |||||||||||||||||||||||||||
1061 | முருகார் நறுமலர் இண்டை தழுவிவண் டேமுரலும் னாய்பிணி மேய்ந்திருந்த னுடைய திதுபிரிந்தாற் கீழோர் தலைமறைவே. | 4.114.2 | 1062 | மூவா உருவத்து முக்கண் முதல்வமீக் கூரிடும்பை மணியைக்கை யாலமரர் மாறிய தில்லையப்பாற் கழிந்த திரிபுரமே. | 4.114.3 | 1063 | பந்தித்த பாவங்கள் அம்மையிற் செய்தன இம்மைவந்து னேவந் தமரர்முன்னாள் முடிதாழ்த் தடிவணங்கும் லாவிட்ட நன்னெஞ்சமே. | 4.114.4 | 1064 | அந்திவட் டத்திளங் கண்ணிய னாறமர் செஞ்சடையான் றானையும் பொய்யென்பனோ யலம்பச் சிறிதலர்ந்த வளாவிய நம்பனையே. | 4.114.5 | 1065 | உன்மத் தகமலர் சூடி உலகந் தொழச்சுடலைப் தோறும் பலிதிரிவான் பகலும் பிரிவரியான் சூடிய சங்கரனே. | 4.114.6 | 1066 | அரைப்பா லுடுப்பன கோவணச் சின்னங்கள் ஐயமுணல் வாழ்க்கைக்கு வானிரைக்கும் யாமறை தேடுமெந்தாய் யாலெங்கள் உத்தமனே. | 4.114.7 | 1067 | துறக்கப் படாத உடலைத் துறந்துவெந் தூதுவரோ பேறுவன் ஏறிவந்து வார்சடைப் பிஞ்ஞகன்பேர் கிடந்து மறுகிடுமே. | 4.114.8 | 1068 | வேரி வளாய விரைமலர்க் கொன்றை புனைந்தனகன் புகுந்தான் திருமுடிமேல் கங்கை சடைமறிவாய் போலும் இளம்பிறையே. | 4.114.9 | 1069 | கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கடல் நீர்சுருங்கிப் மறுக்கினும் பஞ்சமுண்டென் சேயிமை யாதமுக்கண் டீரிப் புகலிடத்தே. | 4.114.10 | 1070 | மேலு மறிந்திலன் நான்முகன் மேற்சென்று கீழிடந்து தேவழி பாடுசெய்யும் விசிறி மறிந்தசிந்தைக் கரியான் கழலடியே. | 4.114.11 |
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
நான்காம் திருமுறை முற்றும்.