"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > சிந்துப்பாவியல் ஆசிரியர் இரா. திருமுருகன்
சிந்துப்பாவியல்
ஆசிரியர் இரா. திருமுருகன்
(அரங்க நடராசன் உரையுடன்)
(வெளியீடூ பாவலர் பண்ணை, 1994)
cintuppAviyal
by ilakkaNaccuTar irA. Thirumurugan (urai: arangka naTarAcan)
Acknowledgements:Our Sincere thanks go to Mr. Raja Thyagarajan, Pondicherry for providing this etext with the permission of the author to place it as part of PM etext collections: Etext preparationin pdf, html versions : Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai, 1998-2006.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
இசைத்தற் கெனவே இயன்ற பாக்கள்
இசைத்தமிழ் எனப் பெயர் இயம்பப் பெறுமே.கருத்து : பண்ணோடும் பண்ணுடன் சேர்ந்த தாளத்தோடும் இசைத்தற்காகவே பாடிப்பாடி உருவாக்கப் பெற்ற பாடல்கள் யாமும் இசைத்தமிழ் என்று சொல்லப்படும்.
விளக்கம் : தமிழ்மொழி இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூவகைப் பாகுபாடுகளைக் கொண்டது. அவற்றுள்:
இயற்றமிழ் என்பது நினைத்த கருத்தை உணர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு நடப்பது, பேச்சும், உரையும் செய்யுளும் இதில் அடங்கும். இயற்றமிழ்ச் செய்யுளை இயற்பா என்பர். வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, மருட்பா ஆகியன இயற்பாக்கள் எனப்படும்.
இசைத்தமிழ் என்பது இசையின்பம் அளித்தலையே முதன்மை நோக்கமாகக் கொண்டு நடப்பது; சொற்பொருள் இன்பங்களையும் கொடுக்கக் கூடியது. இசைத்தமிழ் நூல்கள்; தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பனுவலில் (நாலாயிர திவ்விய பிரபந்தம்) முதலாயிரம், பெரிய திருமொழி, திருவாய்மொழி ஆகியன; திருப்புகழ் முதலியன.
இசைத்தமிழ்ப் பாடல்கள்: கலிப்பா* பரிபாடல்* பாவினங்கள்* வண்ணப்பா, சந்தப்பா, சிந்துப்பா, உருப்படி முதலியன. இவையாவும் இசைத்தற்கெனவே இயன்ற பாக்கள். ஆகவே இசைத்தமிழ் என்று வழங்கப்பட்டன.
------------------------------------------------------------------------------------------------------------
*இனிப் பிற நூலாசிரியர் விரித்துக் கூறியன இசைநூலின் பாவினம் ஆமாறு கூறுதலின்’ என்று கூறுகின்றார். இதனால் பாவினங்கள் இசைநூலுக்கு உரியவை என்பது தெளிவாகும். பேராசிரியர், அவையாவ: நாடகச் செய்யுளாகிய பாட்டுமடையும், வஞ்சிப் பாட்டும், மோதிரப் பாட்டும், கடகண்டும் முதலாயின, (தொ.பொ.செய்.1 80.பேரா.உரை) என்று விளக்குகிறார்.
கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன (தொ.பொ.செய்.242. பேரா.உரை)
------------------------------------------------------------------------------------------------------------
முதல் ஏகாரம் தேற்றம், இறுதி ஏகாரம் ஈற்றசை.
பாட்டிடைக் கலந்த பொருள ஆகிப்
பாட்டின்இயல பண்ணத் திய்யே (தொ.பொ.செய்.இளம்.173)என்ற நூற்பா, பண்ணை நத்திவரும் பண்ணத்திகளை இசைப்பாடல்களைப் பற்றியது. இதன் உரையில் இளம் பூரணர்,
------2. இசைப்பா
பண்ணுடன் நடப்பன, பண்ணும் தாளமும்
நண்ணி நடப்பன என இரண்டு இசைப்பா.கருத்து : பண் என்று சொல்லப்படும் இராகத்தோடு மட்டும் நடக்கும் இசைப்பாக்கள் என்றும் பண்ணுடன் தாளத்தோடு சேர்ந்து நடக்கும் இசைப்பாக்கள் என்றும் இசைப்பாக்கள் இரண்டு வகைப்படும்.
விளக்கம் : தாளமின்றிப் பண்ணுடன் மட்டும் இசைக்கும் பாடல்கள் இசைப்பா எனப்படும். திருத்தாண்டகங்கள் இசைப்பா வகையைச் சார்ந்தவை. அவை மா, விளம் வாய்பாடுகளால் ஆனவை. தாண்டகங்கள் தாளத்துடன் பாடப்படுதல் இல்லை. தாளமின்றி விருத்தம் பாடுதலை “சுத்தாங்கமாகப் பாடுதல்” என்பர். அவ்வாறு பாடப்படும் திருத்தாண்டகங்களைச் சிலர் ஏதேனும் தாளத்தில் அடக்கிப் பாடுவர். எனினும் இயல்பாயிருக்காது.
காட்டு :
செங்கால மடநாராய் இன்றே சென்று
திருக்கண்ண புரம்புக்கு என் செங்கண் மாலுக்கு
என்காதல் என்துணைவர்க்கு உரைத்தி யாகில்
இதுவொப்பது எமக்கின்ப மில்லை நாளும்
பைங்கானம் ஈதெல்லாம் உனதே யாகப்
பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன்; தந்தால்
இங்கேவந்து இனிதிருந்துஉன் பெடையும் நீயும்
இருநிலத்தில் இனிதின்பம் எய்த லாமே!
(திருமங்கையாழ்வார்: திருநெடுந்தாண்டகம்-27)பண்ணோடும், பாணி எனப்படும் கால அளவோடும் (தாளத்தோடும்) இசைக்கும் பாடல்கள் இசையளவு பா எனப்படும். இப்படிப் பாடுதலை “இலயாங்கமாகப் பாடுதல்” என்பர்.
3. தாளமுடைய பாடல்களின் வகை
தாள நடையுடைப் பாக்கள், வண்ணம்,
சந்தம், சிந்தே, உருப்படி என்ன
நால்வகை யாக நவிலப் படுமே.கருத்து : தாள நடையுடன் நிகழும் இசையளவு பாக்கள் வண்ணப் பாக்கள் என்றும் சந்தப்பாக்கள் என்றும், சிந்துப்பாக்கள் என்றும் உருப்படிகள் என்றும் நான்கு வகையாக வழங்கப்படும்.
விளக்கம் : இசையோடு தாளமும் சேர்ந்து நடக்கும் பாடல்கள் இசையளவு பாக்கள் என்பது முன்பு விளக்கப்பட்டது (நூ.2.உரை). அந்த இசையளவுப் பாக்கள் நான்கு வகையாக வழங்கப்படுகின்றன. அவை வண்ணப்பாக்கள், சந்தப்பாக்கள், சிந்துப்பாக்கள், உருப்படிகள் எனபனவாகும்.
காட்டு : வண்ணப்பா
தனனதன தனனதந்தத் தனதானா - என்ற அமைப்புடையது.
இருவினையின் மதிமயங்கித் திரியாதே
எழுநரகி லுழலுநெஞ்சத் தலையாலே
பரமகுரு வருணினைந்திட் டுணர்வாலே
கரவுதரி சனையையென்றற் கருள்வாயே
தெரிதமிழை யுதவுசங்கப் புலவோனே
சிவனருளு முருகசெம்பொற் கழலோனே
கருணைநெறி புரியுமன்பர்க் கெளியோனே
கனகசபை மருவுகந்தப் பெருமாளே! (திருப்புகழ் - 144)சந்தப்பா
சந்தப்பாக்கள் சந்தப் பாவிற்குரிய சந்தமாத்திரை பெற்றிருக்கும்.
வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யொவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்
மையோமர கதமொமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவ னழகென்பதோ ரழியாவழ குடையான் (கம் - 1926)சிந்துப்பா - நொண்டிச்சிந்து
உண்டான ஆத்தியெல்லாம் - வீட்டில்
உடைமை கடமைகளும் உடன்எடுத்துக்
கொண்டாடிக் கொண்டெழுந்தேன் - பாதை
கூடித்தென் பூமியை நாடிச் சென்றேன்.
சென்றேன் தலங்களெல்லாம் - பின்னர்ச்
சிதம்பரத் தையர் பதம்பெறநான்
நின்றேன் புலியூரில் - தொண்டர்
நேசிக்கும் சந்நிதி வாசல் வந்தேன் (திரு.நொ.நா.பக்.34, 35)உருப்படி
எடுப்பு
தெண்டனிட்டேன் என்று சொல்லடி - சுவாமிக்குநான்
தெண்டனிட்டேன் என்று சொல்லடி.தொடுப்பு
தண்டலை விளங்கும் தில்லை தளத்தில் பொன்னம்பலத்தே
கண்டவர் மயங்க வேடம் கட்டியாடு கின்றவர்க்குத் (தெண்ட)முடிப்பு
கற்பூர வாசம் வீசும் பொற்பாந் திருமுகத்தே
கனிந்தபுன் னகையாடக் கருணைக் கடைக்கண் ஆட
அற்பார்பொன் னம்பலத்தே ஆனந்தத் தாண்டவம்
ஆடிக்கொண்டே என்னை ஆட்டங்கண் டாருக்குத் (தெண்ட)
(திருவ - 1602, 1603)4. சிந்துப்பா
ஈரடி அளவொத் தியலும் பாக்கள்
சிந்தெனும் வகையைச் சேரும் என்பகருத்து : அளவொத்த இரண்டடிகளால் நடைபெறும் பாடல்கள் சிந்துப்பா என்று கூறப்படும் வகையைச் சேருமென்று சொல்வார்கள்.
விளக்கம் : இசைப்பா, இசையளவு பா என்ற இருவகையுள், சிந்துப்பா இசையளவு பா என்று முன்பு காட்டப்பட்டது (நூ.2.உரை). யாப்பிலக்கணங்களில் சீர்கள் என்று கொள்ளப்பட்டவை மா, விளம், காய், கனி முதலிய வாய்பாடுகளின் அடிப்படையில் அமைந்தவை. ஆனால் இசையளவு பாக்களின் பாற்பட்ட சிந்துப்பாக்கள் தாள நடையை அடிப்படையாகக் கொண்டவையாகலின் அப்பாக்கள் ஒவ்வொர் அடியிலும் நான்கு சீர்களுக்குக் குறையாமல் கொண்டிருக்கும். யாப்பிலக்கண முறையில் அமைந்த மிகச் சிறிய அடியும் சிந்து இலக்கண முறையில் நாற்சீராக அலகிடப்படும்.
காட்டு : நெஞ்சி லுரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி (யாப்பிலக்கண முறை)
நெஞ் - சிலு - ரமு - மின்றி
நேர் - மைதி - றமு - மின்றி (சிந்திலக்கண முறை - 8 சீர்) (பா.கவி. ப. 196)இவ்விரு வரிகளும் சேர்ந்து ஓரடியாகும். யாப்பிலக்கண முறையில் இவ்விரண்டு வரிகளும் 4 சீர் அடியாகும். சிந்திலக்கண முறையில் 8 சீர் கொண்ட அடியாகும். ஆகவே இரண்டடிகள் அளவொத்தும், ஓரெதுகை பெற்றும் நடக்கும் பாடல்கள் சிந்துப்பா என்று கூறப்படும்.
5. சிந்துப் பெயர்க்காரணம்
நாலடி என்னும் அளவின் இழிந்தே
ஒன்றே முக்கால் அடியின் உயர்ந்ததால்
சிந்தெனும் பெயரைச் செப்பினர் என்க.கருத்து : நாலடிப் பாடல் என்னும் அளவினின்று குறைந்ததாகவும், ஒன்றே முக்கால் அடிப்பாடலாகிய குறட்பாவினும் அளவில் உயர்ந்ததாகவும் இருக்கும் பாடல் இரண்டடிப் பாட; அதனால் அவ்விரண்டடிப் பாடலைச் சிந்துப்பாடல் என்று பெயரிட்டு வழங்கினர் என்று சொல்லுவர் என்றறிக.
விளக்கம் : சிந்துப்பாக்கள் எழுத்தளவால் பெயர் பெற்றிருத்தல் இயலாது. ஏனெனில் எழுத்து எண்ணிக்கையாலும், சீரெண்ணிக்கையாலும், அடிகளுக்குப் பெயரிடுவார்கள். எழுத்தளவு ஒன்றையே கொண்டு பாவகைக்குப் பெயரிடுவதில்லை.
மூன்று சீர்கள் கொண்ட அடி சிந்தடி எனப்படும். அப்படிப்பட்ட சிந்தடிகளால் ஆன பாடல் சிந்துப்பா எனப் பெயர் பெற்றது* என்பதும் பொருந்தவில்லை. ஏனெனில் குறளடி உடைய பாடலை குறட்பா என்று கூறுவதில்லை; அளவடி உடைய பாடலை அளவுப்பா என்றும் கூறுவதில்லை.
* கி.வா. ஜகந்நாதன், எஸ் இராமநாதன் ஆகியோர்
மேலும் மிகக் குறுகிய அடிகளை உடைய கிளிக்கண்ணி கூட யாப்பிலக்கணப்படி நாற்சீரடியால் அமைந்ததாகவே உள்ளது.
நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
(பா.கவி..ப.196)என்ற அடியில் 4 சீர்கள் உள்ளன.
நெஞ்சு பொறுக்கு தில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
(பா.கவி..ப.199)இந்த நொண்டிச் சிந்தின் அடியில் தனிச்சொல்லைச் சேர்க்காவிட்டாலும், 6 சீர்கள் உள்ளன. (இவ்விரண்டு வரிகளையும் இரண்டு அடிகளாகக் கொண்டு சிலர் மயங்குகின்றனர். இவ்விரண்டு வரிகளும், ஓரடியே. “அஞ்சி அஞ்சிச் சாவார்” என்று தொடங்குவதுதான் அடுத்த அடி)
தாள நடையை அடிபடையாகக் கொண்டு சிந்துப்பாக்களின் சீர்கள் அலகிடப்படுவதால், அந்த அலகீட்டு முறைப்படி, சிந்துப் பாக்களில் சிந்தடியை காணல் அரிது. எனவே சிந்தடியால் ஆன பா ஆதலால் சிந்துப்பா என்று கூறுதல் பொருந்துவதாயில்லை.
மேவும் குறள்சிந் தொடுதிரி பாதிவெண் பாத்திலகம்
மேவும் விருத்தம் சவலைஎன் றேழுமினி அவற்றுள்
தாவும் இலக்கணம் தப்பிடில் ஆங்கவை தம்பெயரால்
பாவும் நிலையுடைப் போலியும் என்றறி பத்தியமே!
(வீரசோ. யாப்பு.20)என்று புத்தமித்திரனார் செய்யுள் வகைகளைக் கூறுகிறார். . இவற்றிற்கு இலக்கணம் கூறுகையில்:-
2 அடி 7 சீராய் வருவது குறள்
2 அடி அளவொத்து வருவது சிந்து
3 அடி அளவொத்து வருவது திரிபாதி
4 அடி 15 சீராய் நடுவே தனிச்சொல் பெற்றுவருவது வெண்பாஎன்று விளக்கிச் சொல்கிறார்.
எழுசீர் அடிஇரண் டால்குறள் ஆகும்; இரண்டு அடிஒத்து
அழிசீர் இலாதது சிந்தாம்; அடிமூன்று தம்மில் ஒக்கில்
விழுசீர் இலாத திரிபாதி; நான்கடி மேவிவெண்பாத்
தொழுசீர் பதினைந்த தாய்நடு வேதனிச் சொல்வருமே!
(வீரசோ. யாப்பு.21)என்பது வீரசோழியம் இரண்டடி ஒத்து அழிசீர் இலாதது சிந்து என்பதற்கு,
காட்டு : வீசின பம்பரம் ஓய்வதன் முன்நான்
ஆசை அறவிளை நாடித் திரிவனே (வீரசோ - 3 (33))
ஒன்றே முக்காலடிப் பாடலாகிய குறளுக்கும், மூன்றே முக்காலடிப் பாடலாகிய வெண்பாவுக்கும் இடையில் 2 அடிப்பாடல், 3 அடிப்பாடல் என்று இரண்டு வகைகள் உள்ளன. எனவே குறளைவிட அளவால் நீண்ட இரண்டடிப் பாடலுக்குச் சிந்து என்று பெயர் கொடுத்தார். 3 அடிப்பாடல்லுக்கு வடமொழிக் குறியீடாகிய திரிபாதி என்பதைப் பெயராகக் கொடுத்தார் புத்தமித்திரனார்.
அளவொத்த இரண்டடி ஒரெதுகை பெற்றதாகத் தொடக்க காலத்தில் இருந்த சிந்துப்பாடல் பிற்காலத்தில் பல இயல்புகளில் மாறுதல் பெற்றாலும், அளவொத்த இரண்டடி ஒரெதுகை பெறல் என்ற அடிப்படை இயல்பினை மட்டும் இன்றளவும் பெரும்பாலும் போற்றிப் பாதுக்காத்து வருகிறது.
எனவே சிந்து என்பது இரண்டு சமமான அடிகள் ஓரெதுகை பெற்றுவரும் பாடலென்று பெறப்படுகிறது. ஆகவே மூன்றடியினும் அளவால் குறைந்ததாகவும் ஒன்றே முக்காலடி உள்ள குறளைவிட அளவால் நீண்டதாகவும் உள்ள ஓரெதுகை பெற்ற இரண்டடிப் பாடலே சிந்துப் பாடலாகும் என்பது தெளிவு.6. அசை
சிந்துப் பாக்களின் சீர்களில் உள்ள ஒவ்வோர் உயிரும் ஓரசை யாகும்
கருத்து : சிந்துப் பாக்களில் அமைந்திருக்கின்ற சீர்களில் உள்ள உயிர்க்குறில், உயிர்நெடில், மெய்யோடு கூடிய குறில், நெடில் (உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில்) ஆகிய ஓவ்வோருயிரும் ஓரசையாகவே கொள்ளப்படும்.
விளக்கம் : சிந்து ஒருவகை இசைப்பா. இயற்பாக்கள் கவி, கவிதை, செய்யுள் என்று குறிப்பிடப் பெறும்.
இயற்பாக்கள், சந்தப்பாக்கள், வண்ணப்பாக்கள், சிந்துப்பாக்கள், ஆகியவற்றில் ஒன்றின் இலக்கணமுறை மற்றவற்றிற்குப் பொருந்தி வரவில்லை.
இயற்பாக்களில்: குறில், குறிலொற்று, நெடில், நெடிலொற்று (ப, பல், பா, பால்) நேரசை என்றும்;
குறிலிணை, குறிலிணைஒற்று, குறில்நெடில், குறில்நெடில்ஒற்று, (அணி, அணில், கடா, கடாம்) நிரையசை என்றும் கொள்ளப்படுகின்றன.
சந்தப்பாக்களில்: குறில் ஒரு மாத்திரை, குறிலொற்று, நெடில், நெடிலொற்றுகள் இரண்டு மாத்திரை என்ற முறையில் சந்த மாத்திரை அளவாகக் கொள்ளப்படுகின்றன.
(எழுத்திலக்கணத்தில் குறில், குறிலொற்று, நெடில், நெடிலொற்று முறையே ஒன்று, ஒன்றரை, இரண்டு, இரண்டரை மாத்திரை பெறும்.)
வண்ணப்பாக்கள்: சந்தக் குழிப்புகளின் வழி நடக்கின்றன.
சிந்துப்பாக்கள்: தாள அளவின் வழி நடக்கின்றன.
சிந்துப் பாடல்கள் தாள அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ளதால்தான் மற்ற பாக்களான இயற்பா, சந்தப்பா, வண்ணப்பாக்களுக்கான அசை, சீர், அடி, தொடை, மாத்திரை முதலியன இதற்கு ஒத்துவராமற் போகின்றன.
தாள அடிப்படையில் அமைந்த சிந்துப்பாடல்களில் உள்ள அசைகளையும், சீர்களையும் உணர வேண்டுமெனில் முதலில் தாளத்தையும் அதன் உள்ளுறுப்புகளையும் உணர வேண்டும். தாளம் ஏழு: அவை: துருவம், மட்டியம், ரூபகம், சம்பை, திருபுடை, அட, ஏக என்பனவாகும். இவற்றில்ன் உள்ளுறுப்புகள் மூன்று; அவை: கோல் (இலகு) - சுழி (திருதம்) - அரைச்சுழி (அனுத்திருதம்).
கோல் 1 என்றும், சுழி 0 என்றும், அரைச்சுழி அரைவட்ட வடிவிலும் குறிக்கப்பெறும்.
சுழி இரண்டு எண்ணிக்கையுடையது. அரைச்சுழி ஒர் எண்ண்ணிக்கை உடையது. இவையிரண்டும் எண்ணிக்கையில் மாறாதவை. கோல் மட்டும் இனத்தைப் பொறுத்து எண்ணிக்கை மாறக் கூடியது.
கோலும் இனங்களும் (சாதிகளும்):
மேற்குறித்த ஏழு தாளங்களுக்கும் இனங்கள் உண்டு. அவை மும்மை (திசிரம்), நான்மை (சதுசிரம்), ஐம்மை (கண்ட), எழுமை (மிசிரம்), ஒன்பான்மை (சங்கீரணம்) என ஐந்தாகும். இவற்றின் எண்ணிக்கை முறையே மூன்று, நான்கு, ஐந்து, எழு, ஒன்பது என்பனவாகும்.
ஒரு தாளத்தில் உள்ள கோல் இந்த ஐந்து இனத்துக்குரிய எண்ணிக்கைகளைத் தனித்தனியே பெறும்போது அத்தாளம் ஐந்து வகையாகிறது. இப்படியே ஏழு தாளங்களும் (7 தாளம் x 5 இனம்)= 35 வகையாகும். எடுத்துக்காட்டாகத் திரிபுடைத் தாளம் மும்மை இனமாயின் ‘மும்மையினத் திரிபுடை’ (திசிர சாதித் திரிபுடை) என்று பெயர்பெறும். அதனை ‘1300’ என்று குறிப்பார்கள். இதன் மொத்த எண்ணிக்கை (3+2+2) ஏழாகும். இதே திரிபுடைத் தாளம் நான்மை இனமாயின் நான்மைத் திரிபுடை (சதுசிர சாதித் திரிபுடை) என்று பெயர்பெறும். அதன் குறியீடு ‘1400’ ஆகும். இதன் மொத்த எண்ணிக்கை (4+2+2) எட்டாகும். இப்படியே முப்பத்தைந்து தாளத்துக்கும் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும்.
வட்டணை (ஆவர்த்தம்)
நான்மை இனத் திரிபுடைத் தாளத்திற்கு நடைமுறையில் ஆதி தாளம் என்று பெயர் வழங்கப்படுகிறது. ஒரு தாளத்தின் முழுநீளம் ஒரு வட்டணை எனப்படும்.
தாளம் போடும் முறை:
கோல் - ஒரு தட்டுத் தட்டி அதற்குரிய எண்ணிக்கை (தட்டுடன் சேர்த்து) எண்ண வேண்டும். சுழி - ஒரு தட்டுத் தட்டித் திருப்ப வேண்டும். அரைச்சுழி - ஒரு தட்டுத் தட்ட வேண்டும்.
சிந்துப் பாடல்களில் பெரும்பாலன ஆதி தாளத்தில் அடங்குமாறு அமைந்துள்ளன. அவற்றைப் பாடும்போது அடியின் முற்பகுதி ஒரு கோலிலும், 14 அடுத்தபகுதி இரண்டு சுழிகளிலும் ‘00’ அடங்குகின்றன. இப்படித் தாளத்தின் ஒரு வட்டணையிலோ, பல வட்டணைகளிலோ ஓரடி அடங்குகிறது.
1
2
3
4
ஓம் சக்தி
ஓம் சக்தி
ஓம் . ப
ரா சக்தி
5
6
7
8
ஓம் சக்தி
ஓம் சக்தி
ஓம் . .
. . .
