நீராழிவண்ணனைப்பாலாழிநாதனைநின்மலனைச் சீராழியங்கைத் திருமகள்கேள்வனைத்தெய்வப்புள்ளூர் கூராழிமாயனைமாலலங்காரனைக்கொற்றவெய்யோ னோராழித்தேர்மறைந்தானையெஞ்ஞான்றுமுரைநெஞ்சமே. | 1 |
உரைமாற்றமுண்டென்பொறியைந்துமுன்னிடத்தன்றியுண்ணு மிரைமாற்றவேண்டுமிதுவேயென்விண்ணப்பமென்னப்பனே யுரைமாற்றளவற்றபொன்னுடுத்தாய்வில்லெடுத்திலங்கை வரைமாற்றலரைச்செற்றாயழகாகருமாணிக்கமே. | 2 |
மாணிக்கனகம்புரைமேனிமாலுக்குவார்சடையோன் பாணிக்கனகம்பலியொழித்தானுக்குப்பச்சைத்துழா யாணிக்கனகமுடியலங்காரனுக்குக்கண்டமெல்லாம் பேணிக்கனகனுக்குப்பித்தரானவர்பித்தரன்றே. | 3 |
பித்தரும்பாநின்றநெஞ்சனைவஞ்சனைப்பேருலகோர் கைத்தரும்பாவியெனுங்கடையேனைக்கடைக்கணியாய் முத்தரும்பாருந்தொழுமழகாவண்டுமூசுந்துழாய்ப் புத்தரும்பார்முடியாயடியாரைப்புரப்பவனே. | 4 |
புரந்தரனாமெனப்பூபதியாகிப்புகர்முகமா துரந்தரசாளிலென்னல்குரவாகிலென்றொல்புவிக்கு வரந்தரமாலிருஞ்சோலைநின்றார்க்கென்மனத்தினுள்ளே நிரந்தரமாயலங்காரர்க்கிங்காட்டப்பட்டுநின்றபின்னே. | 5 |
நின்றபிராணன்கழலுமுன்னே நெஞ்சமே நினையாய் சென்றபிராயம்வம்பேசென்றேதாற்றிருமங்கைகொங்கை துன்றபிராமனைசசுந்தரத்தோளனைத்தோளின்மல்லைக் கொன்றபிரானையடைந்தடியாரொடுங்கூடுகைக்கே. | 6 |
கூடுகைக்குஞ்சமரத்தடியேற்குக்கொடியவஞ்சஞ் சாடுகைக்குஞ்சரணந்தரவேண்டுந்தடத்தழுந்தி வாடுகைக்குஞ்சரங்காத்தீர்விண்வாழ்க்கைக்கும்வாளகக்கர் வீடுகைக்குஞ்சரங்கோத்தீர்விடைவெற்பின்வித்தகரே. | 7 |
வித்தகரும்பர்க்கரசானவனும்விதியுங்கங்கை மத்தகரும்பரவும்மலங்காரர்மழைகொண்டகா ரொத்தகரும்பரஞ்சோதியர்நாமமுரைத்தன்னைமீ ரித்தகரும்பரதெய்வமுங்கூத்தும்விட்டேத்துமினே. | 8 |
ஏத்துமின்பத்தியெனாலெட்டெழுத்துமிணையடிக்கே சாத்துமின்பத்திரத்தண்ணந்துழாய்மதிதாங்கிக்கஞ்சம் பூத்துமின்பத்திசெய்யும்பச்சைமாமுகில்போலழகர் காத்துமின்பத்திலிருத்தியும்வைப்பர்கருணைசெய்தே. | 9 |
செய்தவராகவருந்தியுந்தீர்த்தத்துறைபடிந்துங் கைதவராகமங்கற்றுமென்னாங்கடற்பார்மருப்பிற் பெய்தவராகனைமாலலங்காரனைப்பேரிலங்கை யெய்தவராகவவென்றேத்தநீங்குமிருவினையே. | 10 |
வினைக்குமருந்தளிக்கும்பிணிமூப்புக்கும்வீகின்றவே தனைக்குமருந்தன்னதாளழகாசெய்யதாமரையங் கனைக்குமருந்தமுதேயருளாய்நின்னைக்காதலித்து நினைக்குமருந்ததிதன்னுயிர்வாழ்க்கைநிலைபெறவே. | 11 |
நிலையாமையானவுடலுமுயிருநினைவுந்தம்மிற் கலையாமையானங்கலக்குமுன்னேகங்கைவைத்தசடைத் தலையாமையானனன்றாமரையான்றொழுந்தாளழக னலையாமையானவன்மாலிருஞ்சோலையடைநெஞ்சமே. | 12 |
