தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Tamil Culture - the Heart of Tamil National Consciousness > Festivals of the Tamil People > Thai Pongal - the Tamil New Year

CONTENTS
OF THIS SECTION
Last updated
27/06/07

தைப்பொங்கல் தினமே தமிழ் புத்தாண்டுத் தினமாகும்! Sanmugam Sabesan, 15 January 2007
தமிழர் புத்தாண்டு எது? சித்திரையா? தையா? - நக்கீரன், 11 January 2007 ""இப்பொழுதெல்லாம் புத்தாண்டென்றால் ஆங்கிலப் புத்தாண்டு என்றாகிவிட்டது....” என சுப்பு சொல்கிறார். அது புத்தாண்டு பற்றிய அவரது மனத்தடங்கலைக் காட்டுவதாக உள்ளது.

என்ன செய்வது? எப்படி செய்திப் பரிமாற்றத் துறையில் ஆங்கில மொழி உலகளாவிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறதோ அதே போல் ஆங்கிலப் புத்தாண்டும் இனம், பண்பாடு ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து எல்லோருக்கும் உரித்தான ஒரு புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறித்தவத் தமிழர்களுக்கு சனவரி முதல் நாளே புத்தாண்டு என்பது மனங்கொள்ளத்தக்கது.

ஆங்கில மொழி ஆதிக்கத்தின் காரணமாக இந்த நூற்றாண்டு முடியுமுன்னர் தமிழ் உட்பட 100 மொழிகள் அழிந்தொழிந்து விடும் என அய்க்கிய நாடுகள் கல்வி, பண்பாடு அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன." more

தைப் புத்தாண்டில் தமிழீழ விடியலுக்கான
பூபாளம் கேட்கட்டும்! (திருமகள்) - V.Thangavelu,
14 January 2001

Thai Pongal - What it means to me! Ramalingam Shanmugalingam 14 January 2004

 தமிழ்ப் புத்தாண்டுத்தினமான தைப்பொங்கல் - சில தகவல்கள் - Sanmugam Sabesan, 15 January 2006
Pongal Recipes
Thai Pongal at Sangam.org
Pongal Kavithaigal - Ramalingam Shanmugalingam
Thai Pongal or Thamil’s Festival -  Pa. Thirunaavukkarasu,
translated by Sendhil Kumar Cheran 
Pongal - the Harvest Festival of South India
Pongal in South East Asia : Indonesia, Singapore, Malaysia, Myanmar and others.
Pongal in Africa : Mauritius, Reunion, Seychelles And South Africa.
Pongal in Oceania : Australia, New Zealand, Fiji.
Pongal in the Gulf : Bahrain, Qatar, UAE, Saudi Arabia And Kuwait.
Pongal in Europe : Britain, France, Germany, Italy, Switzerland, Denmark
Tamils in Americas : USA and Canada.

Pongal Greeting Cards

Thai Pongal - the Tamil New Year
தை பிறந்தால் வழி பிறக்கும்

" தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு"
(புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்)

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!
Thai Pongal
ஆடுவமே பள்ளுப் பாடுவமே! - தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!
- பாவேந்தர் பாரதிதாசன்


Thai piRanthaal, vazhi piRakkum - V.Thangavelu, 15 January 2003

Thanksgiving is an important aspect of Thamil culture and tradition, as is the case with many other civilisations. Most thanksgiving ceremonies are religious in nature, as people of each culture thank their chosen deity for the favours granted to them, though this is not always the case.

The Thamil festival of Thai Pongal is such a thanks-giving ceremony. It is a harvest festival, the equivalent of Canada’s Thanks Giving Day. Thamil farmers celebrate the event to thank gift of nature like the Sun and the farm animals for their assistance in reaping a bountiful harvest.

Thamil New Year 2034 and Pongal festival falls on the first day of the month of Thai of the Thamil calendar (On the 14th of the month of January according to Christian calendar). Thai (January) is the harvest season in both Thamil Nadu and Thamil Eelam.

Interestingly in Japan too, the harvesting day is celebrated on January 15 of every year and is called "Kosho Katsu".

In 1969 Kalaignar M. Karunanidhi, Chief Minister of Thamil Nadu, ordered that the day after Pongal should be celebrated as Thiruvalluvar Day all over Thamilnadu. He also declared the day as a government holiday. The second day of Thai (Thai thingaL) is celebrated as Thiruvalluvar Day since 1974. Thamilnadu Government also adopted the Thamil Calendar based on the birth of Thiruvalluvar in 1971, in government gazette since 1972 and in all government offices from 1981.

