"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > நன்னூல் - பவணந்தி முனிவர்
nannul of pavaNanti munivar
நன்னூல் - பவணந்தி முனிவர்
[see also nannUl of pavaNati munivar
நன்னூல் - பவணந்தி முனிவர் without yaapu]
Etext input : Selvi. Selvanayagi L.
Proof-reading: tmt. N.D. Rani & tiru. N.D. LogaSundaram, Chennai, Tamilnadu, India.
Web version: Tiru. N.D. Loga Sundaram, Chennai, Tamilnadu, India.
© Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திருச்சிற்றம்பலம்
சிறப்புப்பாயிரம்
மலர்தலை உலகின் மல்கிருள் அகல
இலகொளி பரப்பி யாவையும் விளக்கும்
பரிதியி னொருதா னாகி முதலீறு
ஒப்பளவு ஆசை முனிவிகந் துயர்ந்த
அற்புத மூர்த்திதன் அலர்தரு தன்மையின்5 மனஇருள் இரிய மாண்பொருள் முழுவதும்
முனிவற அருளிய மூஅறு மொழியுளும்
குணகடல் குமரி குடகம் வேங்கடம்
எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள்
அரும்பொரு ளைந்தையும் யாவரும் உணரத்10 தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார்
இகலற நூறி யிருநில முழுவதும்
தனதெனக் கோலித் தன்மத வாரணம்
திசைதொறும் நிறுவிய திறலுறு தொல்சீர்க்
கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத்15 திருந்திய செங்கோற் சீய கங்கன்
அருங்கலை விநோதன் அமரா பரணன்
மொழிந்தன னாக முன்னோர் நூலின்
வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்
பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள்20 பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி
என்னு நாமத் திருந்தவத் தோனேதிருச்சிற்றம்பலம்
1 பொதுப்பாயிரம்
பாயிரத்தின் பெயர்கள்முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்1
பாயிர வகைபாயிரம் பொதுச்சிறப் பெனஇரு பாற்றே
2
பொதுப்பாயிரம் இன்னதென்பதுநூலே நுவல்வோன் நுவலுந் திறனே
கொள்வோன் கோடற் கூற்றாம் ஐந்தும்
எல்லா நூற்கும் இவைபொதுப் பாயிரம்3
1. நூலினது வரலாறு
நூல் இன்னதென்பதுநூலின் இயல்பே நுவலின் ஒரிரு
பாயிரந் தோற்றி மும்மையின் ஒன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
ஐயிரு குற்றமும் அகற்றியம் மாட்சியோடு
எண்ணான் குத்தியின் ஒத்துப் படலம்
என்னும் உறுப்பினிற் சூத்திரங் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே4
மூவகை நூல்முதல்வழி சார்பென நூல்மூன் றாகும்
5
முதனூல் இன்னதென்பதுஅவற்றுள்
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும்6
வழிநூல் இன்னதென்பதுமுன்னோர் நூலின் முடிபுஒருங் கொத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி
அழியா மரபினது வழிநூ லாகும்7
சார்புநூல் இன்னதென்பதுஇருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித்
திரிபுவே றுடையது புடைநூ லாகும்8
வழிநூலுக்குஞ் சார்புநூலுக்கும் எய்தியதன்மேற் சிறப்புவிதிமுன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும்
பொன்னேபோற் போற்றுவம் என்பதற்கும் - முன்னோரின்
வேறுநூல் செய்துமெனும் மேற்கோளி லென்பதற்குங்
கூறுபழஞ் சூத்திரத்தின் கோள்9
நாற்பொருட் பயன்அறம்பொரு ளின்பம்வீ டடைதல்நூற் பயனே
10
எழுமதம்எழுவகை மதமே உடன்படல் மறுத்தல்
பிறர்தம் மதமேற் கொண்டு களைவே
தாஅன் நாட்டித் தனாது நிறுப்பே
இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே
பிறர்நூற் குற்றங் காட்டல் ஏனைப்
பிறிதொடு படாஅன் தன்மதங் கொளலே11
பத்துக் குற்றம்குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொற் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
சென்றுதேய்ந் திறுதல் நின்றுபய னின்மை
என்றிவை யீரைங் குற்றம் நூற்கே12
பத்தழகுசுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்
ஓசை யுடைமை ஆழமுடைத் தாதல்
முறையின் வைப்பே உலகம்மலை யாமை
விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்தது
ஆகுதல் நூலிற் கழகெனும் பத்தே13
முப்பத்திரண்டு உத்திநுதலின் புகுதல் ஓத்துமுறை வைப்பே
தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்
முடித்துக் காட்டல் முடிவிடங் கூறல்
தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல்
சொற்பொருள் விரித்தல் தொடர்ச்சொற் புணர்த்தல்
இரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்தல்
ஒப்பின் முடித்தல் மாட்டெறிந் தொழுகல்
இறந்தது விலக்கல் எதிரது போற்றல்
முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்
விகற்பத்தின் முடித்தல் முடிந்தது முடித்தல்
உரைத்தும் என்றல் உரைத்தாம் என்றல்
ஒருதலை துணிதல் எடுத்துக் காட்டல்
எடுத்த மொழியி னெய்த வைத்தல்
இன்ன தல்ல திதுவென மொழிதல்
எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல்
பிறநூன் முடிந்தது தானுடன் படுதல்
தன்குறி வழக்க மிகஎடுத் துரைத்தல்
சொல்லின் முடிவி னப்பொருள் முடித்தல்
ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல்
உய்த்துணர வைப்பென உத்தியெண் ணான்கே14
உத்தி இன்னதென்பதுநூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி
ஏற்புழி யறிந்திதற் கிவ்வகை யாமெனத்
தகும்வகை செலுத்துதல் தந்திர உத்தி15
ஓத்து இன்னதென்பதுநேரின மணியை நிரல்பட வைத்தாங்கு
ஓரினப் பொருளை யொருவழி வைப்பது
ஓத்தென மொழிப உயர்மொழிப் புலவர்16
படலம் இன்னதென்பதுஒருநெறி யின்றி விரவிய பொருளாற்
பொதுமொழி தொடரின் அதுபடல மாகும்17
சூத்திரம் இன்னதென்பதுசில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைச்
செல்வன் ஆடியிற் செறித்தினிது விளக்கித்
திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம்18
சூத்திர நிலைஆற்றொழுக் கரிமா நோக்கந் தவளைப்
பாய்த்துப் பருந்தின்வீழ் வன்னசூத் திரநிலை19
சூத்திரங்களுக்குக் காரண
வகையால் வரும் பெயர் வேறுபாடுபிண்டந் தொகைவகை குறியே செய்கை
கொண்டியல் புறனடைக் கூற்றன சூத்திரம்20
உரையினது பொது இலக்கணம்பாடங் கருத்தே சொல்வகை சொற்பொருள்
தொகுத்துரை உதாரணம் வினாவிடை விசேடம்
விரிவுஅதி காரந் துணிவு பயனோடு
ஆசிரிய வசனமென் றீரே ழுரையே21
காண்டிகையுரை இன்னதென்பதுகருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்
அவற்றொடு வினாவிடை யாக்க லானும்
சூத்திரத் துட்பொருள் தோற்றுவ காண்டிகை22
விருத்தியுரை இன்னதென்பதுசூத்திரத் துட்பொருள் அன்றியும் ஆண்டைக்கு
இன்றி யமையா யாவையும் விளங்கத்
தன்னுரை யானும் பிறநூ லானும்
ஐயம் அகலஐங் காண்டிகை யுறுப்பொடு
மெய்யினை எஞ்சா திசைப்பது விருத்தி23
நூலென்னும் பெயர்க் காரணம்பஞ்சிதன் செல்லாப் பனுவல் இழையாகச்
செஞ்சொற் புலவனே சேயிழையா - எஞ்சாத
கையேவா யாகக் கதிரே மதியாக
மையிலா நூல்முடியு மாறு24 உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப்
புரத்தின் வளமுருக்கிப் பொல்லா - மரத்தின்
கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதேபோன் மாந்தர்
மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு25
2 ஆசிரியனது வரலாறு
நல்லாசிரியர் இலக்கணம்குலனருள் தெய்வங் கொள்கை மேன்மை
கலைபயில் தௌிவு கட்டுரை வன்மை
நிலைமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம் இனையவும்
அமைபவன் நூலுரை யாசிரி யன்னே26 தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும்
பருவம் முயற்சி யளவிற் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே27 அளக்க லாகா அளவும் பொருளும்
துளக்க லாகா நிலையுந் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே28 ஐயந் தீரப் பொருளைப் யுணர்த்தலும்
மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே29 மங்கல மாகி யின்றி யமையாது
யாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
