"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > நன்னூல் - பவணந்தி முனிவர்
Etext preparation: Dr. Thomas Malten, Inst. of Indology and Tamil Studies, Univ of Koeln, Germany
The etxt initially prepared in transliterated format was converted to TSCII format using the Text Convertor of Mani Manivannan and was set to conform to the version edited by Mani Thirunavukkarasu Mudaliar, published by vaviLla Ramasamy Sasturulu & Sons, Madras, India, 1926.
Proof-reading: Mr. N.D. Logasundaram, Chennai, Tamilnadu, India
Web and PDF versions: Mr. N.D. Logasundaram, Chennai, Tamilnadu, India & Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland, respectively
© Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
நன்னூல் முற்றிற்று.சிறப்புப் பாயிரம்
மலர் தலை உலகின் மல்கு இருள் அகல
இலகு ஒளி பரப்பி யாவை உம் விளக்கும்
பரிதி இன் ஒரு தான் ஆகி முதல் ஈறு
ஒப்பு அளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்த
அற்புத மூர்த்தி தன் அலர்தரு தன்மையின்(5)
மன இருள் இரிய மாண் பொருள் முழுவது உம்
முனிவு அற அருளிய மூ அறு மொழி உள் உம்
குண கடல் குமரி குடகம் வேங்கடம்
எனும் நான்கு எல்லையின் இரும் தமிழ் கடல் உள்
அரும் பொருள் ஐந்து ஐ உம் யாவர் உம் உணர(10)
தொகை வகை விரியின் தருக என துன்னார்
இகல் அற நூறி இரு நிலம் முழுவது உம்
தனது என கோலி தன் மத வாரணம்
திசை தொறு உம் நிறுவிய திறல் உறு தொல் சீர்
கரும் கழல் வெண் குடை கார் நிகர் வண் கை(15)
திருந்திய செங்கோல் சீயகங்கன்
அரும் கலை விநோதன் அமரா பரணன்
மொழிந்தனன் ஆக முன்னோர் நூலின்
வழி ஏ நன்னூல் பெயரின் வகுத்தனன்
பொன் மதில் சனகை சன்மதி முனி அருள்(20)
பன்ன அரும் சிறப்பின் பவணந்தி
என்னும் நாமத்து இரும் தவத்தோன் ஏ1. பொதுப் பாயிரம்
முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்1
பாயிரம் பொது சிறப்பு என இரு பாற்று ஏ
2
நூல் ஏ நுவல்வோன் நுவலும் திறன் ஏ
கொள்வோன் கோடல் கூற்று ஆம் ஐந்து உம்
எல்லா நூல் கு உம் இவை பொது பாயிரம்3
1.1. நூலினது வரலாறு
நூலின் இயல்பு ஏ நுவலின் ஓர் இரு
பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்று ஆய்
நால் பொருள் பயத்து ஓடு எழு மதம் தழுவி
ஐ இரு குற்றம் உம் அகற்றி அ மாட்சி ஓடு
எண் நான்கு உத்தியின் ஓத்து படலம்
என்னும் உறுப்பின் இல் சூத்திரம் காண்டிகை
விருத்தி ஆகும் விகற்ப நடை பெறும் ஏ4
முதல் வழி சார்பு என நூல் மூன்று ஆகும்
5
அவற்று உள்
வினை இன் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்6
முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்து
பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி
அழியா மரபினது வழிநூல் ஆகும்7
இருவர் நூல் கு உம் ஒரு சிறை தொடங்கி
திரிபு வேறு உடையது புடைநூல் ஆகும்8
முன்னோர் மொழி பொருள் ஏ அன்றி அவர் மொழி உம்
பொன் ஏ போல் போற்றுவம் என்பதன் உம் - முன்னோர் இன்
வேறு நூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதன் கு உம்
கூறு பழம் சூத்திரத்தின் கோள்9
அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயன் ஏ
10
எழு வகை மதம் ஏ உடன்படல் மறுத்தல்
பிறர் தம் மதம் மேற்கொண்டு களைவு ஏ
தாஅன் நாட்டித் தனாது நிறுப்பு ஏ
இருவர் மாறுகோள் ஒரு தலை துணிவு ஏ
பிறர் நூல் குற்றம் காட்டல் ஏனை
பிறிதொடு படாஅன் தன் மதம் கொளல் ஏ11
குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொல் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்று எனத் தொடுத்தல் மற்று ஒன்று விரித்தல்
சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை
என்று இவை ஈர் ஐம் குற்றம் நூல் கு ஏ12
சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க்கு இனிமை நல் மொழி புணர்த்தல்
ஓசை உடைமை ஆழம் உடைத்து ஆதல்
முறையின் வைப்பு ஏ உலகம் மலையாமை
விழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்தது
ஆகுதல் நூலின் கு அழகு எனும் பத்து ஏ13
நுதலிப் புகுதல் ஓத்து முறை வைப்பு ஏ
தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்
முடித்துக் காட்டல் முடிவு இடம் கூறல்
தான் எடுத்து மொழிதல் பிறன் கோள் கூறல்
சொல் பொருள் விரித்தல் தொடர்ச்சொல் புணர்த்தல் (5)
இரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்தல்
ஒப்பின் முடித்தல் மாட்டெறிந்து ஒழுகல்
இறந்தது விலக்கல் எதிரது போற்றல்
முன் மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்
விகற்பத்தின் முடித்தல் முடிந்தது முடித்தல் (10)
உரைத்தும் என்றல் உரைத்தாம் என்றல்
ஒரு தலை துணிதல் எடுத்துக்காட்டல்
எடுத்த மொழியின் எய்த வைத்தல்
இன்னது அல்லது இது என மொழிதல்
எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல் (15)
பிற நூல் முடிந்தது தான் உடன்படுதல்
தன் குறி வழக்கம் மிக எடுத்து உரைத்தல்
சொல்லின் முடிவின் அப் பொருள் முடித்தல்
ஒன்று இனம் முடித்தல் தன் இனம் முடித்தல்
உய்த்துணர வைப்பு என உத்தி எண் நான்கு ஏ (20)14
நூல் பொருள் வழக்கு ஒடு வாய்ப்ப காட்டி
ஏற்புழி அறிந்து இதன் கு இ வகை ஆம் என
தகும் வகை செலுத்துதல் தந்திர உத்தி15
நேர் இன மணி ஐ நிரல்பட வைத்தாங்கு
ஓர் இன பொருள் ஐ ஒரு வழி வைப்பது
ஓத்து என மொழிப உயர் மொழி புலவர்16
ஒரு நெறி இன்றி விரவிய பொருள் ஆல்
பொது மொழி தொடரின் அது படலம் ஆகும்17
சில் வகை எழுத்து இல் பல் வகை பொருள் ஐ
செவ்வன் ஆடி இன் செறித்து இனிது விளக்கி
திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம்18
ஆற்று ஒழுக்கு அரிமா நோக்கம் தவளைப்
பாய்த்து பருந்தின் வீழ்வு அன்ன சூத்திர நிலை19
பிண்டம் தொகை வகை குறி ஏ செய்கை
கொண்டு இயல் புறனடை கூற்றன சூத்திரம்20
பாடம் கருத்து ஏ சொல் வகை சொல் பொருள்
தொகுத்துரை உதாரணம் வினா விடை விசேடம்
விரிவு அதிகாரம் துணிவு பயன் ஓடு
ஆசிரியவசனம் என்ற ஈர் ஏழ் உரை ஏ21
கருத்து பதப்பொருள் காட்டு மூன்றின் உம்
அவற்று ஒடு வினா விடை ஆக்கல் ஆன் உம்
சூத்திரத்து உள் பொருள் தோற்றுவ காண்டிகை22
சூத்திரத்து உள் பொருள் அன்றி உம் ஆண்டை கு
இன்றி அமையா யாவை உம் விளங்க
தன் உரை ஆன் உம் பிற நூல் ஆன் உம்
ஐயம் அகல ஐம் காண்டிகை உறுப்பு ஒடு
மெய்யின் ஐ எஞ்சாது இசைப்பது விருத்தி23
பஞ்சி தன் சொல் ஆ பனுவல் இழை ஆக
செம் சொல் புலவன் ஏ சேயிழை ஆ - எஞ்சாத
கை ஏ வாய் ஆக கதிர் ஏ மதி ஆக
மை இலா நூல் முடியும் ஆறு24
உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை
புரத்தின் வளம் முருக்கி பொல்லா - மரத்தின்
கன கோட்டம் தீர்க்கும் நூல் அஃது ஏ போல் மாந்தர்
மன கோட்டம் தீர்க்கும் நூல் மாண்பு25
1.2. ஆசிரியனது வரலாறு
குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலை பயில் தௌிவு கட்டுரை வன்மை
நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சி உம்
உலகு இயல் அறிவு ஓடு உயர் குணம் இனைய உம்
அமைபவன் நூல் உரை ஆசிரியன் ஏ26
தெரிவு அரும் பெருமை உம் திண்மை உம் பொறை உம்
பருவ முயற்சி அளவு இல் பயத்தல் உம்
மருவிய நல் நில மாண்பு ஆகும் ஏ27
அளக்கல் ஆகா அளவு உம் பொருள் உம்
துளக்கல் ஆகா நிலை உம் தோற்றம் உம்
வறப்பின் உம் வளம் தரும் வண்மை உம் மலை கு ஏ28
ஐயம் தீர பொருள் ஐ உணர்த்தல் உம்
மெய் நடு நிலை உம் மிகும் நிறைகோல் கு ஏ29
மங்கலம் ஆகி இன்றி அமையாது
யாவர் உம் மகிழ்ந்து மேற்கொள மெல்கி
பொழுதின் முகம் மலர்வு உடையது பூ ஏ30
மொழி குணம் இன்மை உம் இழி குண இயல்பு உம்
அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடல் உம்
கழல் குடம் மடல் பனை பருத்தி குண்டிகை
முட தெங்கு ஒப்பு என முரண் கொள் சிந்தை உம்
உடையோர் இலர் ஆசிரியர் ஆகுதல் ஏ31
பெய்த முறை அன்றி பிறழ உடன் தரும்
செய்தி கழல் பெய் குடத்தின் சீர் ஏ32
தான் ஏ தர கொளின் அன்றி தன் பால்
மேவி கொள கொடா இடத்தது மடல் பனை33
அரிதின் பெய கொண்டு அ பொருள் தான் பிறர் கு
எளிது ஈவு இல்லது பருத்தி குண்டிகை34
பல் வகை உதவி வழிபடு பண்பின்
அல்லோர் கு அளிக்குமது முட தெங்கு ஏ35
1.3. பாடஞ்சொல்லலின் வரலாறு
ஈதல் இயல்பு ஏ இயம்பும் காலை
காலம் உம் இடன் உம் வாலிதின் நோக்கி
சிறந்த உழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகம் மலர்ந்து
கொள்வோன் கொள் வகை அறிந்து அவன் உளம் கொள
கோட்டம் இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப36
1.4. மாணாக்கனது வரலாறு
தன் மகன் ஆசான் மகன் ஏ மன் மகன்
பொருள் நனி கொடுப்போன் வழிபடுவோன் ஏ
உரைகோளாளன் கு உரைப்பது நூல் ஏ37
அன்னம் ஆ ஏ மண் ஒடு கிளி ஏ
இல்லி குடம் ஆடு எருமை நெய் அரி
அன்னர் தலை இடை கடை மாணாக்கர்38
களி மடி மானி காமி கள்வன்
பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்
துயில்வோன் மந்தன் தொல் நூல் கு அஞ்சி
தடுமாறு உளத்தன் தறுகணன் பாவி
படிறன் இன்னோர் கு பகரார் நூல் ஏ39
1. 5. பாடம் கேட்டலின் வரலாறு
கோடல் மரபு ஏ கூறும் காலை
பொழுது ஒடு சென்று வழிபடல் முனியான்
குணத்து ஒடு பழகி அவன் குறிப்பின் சார்ந்து
இரு என இருந்து சொல் என சொல்லி
பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகி
சித்திர பாவை இன் அ தகவு அடங்கி
செவி வாய் ஆக நெஞ்சு களன் ஆக
கேட்டவை கேட்டு அவை விடாது உளத்து அமைத்து
போ என போதல் என்மனார் புலவர்40
நூல் பயில் இயல்பு ஏ நுவலின் வழக்கு அறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசான் சார்ந்து அவை அமைவர கேட்டல்
அ மாண்பு உடையோர் தம் ஒடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்ற இவை
கடன் ஆ கொளின் ஏ மடம் நனி இகக்கும்41
ஒரு குறி கேட்போன் இரு கால் கேட்பின்
பெருக நூல் இல் பிழைபாடு இலன் ஏ42
மு கால் கேட்பின் முறை அறிந்து உரைக்கும்
43
ஆசான் உரைத்தது அமைவர கொளின் உம்
கால் கூறு அல்லது பற்றலன் ஆகும்44
அ வினையாளர் ஒடு பயில் வகை ஒரு கால்
செவ்விதின் உரைப்ப அவ் இரு கால் உம்
மை அறு புலமை மாண்பு உடைத்து ஆகும்45
அழல் இன் நீங்கான் அணுகான் அஞ்சி
நிழல் இன் நீங்கான் நிறைந்த நெஞ்சம் ஓடு
எ திறத்து ஆசான் உவக்கும் அ திறம்
அறத்து இன் திரியா படர்ச்சி வழிபாடு ஏ46
1. 6. சிறப்புப் பாயிரத்திலக்கணம்
ஆக்கியோன் பெயர் ஏ வழி ஏ எல்லை
நூல் பெயர் யாப்பு ஏ நுதலிய பொருள் ஏ
கேட்போர் பயன் ஓடு ஆய் எண் பொருள் உம்
வாய்ப்ப காட்டல் பாயிரத்து இயல்பு ஏ47
காலம் களன் ஏ காரணம் என்று இ
மூ வகை ஏற்றி மொழிநர் உம் உளர் ஏ48
முதல்நூல் கருத்தன் அளவு மிகுதி
பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தின் உம்
இடுகுறி ஆன் உம் நூல் கு எய்தும் பெயர் ஏ49
தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு
என தகும் நூல் யாப்பு ஈர் இரண்டு என்ப50
தன் ஆசிரியன் தன் ஒடு கற்றோன்
தன் மாணாக்கன் தகும் உரைகாரன் என்ற
இன்னோர் பாயிரம் இயம்புதல் கடன் ஏ51
தோன்றா தோற்றி துறை பல முடிப்பின் உம்
தான் தன் புகழ்தல் தகுதி அன்று ஏ52
மன் உடை மன்றத்து ஓலைத்தூக்கின் உம்
தன் உடை ஆற்றல் உணரார் இடையின் உம்
மன்னிய அவை இடை வெல்லுறு பொழுதின் உம்
தன் ஐ மறுதலை பழித்த காலை உம்
தன் ஐ புகழ்தல் உம் தகும் புலவோன் கு ஏ53
ஆயிரம் முகத்து ஆன் அகன்றது ஆயின் உம்
பாயிரம் இல்லது பனுவல் அன்று ஏ54
மாட கு சித்திரம் உம் மா நகர் கு கோபுரம் உம்
ஆடு அமை தோள் நல்லார் கு அணி உம் போல் - நாடி முன்
ஐது உரையாநின்ற அணிந்துரை ஐ எ நூல் கு உம்
பெய்து உரையா வைத்தார் பெரிது55
2. எழுத்ததிகாரம் 2.1. எழுத்தியல்
பூ மலி அசோகின் புனை நிழல் அமர்ந்த
நான்முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்து ஏ56
எண் பெயர் முறை பிறப்பு உருவம் மாத்திரை
முதல் ஈறு இடைநிலை போலி என்றா
பதம் புணர்பு என பன்னிரு பாற்று அது ஏ57
2.1.1.எண்
மொழி முதல் காரணம் ஆம் அணு திரள் ஒலி
எழுத்து அது முதல் சார்பு என இரு வகைத்து ஏ58
உயிர் உம் உடம்பு உம் ஆம் முப்பது உம் முதல் ஏ
59
உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு
அஃகிய இ உ ஐ ஔ மஃகான்
தனிநிலை பத்து உம் சார்பெழுத்து ஆகும்60
உயிர்மெய் இரட்டு நூற்றெட்டு உயர் ஆய்தம்
எட்டு உயிரளபு எழு மூன்று ஒற்றளபெடை
ஆறு ஏழ் அஃகும் இ முப்பான் ஏழ்
உகரம் ஆறு ஆறு ஐகான் மூன்று ஏ
ஔகான் ஒன்று ஏ மஃகான் மூன்று ஏ
ஆய்தம் இரண்டு ஒடு சார்பெழுத்து உறு விரி
ஒன்று ஒழி முந்நூற்று எழுபான் என்ப61
2.1.2. பெயர்
இடுகுறி காரண பெயர் பொது சிறப்பின
62
அ முதல் ஈர் ஆறு ஆவி க முதல்
மெய் மூ ஆறு என விளம்பினர் புலவர்63
அவற்று உள்
அ இ உ எ ஒ குறில் ஐந்து ஏ64
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ நெடில்
65
அ இ உ முதல் தனி வரின் சுட்டு ஏ
66
எ யா முதல் உம் ஆ ஓ ஈற்று உம்
ஏ இரு வழி உம் வினா ஆகும் ஏ67
வல்லினம் க ச ட த ப ற என ஆறு ஏ
68
மெல்லினம் ங ஞ ண ந ம ன என ஆறு ஏ
69
இடையினம் ய ர ல வ ழ ள என ஆறு ஏ
70
ஐ ஔ இ உ செறிய முதலெழுத்து
இவ் இரண்டு ஓர் இனம் ஆய் வரல் முறை ஏ71
தானம் முயற்சி அளவு பொருள் வடிவு
ஆன ஒன்று ஆதி ஓர் புடை ஒப்பு இனம் ஏ72
2.1.3. முறை
சிறப்பின் உம் இனத்தின் உம் செறிந்து ஈண்டு அ முதல்
நடத்தல் தான் ஏ முறை ஆகும் ஏ73
2.1.4. பிறப்பு
நிறை உயிர் முயற்சியின் உள் வளி துரப்ப
எழும் அணு திரள் உரம் கண்டம் உச்சி
மூக்கு உற்று இதழ் நா பல் அண தொழிலின்
வெவ்வேறு எழுத்து ஒலி ஆய் வரல் பிறப்பு ஏ74
அ வழி
ஆவி இடைமை இடம் மிடறு ஆகும்
மேவும் மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை75
அவற்று உள்
முயற்சி உள் அ ஆ அங்காப்பு உடைய76
இ ஈ எ ஏ ஐ அங்காப்பு ஓடு
அண் பல் முதல் நா விளிம்பு உற வரும் ஏ77
உ ஊ ஒ ஓ ஔ இதழ் குவிவு ஏ
