Arumuga Navalar 1822 - 1879 Pioneer of Tamil Prose & Champion of Hinduism M.K.Eelaventhan, 1996 "...117 years have rolled by after the passing away of Arumuga Navalar but his memory is still cherished by all the Tamils throughout the world and especially by the Eelam Tamils. The Tamils are eternally indebted to Navalar, and posterity will remember him with gratitude..."
From time immemorial, Tamil Nadu and Tamil Eelam have contributed their share to the enrichment of Tamil language, culture and way of life. Eelaththu Pootham Devanar from Sangam age and other eminent poets, writers and intellectuals like Nallur Arasa-kesari, Sababathy Navalar, Sankara Pandithar, Pulolyoor Kathiravetpillai, C.W.Thamotharampillai, Chunnakam Kumarasamy Pulavar, Navaliyoor Somasundera Pulavar, Nallur Gnanapragasar, Vipulanantha Adigal of Batticaloa, Kanagasunderam of Trincomalee, Pandithamani Kanapathipillai, and Father Thaninayagam have in their own way enriched the Tamil language and literature. It can be safely said that Tamil Eelam has contributed substantially towards the promotion of Tamil language, literature, architecture, science, technology and cultural growth of Tamils. The early part of the 19th century was a dark period for Eelam Tamils. Under alien British rule, there was the danger of the Tamils losing their language, culture, their way of life and their religious beliefs. During this crucial period, Arumuga Navalar, the champion of Saivaism(Hinduism) and the pioneer of Tamil prose appeared on the scene. The Christian missionaries were converting Tamils to Christianity by providing education, employment and concessions. There was a real danger of the preponderant majority of the Tamils succumbing to these inducements and attractions, and eventually, losing their Tamil and Saiva identity. It was left to Arumuga Navalar to awaken the consciousness of the Tamils and to make them aware of this drift. In this context it must be emphasised that though Arumuga Navalar fought against the conversion of the Tamils to Christianity, he was not a religious fanatic. He was a good friend of Rev. Percival who was a Wesleyan missionary teacher at Jaffna Central College. When Rev. Percival requested Navalar to translate the Bible into Tamil, Navalar happily undertook the task. Even the Tamil scholars of Madras of the 19th century acclaimed his effort as the best translation. This aspect of his life revealed not only his command of English and Tamil but also proclaimed to the world his broad thinking and religious tolerance.
Arumuga Navalar was born in Nallur, the once glorious capital of Tamil Eelam, in December 1822, and passed away at the age of 56 on December 5th, 1879. His father Kandhar and mother Sivekamy were deeply religious and devout and Navalar imbibed those qualities. Even as a teenager he mastered Tamil, Sanskrit and English, and made an indepth study of Tamil grammar, language, literature and religious works. It is on record that at a very young age he completed a drama script begun by his father, who passed away without completing it. Scholars who had gone through this work were full of praise for the originality he showed as a playwright. Arumuga Navalar was a profilic writer and a 'silver tongued' orator. He was a pioneer in the field of prose-writing. In the 19th century the Tamil prose style was in its infancy. Navalar appeared on the Tamil literacy firmament and brought out prose works which are cherished by Tamil scholars as outstanding achievements. "Parithima Kalagnar' later described Navalar as 'Vasana Nadai Kaivantha Vallalar' (the best exponent of Tamil prose). Today the writings and pronouncements of public men have little or nothing to do with their private life. But the life of Arumuga Navalar was in total conformity with everything he said and wrote. He maintained a high moral standard in both private and public life. Even his opponents respected him.