In the solar calendar, January 13/14 has astronomical significance. It is the day the sun after making a complete circle is seen going on its ’ northward journey’ and observed from the earth the sun enters one of the 12 imaginary zodiac sign of Magara Raasi from Dhanu Raasi.

In ancient times, the solar calendar was not followed in celebrating festivals. There is historical evidence to show that Thai Pongal was celebrated on the day when the new moon was sighted. This was because in ancient times the calendar was drawn up on the basis of the changing phases of the moon.

The celebration of Thai 1st goes back to the latter part of the Sangam age. According to the Sangam literary work Paripaadal, this day is related to the Thiruvaathirai festival. Having spent the entire month of Maarkazhi praying to god and observing ritual fasting, young virgins celebrated the last day, Thai 1, with the Thai Bathing. According to the work Kaliththokai, the rituals during the month of Maarkazhi are observed in the hope that it will lead to wedlock with a good-hearted husband. It also mentions the worship of Sun as a deity.

According to the stone carvings [kalvettu] at Thiruvotriyoor, Pongal was celebrated during the time of the great king Raajaraaja Chozhan 1. This festival was known as the “Puthiyeedu” festival. Puthiyeedu meant the first harvest of the year.

Both the Maarkazhi month rituals and the Thai 1st bathing rituals are practiced even today. It was these secular rituals that inspired the immortal hymns of Thiruppaavai and Thiruvempaavai by Saint Aandaal and Saint Maanikkavaasakar respectively in the 9th century.

Pongal refers to rice cooked in milk and sweetened with jaggery. On a full scale it is a three-day festival of nature-worship. On the second day thanks are offered to the cattle, Mattu Pongal or Paddip Pongal, which helped farmers to plough the fields, transport goods and provide milk to drink. On this day the cattle is bathed, decorated and given special gruel. Turmeric, kunkumam are applied to the horns of the cattle, garlands, small bells and bundles of vadai are hung around their necks and they are paraded in the streets. The cooked Pongal is given to the cattle to eat. In Thamil Nadu, a kind of bullfight called the ‘Jallikattu’ is staged by young men on the 3rd day of Thai Pongal celebrations.

In short, people, houses, and cows all take on an air of freshness and radiance during Thamil New Year and Pongal. There is also the hope that “When Thai is born, a way will be born.”(Thai piRanthaal, vazhi piRakkum). Thai is considered an auspicious month to hold weddings.

On Thai Pongal day members of the family wake up early in the morning, take special baths, puts on new clothes and gather in the front of the garden (muttram) to cook the traditional Pongal (rice pudding).

Before Thai Pongal day courtyards are cleaned, old wares are discarded and replaced with new things, homes colour-washed and decorated. On the morning of Pongal day the front garden is pre-prepared for the ceremonious cooking.

A flat square pitch is made and decorated with kolam drawings, and it is exposed to the direct sun light. A fire wood hearth will be set up using three bricks. . The cooking begins by putting a clay pot with water on the hearth.

A senior member of the family will conduct the cooking and the rest of the family dutifully assists him or her or watches the event. The moment of climax is the spill over of the Pongal during cooking. The spillover of milk is a propitious symbol of abundance and good omen and shouts of “ Pongalo Pongal". Thereafter, a member of the family ceremoniously puts three handful of new rice inside the boiling pot.

The other ingredients of this special dish are chakkarai (brown cane sugar) or katkandu (sugar candy), milk (cow's milk or coconut milk), roasted green gram (payaru), raisins, cashew nuts and few pods of cardamom.

When the meal is ready it is first put on a banana leaf and the family pray for a few minutes to thank nature, sun and farmers.

Then the meal (Pongal) is served with fruits (banana and mango) among the family. Later it will be shared with neighbours, friends and relatives.

The richness of Thamil culture and historical traditions is symbolized in the Thamil New Year and Thai Pongal festival. It is a joyous and happy occasion when the poor, the rich, the farmer, the villager all celebrate the harvest festival together irrespective of their individual faith.

By celebrating this festival the Thamils in the Diaspora help to perpetuate our rich culture, traditions, literary opulence, sublime philosophy and socio-economic aspirations. Also to give an emotional link to our kith and kin at home who for the first time in two decades are celebrating Pongal in an atmosphere of relative peace.

On this Pongal festive day, we should banish superstitious beliefs, darkness of ignorance and egoistic arrogance. Instead lit the light of knowledge and the warmth of human love and compassion among all people.