பொழுதின் முகமலர் வுடையது பூவே30
ஆசிரியராகாதார் இலக்கணம்மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும்
அழுக்கா றவாவஞ்சம் அச்சம் ஆடலும்
கழற்குடம் மடற்பனை பருத்திக் குண்டிகை
முடத்தெங் கொப்பென முரண்கொள் சிந்தையும்
உடையோர் இலரா சிரியரா குதலே31 பெய்தமுறை யன்றிப் பிறழ உடன்றரும்
செய்தி கழற்பெய் குடத்தின் சீரே32 தானே தரக்கொளின் அன்றித் தன்பால்
மேவிக் கொளக்கொடா விடத்தது மடற்பனை33 அரிதிற் பெயக்கொண் டப்பொருள் தான்பிறர்க்கு
எளிதீ வில்லது பருத்திக் குண்டிகை34 பல்வகை யுதவி வழிபடு பண்பின்
அல்லோர்க் களிக்கும் அதுமுடத் தெங்கே35
3 பாடஞ்சொலல்லின் வரலாறு
ஈதல் இயல்பே இயம்புங் காலைக்
காலமும் இடனும் வாலிதின் நோக்கிச்
சிறந்துழி யிருந்துதன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை யறிந்துஅவன் உளங்கொளக்
கோட்டமில் மனத்தின்நூல் கொடுத்தல் என்ப36
4 மாணாக்கனது வரலாறு
மாணாக்கர் இலக்கணம்தன்மகன் ஆசான் மகனே மன்மகன்
பொருள்நனி கொடுப்போன் வழிபடு வோனே
உரைகோ ளாளற்கு உரைப்பது நூலே37 அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடம்ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்38
மாணாக்கராகாதார் இலக்கணம்களிமடி மானி காமி கள்வன்
பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்
துயில்வோன் மந்தன் தொன்னூற் கஞ்சித்
தடுமா றுளத்தன் தறுகணன் பாவி
படிறன்இன் னோர்க்குப் பகரார் நூலே39
5 பாடங்கேட்டலின் வரலாறு
கோடல் மரபே கூறுங் காலைப்
பொழுதொடு சென்று வழிபடல் முனியான்
குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந்து
இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப்
பருகுவன் அன்னஆர் வத்த னாகிச்
சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்
செவிவா யாக வெஞ்சுகள னாகக்
கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்
போவெனப் போதல் என்மனார் புலவர்40 நூல்பயில் இயல்பே நுவலின்வழக் கறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசாற் சார்ந்தவை அமைவரக் கேட்டல்
அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாக் கொளினே மடம்நனி யிகக்கும்41 ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பிற்
பெருக நூலிற் பிழைபா டிலனே42 முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும் 43 ஆசா னுரைத்த தமைவரக் கொளினும்
காற்கூ றல்லது பற்றல னாகும்44 அவ்வினை யாளரொடு பயில்வகை யொருகாற்
செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும்
மையறு புலமை மாண்புடைத் தாகும்45 அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி
நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடு
எத்திறத் தாசான் உவக்கும் அத்திறம்
அறத்திற் றிரியாப் படர்ச்சி வழிபாடே46
6. சிறப்புப் பாயிரத்திலக்கணம்
சிறப்புப் பாயிரத்துக்குப் பொதுவிதிஆக்கியோன் பெயரே வழியே யெல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோ டாயெண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே47 காலங் களனே காரண மென்றிம்
மூவகை யேற்றி மொழிநரு முளரே48
நூற்பெயருக்குச் சிறப்புவிதிமுதல்நூல் கருத்தன் அளவு மிகுதி
பொருள்செய் வித்தோன் தன்மைமுத னிமித்தினும்
இடுகுறி யானும்நூற் கெய்தும் பெயரே49
வழியின்வகையாகிய நூல்யாப்புக்குச் சிறப்புவிதிதொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு
எனத்தகும் நூல்யாப் பீரிரண் டென்ப50
சிறப்புப்பாயிரஞ் செய்தற்குரியார் இவரென்பதுதன்னா சிரியன் தன்னொடு கற்றேன்
தன்மா ணாக்கன் தகுமுரை காரனென்று
இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே51
சிறப்புப்பாயிரம் பிறர் செய்ததற்குக் காரணம்தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்
தான்தற் புகழ்தல் தகுதி யன்றே52
தற்புகழ்ச்சி குற்றமாகாத இடங்கள்மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினும்
தன்னுடை யாற்றல் உனரா ரிடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலுந் தகும்புல வேற்கே53
பாயிரம் நூலுக்கு இன்றியமையாச் சிறப்பின தென்பதுஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே54 மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்
ஆடமைத்தோள் நல்லார்க் கணியும்போல் - நாடிமுன்
ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும்
பெய்துரையா வைத்தார் பெரிது55
2. எழுத்ததிகாரம் 1 எழுத்தியல்
கடவுள் வணக்கமும் அதிகாரமும்பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த
நான்முகற் றொழுதுநன் கியம்புவன் எழுத்தே56
எழுத்திலக்கணத்தின் பகுதிஎண்பெயர் முறைபிறப்பு உருவம் மாத்திரை
முதலீறு இடைநிலை போலி யென்றா
பதம்புணர்பு எனப்பன் னிருபாற் றதுவே57
1. எண்
எழுத்து இன்னதென்பதும் அதன்வகையும்மொழிமுதற் காரணம் ஆம்அணுத் திரளொலி
எழுத்துஅது முதல்சார் பெனஇரு வகைத்தே58
முதலெழுத்தின் விரிஉயிரும் உடம்புமாம் முப்பது முதலே
59
சார்பெழுத்தின் வகைஉயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு
அஃகிய இ உ ஐ ஓள மஃகான்
தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்60 சார்பெழுத்தின் விரி உயிர்மெய் இரட்டுநூற் றெட்டுஉய ராய்தம்
எட்டுஉயி ரளபுஎழு மூன்றுஒற் றளபெடை
ஆறேழ் அஃகும் இம்முப் பானேழ்
உகரம் ஆறாறு ஐகான் மூன்றே
ஓளகான் ஒன்றே மஃகான் மூன்றே
ஆய்தம் இரண்டொடு சார்பெழுத் துறுவிரி
ஒன்றோழி முந்நூற் றெழுபான் என்ப61
2. பெயர்
பெயர்க்கெல்லாம் பொது இலக்கணம்இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின
62
எழுத்தின் பெயர்அம்முதல் ஈறாறு ஆவி கம்முதல்
மெய்ம்மூ ஆறென விளம்பினர் புலவர்63 அவற்றுள்
அ இ உ எ ஒக்குறில் ஐந்தே64 ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள நெடில் 65 அ இ உம்முதற் றனிவரிற் சுட்டே 66 எ யா முதலும் ஆ ஓ ஈற்றும்
ஏ யிரு வழியும் வினாஆ கும்மே67 வல்லினம் க ச ட த ப ற வெனவாறே 68 மெல்லினம் ங ஞ ண ந ம ன வெனவாறே 69 இடையினம் ய ர ல வ ழ ள வெனவாறே 70
இன எழுத்துஐஒளஇ உச் செறிய முதலெழுத்து
இவ்விரண் டோரின மாய்வரல் முறையே71
இனம் என்பதற்குக் காரணம்தானம் முயற்சி அளவு பொருள்வடிவு
ஆனஒன் றாதியோர் புடையொப் பினமே72
3. முறை
சிறப்பினும் இனத்தினுஞ் செறிந்தீண் டம்முதல்
நடத்தல் தானே முறையா கும்மே73
4 பிறப்பு
பிறப்பின் பொதுவிதிநிைறுயுயிர் முயற்சியின் உள்வளி துரப்ப
எழும்அணுத் திரளுரங் கண்டம் உச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே74
முதலெழுத்துக்களுக்கு இடப்பிறப்புஅவ்வழி
ஆவி யிடைமை யிடமிட றாகும்
மேவு மென்மைமூக் குரம்பெறும் வன்மை75
முதலெழுத்துக்களுக்கு முயற்சிப் பிறப்புஅவற்றுள்
முயற்சியுள் அ ஆ அங்காப் புடைய76 இ ஈ எ ஏ ஐ அங் காப்போடு
அண்பல் முதல்நா விளிம்புற வருமே77 உ ஊ ஒ ஓ ஒள இதழ் குவிவே 78 கஙவுஞ் சஞவும் டணவு முதலிடை
நுனிநா அண்ண முறமுறை வருமே79 அண்பல் லடிநா முடியுறத் தநவரும் 80 மீகீழ் இதழுறப் பம்மப் பிறக்கும் 81 அடிநா வடியண முறயத் தோன்றும் 82 அண்ணம் நுனிநா வருட ரழவரும் 83 அண்பல் முதலும் அண்ணமு முறையின்
நாவிளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும்
லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும்84 மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே 85 அண்ண நுனிநா நனியுறிற் றனவரும் 86 சார்பெழுத்துக்கு இடமுயற்சி ஆய்தக் கிடந்தலை அங்கா முயற்சி
சார்பெழுத் தேனவுந் தம்முத லனைய87
பிறப்புக்குப் புறனடைஎடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்
திரிபுந் தத்தமிற் சிறதுள வாகும்88