78
க ங உம் ச ஞ உம் ட ண உம் முதல் இடை
நுனி நா அண்ணம் உற முறை வரும் ஏ79
அண் பல் அடி நா முடி உற த ந வரும்
80
மீ கீழ் இதழ் உற ப ம பிறக்கும்
81
அடி நா அடி அணம் உற ய தோன்றும்
82
அண்ணம் நுனி நா வருட ர ழ வரும்
83
அண் பல் முதல் உம் அண்ணம் உம் முறையின்
நா விளிம்பு வீங்கி ஒற்ற உம் வருட உம்
லகாரம் ளகாரம் ஆய் இரண்டு உம் பிறக்கும்84
மேல் பல் இதழ் உற மேவிடும் வ ஏ
85
அண்ணம் நுனி நா நனி உறின் ற ன வரும்
86
ஆய்த கு இடம் தலை அங்கா முயற்சி
சார்பெழுத்து ஏன உம் தம் முதல் அனைய87
எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்
திரிபு உம் தத்தமின் சிறிது உள ஆகும்88
புள்ளி விட்டு அ ஒடு முன் உரு ஆகி உம்
ஏனை உயிர் ஓடு உருவு திரிந்து உம்
உயிர் அளவு ஆய் அதன் வடிவு ஒழித்து இரு வயின்
பெயர் ஒடு உம் ஒற்று முன் ஆய் வரும் உயிர்மெய்89
குறியதன் முன்னர் ஆய்த புள்ளி
உயிர் ஒடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்து ஏ90
இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்
அளபு எழும் அவற்று அவற்று இன குறில் குறி ஏ91
ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம்
அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை கடை
மிகல் ஏ அவற்றின் குறி ஆம் வேறு ஏ92
யகரம் வர குறள் உ திரி இகரம் உம்
அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய93
நெடில் ஓடு ஆய்தம் உயிர் வலி மெலி இடை
தொடர் மொழி இறுதி வன்மை ஊர் உகரம்
அஃகும் பிற மேல் தொடர உம் பெறும் ஏ94
தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்
நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்95
ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும்
96
ல ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்
97
2.1.5. உருவம்
தொல்லை வடிவின எல்லா எழுத்து உம் ஆண்டு
எய்தும் எகர ஒகர மெய் புள்ளி98
2.1.6. மாத்திரை
மூன்று உயிரளபு இரண்டு ஆம் நெடில் ஒன்று ஏ
குறில் ஓடு ஐ ஔ குறுக்கம் ஒற்றளபு
அரை ஒற்று இ உ குறுக்கம் ஆய்தம்
கால் குறள் மஃகான் ஆய்தம் மாத்திரை99
இயல்பு எழும் மாந்தர் இமை நொடி மாத்திரை
100
ஆவி உம் ஒற்று உம் அளவு இறந்து இசைத்தல் உம்
மேவும் இசை விளி பண்டமாற்று ஆதியின்101
2.1.7. முதநிலை
பன்னீர் உயிர் உம் க ச த ந ப ம வ ய
ஞ ங ஈர் ஐந்து உயிர்மெய் உம் மொழி முதல்102
உ ஊ ஒ ஓ அல ஒடு வ முதல்
103
அ ஆ உ ஊ ஓ ஔ ய முதல்104
அ ஆ எ ஒ ஓடு ஆகும் ஞ முதல்
105
சுட்டு யா எகர வினா வழி அ ஐ
ஒட்டி ங உம் முதல் ஆகும் ஏ106
2.1.8. இறுதிநிலை
ஆவி ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள மெய்
சாயும் உகரம் நால் ஆறு உம் ஈறு ஏ107
குற்று உயிர் அளபின் ஈறு ஆம் எகரம்
மெய் ஒடு ஏலாது ஒ ந ஒடு ஆம் ஔ
ககர வகரம் ஓடு ஆகும் என்ப108
நின்ற நெறி ஏ உயிர்மெய் முதல் ஈறு ஏ
109
2.1.9. இடைநிலை மயக்கம்
க ச த ப ஒழித்த ஈர் ஏழன் கூட்டம்
மெய்ம்மயக்கு உடனிலை ர ழ ஒழித்து ஈர் எட்டு
ஆகும் இவ் இரு பால் மயக்கு உம் மொழி இடை
மேவும் உயிர் மெய் மயக்கு அளவு இன்று ஏ110
ங முன் க ஆம் வ முன் ய ஏ
111
ஞ ந முன் தம் இனம் யகரம் ஒடு ஆகும்
112
ட ற முன் க ச ப மெய் உடன் மயங்கும்
113
ண ன முன் இனம் க ச ஞ ப ம ய வ வரும்
114
ம முன் ப ய வ மயங்கும் என்ப
115
ய ர ழ முன்னர் மொழி முதல் மெய் வரும்
116
ல ள முன் க ச ப வ ய ஒன்றும் ஏ
117
ர ழ அல்லன தம் முன் தாம் உடன் நிலையும்
118
ய ர ழ ஒற்றின் முன் க ச த ப ங ஞ ந ம
ஈர் ஒற்று ஆம் ர ழ தனி குறில் அணையா119
ல ள மெய் திரிந்த ன ண முன் மகாரம்
நைந்து ஈர் ஒற்று ஆம் செய்யுள் உள் ஏ120
தம் பெயர் மொழியின் முதல் உம் மயக்கம் உம்
இ முறை மாறி உம் இயலும் என்ப121
2.1.10.போலி
மகர இறுதி அஃறிணை பெயரின்
னகரம் ஓடு உறழா நடப்பன உள ஏ122
அ ஐ முதல் இடை ஒக்கும் ச ஞ ய முன்
123
ஐகான் ய வழி ந ஒடு சில் வழி
ஞஃகான் உறழும் என்மர் உம் உளர் ஏ124
அ முன் இகரம் யகரம் என்ற இவை
எய்தின் ஐ ஒத்து இசைக்கும் அ ஓடு
உ உம் வ உம் ஔ ஓர் அன்ன125
மெய்கள் அகரம் உம் நெட்டு உயிர் காரம் உம்
ஐ ஔ கான் உம் இருமை குறில் இவ்
இரண்டு ஒடு கரம் உம் ஆம் சாரியை பெறும் பிற126
மொழி ஆய் தொடரின் உம் முன் அனைத்து எழுத்து ஏ
127
2.2. பதவியல்
2.2.1.பதம்
எழுத்து ஏ தனித்து உம் தொடர்ந்து உம் பொருள் தரின்
பதம் ஆம் அது பகாப்பதம் பகுபதம் என
இரு பால் ஆகி இயலும் என்ப128
உயிர் ம இல் ஆறு உம் த ப ந இல் ஐந்து உம்
க வ ச இல் நால் உம் ய இல் ஒன்று உம்
ஆகும் நெடில் நொ து ஆம் குறில் இரண்டு ஓடு
ஓர் எழுத்து இயல் பதம் ஆறு ஏழ் சிறப்பின129
பகாப்பதம் ஏழு உம் பகுபதம் ஒன்பது உம்
எழுத்து ஈறு ஆக தொடரும் என்ப130
பகுப்பு ஆல் பயன் அற்று இடுகுறி ஆகி
முன்னே ஒன்று ஆய் முடிந்து இயல்கின்ற
பெயர் வினை இடை உரி நான்கு உம் பகாப்பதம்131
பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலின்
வரு பெயர் பொழுது கொள் வினை பகுபதம் ஏ132
பகுதி விகுதி இடைநிலை சாரியை
சந்தி விகாரம் ஆறின் உம் ஏற்பவை
முன்னி புணர்ப்ப முடியும் எ பதங்கள் உம்133
2.2.2. பகுதி
தத்தம்
பகாப்பதங்கள் ஏ பகுதி ஆகும்134
செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை
திண்மை உண்மை நுண்மை இவற்று எதிர்
இன்ன உம் பண்பு இன் பகா நிலை பதம் ஏ135
ஈறு போதல் இடை உகரம் இ ஆதல்
ஆதி நீடல் அடி அகரம் ஐ ஆதல்
தன் ஒற்று இரட்டல் முன் நின்ற மெய் திரிதல்
இனம் மிகல் இனைய உம் பண்பின் கு இயல்பு ஏ136
நட வா மடி சீ விடு கூ வே வை
நொ போ வௌ உரிஞ் உண் பொருந் திரும் தின்
தேய் பார் செல் வவ் வாழ் கேள் அஃகு என்று
எய்திய இருபான் மூன்று ஆம் ஈற்ற உம்
செய் என் ஏவல் வினை பகாப்பதம் ஏ137
செய் என் வினை வழி வி பி தனி வரின்
செய்வி என் ஏவல் இணையின் ஈர் ஏவல்138
விளம்பிய பகுதி வேறு ஆதல் உம் விதி ஏ
139
2.2.3. விகுதி
அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப மார்
அ ஆ கு டு து று என் ஏன் அல் அன்
அம் ஆம் எம் ஏம் ஓம் ஒடு உம் ஊர்
க ட த ற ஐ ஆய் இ மின் இர் ஈர்
ஈயர் க ய உம் என்ப உம் பிற உம்
வினையின் விகுதி பெயரின் உம் சில ஏ140
2.2.4. இடைநிலை
இலக்கியம் கண்டு அதன் கு இலக்கணம் இயம்பலின்
பகுதி விகுதி பகுத்து இடை நின்றது ஐ
வினைப்பெயர் அல் பெயர் கு இடைநிலை எனல் ஏ141
த ட ற ஒற்று இன் ஏ ஐம் பால் மூ இடத்து
இறந்தகாலம் தரும் தொழில் இடைநிலை142
ஆநின்று கின்று கிறு மூ இடத்தின்
ஐம் பால் நிகழ்பொழுது அறை வினை இடைநிலை143
ப வ மூ இடத்து ஐம் பால் எதிர்பொழுது
இசை வினை இடைநிலை ஆம் இவை சில இல144
ற ஒடு உகர உம்மை நிகழ்பு அல்ல உம்
த ஒடு இறப்பு உம் எதிர்வு உம் ட ஒடு
கழிவு உம் க ஓடு எதிர்வு உம் மின் ஏவல்
வியங்கோள் இ மார் எதிர்வு உம் பாந்தம்
செலவு ஒடு வரவு உம் செய்யும் நிகழ்பு எதிர்வு உம்
எதிர்மறை மும்மை உம் ஏற்கும் ஈங்கு ஏ145
2.2.5. வடமொழி ஆக்கம்