தமிழர் புத்தாண்டு எது? சித்திரையா? தையா? - நக்கீரன், 11 January 2007

"இப்பொழுதெல்லாம் புத்தாண்டென்றால் ஆங்கிலப் புத்தாண்டு என்றாகிவிட்டது....” என சுப்பு சொல்கிறார். அது புத்தாண்டு பற்றிய அவரது மனத்தடங்கலைக் காட்டுவதாக உள்ளது.

என்ன செய்வது? எப்படி செய்திப் பரிமாற்றத் துறையில் ஆங்கில மொழி உலகளாவிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறதோ அதே போல் ஆங்கிலப் புத்தாண்டும் இனம், பண்பாடு ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து எல்லோருக்கும் உரித்தான ஒரு புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறித்தவத் தமிழர்களுக்கு சனவரி முதல் நாளே புத்தாண்டு என்பது மனங்கொள்ளத்தக்கது.

ஆங்கில மொழி ஆதிக்கத்தின் காரணமாக இந்த நூற்றாண்டு முடியுமுன்னர் தமிழ் உட்பட 100 மொழிகள் அழிந்தொழிந்து விடும் என அய்க்கிய நாடுகள் கல்வி, பண்பாடு அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

ஆங்கில மொழி ஆதிகத்துக்கான காரணங்கள் பலவுண்டு. அவற்றை வரிசைப்படுத்தலாம் என நினைக்கிறேன்.

1) ஆங்கிலேயர்கள் 18 – 20 ஆம் நூற்றாண்டு வரை பலநாடுகளைப் பிடித்து ஆண்டார்கள்.

2) ஆங்கிலேயர் நாடுகளைப் பிடித்து அங்கெல்லாம் புலம்பெயர்ந்த போது தங்களது மொழியை அந்தந்த நாடுகளில் ஆட்சிமொழியாக வைத்துக்கொண்டார்கள்.

3) ஆங்கிலேயர் அறிவியல், மருத்துவம், வரலாறு, வானியல் போன்ற துறைகளில் ஈட்டிய அளப்பரிய சாதனை.

ஆங்கில புத்தாண்டு புகழடைவதற்கு முக்கிய காரணம் உரோமர்கள் கண்டு பிடித்த நாள்காட்டியே ஆகும். முதலில் உரோம பேரரசர் யூலியஸ் சீசர் (கிமு 100 – கிமு 44) அவர்களே ஒரு புதிய நாள்காட்டியை அறிமுகப்படுத்தினார். கிமு 46 ஆண்டின் நாள்களை 445 நாள்களாக அதிகரித்தார்.

இது சமய விழாக்களை உரிய காலத்தில் கொண்டாடும் முகமாகச் செய்யப்பட்டதாகும். சீசர் ளுழளபைநநௌ என்ற வானியலாளரின் அறிவுரைப்படி ஒரு ஆண்டின் நாள்களை 365 எனவும் நான்காண்டுக்கு ஒருமுறை பெப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக் கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு 1,000 ஆண்டு காலத்தில் 8 நாள்களை அதிகரிகச் செய்துவிட்டது.

கிபி 1563 யூலியன் நாள்காட்டி அடிப்படையில் வேனில் சமயிரவு (எநசயெட நஙரiழெஒ) மார்ச்சு 100 இல் இடம்பெற்றது. ஆனால் வேனில் சமயிரவு 21 க்கு முந்தி வரக்கூடாது என போப்பாண்டவர் கிறெகோறி முடிவு செய்தார். எனவே போப்பாண்டவர் 1582 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதத்தில் பத்து நாள்களைக் குறுக்குமாறு ஆணை பிறப்பித்தார். அதனால் ஒக்தோபர் 4, 1582 (யூலியன்) அடுத்து ஒக்தோபர் 15 (வெள்ளிக்கிழமை) தொடர்ந்தது. மேலும் ஒரு ஆண்டு 00 முடிந்து அதனை 400 ஆல் பிரிக்க முடிந்தால் பெப்ரவரி மாதத்தில் மேலும் ஒரு நாளைக் கூட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இன்று உலகம் முழுதும் கிறெகோறி செம்மைப்படுத்திய நாள்காட்டியே பின்பற்றப்படுகிறது. அந்த நாள்காட்டியின் படி சனவரி முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகும்.

ஆங்கில புத்தாண்டுபற்றி மனத்தடங்கலை வெளியிட்ட சுப்பு “சனவரி ஒன்றுக்கு முன் சித்திரை ஒன்று என்னவாயிற்று?” எனக் கேட்கிறார்.