உயிர்மெய்புள்ளிவிட் டவ்வொடு முன்னுரு வாகியும்
ஏனை உயிரோ டுருவு திரிந்தும்
உயிரள வாயதன் வடிவொழித் திருவயிற்
பெயரொடும் ஒற்றுமுன் னாய்வரும் உயிர்மெய்89
முற்றாய்தம்குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே90
உயிரளபெடைஇசைகெடின் மொழிமுத லிடைகடை நிலைநெடில்
அளபெழும் அவற்றவற் றினக்குறில் குறியே91
ஒற்றளபெடைங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம்
அளபாங் குறிலிணை குறிற்கீ ழிடைகடை
மிகலே அவற்றின் குறியாம் வேறே92
குற்றியலிகரம்யகரம் வரக்குற ளுத்திரி யிகரமும்
அசைச்சொல் மியாவின் இகரமுங் குறிய93
குற்றியலுகரம்நெடிலொடு ஆய்தம் உயிர்வலி மெலியிடைத்
தொடர்மொழி யிறுதி வன்மையூ ருகரம்
அஃகும் பிறமேற் றொடரவும் பெறுமே94
ஐகார ஒளகாரக் குறுக்கங்கள்தற்சுட்டு அளபொழி ஐம்மூ வழியும்
நையும் ஒளவும் முதலற் றாகும்95
மகரக் குறுக்கும்ண ன முன்னும் வஃகான் மிசையுமக் குறுகும்
96
ஆய்தக் குறுக்கம்ல ள வீற் றியைபினாம் ஆய்தம் அஃகும்
97
5. உருவம்
தொல்லை வடிவின எல்லா எழுத்தும்ஆண்டு
எய்தும் எகர ஒகரமெய் புள்ளி98
6. மாத்திரை
எழுத்துக்களின் மாத்திரைமூன்றுஉயி ரளபுஇரண் டாம்நெடி லொன்றே
குறிலோடு ஐஒளக் குறுக்கம் ஒற்றளபு
அரைஒற்று இஉக் குறுக்கம் ஆய்தம்
கால்குறள் மஃகா னாய்த மாத்திரை99
மாத்திரை இன்னதென்பதுஇயல்பெழு மாந்த ரிமைநொடி மாத்திரை
100
மாத்திரைக்குப் புறனடைஆவியும் ஒற்றும் அளவிறந் திசைத்தலும்
மேவு மிசைவிளி பண்டமாற் றாதியின்101
7. முதனிலை
மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள்பன்னீ ருயிருங் க ச த ந ப ம வ ய
ஞ ங ஈ ரைந்துயிர் மெய்யு மொழிமுதல்102 பொதுவிதியுட் சிறப்புவிதி உ ஊ ஒ ஒ வலவொடு வம்முதல்
103 அ ஆ உ ஊ ஓ ஒள யம்முதல் 104 அ ஆ எ ஒவ்வோ டாகும் ஞம்முதல் 105 சுட்டியா எகர வினாவழி அவ்வை
ஒட்டி ஙவ்வு முதலா கும்மே106
8. இறுதிநிலை
மொழிக்கிறுதியில் வரும் எழுத்துக்கள்ஆவி ஞணநமன யரலவ ழளமெய்
சாயும் உகரம்நா லாறு மீறே107
சிலவற்றிற்குச் சிறப்புவிதிகுற்றுயி ரளபி னீறாம் எகரம்
மெய்யோடே லாதொந் நவ்வொ டாமௌக்
ககர வகரமோ டாகு மென்ப108 எழுத்தினது முதலும் ஈறும் நின்றநெறி யேஉயிர் மெய்முத லீறே
109
9. இடைநிலை மயக்கம்
க ச த ப ஒழித்தஈ ரேழன் கூட்டம்
மெய்ய்மயக்கு உடனிலை ரழஒழித் தீரெட்
டாகுமிவ் விருபான் மயக்கும் மொழியிடை
மேவும் உயிர்மெய் மயக்கள வின்றே110
வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்குச் சிறப்புவிதிஙம்முன் கவ்வாம் வம்முன் யவ்வே
111 ஞநமுன் தம்மினம் யகரமொ டாகும் 112 டறமுன் கசப மெய்யுடன் மயங்கும் 113 ணனமுன் னினங்கச ஞபமய வவ்வரும் 114 மம்முன் பயவ மயங்கு மென்ப 115 யரழ முன்னர் மொழிமுதல் மெய்வரும் 116 லளமுன் கசப வயஒன் றும்மே 117 உடனிலை மெய்மயக்கத்தின் சிறப்புவிதி
ரழஅல்லன தம்முன் தாம்உடன் நிலையும்118
தனிமெய்யுடன் தனிமெய்யாய் மயங்குவன இவை
மொழிக்கு உறுப்பாக மயங்காதன இவையரழவெற் றின்முன் கசதப ஙஞநம
ஈரொற் றாம்ரழத் தனிக்குறி லணையா119
செய்யுளில் ஈரொற்றாய் நிற்கும் எழுத்துக்கள்லளமெய் திரிந்த னணமுன் மகாரம்
நைந்தீ ரொற்றாஞ் செய்யு ளுள்ளே120
முதனிலை இறுதிநிலை
இடைநிலைகளுக்குப் புறனடைதம்பெயர் மொழியின் முதலு மயக்கமும்
இம்முறை மாறியும் இயலு மென்ப121
10 போலி
மொழியிறுதிப் போலிமகர இறுதி அஃறிணைப் பெயரின்
னகரமோ டுறழா நடப்பன வுளவே122
மொழிமுதற் போலியும் மொழியிடைப் போலியும்அ ஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன்
123
மொழியிடைப் போலிஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி
ஞஃகா னுறழு மென்மரு முளரே124
சந்தியக்கரம்அம்முன் இகரம் யகர மென்றிவை
எய்தின் ஐயொத் திசைக்கும் அவ்வோடு
உவ்வும் வவ்வும் ஒளவோ ரன்ன125
எழுத்தின் சாரியைகள்மெய்க ளகரமும் நெட்டுயிர் காரமும்
ஐஒளக் கானு மிருமைக் குறிலிவ்
இரண்டொடு கரமுமாஞ் சாரியை பெறும்பிற126
இவ்வியலுக்குப் புறனடைமொழியாய்த் தொடரினு முன்னனைத் தெழுத்தே
127 2. பதவியல் 1 பதம்
பதம் இன்னதென்பதும் அதன் வகையும் எழுத்தே தனித்துந் தொடர்ந்தும் பொருள்தரிற்
பதமாம் அதுபகாப் பதம்பகு பதமென
இருபா லாகி யியலு மென்ப128
ஓரேழுத்தொரு மொழிஉயிர்மவி லாறும் தபநவி லைந்தும்
கவசவி னாலும் யவ்வி லொன்றும்
ஆகும் நெடில்நொது ஆங்குறி லிரண்டோடு
ஓரெழுத் தியல்பதம் ஆறேழ் சிறப்பின129
தொடரெழுத்தொரு மொழிபகாப்பதம் ஏழும் பகுபதம் ஒன்பதும்
எழுத்தீ றாகத் தொடரு மென்ப130
பகாப்பதம்பகுப்பாற் பயனற் றிடுகுறி யாகி
முன்னே யொன்றாய் முடிந்தியல் கின்ற
பெயர்வினை இடைஉரி நான்கும் பகாப்பதம்131
பகுபதம்பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலின்
வருபெயர் பொழுதுகொள் வினைபகு பதமே132
பகுபத உறுப்புக்கள்பகுதி விகுதி இடைநிலை சாரியை
சந்தி விகாரம் ஆறினும் ஏற்பவை
முன்னிப் புணர்ப்ப முடியுமெப் பதங்களும்133
2. பகுதி
பகுதி இன்னதென்பதுதத்தம்
பகாப்ப தங்களே பகுதி யாகும்134
பண்புப் பகுதிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதிசெம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை
திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதிர்
இன்னவும் பண்பிற் பகாநிலைப் பதமே135 ஈறு போதல் இடையுகரம் இய்யாதல்
ஆதி நீடல் அடியகரம் ஐயாதல்
தன்னொற் றிரட்டல் முன்னின்ற மெய்திரிதல்
இனமிகல் இனையவும் பண்பிற் கியல்பே136
தெரிநிலைவினைப் பகுதிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதிநடவா மடிசீ விடுகூ வேவை
நொப்போ வௌவுரிஞ் உண்பொருந் திருந்தின்
தேய்பார் செல்வவ் வாழ்கே ளஃகென்று
எய்திய இருபான் மூன்றா மீற்றவும்
செய்யெ னேவல் வினைப்பகாப் பதமே137
ஏவற்பகுதிக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதிசெய்யென் வினைவழி விப்பி தனிவரிற்
செய்வியென் னேவ லிணையினீ ரேவல்138
வினைப்பகுதிக்குப் புறனடைவிளம்பிய பகுதிவே றாதலும் விதியே
139
3. விகுதி
அன்ஆன் அள்ஆள் அர்ஆர் பம்மார்
அஆ குடுதுறு என்ஏன் அல்அன்
அம்ஆம் எம்ஏம் ஓமொ டும்மூர்
கடதற ஐஆய் இம்மின் இர்ஈர்
ஈயர் கயவும் என்பவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினுஞ் சிலவே140
4. இடைநிலை
பெயரிடைநிலைஇலக்கியங் கண்டதற்கு இலக்கணம் இயம்பலிற்
பகுதி விகுதி பகுத்திடை நின்றதை
வினைப்பெய ரல்பெயர்க் கிடைநிலை யெனலே141
இறந்தகாலவினை இடைநிலைதடறவொற் றின்னே யைம்பால் மூவிடத்து
இறந்த காலந் தருந்தொழி லிடைநிலை142
நிகழ்கால இடைநிலைஆநின்று கின்று கிறுமூ விடத்தின்
ஐம்பால் நிகழ்பொழு தறைவினை யிடைநிலை143
எதிர்கால இடைநிலைபவ்வ மூவிடத் தைம்பா லெதிர்பொழுது
இசைவினை யிடைநிலை யாமிவை சிலஇல144
காலங்காட்டும் விகுதிறவ்வொ டுகர வும்மைநிகழ் பல்லவுந்
தவ்வொ டிறப்பு மெதிர்வும் டவ்வொடு
கழிவுங் கவ்வோ டெதிர்வுமின் னேவல்
வியங்கோ ளிம்மமா ரெதிர்வும் பாந்தஞ்
செலவொடு வரவுஞ் செய்யுநிகழ் பெதிர்வும்
எதிர்மறை மும்மையு மேற்கு மீங்கே145
5. வடமொழியாக்கம்
ஆரியமொழி தமிழில் வடமொழியாதல்இடையில் நான்கு மீற்றி லிரண்டும்
அல்லா அச்சுஐ வருக்கமுத லீறி
யவ்வாதி நான்மை ளவ்வாகு மையைம்
பொதுவெழுத் தொழிந்தநா லேழுந் திரியும்146
ஆரியமொழி வடமொழியாதற்குச் சிறப்புவிதிஅவற்றுள்
ஏழாமுயி ரிய்யு மிருவுமை வருக்கத்
திடையின் மூன்று மவ்வம் முதலும்
எட்டே யவ்வு முப்பது சயவும்
மேலொன்று சடவு மிரண்டு சதவும்
மூன்றே யகவு மைந்திரு கவ்வும்
ஆவீ றையு மீயீ றிகரமும்147 ரவ்விற் கம்முத லாமுக் குறிலும்
லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற்
கிய்யு மொழிமுத லாகிமுன் வருமே148 இணைந்தியல் காலை யரலக் கிகரமும்
மவ்வக் குகரமு நகரக் ககரமும்
மிசைவரும் ரவ்வழி யுவ்வு மாம்பிற149
தமிழெழுத்திற் சிறப்பெழுத்தும் பொது எழுத்தும்றனழஎ ஒவ்வு முயிர்மெய்யு முயிரளபு