நெஞ்சமுருக்குமுயிருக்குந்தொல்லைநீள்வினையின் வஞ்சமுருக்கும்பவமுருக்கும்வண்டுழாயழகர் கஞ்சமுருக்குமலர்வாய்த்திருநண்பர்கஞ்சனுக்கு நஞ்சமுருக்குவளையாழியன்னவர்நாமங்களே. | 13 |
நாமங்களாவிநழுவுந்தனையுநவின்றவரைத் தாமங்களாவிமனத்துள்வைப்பார்தண்டலையினகிற் றூமங்களாவிமணநாறுமாலிருஞ்சோலையன்பர் சேமங்களாவின்களியனையார்பதஞ்சேருவரே. | 14 |
சேராதகாதநரேகேழ்தலைமுறைசேர்ந்தவர்க்கும் வாராதகாதம்வசைபிணிபாவமறிகடன்முன் றூராதகாதங்கடூர்த்தானைமாலிருஞ்சோலையிற்போ யாராதகாதலுடன்பணிவீரென்னழகனையே. | 15 |
அழக்கன்றியகருங்கண்ணிக்குக்கண்ணியளித்திலரேல் வழக்கன்றிமுன்கொண்டவால்வளைகேளுமறுத்ததுண்டேற் குழக்கன்றின்பின்குழலூதலங்காரர்க்குக்கோதைநல்லீர் சழக்கன்றில்வாய்பிளந்தாலுய்யலாமென்றுசாற்றுமினே. | 16 |
சாற்றுக்கரும்பனைக்கூற்றென்னுமாசைத்தமிழ்மலயக் காற்றுகரும்பனையுங்கண்படாளலங்காரற்கண்ட ரேற்றுக்கரும்பனையக்கொங்கையாள்கொண்டவின்னலுக்கு மாற்றுக்கரும்பனையல்லாதுவேறுமருந்தில்லையே. | 17 |
மருந்துவந்தார்தொழுமாலிருஞ்சோலைமலையழக ரருந்துவந்தாரணியென்றயின்றாரடலாயிரவாய் பொருந்துவந்தார்பணிப்பாயார்விதுரன்புதுமனையில் விருந்துவந்தாரடியார்க்கில்லைநோயும்வெறுமையுமே. | 18 |
வெறுத்தவரைக்கஞ்சனைச்செற்றுளார்விடைவெற்பற்வெங்கட் கறுத்தவரைக்கஞ்சலென்றுவந்தார்கனகாம்பரத்தைப் பொறுத்தவரைக்கஞ்சனமேனிக்காவிபுலர்ந்துருகிச் சிறுத்தவரைக்கஞ்சங்கூப்புமென்பேதைக்கென்செய்புவதே. | 19 |
செப்போதனஞ்செழுந்துவபோசெவ்வாயென்றுசேயிழையார்க் கொப்போதனஞ்சுருகித்திரிவீர்கனலூதைமண்வி ணப்போதனமென்றமுதுசெய்தாரலங்காரர்பொற்றா ளெப்போதனந்தறவிர்ந்தேத்தநீங்களிருக்கின்றதே. | 20 |
இருக்கந்தரத்தனைவோர்களுமோதியிடபகிரி நெருக்கந்தரத்தனையேத்தநின்றானைநிறத்ததுப்பி னுருக்கந்தரத்தனைத்துன்பொழித்தானையுலகமுண்ட திருக்கந்தரத்தனையல்லாதெண்ணேனொருதெய்வத்தையே. | 21 |
தெய்வம்பலவவர்நூலும்பலவவைதேர்பொழுதிற் பொய்வம்பலவென்றுதோன்றும்புல்லோர்கட்குப்போதநல்லோ ருய்வம்பலனுமவனேயென்றோதியுணர்வர்நெஞ்சே கொய்வம்பலர்சொரியுஞ்சோலைமாமலைக்கொண்டலையே. | 22 |
கொண்டலையாநிற்குமைம்புலக்கோண்மகரங்களினீர்ப் புண்டலையார்பிறவிக்கடன்மூழ்குவருத்தமனைத் தண்டலையார்திருமாலிருஞ்சோலைத்தனிச்சுடரைப் புண்டலையால்வணங்காரணங்கார்வினைபோகவென்றே. | 23 |
என்றுதரங்கலந்தேனற்றைநான்றுதொட்டிற்றைவரை நின்றுதரங்கிக்கின்றேற்கருள்வாய்நெடுங்கான்கடந்து சென்றுதரங்கக்கடறூர்த்திலங்கையிற்றீயரைக் கொன்றுதரங்குவித்தாய்சோலைமலைக்கோவலனே. | 24 |
கோவலன்பார்ப்புடன்கேகயஞ்சூழ்குளிர்சோலைமலைக் காவலன்பாற்கடற்கண்டுயின்மாமலங்காரனென்றே பாவலன்பாற்பணிவாரணிவானவராகிமறை நாவலன்பார்ப்பதிநாதனண்ணாப்பதநண்ணுவரே. | 25 |