சனவரி புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே!

சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை? தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம் பெற்றுள்ளன. அனைத்துச் சொற்களும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறான வடமொழி வடிவங்களே!

இப்போது வழங்கும் பிரபவ தொடங்கி சய ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையா தலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940)

60 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதனாலும் அது மிகக் குறுகிய காலத்தைக் (60ஆண்டுகள்) கொண்டுள்ளதாலும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாது. ருத்ரோத்காரி ஆண்டில் ஒருவர் பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியமுடியாது. (பக்கம் 163 - பாவாணரின் ஒப்பியன்மொழி நூல் -1940)

மேற்குறிப்பிட்டவை மூலமாக 60 ஆண்டு வந்தவழி, அது நடைமுறைக்கு நாட்டில் வந்த ஆண்டு, வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாமை ஆகியன பற்றிய செய்திகளை நாம் அறிய முடிகிறது.

கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குழுந்தைகள்தாம் 60 தமிழ் ஆண்டுகள் என்பது புராணக் கதை.

இந்தக் கதையே அருவருக்கத்தக்கது. ஆபாசமானது. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது. கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது. மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது.

இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் (சமுதாயம்), நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியாது.

இந்த 60 ஆண்டு முறையும் பிறவும் தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்பதற்குச் சான்றாக விளங்குவதால் அறிவு ஆசான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழர்கள் மானமும் அறிவும் உள்ள மக்கள் என்றும் சித்திரை தமிழர்களது புத்தாண்டு அல்லவென்றும் சொன்னார்கள்.

இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.

திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு தைத் திங்கள் முதல்நாள் பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள.

இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் “மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்” என்று விளக்கம் தந்தார்.

இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் அடங்குவர்.

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு 31. எனவே, ஆங்கில ஆண்டுடன் (2007) 31 அய்க் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2038.

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. எனவே இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆகும்.

தமிழர்களுக்கு தையில் தொடங்கும் ஒரு தொடர் ஆண்டு தேவை. வேண்டுமென்றால் சித்திரையை இந்துக்களது புத்தாண்டாகக் கொண்டாடலாம்.

தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு வானியல் அடிப்படையும் உண்டு. அன்றுதான் ஞாயிறு தனது தென் திசை நோக்கிய செலவை முடித்துக் கொண்டு வட திசை நோக்கிய செலவை மகர இராசியில் இருந்து மேற்கொள்கிறது.

எனவே தமிழர் தை முதல் நாளை புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் பிறந்த நாள் என முப்பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டும். .

தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்
(புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்)


தைப் புத்தாண்டில் தமிழீழ விடியலுக்கான பூபாளம் கேட்கட்டும்! (திருமகள்) - V.Thangavelu, 14 January 2001

Pongalதை முதல்நாள் தமிழர்களின் திருநாள். உழவர்களின் பெருநாள். தமிழர்கள் இயற்கைக்கு விழா எடுக்கும் இனிய நாள். தமிழ்கூறு நல்லுலகம் போற்றும் இன்ப நாள்.

களனி திருத்தி, வயல் உழுது, எரு இட்டு, நீர் பாய்ச்சி, நெல் விதைத்து, களை எடுத்து,விளைந்த நெல்மணிக் கதிர்களை அரிவி வெட்டி, சூடு மிதித்து, நெல்லை வீட்டுக்குக் கொண்டு வந்து கூடையில் போட்டு பின்னர் அதில் கொஞ்சம் எடுத்து உரலில் போட்டுக் குத்தி அரிசியாக்கி, புதுப்பானையில் பாலும் சர்க்கரையும பாகும் பருப்பும் இட்டுப் பொங்கி, மஞ்சளும, இஞ்சியும, கரும்பும, கற்கண்டும் இயற்கைத் தெய்வமான ஞாயிறுகுப் படைத்து மனைவியும் மக்களும் கொண்டாடி மகிழும் விழாவே பொங்கல் நாள்!