அல்லாச் சார்புந் தமிழ்பிற பொதுவே150 3. உயிரீற்றுப் புணரியல்
1. புணர்ச்சி
புணர்ச்சி இன்னதென்பதுமெய்யுயிர் முதலீ றாமிரு பதங்களும்
தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமைப்
பொருளிற் பொருந்துழி நிலைவரு மொழிகள்
இயல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே151
அல்வழி வேற்றுமை இவையென்பதுவேற்றுமை ஐம்முத லாறாம் அல்வழி
தொழில்பண்பு உவமை உம்மை அன்மொழி
எழுவாய் விளியீ ரெச்சமுற் றிடையுரி
தழுவு தொடரடுக் கெனஈ ரேழே152
இயல்பு புணர்ச்சிவிகார மனைத்தும் மேவல தியல்பே
153
விகாரப் புணர்ச்சிதோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
மூன்று மொழிமூ விடத்து மாகும்154
செய்யுள் விகாரம்வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல்
விரித்தல் தொகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி155 ஓருமொழி மூவழிக் குறைதலு மனைத்தே 156 புணர்ச்சி விகாரத்தில் வருவதோரையம் ஓழித்தல்
ஓருபுணர்க் கிரண்டு மூன்றும் உறப்பெறும்157
2. பொதுப்புணர்ச்சி
எல்லா ஈற்றின் முன்னும் மெல்லினமும்
இடையினமும் புணர்தல்எண்மூ எழுத்தீற் றெவ்வகை மொழிக்கும்
முன்வரும் ஞ ந ம ய வக்க ளியல்பும்
குறில்வழி யத்தனி யைந்நொது முன்மெலி
மிகலுமாம் ண ள ன ல வழிநத் திரியும்158
பொதுப்பெயர் உயர்திணைப் பெயரீறுபொதுப்பெய ருயர்திணைப் பெயர்க ளீற்றுமெய்
வலிவரி னியல்பாம் ஆவி யரமுன்
வன்மை மிகாசில விகாரமாம் உயர்திணை159
வினாப்பெயர் விளிப்பெயர் முன் வல்லினம்ஈற்றியா வினாவிளிப் பெயர்முன்வலி இயல்பே
160
முன்னிலை வினை ஏவல்வினைமுன் வல்லினம்ஆவி யரழ இறுதிமுன் னிலைவினை
ஏவல்முன் வல்லினம் இயல்பொடு விகற்பே161
3. உயிறீற்றுச் சிறப்புப் புணர்ச்சி
உயிர்முன் உயிர் புணர்தல்இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுனிவ் விருமையும்
உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்162
வினாச்சுட்டின்முன் நாற்கணமும் புணர்தல்எகர வினாமுச் சுட்டின் முன்னர்
உயிரும் யகரமும் எய்தின் வவ்வும்
பிறவரின் அவையுந் தூக்கிச் சுட்டு
நீளின் யகரமுந் தோன்றுதல் நெறியே163
குற்றியலுகரமுன்னுஞ் சில முற்றியலுகர
முன்னும் உயிரும் உகரமும் புணர்தல்உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்
யவ்வரின் இய்யாம் முற்றுமற் றொரோவழி164
4. உயிரீற்றுமுன் வல்லினம்
உயிரீற்றின்முன் வல்லினம் புணர்தல்இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
க ச த ப மிகும்வித வாதன மன்னே165
உயிரீற்றுச் சிலமரப்பெயர்முன்
வல்லினம் புணர்தல்மரப்பெயர் முன்னர் இனமெல் லெழுத்து
வரப்பெறு னவுமுள வேற்றுமை வழியே166
அகர ஈற்றுச் சிறப்புவிதிசெய்யிய என்னும் வினையெச்சம் பல்வகைப்
பெயரி னெச்சமுற் றாற னுருபே
அஃறிணைப் பன்மை அம்மமுன் னியல்பே167 வாழிய என்பதன் ஈற்றின் உயிர்மெய்
ஏகலும் உரித்தஃ தேகினு மியல்பே168 சாவஎன் மொழியீற் றுயிர்மெய் சாதலும்விதி 169 பலசில எனுமிவை தம்முன் தாம்வரின்
இயல்பு மிகலும் அகரம் ஏக
லகரம் றகர மாகலும் பிறவரின்
அகரம் விகற்ப மாகலு முளபிற170
ஆகார ஈற்றுச் சிறப்புவிதிஅல்வழி யாமா மியாமுற்று முன்மிகா
171 குறியதன் கீழ்ஆக் குறுகலும் அதனொடு
உகர மேற்றலும் இயல்புமாந் தூக்கின்172
இகர ஈற்றுச் சிறப்புவிதிஅன்றி இன்றிஎன் வினையெஞ்சு இகரம்
தொடர்பினுள் உகர மாய்வரின் இயல்பே173 உரிவரின் நாழியி னீற்றுயிர் மெய்கெட
மருவும் டகரம் உரியின் வழியே
உகரஉயிர் மெய்யாம் ஏற்பன வரினே174 சுவைப்புளி முன்னின மென்மையுந் தோன்றும் 175
இகர ஐகார ஈற்றுச் சிறப்புவிதிஅல்வழி இ ஐம் முன்ன ராயின்
இயல்பு மிகலும் விகற்பமு மாகும்176
ஈகார ஈற்றுச் சிறப்புவிதிஆமுன் பகரவீ அனைத்தும்வரக் குறுகும்
மேலன அல்வழி யியல்பா கும்மே177 பவ்வீ நீமீ முன்னர் அல்வழி
இயல்பாம் வலிமெலி மிகலுமா மீக்கே178
முற்றுகர ஈற்றுச் சிறப்புவிதிமூன்றாறு உருபெண் வினைத்தொகை சுட்டீறு
ஆகும் உகர முன்ன ரியல்பாம்179 அதுமுன் வரும்அன்று ஆன்றாந் தூக்கின் 180
குற்றுகர ஈற்றுச் சிறப்புவிதிவன்றொட ரல்லன முன்மிகா அல்வழி
181 இடைத்தொட ராய்தத் தொடரொற் றிடையின்
மிகாநெடி லுயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை182 நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுட்
டறஒற் றிரட்டும் வேற்றுமை மிகவே183 மென்றொடர் மொழியுட் சிலவேற் றுமையில்
தம்மின வன்றொட ராகா மன்னே184 ஐஈற் றுடைக்குற் றுகரமு முளவே 185 திசையொடு திசையும் பிறவுஞ் சேரின்
நிலையீற் றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்
றகரம் னலவாத் திரிதலும் ஆம்பிற186 தெங்குநீண்டு ஈற்றுயிர் மெய்கெடுங் காய்வரின் 187 எண்நிறை யளவும் பிறவும் எய்தின்
ஒன்று முதலெட் டீறா மெண்ணுள்
முதலீ ரெண்முதல் நீளும் மூன்றாறு
ஏழ்குறு கும்ஆறு ஏழல் லவற்றின்
ஈற்றுயிர் மெய்யும் ஏழ னுயிரும்
ஏகும் ஏற்புழி யென்மனார் புலவர்188 ஒன்றன் புள்ளி ரகர மாக
இரண்ட னொற்றுயி ரேகஉவ் வருமே189 மூன்றனுறுப்பு அழிவும் வந்தது மாகும் 190 நான்கன் மெய்யே லறவா கும்மே 191 ஐந்தனொற் றடைவதும் இனமுங் கேடும் 192 எட்ட னுடம்புணவ் வாகும் என்ப 193 ஒன்பா னொடுபத்து நூறும் ஒன்றின்
முன்னதி னேனைய முரணி ஒவ்வொடு
தகரம் நிறீஇப்பஃ தகற்றி னவ்வை
நிரலே ணளவாத் திரிப்பது நெறியே194 முதலிரு நான்காம் எண்முனர்ப் பத்தின்
இடையொற்று ஏக லாய்த மாகல்
எனஇரு விதியு மேற்கு மென்ப195 ஒருபஃ தாதிமுன் னொன்றுமுத லொன்பான்
எண்ணும் அவையூர் பிறவும் எய்தின்
ஆய்தம் அழியஆண் டாகுந் தவ்வே196 ஒன்றுமுத லீரைந் தாயிரங் கோடி
எண்நிறை யளவும் பிறவரிற் பத்தின்
ஈற்றுயிர் மெய்கெடுத் தின்னும் இற்றும்
ஏற்ப தேற்கும் ஒன்பது மினைத்தே197 இரண்டு முன்வரிற் பத்தினீற் றுயிர்மெய்
கரந்திட ஒற்று னவ்வாகு மென்ப198 ஒன்ப தொழித்தஎண் ஒன்பது மிரட்டின்
முன்னதின் முன்னல வோட உயிர்வரின்
வவ்வு மெய்வரின் வந்தது மிகல்நெறி199
ஊகார ஈற்றுச் சிறப்புவிதிபூப்பெயர் முன்னின மென்மையுந் தோன்றும்
200
ஏகார ஓகார ஈற்றுச் சிறப்புவிதிஇடைச்சொல் ஏஓ முன்வரி னியல்பே
201
ஐகார ஈற்றுச் சிறப்புவிதிவேற்றுமை யாயின் ஐகா னிறுமொழி
ஈற்றழி வோடுமம் மேற்பவு முளவே202 பனைமுன் கொடிவரின் மிகலும் வலிவரின்
ஐபோ யம்மும் திரள்வரி னுறழ்வும்
அட்டுறின் ஐகெட்டந் நீள்வுமாம் வேற்றுமை203 4. மெய்யீற்றுப் புணரியல்
மெய்யீற்றின்முன் உயிர்உடல்மே லுயிர்வந் தொன்றுவ தியல்பே
204 தனிக்குறில் முன்னொற் றுயிர்வரின் இரட்டும் 205
மெய்யீற்றின்முன் மெய்தன்னொழி மெய்ம்முன் யவ்வரி னிகரந்
துன்னு மென்று துணிநரு முளரே206 ஞணநம லவளன ஒற்றிறு தொழிற்பெயர்
ஏவல் வினைநனி யவ்வன் மெய்வரின்
உவ்வுறும் ஏவ லுறுசில சில்வழி207 நவ்விறு தொழிற்பெயர்க்கு அவ்வுமாம் வேற்றுமை 208
ணகர னகர ஈறுணனவல் லினம்வரட் டறவும் பிறவரின்
இயல்பு மாகும் வேற்றுமைக்கு அல்வழிக்கு
அனைத்துமெய் வரினும் இயல்பா கும்மே209 குறிலணைவு இல்லா ணனக்கள் வந்த
நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே210 சாதி குழூஉப்பரண் கவண்பெய ரிறுதி
இயல்பாம் வேற்றுமைக்கு உணவுஎண் சாண்பிற
டவ்வா கலுமாம் அல்வழி யும்மே211 னஃகான் கிளைப்பெய ரியல்பும் அஃகான்
அடைவு மாகும் வேற்றுமைப் பொருட்கே212 மீன்றவ் வொடுபொரூஉம் வேற்றுமை வழியே 213 தேன்மொழி மெய்வரி னியல்பும் மென்மை
மேவி னிறுதி யழிவும் வலிவரின்
ஈறுபோய் வலிமெலி மிகலுமா மிருவழி214 மரம்அல் எகின்மொழி யியல்பும் அகரம்
மருவ வலிமெலி மிகலு மாகும்215 குயின்ஊன் வேற்றுமைக் கண்ணு மியல்பே 216 மின்பின் பன்கன் தொழிற்பெய ரனைய
கன்னவ் வேற்று மென்மையோ டுறழும்217 தன்என் என்பவற் றீற்றுனவ் வன்மையோடு
உறழும் நின்னீ றியல்பா முறவே218
