"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - பாடல்கள் ( 1 - 330 ) > பாடல்கள் (331-670) > பாடல்கள் (671- 1000) > பாடல்கள் ( 1001- 1326 )
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
மூன்றாம் பாகம், பாடல்கள் (671- 1000)
Acknowledgements:
Etext preparation (Mylai format) : Mr. A.S. Maniam (http://www.kaumaram.com/)
Our sincere thanks go to Mr.Mani Manivannan, Fremont, CA, USA for providing us with a
Text Convertor that allowed conversion of Mylai version to Tamil script version as per TSCII encoding.
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland
© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பாடல் 671 ( விரிஞ்சிபுரம் )
ராகம் - .....; தாளம் - ..........
தனன தனதனத் தனன தனதனத்
தனன தனதனத் தனன தனதனத்
தனன தனதனத் தனன தனதனத் ...... தனதானா
பரவி யுனது பொற் கரமு முகமுமுத்
தணியு முரமுமெய்ப் ப்ரபையு மருமலர்ப்
பதமும் விரவுகுக் குடமு மயிலுமுட் ...... பரிவாலே
படிய மனதில்வைத் துறுதி சிவமிகுத்
தெவரு மகிழ்வுறத் தரும நெறியின்மெய்ப்
பசியில் வருமவர்க் கசன மொருபிடிப் ...... படையாதே
சருவி யினியநட் புறவு சொலிமுதற்
பழகு மவரெனப் பதறி யருகினிற்
சரச விதமளித் துரிய பொருள்பறித் ...... திடுமானார்
தமது மருகமதக் களப புளகிதச்
சயில நிகர்தனத் திணையின் மகிழ்வுறத்
தழுவி யவசமுற் றுருகி மருளெனத் ...... திரிவேனோ
கரிய நிறமுடைக் கொடிய அசுரரைக்
கெருவ மதமொழித் துடல்கள் துணிபடக்
கழுகு பசிகெடக் கடுகி அயில்விடுத் ...... திடுதீரா
கமல அயனுமச் சுதனும் வருணனக்
கினியு நமனுக் கரியு லுறையுமெய்க்
கணனு மமரரத் தனையு நிலைபெறப் ...... புரிவோனே
இரையு முததியிற் கடுவை மிடறமைத்
துழுவை யதளுடுத் தரவு பணிதரித்
திலகு பெறநடிப் பவர்மு னருளுமுத் ...... தமவேளே
இசையு மருமறைப் பொருள்கள் தினமுரைத்
தவனி தனி லெழிற் கரும முனிவருக்
கினிய கரபுரப் பதியி லறுமுகப் ...... பெருமாளே.
பாடல் 672 ( விரிஞ்சிபுரம் )
ராகம் - மோஹனம் .
தாளம் - திஸ்ர த்ருவம் - திஸ்ரநடை (10 1/2)
(எடுப்பு - /3/3/3 0)
தனன தந்த தான தனன தந்த தான
தனன தந்த தான ...... தனதான
மருவு மஞ்சு பூத முரிமை வந்தி டாது
மலமி தென்று போட ...... அறியாது
மயல்கொ ளிந்த வாழ்வு அமையு மெந்த நாளும்
வகையில் வந்தி ராத ...... அடியேனும்
உ ருகி யன்பி னோடு உ னைநி னைந்து நாளும்
உ லக மென்று பேச ......அறியாத
உ ருவ மொன்றி லாத பருவம் வந்து சேர
உ பய துங்க பாத ...... மருள்வாயே
அரிவி ரிஞ்சர் தேட அரிய தம்பி ரானும்
அடிப ணிந்து பேசி ...... கடையூடே
அருளு கென்ற போது பொருளி தென்று காண
அருளு மைந்த ஆதி ...... குருநாதா
திரியு மும்பர் நீடு கிரிபி ளந்து சூரர்
செருவ டங்க வேலை ...... விடுவோனே
செயல மைந்த வேத தொனிமு ழங்கு வீதி
திருவி ரிஞ்சை மேவு ...... பெருமாளே.
பாடல் 673 ( திருவாலங்காடு )
ராகம் - ...; தாளம் -
தனதானந் தானன தானன
தனதானந் தானன தானன
தனதானந் தானன தானன ...... தனதான
கனவாலங் கூர்விழி மாதர்கள்
மனசாலஞ் சால்பழி காரிகள்
கனபோகம் போருக மாமிணை ...... முலைமீதே
கசிவாருங் கீறுகி ளாலுறு
வசைகாணுங் காளிம வீணிகள்
களிகூரும் பேயமு தூணிடு ...... கசுமாலர்
மனவேலங் கீலக லாவிகள்
மயமாயங் கீதவி நோதிகள்
மருளாருங் காதலர் மேல்விழு ...... மகளீர்வில்
மதிமாடம் வானிகழ் வார்மிசை
மகிழ்கூரும் பாழ்மன மாமுன
மலர்பேணுந் தாளுன வேயரு ...... ளருளாயோ
தனதானந் தானன தானன
எனவேதங் கூறுசொல் மீறளி
ததைசேர்தண் பூமண மாலிகை ...... யணிமார்பா
தகரேறங் காரச மேவிய
குகவீரம் பாகும ராமிகு
தகைசாலன் பாரடி யார்மகிழ் ...... பெருவாழ்வே
தினமாமன் பாபுன மேவிய
தனிமானின் தோளுட னாடிய
தினைமாவின் பாவுயர் தேவர்கள் ...... தலைவாமா
திகழ்வேடங் காளியொ டாடிய
ஜெகதீசங் கேசந டேசுரர்
திருவாலங் காடினில் வீறிய ...... பெருமாளே.