(அசை நீட்டங்கள் புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளன)
மேற்காட்டிய கோலிற்குரிய நான்கு எண்ணிக்கையில் முதல் அரையடியும், இரு சுழிகளுக்குரிய நான்கு எண்ணிக்கையில் அடுத்த அரையடியும் ஆக ஓர் ஆதிதாள வட்டணையில், இதன் ஓரடி முழுவதும் அடங்குவதைக் காணலாம். எட்டாம் எண்ணிக்கையில் எழுத்துகளே இல்லையென்றாலும் எழாம் இடத்தில் இறுதியாக வரும் அசை எட்டாம் சீராக நீண்டு இசைக்கிறது. இந்த இரண்டு வரிகளும் சேர்ந்து ஓரடி. எனவே இவ்வடியில் 8 சீர்கள் உள்ளன. இதனை எண்சீர்க் கழிநெடிலடி எனலாம். இந்தப் பாடலில் ஒவ்வோரடியும் ஓர் ஆதிதாள வட்டணையில் அடங்குகிறது.
இந்தப் பாடலில் கோடிட்டுக் காட்டியபடி 8 சீர்கள் உள்ளன. ஒற்று நீக்கிய உயிர்நெடில், உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் ஆகிய பதினெட்டு உயிரெழுத்துகள் (சிந்துப்பாடலில் உயிரும் உயிர்மெய்யும் உயிராகவே கொள்ளப்படும்) எட்டு சீர்களாக இசைக்கின்றன.
சிந்துப்பாக்களில் அசைகள், இயற்ப்பாக்களுக்குச் சொல்லப்படும் நேரசை, நிரையசை இவற்றினின்றும் வேறுபட்டவை. சிந்துப்பாவின் அசைகள் நீளத்தில் சமமானவை என்று கூறலாமேயன்றி அவற்றை அளவிட்டு இத்தனை மாத்திரை என்று கூறமுடியாது.
சிந்துப்பாடல்களில் உள்ள சீர்களும் இயற்பாக்களுக்கு அமைந்துள்ள மா, விளம், காய், கனி, பூ, நிழல் முதலிய சீர்களினின்றும் வேறுபட்டவை என்பதை உணர வேண்டும். சிந்துப்பாக்களைத் தாளம் போட்டு பாடும்போது ஒரு தட்டில் அடங்குவது ஒரு சீர். அந்தச்சீர் ஒரு எழுத்தாலோ, பல எழுத்துகளாலோ, ஒரு சொல்லாலோ, பல சொற்களாலோ அமைந்திருக்கலாம். எழுத்துக் குறைவாக உள்ள சீர்கள் தாள எண்ணிக்கையின் நீளத்திற்கு நீண்டு ஒலிக்கும்.
மும்மை நடைப்பாடலாயின் ஒவ்வொரு சீரிலும் மும்மூன்று உயிர்களும், நான்மை நடைப்பாடலாயின் நான்கு நான்கு உயிர்களும், ஐம்மையாயின் ஐந்தைந்து உயிர்களும், எழுமையாயின் ஏழேழு உயிர்களும், ஒன்பான்மையாயின் ஒன்பதொன்பது உயிர்களும் இருக்கும். எழுத்துக் குறைகின்ற சீர்களில் ஓசை நீட்டம் இருக்கும்.
‘அவ்வெழுத்து அசைத்து இசைகோடலின் அசையே’
(யா.கலம்.நூ.1 உரை மேற்கோள்)என்றதனால், எழுத்தை அசைத்து இசை கொள்வதே அசை என்பதும் நோக்கற்பாலது. ஆகவே சிந்துப்பாக்களில் சீர்களில் உள்ள ஒவ்வோர் உயிரும் ஓரசையாகும் என்பது தெளிவு.
7.
கருத்து : குறிலாகவும், நெடிலாகவும் உள்ள உயிரெழுத்துகளும், உயிர்மெய்க் குற்றெழுத்துகளும், உயிர்மெய் நெட்டெழுத்துகளும் தனித்து வரின் ஓரசையாகும், ஒற்றடுத்து வரினும் ஓரசையாகும்.
காட்டு:
அ
ஆ
அல்
ஆல்
க
கா
கல்
கால்
விளக்கம் : இயற்பா இலக்கணத்தில் குறில், குறிலொற்று, நெடில், நெடிலொற்று நேரசை என்றும், குறிலிணை குறிலிணை ஒற்று, குறில் நெடில், குறில் நெடில் ஒற்று நிரையசை என்றும் இரண்டு பாகுபாடுகள் உள்ளன. ஆனால் இந்த பாகுபாடுகளும் சிந்துப்பாக்களுக்கு இல்லை. சிந்துப் பாக்களில் வருகின்ற ஒவ்வோர் உயிரெழுத்தும் ஓரசை என்றே கொள்ளப்படுகிறது.
அசை பிரியும் போது ஒற்றெழுத்துகள் முன் அசையின் இறுதியில் சேர்க்கப்படும். அசையானது ஒற்றெழுத்தால் தொடங்காது. ஒற்றெழுத்து, சொற்களுக்கு முதலாக வருதல் தமிழ் மரபன்று. அதனால் அசைகளும் சீர்களுக்கும், வரிகளுக்கும் முதலாக வைப்பதில்லை.
க என்னும் குறிலும், கல் என்ற குறிலொற்றும், ஆ என்ற நெடிலும், ஆல் என்ற நெடிலொற்றும் எப்படிச் சமமாக ஒலிக்கின்றன என்ற ஐயம் எழலாம். எழுத்திலக்கணத்தில் அவை முறையே ஒன்று, ஒன்றரை, இரண்டு, இரண்டரை மாத்திரைகளைப் பெறும். ஆனால் சந்தப்பாவிலக்கணத்தில் அவை முறையே ஒன்று, இரண்டு, இரண்டு, இரண்டு மாத்திரைகளைப் பெறும். (சந்தப்பா இலக்கணப்படிக் குறில் ஒரு மாத்திரை, குறிலொற்று, நெடில், நெடிலொற்றுகள் இரண்டு மாத்திரை) அது போல் சிந்துப்பாவின் அசைகள் தனியான வேறு இயல்பைப் பெறுகின்றன. அவையனைத்துமே சமமான ஓசையுடையவை. (சிந்துப்பாவின் அசைகள் நீளத்தில் சமமானவை என்று கூறலாமேயன்றி அவற்றை அளவிட்டு இத்தனை மாத்திரை என்று கூறுதல் இயலாது)8. குறிலசையும் நெடிலசையும்
குறிலே குறிலசை ஆகும்; நெடிலும்,
குறிலொற் றடுத்ததும், நெடிலொற் றடுத்ததும்
நெடிலசை யாக நிகழு மென்க.காட்டு : சிந்துப்பாடல்களில் வரும் உயிர்க் குறிலும், உயிர்மெய்க் குறிலும், குறிலசை எனப்படும்; உயிர்நெடிலும், உயிர்மெய் நெடிலும், உயிர்க்குறிலொற்றும், உயிர்மெய்க் குறிலொற்றும், உயிர் நெடிலொற்றும், உயிர்மெய் நெடிலொற்றும் நெடிலசையாக நடைபெறும் என்றும் சொல்லுதல் வேண்டும்.
விளக்கம் : இயற்பாவில் நேரசை, நிரையசை என்ற பாகுபாடுகள் உள்ளன. ஆனால் அந்தப் பாகுபாடுகள் சிந்துப்பாவில் இல்லை. சிந்துப்பாவில் குறிலசை, நெடிலசை என்ற இரண்டே பாகுபாடுகள் உள்ளன.
காட்டு :
குறிலசை என்பது :
தனி உயிர்க் குறில் (அ)
உயிர்மெய்க் குறில் (க)
நெடிலசை என்பது :
உயிர்நெடில் (ஆ)
உயிர்மெய் நெடில் (கா)
உயிர்க் குறிலொற்று (அல்)
உயிர்மெய்க் குறிலொற்று (கல்)
உயிர் நெடிலொற்று (ஆல்)
உயிர்மெய் நெடிலொற்று (கால்)
என்பனவாகும்.
9. அசை நீட்டம் (அளபெடை)
ஓரசை நீட்டம் ஈரசை அளவே.
கருத்து : சிந்துப்பாக்களின் சீர்கள் ஒவ்வொன்றிலும் உள்ள குறிலசை, நெடிலசைகள் (தனிச் சொல்லுக்கு முன்னும், அரையடி இறுதி, அடியிறுதி இடங்களையும் தவிரப் பிற இடங்களில்) நீள வேண்டுமாயின் அவற்றின் மொத்த நீளம் ஈரசை அளவுள்ளதாக இருக்கும். அதற்குமேல் நீளுதல் இல்லை.
விளக்கம் : சிந்துப்பாவின் அசைகள் சமமான ஓசையுடையவை. அந்த அசைகள் நீளத்தில் சமமானவை என்று கூறலாமேயன்றி அவற்றை அளவிட்டு இத்தனை மாத்திரை என்று கூறுதல் இயலாது. அவற்றின் நீளம் பாடுவோரின் பாடும் விரைவைப் பொறுத்தது. பாடகர் மெல்ல நிறுத்தி (மந்தகதியில்) பாடினால் ஒவ்வொரசையும் இரண்டு மாத்திரை அளவும் ஒலிக்கலாம். விரைவாகப் (துரித கதியில்) பாடினால் ஒவ்வோரசையும் அரை மாத்திரையாகவும் ஒலிக்கலாம். எவ்வளவு ஒலித்தாலும் அசைகள் அனைத்தும் சமமான நீளமே ஒலிக்கும். அதற்கேற்றபடி குறில்கள் நீண்டும் நெடில்கள் குறுகியும் ஒலிக்கும்.
சிந்துப்பாடல்களை உருப்படிகளைப் போல கண்ட இடங்களில் நீட்டி முழக்கிப் பாடக்கூடாது. அதில் தனிச் சொல்லுக்கு முன்னும், அரையடி இறுதி, அடியிறுதி இடங்களையும் தவிரப் பிற இடங்களில் எழுத்துகள் இரண்டசைக்கு மேல் நீள்வதில்லை. அங்குள்ள எல்லாச் சீர்களும் அந்நடைக்குரிய எண்ணிக்கையுள்ள அசைகளைக் கொண்டிருக்கும்.காட்டு : “ஆறுமுக வடிவேலவனே” என்ற கண்ணி (பின் இணைப்பில் பார்க்க) மும்மை நடைப் பாடல் அதற்கேற்றவாறு அதன் ஒவ்வொரு முழுச் சீரிலும் மும்மூன்று அசைகள் உள்ளன. (முழுச்சீர் என்பது முழுதும் எழுத்துகளால் அசைவரக் கூடிய இடங்களில் வௌம் சீர். “ஆறுமுக வடிவேலவனே” என்ற பாடலின் அடி, அரையடிகளின் முதற்பாதியில் நான்கு சீர்களும், பிற்பாதியில் வரும் முதலிரண்டு சீர்களும் முழுச்சீர்கள்)
நீண்ட அசைகளாக (அளபெடைகளாக) பேச், போச், சோ, கே நா ஆகிய அசைகள் 2 அசையளவு நீளுகின்றன. இந்நீட்டங்களைப் பே எச், போ ஒச், சோஒ, கேஎ, நாஅ என்று அளபெடைகளாக எழுதுவதே முறை. தனிச்சொல்லுக்கு முன்னும், அரையடி இறுதி, அடி இறுதிகளிலும் இப்பாடலில் நீளும் அசைகளை லைஇஇ, லைஇஇஇஇ, சுஉஉஉ, சுஉஉஉஉஉ, லிஇஇஇ, லஇஇஇஇ, னேஎஎஎ, னேஎஎஎஎ, என்று எழுத வேண்டும்.** ------------------------------------------------------------------------------------------------------------------------
** இசையில் அளவிறந்து இசைக்குங்கால் ஆவி பன்னிரண்டு மாத்திரை ஈறாகவும், ஒற்று பதினொரு மாத்திரை ஈறாகவும் இசைக்கும் என்றார் இசை நூலார் (நன்னூல்: 101, சங்கர நமச்சிவாய உரை)
------------------------------------------------------------------------------------------------------------------------
நெடில் ஏழும், ஙஞணநமன வயலள ஆய்தம் என்னும் பதினோர் ஒற்றுகளும் எழுத்திலக்கணப்படி அளபெடுக்கும் எழுத்துகள். ஆனால் இசையில் இவற்றுடன் குறில் ஐந்தும் அளபெடுக்கும். குறில் அளபெடுப்பது குற்றெழுத்தளபெடை எனப்படும். சுஉஉஉ என்பது குற்றெழுத்தளபெடை.## அளபெடுக்காத வல்லினம் ஆறும், ரழ என்ற மெய்களும், நீள வேண்டிய அசைக்கு இறுதியாக வந்தால் பேஎச், போஒச், வாஅர், வாஅழ், என்பன போல் அம்மெய்களுக்கு முன் உயிர் அளபெடுத்து இறுதியில் (அளபெடை எழுத்துக்குப் பின்) அம்மெய்களைப் பெறும். அளபெடுப்பவை மெய்களாயின் போம்ம்ம்ம் என்பது போல் இறுதி மெய்யே அளபெடுக்கும். ஆனால் தெளிவாகப் பார்த்துப் புரிந்து கொள்வதற்கு ஏற்றபடி இந்நூலில், அளபெடுக்குமிடங்கள் அளபெடை அறிகுறிகளுக்குப் பதில் புள்ளிகளாகக் காட்டப்பட்டுள்ளன.@ இனிவருமிடங்களிலும் இப்புள்ளி உள்ள இடங்கள், அளபெடுக்கும் இடங்களைக் குறிப்பதாகக் கொள்க.
------------------------------------------------------------------------------------------------------------------------
## இயற்கை அளபெடை செயற்கை அளபெடை எழுத்துப்பே றளபெடை இசைநூ லளபெடை ஒற்றுபே றளபெடை ஒரோவழிக் கூடில் ஐந்தென மொழிப அளபெடை; அவைதாம் குற்றெழுத் தளபெடை நெட்டெழுத் தளபெடை ஒற்றெழுத் தளபெடை எனவொரு மூன்றாய் மொழிமுதல் இடைகடை மூன்றிலும் வருமே. (சுவாமிநாத தேசிகர், 1973:253) @ இசைநூல்களில் உருப்படிகளை இசைக்குறியீட்டில் எழுதும்போது நீட்டங்களை புள்ளியிட்டெழுதுதல், அளபெடை இட்டு எழுதுதல், என்னும் இரண்டு முறைகளும் கடைப் பிடிக்கப்படுகின்றன. (கோமதி சங்கரய்யர். வா.சு.1984, 207, 208) ------------------------------------------------------------------------------------------------------------------------10.
தனிச்சொல் முன்னரும் அரைடை இறுதியும்
அடியின் இறுதியும் அமையும் அசைகள்
இரண்டிறந் திசைத்தலும் இயல்பா கும்மே.கருத்து : சிந்துப் பாடல்களில் தனிச் சொல்லுக்கு முன்னரும் அரையடியின் இறுதியிலும், அடியின் இறுதியிலும் அமைந்திருக்கின்ற அசைகள் இரண்டு அசை நீளத்திற்கு மேல் நீண்டு இசைத்தலுமுண்டு.
விளக்கம் : இசையில் எழுத்துகள் அளவிறந்து நீண்டிசைப்பது உண்டு என்பதைத் தொல்காப்பியர்:
அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளஎன மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர் (தொல். எழு. நூ. மரபு: 33)என்று கூறுகின்றார்.
ஆவியும் ஒற்றும் அளவிறந் திசைத்தலும்
மேவும் இசைவின்ளி பண்டமாற் றாதியின் (நன். 101)என்ற நன்னூர் நூற்பா உரையில் - இசையில் அளவிறந்திசைக்குங்கால் ஆவி 12 மாத்திரை ஈறாகவும், ஒற்று 11 மாத்திரை ஈறாகவும் இசைக்கும் என்கிறார் இசை நூலார் என்று கூறுகிறார் சங்கர நமசிவாயர்.
தனிச்சொல் வருகின்ற பாடல்களில் அதற்கு முன்புள்ள அசைகள் உரிய அளவு நீண்டிருக்கும் என்பது ஒரு தனித் தன்மையாகும். இத் தன்மையினைப் பிற்காலச் சிந்துப் பாடல்களில் காணலாம். இந்த இயல்பை முதன் முதலாகச் சம்பந்தர் தேவாரத்தில் காண்கிறோம்.
காட்டு :
மாதர் மடப்பிடியும் - மட
அன்னமும் அன்ன தோர்
நடையுடை - மலைமகள் துணையென மகிழ்வர்
பூத இனப்படைநின் - றிசை
பாடவும் ஆடுவர்
அவர்படர்சடைநெடு முடியதோர் புனலர்
வேதமோ டேழிசைபா - டுவர்
ஆழ்கடல் வெண்டிரை
இரைந்நுரை கரைபொருது விம்மிநின் றயலே
தாதவிழ் புன்னைதயங் - கும
லர்ச்சிறை வண்டறை
எழில்பொழில் குயில்பயில் தருமபுரம் பதியே
(திருஞானசம்பதர்: யாழ்முரி -1. ப. 351)ஆறுமுக வடிவேலவனே என்ற பாடலில் அரையடி இறுதிகளில் உள்ள அசைகள் நான்கசை நீளம் நீண்டிருக்கின்றன. அடி இறுதிகளில் உள்ள அசைகள் ஆறசை நீளம் நீண்டிருக்கின்றன. (பாடலில் இவ்விடங்கள் புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளன)
இப்பாடல் மும்மைநடைப் பாடல். இதில் ‘ஆறுமு’ ‘கவடி’ ‘வேலவ’ என்பன போன்ற பகுதிகள் தாளத்தின் ஒவ்வோர் எண்ணிக்கையிலும் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சீராகக் கொள்ளப்படும். இரண்டாம் வரியில் லை என்பது இசையளவில் நீண்டு ஒரு சீராகிறது. நான்காம் வரியில் உள்ள லை என்பது இசையளவில் இரண்டு முழுச்சீர்களாக நீள்கிறது. இப்படி மிகுதியாக நீளும் இசை நீட்டங்கள் பெரும்பாலும் தனிச்சொல் முன்னரும், அரையடி இறுதிகளிலும், அடியிறுதிகளிலும் மட்டுமே காணப்படும்.
‘இசைத்தலும்’ என்ற உம்மையால் இசையாமையும் உண்டென்பது பெறப்படுகிறது.
காட்டு :
நீலத்தி ரைக்கடல் ஓரத்திலே - நின்று
நித்தம்த வம்செய்கு மரியெல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு. (பா.கவி. ப. 165)
இதில் தனிச்சொல்லுக்கு முன்னரும் அரையடி இறுதியிலும் சிறிதும் ஓசை நீளவில்லை.11.
குறிலசை நீட்டம் அருகுதல் சிறப்பே
கருத்து : சிந்துப் பாடல்களில் வருகின்ற (உயிர்க்குறில், உயிர்மெய்க் குறில், ஆகிய) குறிலசைகள் இரண்டு அசை அளவுக்கு மேல் நீண்டுவரும் இசை நீட்டம் மிகவும் குறைவாக வருதல் சிறப்புடையதாகும். (குறிலசைகள் நீட்டம் பெறாமல் வருதலே சிறப்பு)
விளக்கம் : சிந்துப் பாடல்களில் ஓவ்வொரு சீரிலும் முதலசையாக வருவன மற்ற அசைகளினும் சற்றுக் கூடுதலாக அழுத்தம் (stress) பெறுகின்றன. அதற்கேற்றபடி அவ்வசைகளைப் பெரும்பாலும் நெடில், நெடிலொற்று, குறிலொற்றாகவே உள்ளன. தனிக்குறில் சீர் முதலில் பெரும்பாலும் வருவதில்லை.
காட்டு : ‘ஆறுமுக வடி வேலவனே’ என்ற பாடலில் முழுமையாக உள்ள 48 சீர்களிலும் முதலசையாக மூன்று தனிக்குறில்களே வருகின்றன. அவை க, ன, ரு.
ஆறுமு
க
வ
டி
வெள்ளைத்த
ன
மா
கத்
தங்குமு
ரு
கோ
னே
ஏனையவை குறிலொற்று, நெடில், நெடிலொற்றுகளாக உள்ளன. முதலசை நெடிலசையாக வராமல் குறிலசையாக வரும் இடங்களில் முதலசையுடன் இரண்ட்டாம் அசை, ஓசை நீட்டமாகவன்றி, எழுத்துள்ள அசையாக இருக்கும்.
காட்டு :
ஆறுமு
க
வ
டி
வெள்ளைத்த
ன
மா
கத்
தங்குமுரு
கோ
னே
இதில் க, ன, ரு சீர்முதல் குறிலசைகள். இவற்றின் இரண்டாம் அசை ஓசை நீட்டமாக இல்லாமல், வ, மா, கோ என்ற எழுத்துள்ள அசைகளாக வந்துள்ளன.
எனவே இறுதிச் சீர் ஒழிந்த சீர்களில் ஈரசையாய் நீளும் குறிலசையும், சீர்த் தொடக்கத்தில் வரும் குறிலசையும் சிறப்பில்லாத அசைகள். ஆனதால் (சிறப்பிலசைகள் நூற்பா 13இல் காண்க) அவை சிந்துப் பாடல்களில் அருகி வருதல் (குறைந்த அளவில் வருதல்) சிறப்பாகும்.12. சிறப்பசை
ஓரசை யாய்வரும் குறிலசை, ஓரசை
ஈரசை யாய்வரும் நெடிலசை சிறப்பசைகருத்து : சிந்துப் பாடல்களில் வரும் அசைகளில், ஓரசையாக வருகின்ற குறிலசைகளும், ஓரசையாகவும், ஈரசையாகவும் வருகின்ற நெடிலசைகளும் சிறப்பசைகளாகும்.
விளக்கம் : சிந்துப்பாடல்களில் உள்ள ஒவ்வோர் உயிரும் அல்லது உயிர்மெய்யும் ஓரசையாகக் கொள்ளப்படும். ‘எழுத்தை அசைத்து இசை கொள்வதே அசை’ என்பது இலக்கண வழக்கு.
“அவ்வெழுத்து
அசைத்து இசை கோடலின் அசையே”
(யா. கலம் நூ. 1. உரை மேற்கோள்)சிந்துப் பாடல்களில் குறிலாய் உள்ள அசையைக் குறிலசை எனலாம். நெடிலாய் உள்ள அசையை நெடிலசை எனலாம்.
குறிலசை என்பன : உயிர்க்குறிலும் (அ), உயிர்மெய்க் குறிலும் (க)
நெடிலசை என்பன
: உயிர்நெடிலும் (ஆ), உயிர்மெய் நெடிலும் (கா)
: உயிர்நெடில் ஒற்று (ஆல்), உயிர்மெய் நெடிலொற்று (கால்)
: உயிர்க்குறில் ஒற்று (அல்), உயிர்மெய்க் குறிலொற்று (கல்)
தனிச்சொல்லுக்கு முன்பும், அரையடியின் இறுதிகளிலும், அடியின் இறுதிகளிலும், அமைந்திருக்கின்ற அசைகள் இரண்டு அசைக்கு மேலும் இசைக்கும் என்று முன்பு விளக்கப்பட்டதால் (நூற்பா.10) மற்ற இடங்களில் உள்ள அசைகள் ஓரசை, ஈரசைக்கு மேல் நீள்வதில்லை என்பது தெளிவாகிறது.
குறிலசையின் இயல்பு ஓரசையாய் ஒலிப்பது. நெடிலசையின் இயல்பு ஓர் அசையாகவோ, ஈரசையாகவோ ஒலிப்பது. இத்தன்மைகளிலிருந்து மாறாமல் வரும் குறிலசையும், நெடிலசையும் சிறப்பசைகள் என்று கொள்ளப்படும்.13. சிறப்பிலசை
இறுதிச் சீர்களின் இறுதி மொழிந்த
இடங்களில் ஈரசை யாய்வரும் குறிலசை,
சீர்முதற் குறிலசை சிறப்பி லசையாகும்.கருத்து : சிந்துப் பாடல்களில் அடியிறுதி, அரையடி இறுதி ஒழிந்த இடங்களில் இரண்டசை நீளம் ஒலித்து வரும் குறிலசைகளும், சீரின் தொடக்கங்களில் வரும் குறிலசைகளும் சிறப்பில்லாத அசைகளாகும்.