In his short life covering 57 years he published around 75 books. They covered his original writings and his commentaries on ancient classics. C.V.Thamotharampillai and later U.V.Swaminatha Iyer followed the footsteps of Navalar in this field of publishing ancient classics. One eminent Tamil scholar Thiru Vi. Ka said "In the field of editing, and publishing old manuscripts Navalar laid the foundation, C.V.Thamotharampillai built the walls and U.V.Swaminatha Iyer beautifully roofed it". Printing was in embryonic stage in the early 19th century. During this difficult period Navalar brought out quality printing to the praise of his readers. This shows clearly his desire for perfection in all his ventures. He was a philanthropist at heart. In a moving letter to his elder brother he quotes Mark Anthony, "I have lost everything except what I have given away". He passed on all he received towards his passionate objectives of education, publication and propaganda for the revival of the lost heritage of the Tamils. Tamil language and Saiva ideals were very clear to his heart. Throughout his career he championed the cause of Hinduism. Sir Muthucumarasamy said of Navalar: "He is the Hindu of Hindus. He is one of those orientalists who can measure sword with even such a giant as my honourable friend the Queen's Advocate Hon. Mr R Cayley in any argument. He has a following which cannot be despised". Sir Ponnambalam Ramanathan said "We have lost the champion reformer of Hindus" at the demise of Navalar in 1879. 117 years have rolled by after the passing away Arumuga Navalar but his memory is still cherished by all the Tamils throughout the world and especially by the Eelam Tamils. The Tamils are eternally indebted to Navalar, and posterity will remember him with gratitude.
ஆறுமுகநாவலரும் சிதம்பரமும்
ச. அம்பிகைபாகன், இந்து ஒளி, Quarterly of All Ceylon Hindu Congress "சிதம்பரம் போகாமல் இருப்பேனோ சென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ"
என்று கோபாலகிருஷ்ண பாரதியார் பாடி இருப்பது, நந்தனாருக்குச் சிதம்பர தரிசனத்தில் இருந்த ஆர்வத்தை மாத்திரமில்லாமல், சைவர்களாயுள்ளோர் எல்லோரினதும் ஆர்வத்தையும் பிரதிபலிக்கிறது.
சைவர்களாய் உள்ளவர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சிதம்பரத்தைத் தரிசிக்காதுவிட்டாற் பிறவிப் பயனை அடையாதவர்களாகத் தம்மைக் கருதுவர். இப்படி இவர்கள் கருதுவதற்குக் காரணம் சிதம்பரத்தின் ஒப்பற்ற மகிமையே. ஆறுமுக நாவலரவர்கள் சிதம்பரத்தின் மகிமையைப் பெரியபுராணம் தில்லைவாழந்தணர் புராணத்துக்கு எழுதிய சூசனத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்.
சிதம்பரத்தின் மகிமை
"சாந்தோக்கிய உபநிடததிலே பிரமபுரத்திலுள்ள நகரமாகிய புண்டரிக வீட்டினுள்ளே இருக்கும் ஆகாச மத்தியில் விளங்கும் அதிசூக்கும சித்தை அறிதல் வேண்டுமென்று தகரவித்தை சொல்லப்பட்டது. இங்கே பிரமபுரமென்றது இச்சரீரத்தையும், புண்டரிக வீடென்பது இருதயகமலத்தையும், ஆகாசமென்றது பராசக்தியையும், அதிசூக்குமசித்தென்றது பரப்பிரம்மமாகிய சிவத்தையும் என்றறிக. புறத்தும் இப்படியே இப்பிரமாண்டம் பிரமபுரமெனவும், இப்பிரமாண்டத்தினுள்ளே இருக்குந் தில்லைவனம் புண்டரிக வீடெனவும், தில்லைவனத்திலிருக்கும் ஆகாசம் பராசக்தியாகிய திருச்சிற்றம்பலம் எனவும், அத்திருச்சிற்றம்பலத்திலே நிருத்தஞ் செய்யும் பரப்பிரம்மசிவம் அதிசூக்குமசித்தெனவும் சொல்லப்படும். இவ்வாகாசம் பூதாகாசம் போற் சடமாகாது சித்தேயாம்; ஆதலால் சிதம்பரமெனப்படும். இச்சிதம்பரம் எந்நாளும் நீக்கமின்றி விளக்குந்தானமாதலால், தில்லைவனமும் சிதம்பரம் எனப் பெயர்பெறும்."