பாடல் 674 ( திருவாலங்காடு )
ராகம் - ---; தாளம் -
தந்தானந் தாத்தம் தனதன
தந்தானந் தாத்தம் தனதன
தந்தானந் தாத்தம் தனதன ...... தனதான
பொன்றாமன் றாக்கும் புதல்வரும்
நன்றாமன் றார்க்கின் றுறுதுணை
பொன்றானென் றாட்டம் பெருகிய ...... புவியூடே
பொங்காவெங் கூற்றம் பொதிதரு
சிங்காரஞ் சேர்த்திங் குயரிய
புன்கூடொன் றாய்க்கொண் டுறைதரு ...... முயிர்கோல
நின்றானின் றேத்தும் படிநினை
வுந்தானும் போச்சென் றுயர்வற
நிந்தாகும் பேச்சென் பதுபட ...... நிகழாமுன்
நெஞ்சாலஞ் சாற்பொங் கியவினை
விஞ்சாதென் பாற்சென் றகலிட
நின்தாள்தந் தாட்கொண் டருள்தர ...... நினைவாயே
குன்றால்விண் டாழ்க்குங் குடைகொடு
கன்றாமுன் காத்துங் குவலய
முண்டார்கொண் டாட்டம் பெருகிய ...... மருகோனே
கொந்தார்பைந் தார்த்திண் குயகுற
மின்தாள்சிந் தாச்சிந் தையில்மயல்
கொண்டேசென் றாட்கொண் டருளென ...... மொழிவோனே
அன்றாலங் காட்டண் டருமுய
நின்றாடுங் கூத்தன் திருவருள்
அங்காகும் பாட்டின் பயனினை ...... யருள்வாழ்வே
அன்பால்நின் தாட்கும் பிடுபவர்
தம்பாவந் தீர்த்தம் புவியிடை
அஞ்சாநெஞ் சாக்கந் தரவல ...... பெருமாளே.
பாடல் 675 ( திருவாலங்காடு )
ராகம் - ...; தாளம் -
தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
தனதன தானந் தாத்த ...... தனதான
புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி
புதுமன மானும் பூட்டி ...... யிடையூடே
பொறிபுல னீரைந் தாக்கி கருவிகள் நாலுங் காட்டி
புகல்வழி நாலைந் தாக்கி ...... வருகாயம்
பவவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டி
பசுபதி பாசங் காட்டி ...... புலமாயப்
படிமிசை போவென் றோட்டி அடிமையை நீவந் தேத்தி
பரகதி தானுங் காட்டி ...... யருள்வாயே
சிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்க
திருநட மாடுங் கூத்தர் ...... மருகோனே
திருவளர் மார்பன் போற்ற திசைமுக னாளும் போற்ற
ஜெகமொடு வானங் காக்க ...... மயிலேறிக்
குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி
குதர்வடி வேலங் கோட்டு ...... குமரேசா
குவலயம் யாவும் போற்ற பழனையி லாலங் காட்டில்
குறமகள் பாதம் போற்று ...... பெருமாளே.
பாடல் 676 ( திருவாலங்காடு )
ராகம் - : தாளம் -
தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
தனதன தானந் தாத்த ...... தனதான
வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி
வரவிடு தூதன் கோட்டி ...... விடுபாசம்
மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு
மதிகெட மாயந் தீட்டி ...... யுயிர்போமுன்
படிமிசை தாளுங் காட்டி யுடலுறு நோய்பண் டேற்ற
பழவினை பாவந் தீர்த்து ...... னடியேனைப்
பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்த
பரபுகழ் பாடென் றாட்கொ ...... டருள்வாயே
முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங் காட்டில்
முதிர்நட மாடுங் கூத்தர் ...... புதல்வோனே
முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதனி வேழங் கூட்டி
முதல்மற மானின் சேர்க்கை ...... மயல்கூர்வாய்
இடியென வேகங் காட்டி நெடிதரு சூலந் தீட்டி
யெதிர்பொரு சூரன் தாக்க ...... வரஏகி
இலகிய வேல்கொண் டார்த்து உ டலிரு கூறன் றாக்கி
யிமையவ ரேதந் தீர்த்த ...... பெருமாளே.
பாடல் 677 ( திருவாலங்காடு )
ராகம் - மோஹனம்
தாளம் - சதுஸ்ர ரூபகம் (6)
தனனாத் தானன தானம் தனனாத் தானன தானம்
தனனாத் தானன தானம் ...... தனதான
தவர்வாட் டோ மர சூலந் தரியாக் காதிய சூருந்
தணியாச் சாகர மேழுங் ...... கிரியேழுஞ்
சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந்
தரிகூத் தாடிய மாவுந் ...... தினைகாவல்
துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொரு தேனுந்
துணையாத் தாழ்வற வாழும் ...... பெரியோனே
துணையாய்க் காவல்செய் வாயென் றுணராப் பாவிகள் பாலுந்
தொலையாப் பாடலை யானும் ...... புகல்வேனோ
பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்
பழமாய்ப் பார்மிசை வீழும் ...... படிவேதம்
படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம்
பறிகோப் பாளிகள் யாருங் ...... கழுவேறச்
சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக் காலொளி சேர்வெண்
டிருநீற் றாலம ராடுஞ் ...... சிறியோனே
செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந்
திருவோத் தூர்தனில் மேவும் ...... பெருமாளே.
பாடல் 678 ( பாக்கம் )
ராகம் - ...; தாளம் -
தாத்தத்த தானதன தாத்தத்த தானதன
தாத்தத்த தானதன ...... தனதான
கார்க்கொத்த மேனிகடல் போற்சுற்ற மானவழி
காய்த்தொட்டொ ணாதவுரு ...... ஒருகோடி
காக்கைக்கு நாய்கழுகு பேய்க்கக்க மானவுடல்
காட்டத்தி னீளெரியி ...... லுறவானிற்
கூர்ப்பித்த சூலனத னாற்குத்தி யாவிகொடு
போத்துக்க மானகுறை ...... யுடையேனைக்
கூப்பிட்டு சாவருளி வாக்கிட்டு நாமமொழி
கோக்கைக்கு நூலறிவு ...... தருவாயே
போர்க்கெய்த்தி டாமறலி போற்குத்தி மேவசுரர்
போய்த்திக்கெ லாமடிய ...... வடிவேலாற்
பூச்சித்தர் தேவர்மழை போற்றுர்க்க வேபொருது
போற்றிச்செய் வார்சிறையை ...... விடுவோனே
பார்க்கொற்ற நீறுபுனை வார்க்கொக்க ஞானபர
னாய்ப்பத்தி கூர்மொழிகள் ...... பகர்வாழ்வே
பாக்கொத்தி னாலியலர் நோக்கைக்கு வேல்கொடுயர்
பாக்கத்தில் மேவவல ...... பெருமாளே.