மகர ஈறுமவ்வீ றொற்றழிந்து உயிரீ றொப்பவும்
வன்மைக் கினமாத் திரிபவு மாகும்219 வேற்றுமை மப்போய் வலிமெலி யுறழ்வும்
அல்வழி யுயிரிடை வரினியல் பும்முள220 நுந்தம்
எம் நம் மீறா மவ்வரு ஞநவே221 அகமுனர்ச் செவிகை வரினிடை யனகெடும் 222 ஈமுங்
கம்மும் உருமுந் தொழிற்பெயர் மானும்
முதலன வேற்றுமைக் கவ்வும் பெறுமே223
யரழ ஈறுயரழ முன்னர்க் கசதப அல்வழி
இயல்பு மிகலு மாகும் வேற்றுமை
மிகலும் இனத்தோ டுறழ்தலும் விதிமேல்224 தமிழவ் வுறவும் பெறும்வேற் றுமைக்கே
தாழுங் கோல்வந் துறுமே லற்றே225 கீழின்முன் வன்மை விகற்பமு மாகும் 226
லகர ளகர ஈறுலளவேற் றுமையிற் றடவும் அல்வழி
அவற்றோ டுறழ்வும் வலிவரி னாமெலி
மேவி னணவும் இடைவரி னியல்பும்
ஆகும் இருவழி யானு மென்ப227 குறில்வழி லளளத்தவ் வணையின் ஆய்தம்
ஆகவும் பெறூஉம் அல்வழி யானே228 குறில்செறி யாலள அல்வழி வந்த
தகரந் திரிந்தபிற் கேடுமீ ரிடத்தும்
வருநத் திரிந்தபின் மாய்வும் வலிவரின்
இயல்புந் திரிபும் ஆவன வுளபிற229 லளஇறு தொழிற்பெய ரீரிடத்தும் உவ்வுறா
வலிவரி நல்வழி இயல்புமா வனவுள230 வல்லே தொழிற்பெயர் அற்றுஇரு வழியும்
பலகைநாய் வரினும் வேற்றுமைக் கவ்வுமாம்231 நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்
அல்வழி யானும் றகர மாகும்232 இல்லெ னின்மைச் சொற்குஐ அடைய
வன்மை விகற்பமும் ஆகா ரத்தொடு
வன்மை யாகலு மியல்பு மாகும்233 புள்ளும் வள்ளுந் தொழிற்பெயரு மானும் 234
வகர ஈறுசுட்டு வகரம்மூ வினமுற முறையே
ஆய்தமு மென்மையு மியல்பு மாகும்235 தெவ்வென் மொழியே தொழிற்பெய ரற்றே
மவ்வரின் வஃகான் மவ்வு மாகும்236
வருமொழித் தகர நகரத் திரிபுனலமுன் றனவும் ணளமுன் டணவும்
ஆகுந் தநக்கள் ஆயுங் காலே237
வேற்றுமைப் பொருட்புணர்ச்சியை உருபு
புணர்ச்சியோடு மாட்டெறிதல்உருபின் முடிபவை யொக்குமப் பொருளினும்
238
புணரியல்களுக்குப் புறனடைஇடைஉரி வடசொலின் இயம்பிய கொளாதவும்
போலியும் மரூஉவும் பொருந்திய ஆற்றிற்கு
இயையப் புணர்த்தல் யாவர்க்கு நெறியே239 5. உருபு புணரியல் 1. உருபுகள்
எட்டுருபுகளும் சாரும் இடவகையால்
இத்தனையாம் என்பதுஒருவ னொருத்தி பலரொன்று பலஎன
வருபெய ரைந்தொடு பெயர்முதல் இருநான்கு
உருபும் உறழ்தர நாற்பதாம் உருபே240
வேற்றுமை உருபுகள் வருவதற்குக்
காரணமும் வருமிடமும்பெயர்வழித் தம்பொருள் தரவரும் உருபே
241 ஐம்முதலிய ஆறுருபும் நிலைமொழி
வருமொழியோடு புணருமாறுஒற்றுயிர் முதலீற் றுருபுகள் புணர்ச்சியின்
ஒக்குமன் னப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே242
2. சாரியை
சாரியை வருமாறுபதமுன் விகுதியும் பதமும் உருபும்
புணர்வழி ஒன்றும் பலவுஞ் சாரியை
வருதலும் தவிர்தலும் விகற்பமு மாகும்243
சாரியைகள் இவையென்பதுஅன் ஆன் இன் அல் அற்றுஇற்று அத்துஅம்
தம் நம் நும் ஏ அ உ ஐ குன
இன்ன பிறவும் பொதுச்சா ரியையே244
உருபு புணர்ச்சிக்குச் சிறப்புவிதிஎல்லாம் என்பது இழிதிணை யாயின்
அற்றோ டுருபின் மேலும் உறுமே
அன்றேல் நம்மிடை யடைந்தற் றாகும்245 எல்லாரும் எல்லீரும் எனபவற் றும்மை
தள்ளி நிரலே தம் நும் சாரப்
புல்லும் உருபின் பின்ன ரும்மே246 தான் தாம் நாம் முதல் குறுகும் யான் யாம்
நீ நீர் என் எம் நின் நும் ஆம்பிற
குவ்வின் அவ்வரும் நான்காறு இரட்டல247 ஆமா கோனவ் வணையவும் பெறுமே 248 ஒன்று முதலெட் டீறா மெண்ணுர்
பத்தின்முன் ஆன்வரிற் பவ்வொற் றொழியமேல்
எல்லா மோடும் ஒன்பது மிற்றே249 வவ்விறு சுட்டிற்கு அற்றுறல் வழியே 250 சுட்டின்முன் ஆய்த மன்வரிற் கெடுமே 251 அத்தின் அகரம் அகரமுனை யில்லை 252
3. புறனடை
சாரியைக்குப் புறனடைஇதற்குஇது சாரியை யெனின்அளவு இன்மையின்
விகுதியும் பதமும் உருபும் பகுத்துஇடை
நின்ற எழுத்தும் பதமு மியற்கையும்
ஒன்ற வுணர்த்தல் உரவோர் நெறியே253
நான்கு புணர்ச்சிக்கும் புறனடைவிகுதி பதஞ்சா ரியைஉருபு அனைத்தினும்
உரைத்த விதியினோர்ந் தொப்பன கொளலே254
வேற்றுமைப் புணர்ச்சிக்குப் புறனடைஇயல்பின் விகாரமும் விகாரத் தியல்பும்
உயர்திணை யிடத்து விரிந்துந் தொக்கும்
விரவுப் பெயரின் விரிந்து நின்றும்
அன்ன விறவு மாகும்ஐ உருபே255 புள்ளியும் உயிரும் ஆயிறு சொல்முன்
தம்மி னாகிய தொழில்மொழி வரினே
வல்லினம் விகற்பமு மியல்பு மாகும்256
எழுத்ததிகாரத்துக்குப் புறனடைஇதற்குஇது முடிபென் றெஞ்சா தியாவும்
விகுப்பள வின்மையின் விதித்தவற் றியலான்
வகுத்துரை யாதவும் வகுத்தனர் கொளலே257
3 சொல்லதிகாரம் 1. பெயரியல்
கடவுள் வணக்கமும் அதிகாரமும்முச்சகம் நிழற்றும் முழுமதி முக்குடை
அச்சுத னடிதொழுது அறைகுவன் சொல்லே258
1. சொல்லின் பொது இலக்கணம்
சொல் இன்னதென்பதுஒருமொழி தொடர்மொழி பொதுமொழி யென்றா
இருதிணை ஐம்பாற் பொருளைந் தன்னையும்
மூவகை யிடத்தும் வழக்கொடு செய்யுளின்
வௌிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே259
மூவகை மொழிஒருமொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி
பலபொரு ளனபொது இருமையு மேற்பன260
இருதிணைமக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்றுயி ருள்ளவு மில்லவும் அஃறிணை261
ஐம்பால்ஆண்பெண் பலரென முப்பாற்று உயர்திணை
262 ஒன்றே பலஎன் றிருபாற்று அஃறிணை 263
திணைபால்களுக்குப் புறனடைபெண்மைவிட்டு ஆணவா வுவபேடு ஆண்பால்
ஆண்மைவிட்டு அல்லது அவாவுவ பெண்பால்
இருமையும் அஃறிணை யன்னவு மாகும்264
மூன்றிடத்துஞ் சொற்றன்னையும்
பொருளையும் உணர்த்துதல்படர்க்கை வினைமுற்று நாமங் குறிப்பிற்
பெறப்படும் திணைபா லனைத்தும் ஏனை
இடத்துஅவற் றொருமைப் பன்மைப் பாலே265
மூவிடம்தன்மை முன்னிலை படர்க்கைமூ இடனே
266
வழக்கு இன்னதென்பதுஇலக்கணம் உடையது இலக்கணப் போலி
மரூஉவென் றாகு மூவகை யியல்பும்
இடக்க ரடக்கல் மங்கலம் குழூஉக்குறி
எனுமுத் தகுதியோடு ஆறாம் வழக்கியல்267
செய்யுள் இன்னதென்பதுபல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல
சொல்லாற் பொருட்கிட னாக உணர்வினின்
வல்லொ ரணிபெறச் செய்வன செய்யுள்268
குறிப்பும் வௌிப்படையும்ஒன்றொழி பொதுச்சொல் விகாரந் தகுதி
ஆகு பெயர்அன் மொழிவினைக் குறிப்பே
முதல்தொகை குறிப்போ டின்ன பிறவும்
குறிப்பில் தருமொழி யல்லன வௌிப்படை269
2. சொற் பாகுபாடு
சொல் இத்தனை வகைப்படுமென்பதுஅதுவே
இயற்சொல் திரிசொ லியற்பிற் பெயர்வினை
எனஇரண் டாகும் இடைஉரி யடுத்து
நான்கு மாம்திசை வடசொலணு காவழி270
இயற்சொல்செந்தமி ழாகித் திரியா தியார்க்கும்
தம்பொருள் விளக்குந் தன்மைய இயற்சொல்271
திரிசொல்ஒருபொருள் குறித்த பலசொல் லாகியும்
பலபொருள் குறித்த ஒருசொல் லாகியும்
அரிதுணர் பொருளன திரிசொல் லாகும்272
திசைச்சொல்செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும்
தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப273
வடசொல்பொதுஎழுத் தானும் சிறப்பெழுத் தானும்
ஈரெழுத் தானு மியைவன வடசொல்274
3. பெயர்ச்சொல்
பொயரின் பொது இலக்கணம்இடுகுறி காரணம் மரபொடு ஆக்கம்
தொடர்ந்து தொழிலல காலந் தோற்றா
வேற்றுமைக் கிடனாய்த் திணைபா லிடத்தொன்று
ஏற்பவும் பொதுவு மாவன பெயரே275
உயர்திணை ஆண்பாற் பெயர்அவற்றுள்
கிளைஎண் குழூஉமுதற் பல்பொருள் திணைதேம்
ஊர்வான் அகம்புறம் முதல நிலன்யாண்டு
இருது மதிநா ளாதிக் காலம்
தோள்குழல் மார்புகண் காது முதலுறுப்பு
அளவுஅறிவு ஒப்பு வடிவு நிறங்கதி
சாதி குடிசிறப் பாதிப் பல்குணம்
ஓத லீத லாதிப் பல்வினை
இவையடை சுட்டு வினாப்பிற மற்றோடு
உற்ற னவ்வீறு நம்பி யாடூஉ
விடலை கோவேள் குரிசில் தோன்றல்
இன்னன ஆண்பெய ராகு மென்ப276
உயர்திணைப் பெண்பாற் பெயர்கிளைமுத லாகக் கிளந்த பொருள்களுள்
ளவ்வொற் றிகரக் கேற்ற ஈற்றவும்
தோழி செவிலி மகடூஉ நங்கை
தையலோ டின்னன பெண்பாற் பெயரே277
உயர்திணைப் பலர்பாற் பெயர்கிளந்த கிளைமுத லுற்றரவ் வீற்றவும்
கள்ளெ னீற்றி னேற்பவும் பிறவும்