நன்னினனாகமுடிமேனடித்தென்னைநாசமறப் பண்ணினனாகமும்பாருமளந்தனபண்டுதம்பி மண்ணினனாகவனிம்போயினவளர்சோலைமலைக் கண்ணினனாகங்கரியான்சிவர்தகழலிணையே. | 26 |
கழலப்புகுந்தவளையறியாரென்கருத்தறியா ரழலப்புகன்றொறுப்பாரன்னைமாரறுகாற்சுரும்பு சுழலப்புனைந்ததுழாய்மார்பர்மாலிருஞ்சோலையென்னார் தழலப்புவரென்றனங்களிலேசந்தனங்களென்றே. | 27 |
தனத்துக்கராவியவேல்விழிக்கேக்கற்றுத்தையாலராற் றினத்துக்கராகித்திரிவார்பலர்சிலர்செங்கமல வனத்துக்கராசலங்காத்தாற்குச்சோலைமலையினின்ற கனத்துக்கராவணையாற்கெம்பிராற்குள்ளங்காதலரே. | 28 |
காதலைப்பத்தினிமேல்வைத்தநீசக்கருநிருதன் மாதலைப்பத்தியைமண்ணிலிட்டாய்நின்னைவாழ்த்தித்தொண்டர்க் கீதலைப்பத்தியைச்செய்வோர்கள்வாழுமிடபவெற்பா தீதலைப்பத்தியங்கித்திரிவேற்கருள்செய்தருளே. | 29 |
அருடருமங்கைவிடாதேத்துமன்பருக்கன்பரெல்லி லிருடருமங்கையெறியாழியாரிசைக்கின்னரருங் கெருடருமங்கையரும்வாழிடபகிரியிற்கல்லா முருடருமங்கையலெய்திலன்றேயலர்முத்தரன்றே. | 30 |
முத்தரன்றேநின்கழலொருகாற்கைமுகிழ்க்கப்பெற்றோர் பித்தரன்றேநினக்கேபித்தராகிற்பிரமன்கங்கை வைத்தரன்றேய்துயர்தீர்த்தாய்நின்சோலைமலைமருவும் பத்தரன்றேபரிவாலென்னையாளும்பரமர்களே. | 31 |
பரந்தாமரைத்திருமாலிருஞ்சோலைப்பரமரைக்கால் கரந்தாமரையன்னகார்நிறத்தாரைக்கடல்கடக்குஞ் சரந்தாமரைதிரிகான்போயிலங்கைத்தலைவன்பத்துச் சிரந்தாமரைக்கணத்தெய்தாரையெய்தற்குத்தேர்மனமே. | 32 |
நேராயிரவுபகலிரைதேடுவைதீமைநன்மை பாராயிரங்குவைபாவையராற்பண்டுமாவலிபாற் சோராயிருந்தவனைத்திருமாலிருஞ்சோலைநின்ற பேராயிரமுடையானைநெஞ்சேயென்றுபேணுவையே. | 33 |
பேணிக்கவித்தவரைக்குடையாய்பெரியோர்பதின்ம ராணிக்கவித்ததமிழ்மாலைகொண்டாயழகாகரிய மாணிக்கவித்தகமாமலையேவண்டுளவுக்கல்லாற் பாணிக்கவித்தடங்காதுவெங்காமப்படர்கனலே. | 34 |
படராகுவால்குவியக்குழலூதியபாலரைய மடராகுவாகன்ன்றாதைக்கிட்டாரலங்காரர்துழாய்க் கிடராகுவார்பலர்காண்டமியேனையெரிப்பதென்னீ விடராகுவாய்க்கொண்டுடல்சுட்டுக்கான்றிட்டவெண்டிங்களே. | 35 |
திங்களப்பாநின்றசெந்தீக்கொழுந்திற்செழுஞ்சங்குபோ லுங்களப்பாவையுருகுவதோர்கிலரும்பரெல்லா மெங்களப்பாவெமைக்காவாயெனவுலகீரடியா லங்களப்பான்வளர்ந்தார்சோலைமாமலையாதிபரே. | 36 |
ஆதியராவிற்றுயிலலங்காராழகரன்பாம் வேதியராவுதிவீற்றிருப்பாரண்டமீதிருக்குஞ் சோதியராவின்பின்போந்தாரையன்றித்தொழேனுடலைக் காதியராவினும்பொன்மாமகுடங்கவிக்கினுமே. | 37 |
கவித்தானைமன்னற்குநட்பாய்முடிகவித்தானையன்று புவித்தானைவற்றப்பொழிசரத்தானைப்பொருதிலங்கை யவித்தானைமாலிருஞ்சோலைநின்றானையழகனைமுன் றவித்தானைவாவெனவந்தானைப்பற்றினென்றஞ்சமென்றே. | 38 |