பாடல் 679 ( பாக்கம் )
ராகம் - ...; தாளம் -
தாத்தத் தனந்த தந்த தாத்தத் தனந்த தந்த
தாத்தத் தனந்த தந்த ...... தனதான
பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட் டிடுங்கு ரம்பை
நோக்கிச் சுமந்து கொண்டு ...... பதிதோறும்
பார்த்துத் திரிந்து ழன்று ஆக்கத் தையுந்தெ ரிந்து
ஏக்கற்று நின்று நின்று ...... தளராதே
வேற்றுப் புலன்க ளைந்து மோட்டிப் புகழ்ந்து கொண்டு
வீட்டிற் புகுந்தி ருந்து ...... மகிழ்வேனோ
மாற்றற்ற பொன்து லங்கு வாட்சக்கி ரந்தெ ரிந்து
வாய்ப்புற்ற மைந்த சங்கு ...... தடிசாப
மாற்பொற்க லந்து லங்க நாட்டச்சு தன்ப ணிந்து
வார்க்கைத்த லங்க ளென்று ...... திரைமோதும்
பாற்சொற்ற டம்பு குந்து வேற்கட்சி னம்பொ ருந்து
பாய்க்குட் டுயின்ற வன்றன் ...... மருகோனே
பாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம் படிந்த
பாக்கத் தமர்ந்தி ருந்த ...... பெருமாளே.
பாடல் 680 ( திருவேற்காடு )
ராகம் - ....; தாளம் -
தானந்தா தனதான தானந்தா தனதான
தானந்தா தனதான ...... தனதான
ஆலம்போ லெழுநீல மேலங்காய் வரிகோல
மாளம்போர் செயுமாய ...... விழியாலே
ஆரம்பால் தொடைசால ஆலுங்கோ புரவார
ஆடம்பார் குவிநேய ...... முலையாலே
சாலந்தாழ் வுறுமால ஏலங்கோர் பிடியாய
வேளங்கார் துடிநீப ...... இடையாலே
சாரஞ்சார் விலனாய நேகங்கா யமன்மீறு
காலந்தா னொழிவேது ...... உ ரையாயோ
பாலம்பால் மணநாறு காலங்கே யிறிலாத
மாதம்பா தருசேய ...... வயலுரா
பாடம்பார் திரிசூல நீடந்தா கரவீர
பாசந்தா திருமாலின் ...... மருகோனே
வேலம்பார் குறமாது மேலும்பார் தருமாதும்
வீறங்கே யிருபாலு ...... முறவீறு
வேதந்தா வபிராம நாதந்தா வருள்பாவு
வேலங்கா டுறைசீல ...... பெருமாளே.
பாடல் 681 ( திருவேற்காடு )
ராகம் - ஸிம்மேந்திர மத்யமம்
தாளம் - திஸ்ர த்ருபுடை
தாத்தாதன தானன தானன
தாத்தாதன தானன தானன
தாத்தாதன தானன தானன ...... தனதான
கார்ச்சார்குழ லார்விழி யாரயி
லார்ப்பால்மொழி யாரிடை நூலெழு
வார்ச்சாரிள நீர்முலை மாதர்கள் ...... மயலாலே
காழ்க்காதல தாமன மேமிக
வார்க்காமுக னாயுறு சாதக
மாப்பாதக னாமடி யேனைநி ...... னருளாலே
பார்ப்பாயலை யோவடி யாரொடு
சேர்ப்பாயலை யோவுன தாரருள்
கூர்ப்பாயலை யோவுமை யாள்தரு ...... குமரேசா
பார்ப்பாவல ரோதுசொ லால்முது
நீர்ப்பாரினில் மீறிய கீரரை
யார்ப்பாயுன தாமரு ளாலொர்சொ ...... லருள்வாயே
வார்ப்பேரரு ளேபொழி காரண
நேர்ப்பாவச காரண மாமத
ஏற்பாடிக ளேயழி வேயுற ...... அறைகோப
வாக்காசிவ மாமத மேமிக
வூக்காதிப யோகம தேயுறு
மாத்தாசிவ பாலகு காவடி ...... யர்கள்வாழ்வே
வேர்காடவல் வேடர்கள் மாமக
ளார்க்கார்வநன் மாமகி ணாதிரு
வேற்காடுறை வேதபு ணசுரர் ...... தருசேயே
வேட்டார்மக வான்மக ளானவ
ளேட்டார்திரு மாமண வாபொனி
னாட்டார்பெரு வாழ்வென வேவரு ...... பெருமாளே.
பாடல் 682 ( வடதிருமுல்லைவாயில் )
ராகம் - மோஹனம் ; தாளம் - அங்கதாளம் (6 1/2)
(எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி)
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2
தனதய்ய தானன தானன
தனதய்ய தானன தானன
தனதய்ய தானன தானன ...... தனதான
அணிசெவ்வி யார்திரை சூழ்புவி
தனநிவ்வி யேகரை யேறிட
அறிவில்லி யாமடி யேனிட ...... ரதுதீர
அருள்வல்லை யோநெடு நாளின
மிருளில்லி லேயிடு மோவுன
தருளில்லை யோஇன மானவை ...... யறியேனே
குணவில்ல தாமக மேரினை
யணிசெல்வி யாயரு ணாசல
குருவல்ல மாதவ மேபெறு ...... குணசாத
குடிலில்ல மேதரு நாளெது
மொழிநல்ல யோகவ ரேபணி
குணவல் வாசிவ னேசிவ ...... குருநாதா
பணிகொள்ளி மாகண பூதமொ
டமர்கள்ளி கானக நாடக
பரமெல்லி யார்பர மேசுரி ...... தருகோவே
படரல்லி மாமலர் பாணம
துடைவில்லி மாமத னாரனை
பரிசெல்ரவி யார்மரு காசுர ...... முருகேசா
மணமொல்லை யாகி நகாகன
தனவல்லி மோகன மோடமடர்
மகிழ்தில்லை மாநட மாடின ...... ரருள்பாலா
மருமல்லி மாவன நீடிய
பொழில் மெல்லி காவன மாடமை
வடமுல்லை வாயிலின் மேவிய ...... பெருமாளே.