விளக்கம்: சிந்துப் பாடல்களில் குறிலசைகள் ஒலிக்கும் அளவு ஓரசையாகும். (இக்குறிலசைகள் அரையடி இறுதி, அடியிறுதிகளில் நீட்டம் பெற்று ஒலிக்கலாம்)
சிந்துப் பாடல்களில் அரையடி இறுதிச் சீர், அடியிறுதிச் சீர் ஒழிந்த சீர்களில் இக்குறுலசைகள் சில இடங்களில் நீட்டம் பெற்று இரண்டசையாகவும் ஒலித்து வருகின்றன. அவ்வாறு ஒலித்து வரும் இடங்களில் பாடலின் ஓசை சிறப்பாக இராது. ஆகவே அவ்வாறு வரும் குறிலசைகள் சிறப்பில்லாத அசைகளாகக் கருதப் படும்.
காட்டு : ‘பொன்னுலவு சென்னிகுள’ என்ற பாடலில் ஒன்பதாவது, பதினோராவது வரியில் வரும் து, து என்ற குறிலசைகள் நீட்டம் பெற்று வந்தன. அவை சிறப்பிலசைகள். (பாடலைப் பின் இணைப்பில் பார்க்கவும்)
அதே போன்று ஒரு சீரின் தொடக்கத்தில் குறில் ஒற்று, நெடில், நெடிலொற்று வரும்போது பாடலோசை சிறந்திருப்பது போலக் குறிலசை வரும்போது சிறப்பதில்லை. ஆகவே அவ்வாறு சீர்முதலில் வருகின்ற குறிலசைகளும் சிறப்பில்லாத அசைகளாகக் கொள்ளப்படும்.
காட்டு : ‘ஆறுமுக வடிவேலவனே’ என்ற பாடலில் சீர் முதலில் வருகின்ற
க-ன-ரு என்ற குறிலசைகள் சிறப்பிலசைகளாம்.
ஆறுமு கவடி வேலவ னேகலி
வெள்ளைத்த னமாகத் துள்ளுகி றாய்நெஞ்சில்
தங்கும்மு ருகோனே14. வழுவசை
ஈருயிர் அசையும் இரண்டிறந் தொலிக்கும்
எவ்வகை அசையும் வழுவசை யாகும்வழுவசை என்பது யாது? என்பதை விளக்குவது இந்த நூற்பா.
கருத்து : சிந்துப் பாடல்களில் இரண்டு உயிரெழுத்துகளைக் கொண்டிருக்கும் ஓர் அசையும், அரையடி இறுதி, அடியிறுதி ஒழிந்த இடங்களில் இரண்டு அசைகளுக்கு மேலும் நீண்டு ஒலிக்கும் குறிலசை, நெடிலசையாகிய எப்படிப்பட்ட அசைகளும் வழுவசைகள் எனப்படும்.
காட்டு : இரட்டைக் கும்மி
தில்லைச்சி தம்பரம் தன்னிலொ ருநாள்
திருநட்ட மாடும்சி வனுடனே
தேவிசி வகாமி நாயகி அந்தத்
திருநீல பத்தன்நெ றிஉரைக்கச்
சொல்லசெ விதனில் கேட்டாள் நாளும்
சோதித்த வன்தன்னைச் சூதாக்கிச்
சொன்னமொ ழிநிலை யாமலெந் நாளும்
சுகத்தினில் வாழநி னைத்திடென்றார்
(திரு. நீ. பள்ளு. தொடை: 284)இதில் திரு - திரு - சுக என்பன ஈருயி அசைகள். இவை வழுவசைகள்.
விளக்கம் : சிந்துப் பாடலில் ஒவ்வோர் உயிரும் அல்லது உயிர்மெய்யும் ஓரசையாகக் கொள்ளப்படும் என்று முன்னரே விளக்கப்பட்டது. (நூ. 6) எனவே இக்கட்டுப்பாட்டை மீறி ஓரசை இரண்டு உயிர்களைப் பெற்று வருமாயின் அது வழுவசையாகும். (முடிகியலில் ஓரசை இரண்டுயிர் பெற்று வருதல் பின்னர் விளக்கப்படும் நூ.15)
அரையடி இறுதிகளிலும் அடி இறுதிகளிலும் வரும் அசைகள் ஓசை நீட்டம் பெற்று இரண்டிறந்து ஓலிப்பதுண்டு. அது இயல்பு. ஆனால், பாடலின் மற்ற இடங்களில் உள்ள அசைகள் இரண்டசைக்கு மேல் நீண்டு ஒலிப்பதில்லை. அப்படி எங்கேனும் நீண்டு ஒலித்து வருமாயின் அவ்வசையும் வழுவசையாகும்.15.
முடிகியல் நடையுடை இடமொழித் தெங்கும்
ஈருயிர் ஏற்றல் ஓரசைக் கில்லை.கருத்து : சிந்துப் பாடல்களில் முடுகியல் நடையுடைய இடங்கள் அல்லாத பிற இடங்களில் எந்த இடத்திலும் ஓரசையானது இரண்டு உயிர்களை ஏற்று வருதலில்லை.
விளக்கம் : சிந்துப் பாடல்களில் முடுகியல், நடையுடைய இடங்கள் உண்டு. அவ்விடங்களில் உள்ள சீர்களில் அமைந்திருக்கும் அசைகள் இரண்டு உயிர்களை ஏற்று வருதல் உண்டு.
காட்டு :
கண்
ணா
.
யி
ரம்
ப
டைத் த
விண்
ணூ
.
ரி
டந்
த
ரித்
த
கன
வயி
ரப்
படை
யவன்
மக ளைப்
புணர்
கர்த்
த
னே
.
.
.
தி
ருக்
கழு
கும
லைப்
பதி
யனு
தின
முற்
றிடு
சுத்
த
னே .
. .
.
.
(கா. சி. க. வ. ப. 167)
கோடிட்டவை ஈருயிரசைகளாம்.
மற்ற இடங்கலில் ஓரசை இரண்டு உயிர்களை ஏற்று வருவது வழக்கமில்லல. அப்படி எங்கேனும் வருமானால் அந்த அசை வழுவசையாகக் கொள்ளப்படும் என்று முன்னர் கூறப்பட்டது (நூ. 14).16.
ஏனை இடங்களில் இரண்டிறந் திசைப்பவும்
ஈருயிர் ஏற்பவும் வழுவசை ஆகும்.நூ. 14 வழுவசை என்பது யாது என்பதை விளக்கிற்று. எது எது வழுவசையாகக் கொள்ளப்படும் என்பதை விளக்க வந்தது இந்த நூற்பா.
கருத்து : சிந்துப் பாடல்களில் அரையடி இறுதி, அடியிறுதி ஒழிந்த ஏனைய இடங்களில் இரண்டசை நீளத்திற்கு மேல் ஒலிக்கும் அசைகள் வழுவசைகளாகக் கொள்ளப்படும். அதே போன்று முடுகிய இடமல்லாத மற்ற இடங்களில் உள்ள அசைகள் இரண்டு உயிர்களை ஏற்று வருமானால் அந்த அசைகளும் வழுவசைகளாகக் கொள்ளப்படும் (எ.கா - நூ. 14 - இரட்டைக் கும்மி. காண்க)
விளக்கம் : சிந்துப் பாடல்களில் முடுகியல் நடையுடைய இடங்களில் ஓரசை இரண்டு உயிர்களை ஏற்றுவரும் என்று முன்பு காட்டப்படது (நூ.15). முடுகியல் அல்லாத இடங்களில் ஓரசை இரண்டு உயிர்களை ஏற்றுவரின் அது வழுவசையாகக் கொள்ளப்படும்.
சிந்துப் பாடல்களில் ஒவ்வோர் உயிரும் அல்லது உயிர்மெய்யும் ஓரசை மதிப்பு பெறும் (நூ. 6)
இவ்வசைகள் அரையடி இறுதி, அடியிறுதிகளில் ஓசை நீட்டம் பெற்று அளபெடைகளாக ஒலித்து வரலாம். அவ்விடங்களில் அவ்வசை எழுத்துகள் 12 மாத்திரை அளவுகூட ஒலித்தல் உண்டு. மற்ற இடங்களில் இரண்டு அசை நீளத்திற்கு ஒலிக்கலாம். ; இரண்டு அசை நீளத்திற்கு மேல் எங்கேனும் ஓசை நீண்டு ஒலித்து வருமானால் அவ்வசை வழுவசையாகக் கொள்ளப்படும்.17.
இலக்கணம் இல்லன விலக்குதற் குரிய.
கருத்து : சிந்துப் பாடலில் சிந்துப் பாடலின் அசை இலக்கணத்திற்குப் புறம்பாக வரும் அசைகள் எல்லாம் நீக்குவதற்கு உரியனவாகும்.
விளக்கம் : சிந்துப் பாடல்களின் அசைக்கென மேற் கூறப்பட்ட இலக்கண வரையறைகளுக்குப் புறம்பாக வருவனவெல்லாம் நீக்கப்பட வேண்டியவையாகும்.
ஓரசை நீட்டம் ஈரசை அளவே - (நூ- 9)
ஓரசையானது இரண்டசைக்கு மேல் நீண்டு வருதல் இலக்கணமில்லாதது. எனவே, அது விலக்குதற்குரியது.
ஈருயிர் அசையும் இரண்டிறந் தொலிக்கும்
எவ்வகை அசையும் வழுவசை யாகும் - (நூ - 14)இரண்டு உயிர்களை ஏற்றுவரும் ஓரசையும் இரண்டசைக்கு மேல் நீண்டொலிக்கும் குறிலசை, நெடிலசைகளும் வழுவசைகள், எனவே, அவை விலக்குதற்குரியவை.
காட்டு : ஈருயிர் அசை
நந்தவ னத்திலோர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை - வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி (பாபம்)(சித்.பா.224)இதில் இரண்டாம் வரியில் அடிக் கோடிட்ட ‘குய’ என்பது இரண்டுயிர்களை ஏற்றுவந்த ஓரசை.
முடுகியல் நடையுடை இடமொழித் தெங்கும்
ஈருயிர் ஏற்றல் ஓரசைக் கில்லை. (நூ - 15)முடுகியல் அல்லாத இடங்களில் வரும் ஈருயிர் ஏற்ற அசைகள் இலக்கணமல்லாதன. எனவே அவை விலக்குதற்குரியன.
ஏனைய இடங்களில் இரண்டிறந் திசைப்பவும்
ஈருயிர் ஏற்பவும் வழுவசை யாகும். (நூ - 16)தனிச்சொல் முன் இடம், அரையடி இறுதி, அடியிறுதி ஒழிந்த இடங்களில் ஓரசையானது இரண்டசைக்கு மேல் நீண்டிருப்பது வழுவசை. அது இலக்கணமில்லாதது. எனவே அது விலக்குதற்குரியது.
காட்டு :
நெஞ்சுபோ றுக்குதில்லை யே . . . . . . இந்த
இதில் தனிச் சொல்லுக்கு முன் வரும் யே என்ற அசை 6 அசை அளவு நீண்டு ஒலிப்பினும் வழுவாகாது.
தில் லைச் சி தம்ப ரம் தன்னி லொ ரு நாள் .
திரு நட்ட மாடும்சி வனுட னே . .
தே வி சி வ கா மி நாயகி அந் தத் .
திருநீ ல பத் தன் நெ றி உ ரைக் கச் . .இதில் னே என்ற அசை அரையடியிறுதியிலும், கச் என்ற அசை அடியிறுதியிலும் 3 அசையளவு நீண்டு ஒலிப்பினும் வழுவாகா. இவ்விடங்களிலன்றி வேறு இடங்களில் இரண்டசைக்கு மேல் நீள்வன வழுவசையாகும்.
இவ்வாறு சிந்துப் பாடல்களுக்குக் கூறப்பட்ட பிற இலக்கணங்களுக்கு மாறாக வருவனவும் விலக்குதற்குரியன என்பதையும் இந்நூற்பாவின் கருத்தாகக் கொள்ளலாம்.18. சீர்
சீர்வகை செப்பின் நான்கா கும்மே.
கருத்து : சிந்துப்பாடல்களில் அமையும் சீர்வகைகளைச் சொல்வோமானால் அவை நான்கு வகைப்படும்.
விளக்கம் : இதற்கு முன் சிந்துப் பாடல்களில் அமையும் அசை என்பது யாது? என்று கூறி, அவ்வசைகளின் வகைகளாகிய குறிலசை, நெடிலசைகளைக் கூறினார். பின்னர் அசை நீட்டங்களைக் கூறினார். அசைகளில் சிறப்பசைகளையும், சிறப்பிலசைகளையும், வழுவசைகளையும் கூறி, அசைகளாகும் சீர் வகைகளை இங்கு எடுத்துக் கூறுகிறார்.19.
மூன்றும் நான்கும் ஐந்தும் ஏழும்
என்றொரு சீர்க்கண் இயலும் அசைகளால்
‘தகிட’ ‘தகதிமி’ ‘தகதகிட’ என்றும்
‘தகிட தகதிமி’ என்றும் அமைந்து
சிந்துக் குரிய சீர்கள் நடக்கும்.கருத்து : ஒரு சீர்க்கண் மூன்று அசைகளும், நான்கு அசைகளும், ஐந்து அசைகளும், ஏழு அசைகளும் வரும். அவை முறையே, மூவசைச்சீர், ‘தகிட’ என்றும், நாலசைச்சீர் ‘தகதிமி என்றும், ஐந்தசைச்சீர் ‘தகதகிட’ என்றும், ஏழசைச்சீர் ‘தகிடதகதிமி’ என்றும் சொற்கட்டுகளாய் அமைந்து சிந்துப் பாடலுக்குரிய சீர்கள் வழங்கும்.
விளக்கம் : சிந்துப் பாடல்களில் மும்மை நடையுடைய பாடல்களும், நான்மை நடையுடைய பாடல்களும், ஐம்மை நடையுடைய பாடல்களும், எழுமை நடையுடைய பாடல்களும் உள்ளன. அருகிய வழக்காக ஒன்பான்மை நடையுடைய சிந்துப் பாடல்களும் உள்ளன.
ஒரு சிந்துப் பாடல் அதன் ஒவ்வொரு சீரிலும் மும்மூன்று அசைகள் இருக்கும்.
எடுத்துக் காட்டாக ‘ஆறுமுக வடிவேலனே’ என்ற பாடலை எடுத்துக் கொள்வோம்.ஆ று மு க வ டி வே ல வ னே க லி யா ண மும் செய் ய வில் லை . . . சற் றும் அச் ச மில் லா ம லே கைச் ச ர சத் துக் க ழைக் கி றா யென் ன தொல் லை . . . . .இது மும்மை நடைப்பாடல். இதில் ‘ஆறுமு கவடி வேலவ’ என்பன போன்ற பகுதிகள் தாளத்தின் ஒவ்வோர் எண்ணிக்கையிலும் அமைந்துள்ளன. அவை ஒவ்வோன்றும் ஒவ்வொரு சீராகக் கொள்ளப்படும். இரண்டாம் வரியில் உள்ள லை என்பது இசையளவில் நீண்டு ஒரு சீராகிறது. நான்காம் வரியில் உள்ள லை இசையளவில் நீண்டு இரண்டு முழுச்சீர்களாகிறது. இப்படி மிகுதியாக நீளும் இசை நீட்டங்கள் பெரும்பாலும் அரையடி இறுதிகளிலும், அடியிறுதிகளிலும் மட்டுமே காணப்படும்.
ஒவ்வொரு சீரிலும் மும்மூன்று உயிர்கள் இருப்பதைக் காணலாம். அவை தனி உயிராகவோ, மெய்யின் மேலேறிய உயிராகவோ இருக்கும். அடியிறுதி, அரையடி இறுதி இடங்களில் தவிரப் பெரும்பாலான இடங்களில் ஒரு சீரில் மூன்று உயிர்கள் இருப்பதைக் காணலாம். அவை ஏன் மும்மூன்றாக உள்ளன. ஏன் நந்நான்காக இல்லை? ஏனென்றால், இது மும்மை நடைப்பாடல், ‘தகிட’ என்ற தாளக் கருவியின் சொல்லுக்கேற்றபடி மும்மூன்றாகத் தான் ஒவ்வொரு சீரும் நடக்கும்.
‘தெள்ளுதமிழுக்கு’ என்ற பாடலில் ஒவ்வொரு சீரும் நான்கு அசை உடையதாக உள்ளது. எனவே இது நான்மை நடைப்பாடல். ‘சீர் வளர் பசுந்தோகை’ என்ற பாடலின் ஒவ்வோரு சீரிலும் ஐந்து அசைகளும், ‘பொன்னுலவு’ என்ற பாடலில் சீர்தொறும் ஏழு அசைகளும் உள்ளன. இவை முறையே ஐம்மை, எழுமை, நடைகளுக்குரியன. (இப்பாடல்களை பின் இணைப்பில் காணலாம்).
‘ஆறுமுக வடிவேலவனே’ என்ற பாடலைப் பாடும்போது மத்தளம் முதலிய தாளக் கருவிகளில் பாடலின் ஒரு சீரில் உள்ள மூன்று அசைக்களுக்கு ஏற்றவாறு ‘தகிட’ என்றோ கிடதொம்’ என்றோ, ‘தொம்கிட’ என்றோ, ‘ததீம்’ என்றோ, ‘தீம்த’ என்றோ வாசிப்பார்கள். இங்கு கூறிய ‘தகிட’, ‘கிடதொம்’, ‘தொம்கிட’, ‘ததீம்’, ‘தீம்த’ முதலியன மும்மை நடையின் சொற்கட்டுகள். இவ்வாறே நான்மை நடைக்கும், ஐம்மை நடைக்கும், எழுமை நடைக்கும், ஒன்பான்மை நடைக்கும் சொற்கட்டுகள் உள்ளன.
மும்மை நடை : தகிட, கிடதொம், தொம்கிட, ததீம், தீம்த முதலியன
நான்மை நடை : தகதிமி, ததிங்கிண, தாதீம், தகதீம், தாம்கிட, ததீம்த முதலியன
ஐம்மை நடை : தகதகிட, தரிகிடதொம், தகதீம்த, தாதீம்த, தோம்கிடதொம், ததீம்தா முதலியன
எழுமை நடை : தகிடதகதிமி, தீம்ததகதிமி, ததீம்தாதிமி, தகிடதாம்தக, தகிடதகதீம் முதலியன
ஒன்பான்மை நடை : தகதிமிதகதகிட, தாதீம்தகிடதீம் முதலியன.நடைகளில் ஒன்பான்மை நடை பொதுவாக வழக்கிலில்லை. ஒன்பதாக நடக்குமிது மூன்று மும்மைக்குச் சமமாக (3X9)=9 இருப்பதால் மும்மையில் அடங்கி, தன் தனித்தன்மையை இழந்து நிற்கிறது என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். இக்காரணங்களால் ஆசிரியர் ஒன்பான்மையைக் கூறாது விடுத்தார் எனலாம். ஆகவே சிந்துப் பாடல்லின் ஒரு சீரினிடத்து ‘தகிட’ என மூன்று அசைகளும், ‘தகதிமி’ என நான்கு அசைகளும், ‘தகதகிட’ என ஐந்து அசைகளும், ‘தகிடதகதிமி’ என ஏழு அசைகளும் அமைந்து வருமாயின் அவை மும்மைச்சீர், நான்மைச்சீர், ஐம்மைச்சீர், எழுமைச்சீர் எனப்படும்.
காட்டு :
ஆறுமு - தகிட - மும்மைச்சீர் தெள்ளுதமி - தகதிமி - நான்மைச்சீர் மனமகிழு - தகதகிட - ஐம்மைச்சீர் முகில்பெருஞ்சி- தகிடதகதிமி - எழுமைச்சீர்
20. விரைவு நடை
விரைவொடு நடக்கும் மும்மையும் நான்மையும்
ஓரோவழி வருதல் உண்டென மொழிபகருத்து : தாள நடைகளாகிய மும்மை, நான்மை, ஐம்மை, எழுமை ஆகிய இவற்றுள் மும்மை நடையும், நான்மை நடையும் சிந்துப் பாடல்களில் சிலவிடங்களில் விரைவு நடையில் வருதலுண்டு என்று சொல்வார்கள்.
விளக்கம் : முன்பு சொல்லப்பட்ட நான்கு வகைத் தாளநடைகளோடு சிறுபான்மை விரைவு நடைகளும் வரும். மும்மை நடையிலும், நான்மை நடையிலும் அவை இயல்பாக நடப்பதிலும் இருமடங்கு விரைவாக நடப்பதுண்டு. அப்போது தாளத்தின் ஒவ்வோர் இடைவெளியிலும் இருமடங்கு அசைகள் நிற்கும்.
காட்டு : ஆதிதாளம் விரைவு மும்மை நடைவா . னரங்கள் . கனிகொடுத்து . மந்தியொடு . கொஞ் . சும் . . . மந் . திசிந்து . கனிகளுக்கு . வான் . கவிகள் . கொஞ் . சும் . . . (திருக்குற். குற. 54)இதுவொர் அடி. இதில் எட்டு சீர்கள் உள்ளன. ஒவ்வொரு சீரிலும் ஆறு அசைகள் உள்ளன. மூன்று அசை இருந்தால் ‘தகிட’ என்ற மும்மை நடை நடக்கும். இது ‘தகிட தகிட’ என்று நடக்கும் மும்மையைப் போல் இருமடங்கு விரைவாக நடப்பதால் இது விரைவு மும்மை எனப்படும். இதனை மும்மை நடையிலும் பாடலாம். அப்படிப் பாடினால் பாட்டு மெல்ல நடக்கும். குறத்தி மலைவளம் கூறி ஆடும் இப்படிச் ச ¢ல பாடலகள் விரைவு மும்மையில் நடக்கும்.
நான்மையும் இப்படி விரைவு விரைவு நடை நடப்பதுண்டு. அது ‘தகதிமி தகதிமி’ என்று நடக்கும். அது அரிதாக வரும். ‘கண்ணாயிரம்’ என்ற அண்ணாமலைச் ரெட்டியார் காவடிச் சிந்தில் காண்க. (பாடலைப் பின் இணைப்பில் பார்க்க).கன வயி ர . ப் படை அவன்மக ளை.ப் புணர் - என்றும் கழு கும லை . ப் பதி யனு தின மு.ற் றிடு - என்றும்வரும் சீர்களில் இந்த விரைவு நான்மை ஒலியைக் கேட்கலாம்.
விரைவு நடையை ‘இரட்டித்து ஏகல்’ என்பதும் ‘வாரநிலம் வளர்த்தல்” என்பதும் பண்டைய மரபு.
----------21. அசைக்கும் சீர்க்கும் புறனடை
சீர்முதல் நெடிலசை சிறப்பொடு நடக்கும்
சீர்முதல் குறிலசை சிறுவர விற்றே.கருத்து : சிந்துப் பாடல்களில் உள்ள சீர்களின் முதலில் வரும் நெடிலசைகள் சிறப்பொடு நடக்கும். சீர்களின் முதலில் வரும் குறிலசைகள் சிறு வரவினவாக இருக்கும்.
விளக்கம் : நெடிலசை என்பன குறிலொற்றாகவும், நெடிலாகவும் நெடிலொற்றாகவும் வருவன.
ஓரசையாகவோ, ஈரசையாக நீண்டோ வரும் நெடிலசைகள் சிறப்பசைகள் என்பது முன்னர் கூறப்பட்டது. (நூ. 12)
அதுவன்றியும் ஓசை மிக்க எழுத்துகளாகப் பேராசிரியரால் குறிப்பிடப்படுவன நெட்டெழுத்தும், அந்நெட்டெழுத்துப் போல் ஓசையெழும் மெல்லெழுத்தும், லகார, ளகாரங்களுமே (தொ, பொருள், செய், பேரா, உரை. சூ..242)
எனவே நெட்டெழுத்துகள் ஓசை மிக்கன என்பது தெளிவு. ஆகவே சிறப்பசை என்று சிறப்பிக்கப்பட்ட குறிலொற்றும், நெடிலும், நெடிலொற்றும் சிந்துப் பாடலின் சீர்களில் முதலசையாக வரின் அப்பாடல் ஓசைச் சிறப்புடையதாக இருக்கும்.
சீர்த் தொடக்கத்தில் வரும் குறிலசைகள் சிறப்பிலசைகள். ஆகவே சீர்முதலில் குறிலசைகள் சிறு வரவினவாக இருக்கும்.