தஞ்சந்தனமென்றுதேடிப்புல்லோர்தையலார்கடைக்கண் வஞ்சந்தனங்கொள்ளவாளாவிழப்பர்மதியுடையோர் செஞ்சந்தனப்பொழின்மாலிருஞ்சோலைத்திருநெடுமா னெஞ்சந்தனக்குவப்பாகநல்காநிற்பர்நேர்படினே. | 39 |
பேராயவேதனைநெஞ்சிடந்தாய்நெடுஞ்சோலைமலைக் காராயவேதனைமுன்படைத்தாய்நின்கழற்குத்தொண்டென் றாராயவேதனைப்புன்பிறப்போயுமவர்வழியிற் பேராயவேதனையில்லுழைப்போரும்பிழைப்பர்களே. | 40 |
பிழைத்தலையானெண்ணிப்பேசுகின்றேனிப்பிணிமற்றொன்றான் மழைத்தலைவார்குழலீர்தணியாதுவருணனைமு னழைத்ததலையங்கடைத்தாநலங்கனல்கீர் முழைத்தலைநின்றுமலயாநிலம்வந்துமோதுமுன்னே. | 41 |
மோதாகவந்தனைமூட்டிலங்கேசன்முடிந்துவிண்ணின் மீதாகவந்தனைவில்லெடுத்தேவிடைவெற்பினின்ற நாதாகவந்தனைச்செற்றாயுனையன்றிநான்மறந்துந் தீதாகவந்தனைசெய்யேன்புறஞ்சிலதேவரையே. | 42 |
தேவரையாதன்மனிதரையாதல்செழுங்கவிதை நாவரையாமனவிலுகிற்பீர்நம்மையாளுஞ்செம்பொன் மேவரையானையிருஞ்சோலைவேங்கடமெய்யமென்னு மாவரையானையொருவனையேசொல்லிவாழுமினே. | 43 |
வாழுமின்பங்கயச்சுந்தரவல்லிமணாளன்வெற்பைச் சூழுமின்பந்தித்ததொல்வினைதீர்ந்துய்யத்தொங்கல்சுற்றுந் தாழுமின்பஞ்சணைமேன்மடவார்தடமாமுலைக்கே வீழுமின்பங்கருதித்துன்பயோனியில்வீழ்பவரே. | 44 |
வீழமராமரமெய்தார்மதிதவழ்வெற்பைநெஞ்சே தாழமராடச்சமன்குறுகானிச்சரீரமென்னும் பாழமராமற்பரகதியேற்றுவர்பார்க்கில்விண்ணோர் வாழமராவதியுந்நரகாமந்தமாநகர்க்கே. | 45 |
நகரமுனாடும்புரந்தவர்நண்ணலரால்வனமுஞ் சிகரமுனாடுஞ்சிறுமைகண்டோமஞ்ஞைதேனிசைகள் பகரமுனாடும்பனிச்சோலைவெற்பினிற்பார்க்குக்கஞ்சன் றகரமுனாடுகைத்தார்க்கறிந்தீர்கள்சரண்புகுமே. | 46 |
சரணியனாகத்தனைநினைந்தாரைத்தன்போலவைக்கு மரணியனாகத்தணையானரங்கனழகனெங்கோ னிரணியனாகமிடந்தான்கதையன்றியீனர்தங்கண் முரணியனாகத்தும்புன்குரலோரிமுதுக்குரலே. | 47 |
முதுவிருந்தாவனத்தானிரைமேய்த்தவர்முன்விதுரன் புதுவிருந்தானவர்மால்லங்காரர்பொலுங்கழலா மதுவிருந்தாமரைக்களாயிரார்க்குமதிநுட்பநூ லெதுவிருந்தாலுமதனால்விடாவிங்கிருவினையே. | 48 |
வினையாட்டியேன்கொண்டவெங்காமநோய்வெறியாட்டினுமிச் சினையாட்டினுந்தணியாதன்னைமீர்செய்யபூங்கமல மனையாட்டிநாயகன்மாலிருஞ்சோலைமலைச்சிலம்பாற் றெனையாட்டிவாருஞ்சொன்னேனெந்தநோயுமெனக்கில்லையே. | 49 |
எனக்காவியங்குமுடலிங்குமாகியிருப்பதைச்சந் தனக்காவியங்குந்தமரவண்டீர்சொல்லுந்தத்துவநூல் கனக்காவியங்கவிவல்லோர்புகழலங்காரனுக்கு வனக்காவியங்கண்ணிமாமலராண்மணவாளனுக்கே. | 50 |
மணவாளராவிநிகர்திருமாதுக்குமாலழகர் பணவாளராவிற்கண்பள்ளிகொள்வார்திருப்பாதமெண்ணக் குணவாளராவிரின்யேபுயிர்காளும்மைக்கூற்றுவனார் நிணவாளராவியறுக்குமப்போதுநினைப்பரிதே. | 51 |