பல்லோர் பெயரின் பகுதி யாகும்278
அஃறிணை ஒன்றன்பாற் பெயர்வினாச்சுட் டுடனும் வேறு மாம்பொருள்
ஆதி யுறுதுச் சுட்டணை யாய்தம்
ஒன்றெனெண் ணின்னன ஒன்றன் பெயரே279
அஃறிணைப் பலவின்பாற் பெயர்முன்ன ரவ்வொடு வருவை யவ்வும்
சுட்டிறு வவ்வுங் கள்ளிறு மொழியும்
ஒன்ற லெண்ணு முள்ள இல்ல
பல்ல சில்ல உளஇல பலசில
இன்னவும் பலவின் பெயரா கும்மே280
அஃறிணை இருபாற் பொதுப்பெயர்பால்பகா அஃறிணைப் பெயர்கள்பாற் பொதுமைய
281
இருதிணைப் பொதுப்பெயர்முதற்பெயர் நான்குஞ் சினைப்பெயர் நான்கும்
சினைமுதற் பெயரொரு நான்கும்முறை யிரண்டும்
தன்மை நான்கும் முன்னிலை யைந்தும்
எல்லாம் தாம்தா னின்னன பொதுப்பெயர்282
முதற்பெயர் முதலிய நான்கையும் வகுத்தல்ஆண்மை பெண்மை ஒருமை பன்மையின்
ஆமந் நான்மைக ளாண்பெண் முறைப்பெயர்283
திணைப்பொதுப்பெயர் பாற்பொதுவாதல்அவற்றுள்
ஒன்றே யிருதிணைத் தன்பா லேற்கும்284
தன்மை முன்னிலை படர்க்கைப் பெயர்கள்தன்மை யான்நான் யாம்நாம் முன்னிலை
எல்லீர் நீயிர் நீவிர் நீர்நீ
அல்லன படர்க்கை யெல்லா மெனல்பொது285
தொழிற்பெயருக்கும் வினையாலணையும்
பெயருக்கும் இடம் வகுத்தல்வினையின் பெயரே படர்க்கை வினையால்
அணையும் பெயரே யாண்டு மாகும்286
பன்னிரண்டு பொதுப்பெயர்தான்யான் நான்நீ ஒருமை பன்மைதாம்
யாம்நாம் எலாமெலீர் நீயிர்நீர் நீவிர்287
எண்ணால்வரும் உயர்திணைப் பெயருக்குப் புறனடைஓருவ னொருத்திப் பெயர்மே லெண்ணில
288 ஒருவ ரென்ப துயரிரு பாற்றாய்ப்
பன்மை வினைகொளும் பாங்கிற் றென்ப289
ஆகுபெயர்பொருள்முத லாறோடு அளவைசொல் தானி
கருவி காரியங் கருத்த னாதியுள்
ஒன்றன் பெயரா னதற்கியை பிறிதைத்
தொன்முறை யுைரைப்பன ஆகு பெயரே290
4. வேற்றுமை
வேற்றுாம இனைய என்பதும்
இத்துணைய என்பதும்ஏற்கும் எவ்வகைப் பெயர்க்குமீ றாய்ப்பொருள்
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை291
வேற்றுமையின் பெயரும் முறையும்பெயரே ஐஆல் குஇன் அதுகண்
விளியென் றாகும் அவற்றின் பெயர்முறை292
எழுவாயுருபு மற்ைறுயுருபுகளை ஏற்றல்ஆற னுருபும் ஏற்குமவ் வுருபே
293
ஐ முதலிய உருபு ஏலாப் பெயர்கள்நீயிர் நீவிர் நா னெழுவா யலபெறா
294
பெயர் வேற்றுமைஅவற்றுள்
எழுவா யுருபு திரிபில் பெயரே
வினைபெயர் வினாக்கொளல் அதன்பய னிலையே295
இரண்டாம் வேற்றுமைஇரண்டா வதனுருபு ஐயே அதன்பொருள்
ஆக்கல் அழித்தல் அடைதல் நீத்தல்
ஒத்தல் உடைமை யாதி யாகும்296
மூன்றாம் வேற்றுமைமூன்றா வதனுருபு ஆலா னோடொடு
கருவி கருத்தா உடனிகழ்வு அதன்பொருள்297
நான்காம் வேற்றுமைநான்கா வதற்குரு பாகுங் குவ்வே
கொடைபகை நேர்ச்சி தகவுஅது வாதல்
பொருட்டுமுறை யாதியி னிதற்கிதெனல் பொருளே298
ஐந்தாம் வேற்றுமைஐந்தா வதனுருபு இல்லும் இன்னும்
நீங்கலொப்பு எல்லை யேதுப் பொருளே299
ஆறாம் வேற்றுமைஆற னொருமைக் கதுவும் ஆதுவும்
பன்மைக் கவ்வு முருபாம் பண்புஉறுப்பு
ஒன்றன் கூட்டம் பலவின் ஈட்டம்
திரிபி னாக்கம் ஆம்தற் கிழமையும்
பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே300
ஏழாம் வேற்றுமைஏழ னுருபுகண் ணாதி யாகும்
பொருள்முத லாறு மோரிரு கிழமையின்
இடனாய் நிற்ற லிதன்பொரு ளென்ப301
கண்முதலிய உருபுகள்கண்கால் கடையிடை தலைவாய் திசைவயின்
முன்சார் வலமிட மேல்கீழ் புடைமுதல்
பின்பாடு அளைதேம் உழைவழி யுழியுளி
உள்ளகம் புறமில் லிடப்பொரு ளுருபே302
எட்டாம் வேற்றுமைஎட்ட னுருபே எய்துபெய ரீற்றின்
திரிபு குன்றல் மிகுத லியல்புஅயல்
திரிபு மாம்பொருள் படர்க்கை யோரைத்
தன்முக மாகத் தானழைப் பதுவே303
விளிக்கப்படு பெயர்கள்இ உ ஊவோடு ஐ ஓ ன ள ர ல
யவ்வீற் றுயர்திணை யோரவல் லிவற்றொடு
ணஃகா னாவீ றாகும் பொதுப்பெயர்
ஞநஒழி யனைத்தீற் றஃறிணை விளிப்பன304 பொதுவாகிய விளியுருபு இம்முப் பெயர்க்கண் ணியல்பும் ஏயும்
இகர நீட்சியும் உருபா மன்னே305
விளியுருபுக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதிஐயிறு பொதுப்பெயர்க்கு ஆயும் ஆவும்
உருபாம் அல்லவற் றாயு மாகும்306 ஒருசார் னவ்வீற் றுயர்திணைப் பெயர்க்கண்
அளபீ றழிவுஅயல் நீட்சி யதனொடு
ஈறு போத லவற்றோடு ஓவுறல்
ஈறழிந்து ஓவுறல் இறுதியவ் வாதல்
அதனோடு அயல்திரிந்து ஏயுறல்ஈ றழிந்து
அயலே யாதலும் விளியுறு பாகும்307 ளஃகா னுயர்பெயர்க் களபுஈ றழிவுஅயல்
நீட்சி யிறுதி யவ்வொற் றாதல்
அயலில் அகரம்ஏ யாதலும் விளித்தனு308 ரவ்வீற் றுயர்பெயர்க் களபெழ லீற்றயல்
அகரம் இ ஈ யாத லாண்டைஆ
ஈயாத லதனோடு ஏயுற லீற்றே
மிக்கயல் யாக்கெட் டதனயல் நீடல்
ஈற்றி னீருற லிவையுமீண் டுருபே309 லகாரயீற் றுயர்பெயர்க்கு அளபயல் நீட்சியும்
யகார வீற்றிற் களபுமா முருபே310 னவ்வீற் றுயர்திணை யல்லிரு பெயர்க்கண்
இறுதி யழிவத னோடுஅயல் நீட்சி311 லளவீற் றஃறிணைப் பெயர்பொதுப் பெயர்க்கண்
ஈற்றயல் நீட்சியும் உருபா கும்மே312
விளியுருபுகளுக்குப் புறனடைஅண்மையி னியல்பும்ஈ றழிவும் சேய்மையின்
அளபும் புலம்பின் ஓவு மாகும்313
விளியுருபு ஏலாப் பெயர்கள்நுவ்வொடு வினாச்சுட் டுற்ற ன ள ர
வைதுத் தாந்தா னின்னன விளியா314
முதல்சினைத் தொடர்பின்கண் அவ்விரண்டினும்
இரண்டனுருபு வாராதெனல்முதலை ஐயுறிற் சினையைக் கண்ணுறும்
அதுமுதற் காயிற் சினைக்குஐ யாகும்315
ஐயுருபு முதல் சினையிரண்டினும் வாராமைக்குக்
காரணமும் மேலைச் சூத்திரப் பொருளோடு
இப்பொருளைப் பிண்டப்பொருளுக்கும் ஏற்பித்தலும்முதலிவை சினையிவை யெனவே றுளவில
உரைப்போர் குறிப்பின அற்றே பிண்டமும்316
உருபு மயக்கம்யாத னுருபிற் கூறிற் றாயினும்
பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்317
சில வேற்றுமையுருபு
செய்யுளிடத்துத் திரிந்துவருதல்ஐஆன்குச் செய்யுட்கு அவ்வு மாகும்
ஆகா அஃறிணைக்கு ஆனல் லாதன318
எட்டுவேற்றுமைக்கும் முடிக்குஞ்சொல்எல்லை யின்னும் அதுவும் பெயர்கொளும்
அல்ல வினைகொளும் நான்கே ழிருமையும்
புல்லும் பெரும்பாலும் என்மனார் புலவர்319 2. வினையியல் 1 வினைச்சொல்
தெரிநிலை வினைச்சொல்லின்
பொது இலக்கணம்செய்பவன் கருவி நிலஞ்செயல் காலம்
செய்பொரு ளாறுந் தருவது வினையே320
குறிப்பு வினைச்சொல்லின் பொது இலக்கணம்பொருள்முத லாறினுந் தோற்றிமுன் னாறனுள்
வினைமுதல் மாத்திரை விளக்கல்வினைக் குறிப்பே321
வினைச்சொற்களின் பகுப்புஅவைதாம்
முற்றும் பெயர்வினை எச்சமு மாகி
ஒன்றற் குரியவும் பொதுவு மாகும்322
2. வினைமுற்று
வினைமுற்று இனையவென்பதுபொதுஇயல்பு ஆறையுந் தோற்றிப் பொருட்பெயர்
முதலறு பெயரலது ஏற்பில முற்றே323
தெரிநிலைவினைமுற்றின் பாகுபாடுஒருவன்முத லைந்தையும் படர்க்கை யிடத்தும்
ஒருமைப் பன்மையைத் தன்மைமுன் னிலையினும்
முக்கா லத்தினு முரண முறையே
மூவைந் திருமூன் றாறாய் முற்று
வினைப்பத மொன்றே மூவொன் பானாம்324
ஆண்பாற் படர்க்கை வினைமுற்றுஅன்ஆ னிறுமொழி ஆண்பாற் படர்க்கை
325
பெண்பாற் படர்க்கை வினைமுற்றுஅள்ஆ ளிறுமொழி பெண்பாற் படர்க்கை
326
பலர்பாற் படர்க்கை வினைமுற்றுஅர்ஆர் பவ்வூ ரகரமா ரீற்ற
பல்லோர் படர்க்கைமார் வினையொடு முடிமே327
ஒன்றன்பாற் படர்க்கை வினைமுற்றுதுறுடுக் குற்றிய லுகர ஈற்ற
ஒன்றன் படர்க்கைடுக் குறிப்பி னாகும்328
பலவின்பாற் படர்க்கை வினைமுற்றுஅஆ ஈற்ற பலவின் படர்க்கை
ஆவே எதிர்மறைக் கண்ண தாகும்329
இருதிணைப் பொதுவினைதன்மை முன்னிலை வியங்கோள் வேறிலை
உண்டீ ரெச்சம் இருதிணைப் பொதுவினை330
தன்மை ஒருமை வினைமுற்றுகுடுதுறு என்னுங் குன்றிய லுகரமோடு
அல்அன் என்ஏன் ஆகு மீற்ற
இருதிணை முக்கூற்று ஒருமைத் தன்மை331
தன்மைப் பன்மை வினைமுற்றுஅம்ஆம் என்பன முன்னிலை யாரையும்
எம்ஏம் ஓமிவை படர்க்கை யாரையும்
உம்ஊர் கடதற இருபா லாரையும்
தன்னொடு படுக்குந் தன்மைப் பன்மை332
வினையுடனு முடியுந்தன்மை வினைமுற்றுக்கள்செய்கெ னெருமையுஞ் செய்குமென் பன்மையும்
வினையொடு முடியினும் விளிம்பிய முற்றே333