அறுவடைக்கு முன்னதாக நல்ல நாளில் வயலில் தலைசாய்த்து காற்றினால் தலையசைத்து நிற்கும் நெல்மணிக் கதிர்களில் கைப்பிடி அரிந்து தட்டில் எடுத்து வந்து வீட்டு வாசலில் கட்டுவார்கள். இதற்குப் புதிர் எடுத்தல் என்று பெயர். பின்னர் தைப்பூசத் திருநாளில் புதிர் குழைத்தல் இடம்பெறும். புத்தரிசி பொங்கி, சர்க்கரையும் வாழைப் பழமும் சேர்த்துப் படைக்கும் இப்புதிர் சோற்றை சுற்றமும் நட்பும் சு10ழ இருந்து உண்டு மகிழ்வர்.

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். இந்நாளில் வயல் உழவவும, வண்டி இழுக்கவும, பால, தயிர, நெய் கொடுக்கவும, எரு எடுக்கவும் காரணமாக இருந்த எருதுகளையும, பசுக்களையும, கன்றுகளையும் குளங்களில் குளிப்பாட்டி, குங்குமம, சந்தனம, மலர் மாலைகளால் அலங்கரித்து குடிக்கக் பச்சையரிசிக் கஞ்சி கொடுப்பர்.

உழவன் கமத்துக்கு துணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடப் படுகிறது. இந்த விழா பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படும்.

பொங்கள் நாளை ""சங்கராந்தி""யாக புராணிகர்கள் மாற்ற முற்பட்டபோதும் அடிப்படையில் பொங்கல் உழவர் விழாவாகவே உயர்ந்தும் நிலைத்தும் உள்ளது.

ஞாயிறு வணக்கம் இயற்கை வழிபாடு. உலக நாகரிகங்கள் எல்லாவற்றிலும் ஞாயிறு வணக்கம் இருந்ததற்கு சான்றுகள் இருக்கின்றன. உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக ஞாயிறு இருப்பதால் ஆதி மனிதன் ஞாயிற்றைக் கடவுளாக உருவகப்படுத்தி வணங்கிப் போற்றி வந்ததில் வியப்பில்லை.

வேத காலந்தொட்டு இந்திரனுக்கும, அக்கினிக்கும் அடுத்த தெய்வமாக ஞாயிறு விளங்குகின்றான். ஒரு காலத்தில் ஞாயிறு முதல் தெய்வமாகவே வணங்கப்பட்டு வந்தது. அதுவே இந்து மதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான சௌர மதம் ஆகும். பிற்காலச் சோழர் காலத்தில் சு10ரியனுக்கு தனிக் கோவில்கள் எழுப்பப்பட்டன.

முத்தமிழ்க் காப்பியங்களில் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் -

""ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல் பொன்கோட்டு
மேருவலம் திரிதலான்.""
(சிலம்பு 1, 4-6)

என ஞாயிற்றை வாழ்த்திப் போற்றுகிறார். காவிரி ஆற்றையுடைய நாடனாகிய சோழனது ஆணைச் சக்கரம் போன்று பொன் உச்சியை உடைய இமயமலையை வலம் வருதலால் ஞாயிற்றை வணங்குவோம்! ஞாயிற்றை வணங்குவோம்!

தைப்பொங்கல் திருநாளுக்கு வானவியல் அடிப்படையும் இருக்கிறது. தென்திசை நோக்கி நகர்ந்த கதிரவன் (பூமியில் இருந்து பார்க்கும்போது) இந்நாளில் வடதிசை நோக்கி பன்னிரண்டு இராசிகளில் ஒன்றான மகரராசியில் புகுகின்றான்.

தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில, சமயசார்பற்ற எல்லோருக்கும் பொதுவான விழா பொங்கல் திருநாளாகும். பொங்கல் விழாவில் கற்பனைக்கோ, புனைவுகளுக்கோ, அருவருக்கத் தக்க பகுத்தறிவுக்குப் பொருந்தாத கட்டுக் கதைக்கோ இடமில்லை.

தமிழர்கள் கொண்டாடும் தீபாவளி தமிழ் அரசன் ஒருவனையே கடவுள் அவதாரம் சூழ்ச்சியால் கொலை செய்த நாளாகும்.

புராணக் கதைகள் எல்லாமே பொதுவாக ஆரிய-திராவிடப் போராட்டங்களைச் சித்தரிப்பதாகும். கொல்லப்படுகிற திராவிடர்கள் அசுரர்கள, இராட்சதகர்கள, இயக்கர்கள் என இழிவாகச் சித்தரிக்கப்பட்டார்கள். அவர்களை பெரும்பாலும் கடவுள் அவதாரங்கள் சூழ்ச்சியாலேயே கொலை செய்தார்கள். திருப்பால் கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த கதை, மாபலி மற்றும் இரணியன் கதைகள் இதற்கு எடுத்துக் காட்டாகும்.