காட்டு : ‘ஆறுமுக வடிவேலவனே’ என்ற பாடலை எடுத்துக் கொள்வோம். இப்பாடலில் ஓரசைக்குமேல் நீளாத அசைகளை உடைய சீர்கள் 48 உள்ளன. (தனிச் சொற்களும் அரையடி இறுதிகள், அடியிறுதிகளில் உள்ள அசை நீட்டங்களும் நீங்கலாக) அவற்றில் முதலசைகளாக ‘க’ ‘ன’ ‘ரு’ என்ற மூன்று குறிலசைகளே உள்ளன. ஏனைய 45 முதலசைகளும் நெடிலசைகளாய் உள்ளன.
எனவே சிந்துப் பாடல்களில் சீர்முதலில் நெடிலசைகள் வரின் பாடல் சிறக்கும் என்பதும், சீர்முதல் குறிலசைகள் சிறு வரவினவாக இருக்கும் என்பதும் தெளிவாகின்றன.
----22.
ஒருபாட் டிடையே ஒருநடை அன்றி வேறொரு நடைச்சீர் விரிவுதல் அரிதே.
கருத்து : சிந்துப் பாடல்களில் மும்மை நான்மை, ஐம்மை, எழுமை ஆகிய இவற்றில் யாதேனுமொரு நடையில் இயங்குமொரு பாடலில் அப்பாடலின் நடைக்குரிய சீர்களே அமைந்திருக்கும். அப்பாடலின் நடுவில் அப்பாடலின் நடைக்குரிய சீரன்றி வேறொரு நடைக்குரிய சீர் கலந்து வருதல் அரிய வழக்காகும்.
விளக்கம் : ஒரு பாடல் மும்மை நடைப் பாடலாயின் ஒவ்வொரு முழுச்சீரிலும் மும்மூன்று உயிர்கள் இருப்பதைக் காணலாம் (முழுச்சீர் என்பது முழுவதும் எழுத்துகளால் அசை வரக்கூடிய இடங்களில் வரும் சீர் - ‘ஆறுமுக’ என்ற பாடலில் அடி, அரையடிகளில் முற்பாதியில் நான்கு சீர்களும் பிற்பாதியில் வரும் முதலிரண்டு சீர்களும் முழுச்சீர்கள்). அவை தனி உயிராகவோ மெய்யின் மேலேறிய உயிராகவோ இருக்கும்.
ஆறுமுக என்ற பாடல் மும்மை நடைப்பாடல். மும்மை நடைக்குரிய சீர்களே பாடல் முழுவதும் உள்ளன. அதே போன்று ‘தெள்ளுதமிழுக்கு’ என்ற நான்மை நடைப்பாடலில் நான்மைச் சீர்களும், ‘சீர்வளர் பசுந்தோகை’ என்ற ஐம்மை நடைப்பாடலில் ஐம்மை நடைச்சீர்களும், ‘பொன்னுலவு’ என்ற எழுமை நடைப் பாடலில் எழுமை நடைக்குரிய சீர்களும் பாடல் முழுவதும் வருவதை உணரலாம்.
ஒரு பாட்டினிடையே ஒருநடைச் சீரன்றி வேறொரு நடைச்சீர் விரவாமல் வருவது பெருவழக்கு. மிகவும் அரிதான ஒரு பாட்டினிடையே அப்பாட்டின் தாள நடைச்சீரன்றி வேறொரு தாளநடைச் சீர் வருதல் உண்டு. அ·து அரிய வழக்காதலால், ‘விரவுதல் அரிதே’ என்றார் ஆசிரியர்.
காட்டு : கலப்பு நடை (ஐம்மை + எழுமை)திருவு . ற்றி லகுகங் . க வரையி.ற்பு கழ்மிகுந் . த திகழ . த்தி னமுறைந் . த வா . ச . னை - மிகு மகிமை . ச்சு கிர்ததொண் . டர் நே . ச . னைப்- . ப . ல . தீயபாதக காரராகிய சூரர்யாவரு மாளவேயொரு சிகர . க்கி ரிபிளந் . த வே . ல . னை- உ . மை . தகர . க்கு ழல்கொள்வஞ் . சி பா . ல . னை . மருவு . ற்றி ணர்விரிந் . து மதுப . க்கு லமுழ . ங் . க மதுமொய் . த்தி டுகடம் . ப ஆ . ர . னை - . வி . க . சிதசி . த்ர சிகிஉந் . து வீ . ர . னை - . எ . ழில் . மாகநாககு மாரியாகிய மாதினோடுகி ராதநாயகி மருவ . ப்பு ளகரும் . பு தோ . ள . னை - . எ . னை . அருமை . ப்ப ணிகொளும் . த யா . ள . னை . - (கா. சி. க. வ. ப. 1131)இதில் ‘தீயபாதக’ ‘மாகநாககு’ என்று வரும் முடுகியல் சீர்கள் நான்கும் எழுமை நடையிலும் ஏனைய சீர்கள் ஐம்மை நடையிலும் நடப்பதைப் பாடியுணரலாம்.
------23. தனிச் சொல்
சிந்துப் பாக்களில் சேரும் தனிச்சொல்
அடிகளின் அகத்த தாகப் பெறுமே.கருத்து : சிந்துப் பாக்களில் சேர்ந்திருக்கும் தனிச்சொல் அந்த அடியின் புறத்தே தனியாக நிற்பதாகக் கொள்ளப் படாமல், அந்த அடியின் அகத்தே அடங்கிய அடியின் சீராகக் கொள்ளப்படும்.
விளக்கம் : தனிச்சொற்களில் இரண்டு வகையுண்டு. (1) அடிக்குள் அடங்கி அதன் ஒரு சீராகக் கணக்கிடப்பட்டு வரும் தனிச்சொல். (2) அடியிலடங்காது, அதற்குப் புறம்பாக வரும் தனிச்சொல், நேரிசை வெண்பாக்களில் வரும் தனிச்சொற்களை முதல்வகைக்குச் சான்றாகக் காட்டலாம்.
காட்டு :
வையம் பகலிழப்ப வானம் ஒளியிழப்பப்
பொய்கையும் நீள்கழியும் புள்ளிழப்பப் - பையவே
செவ்வாய வன்றில் துணையிழப்பச் சென்றடைந்தான்
வெவ்வாய் வரிகதிரோன் வெற்பு. (நளவெண்பா: 97)இதில் ‘பையவே’ என்று வருவது தன்ச்சொல். வெண்பாவில் இறுதியடை மட்டுமே முச்சீரடி. ஏனயவை நாற்சீரடி. எனவே, இதில் இரண்டாமடி தனிச்சொல்லைச் சேர்த்துத்தான் நாற்சீரடியாகக் கொள்ளப்பட்டது. வெண்பாவைத் தவி, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பாக்களில் வரும் தனிச்சொற்கள் அடியின் பகுதியாக வரும் சீராகக் கொள்ளப்பட மாட்டா. அவை அடிக்குப் புறம்பாக நிற்கும்.
காட்டு :
இவரே
பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும்பு இருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பின் பாரிமகளிர்
யானே
பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே
வரிசையில் வணக்கும் வாண்மேம் படுநன் (புறம் 200)இதில் பூத்தலை என்று தொடங்கும் அடிக்குப் புறம்பாக முதற்கண் ‘இவரே’ என்றும், ‘பரிசிலன்’ என்றும் தொடங்கும் அடிக்குப் புறம்பாக முதற்கண் ‘யானே’ என்றும் தனிச்சொற்கள் வந்தன. இவை இரண்டாம் வகையைச் சேர்ந்தவை. சிந்துப் பாடல்களில் வருபவை முதல்வகைத் தனிச்சொற்கள்.
‘ஆறுமுக’ என்ற பாடலில் முதல் அரையடியின் இறுதியில், ‘சற்றும்’ என்றும், இதுபோலவே இரண்டாம் அரையடியில் ‘சும்மா’ என்றும், இரண்டாம் கண்ணியில் அதே இடங்களில் ‘இதை’ என்றும், ‘இந்த்ர’ என்றும் தனிச்சொற்கள் வந்தன. இப்பாடலில் ஒவ்வோர் அடியிலும் முதல் அரையடியின் இறுதி இரண்டசைகளாக அடிக்குள் அடங்கித் தனிச்சொற்கள் வருகின்றன. ஆகவே சிந்துப் பாக்களில் சேர்ந்திருக்கும் தனிச்சொற்கள் அடிக்குள் அடங்கிய தனிச் சொற்கள் என்பது தெளிவாகிறது.
----24
ஈரசை மூவசை இயல்பின தனிச்சொல்
நாலசை யானும் நடப்பன உளவே.கருத்து : சிந்துப் பாடல்களில் வரும் தனிச் சொற்கள் ஈரசை கொண்டவையாகவும், மூவசை கொண்டவையாகவும் இருக்கும். நாலசை கொண்ட தனிச்சொற்களும் சிலபாடல்களில் வருவதுண்டு.
விளக்கம் : சிந்துப் பாடல்களில் தனிச்சொற்கள் அரையடிகளின்ன் இறுதியில் தனியே பிரிந்திசைக்கும். பெரும்பாலான சிந்துப் பாக்களின் அடிகளில் (அது எந்த நடையினதாக இருந்தாலும்) முதலாவதாக வரும் தனிச்சொல் நான்காம் சீரின் இடத்தில் வருதல் இயல்பாக உள்ளது. இரண்டு அல்லது மூன்று அசைகளையுடைய தனிச் சொற்களே சிந்துப் பாடல்களில் மிகுதியாக வருகின்றன.
நொண்டிச்சிந்து: நொண்டிச் சிந்தில் வரும் தனிச் சொற்கள் மூவசைக்கு மிகாமல் வருதல் பெரும்பான்மை. நாலசைத் தனிச்சொல்லும் அருகி வரும்.
காட்டு : நொண்டிச் சிந்து
பழனம ருங்கணையும் - புலைப்
பாடியது கூரை வீடுதனில்
கரையோ படர்ந்திருக்கும் - அதைச்
சுற்றிலும் நாய்கள் குரைத்திருக்கும் - (நந்த. சரி. க.ப. 5)இதில் ‘புலைப்’, ‘அதைச்’ என்பன ஈரசைத் தனிச்சொற்கள்.
சேண்தொடு மாமலையும் - நதிகளும்
செறிந்து பல் வளங்களும் நிறைந்துமிகு
மாண்பு று நன்னாடாம் - வண்டுறை
வாவிசூழ் நாவலந் தீவுதனில் - (திரு. நொ. நா. ப. 7)இந்த நொண்டிச் சிந்தில் ‘நதிகளும்’ என்ற நாலசைத் தனிச் சொல்லும், ‘வண்டுறை’ என்ற மூவசைத் தனிச்சொல்லும் வந்தன.
வளையற் சிந்து: வளையற் சிந்தில் 8, 12, 16 ஆம் சீர் இடங்களில் வரும் தனிச் சொற்களில் ஓரசை, ஈரசைத் தனிச் சொற்கள் உள்ளன.
காட்டு : வளையற் சிந்து
வாருமையா வளையல் செட்டி
வளையல் விலை கூறும் - நீர்
மகிழ்ந்துமே கை பாரும் - பசி
வன்கொடுமை தீரும் - எந்த
மாநகரம் பேர் இனங்கள்
வகை விபரம் கூறும் (தொடை. மேற்.ப.273)இதில் ‘நீர்’ என்பது ஓரசைத் தனிச்சொல். ‘பசி’, ‘எந்த’ என்பவை ஈரசைத் தனிச் சொற்கள்.
கும்மி : கும்மியில் தனிச் சொல் ஈரசைச் சொல்லாக வரும்.
காட்டு : கும்மி
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்திபி றக்குது மூச்சினிலே (பா.கவி.ப. 165)இதில் ‘இன்பத்’, ‘எங்கள்’, ‘ஒரு’ என்பன ஈரசைத் தனிச் சொற்கள்.
ஒயிற்கும்மி : ஒயிற் கும்மியில் நாலசைத் தனிச் சொற்கள் வரும்.
காட்டு : ஒயிற் கும்மி
மாவும்ப லாவும்கொய் யாவும்மா ரஞ்சியும்
வன்னப்ப ழம்பழுக்கும் - மகிழ்ந்துவாய்
தின்னச்சு வையிருக்கும் - மலர்ந்த
பூவும்க னியும்பொ ழியும்செந் தேனும்
போவார டிவழுக்கும் - (வெ. கோ. வ. சிந்து. தொடை.ப. 281)இதில் ‘மகிழ்ந்துவாய்’ என்பது நாலசைத் தனிச்சொல்.
ஆனந்தக் களிப்பு: ஆனந்தக் களிப்பில் தனிச் சொற்கள் ஈரசைச் சொல்லாக வரும்.
காட்டு : ஆனந்தக் களிப்பு
ஆதிசி வன்பெற்று விட்டான் - என்னை
ஆரிய மைந்தன கத்தியன் என்றோர்
வேதியன் கண்டும கிழ்ந்தே - நிறை
மேவும்இ லக்கணம் செய்துகொ டுத்தான். (பா. கவி.ப. 166)இதில் வரும் ‘என்னை’, ‘நிறை’ என்பன ஈரசைத் தனிச்சொற்கள்.
இலாவணி : இலாவணியில் தனிச்சொல் ஈரசைச் சீராக வரும்.
காட்டு : இலாவணி
செஞ்சடை விரித்துத்தவம் துஞ்சிடாதிருக்கும் ஈசன்
தெரிசனம் தன்னைமதன் கண்டுகண்டு - அப்போ
அஞ்சாமல் மலர்க்கணையைப் பஞ்சபாணனும் விடவே
அரனார் அதிககோபம் கொண்டு கொண்டு - (தொடை. ப. 285)இதில் ‘அப்போ’ என்பது ஈரசைத் தனிச்சொல்.
‘சித்தராரூடச் சிந்து’ என்ற நூலில் உள்ள சிந்துப் பாடல்களில் பெரும்பாலும் மூவசைச் சீர்களே தனிச்சொற்களாக வருகின்றன. நாலசைத் தனிச் சொல்லொடு ஐயசைத் தனிச்சொற்களும் அதில் அரிதாக வந்துள்ளன.
காட்டு : சித்தராரூடச் சிந்து
திருமருதூர் வளரும் - நாகலிங்கர்
சீர்பாத கமலங்கள் சென்னியில் வைத்து
மருவும் சித்தராரூடப் - பொருளினை
வகுத்துச்சொல் வேனிந்த மகிதலத்தில்
அண்டர்பணி கர்த்தனார் - படைத்ததனில்
ஆகாதசீவசெந் தனேக முண்டாம்
விண்டுரைக்கக் கேளுமினி - நல்லபாம்பு
விரியன் வழலை கொம்பேறி மூக்கன்
குருமலரடி வணங்கி - வகையாகக்
கூறுகின் றேனிந்தக் குவலயத்தில்
மரைமலர்ப் பொகுட்டுறைவோன் - பயந்தருள்
மகவென வந்துதித்த மாதவத்தினோன்.இதில் ‘நாகலிங்கர்’, ‘பொருளினை’, ‘நல்லபாம்பு’, ‘வகையாக’, ‘பயந்தருள்’ என்பன நாலசைத் தனிச்சொற்கள். ‘படைத்ததனில்’ என்ற ஐயசைத் தனிச்சொல் அரிதாக வந்துள்ளது.
இங்கு எடுத்துக் காட்டிய நெண்டிச்சிந்து, வளையற்சிந்து, கும்மி, ஒயிற்கும்மி, ஆனந்தக் களிப்பு, இலாவணி முதலியன சிந்தின் வகைகள் என்பது கருதத் தக்கது. எனவே சிந்துப் பாடல்களில் வரும் தனிச் சொற்கள் ஈரசை, மூவசைச் சீர்களாக அமைதல் பெரும்பான்மை என்பதும், நாலசைச் சீர்களும் தனிச்சொல்லாகச் சிறுபான்மை வரும் என்பதும் பெறப்பட்டன.
‘உம்’ என்ற மிகையால் ஓரசைத் தனிச் சொற்களையும், அரிதாக வரும். ஐயசைத் தனிச்சொற்களையும் கொள்ள வைத்தார் என்க.
----25. முடுகியல்
முடுகியல் சந்த முறைப்படி நடக்கும்.
கருத்து : சிந்துப் பாடல்களில் வரும் முடுகியல் அடிகள் சந்தப் பாடல்களின் இலக்கண முறைப்படி அமைந்து இயங்கும்.
விளக்கம் : இசை நீட்டத்திற்கு இடமின்றிப் பாடலுக்குரிய நடையில் ஒருவகைச் சந்த ஓசையுடன் விரைந்து செல்லுமாறு அமைக்கப் பட்ட சீர்களை உடையது முடுகியல் அடியாகும்.
சிந்துப் பாக்களின் சீர்களில் உள்ள
ஒவ்வோர் உயிரும் ஓரசை யாகும் (நூ. 6)என்பது முன்பு விளக்கப்பட்டது.
சிந்துப் பாடல்கள் சிலவற்றில் அப்பாடல்களின் இடையில் முடுகியல் அடிகள் வருவதுண்டு. குறிப்பிட்ட ஒரு நடையிலமைந்த பாடலில் முடுகியற் சீர்கள் மட்டும் விரைவு நடையில் (ஓரசைக்கு இரண்டு உயிராக) நடப்பதுண்டு. முடுகியலின் சீரமைப்புச் சந்தப் பாடலின் இலக்கணத்தைப் பெற்றிருக்கும்.
சந்தப்பா இலக்கணப்படிக் குறில் ஒரு மாத்திரை பெறும்; குறிலொற்று, நெடில், நெடிலொற்றுகள் இரண்டு மாத்திரை பெறும்; அரையடி, அடியிறுதியில் உள்ள குறில் நெடிலாகவும் ஒலிக்கும்.
இதன்படி முடுகியற் சீர்கள் தாம் அமைந்துள்ள பாடலின் நடைக்கேற்ற மாத்திரையைப் பெற்றுவரும்.
காட்டு : (1)வன் னத் தி னை மா வைத் தெள் ளி யே . உண் ணும் வாழ்க் கைக் கு றக் குல வள் ளி யே . உயிர் வாங் கப் பி றந் திட் ட கள் ளி யே . இ ரு வட மே ருவை நிக ரா கிய புய மீ தணி பல மா மணி மா லை ப டீ ரெ னத் துள் ளி யே . வி ழ வான் ம தி வீ சுந் தீ அள் ளி யே . .இது மும்மை நடைப் பாடல். இதில்
| வட மே ருவை | நிக ரா கிய | புய மீ தணி | பல மா மணி |
என்ற நான்கு சீர்களும் முடுகியற் சீர்கள். இச்சீர்கள் இசை நீட்டத்திற்கு இடமின்றி பாடலுக்குரிய நடையைல் ஒரு வகைச் சந்த ஓசையோடு விரைந்து செல்வதைக் காணலாம்.
காட்டு : (2)கண் ணா . மி ரம் ப டைத் த விண் ணூ . ரி டம் த ரித் த கன வயி ரப் படை யவன் மக ளைப் புணர் கர்த் த னே . . . தி ருக் கழு கும லைப் பதி யனு தின முற் றிடு சுத் த னே . . . (கா. சி. க.வ. ப. 167)இது நான்மை நடைப் பாடல். இதில்
| ‘கன வயி ரப் படை | யவன் மக ளைப் புணர்’ |, ‘கழு கும லைப் பதி | யனு தின முற் றிடு’ |
என்ற நான்கு சீர்களும் முடுகியற் சீர்கள். இச் சீர்களில் உள்ள ஒவ்வோர் அசையும் இரண்டிரண்டு உயிர்களைப் பெற்று வந்துள்ளதையும் சந்த ஓசையோடு விரைவு நான்மை நடப்பதையும் உணரலாம். எல்லாப் பாடல்களிலும் முடுகியல் வருவதில்லை.
முடிகியல்கள் காவடிச் சிந்துப் பாக்களுக்கு மிகுந்த ஒலி நயத்தைத் தருகின்றன. முடிகியல் பாடலுக்குரிய நடையில் மட்டுமே நடக்கும் என்பதை வலியுறுத்தாமையால், மிகச் சில காவடிச் சிந்துகளில் பாடல் ஒரு நடையிலும் முடுகியல் வேறு நடையிலும் அமைவதுண்டு.
காட்டு :திரு வு . ற் றி லகு கங் . க வரை யி . ற் பு கழ் மிகுந் . த திக ழ . த் தி னமு றைந் . த வா . ச . னை - . மி . கு . மகி மை . ச்சு கீர்த தொண் . டர் நே . ச . னைப் - . ப . ல . தீய பாதக காரராகிய சிக ர . க்கி ரிபி ளந் . த வே . ல . னை - . உ . மை. தக ர . க்கு ழல்கொள்வஞ் . சி பா . ல . னை . (கா. சி. க வ. ப.131)----
26.
முடுகியல் அடியே நாற்சீர்த் தாகும்.
கருத்து : சிந்துப் பாடல்களில் வரும் முடுகியல் அடிகள் நான்கு சீர்கள் உடையனவாக இருக்கும்.
விளக்கம் : சிந்துப் பாடல்களின் இடையில் வருகின்ற முடுகியல் அடிகள் நான்கு சீர்களைக் கொண்டவைகளாக இருக்கும்.
காட்டு :வன் னத் தி னை மா வைத் தெள் ளி யே . உண் ணும் வாழ்க் கைக் கு றக் கு ல வள் ளி யே . உ யிர் வாங் கப் பி றந் திட் ட கள் ளி யே . இ ரு வட மே ருவை நிக ரா கிய புய மீ தணி பல மா மணி மா லை ப டீ ரெ னத் துள் ளி யே . வி ழ வான் ம தி வீ சுந் தீ அள் ளி யே . . (க . சி. க.வ.ப. 180)இதில்
|வடமேருவை |நிகராகிய| புயமீதணி |பலமாமணி|
என்ற முடுகியல் அடி நான்கு சீர்களைக் கொண்டுள்ளது. இவ்வாறே முடுகியல் அடியுடைய பாடல்களை நோக்கி உணர்க.
-----27. அடி
தாளவட் டணைகளின் அளவோ டமைந்து
சிந்துப் பாவடி சீர்பெற நடக்கும்கருத்து : சிந்துப் பாடல்களின் அடிகள் அது எந்த நடையுடைய பாடலாக இருந்தாலும் அந்த நடைக்குரிய தாள வட்டணைகளின் அளவில் அமைந்து சிறப்புற இயங்கும்.
விளக்கம் : தாள வட்டணை (ஆவர்த்தம்) என்பது யாது? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர்த் தாளம் என்பது யாது? என்பதையும், அதன் உள்ளுறுப்புகள் யாவை என்பதையும் உணர வேண்டும்.
(தாளம், அதன் உள்ளூறுப்புகள், கோலும் இனங்களும் (சாதிகளும்), வட்டணை (ஆவர்த்தம்), தாளம் போடும் முறை என்ற தலைப்புகளில் (நூ. 6) விளக்கத்துள் விவரிக்கப்பட்டுள்ளன. அங்கு காண்க). எனவே சிந்துப் பாடலில் உள்ள அடிகள் அப்பாடலின் தாள வட்டணையின் அளவில் அமைந்திருக்கும் என்பது தெளிவு.
---28.
எட்டின் மடங்கினும் நான்கின் மடங்கினும்
எட்டின் இழியா தியலும் சீர்களால்
சிந்தின் அடிகள் சிறப்புற நடக்கும்.கருத்து : சிந்துப் பாடல்களில் உள்ள அடிகள் எட்டு எண்ணிக்கையுள்ள ஆதி தாள வட்டணையிலும் அல்லது அதன் மடங்கிலும் நான்கு எண்ணிக்கையுள்ள ஏகதாள வட்டணையின் மடங்கிலும் அடங்கி எட்டுச் சீர்க்குக் குறையாது வரும் அடிகளைக் கொண்டு சிறப்பாக இயங்கும்.
விளக்கம் : சிந்துப் பாடல்களில் பெரும்பாலன ஆதி தாளத்தில் அடங்குமாறு அமைந்துள்ளன. அவற்றைப் பாடும் போது அடியின் முதற்பகுதி ஒரு கோலிலும் ||4| அடுத்த பகுதி இரண்டு சுழிகளிலும் |00| அடங்குகின்றன.