நினைப்பரியாயெளியாயும்பர்யார்க்குநின்னன்பருக்கும் வினைப்பரியானவன்வாய்பிளந்தாய்வியன்சோலைமலை தனைப்பரியாநின்றதாளழகாமுற்சனனத்துள்ளு முளைப்பரியாமலன்றோபரித்தேனிவ்வுடலத்தையே. | 52 |
உடலம்புயங்கத்துரிபோல்விடுமன்றுவணப்புள்ளி னடலம்புயமிசைநீவரவேண்டுமையானனற்கு மடலம்புயற்கும்வரந்தருஞ்சோலைமலைக்கரசே கடலம்புயர்வரையாலடைத்தாயென்னைக்காப்பதற்கே. | 53 |
காப்பவனந்தமலரோனையுங்கறைக்கண்டனையும் பூப்பவனந்தரம்போக்கவைப்பான்புனல்பார்விசும்பு தீப்பவனந்தருந்தெய்வசிகாமணிசேவடியை நாப்பவனந்தப்புகழ்வார்க்கொப்பில்லைநவகண்டத்தே. | 54 |
கண்டாகனன்கண்ணனல்லாற்கதியின்மைகண்டடைந்த துண்டாகனம்பவொட்டாதுங்களூழ்வினையுண்மையறிந் தண்டாகவனவண்ணனேயருளாயென்றழகனுக்கே தொண்டாகனன்னெஞ்சினாலுரைப்பீர்பிறர்தொண்டர்களே. | 55 |
தொண்டுபடார்திருமாலிருஞ்சோலையிற்சோதிக்கன்பு கொண்டுபடாமலரிட்டிறைஞ்சார்மடக்கோதையரைக் கண்டுபடாமுலைதோயனுராகங்கருதியிரா வுண்டுபடாநிற்கும்போதுநைவாரெங்ஙனுய்வதுவே. | 56 |
உய்வந்தொழும்புசெய்தென்றிருப்போமையுய்யாமலைவர் பெய்வந்தொழுவினைக்கேயென்பராற்பெருந்தேன்சிகரந் தைவந்தொழுகுமலையலங்காரசதுமுகத்துத் தெய்வந்தொழுந்தெய்வமேயென்கொலோவுன்றிருவுளமே. | 57 |
திருவிளையாடுதிண்டுடாட்செங்கண்மால்பலதேவருடன் மருவிளையான்றிருமாலிருஞ்சோலைமலையெனவோ ருருவிளையாமற்பிறப்பார்பலர்புகழோதிச்சிலர் கருவிளையாநிற்கவித்தாவர்முத்தியிற்காமமற்றே. | 58 |
காமத்தனைப்பொய்யழுக்காறுகோபங்களவுகொலை யாமத்தனையுமுடையேனையாளுங்கொலான்பொருப்பாந் தாமத்தனைவரும்போற்றநின்றான்பண்டுதாமரையோன் பூமத்தனைச்செய்தநோய்துடைத்தானடிப்போதுகளே. | 59 |
போதகத்தானும்வெண்போதகத்தானும்புராந்தகனுந் தீதகத்தானதுதீந்தருங்காலைத்திருவரைசேர் பீதகத்தாயழகாவருளாயென்பர்பின்னையென்ன பாதகத்தான்மறந்தோதனிநாயகம்பாவிப்பரே. | 60 |
பாவிக்கமலவிரிஞ்சற்கிறையவர்பத்தர்தங்க ளாவிக்கமலத்துவீற்றிருப்பாரளிப்பாடல்கொண்ட வாவிக்கமலமணநாறுஞ்சோலைமலையைக்கண்ணாற் சேவிக்கமலமறுமனமேயெழுசெல்லுதற்கே. | 61 |
செல்லுக்குவளைகுழனாட்டமென்றுதெரிவையர்பாற் பல்லுக்குவளைமுதுகாந்தனையும்புன்பாட்டுரைப்பீ ரல்லுக்குவளையுழும்பாண்டிநாட்டையடைந்துநுங்கள் சொல்லுக்குவளையுண்டார்க்கலங்காரர்க்குக்கூட்டுவினே. | 62 |
சூட்டோதிமஞ்சென்றுசொல்லாதென்காதலைத்தும்பியிசைப் பாட்டோதிமங்கையரும்பணியார்பண்டுகன்மழைக்காக் கோட்டோதிமமெடுத்தார்சோலைமலைக்கோவலனார் மாட்டோதிமஞ்சினங்காளுரைப்பீர்மறுவாசகமே. | 63 |