இடை இல் நான்கு உம் ஈற்று இல் இரண்டு உம்
அல்லா அச்சு ஐ வருக்கம் முதல் ஈறு
ய ஆதி நான்மை ள ஆகும் ஐ ஐம்
பொது எழுத்து ஒழிந்த நால் ஏழு உம் திரியும்146
அவற்று உள்
ஏழ் ஆம் உயிர் இ உம் இரு உம் ஐ வருக்கத்து
இடையின் மூன்று உம் அ அ முதல் உம்
எட்டு ஏ ய உம் முப்பது ச ய உம்
மேல் ஒன்று ச ட உம் இரண்டு ச த உம்
மூன்று ஏ அ க உம் ஐந்து இரு க உம்
ஆ ஈறு ஐ உம் ஈ ஈறு இகரம் உம்147
ரவ்வின் கு அ முதல் ஆம் மு குறில் உம்
லவ்வின் கு இ முதல் இரண்டு உம் யவ்வின் கு
இ உம் மொழி முதல் ஆகி முன் வரும் ஏ148
இணைந்து இயல் காலை ய ர ல கு இகரம் உம்
ம வ கு உகரம் உம் நகர கு அகரம் உம்
மிசை வரும் ர வழி உ உம் ஆம் பிற149
ற ன ழ எ ஒ உம் உயிர்மெய் உம் உயிரளபு
அல்லா சார்பு உம் தமிழ் பிற பொது ஏ150
2.3. உயிரிற்றுப் புணரியல்
2.3.1. புணர்ச்சி
மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்கள் உம்
தன் ஒடு உம் பிறிது ஒடு உம் அல்வழி வேற்றுமை
பொருளின் பொருந்துழி நிலை வரு மொழிகள்
இயல்பு ஒடு விகாரத்து இயைவது புணர்ப்பு ஏ151
வேற்றுமை ஐ முதல் ஆறு ஆம் அல்வழி
தொழில் பண்பு உவமை உம்மை அன்மொழி
எழுவாய் விளி ஈர் எச்சம் முற்று இடை உரி
தழுவுதொடர் அடுக்கு என ஈர் ஏழ் ஏ152
விகாரம் அனைத்து உம் மேவலது இயல்பு ஏ
153
தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
மூன்று உம் மொழி மூ இடத்து உம் ஆகும்154
வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல்
விரித்தல் தொகுத்தல் உம் வரும் செய்யுள் வேண்டுழி155
ஒரு மொழி மூ வழி குறைதல் உம் அனைத்து ஏ
156
ஒரு புணர் கு இரண்டு மூன்று உம் உற பெறும்
157
2.3.2. பொதுப் புணர்ச்சி
எண் மூ எழுத்து ஈற்று எ வகை மொழி கு உம்
முன் வரும் ஞ ந ம ய வக்கள் இயல்பு உம்
குறில் வழி ய தனி ஐ நொ து முன் மெலி
மிகல் உம் ஆம் ண ள ன ல வழி ந திரியும்158
பொது பெயர் உயர்திணை பெயர்கள் ஈற்று மெய்
வலி வரின் இயல்பு ஆம் ஆவி ய ர முன்
வன்மை மிகா சில விகாரம் ஆம் உயர்திணை159
ஈற்று யா வினா விளி பெயர் முன் வலி இயல்பு ஏ
160
ஆவி ய ர ழ இறுதி முன்னிலை வினை
ஏவல் முன் வல்லினம் இயல்பு ஒடு விகற்பு ஏ161
2.3.3. உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி
இ ஈ ஐ வழி ய உம் ஏனை
உயிர் வழி வ உம் ஏ முன் இவ் இருமை உம்
உயிர் வரின் உடம்படுமெய் என்று ஆகும்162
எகர வினா மு சுட்டின் முன்னர்
உயிர் உம் யகரம் உம் எய்தின் வ உம்
பிற வரின் அவை உம் தூக்கு இல் சுட்டு
நீளின் யகரம் உம் தோன்றுதல் நெறி ஏ163
உயிர் வரின் உ குறள் மெய் விட்டு ஓடும்
ய வரின் இ ஆம் முற்று உம் அற்று ஒரோ வழி164
2.3.4. உயிரீற்றுமுன் வல்லினம்
இயல்பின் உம் விதியின் உம் நின்ற உயிர் முன்
க ச த ப மிகும் விதவாதன மன் ஏ165
மர பெயர் முன்னர் இன மெல்லெழுத்து
வர பெறுன உம் உள வேற்றுமை வழி ஏ166
செய்யிய என்னும் வினையெச்சம் பல் வகை
பெயரின் எச்சம் முற்று ஆறன் உருபு ஏ
அஃறிணை பன்மை அம்ம முன் இயல்பு ஏ167
வாழிய என்பதன் ஈற்றின் உயிர்மெய்
ஏகல் உம் உரித்து அஃது ஏகின் உம் இயல்பு ஏ168
சாவ என் மொழி ஈற்று உயிர்மெய் சாதல் உம் விதி
169
பல சில எனும் இவை தம் முன் தாம் வரின்
இயல்பு உம் மிகல் உம் அகரம் ஏக
லகரம் றகரம் ஆகல் உம் பிற வரின்
அகரம் விகற்பம் ஆகல் உம் உள பிற170
அல்வழி ஆ மா மியா முற்று முன் மிகா
171
குறியதன் கீழ் ஆ குறுகல் உம் அதன் ஓடு
உகரம் ஏற்றல் உம் இயல்பு உம் ஆம் தூக்கின்172
அன்றி இன்றி என் வினையெஞ்சு இகரம்
தொடர்பின் உள் உகரம் ஆய் வரின் இயல்பு ஏ173
உரி வரின் நாழியின் ஈற்று உயிர்மெய் கெட
மருவும் டகரம் உரியின் வழி ஏ
யகர உயிர்மெய் ஆம் ஏற்பன வரின் ஏ174
சுவை புளி முன் இன மென்மை உம் தோன்றும்
175
அல்வழி இ ஐ முன்னர் ஆயின்
இயல்பு உம் மிகல் உம் விகற்பம் உம் ஆகும்176
ஆ முன் பகர ஈ அனைத்து உம் வர குறுகும்
மேலன அல்வழி இயல்பு ஆகும் ஏ177
ப ஈ நீ மீ முன்னர் அல்வழி
இயல்பு ஆம் வலி மெலி மிகல் உம் ஆம் மீ கு ஏ178
மூன்று ஆறு உருபு எண் வினைத்தொகை சுட்டு ஈறு
ஆகும் உகரம் முன்னர் இயல்பு ஆம்179
அது முன் வரும் அன்று ஆன்று ஆம் தூக்கின்
180
வன் தொடர் அல்லன முன் மிகா அல்வழி
181
இடை தொடர் ஆய்த தொடர் ஒற்று இடையின்
மிகா நெடில் உயிர் தொடர் முன் மிகா வேற்றுமை182
நெடில் ஓடு உயிர் தொடர் குற்றுகரங்கள் உள்
ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிக ஏ183
மென் தொடர் மொழி உள் சில வேற்றுமை இல்
தம் இன வன் தொடர் ஆகா மன் ஏ184
ஐ ஈற்று உடை குற்றுகரம் உம் உள ஏ
185
திசை ஒடு திசை உம் பிற உம் சேரின்
நிலை ஈற்று உயிர்மெய் க ஒற்று நீங்கல் உம்
றகரம் ன ல ஆ திரிதல் உம் ஆம் பிற186
தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய் வரின்
187
எண் நிறை அளவு உம் பிற உம் எய்தின்
ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண் உள்
முதல் ஈர் எண் முதல் நீளும் மூன்று ஆறு
ஏழ் குறுகும் ஆறு ஏழு அல்லவற்றின்
ஈற்று உயிர்மெய் உம் ஏழன் உயிர் உம்
ஏகும் ஏற்புழி என்மனார் புலவர்188
ஒன்றன் புள்ளி ரகரம் ஆக
இரண்டன் ஒற்று உயிர் ஏக உ வரும் ஏ189
மூன்றன் உறுப்பு அழிவு உம் வந்தது உம் ஆகும்
190
நான்கன் மெய் ஏ ல ற ஆகும் ஏ
191
ஐந்தன் ஒற்று அடைவது உம் இனம் உம் கேடு உம்
192
எட்டன் உடம்பு ண ஆகும் என்ப
193
ஒன்பான் ஒடு பத்து உம் நூறு உம் ஒன்றின்
முன்னது இன் ஏனைய முரணி ஒ ஒடு
தகரம் நிறீஇ பஃது அகற்றி ன ஐ
நிரல் ஏ ண ள ஆ திரிப்பது நெறி ஏ194
முதல் இரு நான்கு ஆம் எண் முனர் பத்தின்
இடை ஒற்று ஏகல் ஆய்தம் ஆகல்
என இரு விதி உம் ஏற்கும் என்ப195
ஒருபஃது ஆதி முன் ஒன்று முதல் ஒன்பான்
எண் உம் அவை ஊர் பிற உம் எய்தின்
ஆய்தம் அழிய ஆண்டு ஆகும் த ஏ196
ஒன்று முதல் ஈர் ஐந்து ஆயிரம் கோடி
எண் நிறை அளவு உம் பிற வரின் பத்தின்
ஈற்று உயிர்மெய் கெடுத்து இன் உம் இற்று உம்
ஏற்பது ஏற்கும் ஒன்பது உம் இனைத்து ஏ197
இரண்டு முன் வரின் பத்தின் ஈற்று உயிர்மெய்
கரந்திட ஒற்று ன ஆகும் என்ப198
ஒன்பது ஒழித்த எண் ஒன்பது உம் இரட்டின்
முன்னதின் முன் அல ஓட உயிர் வரின்
வ உம் மெய் வரின் வந்தது உம் மிகல் நெறி199
பூ பெயர் முன் இன மென்மை உம் தோன்றும்
200
இடைச்சொல் ஏ ஓ முன் வரின் இயல்பு ஏ
201
வேற்றுமை ஆயின் ஐகான் இறு மொழி
ஈற்று அழிவு ஓடு உம் அம் ஏற்ப உம் உள ஏ202
பனை முன் கொடி வரின் மிகல் உம் வலி வரின்
ஐ போய் அம் உம் திரள் வரின் உறழ்வு உம்
அட்டு உறின் ஐ கெட்டு அ நீள்வு உம் ஆம் வேற்றுமை203
2.4.மெய்யீற்று புணரியல்
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு ஏ
204
தனி குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும்
205
தன் ஒழி மெய் முன் ய வரின் இகரம்
துன்னும் என்று துணிநர் உம் உளர் ஏ206
ஞ ண ந ம ல வ ள ன ஒற்று இறு தொழிற்பெயர்
ஏவல் வினை நனி ய அல் மெய் வரின்
உ உறும் ஏவல் உறா சில சில் வழி207