பாடல் 683 ( வடதிருமுல்லைவாயில் )
ராகம் - ...; தாளம் -
தான தானன தானன தந்தன
தான தானன தானன தந்தன
தான தானன தானன தந்தன ...... தனதான
சோதி மாமதி போல்முக முங்கிளர்
மேரு லாவிய மாமுலை யுங்கொடு
தூர வேவரு மாடவர் தங்கள்மு ...... னெதிராயே
சோலி பேசிமு னாளிலி ணங்கிய
மாதர் போலிரு தோளில்வி ழுந்தொரு
சூதி னால்வர வேமனை கொண்டவ ...... ருடன்மேவி
மோதி யேகனி வாயத ரந்தரு
நாளி லேபொருள் சூறைகள் கொண்டுபின்
மோன மாயவ மேசில சண்டைக ...... ளுடனேசி
மோச மேதரு தோதக வம்பியர்
மீதி லேமய லாகிம னந்தளர்
மோட னாகிய பாதக னுங்கதி ...... பெறுவேனோ
ஆதி யேயெனும் வானவர் தம்பகை
யான சூரனை மோதிய ரும்பொடி
யாக வேமயி லேறிமு னிந்திடு ...... நெடுவேலா
ஆயர் வாழ்பதி தோறுமு கந்துர
லேறி யேயுறி மீதளை யுங்கள
வாக வேகொடு போதநு கர்ந்தவன் ...... மருகோனே
வாதி னால்வரு காளியை வென்றிடு
மாதி நாயகர் வீறுத யங்குகை
வாரி ராசனு மேபணி யுந்திரு ...... நடபாதர்
வாச மாமல ரோனொடு செந்திரு
மார்பில் வீறிய மாயவ னும்பணி
மாசி லாமணி யிசர்ம கிழ்ந்தருள் ...... பெருமாளே.
பாடல் 684 ( வடதிருமுல்லைவாயில் )
ராகம் - ...; தாளம் -
தய்யதன தான தந்தன
தய்யதன தான தந்தன
தய்யதன தான தந்தன ...... தனதான
மின்னிடைக லாப தொங்கலொ
டன்னமயில் நாண விஞ்சிய
மெல்லியர்கு ழாமி சைந்தொரு ...... தெருமீதே
மெள்ளவுமு லாவி யிங்கித
சொல்குயில்கு லாவி நண்பொடு
வில்லியல்பு ரூர கண்கணை ...... தொடுமோக
கன்னியர்கள் போலி தம்பெறு
மின்னணிக லார கொங்கையர்
கண்ணியில்வி ழாம லன்பொடு ...... பதஞான
கண்ணியிலு ளாக சுந்தர
பொன்னியல்ப தார முங்கொடு
கண்ணுறுவ ராம லின்பமொ ...... டெனையாள்வாய்
சென்னியிலு டாடி ளம்பிறை
வன்னியும ராவு கொன்றையர்
செம்மணிகு லாவு மெந்தையர் ...... குருநாதா
செம்முகஇ ராவ ணன்தலை
விண்ணுறவில் வாளி யுந்தொடு
தெய்விகபொ னாழி வண்கையன் ...... மருகோனே
துன்னியெதிர் சூரர் மங்கிட
சண்முகம தாகி வன்கிரி
துள்ளிடவெ லாயு தந்தனை ...... விடுவோனே
சொல்லுமுனி வோர்த வம்புரி
முல்லைவட வாயில் வந்தருள்
துல்யபர ஞான வும்பர்கள் ...... பெருமாளே.
பாடல் 685 ( திருவலிதாயம் )
ராகம் - ஷண்முகப்ரியா
தாளம் - அங்கதாளம் (8)
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3
தனதய்ய தானதன ...... தனதான
மருமல்லி யார்குழலின் ...... மடமாதர்
மருளுள்ளி நாயடிய ...... னலையாமல்
இருநல்ல வாகுமுன ...... தடிபேண
இனவல்ல மானமன ...... தருளாயோ
கருநெல்லி மேனியரி ...... மருகோனே
கனவள்ளி யார்கணவ ...... முருகேசா
திருவல்லி தாயமதி ...... லுறைவோனே
திகழ்வல்ல மாதவர்கள் ...... பெருமாளே.
பாடல் 686 ( திருவொற்றியூர் )
ராகம் - ...; தாளம் -
தனதனன தான தனதனன தான
தனதனன தான ...... தனதான
கரியமுகில் போலு மிருளளக பார
கயல்பொருத வேலின் ...... விழிமாதர்
கலவிகளில் மூழ்கி ம்ருகமத படீர
களனமுலை தோய ...... அணையூடே
விரகமது வான மதனகலை யோது
வெறியனென நாளு ...... முலகோர்கள்
விதரணம தான வகைநகைகள் கூறி
விடுவதன்முன் ஞான ...... அருள்தாராய்
அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர்
அவர்கள்புக ழோத ...... புவிமீதே
அதிகநட ராஜர் பரவுகுரு ராஜ
அமரர்குல நேச ...... குமரேசா
சிரகர கபாலர் அரிவையொரு பாகர்
திகழ் கநக மேனி ...... யுடையாளர்
திருவளரு மாதி புரியதனில் மேவு
ஜெயமுருக தேவர் ...... பெருமாளே.
பாடல் 687 ( திருவொற்றியூர் )
ராகம் - தன்யாஸி
தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதிமிதக-3, தகிட-1 1/2, தக-1
தனதத்தன தானதன தனதத்தன தானதன
தனதத்தன தானதன ...... தனதானா
சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச
சுகவிப்பிர தேசரச ...... சுபமாயா
துலியப்பிர காசமத சொலியற்றர சாசவித
தொகைவிக்ரம மாதர்வயி ...... றிடையூறு
கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடி
களையெத்திடி ராகவகை ...... யதின்மீறிக்
கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவ
கதிபெற்றிட ரானவையை ...... யொழிவேனோ
குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில்
பிடிகைத்தல ஆதியரி ...... மருகோனே
குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய
குணமுட்டர வாவசுரர் ...... குலகாலா
திருவொற்றியு றாமருவு நகரொற்றியுர் வாரிதிரை
யருகுற்றிடு மாதிசிவ ...... னருள்பாலா
திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்க
ளிதயத்திட மேமருவு ...... பெருமாளே.
பாடல் 688 ( திருமயிலை )
ராகம் - ராமப்ரியா ; தாளம் - ஆதி
தனன தனதனன தனன தனதனன
தனன தனதனன ...... தனதான
அமரு மமரரினி லதிக னயனுமரி
யவரும் வெருவவரு ...... மதிகாளம்
அதனை யதகரண விதன பரிபுரண
மமைய னவர்கரண ...... அகிலேச
நிமிர வருள்சரண நிபிட மதெனவுன
நிமிர சமிரமய ...... நியமாய
நிமிட மதனிலுண வலசி வசுதவர
நினது பதவிதர ...... வருவாயே
சமர சமரசுர அசுர விதரபர
சரத விரதஅயில் ...... விடுவோனே
தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு
தரர ரரரரிரி ...... தகுர்தாத
எமர நடனவித மயிலின் முதுகில்வரு
மிமைய மகள்குமர ...... எமதீச
இயலி னியல்மயிலை நகரி லினிதுறையு
மெமது பரகுரவ ...... பெருமாளே.