வாசம்பரந்ததுழாயுமென்பாடலுமாலையொளி வீசம்பரம்பசும்பொன்னுமென்வேட்கையும்வீற்றிருக்குந் தேசம்பரமபதமுமென்சிந்தையுந்தீவளியா காசம்பரவைமண்கண்டுண்டமாலலங்காரனுக்கே. | 64 |
அலங்காரன்சுந்தரத்தோளனழகனணிமுடியி விலங்காரனேறுதிருவுடையானெட்டெழுத்துங்கற்றார் கலங்காரனங்கன்கணையாலெச்செல்வமுங்காதலியார் மலங்காரருந்துயர்மேவினுமாகுவர்வானவரே. | 65 |
வானவதாரணிசுந்தரந்தோளன்முன்மாவலியைத் தானவதாரணிதாவென்றமாயன்றராதலத்து மீனவதாரமுதலானவைவினையின்றியிச்சை யானவதாரறிவாரவரேமுத்தராமவரே. | 66 |
ஆமவரைப்பணித்தாள்வாரழகரயனுமையாள் வாமவரைப்பணியான்பணிபாதத்தைவாழ்த்துங்கொங்கை யேமவரைப்பணிபூணாள்சந்தேந்திழையாளுரைத்தால் வேமவரைப்பணியாதேயெனுமெங்கண்மெல்லியலே. | 67 |
மெல்லியலைப்பரியங்கனையாரும்வெறுத்துவசை சொல்லியலைப்பரியங்கவொட்டார்சுடர்மாமலையைப் புல்லியலைப்பரியங்கத்திலேறும்புயல்பதின்மர் நல்லியலைப்பரியங்கழற்றாமநயந்தபின்னே. | 68 |
பின்னிறப்பும்பிறப்புந்நரைமூப்பும்பிணியுமனை முன்னிறப்பும்பிரித்தானிருந்தானவர்மூதிலங்கை மன்னிறப்புங்கக்கணைதொட்டசோலைமலையழகன் மென்னிறப்புண்டரிகத்திருத்தாளன்றிப்போற்றிலமே. | 69 |
போற்றியிராமவென்னார்சோலைமாமலைபோதவிடார் மாற்றியிராவைப்பகலாக்கிலார்வண்டுழாய்குழன்மே லேற்றியிராசதமாகவையாரென்னிடரையெல்லா மாற்றிபிராரன்னைமாரென்னைவாய்வம்பளக்கின்றதே. | 70 |
அளப்பதுமங்கையினீரேற்பதுந்தந்தளிப்பதும்பின் பிளப்பதுமங்கையில்வெண்கோட்டிற்கொள்வதும்பேருணவாக் கிளப்பதுமங்கையெனத்தோள்புணர்வதுங்கேட்கில்வையம் வளப்பதுமங்கையஞ்சேர்சோலைமாமலைமாதவரே. | 71 |
மாதவராலும்பராலறியார்மதுரைப்பிறந்த யாதவராலிலைமேற்றுயின்றாரிருந்தாழ்சுனையிற் போதவராலுகண்மாலிருஞ்சோலையிற்போம்பிறவித் தீதவராலன்றியெத்தேவராலுந்தெறலரிதே. | 72 |
அரியவரந்தந்தயன்முதலோர்க்கருள்செய்தவரைப் பெரியவரந்தமில்வாழ்வினராக்கித்தம்பேரருளாற் கரியவநந்தணர்கைதொழுமாலலங்காரர்வையத் துரியவரந்தரங்கத்துயர்தீர்க்கவுலாவுவரே. | 73 |
உலகுதிக்கும்படிசிந்தித்துத்தந்திவ்வுலகிலுறு நலகுதிக்கும்படிநின்றபிரானிடநானிலமு மிலகுதிக்கும்விசும்புந்தொழவோங்கியிறால்வருடை பலகுதிக்குந்தோறுந்தேன்பாயுஞ்சோலைப்பருப்பதமே. | 74 |
பருப்பதந்தாமன்னிநிற்பதுபாற்கடல்பள்ளிகொள்வ திருப்பதந்தாமம்பண்டிப்பேரதெலாமிளஞாயிறன்ன வுருப்பதந்தாமதர்க்கீயாமலன்பர்க்குதவழகர் திருப்பதந்தாமரைபோல்வாருகப்பதென்சிந்தனையே. | 75 |
சிந்திக்கலாங்கொழிக்குந்திருச்சிலம்பாற்றழகும் பந்திக்கலாபமயிலாடுஞ்சாரலும்பங்கயனோ மந்திக்கலாமதியாற்கரியாருறையான்பொருப்பும் வந்திக்கலாமெனிற்சந்திக்கலாமுயர்வைகுந்தமே. | 76 |