ந இறு தொழிற்பெயர் கு அ உம் ஆம் வேற்றுமை
208
ண ன வல்லினம் வர ட ற உம் பிற வரின்
இயல்பு உம் ஆகும் வேற்றுமை கு அல்வழி கு
அனைத்து மெய் வரின் உம் இயல்பு ஆகும் ஏ209
குறில் அணைவு இல்லா ண னக்கள் வந்த
நகரம் திரிந்துழி நண்ணும் கேடு ஏ210
சாதி குழூஉ பரண் கவண் பெயர் இறுதி
இயல்பு ஆம் வேற்றுமை கு உணவு எண் சாண் பிற
ட ஆகல் உம் ஆம் அல்வழி உம் ஏ211
னஃகான் கிளைப்பெயர் இயல்பு உம் அஃகான்
அடைவு உம் ஆகும் வேற்றுமை பொருள் கு ஏ212
மீன் ற ஒடு பொரூஉம் வேற்றுமை வழி ஏ
213
தேன் மொழி மெய் வரின் இயல்பு உம் மென்மை
மேவின் இறுதி அழிவு உம் வலி வரின்
ஈறு போய் வலி மெலி மிகல் உம் ஆம் இரு வழி214
மரம் அல் எகின் மொழி இயல்பு உம் அகரம்
மருவ வலி மெலி மிகல் உம் ஆகும்215
குயின் ஊன் வேற்றுமை கண் உம் இயல்பு ஏ
216
மின் பின் பன் கன் தொழிற்பெயர் அனைய
கன் அ ஏற்று மென்மை ஓடு உறழும்217
தன் என் என்பவற்று ஈற்று ன வன்மை ஓடு
உறழும் நின் ஈறு இயல்பு ஆம் உற ஏ218
ம ஈறு ஒற்று அழிந்து உயிர் ஈறு ஒப்ப உம்
வன்மை கு இனம் ஆ திரிப உம் ஆகும்219
வேற்றுமை ம போய் வலி மெலி உறழ்வு உம்
அல்வழி உயிர் இடை வரின் இயல்பு உம் உள220
நும் தம்
எம் நம் ஈறு ஆம் ம வரு ஞ ந ஏ221
அகம் முனர் செவி கை வரின் இடையன கெடும்
222
ஈம் உம்
கம் உம் உரும் உம் தொழிற்பெயர் மானும்
முதலன வேற்றுமை கு அ உம் பெறும் ஏ223
ய ர ழ முன்னர் க ச த ப அல்வழி
இயல்பு உம் மிகல் உம் ஆகும் வேற்றுமை
மிகல் உம் இனத்து ஓடு உறழ்தல் உம் விதி மேல்224
தமிழ் அ உற உம் பெறும் வேற்றுமை கு ஏ
தாழ் உம் கோல் வந்து உறுமேல் அற்று ஏ225
கீழின் முன் வன்மை விகற்பம் உம் ஆகும்
226
ல ள வேற்றுமை இல் ற ட உம் அல்வழி
அவற்று ஓடு உறழ்வு உம் வலி வரின் ஆம் மெலி
மேவின் ன ண உம் இடை வரின் இயல்பு உம்
ஆகும் இரு வழி ஆன் உம் என்ப227
குறில் வழி ல ள த அணையின் ஆய்தம்
ஆக உம் பெறூஉம் அல்வழி ஆன் ஏ228
குறில் செறியா ல ள அல்வழி வந்த
தகரம் திரிந்த பின் கேடு உம் ஈர் இடத்து உம்
வரு ந திரிந்த பின் மாய்வு உம் வலி வரின்
இயல்பு உம் திரிபு உம் ஆவன உள பிற229
ல ள இறு தொழிற்பெயர் ஈர் இடத்து உம் உ உறா
வலி வரின் அல்வழி இயல்பு உம் ஆவன உள230
வல் ஏ தொழிற்பெயர் அற்று இரு வழி உம்
பலகை நாய் வரின் உம் வேற்றுமை கு அ உம் ஆம்231
நெல் உம் செல் உம் கொல் உம் சொல் உம்
அல்வழி ஆன் உம் றகரம் ஆகும்232
இல் என் இன்மை சொல் கு ஐ அடைய
வன்மை விகற்பம் உம் ஆகாரத்து ஒடு
வன்மை ஆகல் உம் இயல்பு உம் ஆகும்233
புள் உம் வள் உம் தொழிற்பெயர் உம் மானும்
234
சுட்டு வகரம் மூ இனம் உற முறை ஏ
ஆய்தம் உம் மென்மை உம் இயல்பு உம் ஆகும்235
தெவ் என் மொழி ஏ தொழிற்பெயர் அற்று ஏ
ம வரின் வஃகான் ம உம் ஆகும்236
ன ல முன் ற ன உம் ண ள முன் ட ண உம்
ஆகும் த நக்கள் ஆயும்கால் ஏ237
உருபின் முடிபவை ஒக்கும் அ பொருளின் உம்
238
இடை உரி வடசொலின் இயம்பிய கொளாத உம்
போலி உம் மரூஉ உம் பொருந்திய ஆற்றின் கு
இயைய புணர்த்தல் யாவர் கு உம் நெறி ஏ239
2.5. உருபு புணரியல்
ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என
வரு பெயர் ஐந்து ஒடு பெயர் முதல் இரு நான்கு
உருபு உம் உறழ்தர நாற்பது ஆம் உருபு ஏ240
பெயர் வழி தம் பொருள் தர வரும் உருபு ஏ
242
ஒற்று உயிர் முதல் ஈற்று உருபுகள் புணர்ச்சியின்
ஒக்கும் மன் அ பெயர் வேற்றுமை புணர்ப்பு ஏ242
பதம் முன் விகுதி உம் பதம் உம் உருபு உம்
புணர் வழி ஒன்று உம் பல உம் சாரியை
வருதல் உம் தவிர்தல் உம் விகற்பம் உம் ஆகும்243
அன் ஆன் இன் அல் அற்று இற்று அத்து அம்
தம் நம் நும் ஏ அ உ ஐ கு ன
இன்ன பிற உம் பொது சாரியை ஏ244
எல்லாம் என்பது இழிதிணை ஆயின்
அற்று ஓடு உருபின் மேல் உம் உறும் ஏ
அன்றேல் நம் இடை அடைந்து அற்று ஆகும்245
எல்லார் உம் எல்லீர் உம் என்பவற்று உம்மை
தள்ளி நிரல் ஏ தம் நும் சார
புல்லும் உருபின் பின்னர் உம் ஏ246
தான் தாம் நாம் முதல் குறுகும் யான் யாம்
நீ நீர் என் எம் நின் நும் ஆம் பிற
குவ்வின் அ வரும் நான்கு ஆறு இரட்டல247
ஆ மா கோ ன அணைய உம் பெறும் ஏ
248
ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண் ஊர்
பத்தின் முன் ஆன் வரின் ப ஒற்று ஒழிய மேல்
எல்லாம் ஓடும் ஒன்பது உம் இற்று ஏ249
வ இறு சுட்டின் கு அற்று உறல் வழி ஏ
250
சுட்டின் முன் ஆய்தம் அன் வரின் கெடும் ஏ
251
அத்தின் அகரம் அகர முனை இல்லை
252
இதன் கு இது சாரியை எனின் அளவு இன்மையின்
விகுதி உம் பதம் உம் உருபு உம் பகுத்து இடை
நின்ற எழுத்து உம் பதம் உம் இயற்கை உம்
ஒன்ற உணர்த்தல் உரவோர் நெறி ஏ253
விகுதி பதம் சாரியை உருபு அனைத்தின் உம்
உரைத்த விதியின் ஓர்ந்து ஒப்பன கொளல் ஏ254
இயல்பின் விகாரம் உம் விகாரத்து இயல்பு உம்
உயர்திணை இடத்து விரிந்து உம் தொக்கு உம்
விரவுப்பெயரின் விரிந்து உம் நின்று உம்
அன்ன பிற உம் ஆகும் ஐ உருபு ஏ255
புள்ளி உம் உயிர் உம் ஆய் இறு சொல் முன்
தம்மின் ஆகிய தொழில் மொழி வரின் ஏ
வல்லினம் விகற்பம் உம் இயல்பு உம் ஆகும்256
இதன் கு இது முடிபு என்று எஞ்சாது யா உம்
விதிப்ப அளவு இன்மையின் விதித்தவற்று இயல் ஆன்
வகுத்து உரையாத உம் வகுத்தனர் கொளல் ஏ257
3. சொல்லதிகாரம் 3.1. பெயரியல்
மு சகம் நிழற்றும் முழு மதி மு குடை
அச்சுதன் அடி தொழுது அறைகுவன் சொல் ஏ258
ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா
இரு திணை ஐம் பால் பொருள் ஐ உம் தன் ஐ உம்
மூ வகை இடத்து உம் வழக்கு ஒடு செய்யுளின்
வௌிப்படை குறிப்பின் விரிப்பது சொல் ஏ259
ஒருமொழி ஒரு பொருளன ஆம் தொடர்மொழி
பல பொருளன பொது இருமை உம் ஏற்பன260
மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்று உயிர் உள்ள உம் இல்ல உம் அஃறிணை261
ஆண் பெண் பலர் என மு பாற்று உயர்திணை
262
ஒன்று ஏ பல என்று இரு பாற்று அஃறிணை
263
பெண்மை விட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால்
ஆண்மை விட்டு அல்லது அவாவுவ பெண்பால்
இருமை உம் அஃறிணை அன்ன உம் ஆகும்264
படர்க்கை வினைமுற்று நாமம் குறிப்பின்
பெறப்படும் திணை பால் அனைத்து உம் ஏனை
இடத்து அவற்று ஒருமை பன்மை பால் ஏ265
தன்மை முன்னிலை படர்க்கை மூ இடன் ஏ
266
இலக்கணம் உடையது இலக்கணப்போலி
மரூஉ என்று ஆகும் மூ வகை இயல்பு உம்
இடக்கரடக்கல் மங்கலம் குழூஉக்குறி
எனும் மு தகுதி ஓடு ஆறு ஆம் வழக்கு இயல்267
பல் வகை தாதுவின் உயிர் கு உடல் போல் பல
சொல் ஆல் பொருள் கு இடன் ஆக உணர்வின் இன்
வல்லோர் அணி பெற செய்வன செய்யுள்268
ஒன்று ஒழி பொது சொல் விகாரம் தகுதி
ஆகுபெயர் அன்மொழி வினைக்குறிப்பு ஏ
முதல் தொகை குறிப்பு ஓடு இன்ன பிற உம்
குறிப்பின் தரு மொழி அல்லன வௌிப்படை269
3.1.1. சொற்பாகுபாடு
அது ஏ
இயற்சொல் திரிசொல் இயல்பின் பெயர் வினை
என இரண்டு ஆகும் இடை உரி அடுத்து
நான்கு உம் ஆம் திசை வடசொல் அணுகா வழி270
செந்தமிழ் ஆகி திரியாது யார் கு உம்