உளப்பாட்டுப் பன்மை முன்னிலைமுன்னிலை கூடிய படர்க்கையு முன்னிலை
334 முன்னிலை ஒருமை வினைமுற்று ஐயா யிகர ஈற்று மூன்றும்
ஏவலின் வரூஉம் எல்லா ஈற்றவும்
முப்பா லொருமை முன்னிலை மொழியே335 முன்னிலை முன்ன ரீயும் ஏயும்
அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே336
முன்னிலைப் பன்மை வினைமுற்றுஇர்ஈ ரீற்ற இரண்டும் இருதிணைப்
பன்மை முன்னிலை மின்னவற் றேவல்337
வியங்கோள் வினைமுற்றுகயவொடு ரவ்வொற் றீற்ற வியங்கோள்
இயலும் இடம்பா லெங்கு மென்ப338
வேறு இல்லை உண்டுவேறில்லை யுண்டைம் பால்மூ விடத்தன
339
3. பெயரெச்சம்
பெயரெச்சம் இனையவென்பதுசெய்த செய்கின்ற செய்யுமென் பாட்டிற்
காலமுஞ் செயலுந் தோன்றிப் பாலொடு
செய்வ தாதி அறுபொருட் பெயரும்
எஞ்ச நிற்பது பெயரெச் சம்மே340
செய்யுமென் எச்சத்திற்கு
எய்தியதன்மேற் சிறப்புவிதிசெய்யுமென் எச்சஈற் றுயிர்மெய் சேறலுஞ்
செய்யுளுள் உம்உந்து ஆகலும் முற்றேல்
உயிரு முயிர்மெய்யும் ஏகலு முளவே341
4. வினையெச்சம்
வினயெச்சம் இனையவென்பதுதொழிலுங் காலமுந் தோன்றிப் பால்வினை
ஒழிய நிற்பது வினையெச் சம்மே342
வினையெச்ச வாய்பாடுகள்செய்து செய்பு செய்யாச் செய்யூச்
செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர்
வான்பான் பாக்கின வினையெச் சம்பிற
ஐந்தொன் றாறுமுக் காலமு முறைதரும்343
வினையெச்சங்களுக்கு முடிபு வேறுபாடுஅவற்றுள்
முதலில் நான்கும் ஈற்றில் மூன்றும்
வினைமுதல் கொள்ளும் பிறவுமேற் கும்பிற344
வினைமுதல் கொள்ளுமென்றவற்றிற்கு
ஒரு புறனடைசினைவினை சினையொடும் முதலொடுஞ் செறியும்
345
சொல்திரி யினும்பொருள் திரியா வினைக்குறை346
5. ஒழிபு
வினைக் குறிப்புஆக்க வினைக்குறிப்பு ஆக்கமின்று இயலா
347
செய்யுமென் முற்றுபல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற்
செல்லா தாகுஞ் செய்யுமென் முற்றே348
பாற் பொதுவினையாரென் வினாவினைக் குறிப்புஉயர் முப்பால்
349 எவனென் வினாவினைக் குறிப்புஇழி இருபால் 350
இருவகை முற்றிற்கும் ஒரு புறனடைவினைமுற் றேவினை யெச்ச மாகலும்
குறிப்புமுற்று ஈரெச்ச மாகலு முளவே351 3. பொதுவியல் 1. இது முன்வந்த பெயருக்கும் வினைக்கும்
- பின்வரும் இடைக்கும் உரிக்கும்
- பொதுவிலக்கணங்களைக் கூறுவது
பாற்பொதுமை நீங்குநெறிஇருதிணை ஆண்பெணுள் ஒன்றினை ஒழிக்கும்
பெயரும் வினையுங் குறிப்பி னானே352
பெயர் வினையிடத்து ஈற்றயல் திரிதல்பெயர்வினை யிடத்து ன ள ர ய ஈற்றயல்
ஆஓ ஆகலுஞ் செய்யுளு ளுரித்தே353
உருபும் வினையீறும் எதிர்மறையினுந் திரியாமைஉருபும் வினையும் எதிர்மறுத்து உரைப்பினுந்
திரியா தத்தமீற் றுருபி னென்ப354
உருபும் வினையும் அடுக்கிமுடிதல்உருபுபல அடுக்கினும் வினைவே றடுக்கினும்
ஒருதம் எச்சம் ஈறுற முடியும்355
இடைப் பிறவரல்உருபு முற்றுஈ ரெச்சங் கொள்ளும்
பெயர்வினை யிடைப்பிற வரலுமாம் ஏற்பன356
முடிக்குஞ் சொல் நிற்குமிடம்எச்சப் பெயர்வினை எய்தும் ஈற்றினும்
357
ஒருமொழி வேறொன்றை அமைத்தல்ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே
358
திணைபாலிடப் பொதுமை நீங்கு நெறிபொதுப்பெயர் வினைகளின் பொதுமை நீக்கும்
மேல்வருஞ் சிறப்புப் பெயர்வினை தாமே359
எச்சங்களின் முடிபுபெயர்வினை உம்மைசொற் பிரிப்பென ஒழியிசை
எதிர்மறை இசையெனுஞ் சொல்லொழிபு ஒன்பதுங்
குறிப்புந் தத்தம் எச்சங் கொள்ளும்360
2. தொகைநிலைத் தொடர்மொழி
தொகைநிலைத் தொடர்மொழி இனையவென்பதுபெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை
முதலிய பொருளின் அவற்றி னுருபிடை
ஒழிய இரண்டு முதலாத் தொடர்ந்தொரு
மொழிபோல் நடப்பன தொகைநிலை தொடர்ச்சொல்361
தொகைநிலைத் தொடர்ப் பாகுபாடுவேற்றுமை வினைப்பண்பு உவமை உம்மை
அன்மொழி யெனஅத் தொகையா றாகும்362
வேற்றுமைத் தொகைஇரண்டு முதலா மிடையா றுருபும்
வௌிப்பட லில்லது வேற்றுமைத் தொகையே363
வினைத் தொகைகாலங் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை
364
பண்புத் தொகைபண்பை விளக்கும் மொழிதொக் கனவும்
ஒருபொருட் கிருபெயர் வந்தவுங் குணத்தொகை365
உவமத் தொகைஉவம உருபிலது உவமத் தொகையே
366
உவம உருபுகள்போலப் புரைய ஒப்ப உறழ
மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத் துருபே367
உம்மைத் தொகைஎண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல்
எனுநான் களவையு ளும்மிலது அத்தொகை368
அன்மொழித் தொகைஐந்தொகை மொழிமேற் பிறதொக லன்மொழி
369
தொகைநிலைத் தொடர் மொழிகளிற்
பொருற்சிறக்கும் இடங்கள்முன்மொழி பின்மொழி பன்மொழி புறமொழி
எனுநான் கிடத்துஞ் சிறக்குந் தொகைப்பொருள்370
இடத்தொகை பெயர்த்தொகைகட்கு
வேறுபாடறிகுறிவல்லொற்று வரினே யிடத்தொகை யாகும்
மெல்லொற்று வரினே பெயர்த்தொகை யாகும்371
உம்மைத்தொகைக்கு புறநடைஉயர்திணை உம்மைத் தொகைபல ரீறே
372
தொகைநிலைத் தொடர் மொழிகள்
பலபொருள் படுதல்தொக்குழி மயங்குந இரண்டு முதலேழ்
எல்லைப் பொருளின் மயங்கு மென்ப373
3. தொகாநிலைத் தொடர்மொழி
முற்றுஈ ரெச்சம் எழுவாய் விளிப்பொருள்
ஆறுரு பிடையுரி யடுக்கிவை தொகாநிலை374
4. வழாநிலை வழுவமைதி
வழு விகற்பங்கள் திணையே பாலிடம் பொழுது வினாஇறை
மரபா மேழு மயங்கினாம் வழுவே375
திணையோடு வினாவிடையும் பாலோடு
வினாவிடையும் வழுவாமற் காத்தல்ஐயந் திணைபா லவ்வப் பொதுவினும்
மெய்தெரி பொருள்மே லன்மையும் விளம்புப376
திணை வழுவமைதிஉயர்திணை தொடர்ந்த பொருள்முத லாறும்
அதனொடு சார்த்தி னத்திணை முடிபின377
திணைபால்மரபு வழுவமைதிதிணைபால் பொருள்பல விரவின சிறப்பினும்
மிகவினும் இழிபினும் ஒருமுடி பினவே378
திணைபால் வழுவமைதிஉவப்பினும் உயர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும்
இழிப்பினும் பால்திணை யிழுக்கினு மியல்பே379
பாலிட வழுவமைதிஒருமையிற் பன்மையும் பன்மையி னொருமையும்
ஓரிடம் பிறவிடந் தழுவலு முளவே380
இடம் வழுவாமற் காத்தல்தரல்வரல் கொடைசெலல் சாரும் படர்க்கை
எழுவா யிரண்டும் எஞ்சிய ஏற்கும்381
காலம்இறப்புஎதிர்வு நிகழ்வெனக் கால மூன்றே
382
கால வழுவமைதிமுக்கா லத்தினும் ஒத்தியல் பொருளைச்
செப்புவர் நிகழுங் காலத் தானே383
விரைவினு மிகவினுந் தௌிவினும் இயல்பினும்
பிறழவும் பெறூஉமுக் காலமும் ஏற்புழி384
அறுவகை வினாஅறிவுஅறி யாமை ஐயுறல் கொளல்கொடை
ஏவல் தரும்வினா ஆறும் இழுக்கார்385
எண்வகை விடைசுட்டு மறைநே ரேவல் வினாதல்
உற்றது உரைத்தல் உறுவது கூறல்
இனமொழி யெனுமெண் ணிறையு ளிறுதி
நிலவிய ஐந்துமப் பொருண்மையி னேர்ப386
வினாவிடைகளின் முதல்சினை வழுவாமைவினாவினுஞ் செப்பினும் விரவா சினைமுதல்
387
மரபுஎப்பொரு ளெச்சொலின் எவ்வா றுயர்ந்தோர்
செப்பின ரப்படிச் செப்புதல் மரபே388
மரபு வழாநிலைவேறுவினைப் பல்பொருள் தழுவிய பொதுச்சொலும்
வேறவற் றெண்ணுமோர் பொதுவினை வேண்டும்389
வினைசார்பு இனமிட மேவி விளங்காப்
பலபொரு ளொருசொற் பணிப்பர் சிறப்பெடுத்தே390
எழுத்தியல் திரியாப் பொருள்திரி புணர்மொழி
இசைத்திரி பாற்றௌிவு எய்து மென்ப391
மரபு வழாநிலையும் வழுவமைதியும்ஒருபொருள் மேற்பல பெயர்வரி னிறுதி
ஒருவினை கொடுப்ப தனியு மொரோவழி392
திணைநிலஞ் சாதி குடியே யுடைமை
குணந்தொழில் கல்வி சிறப்பாம் பெயரோடு
இயற்பெய ரேற்றிடிற் பின்வரல் சிறப்பே393
படர்க்கை முப்பெயரோடு அணையிற் சுட்டுப்
பெயர்பின் வரும்வினை யெனிற்பெயர்க் கெங்கும்
மருவும் வழக்கிடைச் செய்யுட் கேற்புழி394
அசைநிலை பொருள்நிலை யிசைநிறைக் கொருசொல்
இரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்395
மரபு வழாநிலைஇரட்டைக் கிளவி இரட்டிற்பிரிந்து இசையா
396 ஒருபொருட் பல்பெயர் பிரிவில வரையர் 397
மரபு வழுவமைதிஒருபொருட் பன்மொழி சிறப்பினின்வழா
398
மரபு வழுவாமற் காத்தல்இனைத்தென் றறிபொரு ளுலகின்இலாப் பொருள்
வினைப்படுத் துரைப்பி னும்மை வேண்டும்399