வைதாரையுமுன்மலைந்தாரையுமலர்த்தாளில்வைத்தாய் மொய்தாரையத்தனைத்தீங்கிழைத்தேனையுமூதுலகிற் பெய்தாரைவானிற்புரப்பானிடபப்பெருங்கிரியாங் கொய்தாரைவேய்ந்ததிருவடிக்கீழ்த்தொண்டுகொண்டருளே. | 77 |
கொண்டமருந்துங்கடைவாய்வழியுகக்கோழைவந்து கண்டமருந்துபராம்போதுன்பாதங்கருதறியேன் வண்டமருந்துளவோனேதென்சோலைமலைக்கரசே யண்டமருந்தும்பிரானேயின்றேயுன்னடைக்கலமே. | 78 |
அடைக்கலந்தானையிரந்தாள்புகலவவள்பொருட்டாற் படைக்கலந்தானைத்தருமன்கெடாமல்வெம்பாரதப்போ ரிடைக்கலந்தானையலங்காரனைச்சரணென்றடைந்தேன் முடைக்கலந்தானையுமப்போதயர்ப்பினுமுத்தியுண்டே. | 79 |
உண்டிறக்கும்புவனங்களைமீளவுமிழ்ந்திலையேற் பண்டிறக்கும்பதுமத்தோன்புரந்தரன்பைந்தழல்போற் கண்டிறக்குஞ்சங்கரன்முதலோர்களைக்கண்டவரார் திண்டிறக்குஞ்சரஞ்சேர்சோலைமாமலைச்சீதரனே. | 80 |
சீரரிதாழ்பெரழின்மாலிருஞ்சோலையிற்செல்வர்செங்கட் போரரிதாள்புனைதாரரிதாகிற்றண்பூந்துளலின் றாரரிதாவுந்தழையரிதாகிற்றழைதொடுத்த நாரரிதாகிற்பிழைப்பதரிதாமெங்கணன்னுதற்கே. | 81 |
நன்னுதலைப்பணிபூண்மார்பில்வைத்துவிண்ணாட்டிருப்பார் மின்னுதலைப்பணிமேற்றுயில்வார்விடைவெற்பினிற்பார் மன்னுதலைப்பணியன்பரைவைக்குமலரடிக்கீழ்த் துன்னுதலைப்பணிசெய்வதெஞ்ஞான்றென்னுயர்தொலைந்தே. | 82 |
தொலைந்தானையோதுந்தொலையானையன்னைசொய்லான்மகுடங் கலைந்தானைஞானக்கலையானையாய்ச்சிகலைத்தொட்டிலோ டலைந்தானைப்பாலினலையானைவாணன்கையற்றுவிழ மலைந்தானைச்சோலைமலையானைவாழ்த்தென்மடநெஞ்சமே. | 83 |
நெஞ்சிலம்பாற்றமுடியாதுவேளெய்துநீளிரவுந் துஞ்சிலம்பாற்றுளியுந்நஞ்சமாஞ்சொரிகன்மழையை யஞ்சிலம்பாற்றடுதாரலங்காரரடிவிளக்குஞ் செஞ்சிலம்பாற்றருகேகிடத்தீருயிர்தேற்றுதற்கே. | 84 |
தேற்றுவித்தாற்புனறேற்றுநர்போற்றிருவெட்டெழுத்தான் மாற்றுவித்தானென்மயக்கமெல்லாமண்ணும்விண்ணுமுய்யப் போற்றுவித்தாரப்புயலலங்காரன்பொன்மேருவைப்போற் றேற்றுவித்தாரணியுஞ்சுந்தரத்திருத்தோளண்ணலே. | 85 |
அண்ணலைவான்மதிதோய்சோலைமாமலையச்சுதனைத் தண்ணலைவானவனைத்தெயவநாதனைத்தாளடைவா னெண்ணலைவான்பகையாமைவரோடிசைந்தின்னமுடற் புண்ணலைவானெண்ணினாய்மனமேயுன்புலமைநன்றே. | 86 |
புலமையிலேநிமிர்ந்தற்பரைப்போற்றிப்பொதுமகளைக் குலமையிலேகுயிலேகொடியேயென்றுங்கூர்விழியாம் புலமையிலேயென்றும்பாடாமற்பாடுமின்பாவலர்கா ணலமையிலேய்முத்தமார்சோலைமாமலைநம்பனையே. | 87 |
நம்பிநின்றேனுன்சரணாரவிந்தத்தைநன்னெஞ்சென்னுஞ் செம்பிநின்றேபொறித்தேனுனக்காளென்றுதெய்வக்குழாம் பம்பிநின்றேசெறிக்கும்பதங்காணப்பதறுகின்றேன் கொம்பிநின்றேன்சொரியுஞ்சோலைமாமலைக்கொற்றவனே. | 88 |
கொற்றவிராவணன்பொன்முடிவீழக்கொடுங்கண்டுஞ்ச லுற்றவிராவணன்மாளயெய்தோனொண்பரதனிக்குச் சொற்றவிராவணன்மாலிருஞ்சோலைதொழுதுவினை முற்றவிராவணனற்றமிழ்மாலைமொழிந்தனனே. | 89 |