தம் பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்271
ஒரு பொருள் குறித்த பல சொல் ஆகி உம்
பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகி உம்
அரிது உணர் பொருளன திரிசொல் ஆகும்272
செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தின் உம்
ஒன்பதிற்று இரண்டின் இல் தமிழ் ஒழி நிலத்தின் உம்
தம் குறிப்பின ஏ திசைச்சொல் என்ப273
பொது எழுத்து ஆன் உம் சிறப்பு எழுத்து ஆன் உம்
ஈர் எழுத்து ஆன் உம் இயைவன வடசொல்274
3.1.2. பெயர்ச்சொல்
இடுகுறி காரணம் மரபு ஓடு ஆக்கம்
தொடர்ந்து தொழில் அல காலம் தோற்றா
வேற்றுமை கு இடன் ஆய் திணை பால் இடத்து ஒன்று
ஏற்ப உம் பொது உம் ஆவன பெயர் ஏ275
அவற்று உள்
கிளை எண் குழூஉ முதல் பல் பொருள் திணை தேம்
ஊர் வான் அகம் புறம் முதல நிலன் யாண்டு
இருது மதி நாள் ஆதி காலம்
தோள் குழல் மார்பு கண் காது முதல் உறுப்பு (5)
அளவு அறிவு ஒப்பு வடிவு நிறம் கதி
சாதி குடி சிறப்பு ஆதி பல் குணம்
ஓதல் ஈதல் ஆதி பல் வினை
இவை அடை சுட்டு வினா பிற மற்று ஓடு
உற்ற ன ஈறு நம்பி ஆடூஉ (10)
விடலை கோ வேள் குரிசில் தோன்றல்
இன்னன ஆண் பெயர் ஆகும் என்ப276
கிளை முதல் ஆக கிளந்த பொருள்கள் உள்
ள ஒற்று இகர கு ஏற்ற ஈற்ற உம்
தோழி செவிலி மகடூஉ நங்கை
தையல் ஓடு இன்னன பெண்பால் பெயர் ஏ277
கிளந்த கிளை முதல் உற்ற ர ஈற்ற உம்
கள் என் ஈற்றின் ஏற்ப உம் பிற உம்
பல்லோர் பெயரின் பகுதி ஆகும்278
வினா சுட்டு உடன் உம் வேறு உம் ஆம் பொருள்
ஆதி உறு து சுட்டு அணை ஆய்தம்
ஒன்று என் எண் இன்னன ஒன்றன் பெயர் ஏ279
முன்னர் அவ் ஒடு வரு வை அ உம்
சுட்டு இறு வ உம் கள் இறு மொழி உம்
ஒன்று அல் எண் உம் உள்ள இல்ல
பல்ல சில்ல உள இல பல சில
இன்ன உம் பலவின் பெயர் ஆகும் ஏ280
பால் பகா அஃறிணை பெயர்கள் பால் பொதுமைய
281
முதற்பெயர் நான்கு உம் சினைப்பெயர் நான்கு உம்
சினைமுதற்பெயர் ஒரு நான்கு உம் முறை இரண்டு உம்
தன்மை நான்கு உம் முன்னிலை ஐந்து உம்
எல்லாம் தாம் தான் இன்னன பொது பெயர்282
ஆண்மை பெண்மை ஒருமை பன்மையின்
ஆம் அ நான்மைகள் ஆண் பெண் முறைப்பெயர்283
அவற்று உள்
ஒன்று ஏ இரு திணை தன் பால் ஏற்கும்284
தன்மை யான் நான் யாம் நாம் முன்னிலை
எல்லீர் நீயிர் நீவிர் நீர் நீ
அல்லன படர்க்கை எல்லாம் எனல் பொது285
வினையின் பெயர் ஏ படர்க்கை வினையாலணையும்பெயர்
ஏ யாண்டு உம் ஆகும்286
தான் யான் நான் நீ ஒருமை பன்மை தாம்
யாம் நாம் எலாம் எலீர் நீயிர் நீர் நீவிர்287
ஒருவன் ஒருத்தி பெயர் மேல் எண் இல
288
ஒருவர் என்பது உயர் இரு பாற்று ஆய்
பன்மை வினை கொளும் பாங்கிற்று என்ப289
பொருள் முதல் ஆறு ஓடு அளவை சொல் தானி
கருவி காரியம் கருத்தன் ஆதி உள்
ஒன்றன் பெயர் ஆன் அதன் கு இயை பிறிது ஐ
தொல் முறை உரைப்பன ஆகுபெயர் ஏ290
ஏற்கும் எ வகை பெயர் கு உம் ஈறு ஆய் பொருள்
வேற்றுமை செய்வன எட்டு ஏ வேற்றுமை291
பெயர் ஏ ஐ ஆல் கு இன் அது கண்
விளி என்று ஆகும் அவற்றின் பெயர் முறை292
ஆறன் உருபு உம் ஏற்கும் அ உருபு ஏ
293
நீயிர் நீவிர் நான் எழுவாய் அல பெறா
294
அவற்று உள்
எழுவாய் உருபு திரிபு இல் பெயர் ஏ
வினை பெயர் வினா கொளல் அதன் பயனிலை ஏ295
இரண்டாவதன் உருபு ஐ ஏ அதன் பொருள்
ஆக்கல் அழித்தல் அடைதல் நீத்தல்
ஒத்தல் உடைமை ஆதி ஆகும்296
மூன்றாவதன் உருபு ஆல் ஆன் ஓடு ஒடு
கருவி கருத்தா உடனிகழ்வு அதன் பொருள்297
நான்காவதன் கு உருபு ஆகும் கு ஏ
கொடை பகை நேர்ச்சி தகவு அதுவாதல்
பொருட்டு முறை ஆதியின் இதன் கு இது எனல் பொருள் ஏ298
ஐந்தாவதன் உருபு இல் உம் இன் உம்
நீங்கல் ஒப்பு எல்லை ஏது பொருள் ஏ299
ஆறன் ஒருமை கு அது உம் ஆது உம்
பன்மை கு அ உம் உருபு ஆம் பண்பு உறுப்பு
ஒன்றன் கூட்டம் பலவின் ஈட்டம்
திரிபின் ஆக்கம் ஆம் தற்கிழமை உம்
பிறிதின்கிழமை உம் பேணுதல் பொருள் ஏ300
ஏழன் உருபு கண் ஆதி ஆகும்
பொருள் முதல் ஆறு உம் ஓர் இரு கிழமையின்
இடன் ஆய் நிற்றல் இதன் பொருள் என்ப301
கண் கால் கடை இடை தலை வாய் திசை வயின்
முன் சார் வலம் இடம் மேல் கீழ் புடை முதல்
பின் பாடு அளை தேம் உழை வழி உழி உளி
உள் அகம் புறம் இல் இட பொருள் உருபு ஏ302
எட்டன் உருபு ஏ எய்து பெயர் ஈற்றின்
திரிபு குன்றல் மிகுதல் இயல்பு அயல்
திரிபு உம் ஆம் பொருள் படர்க்கையோர் ஐ
தன் முகம் ஆக தான் அழைப்பது ஏ303
இ உ ஊ ஓடு ஐ ஓ ன ள ர ல
ய ஈற்று உயர்திணை ஓ ர அல் இவற்று ஒடு
ணஃகான் ஆ ஈறு ஆகும் பொது பெயர்
ஞ ந ஒழி அனைத்து ஈற்று அஃறிணை விளிப்பன304
இ மு பெயர் கண் இயல்பு உம் ஏ உம்
இகர நீட்சி உம் உருபு ஆம் மன் ஏ305
ஐ இறு பொது பெயர் கு ஆய் உம் ஆ உம்
உருபு ஆம் அல்லவற்று ஆய் உம் ஆகும்306
ஒரு சார் ன ஈற்று உயர்திணை பெயர் கண்
அளபு ஈறு அழிவு அயல் நீட்சி அதன் ஓடு
ஈறு போதல் அவற்று ஓடு ஓ உறல்
ஈறு அழிந்து ஓ உறல் இறுதி ய ஆதல்
அதன் ஓடு அயல் திரிந்து ஏ உறல் ஈறு அழிந்து
அயல் ஏ ஆதல் உம் விளி உருபு ஆகும்307
ளஃகான் உயர் பெயர் கு அளபு ஈறு அழிவு அயல்
நீட்சி இறுதி ய ஒற்று ஆதல்
அயல் இல் அகரம் ஏ ஆதல் உம் விளி தனு308
ர ஈற்று உயர் பெயர் கு அளபு எழல் ஈற்று அயல்
அகரம் இ ஈ ஆதல் ஆண்டை ஆ
ஈ ஆதல் அதன் ஓடு ஏ உறல் ஈற்று ஏ
மிக்கு அயல் யா கெட்டு அதன் அயல் நீடல்
ஈற்றின் ஈர் உறல் இவை உம் ஈண்டு உருபு ஏ309
லகார ஈற்று உயர் பெயர் கு அளபு அயல் நீட்சி உம்
310
ன ஈற்று உயர்திணை அல் இரு பெயர் கண்
இறுதி அழிவு அதன் ஓடு அயல் நீட்சி311
ல ள ஈற்று அஃறிணை பெயர் பொது பெயர் கண்
ஈற்று அயல் நீட்சி உம் உருபு ஆகும் ஏ312
அண்மையின் இயல்பு உம் ஈறு அழிவு உம் சேய்மையின்
அளபு உம் புலம்பின் ஓ உம் ஆகும்313
நு ஒடு வினா சுட்டு உற்ற ன ள ர
வை து தாம் தான் இன்னன விளியா314
முதல் ஐ ஐ உறின் சினை ஐ கண் உறும்
அது முதல் கு ஆயின் சினை கு ஐ ஆகும்315
முதல் இவை சினை இவை என வேறு உள இல
உரைப்போர் குறிப்பின அற்று ஏ பிண்டம் உம்316
யாதன் உருபின் கூறிற்று ஆயின் உம்
பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும்317
ஐ ஆன் கு செய்யுள் கு அ உம் ஆகும்
ஆகா அஃறிணை கு ஆன் அல்லாதன318
எல்லை இன் உம் அது உம் பெயர் கொளும்
அல்ல வினை கொளும் நான்கு ஏழ் இருமை உம்
புல்லும் பெரும்பாலும் என்மனார் புலவர்319
3.2. வினையியல்
3.2.1. வினைச்சொல்
செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
செய் பொருள் ஆறு உம் தருவது வினை ஏ320
பொருள் முதல் ஆறின் உம் தோற்றி முன் ஆறன் உள்
வினை முதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பு ஏ321
அவை தாம்
முற்று உம் பெயர் வினை எச்சம் உம் ஆகி
ஒன்றன் கு உரிய உம் பொது உம் ஆகும்322
3.2.2. வினைமுற்று
பொது இயல்பு ஆறு ஐ உம் தோற்றி பொருட்பெயர்
முதல் அறு பெயர் அலது ஏற்பு இல முற்று ஏ323
ஒருவன் முதல் ஐந்து ஐ உம் படர்க்கை இடத்து உம்
ஒருமை பன்மை ஐ தன்மை முன்னிலையின் உம்
மு காலத்தின் உம் முரண முறை ஏ
மூ ஐந்து இரு மூன்று ஆறு ஆய் முற்று