காட்டு : ஓர் ஆதிதாள வட்டணையில் அடங்கும் அடி.ஓம் சக் தி ஓம் சக்தி ஓம் . ப ரா சக் தி ஓம் சக் தி ஓம் சக்தி ஓம் . . . . . (அசை நீட்டங்கள் புள்ளிகளால் குறிக்கப் பட்டுள்ளன.)மேற்காட்டியபடி கோலிற்குரிய நான்கு எண்ணிக்க்கையில் முதல் அரையடியும், இரு சுழிகளுக்குரிய நான்கு எண்ணிக்கையில் அடுத்த அரையடியும் ஆக ஓர் ஆதிதாள வட்டணையில் இதன் ஓரடி முழுவதும் அடங்குவதைக் காணலாம். எட்டாம் எண்ணிக்கையில் எழுத்துகளே இல்லை என்றாலும் ஏழாம் இடத்தில் இறுதியாக வரும் அசை எட்டாம் சீராக நீண்டு இசைக்கிறது. இந்த இரண்டு வரிகளும் சேர்ந்து ஓரடி. இந்தப் பாடலில் ஒவ்வோரடியும் ஓர் ஆதி தாள வட்டணையில் அடங்குகிறது.
காட்டு : இரண்டு ஆதிதாள வட்டணையில் அடங்கும் அடிஆ று மு க வ டி வே ல வ னே க லி யா ண மும் செய் ய வில் லை . . . சற் றும் அச் ச மில் லா ம லே கைச் ச ர சத் துக் க ழைக் கி றாய் என் ன தொல் லை . . (கா. சி.க.வ.ப.165)இப்பாடலில் மேற்கண்ட நான்கு வரிகளும் ஓரடியாகும். ஓரடியில் பதினாறு சீர்கள் இருப்பதைக் காணலாம். இது பதினாறு சீர்க் கழிநெடிலடியாகும். இதன் ஓரடி இரண்டு ஆதி தாள வட்டணையில் அடங்கும்.
காட்டு : ஏக தாளத்தில் மூன்று வட்டணையில் அடங்கும் அடி.கண் ணா . மி ரம் ப டைத் த விண் ணூ . ரி டம் த ரித் த கன வயி ரப் படை யவன் மக ளைப் புணர் கர்த் த னே . . . தி ருக் கழு கும லைப் பதி யனு தின முற் றிடு சுத் த னே . . . (கா.சி.க.வ.ப.167)மேற்கண்ட மூன்று வரிகளிலும் பன்னிரண்டு சீர்கள் உள்ளன. இது நான்மை இன ஏக தாளம். இத்தாளத்தின் குறியீடு |4 என்பது. நான்கு எண்ணிக்கையுள்ள ஒரு கோல் மட்டுமே இதில் உள்ளது. சுழியோ, அரைச்சுழியோ இல்லை. இத்தாளத்தில் மூன்று வட்டணையில் இப்பாடலின் (ஒரு கண்ணியின்) ஓரடி அடங்குகிறது.
சிறுபான்மைச் சிந்துப் பாடல்களின் கண்ணிகள் நான்மை இன ஏக தாளத்தில் அடங்குகின்றன. மிக்ச்சில சிந்துகளே வேறு தாளங்களில் உள்ளன.
காட்டு : ஏக தாளத்தில் ஐந்து வட்டணையில் அடங்கும் அடிசந் த வரை வந் . த கு க நா . தா . . . . . ப ரை அந் த ரி ம னோன் . ம ணி யா மா . தா . . . . . தந் த சண் . மு க ச டாட் . ச ர வி நோ . தா . . . . . கு ழைக் கா . தா . . . . சூ . ரர் வா . தா . . . . . வ ன சஞ் . ச ரிவெண் குஞ் . ச ரி ச மே . தா . . . . . . . (கா. சி. க.வ.ப.173)மேற்கண்ட பாடலில் உள்ள ஐந்து வரிகளும் ஓரடி. இவ்வடியில் இருபது சீர் இருப்பதைக் காணலாம். இது நான்மை இன ஏக தாளத்தில் ஐந்து வட்டணைகளில் அடங்கும்.
எனவே சிந்துப்பாவின் அடிகள் ஆதி தாளத்திலும், அதன் மடங்கிலும், ஏக தாளத்தின் மடங்கிலும், நடக்கும் என்பதையும், ஓரடியில் எட்டு சீர்களுக்குக் குறையாத சீர்களைக் கொண்டிருக்கும் என்பதையும் உணர்கிறோம்.29.
அடிகள் அனைத்தும் கழிநெடில் ஆகும்.
கருத்து : சிந்துப் பாடல்களில் அமைந்திருக்கின்ற அடிகள் எல்லாம் கழி நெடில் அடிகளே ஆகும்.
விளக்கம் : சிந்துப் பாடல்களில் உள்ள அடிகள் எட்டு சீர்க்குக் குறையாமல் வரும் என்பதை முன்னர்க் கண்டோம். (நூ. 28 விளக்கம்). ஆறு சீர்களைக் கொண்ட அடிகளும் அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்ட அடிகளும் கழிநெடிலடிகள் எனப் பெயர்பெறும்.
இரு சீரடி குறளடி என்றும், முச்சீரடி சிந்தடி என்றும், நாற்சீரடி அளவடி என்றும், ஐஞ்சீரடி நெடிலடி என்றும், அறுசீர் முதலியன கழி நெடிலடி என்றும் கோடும் என்பது. (தொல். பொ. செய். பேரா. உரை)
சிந்துப் பாடல்களின் அடிகள் தாளங்களின் அடிப்படையை உடையன. ஆதிதாளம், சதுசிர ஏக தாளம், ஆகிய இரண்டு தாளங்களே சிந்துப் பாடல்களில் பெரிதும் இடம் பெறுகின்றன. எட்டு. பன்னிரெண்டு, பதினாறு, இருபது, இருபத்து நான்கு சீர்களை உடைய கழிநெடிலடிகளே சிந்துப் பாடல்களில் பயின்று வருகின்றன.
இவற்றுள் பன்னிரெண்டு, இருபது சீர்களையுடைய அடிகள் சதுசிர இன ஏக தாளத்தின் வட்டணைகளில் அடங்கும். எட்டு, பதினாறு, இருபத்து நான்கு சீர்களை உடைய அடிகள் ஆதி தாள வட்டணைகளில் அடங்கும். சதுசிர இனத்துருவ தாளத்தில் அடங்கும் பதினான்கு சீர் அடிகள் பயிலும் சிந்துப் பாடல்களும் சிறு பான்மை உண்டு.
குறளடி, சிந்தடி, நெடிலடி, அறுசீர், எழுசீர்க் கழிநெடிலடிகள் சிந்துப் பாக்களில் வருவதில்லை.
‘ஓம் சக்தி’ என்ற பாடலடி எட்டு சீர்களைக் கொண்டது; ‘கண்ணாயிரம்’ என்ற பாடலடி பன்னிரெண்டு சீர்களைக் கொண்டது; ‘சந்தவரை’ என்ற பாடலடி இருபது சீர்களைக் கொண்டது என்பதனை முன்னர்க் கண்டோம். (நூ. 28 விளக்கம்)
தாளமில்லாத சிந்துப் பாடல்களில் நாற்சீரடிகள் வருவதுண்டு. தாளமுடைய சிந்துப் பாக்களில் சீர் எண்ணிக்கையின் சிறுமை எட்டு; பெருமை பாடுவோர் உள்ளக் கருத்தின் அளவே; நாற்பத்து நான்கு சீர்க் கழிநெடிலடிகளும் வந்துள்ளன.
காட்டு :
பத்மினி சாதிப்பெண் மானே - பாம்பன் பார்க்கவ ருவாய்நீ தானே - அங்குப் பாலசுப் ரமண்யர் ஆலயத் தில்விதிப் பான்மையில் கும்பாபி டேகம் - அதைப் பார்ப்பவர்க் கெய்துவை போகம்- குறப் பாவையின் மீதினில் மோகம்- கொண்ட பண்பதனால் மேவும்நல் யோகம்- மலர் பைங்க்காவியை யுங்காலனை யுஞ்சேலினை யும்பார்வைகொள் பச்சைக்கொடி இடையும்பிடி இச்சித்திடு நடையுங்கொடு பதுமத்தின ரும்புக்கலர் தருபொற்றன மிஞ்சப்பெறு பனசக்கனி ரசமொத்துறு வசனத்திலென் மனசைக்கவர் (பத்மினி)
(எம்.கே.எம். அப்துல் காதிறு இராவுத்தர், பாம்பன் பாலசுப்ரமணிய சுவாமிக் கோயில் வழிநடைச் சிந்து)
இச்சிந்துப் பாடலின் ஓரடி 11 நான்மை இன ஏக தாள வட்டணைகளில் அடங்கும். 44 சீர்கள்ப் பெற்றுள்ளது. இப்பாடலில் பிற்பகுதி ஓருவகைச் சந்த அமைப்பில் அமைந்துள்ளதையும் எல்லா அரையடிகளுமே பகர மோனை ஒன்றனாலேயே தொடுக்கப் பெற்றுள்ளதையும் காண்க.30.
ஒற்றை எண்களால் ஆனசீர் அடிகள் சிந்துப் பாக்களில் சேர்தல் இல்லை.
கருத்து : ஒற்றைப்படை எண்களால் ஆன சீர்களைக் கொண்ட அடிகள் சிந்துப் பாடல்களில் வருவதில்லை.
விளக்கம் : சிந்துப் பாடல்கள் பெரும்பாலும் நான்மை இன ஏக தாளத்திலும், ஆதி தாளத்திலும் நடக்கின்றன. ஆகவே அப்பாடல்கள் 8, 12, 16, 20, 24 முதலிய எட்டாலும், நான்காலும் வகுபடும் எண்களையுடைய சீர்களாலேயே இயங்குகின்றன. ஒற்றைப்படை எண்களால் ஆன சீர்களைச் சிந்துப் பாடல்கள் கொண்டிருப்பதால், அவை மேற்குறித்த இரண்டு தாள வட்டணைக்குள் அடங்கி இயலா. ஆகவே, சிந்துப் பாடல்களில் ஒற்றைப் படைச் சீர் எண்ணிக்கையை உடைய (9, சீர், 11 சீர், 15 சீர், 19 சீர்) அடிகளை போல்வன வருவதில்லை என்பது உணரக் கிடக்கிறது.31. இயைபுத் தொடை
இயற்பாத் தொடைகளாம் எதுகையும் மோனையும்
இயைபும் சிந்திலும் இயலும்; எனினும்
இயைபுத் தொடைபல இடங்களிற் பயிலுதல்
சிந்துப் பாடலின் சிறப்பா கும்மே.கருத்து : இயற்பாக்களுக்கு உரிய தொடைகளாகி எதுகைத் தொடையும், மோனைத் தொடையும், இயைபுத் தொடையும் சிந்துப் பாக்களில் அமையும்; என்றாலும் இயைபுத் தொடை பல இடங்களிற் பயின்று வருவது சிந்துப் பாடலின் சிறப்பாகும்.
விளக்கம் :
எதுகை : முதல் எழுத்து அளவொத்துவர அடுத்த எழுத்து ஒன்றோ பலவோ ஒன்றுவது எதுகை எனப்படும். அது அடியெதுகை, சீரெதுகை என்று இரண்டு வகைப்படும். சீரெதுகையிலும் அடியெதுகை சிறப்புடைத்து.
காட்டு :கொந்து குழல் இந்நுதல் யானைக் - கோடு கும்பமெனும் இன்பமுலை அம்பிகையின் உதவும் நந்துலவு சிந்துதிரை வீசும் - சந்த னாசலகு கேசனடி நாடிடுமென் மனமே (வ.க.கா.சி. 4)இதில் கொந்து - நந்து என்பன அடியெதுகைகள். கொந்து-இந்து, கும்ப-இன்ப-அம்மி, என்பவையும் நந்து-சிந்து-சந்த என்பனவும், னாசலகு-கேசனடி என்பனவும், சீரெதுகைகள்.
மோனை : முதல் எழுத்து ஒன்றுவது மோனை. இது அடிமோனை, சீர்மோனை என்று இருவகைப்படும், அடிமோனையிலும் சீர்மோனை சிறப்புடையது.
மேற்காட்டிய கண்ணியில் அடிமோனை இல்லை. கொந்து-கும்ப என்பதும், நந்து-நாடிடு என்பதும் சீர்மோனைகள்.
இயைபு : இறுதி ஒன்றி வருவது இயைபு எனப்படும். இசைப் பாக்களுக்கு இயைபு சிறந்தது. இயைபிலும் அடியியைபு, சீரியைபு என இரண்டு வகையுண்டு. அடியியைபே சிறப்புடையது. எனினும் இசைப் பாடல்களில் ஒவ்வொரர் அரையடியும் ஒரு வரியாக வருவதால் அவற்றின் இறுதியில் வருவன சீரியைபாக இருந்தாலும் சிறப்புடையனவாகவே உள்ளன. அடியிறுதி, அரையடி இறுதியோடு வேறிடங்களிலும் வருதலுண்டு. காவடிச் சிந்துப் பாடல்களில் இவற்றைக் காணலாம். ஒரடியில் நான்கு, ஐந்து இயைபுகளும் வருதலுண்டு.
காட்டு :நந்தவ னத்திலோர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை - வேண்டிக் கொண்டு வந்தானொரு தோண்டி - அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி (சி.பா.ப.224)இந்த ஆனந்தக் களிப்பில் ஆண்டி, வேண்டி, தோண்டி, தாண்டி என்ற இயைபுகள் அரையடி தோறும் வந்துள்ளதால் பாடலில் ஒலி நயம் நிறைந்திருப்பதைக் காணலாம்.
காட்டு :என்னடி நான்பெற்ற மங்கை - இள நங்கை - விடல் சங்கை - என்ன இப்படி ஆயிற்றே செங்கை - வளை இடர்பெற்றிட உடைபட்டன நடைகெட்டது னுடையிற்பல எய்தின சந்தனப் புள்ளி - என்ன செய்தனை சொல்லடி கள்ளி (கா.சி.க.வ.ப.194)இந்த அடியில் மங்கை-நங்கை-சங்கை-செங்கை என்றும், புள்ளி-கள்ளி என்றும் இயைபுகள் வந்துள்ளதைக் காண்க.
எனவே இயற்பாத் தொடைகளாகிய எதுகைத் தொடையும், மோனைத் தொடையும், இயைபுத் தொடையும் சிந்துப் பாடல்களிலும் வரும் என்பதும், அவற்றில் இயைபுத் தொடை சிந்துப் பாடலின் பல இடங்களிலும் பயின்று வந்தால் பாடல் சிறப்பாக இருக்கும் என்பதும் உணரத் தக்கனவாகும்.32. சிந்துகளைப் பாடும் முறை
எவ்வகைச் சிந்தும் இசைக்குங் காலை
எதுகை மோனைத் தொடைபெறும் இடங்களால்
அடியின் தொடக்கமும் அரையடித் தொடக்கமும்
தாளச் செயல்களில் தட்டுடன் ஒன்றி
அமையப் பாடுதல் அழகுடைத் தாகும்.கருத்து : பலவகைச் சிந்துப் பாடல்களில், அது எவ்வகைச் சிந்துப் பாடலாக இருந்தாலும் அதைத் தாளத்தோடு இசைத்து பாடும்போது எதுகைத் தொடைபெறும் இடங்களில் அடியின் தொடக்கமும், மோனைத் தொடை பெறும் இடங்களில் அரையடித் தொடக்கமும் கொண்டு இருப்பதால், தாளச் செயலில் அவ்வெதுகை, மோனை பெறும் இடங்களில் தாளத்தின் தட்டுகள் ஒன்றுமாறு பாடுதல் பாட்டுக்கும் தாளத்திற்கும் அழகைத் தரும்.
விளக்கம் : சிந்துப் பாடலில் அடிகளின் தொடக்கத்தில் எதுகைச்சீர் இருக்கும். தாளங்கள் தட்டிலிருந்து தொடங்குகின்றன. எதுகைச்சீர் தாளத்தின் தட்டுடன் தொடங்குகிறது. அதுபோல், பெரும்பாலும் அவ்வடியில் பாதியில் உள்ள மோனைச் சீரும் தாளத்தின் மற்றொரு தட்டில் தொடங்க வேண்டும். அப்போதுதான் அந்த அடியைப் பாடுகையில் எதுகை மோனைகளினால் உண்டாகும் ஒலியின்பம் கிடைக்கும். ஆதிதாள வட்டணை எட்டு எண்ணிக்கை உடையது. அதன் தொடக்கத்தில் கோலின் தட்டு விழுகிறது; சரி பாதியில், அதாவது ஐந்தாம் எண்ணிக்கையில் முதல் சுழியின் தட்டு விழுகிறது. கோலின் தட்டில் எதுகைச்சீர் தொடங்கினால் முதல் சுழியின் தட்டில், அடியின் பாதியில் அமையும் மோனைச்சீர் தொடங்குகிறது. இது பாட்டின் ஒலிநயத்திற்கு துணை செய்கிறது.
எண்சீரடிகளை எட்டு எண்ணிக்கையுடைய வேறு தாளங்களில் பாடினால் மோனைச்சீர் உள்ள அரையடி எடுப்பில் தட்டு விழாது. அதனால் பாட்டின் ஒலியின்பம் முழுமையாகக் கிடைக்காது. அடித் தொடக்கத்தில் போலவே அடியடியின் தொடக்கங்களில் தட்டு விழும்போது சற்று அழுத்தம் கொடுத்துப் பாடுவது மரபு. இது இசையின்பத்தை மிகுவிக்கும்.
1400
காட்டு :
கணப திரா . யன் . அ - வனிரு
காலைப்பி டித்திடு வோம் . . . . .என்ற அடியில் மோனைச்சீர் ‘காலைப்பி’ என்பது. இதை ஆதிதாளத்தில் பாடினால், ‘கா’ என்ற இடத்தில் தட்டு விழும். ஆனால் இப்பாடலை அதே எட்டு எண்ணிக்கையுடைய மும்மை இன மட்டிய தாளத்தில் பாடினால் ஒரு வட்டணையில் அடி முடியும்; ஆனால் மோனை எழுத்தில் தட்டு விழாது. அதனைக் கீழே காண்க.
1303
காட்டு :
கணப திரா . யன் . அ
வனிரு காலைப்பி
டித்திடு வோம் . . . . .இதில் ‘கா’ என்னும் மோனை தட்டில் விழாமல் திருப்பத்தில் விழுவது காண்க.
சில சிந்துப் பாக்களில் சீர் எண்ணிக்கை மிகுதியாக உள்ள அடிகள் வரும். அதில் பலவிடங்களில் மோனை அமைந்திருக்கும். அவற்றிலும் இந்நெறிமுறை பின்பற்றப் படவேண்டும்; காட்டாக,
1400
வன்னத்தி னைமாவைத் தெள்ளியே - உண்ணும்
வாழ்க்கைக்கு றக்குல வள்ளியே - . உயிர்
வாங்கப்பி றந்திட்ட கள்ளியே - . இரு
வடமேருவை நிகராகிய புயமீதணி பலமாமணி
மாலைப டீரெனத் துள்ளியே - . விழ
வான்மதி வீசுந்தீ யள்ளியே . . .
(கா.சி.க.வ.ப.180)என்ற அடியில் வாழ்க்கை, வாங்க, வட, மாலை, வான்மதி ஆகிய ஐந்து இடங்களில் மோனை வருகிறது. இது ஆதி தாளத்தில் அடங்கும் பாடல். இம்மோனைச் சீர்கள் வருமிடங்களில் கோல் அல்லது சுழியில் தட்டு விழுவதைத் தாளம் போட்டு உணரலாம்.
நான்மையின ஏக தாளத்தில் அடங்கும் அடிகளில் மோனைச்சீர்கள் யாமும் கோலில் தொடக்கத்திலேயே தட்டுகளில் வருவதைக் காணலாம்.
காட்டு : 14
பத்மினி சாதிப்பெண் மானே - பாம்பன்
பார்க்கவ ருவாய்சீ தானே - அங்குப்
பாலசுப் ரமண்யர் ஆலயத் தில்விதிப்
பான்மையில் கும்பாபி டேகம் - அதைப்
பார்ப்பவர்க் கெய்தும்வை போகம் - குறப்
பாவையின் மீதினில் மோகம் - கொண்ட
பண்பதனால் மேவும்நல் யோகம் - மலர்
(பாம்பன் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வழிநடைச் சிந்து)என்று தொடங்கும் இப்பாடலில் பத்மினி, பார்க்க, பால, பான்மை, பார்ப்ப, பாவை, பண்ப என்ற மோனைச் சீர்கள் கோலின் தொடக்கத்திலேயே தட்டுகளில் வருவதைப் பாடி உணரலாம். ஆகவே சிந்துப் பாடல்களில் எதுகை அமையும் இடங்களிலும், மோனை அமையும் இடங்களிலும் தாளத்தட்டு விழுமாறு பாடுவது அழகுடையதாகும்.
33. கண்ணி
எண்ணும் இரண்டடி எதுகை ஒன்றின்
கண்ணி என்று கருதப் படுமேகருத்து : ஒத்த இரண்டடிகள் ஒரெதுகையில் வருமானால் அவை ஒரு கண்ணி என்று சொல்லப்படும்.
விளக்கம் : கண்ணி என்பது கண்ணை உடையது என்று பொருள்படும். கண்-கணு, மூங்கில், கரும்பு முதலியவற்றில் கணுக்கள் உட்பகுதியாக அமைந்திருப்பது போல் பாடல்களின் உட்பகுதியாக இரண்டிரண்டு அடிகள் ஓரெதுகை பெற்று அமைந்திருப்பின் அவை கண்ணிகள் எனப்படும்.
காட்டு: காவடிச் சிந்து
தண்மதி ஒண்முகப் பெண்மணியே - உன்னைத்
தான்கொண்ட நாயகர் ஆரேடி
அண்மையில் பொன்னணி அம்பலத் தாடல்செய்
ஐயர் அமுதர் அழகரடி
(திருவ. 2971)இப்பாடலில் தண்மதி என்பது முதல் ஆரேடி என்பது வரையில் ஒரடி; அண்மையில் என்பது முதல் அழகரடி என்பது வரையில் ஓரடி. இவ்விரண்டு அடிகளும் தண்மதி - அண்மையில் என்ற எதுகையினால் ஒன்றாக தொடுக்கப்பட்டுள்ளன. எனவே இவையிரண்டும் கண்ணியாகும்.
இதிலிருந்து ஓரெதுகையில் வரும் இரண்டடிகள் ஒரு கண்ணியென்பது பெறப்படும்.34.
நாலடி பெற்று நடக்கும் கண்ணியும்
ஓரடிக் கண்ணியும் உளவென மொழிபகருத்து : நான்கு அடிகளைப் பெற்று நடக்கும் கண்ணிகளும் உள்ளன என்றும், ஓரடிக் கண்ணிகளும் உள்ளன என்றும் நூல்வல்லார் சொல்லுவர்.
விளக்கம் : பெருவழக்காக வரும் இரண்டடிக் கண்ணிகள் முன்னர் கூறப்பட்டன. (நூ. 33). சிறுபான்மையாக வரும் நான்கடிக் கண்ணிகளும், ஓரடிக் கண்ணிகளும் இங்கு எடுத்துக் கூறப்படுகின்றன.
நான்கடிகள் ஓரெதுகை பெற்றுவரும் கண்ணிகளும், சிறுபான்மை வருவதுண்டு.
காட்டு :
நாலடிக் கண்ணி
நெஞ்சுபொ றுக்குதிலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
அஞ்சியஞ் சிச்சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்களென் பார் - இந்த
மரத்திலென் பார்அந்த குளத்திலென் பார்
துஞ்சுது முகட்டிலென் பார் - மிகத்
துயர்படு வாரெண்ணிப் பயப்படுவார்இப்பாடலில் நெஞ்சு என்பது முதல் விட்டால் என்பது வரை முதலடி; அஞ்சி என்பது முதல் அவனியிலே என்பது வரை இரண்டாமடி; வஞ்சனை என்பது முதல் என்பார் என்பது வரை மூன்றாமடி; துஞ்சுது என்பது முதல் பயப்படுவார் என்பது வரை நான்காமடி.
இந்த நான்கடிகளும் நெஞ்சு-அஞ்சி-வஞ்ச-துஞ்சு என்ற ஓரெதுகையினால் ஒன்றாகத் தொடுக்கப்பட்டுள்ளன.
ஓரடிக் கண்ணிகளும் சிறுபான்மை வருவதுண்டு.