மொழித்தத்தைகொஞ்சமலையலங்காரமுன்னூற்றுவரை யழித்தத்தைமைந்தர்க்கரசனித்தோன்டிநாட்டொடர்ந்தென் னுழித்தத்தைச்செய்தன்றிப்போகாவினையையொருநொடியிற் கழித்தத்தையென்சொல்லுகேன்றனக்காட்பட்டகாலத்திலே. | 90 |
காலமலைக்கும்புவனங்களைக்கரந்தாயுதிரங் காலமலைகுமைத்தாயழகாகமலத்துப்பஞ்சரர் காலமலைக்கும்புவிக்குமன்பாவுயிர்காயம்விடுங் காலவலைக்குங்கடுங்கூற்றைக்காய்ந்தென்னைக்காத்தருளே. | 91 |
அருளக்கொடியிடைப்பூமாதுநீயும்வந்தரளினும மிருளக்கொடியநமன்வருங்காலத்திகழினுமாங் கருளக்கொடியழகாவலங்காரவன்கஞ்சனெஞ்சத் துருளக்கொடியவுதைத்தாயெனதுயிருன்னுயிரே. | 92 |
உயிர்க்கும்படிக்குமுன்னாயிரம்பேரென்றெறுத்தன்னைமார் செயிர்க்கும்படிக்குநின்றேனென்செய்கேன்செழுந்தேவர்களு மயிர்க்கும்படிக்குறளாமழகாவலங்காரநெய்க்குந் தயிர்க்கும்படிக்குஞ்செவ்வாய்மலர்ந்தாய்நின்னைத்தாள்பணிந்தே. | 93 |
பணிபதிவாடநின்றாடினநூற்றுவர்பாற்சென்றன பணிபதினாலுபுவனமுந்தாயினபாப்பதின்மர் பணிபதியெங்குமுவந்தனபங்கயப்பாவையுடன் பணிபதிமார்பனலங்காரன்பொற்றிருப்பாதங்களே. | 94 |
பாதகரத்தனைபேருங்கனகனும்பன்னகத்தா லேதகரத்தனையற்கருளாளியையெட்டெழுத்து ளோதகரத்தனைசுந்தரத்தொளுடையானைநவ நீதகரத்தனைச்சேர்ந்தார்க்குத்தேவருநேரல்லரே. | 95 |
அல்லலங்காரையுஞ்சேர்விக்குமைம்புலவாசையென்றும் பல்லலங்காநைந்துகோலூன்றியும்பற்றறாதுகண்டாய் மல்லலங்காரிகையார்மருடீர்ந்துவணங்குநெஞ்சே தொல்லலங்காரனைத்தென்றிருமாலிருஞ்சோலையிலே. | 96 |
சோலையிலாமையில்சேர்திருமாலிருஞ்சோலைநின்றான் வேலையிலாமையில்வேடங்கொண்டான்புயமேவாப்பெறாச் சோலையிலாமையிலங்குகண்ணாளவன்றேய்வத்துழாய் மாலையிலாமையின்மாலையுற்றாளந்திமாலையிலே. | 97 |
மாலைக்கரும்புசிறுகாறுகைக்கவருந்துமெங்க ளாலைக்கரும்புதன்னாசையெல்லாஞ்சொல்லிலாயிரந்தோட் டோலைக்கரும்புண்டொடமுடமாமதியூர்குடுமிச் சோலைக்கரும்புயலேயருளாயுன்றுளவினையே. | 98 |
துளவிலையார்பொன்னடிமுடிசூட்டித்தொண்டாக்கியென்னை வளவிலையாக்கொண்டநீகைவிடேன்மங்கலகுணங்க ளளவிலையாவலங்காரசமயிகளாய்ந்தவண்ண முளவிலையாயுருவாயருவாயவொருமுதலே. | 99 |
ஒருபாலமரரொருபான்முனிவருடனிருந்தெ னிருபார்வையுங்கொண்டுவப்பதென்றேவிடபக்கிரிக்கும் பொருபாற்கடற்குமயோத்திக்கும்பொற்றுவராபதிக்கு நிருபாவைகுந்தமுநீவீற்றிருக்கின்றநீர்மையுமே. | 100 |
அலங்காரருக்குப்பரமச்சுவாமிக்கழகருக்குக் கலங்காப்பெருநகரங்காட்டுவார்க்கருத்தன்பினா னலங்காதசொற்றொடையந்தாதியைப்பற்பநாபப்பட்டன் விலங்காதகீர்த்திமணவாளதாசன்விளம்பினனே. | 101 |