தில்லைவாழ் அந்தணர் பெருமை
மேலே குறிப்பிடப்பட்ட அதே சூசனத்தில் கூத்தப்பெருமானைப் பூசிக்கும் அந்தணர் பெருமையையும் விளக்கியுள்ளார். அதன் சாரம் பின்வருமாறு: ஒருமுறை பிரமா, தாம் புரியும் யாகத்துக்கு உதவிசெய்யும் பொருட்டு வியாக்கிரபாதமுனிவரின் அனுமதியோடு தில்லை மூவாயிரவரைக் கங்கை நதிதீரத்துக்கு அழைத்துச் சென்றார். உரியகாலத்தில் அவர்கள் திரும்பி வராதபடியால், வியாக்கிரபாத முனிவர் இரணியவன்ம சக்கரவர்த்தியை அழைத்துவரும்படி அனுப்பினார். அப்படி அழைத்து வந்து தில்லை மூவாயிரவரை எண்ணியபொழுது ஒருவர் குறைவதைக்கண்டு சக்கரவர்த்தி திகைத்தார். அப்பொழுது சிவபெருமான் தேவர் முதலிய யாவரும் கேட்ப பின்வருமாறு கூறினார். "இவ்விருடிகள் எல்லோரும் எமக்கு ஒப்பாவார்கள். நாமும் இவ்விருடிகளுக்கு ஒப்பாவோம்; ஆதலால் நம்மை இவர்களுள் ஒருவராகக் கைக்கொள்".
மேற்கூறியவாறு சிதம்பரத்தின் மகிமையை உணர்ந்தே நாவலரவர்கள் அதியே கேந்திரமாக வைத்து சைவத்தை வளர்க்க ஒரு மாபெருந் திட்டம் வகுத்தார்.
நாவலர் கல்விப்பணி
சிதம்பரத்திற்குச் செல்லுமுன் நாவலர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணை, கந்தர் மடம், கோப்பாய், பருத்தித்துறை முதலிய இடங்களில் சைவப் பிரகாச வித்தியாசாலைகளைத் தாபித்தார். ஆனால் சிதம்பரத்தில் நாவலர் அவர்கள் ஒரு சாதாரண வித்தியாசாலையைத் தாபிக்கத் திட்டம் போடவில்லை. அவர்கள் போட்ட திட்டம் சைவப்பிரசாரர்களைப் பயிற்றும் ஒரு தாபனத்திற்கே. இத்தாபனம் கத்தோலிக்கரின் செமினறிகளையும் புரட்டஸ்தந்தரின் மதச்சாத்திரக் கல்லூரிகளையும் போன்றதாகும்.
நாவலர் அவர்கள் சிதம்பரத்தில் தாபிக்க இருந்த நிறுவனத்துக்கு ஒரு பதினான்கு அம்சத் திட்டம் போட்டார். இத்திட்டத்துக்கு முன்னுரையாக பின்வருமாறு கூறியுள்ளார். "கிறிஸ்து சமயிகள் பெரும்பாலும் தங்கள் சமயநூலைத் தாங்கள் கற்றும் வெகு திரவியங்களிச் செலவிட்டுப் பாடசாலைகளைத் தாபித்துப் பிறருக்குக் கற்பித்தும், தங்கள் ஆலயங்களிலும் பிற இடங்களிலும் யாவருக்கும் போதித்தும் வருகிறபடியினாலே அவர்கள் சமயம் எத்தேசங்களிலும் வளர்ந்தோங்கி வருகிறது". நாவலரவர்கள் மேற்காட்டப் பெற்றவற்றைக் கூறியதற்குக் காரணம் சைவர்களும் கிறிஸ்தவர்களின் முன் மாதிரியைப் பின்பற்றித் தமது சமயத்தை வளர்க்க வேண்டுமென்பதே. 'தமிழகத்தை ஈழநாட்டுக்கு கடமைப்படுத்திய பேருபகாரி நாவலர்' - சோமசுந்தர பாரதியார் |