காட்டு : ஓரடிக் கண்ணி
1. ஐயா ஒரு சேதி கேளும் - உங்கள்
அடிமைக்கா ரப்பறையன் நடத்தையெல்லாம்
2. வரவரக் கெட்டுப்போச்சு - சேரியில்
வழக்கமில் லாதபடி பழக்கமிட்டான்.
(கோ.கொ.பா.நந்த.சரி.கீ.வ.49)இப்பாடலில் ஐயா என்பது முதல் எல்லாம் என்பது வரை ஓரடி. இது ஓரடிக் கண்ணியாக வந்துள்ளது. வரவர என்பது முதல் பழக்கமிட்டான் என்பது வரை ஓரடி. இதுவும் ஓரடிக் கண்ணியாக வந்துள்ளது.
இவ்வாறு சிறுபான்மையாக நான்கடிக் கண்ணிகளும், ஓரடிக் கண்ணிகளும் வரும் என்பதனை அறியலாம்.
ஓரடிக் கண்ணியும் என்பதில் உள்ள உம்மையால், மிகவும் அருகி மூன்றடிக் கண்ணிகளும் வரும் என்பது கொள்ளப்படும்.
காட்டு : மூன்றடிக் கண்ணி
எடுப்பு
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?
வஞ்சி என்றழைத்தான் ஏனென்றான் மாலை? (மாடு)
தொடுப்பு
பாடொரு பாட்டென்றேன் பாடி இருந்தான்
பைந்தமிழ் கேட்டுநான் ஆடியிருந்தேன் (மாடு)
முடிப்பு
காளைசொற்படி மறு . நாளைக்குச் சென்றேன்
கனிபோன்ற தென்பாங்கு பாடாயோ என்றான்
வேளை யாகிவிடும் என்று நவின்றேன்
விரும்பிப் பசுக்கறந்து குடியென்று நின்றான்
ஆளன் கொடுத்தபா லாழாக்குப் பாலென்றேன்
அல்லடி காதற் கலப்பால்தான் என்றான் (மாடு)
(பாரதிதாசன் இசையமுது.பக்.2)இப்பாடலில் முடிப்பில் காளையென்பது முதல் என்றான் என்பது வரை முதல்டி; வேளை என்பது முதல் நின்றான் என்பது வரை இரண்டாவது அடி; ஆளன் என்பது முதல் தானென்றான் என்பது வரை மூன்றாவது அடி.
இம்மூன்று அடிகளும் காலை-வேளை-ஆளன் என்ற ஓரெதுகையினால் ஒன்றாகத் தொடுக்கப் பட்டுள்ளன.
எனவே மிகவும் அரிதான மூன்றடிக் கண்ணியும் வருவது உண்டு என்று உணரலாம்.ஆ. சிறப்பிலக்கணம்
35. நொண்டிச் சிந்து
எண்சீர் அடிகள் இரண்டோர் எதுகையாய்
ஐந்தாம் சீர்தொறும் மோனை அமைந்து
நான்மை நடையுடன் நாலாஞ் சீரில்
தனிச்சொல் தழுவி இனித்திட நடப்பது
நொண்டிச் சிந்தென நுவலப் படும்.கருத்து : இரண்டு எண்சீரடிகள் ஓர் எதுகையால் தொடுக்கப்பட்டு, ஒவ்வோர் ஐந்தாம் சீரிலும் மோனை அமைந்து, நான்மை என்னும் தாள நடையுடன், நான்காம் சீரில் தனிச்சொல் அமைந்து, செவிக்கு இன்பம் நல்கி நடப்பது சிந்துப் பாடலில் நொண்டிச் சிந்து என்று வழங்கப்படும்.
விளக்கம் : களவாடியதனால் தண்டனையாகக் கால் வாங்கப்பட்டு, நொண்டியாகிப் போன கள்வனின் கதையை நொண்டி நாடகம் என்ற பெயரால் இவ்வகைப் பாடலாக எழுதும் பழக்கம் சென்ற நூற்றாண்டுகளில் இருந்து வந்தது. இந்நாடகத்தில் நொண்டியானவன் பாடும் சிந்துப் பாடல் வகை என்பதனால் இதற்கு நொண்டிச் சிந்து என்று பெயர் வந்தது என்று கருதப்படுகிறது.
நொண்டிச் சிந்தின் அடிகள் ஓர் ஆதிதால வட்டணையில் அடங்குமாறு எண்சீர்க் கழிநெடிலடிகளாக இருக்கும். ஒவ்வொரு சீரும் நான்மை நடைக்கு ஏற்றவாறு அமைந்திருக்க்கும். நாலாம் சீரின் இடத்தில் தனிச்சொல் பெற்றிருக்கும். ஒவ்வோரடியின் ஐந்தாம் சீரிலும் மோனை அமைந்திருக்கும்.
காட்டு :
சேண்தொடு மாமலையும் - நதிகளும்
செறிந்துபல் வளங்களும் நிறைந்துமிகு
மாண்புறு நன்னாடாம் - வண்டுறை
வாவிசூழ் நாவலந் தீவுதனில்
(திரு.நொ.நா.ப. 7)இந்த நான்மை நடைப் பாடலில் சேண்தொடு என்று தொடங்கி நிறைந்து மிகு என்று முடியும் முதலடியிலும், மாண்புறு என்று தொடங்கி தீவுதனில் என்று முடியும் இரண்டாம் அடியிலும் எட்டெட்டு சீர்களும், ஐந்தாம் சீர்களில் ‘செறிந்து’ ‘வாவி’ என மோனையும், நாலாம் சீர்களாக ‘நதிகளும்’ ‘வண்டுறை’ எனும் தனிச்சொற்களும் வந்துள்ளதை உணரலாம்.
எண்சீர் அடிகள் இரண்டு ஓரெதுகையாய் வரும் என்றதனால் பெரும்பாலும் ஈரடிக்கண்ணிகள் நொண்டிச்சிந்தில் வரும் என்பது பெறப்படுகிறது. நொண்டிச் சிந்துகளில் சிறுபான்மையாக ஓரடிக் கண்ணிகளும், நாலடிக் கண்ணிகளும் வருதலுண்டு. எடுத்துக் காட்டுகளை 34ஆம் நூற்பாவுரையில் காண்க.36.
நாலசைத் தனிச்சொல் நடுவே மடுத்தலும்
ஐந்தாஞ் சீரிலும் ஏழாஞ் சீரிலும்
எதுகை பெறுதலும் எழில்மிகத் தருமே!கருத்து : நொண்டிச் சிந்துகளில் நாலாம் சீராக நடுவே வரும் தனிச்சொல் நாலசைச்சீராக அமைவதும், ஒவ்வோரடியின் ஐந்தாம் சீரிலும், ஏழாம் சீரிலும், எதுகை ஒன்றி வருவதும் அப்பாடலுக்கு மிகுந்த அழகைத் தரும்.
காட்டு :
சேண்தொடு மாமலையும் - நதிகளும்
செறிந்துபல் வளங்களும் நிறைந்துமிகு
மாண்புறு நன்னாடாம் - வண்டுறை
வாவிசூழ் நாவலந் தீவுதனில்
(திரு.தொ.நா.ப. 7)இப்பாடலில் முதலடியின் நாலாம் சீராக வந்த தனிச்சொல்லும், ஜிரண்டாம் அடியின் நாலாம் அடியின் நாலாம் சீராக வந்த தனிச்சொல்லும், ‘நதிகளும்’ எனவும், ‘வண்டுறை’ எனவும் நாலசை மூவகைச் சீர்களாக உள்ளதையும், முதலடியின் ஐந்தாம், ஏழாம் சீர்கள் செறிந்து - நிறைந்து என்று எதுகை பெற்றும், இரண்டாம் அடியின் ஐந்தாம் ஏழாம் சீர்கள் வாவி - தீவு என்று எதுகைபெற்று வந்துள்ளதையும் காணலாம். சித்தராரூடம் என்ற நொண்டிச் சிந்து நூலில், பெரும் பாலும் மூவசை, நாலசைச் சொற்கள் தனிச் சொல்லாக வருகின்றன. இன்றைய நொண்டிச் சிந்துகளில் தனிச் சொற்கள் பெரும்பாலும் ஈரசைச் சொற்களாக உள்ளன. ஓரசைச் சொற்கள அருகி வருகின்றன.
காட்டு :
அத்தின புரமுண் டாம் - இவ்
வவனியி லேயதற் கிணையிலை யாம்
பத்தியில் வீதிக ளாம் - வெள்ளைப்
பனிவரை போற்பல மாளிகை யாம்
முத்தொளிர் மாடங்க ளாம் - எங்கும்
மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைக ளாம்
நத்தியல் வாவிக ளாம் - அங்கு
நாடும்இ ரதிநிகர் தேவிக் ளாம்
(பா.வி. ப. 361)இதில் ‘வெள்ளை’, ‘எங்கும்’, ‘அங்கு’ என ஈரசைச் சொற்கள் பெரும்பாலும் தனிச் சொற்களாக உள்ளன. ‘இவ்’ என்னும் ஓரசைச் சொல் அருகி வந்தது.
37. வளையற் சிந்து
வளையல் வாணிகம் வழங்கும் பாவகை
எண்சீர் அடிகள் இரண்டினும் மூன்றினும்
தனிச்சொல்லும் இயைபும் தான்மிகப் பெற்றே
ஓரடிக் கண்ணியாய் பேரளவியன்று
மும்மையின் விரைவில் செம்மையாய் நடக்கும்கருத்து : வளையல் வாணிகத்தில் வழக்கத்தில் இருக்கும் பாவகையான வளையற் சிந்து, எண்சீர் அடிகள் இரண்டு அமைந்தும் அல்லது மூன்று அமைந்தும், தனிச்சொல்லும் இயைபுத்தொடையும் மிகுதியாகப் பெற்றும் ஓரடிக் கண்ணிகளால் பெரிதும் இயன்று விரைவு மும்மை நடையில் செம்மையாக நடக்கும்.
விளக்கம் : தெருவில் வளையல் விற்கும் வணிகர்கள் பாடிச் செல்வதாக உருவானது வளையற் சிந்து, இப்பாடல்வகை வேறு பொருளிலும் பாடப்படுகிறது. இதன் அடிகள் ஒவ்வொன்றும் ஆதிதாளத்தின் மூன்று வட்டணைகளில் அடங்கும் இருபத்து நான்கு சீரடி ஓரடிக் கண்ணியாக வருவது பெரும்பான்மை. இரண்டு ஆதிதாள வட்டணையில் அடங்கும் 16 சீர் அடிபெற்று சிறுபான்மை வருவதுண்டு. இதன் சீர் மும்மை நடையினதாக அமைந்திருக்கும். 1,5, 9, 13, 17, 21 ஆம் சீர்களில் மோனை அமைந்திருக்கும் 7, 11, 15, 23 ஆம் சீர்களில் இயைபுத் தொடை அமைந்திருக்கும்.
காட்டு : 24 சீர் அடி
வாரு மையா வளையல் செட்டி
வளையல் விலை கூறும் - சீர்
மகிழ்ந்து மேகை பாரும் - பசி
வன்கொ டுமை தீரும் - எந்த
மாந கரம் பேர்இ னங்கள்
வகை விபரம் கூறும்.
-(தொடை.மேற்.ப.273)இப்பாடலில் மேற்குறித்த சீர்களில் முறையே வா-வ-ம-வ-மா-வ என மோனையும், கூறும், பாரும், தீரும், கூறுமென இயைபும் வந்தமை காண்க.
காட்டு : 16 சீர்
தினத்தெந்தினா தினத்தெந்தினா
தினத்தெந்தினா தினனா
தென்னாதி னாதெந்தினா
தினத்தெந்தினா தினனா
சித்தர்கள்வாழ் மலையருகில்
சிறந்த நல்ல வனத்தில்
தேவிவள்ளி மான் வயிற்றில்
திருவுருவா யாமைந்தாள்
(வள்ளியம்மை ஆயலோட்டம், குறவஞ்சி, சில்லறைக்கோவை)இதில் 1, 5, 9, 13 ஆம் சீர்களில் முறையே சி, சி, தே, தி என மோனைத் தொடை அமைந்துள்ளது. தனிச் சொல்லும் இயைபுத் தொடையும் இல்லை.
38. கும்மி
எண்சீர் அடிகள் இரண்டொரு தொடையாய்
ஐந்தாஞ் சீர்தொறும் மோனை அமைந்தே
ஈரசை இகவா தியலும் தனிச்சொல்
அரையடி இறுதியில் அமையப் பெற்று
மும்மையின் நடப்பது கும்மி யாகும்.கருத்து : இரண்டு எண்சீர் அடிகள் ஒரு தொடையாக அமைந்தும், ஒவ்வோர் ஐந்தாம் எண்ணிலும் மோனை அமைந்தும், அரையடியின் இறுதியில் இரண்டு அசைக்கு மிகாத தனிச்சொல்லைப் பெற்றும் மும்மை நடையில் நடப்பது கும்மிப் பாடலாகும்.
விளக்கம் : ஆட்டத்தின் பெயர் அதில் பாடப்படும் பாட்டுக்கு ஆவதுண்டு. கும்மியென்பது கும்மி கொட்டுதலைக் குறிக்கும்.
கூற்றம் புறங்கொம்மை கொட்டினார் இல் (பழமொழி நானூறு.291) அதுவே கும்மி கொட்டிப் பாடும் பாடலுக்கு ஆகி வந்தது.
காட்டு : கும்மி
மானைப்ப ழித்தவி ழியுடை யாள் - ஒரு
மாமயில் போலும்ந டையுடை யாள்
தேனைப்ப ழித்தமொ ழியுடை யாள் - பெண்ணின்
தெய்வமெ னத்தரும் சீருடை யாள்.
(ஆசியசோதி. தொடை.மேற்.ப.280)மும்மை நடையுடைய இப்பாடலில் ‘மானே . . . நடையுடையாள்’ ‘தேனை . . . சீருடையாள் ஆகிய இரண்டடிகள் ஒரு தொடையாய் வந்துள்ளன. முதலடியின் 5ஆம் சீரில் ‘மா’ என மோனை அமைந்துள்ளது. அரையடிகளின் இறுதியில் வந்த ‘ஒரு’, ‘பெண்ணின்’ என்ற தனிச்சொற்கள் இரசைச் சொற்களாக வந்துள்ளன.
காட்டு : வாலைக் கும்மி
சித்தர்கள் போற்றிய வாலைப்பெண்ணாம் - அந்தச்
சித்தியின் மேல்கும்மிப் பாட்டுரைக்கத்
தத்தமி தோமென ஆடும் கலை - மகள்
பத்தினி பொற்பதம் காப்போமே.
(வாலைக்கும்மி. சித்.பா.ப.257)இப்பாடலில் மோனை அமைய வேண்டிய 5ஆம் சீர்களில் எதுகை அமைந்துள்ளது. எனவே மோனைக்கு பதிலாக எதுகை அமைதலும் உண்டெனக் கொள்க. கும்மி என்பது தொடக்கத்தில் கொம்மை என்று இருந்திருக்கிறது என்பது மேற்காட்டிய பழமொழியாலும், சீவக சிந்தாமணி, நைடதம் போன்ற பழந்தமிழ் நூல்களாலும் தெரிய வருகிறது. கொம்மை என்பது நாளடைவில் மருவி கொம்மி என்றும் கும்மி என்றும் ஆயிற்று.
காட்டு : கொம்மி
கொம்மியடிப் பெண்கள் கொம்மியடி - இரு
கொங்கை குலுங்கவே கொம்மியடி.
-திருவருட்பா 2964)39.
தனிச்சொல்லை முதலடி இறுதியில் தாங்கியும்
தனிச்சொல்லே இன்றியும் சமைவன உளவேகருத்து : தனிச்சொல்லை முதலடியின் இறுதியில் பெற்று வரும் கும்மிப்பாடல்களும் உள்ளன. தனிச்சொல்லே பெறாது அமைந்த கும்மிப் பாடல்களும் உள்ளன.
விளக்கம் : மேல் நூற்பாவில் பெருவரவினவான அரையடி இறுதியில் தனிச்சொல் பெறும் கும்மிகள் கூறப்பட்டன. இங்கு சிறுவரவினவான அடி இறுதியில் தனிச்சொல் பெறும் கும்மிகளையும், தனிச்சொல்லே பெறாத கும்மிகளையும் கூறுகின்றனர்.
காட்டு : தனிசொல்லை முதலடியின் இறுதியில் பெற்றுவரும் கும்மி
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடெனும் பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே -(பா.கவி. ப. 165)இதில் முதலடியின் இறுதியில் ‘எங்கள்’ என்ற தனிச்சொல் வந்தது.
காட்டு : தனிச்சொல் இல்லாமல் வந்த கும்மி
தில்லையில் முல்லையில் எல்லையுள் ஆடிய
வல்லவன் வாலைப்பெண் மீதினிலே
சல்லாபக் கும்மித்த மிழ்பா டவரும்
தொல்லைவி னைபோக்கும் வாலைப் பெண்ணே.
(கொங்கணர் வாலைக்கும்மி. சி.பா.8)இக்கும்மிப் பாடலில் தனிச்சொல் இல்லை.
40. ஒயிற்கும்மி
மும்மையில் விரையும் முடுகியல் தாங்கியும்
எதுகையும் இயைபும் இடையிடை மிடைந்தும்
ஒலிசிறந் திசைப்பது ஒயிற்கும்மி யாகும்.கருத்து : விரைவு மும்மையில் நடக்கும்; முடுகியல் அடிகள் தாங்கியிருக்கும்; எதுகைத் தொடையும், இயைபுத் தொடையும் இடையிடையே செறிந்திருக்கும்; பாடலின் ஒலி சிறந்திருக்கும்; இவ்வாறான அமைப்பில் உள்ளது ஒயிற்கும்மியாகும்.
காட்டு : ஒயிற்கும்மி (விரைவு மும்மை)
தென்பரங் குன்றினில் மேவுங் குருபர
தேசிகன் மேற்கும்மிப் பாட்டுரைக்கச்
சிகரத்திரு மகரக்குழை
திகழுற்றுடு முமைப்பெற்றிடு
தில்லைவி நாயகன் காப்பாமே.
(முருகன் ஒயிற்கும்மி. தொடை.281)இதில் தெ-தே-சி-தி-தி என்ற மோனையும், சிகர-மகர-திகழு என்ற எதுகையும் இடையிடை மிடைந்து வந்துள்ளதையும், இதன் பிற்பகுதியில் ‘தகதத்திமி’ என்னும் சந்தமுடைய நான்கு முடுகியற் சீர்கள் வந்துள்ளதையும் உணரலாம். இதில் இயைபு இல்லை.
5 சதுசிர இன ஏக தாளவட்டணையில் அடங்கும் 20 சீரடி பெற்று வரும் ஒயிற்கும்மியும் உண்டு. அவை நான்கசைத் தனிச்சொற்களையும் இடையே பெற்று வரும்.
காட்டு : ஒயிற்கும்மி (சதுசிர இன தாளம்)
மாவும்ப லாவும் கொய்யாவும் ஆரஞ்சியும்
வன்னப்ப ழம்பழுக்கும் - மகிழ்ந்துவாய்
தின்னச்சு வையிருக்கும் - மலர்ந்த
பூவும்க னியும்பொ ழியும்செந் தேனும்
போவார டிவழுக்கும்.
(வெ.கோ.வ.சிந்து.தொடை.ப.281)இதில் பழுக்கும், இருக்கும், வழுக்கும் என்ற இயைபும், ‘மகிழ்ந்துவாய்’ என்ற நாலசைத் தனிசொல்லும், ‘மலர்ந்த’ என்ற மூவசைத் தனிச்சொல்லும் வந்துள்ளதைக் காணலாம். எனவே ஒயிற்கும்மி; விரைவு நடையது; முடுகியல் அடிகளைக் கொண்டது; எதுகையும், இயைபும் இடையிடையே செறிந்தது; ஒலி சிறந்தது என்பது போதரும்.
41. இரட்டைக் கும்மி
எண்சீர் அடிகள் இரட்டி வருவதால்
இரட்டைக் கும்மியென் றியம்பப் பெறுமேகருத்து : எண்சீரடிகள் (இரண்டு ஒரு தொடையாய் வருவதினும்) இரு மடங்காக வருவதால் அக்கும்மிப் பாடல் இரட்டைக் கும்மி என்று வழங்கப்படும்.
விளக்கம் : கும்மியில் எண்சீரடிகள் இரண்டு ஒரு தொடையாய் வருமென்று மேலே கூறப்பட்டது) (நூ.38) இங்கு அதன் இரு மடங்காக வரும் கும்மி என்று கூறப்படுகின்றது.
காட்டு : இரட்டைக் கும்மி
தில்லைச்சி தம்பரம் தன்னிலொ ருநாள்
திருநட்ட மாடும்சி வனுடனே
தேவிசி வகாமி நாயகி அந்தத்
திருநீல பத்தன்நெ றிஉரைக்கச்
சொல்லச்செ விதனில் கேட்டாள் நாளும்
சோதித்த வன்தன்னை ச் சூதாக்கிச்
சொன்னமொ ழிநிலை யாமலெந் நாளும்
சுகந்தனில் வாழநி னைத்திடென் றான் (திருநீ.பள்ளு.தொடை284)இதன் ஒரு கண்ணி பொதுவான கும்மியின் கண்ணியைப் போல் இரண்டு மடங்கு பெரிதாக அமைவதால் இப்பெயர் பெற்றது போலும். இதன் ஓரடியில்16 சீர்கள் இருக்கின்றன. தனிச்சொல் காணப்படவில்லை.
42.
எடுப்பு முடிப்புடன் இயலும் கும்மியும்
ஓரடிக் கும்மியும் உளவா கும்மே.கருத்து : எண் சீரடிகள் இரண்டு ஒரு தொடையாய் நடக்கும் இரண்டடிக் கண்ணிகள் கொண்ட கும்மிப் பாடல்கள் அல்லாமல் எடுப்பு முடிப்புகளுடன் நடக்கும் கும்மிப் பாடல்களும் உள்ளன.
விளக்கம் : இதுவரை கண்டவை வெறும் கண்ணிகளாகவே இயங்கும் கும்மிகள். கும்மிகளில் எடுப்பு, முடிப்புகளுடன் அமைந்தவையும் உண்டு.
காட்டு :
எடுப்பு
கொம்மியடி பெண்கள் கொம்மியடி - இரு
கொங்கை குலுங்கவே கொம்மியடி
நம்மையாளும் பொன்னம்பல வாணனை
நாடிக் கொம்மிய டியுங்கடி - பதம்
பாடிக் கொம்மிய டியுங்கடி (கொம்மி)
முடிப்பு
காம மகற்றிய தூயனடி - சிவ
காம சவுந்தரி நேயனடி
மாமறை யோது செவ் வாயனடி - மணி
மன்றெனு ஞானவா காயனடி (கொம்மி)
(திருவருட்பா.2964-2966)கண்ணிக்கு வேண்டிய இரண்டடிகள் இன்றி ஓரடியே ஒரு கண்ணியாகவும் வரும் கும்மிகள் ஓரடிக்கும்மி என்று பெயர் பெறும்.
காட்டு : ஒரடிக் கும்மி வக்காவும் கொக்கும்வ ருகுது பார் - நல்ல வங்கார சாமிகு ளந்தேடி. (தொடை.ப.292.மேற்)43. ஆனந்த களிப்பு
கும்மி போல மும்மையில் வரினும்
அடியின் இறுதிசேர் அசைநீட் டத்தைத்
தனிச்சொல் முன்னர்த் தாங்கி வருவது
ஆனந்தக் களிப்பென் றறையப் படுமே.கருத்து : கும்மிப் பாடல்போல மும்மை நடையில் வந்தாலும், கும்மிப் பாடலில் ஒவ்வோர் அடியின் இறுதியிலும் சேர்ந்திருக்கின்ற அசை நீட்டத்தைத் தனிச் சொல்லுக்கு முன்பாகவே கொண்டு வருவது ஆனந்தக் களிப்பென்று சொல்லப்படும்.
