"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
புலப் பாய்ச்சல் 31 October 2005
கடந்தவாரம் பெல்ஜியத்தின் பிரசெல்ஸ் நகரிலே, ஐரோப்பியப் புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் எழுப்பிய உரிமை முழக்கம் பல பரிமாணங்களை உள்ளடக்கிய ஒன்றாகும். ‘ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதித்துள்ள பயணத்தடை முடிவை மீளப்பெற வேண்டும்.’ என்பது போன்ற பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து “எழுக தமிழ்” உரிமை முழக்கப் போராட்டம் மிக வெற்றிகரமாக, மாபெரும் உணர்வெழுச்சியோடு நடைபெற்றிருக்கின்றது. கொட்டுகின்ற மழையிலும் கோடையின் சுகத்தைச் சுகிக்கின்றவர்களாய் சுமார் இருபதினாயிரம் புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் எழுப்பிய உரிமை முழக்கத்தின் தாக்கத்தை, பரிமாணங்களைப் பல தளங்களில் வைத்து தர்க்கிப்பது, இவ்வேளையில் மிக முக்கியமானதாகும் என்றே நாம் கருதுகின்றோம்.! இந்த ஜனநாயக ரீதியிலான ஆர்ப்பாட்டங்களுக்கும் கண்டனப் பேரணிகளுக்கும் மதிப்பளித்துச் செவி சாய்ப்பதன் மூலம் மேற்குலக நாடுகள் ஜனநாயகத்தின் முக்கிய விழுமியங்களைக் காப்பாற்றி வருகின்றன. ‘வியட்நாமில் அமெரிக்கா நடத்துகின்ற யுத்தத்தை நிறுத்த வேண்டும்’ என்று அமெரிக்க மக்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டங்களைச் செய்து வந்ததன் காரணமாக அமெரிக்க அரசு வியட்நாமில் இருந்த தன் படைகளைத் திரும்பப் பெற்று கொண்டது. ஜனநாயகத்தின் விழுமியங்களை இவ்வாறு போற்றியும், பேணியும் வருகின்ற காரணங்களினால் பொதுவாக மேற்குலக நாடுகளில் ஜனநாயக மரபு காப்பாற்றப்பட்டு வருகின்றது. தமிழரின் தாயக கோட்பாடு என்பதானது இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன் பொருட்டு 13வது சட்ட திருத்தமும் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் தமிழர்களோடு செய்யப்பட்ட ஒப்பந்தம் அல்ல! ஆனால் இந்த ஒப்பந்தத்தை இந்திய அரசு, இலங்கை அரசு ஆகிய இரண்டு அரசுகளும் ஏற்றுக் கொண்டு கைச்சாத்திட்டு அரசியல் சட்டமாகவும் ஆக்கியுள்ளன. இதன் அடிப்படையில் தாயகக் கோட்பாடு, மற்றும் கூட்டாட்சி அரசு என்பது போன்ற கருத்துருவாக்கங்களை ஐரோப்பிய நாடுகளும் ஏற்றுக்கொண்டு சிறிலங்கா அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குமிடையான சமாதான பேச்சுக்களையும் வரவேற்றிருந்தன. இந்த விடயத்தை சம்பந்தப்பட்ட உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் சிறிலங்கா அரசு சில கருத்துருவாக்கங்களைக் கொள்கையளவிலும், சட்ட ரீதியாகவும் ஏற்றுக் கொண்டிருந்தது. இவற்றிற்கு சிறிலங்கா அரசு செயல் வடிவம் கொடுக்கவில்லைதான். ஆயினும் இக்கருத்துருவாக்கங்களை ஏற்றுக் கொண்டிருந்தது. இக்கருத்துருவாக்கங்களை மேற்குலக நாடுகளும் வரவேற்று ஒப்புக் கொண்டிருந்தன.