பொங்கல் நாள் விடுதலைப் புலிகளின் தலைசிறந்த தளபதி கேணல் கிட்டு மற்றும் அவரது தோழர்களான மேஜர் வேலன, கேணல் குட்டிஸ்ரீ கடற்புலி கப்டன் றோசான கடற்புலி கப்டன் அமுதன கடற்புலி லெப். நல்லவன கடற்புலி கப்டன் குணசீலன கடற்புலி கப்டன் நாயகன கடற்புலி கப்டன் ஜீவா வங்கக் கடலில் வீரமரணம் எய்திய நினைவு நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
பொங்கலுக்கு அடுத்த நாள் (தை 02) பொதுமறை தந்த திருவள்ளுவர் பிறந்த நாள். அவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என தமிழ் அறிஞர்களால் கொள்ளப்பட்டு தை 02 திருவள்ளுவர் ஆண்டாகக் (2032) கொண்டாடப் படுகிறது. இந்த நாள் தமிழ் நாட்டில் விடுமுறை நாளாகும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. புத்தாண்டில் உலகம் வாழ் ஆறு கோடி தமிழர்களின் வாழ்வில் தென்றல் வீசட்டும். இன்பம் சேரட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும்.

தைப் புத்தாண்டில் தமிழீழ மக்கள் வாழ்வில் அல்லல்கள் நீங்கி துன்பங்கள் தொலைந்து, கோடி இன்பங்கள் குவிந்து, இளங்காலை பூத்தெழும் கீழ்வானத்தே, தமிழீழ விடியலுக்கான பூபாளம் கேட்கட்டும். அமைதி நிறைந்து புது வாழ்வு பூக்கட்டும். அந்த நம்பிக்கையுடன் தமிழீழ மண்ணின் பொங்கற்பால் பொங்கட்டும்.

"எங்கள் சமுதாயம்
ஏழா யிரமாண்டு
திங்கள்போல் வாழ்ந்து
செங்கதிர்போல் ஒளிவீசும்
மங்காத போர்க்களத்தும்
மாளாத வீரர்படை
கங்குல் அகமென்றும்
காலைப் புறமென்றும்
பொங்கி விளையாடிப்
புகழேட்டிற் குடியேறித்
தங்கி நிலைத்துத்
தழைத்திருக்கும் காட்சிதனைக்
கண்காண வந்த
கலைவடிவே நித்திலமே!
பொங்கற்பால் பொங்கிப்
பூவுதிர்ப்பாய் தைப்பாவாய்!""
(கவியரசு கண்ணதாசன் -தைப்பாவாய் )

Thai Pongal - What it means to me! - Ramalingam Shanmugalingam, 14 January 2004

— Greetings! Greetings! This day of affluence (Pongal)
- Tamils true cultural day is universal in essence
- Selected parts of Lady Land is paved in colorful design
- Open to receive the full force of the benevolent SUN
- Cheerfully we adorn our bathed body with new clothes
- Anticipating the milk rice with dhal and honey for our sweet-tooths.

The significance of Pongal is essentially a Thanksgiving gesture. The significance of Sun was not lost not only on the ancient Tamils but also on other cultures. The Israelis? claim to the Chosen ones stand among those who believe in that humanity grew from the Adam and Eve creations within the last 5000 plus years itself has the element of the Sun in their very name Israel. (Iz + ray + el and el stands for Sun/God)

Dr. C. P. Ramaswami Iyer in his address given at a Symposium in New Delhi on the 14th February 1954 referred to a “Great Westerner, speaking of the conditions in the West, spoke more or less in the following strain: that increasingly the meaning and value of life are getting to be obscured the complacency, especially of the Western world, is receding and people are getting more and more perplexed about what is the sum total of the meaning, the value, and the significance of life. It is in the context or with the background of that reflection that the same philosopher went on to analyse the recent history of the Western world in comparison with the preceding epochs. He observed that in the medieval period, and up to almost the seventeenth century, in European history, there was a commanding purpose and a meaning of civilization and for life a reliance or dependence upon a definite divine purpose in human life.

That was succeeded in the following generation or epoch, the eighteenth century in European history, by what was called the age of reason, an age when doubt, questioning, inquiry and constant investigation took the place of that abundant faith in a divine purpose which was the guiding principle of the preceding epoch. The nineteenth century – what was called the: Industrial Revolution Period” – was a period of reliance upon industrial growth, upon the progress of manufacturing capacities for the purpose of solving human problems. At that time the quest was for economic progress.