விளக்கம் : இறையருளைப் பெற்றவர்கள், பெற்ற மகிழ்ச்சியின் மிகுதியினால் பாடும் பாட்டுக்கு இப்பெயர் அமைந்ததாகக் கருதலாம். மாணிக்கவாசகர் ‘ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய்’ (திருவாசகம், திருவம்மானை 3) என்று பாடிய ஆனந்தம்’ என்னும் வடசொல் இப்பெயர்க்கு முன்னோடியாய் இருக்கலாம். அதனுடன் அதே பொருள்படும் ‘களிப்பு’ என்னும் தமிழ்ச்சொல்லும் இணைந்து ‘ஆனந்தக் களிப்பு’ என்ற தொடர் உருவாகியிருக்கலாம். திருவம்மானைக்கு ஏற்பட்டிருந்த ஆனந்தக் களிப்பு என்ற பெயரைத் தம் சிந்துப் பாடலுக்கும் கடுவெளிச் சித்தர் முதலியோர் பயன்படுத்தியிருக்கலாம். கடுவெளிச் சித்தரின் ‘பாபம் செய்யாதிரு மனமே’, தாயுமானவரின் ‘சங்கர சங்கர சம்பு’ முதலியவற்றை முன்மாதிரியாகக் கொண்டு பின் வந்தோரால் ஆனந்தக் களிப்புகள் எழுதப்பட்டு வந்தன.
கும்மிப்பாடல் மும்மை நடையில் வருவது போல ஆனந்தக் களிப்பும் மும்மை நடையில் வரும்; கும்மியில் அசை நீட்டம் ஒவ்வோர் அடியின் இறுதியிலும் வரும்; ஆனால் அந்த அசை நீட்டம் ஆனந்தக் களிப்பில் தனிச்சொல் பெறுகின்ற அரையடியின் முன்பாக வரும்; இது கும்மிக்கும் ஆனந்தக் களிப்பிற்கும் உள்ள வேறுபாடு.
காட்டு : கும்மி
மானைப்ப ழித்தவிழியுடை யாள் - ஒரு
மாமயில் போலும் நடையுடை யாள் . .
தேனைப்ப ழித்தமொ ழியுடை யாள் - பெண்ணின்
தெய்வமெ னத்தகும் சீருடை யாள் . .
(ஆசிய சோதி. தொடை. மெற்.ப. 280)இக்கும்மியின் அடி இறுதிகளில் ‘யாள்’, ‘யாள்’ அசை நீட்டம் வந்துள்ளது. ‘ஒரு’, ‘பெண்ணின்’ என்ற தனிச்சொற்களுக்கு முன் அசை நீட்டம் இல்லை.
காட்டு : ஆனந்தக் களிப்பு
ஆதிசி வன்பெற்று விட்டான் . - . என்னை
ஆரிய மைந்த கத்தியன் என்றோர்
வேதியன் கண்டும கிழ்ந்தே . - . நிறை
மேவும்இ லக்கணம் செய்துகொ டுத்தான்.
(பா.கவி. ப.166)இந்த ஆனந்தக் களிப்பில் அரையடிகளின் இறுதியில் வரும் ‘என்னை’ ‘நிறை’ என்ற தனிச் சொற்களுக்கு முன்பு அசை நீட்டம் வந்துள்ளதைப் பாடியுணரலாம்.
ஆனந்தக் களிப்புகள் அமைப்பில் நொண்டிச்சிந்துகளை பெரிதும் ஒத்துள்ளன; நடையால் மட்டுமே வேறுபடுகின்றன. நொண்டிச் சிந்துகள் நான்மை நடையின. ஆனால் ஆனந்த களிப்புகள் மும்மை நடையின.44.
அடி, அரை யடிதொறும் இறுதியில் அமையும்
இயைபுத் தொடையும், எடுப்பும், முடிப்பும்
ஆனந்தக் களிப்பில் அமைதல் மரபே.கருத்து : ஆனந்தக் களிப்பில் ஒவ்வோர் அரையடி இறுதியிலும், அடி இறுதியிலும் இயைபுத் தொடை அமைந்து வருதலும் எடுப்பு முடிப்புகள் அமைந்து வருதலும் மரபாகும்.
காட்டு :
நந்தவ னத்திலோர் ஆண்டி . - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி . க்
கொண்டுவந் தானொரு தோண்டி . - . அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி
(சித். பா.ப.225)இதன் முதலடியில் ‘ஆண்டி’, ‘வேண்டி’ என்ற இயைபுகள் அரையடி இறுதி, அடி இறுதிகளில் வந்தன. இரண்டாம் அடியில் அதே இடங்களில் ‘தோண்டி’, ‘தாண்டி’ என்ற இயைபுகள் வந்தன.
காட்டு :
எடுப்பு
பாபம்செய் யாதிருமனமே - நாளைக்
கோபம்செய் தேமன் கொண்டோடிப் போவான் (பாபம்)
முடிப்பு
சாபம்கொ டுத்திட லாமோ - விதி
தன்னைநம் மாலேத டுத்திட லாமோ
கோபம்தொ டுத்திட லாமோ - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ (பாபம்)
(சித். பா.ப.223)இந்த ஆனந்தக் களிப்பு அடி அரையடிதோறும் ‘லாமோ’ என்ற இயைபுகளுடனும், எடுப்பு முடிப்புகளுடனும் வந்துள்ளதைக் காணலாம்.
45. இலாவணி
வினவல் விடுத்தல் எனவிரு புலவர்
பாடும் அமைப்பினைக் கூடும் இலாவணி
எண்சீர் அடிகள் இரண்டாய், ஈற்றில்
அடுக்குத் தொடராய் அமையும் இயைபும்
நான்மை நடையும் தான்பெற வருமே.கருத்து : இரு புலவர்களில் ஒருவர் வினாவ, மற்றவர் அவ்வினாவுக்கு விடை கூறுவதாகப் பாடும் அமைப்பினைக் கொண்டது இலாவணிப் பாடலாகும். அது, ஒர் ஆதிதாள வட்டணையில் அடங்கும் எண் சீரடிகள் இரண்டு கொண்டதாய், அடியின் இறுதியில் அடுக்குத் தொடராய் அமைந்த இயைபைப் பெற்று, நான்மை நடையில் இயங்கும்.
விளக்கம் : முருகன் கோயில் திருவிழாக்களில் சிவன் காமனை எரித்தது பற்றிய விழா நடத்தும் போது, காமன் எரிந்தானா இல்லையா என்பதை வாதத்துக்குரிய பொருளாக வைத்து எரிந்த கட்சி, எரியாத கட்சி எனப் புலவர் இருவர் எதிரெதிரே அமர்ந்து கொண்டு ‘டேப்’ எனும் ஒரு தோற்கருவியை அடித்துப் பாட்டுப் பாடுவர். ஒருவரின் வினாவுக்கு மற்றொரு புலவர் விடை சொல்வதாக இக்காட்சி அமையும்.
அடியிறுதிகளில் அடுக்குத் தொடராக இயைபுத் தொடை அமைவது இதன் தனி இயல்பாகும்.
காட்டு :
மாசிலா மதுரகவி ராசசிங்கமே உமது
வலை மடக் கியேவையும் ஐயா ஐயா
மங்கையொடு பங்குடைய சங்கரன்நுதல்வழியால்
மன்மதன் எரிந்தகதை பொய்யா பொய்யா?
(சண்முகசுந்தரம்.சு.1977.188)இந்த இலாவணிப் பாடல் வினாவல் முறையில் உள்ளது; இரண்டு எண்சீர் அடிகள் கொண்டுள்ளது; ‘ஐயா’ ‘ஐயா’, ‘பொய்யா’ ‘பொய்யா’ என்ற அடுக்குத் தொடரான இயைபு ஒவ்வோரடியின் இறுதியிலும் உள்ளது; நான்மை நடையில் நடக்கிறது.
46.
அடியிடைத் தனிச் சொல் அமைவன உளசில
கருத்து : இரண்டு அடிகளுக்கிடையே (முதலடியின் இறுதியில்) தனிச்சொல் அமைந்த இலாவணிப் பாடல்களும் உள்ளன.
விளக்கம் : தனிச்சொல் இன்றிவரும் இலாவணிப் பாடல்களே பெரும்பான்மை. சில இலாவணிகள் முதலடியில் ஈரசைத் தனிச் சொல்லைப் பெற்று வருவதுண்டு.
காட்டு :
செஞ்சடை விரித்துத்தவம் துஞ்சிடா திருக்கும் ஈசன்
தெரிசனம் தன்னைமதன் கண்டு கண்டு - அப்போ
அஞ்சாமல் மலர்க்கணையைப் பஞ்சபாணனும் விடவே
அரனார் அதிக கோபம் கொண்டு கொண்டு.
(தொடை.ப.285)இதில் முதலடியின் இறுதியில் ‘அப்போ’ என்ற ஈரசை தனிச்சொல் வந்துள்ளதை அறிக.
47. காவடிச் சிந்து
கந்தனை வழிபடக்காவடி எடுப்போர்
பாடி யாடப் பயன்படும் பாடலாய்
நாடகத் தமிழின் நயமிகு வகையாய்
எவ்வகை அடியினும் எவ்வகை நடையினும்
தனிச்சொல்லும் இயைபும் நனிமிகப் பெற்று
தொடைநயம் நான்ற நடையுடைத் தாகி,
முடுகியல் அடிகளை இடையிடை ஏற்றுச்
சிந்து வகைகளிற் சிறப்புற நடப்பது
காவடிச் சிந்தெனக் கருதப் பெறுமே.கருத்து : கந்தனை வழிபடுவதற்காக காவடியை எடுத்துச் செல்வோர் பாடிக் கொண்டும் அப்பாடலுக்கேற்ற ஆடிக்கொண்டும் செல்வதற்குப் பயன்படும் பாடல் காவடிச் சிந்தாகும்; இப்பாடல் நாடகத் தமிழின் நயங்கள் மிகுந்திருக்கின்ற வகையில் (எண்சீர் அடிமுதல்) எல்லாவகை அடியினும் வரும்; (மும்மை, நான்மை, ஐம்மை, எழுமை, முதலிய) எல்லாவகை நடைகளையும் பெற்றிருக்கும். தொடை நயங்கள் சிறந்து விளங்கும். முடுகியல் அடிகளைப் பாடலின் இடையிடையே பெற்றிருக்கும்; சிந்து வகைகளிலேயே சிறப்புற நடப்பது காவடிச் சிந்தே என்று எல்லோராலும் கருதப்படும்.
விளக்கம் : காவடிச் சிந்துகள் 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிந்து வகையாகக் கொள்ளப்படுகின்றன. மும்மை, நான்மை, ஐம்மை எழுமை ஆகிய நடைகளிலும், சொல் நயம், பொருள் நயம் கெடாமல், எதுகை மோனை, இயைபுகள் கொஞ்சச் சந்தம் சிறந்துவர, நாட்டுப்புறப் பாடல்களின் எளிமையுடன் இறைப் பற்றையும் அகத்துறைக்ளையும் அமைத்துத் தமக்குமுன் இயற்றப் பெற்ற வள்ளியம்மை கல்யாணக் காவடிச்சிந்து போன்ற நூல்களிலிருந்து கிடைத்த இனிய மெட்டுகளைச் சிறப்பாகப் பாயன்படுத்திக் காவடிச் சிந்துகளை பாடியதில் சின்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் (1861-1891) அடைந்த வெற்றியை இன்றுவரை வேறு எவரும் அடையவில்லை எனலாம்.
பால், சந்தனம், பன்னீர் முதலிய வழிபாட்டுக்குரிய பொருள்களைக் காவடியில் வைத்துத் தோளில் சுமந்து முருகன் கோயில்களுக்கு ஆடிக்கொண்டு சொல்லும் போது ஆடுவதற்கு ஏற்ற வகையில் பலவகைத் தாள நடைகளிலும் ஆடுவதற்கு ஏற்ற வகையில் பலவகைத் தாள நடைகளிலும் அமைந்திருப்பதால் இதனை இசைத்தமிழ் என்பதினும் நாடகத்தமிழ் என்பது பொருந்தும்.
இத்தனைச் சீர் என்னும் வரையறையின்றி எண்சீரடி முதல் இருபத்துநான்கு சீரடிகள் வரையில் காவடிச்சிந்துகளில் இடம் பெற்றுள்ளன. இச்சீர்கள் மும்மை, நான்மை, ஐம்மை, எழுமை என பல்வகை நடைகளிலும், இவற்றின் கலப்பு நடைகளிலும் அமையும். மிகுதியான தனிச்சொற்களை பெற்றுவருவன காவடிச் சிந்துப் பாடல்களே. காவடிச் சிந்தின் மோனை மிகப் பல இடங்களில் அமைந்திருக்கும். இயைபுகள் மிகுதியாக இருக்கும்.
அடிகளின் இடையில் முடுகியல் அடி அமைந்திருக்கும். ஒரு காவடிச்சிந்து மும்மையா, நான்மையா, ஐம்மையா, எழுமையா என்று அதன் நடையைத் தெளிவாகக் காட்டக்கூடியவை பெரும்பாலான பாடல்களில் அடிகளின் இடையில் அமையும் முடுகியற் சீர்களேயாகும். இது காவடிச்சிந்தின் தனித் தன்மைகளில் ஒன்று.
காட்டு : (1) மும்மை நடைஅன்னவ யற்செந்தூர் வாசன் - மந்த காசன் - அன்பர் நேசன் - நாளும் அண்ணாம லைக்கவி ராசன் - பாடும் அமுதச்சுவை தருமுத்தமிழ் களபத்தொடு கமழ்பொற்புய அற்புத வேலன்செய் சாலம் - தன்னால் கற்பழிந் தாயோஇக் காலம்? (கா.சி.க.வ.ப.194)இதில் ‘இடர் பெற்றிட’ என்றும், ‘அமுதச்சுவை’ என்றும் தொடங்கும் நந்நான்கு சீர்கள் முடுகியல். முடுகியல்கள் மட்டும் வண்ணப்பாவின் இலக்கணம் கொள்ளும். இப்பாடலில் முடுகியற்சீர் ஒவ்வொன்றும் ஆறு சந்த மாத்திரை அளவில் ‘தனதத்தன’ என்ற சந்தத்துடன் வருவது காண்க. முடுகியல் பாடும்போது மட்டும் தாளம் ‘தகதரிகிட’ என விரைவு மும்மையில் நடக்கும்.
காட்டு : (2) நான்மை நடை
தெள்ளுதமி ழுக்குதவு சீலன் - துதி
செப்புமண்ணா மலைக்கனு கூலன் - வளர்
செழியர்பு கழ்விளைத்த கழுகும லைவளத்தைத்
தேனே - சொல்லு - வேனே
வெள்ளிமலை ஒத்தபல மேடை - முடி
மீதினிலே கட்டுகொடி யாடை - அந்த
வெய்யவன டத்திவருந் துய்யஇர தப்பரியும்
விலகும் - படி - இலகும்
(கா.சி.க.வ.ப.136)
காட்டு : (3) ஐம்மை நடை
சீர்வளர்ப சுந்தோகை மயிலான் - வள்ளி
செவ்விதழ் லாதினிய தெள்ளமுது - மயிலான்
போர்வளர்த டங்கையுறு மயிலான் - விமல
பொன்னடியை இன்னலற உன்னுதல் செய்வாமே
(கா.சி.க.வ.ப.131)
காட்டு : (4) எழுமை நடை
பொன்னுலவு சென்னிகுள நன்னகரண் ணாமலைதன்
புந்தியில் மகிழ்ந்து நித்தம் நின்றவன் - முந்தி
வெந்திற லரக்கர்களை வென்றவன் - மயில்
போலஏனலின் மீதுலாவுகி ராதமாதுமு னேகியேஅடி
பூவையேஉ னதுதஞ்சம் என்றவன் - ஈயும்
மாவையேஇ னிதுமென்று தின்றவன்
மின்னுலவு சொன்னமுடி சென்னியணி விண்ணவர்தே
வேந்திரனும் சித்தர்களும் துன்னியே - கதி
வேண்டியேஅ கத்தில்அன்பு மன்னியே -
வேலவன்கிரு பாகரன்குகன் மேவிடும்கழு காசலம்தனில்
விஞ்சியவ ளங்களையான் உன்னியே - சொல்ல
ரஞ்சிதமாய்க் கேளடிவிற் பன்னியே
(கா.சி..க.வ.ப.142)
காட்டு : (5) கலப்பு நடை (மும்மை + எழுமை)
திருவுற்றி லகுகங்க வரையிற்பு கழ்மிகுந்து
திகழத்தி னமுறைந்த வாசனை - மிகு
மகிமைச்சு கிர்ததொண்டர் நேசனைப் - பல
தீயபாதக காரராகிய
சூரர்யாவரு மாளவேயொரு
சிகரக்கி ரிபிளந்த வேலனை - உமை
தகராக்கு ழல்கொள்வஞ்சி பாலனை
மருவுற்றி ணர்விரிந்து மதுபக்கு லமுழங்க
மதுமொய்த்தி டுகடம்ப ஆரனை - விக
சிதசித்ர சிகிஉந்து வீரனை - எழில்
மாகநாககு மாரியாகிய
யாதினோடுகி ராதநாயகி
மருவப்பு ளகரும்பு தோளனை - எனை
அருமைப்ப ணிகொளுந்த யாளனை
(கா.சி.க.வ.ப.3131)
இதில் ‘தீயபாதக’ என்றும் ‘மாகநாககு’ என்றும் வரும் முடுகியற் சீர்கள் நான்கும் எழுமை நடையிலும் ஏனைய சீர்கள் ஐம்மை நடையிலும் நடப்பதைப் பாடியுணர்க.48. வழிநடைச் சிந்து
வழிநடைச் செல்லும் வருத்தம் மறைய
ஆற்றிடைக் காட்சிகள் அணங்குக் குணர்த்தி
பாடும் சிந்துகள் பல்வகைச் சந்தமும்
அடியும் நடையும் அமைவுறப் பெற்று
வழிநடைச் சிந்தென வகுக்கப் படுமேகருத்து : வழிநடையாகச் செல்லும்போது ஏற்படும் வருத்தம் மறைவதற்காகத் தாம் நடந்து செல்லும் வழியிடையில் உள்ள அழகுக்காட்சிகளைத் தன்னுடன் நடந்துவரும் மகளிர்க்கு எடுத்துத் தெரிவித்துப் பாடும் சிந்துப் பாடல்கள் வழிநடைச் சிந்து என்று பாகுபாடு செய்யப்படும். அவ்வழிநடைச் சிந்துகள் பலவகைச் சந்தமுடையனவாகவும், பலவகை அடிகளைய்;உடையனவாகவும் பலவகை நடையினை உடையனவாகவும் அமைந்திருக்கும்.
காட்டு :
கோபுர மீதுபுறாச் சோடி - நமைக்
கூப்பிடுதே வாஎனக்கு மரனைக் கொண்டாடி
நூபுர ஓதையளித் தோடிக் - கதிர்
நூலெனவி டந்தொறும் நு டங்கிடை நீ வாடி
(வெ.கோ.வ.சி.தொடை.ப்.271)
வழிநடைச்சிந்துகள் ஓரடிக் கண்ணியாகவும் வரும். பின்வரும் வழிநடைச் சிந்தின் ஓரடி 11 ஏகதாள வட்டணைகளில் அடங்கும் 44 சீர்களைப் பெற்றுள்ளது. அப்பாடலின் பிற்பகுதி ஒருவகைச் சந்த அமைப்பில் உள்ளதையும், எல்லா அரையடிகளுமே பகர மோனை ஒன்றனாலேயே தொடுக்கப் பெற்றுள்ளதையும் காண்க.
காட்டு : பின் சந்தக் குழுப்பு
தந்தானன தந்தானன தந்தானன தந்தானன
தத்தத்தன தனதந்தன தத்தத்தன தனதந்தன
தனதத்தன தந்தத்தன தனதத்தன தந்தத்தன
தனதத்தன தனதத்தன தனதத்தன தனதத்தன
பத்மினிசாதிப் பெண்ணே மானே - பாம்பன்
பார்க்கவ ருவாய் நீ தானே - அங்குப்
பாலசுப் ரமண்யர் ஆலயத் தில்விதிப்
பான்மையில் கும்பாபி டேகம் - அதைப்
பார்ப்பவர்க் கெய்தும்வை போகம் - குறப்
பாவையில்ன் மீதினில் மோகம் - கொண்ட
பண்பினால் மேவும்நல் யோகம் - மலர்
பைங்காவியை யுங்காலனை யுஞ்சேலினை யும்பார்வைகொள்
பச்சைகொடி இடையும்பிடி இச்சித்திடு நடையுங்கொடு
பதுமத்தின ரும்புக்கலர் தருபொற்றன மிஞ்சப்பெறு
பனசக்கனி ரசமொத்துறு வசனத்திலென் மனசைக்கவர் (பத்மினி)(எம்.கே.எம்.அப்துல் காதிறு இராவுத்தர் பாம்பன் பால சுப்ரமணிய கோயில் வழிநடைச் சிந்து)
49. தென்பாங்கு
தண்டமிழ் மண்ணின் தனிமணம் தன்னை
ஒண்டமிழ் சிந்தின் ஓசையிற் காட்டி
அடிவகை பலவொடும் இயைபொடும் அமைவது
தென்பாங் கென்ப செந்தமிழ் வல்லோர்.கருத்து : தண்டமிழ் நாட்டு மண்ணின் தனித்த மணத்தைச் சிறப்புற தமிழ்ச் சிந்துப் பாடலின் ஓசையில் காட்டி பலவகைப்பட்ட அடிகளிலும் இயைபுத் தொடை அமையப் பாடுவது தென்பாங்கு என்று செந்தமிழ் வல்லோர் சொல்வார்கள்.
விளக்கம் : தென்தமிழ் நாட்டின் மணம் வீசும் பாடல் என்ற பொருளில் ஒருவகை அமைப்புடைய நாட்டுப்புறப் பாடல்களுக்குத் தென்பாங்கு என்ற பெயர் ஏற்பட்டிருக்கின்றது. இது தெம்மாங்கு என மருவி வழங்கப்படுகிறது.
தென்பாங்குப் பாடல் பலவகை அடிகளைக் கொண்டிருக்கும்; பலவகைச் சீர்களைக் கொண்டு பலவகைத்தாள நடைகளிலும் வரும்; இயைபுத் தொடையே மிகுதியாகக் கொண்டிருக்கும்..
காட்டு : (1)
மதுரைக்கு நேர்கிழக்கு மாரிமம்மன் தெப்பக்குளம்
மஞ்சள்நீர் ராடையிலே தங்கந்தில்லாலே - நானும்
குஞ்சரத்தைத் தோற்றேனடி பொன்னுந்ந்தில்லாலே
(தங்கந்தில்லாலே.தெம்.தொடை.ப.276)காட்டு : (2)
கொலைசெய்யப் போறே னென்று
கோதையிடம் கூறிடவே
மலைபோல நின்றாள் சிறு
மங்கை இளம் பாலாம்பாளும்
என்ன செய்தானய்யா - அதை
எடுத்துரைப்பாய் மெய்யா.
(சித்தையன் கொலைச் சிந்து.தொடை.ப.278)
50. பலவாறாக வரும் சிந்துகள்
பாங்கிமார், கிள்ளை, பாப்பா, தங்கம்
கண்ணாட்டி, குள்ளத் தாரா, கலைவளர்
வெண்ணிலா முதலிய விளிகொள் சிந்தும்,
தேவடி, முருகன், பூவடி, உடுக்கை,
கலியுகம், ஓடம், கள்ளுக் கடையே,
புறாவே, சேவல், புகைவண்டி, சாவு,
கோலாட் டெனப்பெயர் குறித்த சிந்தும்,
ஆத்திச்சூடி, திருப்புகழ் அனைய
நூற்பெயர் சார்த்தி நுவன்ற சிந்தும்
‘தன்னானே’ எனத் ‘தில்லாலே’ என
‘ஏலேலோ’ என ‘ஐலசா’ என்ன
ஒலிகளின் குறிப்பை உடைய சிந்தும்,
இன்ன பிறபெயர் துன்னிய சிந்தும்,
கண்ணி, சிந்து, பண்ணார் பாட்டே
என்னும் பெயர்களை ஏற்றுமுன் சொன்ன
பொதுவிலக் கணங்கள் பொருந்திப் பிறந்தே,
அடியும் தொடையும் நடையும் வடிவும்
தனிச்சொல் வரவும் இனிதியல் முடுகும்
இன்னவாறென்னும் யாபுறவின்றிக்
கூறுபாவலர் குறிப்பில் அமைந்து
வழங்கிடும் என்ப மரபறிந் தோரே.கருத்து : பாங்கிமாரே என்று முடியும் சிந்து முதல் ‘ஐலசா’ என்னும் ஒலிகளின் குறிப்பை உடைய சிந்து ஈறாகச் சொல்லப்பட்ட சிந்துகளும், இப்படிப்பட்ட வேறுபிற பெயர்களைத் தாங்கி வரும் சிந்துகளும் பொதுவாக சிந்தி வகையைச் சார்ந்தன என்றாலும் அவற்றிற் சில கண்ணி என்ற பெயரை ஏற்றும், வேறு சில சிந்து என்ற பெயரை ஏற்று, மற்றும் சில பாட்டு என்ற பெயரை ஏற்றும் வரும். இவ்வாறு மூவகைப் பெயர்களை ஏற்று வரினும் அவை அனைத்தும் முன்பு சொல்லப்பட்ட சிந்துப் பாடலுக்குரிய பொதுவிலக்கணங்கள் பொருந்தியிருக்கும். ஆனால் அவற்றின் அடியும், தொடையும், நடையும், வடிவமும், தனிச்சொல் பெறுதலும், முடுகியல் அடி அமைதலும், இன்னவாறு தான் என்று சொல்லும் கட்டுப்பாடு இன்றி பாடுபவர் குறிப்பிற்கு ஏற்ப அமைந்து வழங்கும்.