பாடல் 689 ( திருமயிலை )
ராகம் -....; தாளம் -
தனனத் தனதன ...... தனதான
அயிலொத் தெழுமிரு ...... விழியாலே
அமுதொத் திடுமரு ...... மொழியாலே
சயிலத் தெழுதுணை ...... முலையாலே
தடையுற் றடியனு ...... மடிவேனோ
கயிலைப் பதியரன் ...... முருகோனே
கடலக் கரைதிரை ...... யருகேசூழ்
மயிலைப் பதிதனி ...... லுறைவோனே
மகிமைக் கடியவர் ...... பெருமாளே.
பாடல் 690 ( திருமயிலை )
ராகம் - பூர்வி கல்யாணி
தாளம் - அங்கதாளம் (10 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2
தகதிமி-2, தகதிமிதக-3
தனன தானன தானன தந்தத் ...... தனதான
அறமி லாவதி பாதக வஞ்சத் ...... தொழிலாலே
அடிய னேன்மெலி வாகிம னஞ்சற் ...... றிளையாதே
திறகு லாவிய சேவடி வந்தித் ...... தருள்கூடத்
தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் ...... தருவாயே
விறல் சாசரர் சேனைக ளஞ்சப் ...... பொரும்வேலா
விமல மாதபி ராமித ருஞ்செய்ப் ...... புதல்வோனே
மறவர் வாணுதல் வேடைகொ ளும்பொற் ...... புயவீரா
மயிலை மாநகர் மேவிய கந்தப் ...... பெருமாளே.
பாடல் 691 ( திருமயிலை )
ராகம் - கீரவாணி
தாளம் - அங்தாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
இகல வருதிரை பெருகிய சலநிதி
நிலவு முலகினி லிகமுறு பிறவியி
னினிமை பெறவரு மிடருறு மிருவினை ...... யதுதீர
இசையு முனதிரு பதமலர் தனைமன
மிசைய நினைகிலி யிதமுற வுனதரு
ளிவர வுருகிலி அயர்கிலி தொழுகிலி ...... உ மைபாகர்
மகிழு மகவென அறைகிலி நிறைகிலி
மடமை குறைகிலி மதியுணர் வறிகிலி
வசன மறவுறு மவுனமொ டுறைகிலி ...... மடமாதர்
மயம தடரிட இடருறு மடியனு
மினிமை தருமுன தடியவ ருடனுற
மருவ அருள்தரு கிருபையின் மலிகுவ ...... தொருநாளே
சிகர தனகிரி குறமக ளினிதுற
சிலத நலமுறு சிலபல வசனமு
திறைய அறைபயி லறுமுக நிறைதரு ...... மருணீத
சிரண புரணவி தரணவி சிரவண
சரணு சரவண பவகுக சயனொளி
திரவ பரவதி சிரமறை முடிவுறு ...... பொருணீத
அகர உ கரதி மகரதி சிகரதி
யகர அருளதி தெருளதி வலவல
அரண முரணுறு மசுரர்கள் கெடஅயில் ...... விடுவோனே
அழகு மிலகிய புலமையு மகிமையும்
வளமு முறைதிரு மயிலையி லநுதின
மமரு மரகர சிவசுத அடியவர் ...... பெருமாளே.
பாடல் 692 ( திருமயிலை )
ராகம் -....; தாளம் -
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
இணையதில தாமி ரண்டு கயல்களென வேபு ரண்டு
இருகுழையின் மீத டர்ந்து ...... அமராடி
இலகுசிலை வேள்து ரந்த கணையதிலு மேசி றந்த
இருநயனர் வாரி ணங்கு ...... மதபாரப்
பணைமுலையின் மீத ணிந்த தரளமணி யார்து லங்கு
பருவரதி போல வந்த ...... விலைமானார்
பயிலுநடை யாலு ழன்று அவர்களிட மோக மென்ற
படுகுழியி லேம யங்கி ...... விழலாமோ
கணகணென வீர தண்டை சரணமதி லேவி ளங்க
கலபமயில் மேலு கந்த ...... குமரேசா
கறுவிவரு சூர னங்க மிருபிளவ தாக விண்டு
கதறிவிழ வேலெ றிந்த ...... முருகோனே
மணிமகுட வேணி கொன்றை அறுகுமதி யாற ணிந்த
மலையவிலி னாய கன்றன் ...... ஓருபாக
மலையரையன் மாது தந்த சிறுவனென வேவ ளர்ந்து
மயிலைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
பாடல் 693 ( திருமயிலை )
ராகம் - ....; தாளம் -
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான
களபமணி யார முற்ற வனசமுலை மீது கொற்ற
கலகமத வேள்தொ டுத்த ...... கணையாலுங்
கனிமொழிமி னார்கள் முற்று மிசைவசைகள் பேச வுற்ற
கனலெனவு லாவு வட்ட ...... மதியாலும்
வளமையணி நீடு புஷ்ப சயனஅணை மீது ருக்கி
வனிதை மடல் நாடி நித்த ...... நலியாதே
வரியளியு லாவு துற்ற இருபுயம ளாவி வெற்றி
மலரணையில் நீய ணைக்க ...... வரவேணும்
துளபமணி மார்ப சக்ர தரனரிமு ராரி சர்ப்ப
துயிலதர னாத ரித்த ...... மருகோனே
சுருதிமறை வேள்வி மிக்க மயிலைநகர் மேவு முக்ர
துரகதக லாப பச்சை ...... மயில்வீரா
அளகைவணி கோர்கு லத்தில் வனிதையுயிர் மீள ழைப்ப
அருள்பரவு பாடல் சொற்ற ...... குமரேசா
அருவரையை நீறெ ழுப்பி நிருதர்தமை வேர றுத்து
அமரர்பதி வாழ வைத்த ...... பெருமாளே.