That age failed in its purpose because in its wake came a time when economic progress was equated with the misery of a large number of people who contributed to the so-called prosperity in the economic sphere. But the succeeding years questioned the wisdom of equating political with economic liberties. It was found that prosperity in the industrial and economic sphere, even though attended with political liberty or freedom, did not protect the underdog and there followed a search for freedoms, a freedom from fear and reliance upon security. That period again has been succeeded by the present not very happy period of cold and colder wars and hot and hotter anticipations!

“May I remind you of what culture really means and involves in this connection. It has been rightly pointed out that science means a curiosity about life, art means a wonder at life, philosophy means an attitude an attitude towards life, and religion means a reverence for life. Culture embraces and involves all these elements it is a mixture of that never-ending phenomena, physical, psychological and spiritual, and the unceasing wonder and reverence at the ultimate facts of life. It is these things that make for culture…..”

Culture is connected with “cultivate.” Therefore, paying attention to one or two elements of culture and totally neglecting or disregarding the other elements is not helping in the growth and development of culture.

Most Tamils are ignorant about their place in the human chain. Periods of subjugation have lent a feeling of “Don’t care” attitude that augurs well for the crafty to take advantage of the complacency evolved as a result of years of “subaltern consciousness” among most Tamils. The situation is worse than the eighteenth century Europe for Tamils today.

There are several glaring cases of Tamil indifference exhibited by Tamil unconcern for events too numerous to list. However, irrespective of some of the elements of Tamil culture is under threat to the point of marginalizing or total disappearance, love for superstitious reverence cleverly orchestrated by charlatans continues at an unprecedented magnitude. Also the reverential admiration for celluloid celebrity goes unchecked that totally blinds Tamil sight to the dangers facing Tamil at large.

Pongal is celebrated for four days and is a good place to start. As has been pointed out earlier, it is a true Tamil festival without the trimmings of foreign religious connotations. Even though Pongal is ascribed to the plough for its significance, it is a Tamil cultural event that embraces and involves many aspects of Tamil life. The first day is called ‘pOki’ erroneously called BHOGHI and misrepresented as the day to rid the house of redundant or unwanted items.

Former Vice Chancellor of the University of Madras Dr. Portko described this first day ‘pOki’ celebration as “MARIAMMAN FESTIVAL” also. The second day is called the ‘vAcaR pongkal’ or ‘cUrija pongkal’ the third day is dedicated to the cow as the then source of draft power for the plough and the last day is a day of sports and enjoyment.

Since rain that is also called ‘mAri’, plays a very important part in our lives, naturally rain is revered and the first day’s celebration is appropriately called ‘mAriamman’ festival. Also since INDIRA the king of DEVAS and the divinity responsible for rain is also called POKI, this is also called the POKI festival. This POKI festival or INDIRA festival is mentioned in cilappatikAram.

The third day festivities begin with the bathing of the draft animals as well as the cow that gives us the milk that plays a very significant role among Tamils and the world at large. The fourth day is called ‘karu NAL’ and as in many other cases is changed to ‘kari NAL’, the significance of this festival is lost in this change. On the last and final day of the Pongal festivities youthful sports such as subduing the bull, cart races and other sports are staged for the enjoyment of the people.

Dr. Portko, is involved in the research to find more about the relationship between Tamil and the Japanese languages. In fact, he has observed close similarity in a Japanese festival celebrated in Japan during Pongal celebrations.

In his book “Tamil Studies Selected Papers” Dr. Portko wrote in page 497:

“The Vedic religion has caused serious damage to the folk deities and to the folk-worship as well. The Vedic domination and the Sanskritization process have skillfully converted most of the ancient deities into Hinduism.

“A detailed study of the temples in Tamil Nadu in an unbiased manner will prove the fact beyond doubt that most of the temples belong to the native deities which should be rightly considered pre-religious, non-Vedic and hence non-Hindu.”

Pongal perhaps is the only Tamil cultural insignia that has to a very large extent escaped the intrusion of the interlopers and need to be kept in its pristine non-religious form for the future.
 


தமிழ்ப் புத்தாண்டுத்தினமான தைப்பொங்கல்: சில தகவல்கள் - Sanmugam Sabesan, 14 January 2006


தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், ‘பண்டைய காலக்கணக்கு முறை’ வழியாகவும் முன்வைத்துத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்கள் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக்காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்.!

“பொங்கல்” என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?

பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகின்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.

‘சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தைமாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா’-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்கு தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.

அதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக்கணக்கைக் கணித்து சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.

இதனை சற்று ஆழமாகக் கவனிப்போம்.

பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான்.! தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல் வாடை, ஆகியவை மாறிமாறித் தோன்றி, தமிழனின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக்காலச் சேர்வையைத் தமிழன் ‘ஆண்டு’ என்று அழைத்தான்.-என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பார் கூறுவார்.

தமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை ‘அறிவர், பணி, கணியன்’ -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் ‘பெருங்கணிகள்’ இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

 அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் ‘தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும் தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத்தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (A Social History of the Tamils-Part 1)

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு-அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள். என்பதே உண்மையுமாகும்.

தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்கால தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் - (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)
4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி – (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

(இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழன் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்துள்ளான், என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துக்களாகும்.!)

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நேயர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.

இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.

“சித்திரை வருடப்பிறப்பு” என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது. . .(சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா?- தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .

- என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

தமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் தர்க்கித்ததோடு, ஆரியர்கள் எம்மீது திணித்த சித்திரை வருடப் பிறப்பு குறித்தும் நாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததற்குக் காரணங்கள் உண்டு!

“தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ் புத்தாண்டுத் தினமாகும்!!”

பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல! உண்மையில் இது சமய சார்பற்ற இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்.! மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஒரு அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட ‘கதை’ ஒன்று புனையப் பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்.! இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்ற திருவிழாவாகும்.! இத்திருநாளைப் புறம் தள்ளுவதும் இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தை கேவலப்படுத்தும் செயல்களாகும்.!

தைப்பெங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரறாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.

1935ம் ஆண்டு திருச்சியில் அகில தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.

பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டஸ் சொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி - என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.

இல்லை நான் ஏற்றுக் கொள்கின்றேன். என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.

ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்!

பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை ‘போகி’ (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி-போகியது- போகி) இத்தினத்தில் பழைய பொருட்களை எரித்தல், பழைய குடில்களை எரித்தல் போன்ற நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. (முன்னாளில் யாழ்ப்பாணத்தில் பட்டி அடைக்கின்ற வயற்குடில்களை எரிக்கும் பழைய நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது இந்த நடைமுறை அருகி விட்டது.)

தமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல், வீட்டை அழகு படுத்தல, பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், கையுறை பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.

தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது. அத்துடன் தைப்பொங்கலின் மறுநாள் உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் ‘காணும் பொங்கல்’ என்று அழைப்பர். இந்த நாளில் சமைக்கப்படும் படையலின் போது மதுவும், புலாலும் படையற் பொருட்களாக முன்னர் விளங்கின. ஆரிய நடைமுறைக் கலப்பினால் மதுவும் புலாலும் படையற் பொருட்களிலிருந்து விலக்கப்பட தமிழரிடையே இருந்த தவப்படையல் என்ற நடைமுறை இப்போது அருகி விட்டது. யாழ்ப்பாணத்தில் வடமராட்சிப் பகுதியில் தைப் பொங்கல் தினமன்றே தவப் படையல் செய்யப்படும் வழக்கமிருந்தது. இப்படையலில் மீன்-இறைச்சி முதலியன படைக்கப்பட்டன. இத்தினத்தில் கலை நிகழ்வுகள் அரங்கேற்ற நிகழ்வுகள் புத்தாண்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.

தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம், உழைப்பையும் தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம்.

அன்புக்குரிய எமது நேயர்களே! தமிழனின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் எதிரிகள் சிதைத்தது போதாதென்று நாமும் கூட ஆரிய மாயையில் மயங்கிப்போய் எமது பண்பாட்டை இகழ்ந்தும், இழந்தும் வருகின்றோம். இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் புத்தாண்டு தினமான தைப்பொங்கல் குறித்து சில வரலாற்று உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைந்தோம். அனைவருக்கும் எமது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இக்கட்டுரைக்குப் பயன்பட்ட நூல்களும், ஆய்வு நூல்களும் வருமாறு-தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பொங்கலே தமிழ்ப்புத்தாண்டு-மலேசிய சிறப்பு மலர், தமிழர்-யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல், எட்டுத்தொகை-பத்துப்பாட்டு ஆகியவை முக்கியமானவையாகும். சம்பந்தப்பட்டவர்களுக்கு எனது நன்றி. காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன.

 

Mail Usup- truth is a pathless land -Home