இன்று இல்கைத்தீவையே முழுமையாகப் பாதித்துள்ள இனப்பிரச்சனைக்குரிய தீர்வு குறித்துத் தெளிவான திட்டமொன்றை எந்தச் சிங்களத் தலைமையும் முன்வைக்க வில்லை. அது மட்டுமல்ல இது குறித்து சிங்கள மக்களிடையே தெளிவான விரிவான பரப்புரையும் சிங்களத் தலைமைகளால் மேற்கொள்ளப்பட வில்லை. உண்மையாகவே இந்தப் பிரச்சனையை அமைதி வழியூடாக தீர்ப்பதற்கு சிங்களத் தலைமைகள் விரும்பவில்லை என்கின்ற எமது ஐயத்தை இச்செயலின்மைகள் நிரூபித்தே நிற்கின்றன. |
Brussels Rally Assert Tamil Rights, Affirm Solidarity [An abridged English version of an analysis by S. Sabesan, broadcast on 31.10.05 on the ‘Tamil Voice’ radio program, Melbourne, Australia.] |
The October 24 rally in the City of Brussels by the Eelam Tamils from all over Europe, demonstrated the many facets of their struggle for freedom and peace. Despite a heavy downpour, twenty thousand Tamils took part in this emotive ‘Tamil Uprise’, demanding among other things, the withdrawal of the recent travel restrictions placed on the LTTE by the European Union. It is critical to analyse the impact of this significant demonstration defending Tamil people’s rights in the heart of Europe. As we all know, people all over the world express their views and feelings through democratic means. It is in line with these principles that the ‘Tamil Uprise’ demonstrations have been successfully staged in the various parts of Tamil Eelam. But it should be stated that ‘Tamil Uprise’ demonstrations have many different perspectives compared to the other forms of our liberation struggle. It is not very hard to organise a rally or arrange meetings in cities where Tamil people are highly concentrated. But there are many practical difficulties in organising an uprising rally in a country like Belgium where not many Eelam Tamils live. There is no organisational network or facilities in place to arrange such a large rally. Nevertheless, thousands of Eelam Tamils living in various European countries marched into Belgium that day – calling in unison for the restoration of the Tamil Nation’s right to self rule. This was, in deed, an emphatic declaration of the solidarity of the Tamil Eelam community in Europe! The Eelam Tamils in Europe and other parts of the world face many great challenges in their life. From beginning a new life in their adopted country, they endure new and varied forms of hardships to survive. Life is no picnic for them. With all their pressing problems, why did they converge in Brussels in their thousands last week? Were they forced, or were they intimidated? No. On the contrary, it was the burning resurgent nationalism that brought them together from all over Europe. If the European Tamil diasporas manifest such nationalistic sentiments, how ardently they who live in Tamil Eelam would thirst for their liberation? – This is what the Belgium ‘Tamil Uprise’ has revealed to the world explicitly. It also put an end to the vicious propaganda by some detractors that people who attend resurgent gatherings such as ‘Pongu Thamil’ and other national events do so due to force and intimidation. Let us now look at the effects of this Belgium ‘Tamil Uprise’ from another angle. The Western World which adopts the democratic systems of governance respect their people’s views and aspirations. They allow and listen to democratic opposition expressed through peaceful demonstrations. When the American people demonstrated fiercely against the Vietnam War, the government withdrew its forces. By adhering to democratic principles in such ways the Western World, in general, uphold and preserve its democratic traditions. On the contrary, it is by disregarding peoples aspirations expressed through democratic means that war broke out in Sri Lanka. Successive Sri Lankan governments stymied all forms of democratic opposition by Tamils with their chauvinistic political power and state terrorism. While proclaiming lip service to democracy and rule of law, they broke the very essence of democratic traditions. And so the struggle of the Tamil Eelam people is also a struggle for upholding democratic values! The European Union should consider their just demands and take appropriate steps to preserve the lofty principles of democracy in southern Sri Lanka. We should also point out recent moves of the Sri Lankan government which are contrary to the notions accepted by the European nations. The concept of Tamil Homeland is one that is acknowledged in the India–SriLanka Accord and has legal implications by way of the 13th Amendment to the Constitution. On this basis the European nations have accepted the concepts of Homeland, Federal State, etc., and have welcomed the peace talks between the Sri Lankan Government and the LTTE. But the Sri Lankan Prime Minister and presidential candidate Mahinda Rajapakse has not only rejected the concept of Tamil Homeland, but also says a solution will be found on the basis of a unitary state. In other words, he is attempting to give new life to the despised doctrines put forward by the Sinhala-Buddhist chauvinists 50 years ago! Concerned nations of the world should take notice of this unpalatable development. Though the Sri Lankan government in the past has acknowledged certain concepts both legally and in principle, it has failed to give effect to them in practice. On the other hand, we should not forget that Ranil Wickremasinghe, Opposition Leader and presidential candidate, who now talks subtly about federalism in election campaigns, also fought vehemently against the India–SriLanka Accord and its underlying concept of Tamil Homeland! We know also what Tamils reaped from his talks about peace talks. No Sinhala leadership has put forward any concrete proposals for the resolution of the ethnic conflict. And no clear campaign has been launched in the south by any Sinhala leader for a consensus approach to this national problem. Such inaction by the Sinhala leadership affirms our suspicion that they do not want a peaceful solution to the drawn out warfare. Further more, no real pressure was brought to bear on the Sri Lankan government or its political leaders, who breach all democratic principles and norms that the western world so earnestly practice. But greater pressure is being exerted on our Tamil Nation which struggles for the just cause of self determination! Unhelpful pressure it is, to which we ought not bow. Finally, dear friends, we welcome the truism in the statement made by Mr. Kirubaharan, President of the Centre for Tamil Human Rights (France): “No matter how many bans imposed on us, they will only accelerate our liberation”. There is no better message that we could give to the western world! |