விளக்கம் : வேறு பெயர்களைத் தாங்கி வரும் சிந்துகள், வினோதச் சிந்து, சரித்திரச் சிந்து, காட்சிச் சிந்து, சதிமோசச் சிந்து, சமுதாயச் சிந்து, ஓரடிச் சிந்து, சிறப்புச் சிந்து, வைபவச் சிந்து, ஈட்டிக்காரனிடத்துக் கடன்பட்டு ஓட்டம் பிடிக்கும் சிந்து முதலியனவாகும்.
நூற்பெயரைச் சார்ந்து வரும் சிந்துகள் : ஆத்திச் சூடி சிந்து, திருப்புகழ்ச் சிந்து முதலியன.
ஒலிகளின் குறிப்பையுடைய சிந்துகள் : தன்னானே சிந்து, தில்லாலே சிந்து, ஏலேலோ சிந்து, ஐலசா சிந்து முதலியன.
இவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகைப் பாடல் அமைப்பைக் கொண்டது என்று சொல்ல முடியாது. தனி அமைப்புகளைப் பெற்றுள்ள காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, கும்மி, வளையற் சிந்து, இலாவணி, ஆனந்தக் களிப்பு முதலிய சில வகைகளே மேற்கண்ட நூல்களில் வருகின்றன. புதிய வடிவங்களும் அவ்வப்போது உண்டாக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் பெரும்பாலானவை பொருளால் மட்டுமே வேறுபடுகின்றன.
இவற்றைப் படிப்போர், அச்சிட்டோர் ஆகியோரில் பெரும்பாலோர் முறையாகத் தமிழும், இசையும் கற்றவர் என்று கூறமுடியாது. இவர்களில் பலர் ஒருவரைப் பார்த்து மற்றவர் எழுதும் மெட்டாகவே சிந்துப் பாடல்களை இயற்றி வந்துள்ளனர்.
பலவாறாக வரும் சிந்துப் பாடல்கள்
காட்டு : (1) பாங்கிமார்க் கண்ணி
அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமாரே - மிக
ஆட்டம் கண்டு நாட்டம் கொண்டேன் பாங்கிமாரே
இன்பவடி வாய்ச்சபையில் பாங்கிமாரே - நடம்
இட்டவர்மேல் இட்டம் வைத்தேன் பாங்கிமாரே
(திருவ.பக்.524)காட்டு : (2) கிளிக்கண்ணி
வள்ளி கணவன்பேரை வழிப்போக்கர் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி - கிளியே
ஊனும் உருகுதடி
(சிவசுப்ரமண்யர் பேரில் கிளிக்கண்ணி.சில்லறைக் கோவை.ப.4)காட்டு : (3) பாப்பா பாட்டு
ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!
(பா.கவி.ப.175)காட்டு : (4) தங்கச் சிந்து
ஆடுவதும் பாடுவதும் ஆளடிமை செய்வதுவும்
ஓடுவதுவும் தேடுவதும் - தங்கமே
ஒரு சாண்வயிற்றுக்கடி ஞானத் தங்கமே.
(மெய்ஞ்ஞானத்தங்கம்.தொடை.ப.274)காட்டு : (5) கண்ணாட்டிச் சிந்து
பாதமிரண் டில்சதங்கை கீதம்பாடுதே - கண்ணாட்டி கீதம்பாடுதே
சீதமதி முகத்தை கண்டென் சித்தம்வாடுதே - கண்ணாட்டி சித்தம்வாடுதே
(செங்கல்வராயன் கண்ணாட்டிச் சிந்து.ப.2)காட்டு : (6) குள்ளத்தாராச் சிந்து
கட்டிலுண்டு மெத்தையுண்டு குள்ளத்தாரா - நாம்
கலந்துசு கிக்கலாமே குள்ளத்தாரா.
(குள்ளதாராச் சிந்து. ப.2)
காட்டு : (7) வெண்ணிலாக் கண்ணி
தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாமே - ஒரு
தந்திரம்நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே
(திருவ.465)
காட்டு : (8) முருகர் சிந்து
திருத்தணி முருகா திருமால் மருகா
வருத்தம்செய் யாமலிப் போ - முருகா
(திருப்போரூர் முருகர் சிந்து)காட்டு : (9) உடுக்கைப் பாட்டு
சுட்ட நல்ல சுட்ட நல்ல கருவாடு - கருவாடு
தொட்டி ரம்ப தொட்டி ரம்ப சாராயம் - சாராயம்
வறுத்த நல்ல வறுத்த நல்ல கருவாடு - கருவாடு
வட்டி ரம்ப வட்டி ரம்ப சாராயம் - சாராயம்
(தொடை.ப.291)காட்டு : (10) கள்ளுக்கடை சிந்து
(செஞ்சி ஏகாம்பரம் கள்ளுக்கடைச் சிந்து என்னும் குடியர் சிந்து.1923.ப.5)
கள்ளைய
றந்திடடா
குடிகாரப்பா
வி
காலையில்கு
டியாதேடா
சதிகாரப்பா
வி
பிள்ளைக்குட்டி
பெத்தாயோடா
சண்டாளப்பா
வி
பின்னும்புத்தி
வல்லையேடா
குடிகாரப்ப்பா
வி
காட்டு : (11) புறாப் பாட்டு
இங்குவந்த என்புறாவை எடுத்திருந்தால் கொடுத்திடம்மா
அங்குசெல்ல வேணும்விளை யாடவேணு மேசின்னம்மா
அன்னையே என்னையே
அனுப்பத் தடை செய்யாதம்மா.
(செஞ்சி ஏகாம்பரம் புறாப்பாட்டு முதற்பாகம்: 1923.ப.3)காட்டு : (12) சேவல் பாட்டு
அஞ்சுவர்ண நிறமுடைய அன்னநடைச் சேவல்
அன்னநடைச் சாவல்தன்னை
அடக்கிக்கொண்டவ ளாரோ?
(சாவல்பாட்டு: 1923.ப.4)
காட்டு : (13) கொலைச் சிந்து
கொலை செய்யப் போறே னென்று
கோதை யிடம் கூறிடவே
மலைபோல நின்றாள் சிறு
மங்கை இளம் பாலாம் பாளும்
என்ன செய்தான் ஐயா - அதை
எடுத்துரைப்பாய் மெய்யா!
(சித்தையன் கொலைச் சிந்து. தொடை. பக். 278)
காட்டு : (14) தன்னானே சந்தம்
“தன்னானே தன்னானே தானதன்னே” என்ற சந்தத்தில் பாடபடுவதால் இவ்வகைப் பெயர் பெற்றது.
இஞ்சிக்கி ணறும்இ டியக்கண் டேன்
எடுமிச்சைத் தோப்பும்அ ழியக்கண் டேன்
மஞ்சள்கி ணறும்வ றளக்கண் டேன்
மல்லிகைத் தோப்பும்அ ழியக்கண் டேன்
(கட்ட.சி. தொ. ப.285)
காட்டு : (15) ஏலப்பாட்டு
தலத்தின்உ யர்சீரகம் பெருங்காம் சுக்கு
சதகுப்பை கொத்தமல்லி குங்கிலியம் ஏலம்
உலப்பரி யகடுகு மிளகொடு லவங்கப் பட்டை
ஓங்கு வால்மிளகு பச்சைக்கருப் பூரம் கோட்டம்
விலக்கரிய அதிமதுரம் விளங்குமலைப் பச்சை
மிக்ககுங் குமப்பூவோ டரிதாரம் குக்கில்
தலத்தமை யும்சாதிக்காய் ஆதிபல கொண்டு
சஞ்சரித்துத் துறைவந்து சேர்ந்ததுகாண் கப்பல்
ஏலேலோ ஏல ஏலேலோ
(கடற்பாட்டு. தொடை. மேற்கோள்: ப.289)
காட்டு : (16) தில்லாலே சிந்து
மலையோரம் கிணறு வெட்டி - தில்லாலங்கிடிலேலம்
மானுக் கொம்பு ஏத்தம்வச்சி - தில்லாலங்கிடிலேலம் (சோமலெ.1981.168)
51. நூலுக்குப் புறனடை
கூறிய வல்ல வேறுபிற தோன்றினும்
கூறிய நெறியில் தேறினர் கொளலேகருத்து : இந்நூலுள் கூறியவை அல்லாதனவாக வேறுவகைச் சிந்துப் பாடல்கள் காணப்பட்டாலும் அவற்றையும் இச்சிந்துப் பாடல் இலக்கண நெறியின் வழி ஆராய்ந்து ஒருபுடை ஒத்தனவற்றை அமைத்துக் கொள்க.
விளக்கம் : ‘இன்னவாறு என்னும் யாப்புறவின்றிக் கூறு பாவலர் குறிப்பில் அமைந்து வழங்கிடும்’ என்று முன்னர் கூறினார். (நூ.50) ஆனதாலும், கால ஓட்டத்தில் புதிய புதிய சிந்துப் பாடல்கள், பாடுகின்றவர் விரும்பும் வடிவில் தோன்றுதல் தவிர்க்க முடியாதது ஆதலாலும், ‘புதியன புகுதலும் வழுவில’ என்று நன்னூலார் கூறியுள்ளமையாலும் புதியனவாய்த் தோன்றும் சிந்துகளையும் இந்நூலின் இலக்கண மரபின் வழி ஆராய்ந்து அமைவுடையவற்றைக் கொள்க என்று கூறினார்.
வேறு வகையாக வரும் சிந்துப்பாடல்கள்
காட்டு : (1)
வினா
நூறாயி
ரக்கணக்
காகச்செ
லவிட்டு
நூற்றுக்க
ணக்காய்த்தி
ரைப்படம்
ஆக்கினர்
மாறான
எண்ணத்தை
மட்டக்க
தைகளை
மக்களுக்
கீந்தனர்
அண்ணே
- அது
தக்கதுவோ
புகல்
அண்ணே.
விடை
கூறும்தொ
கைக்காகக்
கூட்டுத்
தொழில்வைப்பர்
கூட்டுத்தொ
ழில்முறை
நாட்டுக்கு
நல்லது
ஏறாக்க
ருத்தைஇங்
கில்லாக்க
தைகளை
ஏற்றின
ரோஅவர்
தம்பி?
- இது
மாற்றாதி
ருக்குமோ
தம்பி?
(பா.தா.க. 2ஆம் தொகுதி. ப. 151)
காட்டு : (2)
செங்கதிர்
சென்றது;
செவ்வல்லி
பூத்தது;
திங்களும்
வந்தது
பாரடி!
- உன்
செவ்விதழைச்
சற்று
நீட்டடி!
(வாணிதாசன், பாட்டுப் பிறக்குமடா. ப. 56)
காட்டு : (3)
ஆற்றல்மி
குந்தவர்
ஆட்சிபு
ரிந்தவர்
ஆஸ்திக
நீதிபதி
- அவரே
பாஸ்கர
சேதுபதி
- புலவர்
போற்றும்தொல்
காப்பியப்
புத்தகம்
போன்றவர்
போனபின்
ஏது
கதி?
(சுரதா. 1977.210)
காட்டு : (4)
சோற்றைப்பி
டித்துத்தி
ரட்டிய
பிண்டம்போல்
பாட்டினைச்
செய்வதுண்டோ?
- புயல்
காற்றைப்பி
டித்துக்க
டலை
அடைத்துக்
கனலை
எழுப்பிட
டா!
(ம.இ.லே. தங்கப்பா. 1983.109)
காட்டு : (5)
உன்பாடல்
நான்பாடி
விழிமூட
வா?
- உன்
ஒருபாடல்
நான்கேட்டு
வழிதேட
வா?
கண்போன்ற
அரிதான
கவிமன்ன
வா
- உன்
கற்பூர
மொழிகேட்டு
கதைசொல்ல
வா
(பாரதிவசந்தன், சின்னப்பறவையின் வண்ணச் சிறகுகள். ப. 61)
பின் இணைப்பு
“ஆறுமுக வடிவேலவனே”
ஆதிதாளம் : மும்மை நடை
ஆ
று
மு
க
வ
டி
வே
ல
வ
னே
க
லி
யா
ண
மும்
செய்
ய
வில்
லை
.
.
.
சற்
றும்
அச்
ச
மில்
லா
ம
லே
கைச்
ச
ர
சத்
துக்
க
ழைக்
கி
றா
யென்
ன
தொல்
லை
.
.
.
.
.
மீ
றி
ய
கா
ம
மில்
லா
த
பெண்
ணோ
டே
வி
ளம்
பா
தே
வீண்
பேச்
.
சு
.
.
.
சும்
மா
வெள்
ளைத்
த
ன
மா
கத்
துள்
ளு
கி
றாய்
நெஞ்
சில்
வெட்
க
மெங்
கே
போச்
.
சு
.
.
.
.
.
மேட்
டி
மை
என்
னி
டம்
காட்
டு
கி
றா
யி
னி
வே
றில்
லை
யோ
சோ
.
லி
.
.
.
இ
தை
வீட்
டி
லுள்
ளோர்
கொஞ்
சம்
கேட்
டு
விட்
டா
ல
து
மெத்
த
மெத
தக்
கே
.
லி
.
.
.
.
.
தாட்
டி
கம்
சேர்
க
ழு
கா
ச
ல
மா
ந
கர்
தங்
கு
மு
ரு
கோ
.
னே
.
.
.
இந்த்
ர
சா
லத்
தி
னா
லென்
னைக்
கா
லைப்
பி
டித்
தா
லும்
சம்
ம
தி
யேன்
நா
.
னே
.
.
.
.
.
‘தெள்ளு தமிழுக்கு’
ஆதிதாளம் நான்மை நடை
தெள்
ளு
த
மி
ழுக்
கு
த
வு
சீ
.
லன்
.
.
.
து
தி
செப்
பு
மண்
ணா
ம
லைக்
க
னு
கூ
.
லன்
.
.
.
வ
ளர்
செ
ழி
யர்
பு
கழ்
வி
ளைத்
த
க
ழு
கு
ம
லை
வ
ளத்
தைத்
தே
.
னே
.
.
.
சொல்
லு
வே
.னே
.
.
.
.
.
வெள்
ளி
ம
லை
ஒத்
த
ப
ல
மே
.
டை
.
.
.
மு
டி
மீ
தி
னி
லே
கட்
டு
கொ
டி
யா
.
டை
.
.
.
அந்
த
வெய்
ய
வ
ன
டத்
தி
வ
ரு
துய்
ய
வி
ர
தப்
ப
ரி
யும்
வி
ல
கும்
.
.
.
ப
டி
இ
ல
கும்
.
.
.
.
.
வீ
தி
தொ
று
மா
தி
ம
றை
வே
.
தம்
.
.
.
சி
வ
வே
தி
யர்
க
ளோ
து
சா
ம
கீ
.
தம்
.
.
.
அ
தை
மின்
னு
ம
லர்க்
கா
வ
த
னிற்
றுன்
னு
ம
டப்
பூ
வை
யு
டல்
விள்
.
ளும்
.
.
.
கிள்
ளைப்
புள்
.
ளும்
.
.
.
.
.
சீ
த
ள
மு
கிற்
கு
வ
மை
கூ
.
றும்
.
.
.
நி
றச்
சிந்
து
ரங்
கள்
சிந்
து
ம
தத்
தா
.
றும்
.
.
.
உ
யிர்ச்
சித்
தி
ர
நி
கர்த்
த
மின்
னார்
குத்
து
மு
லைக்
குங்
கு
மச்
செஞ்
சே
.
றும்
.
.
.
கா
த
நா
.
றும்
.
.
.
.
.
கண்ணாயிரம் படைத்த
சதுசிர இன ஏகதாளம்: நான்மை நடை
கண்
ணா
.
யி
ரம்
ப
டைத்
த
விண்
ணூ
.
ரி
டந்
த
ரித்
த
கன
வயி
ரப்
படை
யவன்
மக
ளைப்
புணர்
கர்த்
த
னே
.
.
.
தி
ருக்
கழு
கும
லைப்
பதி
யனு
தின
முற்
றிடு
சுத்
த
னே
.
.
.
.
.
அண்
ணா
.
ம
லைக்
கி
டர்
கள்
நண்
ணா
.
தொ
ழித்
து
மி
க
அக
மகி
ழத்
தன
தரு
ளைய
ளித்
திடு
மை
ய
னே
.
.
.
தி
சை
அர
வமு
முட்
குற
மயி
லைந
டத்
திய
துய்
ய
னே
.
.
.
.
.
மின்
னோ
.
ம
லர்க்
க
ம
லப்
பொன்
னோ
.
எ
னப்
பு
க
ல
விக
சித
ரத்
தின
நகை
கட
ரித்
தொளிர்
மெய்
யி
னாள்
.
.
.
க
திர்
விர
விய
சித்
திர
வளை
யல
டுக்
கிய
கை
யி
னாள்
.
.
.
.
.
எந்
நே
.
ர
மு
ம
னத்
தி
லுன்
மீ
.
தில்
மை
யல்
கொண்
டு
எழு
திய
சித்
திரம்
என
மவு
னத்
தினி
லிருக்
கி
றாள்
.
.
.
வள்
ளத்
திடு
கிற
புத்
தமு
தினை
யும்வெ
றுத்
தரு
வருக்
கி
றாள்
.
.
.
.
.
சீர்வளர்
ஆதிதாளம்: ஐம்மை நடை
சீர்
.
வ
ளர்
ப
சுந்
.
தோ
.
கை
ம
யி
லான்
.
.
.
.
வள்
.
ளி
செவ்
.
வி
த
ழ
லா
.
தி
னி
ய
தெள்
.
ள
மு
து
ம
யி
லான்
.
.
போர்
.
வ
ளர்
த
டங்
.
கை
யு
று
ம
யி
லான்
.
.
.
.
வி
ம
ல
பொன்
.
ன
டி
யை
இன்
.
ன
ல
ற
உன்
.
னு
தல்
செய்
வா
.
மே
.
.
ஒ
ரு
தந்
.
த
மா
.
தங்
.
க
மு
கத்
தான்
.
.
.
.
ம
கி
ழ
உத்
.
த
ம
க
னிட்
.
ட
னெ
ன
உற்
.
றி
டு
ம
கத்
.
தான்
.
.
வ
ரு
தந்
.
த
மா
.
தங்
.
க
மு
கத்
தான்
.
.
.
.
எ
வ
ரும்
வாழ்த்
.
து
கு
க
நா
.
ய
க
னை
ஏத்
.
து
தல்
செய்
வா
.
மே
.
.
‘பொன்னுலவு’
ஆதிதாளம்: எழுமை நடை
பொன்
.
னு
ல
.
வு
.
சென்
.
னி
கு
.
ள
.
நன்
.
ன
க
.
ரண்
.
ணா
.
ம
லை
.
தன்
.
புந்
.
தி
யில்
.
ம
.
கிழ்ந்
.
து
நி
.
தம்
.
நின்
.
ற
வன்
.
.
.
.
.
.
முந்
.
தி
.
வெந்
.
தி
ற
.
ல
.
ரக்
.
கர்
க
.
ளை
.
வென்
.
ற
வன்
.
.
.
.
.
.
ம
.
யில்
.
போ
.
ல
ஏ
.
ன
லின்
மீ
.
து
லா
.
வு
கி
ரா
.
த
மா
.
து
மு
னே
.
கி
யே
.
ய
டி
பூ
.
வை
யே
.
உ
.
ன
து
.
தஞ்
.
ச
.
மென்
.
ற
வன்
.
.
.
.
.
.
ஈ
.
யும்
.
மா
.
வை
யே
.
யி
.
யி
து
.
மென்
.
று
.
தின்
.
ற
வன்
.
.
.
.
.
.
.
.
.
.
மின்
.
னு
ல
.
வு
.
சொன்
.
ன
மு
.
டி
.
சென்
.
னி
ய
.
ணி
.
விண்
.
ண
வர்
.
தே
வேந்
.
தி
ர
.
னும்
.
சித்
.
தர்
க
.
ளும்
.
துன்
.
னி
யே
.
.
.
.
.
.
க
.
தி
.
வேண்
.
டி
யே
.
ய
.
கத்
.
தி
லன்
.
பு
.
மன்
.
னி
யே
.
.
.
.
.
.
ப
.
ணி
வே
.
ல
வன்
.
கி
ரு
பா
.
க
ரன்
.
கு
கன்
மே
.
வி
டுங்
.
க
ழு
கா
.
ச
லந்
.
த
னில்
விஞ்
.
சி
ய
.
வ
.
ளங்
.
க
ளை
.
யா
.
னுன்
.
னி
யே
.
.
.
.
.
.
சொல்
.
ல
.
ரஞ்
.
சி
த
.
மாய்க்
.
கே
.
ள
டி
.
விற்
.
பன்
.
னி
யே
.
.
.
.
.
.
.
.
.
.
மூ
.
சு
வண்
.
டு
.
வா
.
ச
மண்
.
டு
.
கா
.
வில்
மொண்
.
டு
.
தே
.
னை
யுண்
.
டு
.
மோ
.
க
ன
.
மு
.
கா
.
ரி
ரா
.
கம்
.
பா
.
டு
மே
.
.
.
.
.
.
மை
.
ய
.
லா
.
க
வே
.
பெ
.
டை
.
யு
ட
.
னே
.
கூ
.
டு
மே
.
.
.
.
.
.
அ
.
லை
.
மே
.
து
வா
.
ரி
தி
நீ
.
ரை
வா
.
ரி
விண்
மீ
.
து
லா
.
வி
ய
சீ
.
த
ளா
.
க
ர
மு
கில்
பெ
ருஞ்
.
சி
.
க
ர
.
முற்
.
று
.
மூ
.
டு
மே
.
.
.
.
.
.
கண்
.
டு
.
ம
யி
லி
னஞ்
.
சி
.
ற
கை
.
வி
.
ரித்
.
தா
.
டு
மே
.
.
.
.
.
.
.
.
.
.
தே
.
சு
கொண்
.
ட
.
பா
.
ர
தந்
.
த
.
வீ
.
ர
தும்
.
பி
.
ரா
.
சி
யண்
.
டர்
.
தே
.
வ
தா
.
ரு
.
வைக்
.
க
ரத்
.
தில்
.
பி
டிக்
கு
மே
.
.
.
.
.
.
சுற்
.
றும்
.
மே
.
வி
ய
.
கி
.
ளை
.
யை
வ
.
ளைத்
.
தொ
டிக்
கு
மே
.
.
.
.
.
.
ஒ
.
ளிர்
.
சே
.
ய
சந்
.
தி
ர
னோ
.
டு
ரிஞ்
.
சு
ப
லா
.
ம
ரங்
.
க
ளி
லே
.
நெ
ருங்
.
கி
ய
தீங்
.
க
னி
.
ம
.
து
ர
.
சத்
.
தை
.
வ
டிக்
கு
மே
.
.
.
.
.
.
மந்
.
தி
.
பாங்
.
கி
னின்
.
ற
.
த
னை
.
யள்
.
ளிக்
.
கு
டிக்
கு
மே
.
.
.
.
.
.
.
.
.
.