பாடல் 694 ( திருமயிலை )
ராகம் - கல்யாண வஸந்தம்
தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
கடிய வேக மாறாத விரத சூத ராபாதர்
கலக மேசெய் பாழ்மூடர் ...... வினைவேடர்
கபட வீன ராகாத இயல்பு நாடி யேநீடு
கனவி கார மேபேசி ...... நெறி பேணாக்
கொடிய னேது மோராது விரக சால ம்முடு
குடிலின் மேவி யேநாளு ...... மடியாதே
குலவு தோகை மீதாறு முகமும் வேலு மீராறு
குவளை வாகும் நேர்காண ...... வருவாயே
படியி னோடு மாமேரு அதிர வீசி யேசேட
பணமு மாட வேநீடு ...... வரைசாடிப்
பரவை யாழி நீர்மோத நிருதர் மாள வானாடு
பதிய தாக வேலேவு ...... மயில்வீரா
வடிவு லாவி யாகாச மிளிர்ப லாவி னீள்சோலை
வனச வாவி பூவோடை ...... வயலோடே
மணிசெய் மாட மாமேடை சிகர மோடு வாகான
மயிலை மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.
பாடல் 695 ( திருமயிலை )
ராகம் - சுபபந்துவராளி
தாளம் - கண்ட ஏகம் (5)
தனனா தனனாதன தனனா தனனாதன
தனனா தனனாதன ...... தனதான
திரைவார் கடல்சூழ்புவி தனிலே யுலகோரொடு
திரிவே னுனையோதுதல் ...... திகழாமே
தினநா ளுமுனேதுதி மனதா ரபினேசிவ
சுதனே திரிதேவர்கள் ...... தலைவாமால்
வரைமா துமையாள் தரு மணியே குகனேயென
அறையா வடியேனுமு ...... னடியாராய்
வழிபா டுறுவாரொடு அருளா தரமாயிடு
மகநா ளுளதோசொல ...... அருள்வாயே
இறைவா ரணதேவனு மிமையோ ரவரேவரு
மிழிவா கிமுனேயிய ...... லிலராகி
இருளா மனதேயுற அசுரே சர்களேமிக
இடரே செயவேயவ ...... ரிடர்தீர
மறமா வயிலேகொடு வுடலே யிருகூறெழ
மதமா மிகுசூரனை ...... மடிவாக
வதையே செயுமாவலி யுடையா யழகாகிய
மயிலா புரிமேவிய ...... பெருமாளே.
பாடல் 696 ( திருமயிலை )
ராகம் -....; தாளம் -
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன ...... தனதான
நிரைதரு மணியணி யார்ந்த பூரித
ம்ருகமத களபகில் சாந்து சேரிய
இளமுலை யுரமிசை தோய்ந்து மாமல ...... ரணைமீதே
நெகிழ்தர அரைதுகில் வீழ்ந்து மாமதி
முகம்வெயர் வெழவிழி பாய்ந்து வார்குழை
யொடுபொர இருகர மேந்து நீள்வளை ...... யொலிகூர
விரைமலர் செறிகுழல் சாய்ந்து நூபுர
மிசைதர இலவிதழ் மோந்து வாயமு
தியல்பொடு பருகிய வாஞ்சை யேதக ...... வியனாடும்
வினையனை யிருவினை யீண்டு மாழ்கட
லிடர்படு சுழியிடை தாழ்ந்து போமதி
யிருகதி பெறஅருள் சேர்ந்து வாழ்வது ...... மொருநாளே
பரையபி நவைசிவை சாம்ப வீயுமை
யகிலமு மருளரு ளேய்ந்த கோமளி
பயிரவி திரிபுரை யாய்ந்த நூல்மறை ...... சதகோடி
பகவதி யிருசுட ரேந்து காரணி
மலைமகள் கவுரிவி தார்ந்த மோகினி
படர்சடை யவனிட நீங்கு றாதவள் ...... தருகோவே
குரைகடல் மறுகிட மூண்ட சூரர்க
ளணிகெட நெடுவரை சாய்ந்து தூளெழ
முடுகிய மயில்மிசை யூர்ந்து வேல்விடு ...... முருகோனே
குலநறை மலரளி சூழ்ந்து லாவிய
மயிலையி லுறைதரு சேந்த சேவக
குகசர வணபவ வாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே.
பாடல் 697 ( திருமயிலை )
ராகம் - ....; தாளம் -
தனதன தத்தன தானா தானன
தனதன தத்தன தானா தானன
தனதன தத்தன தானா தானன ...... தனதான
வருமயி லொத்தவ ணவார் மாமுக
மதியென வைத்தவர் தாவா காமிகள்
வரிசையின் முற்றிய வாகா ராமியல் ...... மடமாதர்
மயலினி லுற்றவர் மோகா வாரிதி
யதனிடை புக்கவ ராளாய் நீணிதி
தருவிய லுத்தர்கள் மாடா மாமதி ...... மிக்முழ்கி
தருபர வுத்தம வேளே சீருறை
அறுமுக நற்றவ லீலா கூருடை
அயிலுறை கைத்தல சீலா பூரண ...... பரயோக
சரவண வெற்றிவி நோதா மாமணி
தருமர வைக்கடி நீதா வாமணி
மயிலுறை வித்தவு னாதா ராமணி ...... பெறுவேனோ
திரிரிரி தித்திதி தீதீ தீதிதி
தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு
திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி ...... தொதிதீதோ
தெனவரி மத்தள மீதார் தேமுழ
திடுவென மிக்கியல் வேதா வேதொழு
திருநட மிட்டவர் காதே மூடிய ...... குருபோதம்
உ ரை செயு முத்தம வீரா நாரணி
உ மையவ ளுத்தர பூர்வா காரணி
உ றுஜக ரக்ஷணி நீரா வாரணி ...... தருசேயே
உ யர்வர முற்றிய கோவே யாரண
மறைமுடி வித்தக தேவே காரண
ஒருமயி லைப்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
பாடல் 698 ( திருவான்மியூர் )
ராகம் - தர்மவதி
தாளம் - அங்கதாளம் (5)
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தனதான தானதன தனதான தானதன
தனதான தானதன ...... தனதான
குசமாகி யாருமலை மரைமாநு ணூலினிடை
குடிலான ஆல்வயிறு ...... குழையூடே
குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர்
குழல்கார தானகுண ...... மிலிமாதர்
புசவாசை யால்மனது உ னைநாடி டாதபடி
புலையேனு லாவிமிகு ...... புணர்வாகிப்
புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை
பொலிவான பாதமல ...... ரருள்வாயே
நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகு
நிகழ்பொத மானபர ...... முருகோனே
நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு
நிபுணாநி சாசரர்கள் ...... குலகாலா
திசைமாமு காழியரி மகவான்மு னோர்கள்பணி
சிவநாத ராலமயில் ...... அமுதேசர்
திகழ்பால மாகமுற மணிமாளி மாடமுயர்
திருவான்மி யூர்மருவு ...... பெருமாளே.