மரபு வழுவமைதிசெயப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கினு ளுரித்தே400
மரபு வழுவாமற் காத்தலும் மரபு வழுவமைதியும்பொருள்முத லாறாம் அடைசேர் மொழியினம்
உள்ளவு மில்லவு மாமிரு வழக்கினும்401 மரபு வழுவாமற் காத்தல் அடைமொழி யினமல் லதுந்தரும் ஆண்டுறின்
402
மரபு வழுவாமற்காத்தலும் மரபு வழுவமைதியும்அடைசினை முதல்முறை யடைதலு மீரடை
முதலோ டாதலும் வழக்கிய லீரடை
சினையொடு செறிதலும் மயங்கலுஞ் செய்யுட்கே403
மரபு வழுவமைதிஇயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்
404
மரபு வழுவாமற் காத்தலும் வழுவமைதியும்காரண முதலா ஆக்கம் பெற்றும்
காரண மின்றி ஆக்கம் பெற்றும்
ஆக்க மின்றிக் காரணம் அடுத்தும்
இருமையும் இன்றியு மியலுஞ் செயும்பொருள்405
மரபு வழுவாமற் காத்தல்தம்பா வில்லது இல்லெனி னினனாய்
உள்ளது கூறி மாற்றியும் உள்ளது
சுட்டியும் உரைப்பர் சொற்சுருங் குதற்கே406
ஈ தா கொடுஎனும் மூன்றும் முறையே
இழிந்தோ னொப்போன் மிக்கோ னிரப்புரை407
மரபு வழுவமைதிமுன்னத்தி னுணருங் கிளவியு முளவே
408
கேட்குந போலவும் கிளக்குந போலவும்
இயங்குந போலவும் இயற்றுந போலவும்
அஃறிணை மருங்கினும் அறையப் படுமே409
உருவக உவமையில் திணைசினை முதல்கள்
பிறழ்தலும் பிறவும் பேணினர் கொளலே410
5. பொருள் கோள்
பொருள்கோளின் பெயருந் தொகையும்யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண்
தாப்பிசை அளைமறி பாப்புக் கொண்டுகூட்டு
அடிமறி மாற்றெனப் பொருள்கோ ளெட்டே411
யாற்றுநீர்ப் பொருள்கோள்மற்றைய நோக்காது அடிதொறும் வான்பொருள்
அற்றற் றெழுகுமஃ தியாற்றுப் புனலே412
மொழிமாற்றுப் பொருள்கோள்ஏற்ற பொருளுக் கியையு மொழிகளை
மாற்றியோ ரடியுள் வழங்கல்மொழி மாற்றே413
நிரனிறை பொருள்கோள்பெயரும் வினையுமாஞ் சொல்லையும் பொருளையும்
வேறு நிரல்நிறீஇ முறையினும் எதிரினும்
நேரும் பொருள்கோள் நிரனிறை நெறியே414
பூட்டுவிற் பொருள் கோள்எழுவா யிறுதி நிலைமொழி தம்முள்
பொருள்நோக் குடையது பூட்டுவில் லாகும்415
தாப்பிசைப் பொருள்கோள்இடைநிலை மொழியே ஏணையீ ரிடத்தும்
நடந்து பொருளை நண்ணுதல் தாப்பிசை416
அளைமறிபாப்புப் பொருள்கோள்செய்யு ளிறுதி மொழியிடை முதலிலும்
எய்திய பொருள்கோ ளளைமறி பாப்பே417
கொண்டுகூட்டுப் பொருள்கோள்யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை
ஏற்புழி யிசைப்பது கொண்டு கூட்டே418
அடிமறிமாற்றுப் பொருள்கோள்ஏற்புழி யெடுத்துடன் கூட்டுறும் அடியவும்
யாப்பீ றிடைமுத லாக்கினும் பொருளிசை
மாட்சியு மாறா அடியவும் அடிமறி419
4. இடையியல்
இடைச் சொல்லின் பொது இலக்கணம்வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள்
தத்தம் பொருள இசைநிறை அசைநிலை
குறிப்பெனெண் பகுதியிற் றனித்திய லின்றிப்
பெயரினும் வினையினும் பின்முன் னோரிடத்து
ஒன்றும் பலவும்வந் தொன்றுவ திடைச்சொல்420
இடைச்சொற் பொருட்கள்தெரிநிலை தேற்றம் ஐயம்முற்று எண்சிறப்பு
எதிர்மறை யெச்சம் வினாவிழைவு ஒழியிசை
பிரிப்புக் கழிவுஆக்கம் இன்னன இடைப்பொருள்421
ஏகார இடைச்சொல்பிரிநிலை வினாஎண் ணீற்றசை தேற்றம்
இசைநிறை யெனஆ றேகா ரம்மே422
ஓகார இடைச்சொல்ஒழியிசை வினாச்சிறப் பெதிர்மறை தெரிநிலை
கழிவுஅசை நிலைபிரிப் பெனஎட் டோவே423
என என்று இடைச்சொற்கள்வினைபெயர் குறிப்பிசை எண்பண் பாறினும்
எனஎனு மொழிவரும் என்றும் அற்றே424
உம்மை இடைச்சொல்எதிர்மறை சிறப்பையம் எச்சமுற் றளவை
தெரிநிலை யாக்கமோ டும்மை எட்டே425
முற்றும்மைக்கு எய்தியதன்மேற் சிறப்புவிதிமுற்றும்மை ஒரோவழி எச்சமு மாகும்
426
எச்ச உம்மைக் காவதோர் விதிசெவ்வெண் ஈற்றதாம் எச்ச வும்மை
427
சில எண்ணிடைச்சொற்களுக்
காவதோர் இலக்கணம்பெயர்ச்செவ் வெண்ஏ என்றா எனாஎண்
நான்குந் தொகைபெறும் உம்மையென் றெனவோடு
இந்நான் கெண்ணுமஃ தின்றியு மியலும்428
சில எண்ணிடச்சொற்களுக்கு
எய்தியதன்மேற் சிறப்புவிதிஎன்றும் எனவும் ஒடுவும் ஒரோவழி
நின்றும் பிரிந்தெண் பொருடொறு நேரும்429
பெயரொடு வரும்இடைச்சொற்கள்
வினையொடும் வருமாறுவினையொடு வரினுமெண் ணினைய ஏற்பன
430
தில்லிடைச்சொல்விழைவே காலம் ஒழியிசை தில்லே
431
மன்னிடைச்சொல்மன்னே அசைநிலை ஒழியிசை ஆக்கங்
கழிவு மிகுதி நிலையே றாகும்432
மற்றென்னும் இடைச்சொல்வினைமாற் றசைநிலை பிறிதெனு மற்றே
433
முன்னதற்கோர் புறனடைமற்றைய தென்பது சுட்டிய தற்கினம்
434
கொல்லிடைச்சொல்கொல்லே ஐயம் அசைநிலைக் கூற்றே
435
ஒடு தெய்யஒடுவுந் தெய்யவும் இசைநிறை மொழியே
436
அந்தில் ஆங்குஅந்திலாங் கசைநிலை யிடப்பொரு ளவ்வே
437
அம்ம இடைச்சொல்அம்ம உரையசை கேண்மினென் றாகும்
438
வியங்கோளசைமாஎன் கிளவி வியங்கோ ளசைச்சொல்
439
முன்னிலையசைச்சொல்மியாஇக மோமதி அத்தை இத்தை
வாழிய மாளஈ யாழமுன் னிலையசை440
எல்லா இடத்தும் வரும் அசைச்சொல்யாகா பிறபிறக்கு அரோபோ மாதுஇகும்
சின்குரை யோரும் போலு மிருந்துஇட்டு
அன்றாந் தாந்தான் கின்றுநின் றசைமொழி441
5. உரியியல்
உரிச்சொல்லின் பொது இலக்கணம் பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி
ஒருகுணம் பலகுணந் தழுவிப் பெயர்வினை
ஒருவா செய்யுட் குரியன உரிச்சொல்442
பண்பிது என்பதுஉயிருயி ரல்லதாம் பொருட்குணம் பண்பே
443
உயிர்ப்பொருள்மெய்ந்நா மூக்கு நாட்டஞ் செவிகளின்
ஒன்றுமுத லாக்கீழ்க் கொண்டுமே லுணர்தலின்
ஒரறி வாதியா வுயிரைந் தாகும்444
ஓரறிவுயிர்புல்மரம் முதலஉற்று அறியுமோர் அறிவுயிர்
445
ஈரறிவுயிர்முரள்நந்து ஆதிநா அறிவொடீ ரறிவுயிர்
446
மூவறிவுயிர்சிதலெறும் பாதிமூக் கறிவின்மூ வறிவுயிர்
447 நாலறிவுயிர் தும்பிவெண் டாதிகண் ணறிவின்நா லறிவுயிர்
448
ஐயறிவுயிர்வானவர் மக்கள் நரகர் விலங்குபுள்
ஆதிசெவி யறிவோ டையறி வுயிரே449
உயிரில்லாத பொருள்உணர்விய லாமுயி ரொன்று மொழித்த
உடன்முத லனைத்தும் உயிரல் பொருளே450
முன்னதற்கு ஒரு புறனடைஒற்றுமை நயத்தின் ஒன்றெனத் தோன்றினும்
வேற்றுமை நயத்தின் வேறே உடலுயிர்451
உயிர்ப்பொருள்களின் குணப்பண்புஅறிவுஅரு ளாசை யச்சம் மானம்
நிறைபொறை ஓர்ப்புக் கடைப்பிடி மையல்
நினைவு வெறுப்புவப் பிரக்கநாண் வெகுளி
துணிவுஅழுக் காறன்பு எளிமை யெய்த்தல்
துன்ப மின்ப மிளமை மூப்பிகல்
வென்றி பொச்சாப் பூக்க மறமதம்
மறவி யினைய உடல்கொ ளுயிர்க்குணம்452
உயிர்ப் பொருள்களின் தொழிற்பண்புதுய்த்தல் துஞ்சல் தொழுத லணிதல்
உய்த்த லாதி உடலுயிர்த் தொழிற்குணம்453
உயிரல் பொருள்களின் குணப்பண்புபல்வகை வடிவுஇரு நாற்றம்ஐ வண்ணம்
அறுசுவை யூறெட் டுயிரல் பொருட்குணம்454 இருபொருள்களுக்கும் பொதுவாகிய
தொழிற்பண்புதோன்றல் மறைதல் வளர்தல் சுருங்கல்
நீங்க லடைதல் நடுங்க லிசைத்தல்
ஈத லின்னன இருபொருட் டொழிற்குணம்455
ஒருகுணந் தழுவிய உரிச்சொல்சால உறுதவ நனிகூர் கழிமிகல்
456
பலகுணந் தழுவிய உரிச்சொல்கடியென் கிளவி காப்பே கூர்மை
விரையே விளக்கம் அச்சஞ் சிறப்பே
விரைவே மிகுதி புதுமை யார்த்தல்
வரைவே மன்றல் லரிப்பி னாகும்457
ஒருகுணந் தழுவிய உரிச்சொல்மாற்றம் நுவற்சிசெப் புரைகரை நொடியிசை
கூற்றுப் புகறல் மொழிகிளவி விளம்பறை
பாட்டுப் பகர்ச்சி யியம்பல் சொல்லே458
முழக்குஇரட் டொலிகலி இசைதுவை பிளிறிரை
இரக்கழுங் கியம்ப லிமிழ்குளி றதிர்குரை
கனைசிலை சும்மை கௌவை கம்பலை
அரவ மார்ப்போ டின்னன ஓசை459
இவ்வியலுக்குப் புறனடைஇன்ன தின்னுழி யின்னண மியலும்
என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள்
சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலா
நல்லோ ருரிச்சொலின் நயந்தனர் கொளலே460
இவ்வதிகாரத்துக்குப் புறனடைசொற்றொறு மிற்றிதன் பெற்றியென் றனைத்தும்
முற்ற மொழிகுறின் முடிவில ஆதலிற்
சொற்றவற் றியலான் மற்றைய பிறவும்
தெற்றென வுணர்தல் தெள்ளியோர் திறனே461
இந்நூலுக்குப் புறனடைபழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே462 நன்னூல் முற்றும்