வினைப்பதம் ஒன்று ஏ மூ ஒன்பான் ஆம்324
அன் ஆன் இறு மொழி ஆண்பால் படர்க்கை
325
அள் ஆள் இறு மொழி பெண்பால் படர்க்கை
326
அர் ஆர் ப ஊர் அகரம் மார் ஈற்ற
பல்லோர் படர்க்கை மார் வினை ஒடு முடிம் ஏ327
து று டு குற்றியலுகர ஈற்ற
ஒன்றன் படர்க்கை டு குறிப்பின் ஆகும்328
அ ஆ ஈற்ற பலவின் படர்க்கை
ஆ ஏ எதிர்மறை கண்ணது ஆகும்329
தன்மை முன்னிலை வியங்கோள் வேறு இலை
உண்டு ஈர் எச்சம் இரு திணை பொது வினை330
கு டு து று என்னும் குன்றியலுகரம் ஓடு
அல் அன் என் ஏன் ஆகும் ஈற்ற
இரு திணை மு கூற்று ஒருமைத்தன்மை331
அம் ஆம் என்பன முன்னிலையார் ஐ உம்
எம் ஏம் ஓம் இவை படர்க்கையார் ஐ உம்
உம் ஊர் க ட த ற இரு பாலார் ஐ உம்
தன் ஒடு படுக்கும் தன்மைப்பன்மை332
செய்கு என் ஒருமை உம் செய்கும் என் பன்மை உம்
வினை ஒடு முடியின் உம் விளம்பிய முற்று ஏ333
முன்னிலை கூடிய படர்க்கை உம் முன்னிலை
334
ஐ ஆய் இகர ஈற்ற மூன்று உம்
ஏவலின் வரூஉம் எல்லா ஈற்ற உம்
மு பால் ஒருமை முன்னிலை மொழி ஏ335
முன்னிலை முன்னர் ஈ உம் ஏ உம்
அ நிலை மரபின் மெய் ஊர்ந்து வரும் ஏ336
இர் ஈர் ஈற்ற இரண்டு உம் இரு திணை
பன்மை முன்னிலை மின் அவற்று ஏவல்337
க ய ஒடு ர ஒற்று ஈற்ற வியங்கோள்
இயலும் இடம் பால் எங்கு உம் என்ப338
வேறு இல்லை உண்டு ஐம் பால் மூ இடத்தன
339
3.2.3. பெயரெச்சம்
செய்த செய்கின்ற செய்யும் என் பாட்டு இல்
காலம் உம் செயல் உம் தோன்றி பால் ஒடு
செய்வது ஆதி அறு பொருட்பெயர் உம்
எஞ்ச நிற்பது பெயரெச்சம் ஏ340
செய்யும் என் எச்ச ஈற்று உயிர்மெய் சேறல் உம்
செய்யுள் உள் உம் உந்து ஆகல் உம் முற்றேல்
உயிர் உம் உயிர்மெய் உம் ஏகல் உம் உள ஏ341
3.2.4. வினையெச்சம்
தொழில் உம் காலம் உம் தோன்றி பால் வினை
ஒழிய நிற்பது வினையெச்சம் ஏ342
செய்து செய்பு செய்யா செய்யூ
செய்தென செய செயின் செய்யிய செய்யியர்
வான் பான் பாக்கு இன வினையெச்சம் பிற
ஐந்து ஒன்று ஆறு மு காலம் உம் முறை தரும்343
அவற்று உள்
முதல் இல் நான்கு உம் ஈற்று இல் மூன்று உம்
வினைமுதல் கொள்ளும் பிற உம் ஏற்கும் பிற344
சினை வினை சினை ஒடு உம் முதல் ஒடு உம் செறியும்
345
சொல் திரியின் உம் பொருள் திரியா வினைக்குறை
346
3.2.5. ஒழிபு
ஆக்க வினைக்குறிப்பு ஆக்கம் இன்று இயலா347
பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை இல்
செல்லாது ஆகும் செய்யும் என் முற்று ஏ348
யார் என் வினா வினைக்குறிப்பு உயர் மு பால்
349
எவன் என் வினா வினை குறிப்பு இழி இருபால்
350
வினைமுற்று ஏ வினையெச்சம் ஆகல் உம்
குறிப்புமுற்று ஈர் எச்சம் ஆகல் உம் உள ஏ351
3.3. பொதுவியல்
இரு திணை ஆண் பெண் உள் ஒன்றன் ஐ ஒழிக்கும்
பெயர் உம் வினை உம் குறிப்பின் ஆன் ஏ352
பெயர் வினை இடத்து ன ள ர ய ஈற்று அயல்
ஆ ஓ ஆகல் உம் செய்யுள் உள் உரித்து ஏ353
உருபு உம் வினை உம் எதிர்மறுத்து உரைப்பின் உம்
திரியா தத்தம் ஈற்று உருபு இன் என்ப354
உருபு பல அடுக்கின் உம் வினை வேறு அடுக்கின் உம்
ஒரு தம் எச்சம் ஈறு உற முடியும்355
உருபு முற்று ஈர் எச்சம் கொள்ளும்
பெயர் வினை இடை பிற வரல் உம் ஆம் ஏற்பன356
எச்ச பெயர் வினை எய்தும் ஈற்றின் உம்
357
ஒரு மொழி ஒழி தன் இனம் கொளல் கு உரித்து ஏ
358
பொது பெயர் வினைகளின் பொதுமை நீக்கும்
மேல் வரும் சிறப்பு பெயர் வினை தாம் ஏ359
பெயர் வினை உம்மை சொல் பிரிப்பு என ஒழியிசை
எதிர்மறை இசை எனும் சொல் ஒழிபு ஒன்பது உம்
குறிப்பு உம் தத்தம் எச்சம் கொள்ளும்360
3.3.1. தொகைநிலை தொடர்மொழி
பெயர் ஒடு பெயர் உம் வினை உம் வேற்றுமை
முதலிய பொருளின் அவற்றின் உருபு இடை
ஒழிய இரண்டு முதல் ஆ தொடர்ந்து ஒரு
மொழி போல் நடப்பன தொகைநிலை தொடர்ச்சொல்361
வேற்றுமை வினை பண்பு உவமை உம்மை
அன்மொழி என அ தொகை ஆறு ஆகும்362
இரண்டு முதல் ஆ இடை ஆறு உருபு உம்
வௌிப்படல் இல்லது வேற்றுமைத்தொகை ஏ363
காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை
364
பண்பு ஐ விளக்கும் மொழி தொக்கன உம்
ஒரு பொருள் கு இரு பெயர் வந்த உம் குணத்தொகை365
உவம உருபு இலது உவமத்தொகை ஏ
366
போல புரைய ஒப்ப உறழ
மான கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்ப உம் பிற உம் உவமத்து உருபு ஏ367
எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல்
எனும் நான்கு அளவை உள் உம் இலது அ தொகை368
ஐம் தொகை மொழி மேல் பிற தொகல் அன்மொழி
369
முன் மொழி பின் மொழி பல் மொழி புற மொழி
எனும் நான்கு இடத்து உம் சிறக்கும் தொகை பொருள்370
வல் ஒற்று வரின் ஏ இடத்தொகை ஆகும்
மெல் ஒற்று வரின் ஏ பெயர்த்தொகை ஆகும்371
உயர்திணை உம்மைத்தொகை பலர் ஈறு ஏ
372
தொக்குழி மயங்குந இரண்டு முதல் ஏழ்
எல்லை பொருளின் மயங்கும் என்ப373
3.3.2. தொகாநிலை தொடர்மொழி
முற்று ஈர் எச்சம் எழுவாய் விளி பொருள்
ஆறு உருபு இடை உரி அடுக்கு இவை தொகாநிலை374
3.3.3. வழாநிலை வழுவமைதி
திணை ஏ பால் இடம் பொழுது வினா இறை
மரபு ஆம் ஏழ் உம் மயங்கின் ஆம் வழு ஏ375
ஐயம் திணை பால் அ அ பொதுவின் உம்
மெய் தெரி பொருள் மேல் அன்மை உம் விளம்புப376
உயர்திணை தொடர்ந்த பொருள் முதல் ஆறு உம்
அதன் ஒடு சார்த்தின் அ திணை முடிபின377
திணை பால் பொருள் பல விரவின சிறப்பின் உம்
மிகவின் உம் இழிபின் உம் ஒரு முடிபின ஏ378
உவப்பின் உம் உயர்வின் உம் சிறப்பின் உம் செறலின் உம்
இழிப்பின் உம் பால் திணை இழுக்கின் உம் இயல்பு ஏ379
ஒருமையின் பன்மை உம் பன்மையின் ஒருமை உம்
ஓர் இடம் பிற இடம் தழுவல் உம் உள ஏ380
தரல் வரல் கொடை செலல் சாரும் படர்க்கை
எழுவாய் இரண்டு உம் எஞ்சிய ஏற்கும்381
இறப்பு எதிர்வு நிகழ்வு என காலம் மூன்று ஏ
382
மு காலத்தின் உம் ஒத்து இயல் பொருள் ஐ
செப்புவர் நிகழும் காலத்து ஆன் ஏ383
விரைவின் உம் மிகவின் உம் தௌிவின் உம் இயல்பின் உம்
பிறழ உம் பெறூஉம் மு காலம் உம் ஏற்புழி384
அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை
ஏவல் தரும் வினா ஆறு உம் இழுக்கார்385
சுட்டு மறை நேர் ஏவல் வினாதல்
உற்றது உரைத்தல் உறுவது கூறல்
இனமொழி எனும் எண் இறை உள் இறுதி
நிலவிய ஐந்து உம் அ பொருண்மையின் நேர்ப386
வினாவின் உம் செப்பின் உம் விரவா சினை முதல்
387
எ பொருள் எ சொலின் எ ஆறு உயர்ந்தோர்
செப்பினர் அ படி செப்புதல் மரபு ஏ388
வேறு வினை பல் பொருள் தழுவிய பொது சொல் உம்
வேறு அவற்று எண் உம் ஓர் பொது வினை வேண்டும்389
வினை சார்பு இனம் இடம் மேவி விளங்கா
பல பொருள் ஒரு சொல் பணிப்பர் சிறப்பு எடுத்து ஏ390
எழுத்து இயல் திரியா பொருள் திரி புணர்மொழி
இசை திரிபு ஆல் தௌிவு எய்தும் என்ப391
ஒரு பொருள் மேல் பல பெயர் வரின் இறுதி
ஒரு வினை கொடுப்ப தனியும் ஒரோ வழி392
திணை நிலம் சாதி குடி ஏ உடைமை
குணம் தொழில் கல்வி சிறப்பு ஆம் பெயர் ஓடு
இயற்பெயர் ஏற்றிடின் பின் வரல் சிறப்பு ஏ393
படர்க்கை மு பெயர் ஓடு அணையின் சுட்டு
பெயர் பின் வரும் வினை எனின் பெயர் கு எங்கு உம்