பாடல் 699 ( கோசைநகர் )
ராகம் -....; தாளம் -
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன ...... தனதான
ஆதவித பாரமுலை மாதரிடை நூல்வயிற
தாலிலையெ னாமதன ...... கலைலீலை
யாவும்விளை வானகுழி யானதிரி கோணமதி
லாசைமிக வாயடிய ...... னலையாமல்
நாதசத கோடிமறை யோலமிடு நூபுரமு
னானபத மாமலரை ...... நலமாக
நானநுதி னாதினமு மேநினைய வேகிருபை
நாடியரு ளேயருள ...... வருவாயே
சீதமதி யாடரவு வேரறுகு மாஇறகு
சீதசல மாசடில ...... பரமேசர்
சீர்மைபெற வேயுதவு கூர்மைதரு வேலசிவ
சீறிவரு மாவசுரர் ...... குலகாலா
கோதைகுற மாதுகுண தேவமட மாதுமிரு
பாலுமுற வீறிவரு ...... குமரேசா
கோசைநகர் வாழவரு மீசடியர் நேசசரு
வேசமுரு காவமரர் ...... பெருமாளே.
பாடல் 700 ( பெருங்குடி )
ராகம் - ....; தாளம் -
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன
தனந்தன தனந்தன ...... தனதான
தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர்
தழைந்தவு தரந்திகழ் ...... தசமாதஞ்
சமைந்தனர் பிறந்தனர் கிடந்தன ரிருந்தனர்
தவழ்ந்தனர் நடந்தனர் ...... சிலகாலந்
துலங்கு நலபெண்களை முயங்கினர் மயங்கினர்
தொடுந்தொழி லுடன்தம ...... க்ருகபாரஞ்
சுமந்தன ரமைந்தனர் குறைந்தன ரிறந்தனர்
சுடும்பினை யெனும்பவ ...... மொழியேனோ
இலங்கையி லிலங்கிய இலங்களு ளிலங்கரு
ளிலெங்கணு மிலங்கென ...... முறையோதி
இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட
எழுந்தருள் முகுந்தனன் ...... மருகோனே
பெலங்கொடு விலங்கலு நலங்கஅ யில்கொண்டெறி
ப்ரசண்டக ரதண்டமிழ் ...... வயலுரா
பெரும்பொழில் கரும்புக ளரம்பைகள் நிரம்பிய
பெருங்குடி மருங்குறை ...... பெருமாளே.
பாடல் 701 ( மாடம்பாக்கம் )
ராகம் - ....; தாளம் -
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன ...... தனதான
தோடு றுங் குழை யாலே கோல்வளை
சூடு செங்கைக ளாலே யாழ்தரு
கீத மென்குர லாலே தூமணி ...... நகையாலே
தூம மென்குழ லாலே யூறிய
தேனி லங்கித ழாலே யாலவி
லோச னங்களி னாலே சோபித ...... அழகாலே
பாட கம்புனை தாளா லேமிக
வீசு தண்பனி நீரா லேவளர்
பார கொங்கைக ளாலே கோலிய ...... விலைமாதர்
பாவ கங்களி னாலே யான்மயல்
மூழ்கி நின்றய ராதே நூபுர
பாத பங்கய மீதே யாள்வது ...... கருதாயோ
நாட ருஞ்சுடர் தானா வோதுசி
வாக மங்களி னானா பேதவ
நாத தந்த்ரக லாமா போதக ...... வடிவாகி
நால்வி தந்தரு வேதா வேதமு
நாடி நின்றதொர் மாயா தீதம
னோல யந்தரு நாதா ஆறிரு ...... புயவேளே
வாட யங்கியவேலா லேபொரு
சூர்த டிந்தருள் வீரா மாமயி
லேறு கந்தவி நோதா கூறென ...... அரனார்முன்
வாச கம்பிற வாதோர் ஞானசு
கோத யம்புகல் வாசா தேசிக
மாடை யம்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
பாடல் 702 ( மாடம்பாக்கம் )
ராகம் - ....; தாளம் -
தனன தத்தன தனன தத்தன
தனந்தந் தந்த தந்தா
------ 3 முறை ------ ...... தனதனா தனனா
விலைய றுக்கவு முலைம றைக்கவு
மணந்துன் றுஞ்செ ழுந்தார்
புனைமு கிற்குழல் தனைய விழ்க்கவும்
விடங்கஞ் சஞ்ச ரஞ்சேர்
விழிவெ ருட்டவு மொழிபு ரட்டவு
நிணந்துன் றுஞ்ச லம்பா ...... யுதிரநீ ருடனே
வெளியி னிற்கவும் வலிய முட்டரை
யெதிர்ந்தும் பின்தொ டர்ந்தே
யிலைசு ணப்பொடி பிளவெ டுத்திடை
திரும்பும் பண்ப ரன்றே
யெனவு ரைத்தவர் தமைவ ரப்பணி
யுடன்கொண் டன்பு டன்போய் ...... சயனபா யலின்மேல்
கலைநெ கிழ்க்கவு மயல்வி ளைக்கவு
நயங்கொண் டங்கி ருந்தே
குணுகி யிட்டுள பொருள்ப றித்தற
முனிந்தங் கொன்று கண்டே
கலக மிட்டவ ரகல டித்தபின்
வரும்பங் கங்கு ணங்கோர் ...... புதியபே ருடனே
கதைகள் செப்பவும் வலச மர்த்திகள்
குணங்கண் டுந்து ளங்கா
மனித னிற்சிறு பொழுது முற்றுற
நினைந்துங் கண்டு கந்தே
கடிம லர்ப்பத மணுகு தற்கறி
விலன் பொங்கும் பெரும்பா ...... தகனையா ளுவையோ
சிலைத னைக்கொடு மிகஅ டித்திட
மனந்தந் தந்தண ந்தா
மரைம லர்ப்பிர மனைந டுத்தலை
யரிந்துங் கொண்டி ரந்தே
திரிபு ரத்தெரி புகந கைத்தருள்
சிவன்பங் கங்கி ருந்தா ...... ளருளுமா முருகா
செருவி டத்தல கைகள் தெனத்தென
தெனந்தெந் தெந்தெ னந்தா
எனஇ டக்கைகள் மணிக ணப்பறை
டிகுண்டிங் குண்டி குண்டா
டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு
டிகுண்டிங் குண்டி குண்டீ ...... யெனஇரா வணனீள்
மலையெ னத்திகழ் முடிகள் பத்தையு
மிரண்டஞ் சொன்ப தொன்றேய்
பணைபு யத்தையு மொருவ கைப்பட
வெகுண்டம் பொன்றெ றிந்தோன்
மதலை மைத்துன அசுர ரைக்குடல்
திறந்தங் கம்பி ளந்தே ...... மயிலின்மேல் வருவாய்
வயல்க ளிற்கய லினமி குத்தெழு
வரம்பின் கண்பு ரண்டே
பெருக யற்கொடு சொரியு நித்தில
நிறைந்தெங் குஞ்சி றந்தே
வரிசை பெற்றுயர் தமனி யப்பதி
யிடங்கொண் டின்பு றுஞ்சீர் ...... இளைய நாயகனே.