மருவும் வழக்கு இடை செய்யுள் கு ஏற்புழி394
அசைநிலை பொருள்நிலை இசைநிறை கு ஒரு சொல்
இரண்டு மூன்று நான்கு எல்லை முறை அடுக்கும்395
இரட்டைக்கிளவி இரட்டு இன் பிரிந்து இசையா
396
ஒரு பொருள் பல் பெயர் பிரிவு இல வரையார்
397
ஒருபொருட்பன்மொழி சிறப்பின் இன் வழா398
இனைத்து என்று அறி பொருள் உலகின் இலா பொருள்
வினைப்படுத்து உரைப்பின் உம்மை வேண்டும்399
செயப்படுபொருள் ஐ செய்தது போல
தொழிற்பட கிளத்தல் உம் வழக்கின் உள் உரித்து ஏ400
பொருள் முதல் ஆறு ஆம் அடை சேர் மொழி இனம்
உள்ள உம் இல்ல உம் ஆம் இரு வழக்கின் உம்401
அடை மொழி இனம் அல்லது உம் தரும் ஆண்டு உறின்
402
அடை சினை முதல் முறை அடைதல் உம் ஈர் அடை
முதல் ஓடு ஆதல் உம் வழக்கு இயல் ஈர் அடை
சினை ஒடு செறிதல் உம் மயங்கல் உம் செய்யுள் கு ஏ403
இயற்கை பொருள் ஐ இற்று என கிளத்தல்
404
காரணம் முதல் ஆ ஆக்கம் பெற்று உம்
காரணம் இன்றி ஆக்கம் பெற்று உம்
ஆக்கம் இன்றி காரணம் அடுத்து உம்
இருமை உம் இன்றி உம் இயலும் செயும் பொருள்405
தம் பால் இல்லது இல் எனின் இனன் ஆய்
உள்ளது கூறி மாற்றி உம் உள்ளது
சுட்டி உம் உரைப்பர் சொல் சுருங்குதல் கு ஏ406
ஈ தா கொடு எனும் மூன்று உம் முறை ஏ
இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்பு உரை407
முன்னத்தின் உணரும் கிளவி உம் உள ஏ
408
கேட்குந போல உம் கிளக்குந போல உம்
இயங்குந போல உம் இயற்றுந போல உம்
அஃறிணை மருங்கின் உம் அறையப்படும் ஏ409
உருவக உவமை இல் திணை சினை முதல்கள்
பிறழ்தல் உம் பிற உம் பேணினர் கொளல் ஏ410
3.3.4. பொருள்கோள்
யாற்றுநீர் மொழிமாற்று நிரல்நிறை விற்பூண்
தாப்பிசை அளைமறிபாப்பு கொண்டுகூட்டு
அடிமறிமாற்று என பொருள்கோள் எட்டு ஏ411
மற்றைய நோக்காது அடி தொறு உம் வான் பொருள்
அற்று அற்று ஒழுகும் அஃது யாற்றுப்புனல் ஏ412
ஏற்ற பொருள் கு இயையும் மொழிகள் ஐ
மாற்றி ஓர் அடி உள் வழங்கல் மொழிமாற்று ஏ413
பெயர் உம் வினை உம் ஆம் சொல் ஐ உம் பொருள் ஐ உம்
வேறு நிரல் நிறீஇ முறையின் உம் எதிரின் உம்
நேரும் பொருள்கோள்நிரல்நிறை நெறி ஏ414
எழுவாய் இறுதி நிலை மொழி தம் உள்
பொருள் நோக்கு உடையது பூட்டுவில் ஆகும்415
இடை நிலை மொழி ஏ ஏனை ஈர் இடத்து உம்
நடந்து பொருள் ஐ நண்ணுதல் தாப்பிசை416
செய்யுள் இறுதி மொழி இடை முதலின் உம்
எய்திய பொருள்கோள் அளைமறிபாப்பு ஏ417
யாப்பு அடி பலவின் உம் கோப்பு உடை மொழிகள் ஐ
ஏற்புழி இசைப்பது கொண்டுகூட்டு ஏ418
ஏற்புழி எடுத்து உடன் கூட்டுறும் அடிய உம்
யாப்பு ஈறு இடை முதல் ஆக்கின் உம் பொருள் இசை
மாட்சி உம் மாறா அடிய உம் அடிமறி419
3.4. இடையியல்
வேற்றுமை வினை சாரியை ஒப்பு உருபுகள்
தத்தம் பொருள இசைநிறை அசைநிலை
குறிப்பு என் எண் பகுதியின் தனித்து இயல் இன்றி
பெயரின் உம் வினையின் உம் பின் முன் ஓர் இடத்து
ஒன்று உம் பல உம் வந்து ஒன்றுவது இடைச்சொல்420
தெரிநிலை தேற்றம் ஐயம் முற்று எண் சிறப்பு
எதிர்மறை எச்சம் வினா விழைவு ஒழியிசை
பிரிப்பு கழிவு ஆக்கம் இன்னன இடை பொருள்421
பிரிநிலை வினா எண் ஈற்றசை தேற்றம்
இசைநிறை என ஆறு ஏகாரம் ஏ422
ஒழியிசை வினா சிறப்பு எதிர்மறை தெரிநிலை
கழிவு அசைநிலை பிரிப்பு என எட்டு ஓ ஏ423
வினை பெயர் குறிப்பு இசை எண் பண்பு ஆறின் உம்
என எனும் மொழி வரும் என்று உம் அற்று ஏ424
எதிர்மறை சிறப்பு ஐயம் எச்சம் முற்று அளவை
தெரிநிலை ஆக்கம் ஓடு உம்மை எட்டு ஏ425
முற்று உம்மை ஒரோ வழி எச்சம் உம் ஆகும்
426
செவ்வெண் ஈற்றது ஆம் எச்ச உம்மை
427
பெயர்ச்செவ்வெண் ஏ என்றா எனா எண்
நான்கு உம் தொகை பெறும் உம்மை என்று என ஓடு
இ நான்கு எண் உம் அஃது இன்றி உம் இயலும்428
என்று உம் என உம் ஒடு உம் ஒரோ வழி
நின்று உம் பிரிந்து எண் பொருள் தொறு உம் நேரும்429
வினை ஒடு வரின் உம் எண் இனைய ஏற்பன
430
விழைவு ஏ காலம் ஒழியிசை தில் ஏ
431
மன் ஏ அசைநிலை ஒழியிசை ஆக்கம்
கழிவு மிகுதி நிலைபேறு ஆகும்432
வினைமாற்று அசைநிலை பிறிது எனும் மற்று ஏ
433
மற்றையது என்பது சுட்டியதன் கு இனம்
434
கொல் ஏ ஐயம் அசைநிலை கூற்று ஏ
435
ஒடு உம் தெய்ய உம் இசைநிறை மொழி ஏ
436
அந்தில் ஆங்கு அசைநிலை இட பொருள ஏ
437
அம்ம உரையசை கேண்மின் என்று ஆகும்
438
மா என் கிளவி வியங்கோள் அசைச்சொல்
439
மியா இக மோ மதி அத்தை இத்தை
வாழிய மாள ஈ யாழ முன்னிலை அசை440
யா கா பிற பிறக்கு அரோ போ மாது இகும்
சின் குரை ஓரும் போலும் இருந்து இட்டு
அன்று ஆம் தாம் தான் கின்று நின்று அசைமொழி441
3.5. உரியியல்
பல் வகை பண்பு உம் பகர் பெயர் ஆகி
ஒரு குணம் பல குணம் தழுவி பெயர் வினை
ஒருவா செய்யுள் கு உரியன உரிச்சொல்442
உயிர் உயிர் அல்லது ஆம் பொருள் குணம் பண்பு ஏ
443
ஒன்று முதல் ஆ கீழ் கொண்டு மேல் உணர்தலின்
ஓர் அறிவு ஆதி ஆ உயிர் ஐந்து ஆகும்444
புல் மரம் முதல உற்று அறியும் ஓர் அறிவு உயிர்
445
முரள் நந்து ஆதி நா அறிவு ஒடு ஈர் அறிவு உயிர்
446
சிதல் எறும்பு ஆதி மூக்கு அறிவின் மூ அறிவு உயிர்
447
தும்பி வண்டு ஆதி கண் அறிவின் நால் அறிவு உயிர்
448
வானவர் மக்கள் நரகர் விலங்கு புள்
ஆதி செவி அறிவு ஓடு ஐ அறிவு உயிர் ஏ449
உணர்வு இயல் ஆம் உயிர் ஒன்று உம் ஒழித்த
உடல் முதல் அனைத்து உம் உயிர் அல் பொருள் ஏ450
ஒற்றுமை நயத்தின் ஒன்று என தோன்றின் உம்
வேற்றுமை நயத்தின் வேறு ஏ உடல் உயிர்451
அறிவு அருள் ஆசை அச்சம் மானம்
நிறை பொறை ஓர்ப்பு கடைப்பிடி மையல்
நினைவு வெறுப்பு உவப்பு இரக்கம் நாண் வெகுளி
துணிவு அழுக்காறு அன்பு எளிமை எய்த்தல்
துன்பம் இன்பம் இளமை மூப்பு இகல்
வென்றி பொச்சாப்பு ஊக்கம் மறம் மதம்
மறவி இனைய உடல் கொள் உயிர் குணம்452
துய்த்தல் துஞ்சல் தொழுதல் அணிதல்
உய்த்தல் ஆதி உடல் உயிர் தொழில் குணம்453
பல் வகை வடிவு இரு நாற்றம் ஐ வண்ணம்
அறு சுவை ஊறு எட்டு உயிர் அல் பொருள் குணம்454
தோன்றல் மறைதல் வளர்தல் சுருங்கல்
நீங்கல் அடைதல் நடுங்கல் இசைத்தல்
ஈதல் இன்னன இரு பொருள் தொழில் குணம்455
சால உறு தவ நனி கூர் கழி மிகல்
456
கடி என் கிளவி காப்பு ஏ கூர்மை
விரை ஏ விளக்கம் அச்சம் சிறப்பு ஏ
விரைவு ஏ மிகுதி புதுமை ஆர்த்தல்
வரைவு ஏ மன்றல் கரிப்பின் ஆகும்457
மாற்றம் நுவற்சி செப்பு உரை கரை நொடி இசை
கூற்று புகறல் மொழி கிளவி விளம்பு அறை
பாட்டு பகர்ச்சி இயம்பல் சொல் ஏ458
முழக்கு இரட்டு ஒலி கலி இசை துவை பிளிறு இரை
இரக்கு அழுங்கு இயம்பல் இமிழ் குளிறு அதிர் குரை
கனை சிலை சும்மை கௌவை கம்பலை
அரவம் ஆர்ப்பு ஓடு இன்னன ஓசை459
இன்னது இன்னுழி இன்னணம் இயலும்
என்று இசை நூல் உள் குண குணிப்பெயர்கள்
சொல்லாம் பரத்தலின் பிங்கலம் முதல் ஆ
நல்லோர் உரிச்சொல் இல் நயந்தனர் கொளல் ஏ460
சொல் தொறு உம் இற்று இதன் பெற்றி என்று அனைத்து உம்
முற்ற மொழிகுறின் முடிவு இல ஆதலின்
சொற்றவற்று இயல் ஆன் மற்றைய பிற உம்
தெற்று என உணர்தல் தெள்ளியோர் திறன் ஏ461
பழையன கழிதல் உம் புதியன புகுதல் உம்
வழு அல கால வகையின் ஆன் ஏ462