பாடல் 703 ( கோடைநகர் )
ராகம் - மாயா மாளவ கெளளை
தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான
ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி யி ருந்து
ஆகமல மாகி நின்று ...... புவிமீதில்
ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து
ஆளழக னாகி நின்று ...... விளையாடிப்
பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து
பூமிதனில் வேணு மென்று ...... பொருள்தேடிப்
போகமதி லேயு ழன்று பாழவெளநேரகெய் தாம லுன்றன்
பூவடிகள் சேர அன்பு ...... தருவாயே
சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற
தீரனரி நார ணன்றன் ...... மருகோனே.
தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று
தேடஅரி தான வன்றன் ...... முருகோனே
கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற
கோமளிய நாதி தந்த ...... குமரேசா
கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
பாடல் 704 ( கோடைநகர் )
ராகம் -
தாளம் -
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான
சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து
சாமளவ தாக வந்து ...... புவிமீதே
சாதகமு மான பின்பு சீறியழு தேகி டந்து
தாரணியி லேத வழ்ந்து ...... விளையாடிப்
பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள்
பாரதன மீத ணைந்து ...... பொருள்தேடிப்
பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லொன்று
பாதமலர் சேர அன்பு ...... தருவாயே
ஆலமமு தாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள்
ஆடரவு பூணர் தந்த ...... முருகோனே
ஆனைமடு வாயி லன்று மூலமென வோல மென்ற
ஆதிமுதல் நார ணன்றன் ...... மருகோனே
கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை
கோவையமு தூற லுண்ட ...... குமரேசா
கூடிவரு சூர டங்க மாளவடி வேலெறிந்த
கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
பாடல் 705 ( கோடைநகர் )
ராகம் - ...; தாளம் -
தானா தானா தானா தானா
தானா தானா ...... தனதானா
ஏறா னாலே நீறாய் மாயா
வேளே வாசக் ...... கணையாலே
ஏயா வேயா மாயா வேயா
லாமே ழோசைத் ...... தொளையாலே
மாறா யூறா யீறாய் மாலாய்
வாடா மானைக் ...... கழியாதே
வாராய் பாராய் சேரா யானால்
வாடா நீபத் ...... தொடைதாராய்
சீறா வீறா ஈரேழ் பார்சூழ்
சீரார் தோகைக் ...... குமரேசா
தேவா சாவா மூவா நாதா
தீரா கோடைப் ...... பதியோனே
வேறாய் மாறா யாறா மாசூர்
வேர்போய் வீழப் ...... பொருதோனே
வேதா போதா வேலா பாலா
வீரா வீரப் ...... பெருமாளே.
பாடல் 706 ( கோடைநகர் )
ராகம் - ஹம்ஸாநந்தி
தாளம் - அங்கதாளம் (10)
(மிஸ்ர ஜம்பை /7 யு 0)
தகிட தக திமி-3 1/2, தகிட தக திமி-3 1/2, தகதிமிதக-3
தான தந்த தனத்த தத்த ...... தனதானா
ஞால மெங்கும் வளைத்த ரற்று ...... கடலாலே
நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் ...... வசையாலே
ஆலமுந்து மதித்த ழற்கும் ...... அழியாதே
ஆறி ரண்டு புயத்த ணைக்க ...... வருவாயே
கோல மொன்று குறத்தி யைத்த ...... ழுவுமார்பா
கோடை யம்பதி யுற்று நிற்கு ...... மயில்வீரா
கால னஞ்ச வரைத்தொ ளைத்த ...... முதல்வானோர்
கால்வி லங்கு களைத்த றித்த ...... பெருமாளே.
பாடல் 707 ( கோடைநகர் )
ராகம் - பிருந்தாவன ஸாரங்கா
தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகதிமி தகதிமி-4, தகிட தகதிமி-3 1/2
தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன ...... தனதான
தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள்
ஓதிய நன்றிம றந்த குண்டர்கள்
சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள் ...... பெரியோரைத்
தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்கள்
ஈவது கண்டுத கைந்த குண்டர்கள்
சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள் ...... தொலையாமல்
வாழநி னைந்துவ ருந்து குண்டர்கள்
நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள்
மானவ கந்தைமி குந்த குண்டர்கள் ...... வலையாலே
மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள்
தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள்
வாதைந மன்றன்வ ருந்தி டுங்குழி ...... விழுவாரே
ஏழு மரங்களும் வன்கு ரங்கெனும்
வாலியு மம்பர மும்ப ரம்பரை
ராவண னுஞ்சது ரங்க லங்கையு ...... மடைவேமுன்
ஈடழி யும்படி சந்த்ர னுஞ்சிவ
சூரிய னுஞ்சுர ரும்ப தம்பெற
ராம சரந்தொடு புங்க வன்திரு ...... மருகோனே
கோழி சிலம்பந லம்ப யின்றக
லாப நடஞ்செய மஞ்சு தங்கிய
கோபுர மெங்கும்வி ளங்கு மங்கல ...... வயலுரா
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்
வேல னெனும்பெய ரன்பு டன்புகழ்
கோடை யெனும்பதி வந்த இந்திரர் ...... பெருமாளே.
பாடல் 708 ( கோடைநகர் )
ராகம் - ...; தாளம் -
தானத் தானத் தானத் தானத்
தானத் தானத் ...... தனதான
தோடப் பாமற் றோய்தப் பாணிச்
சூழ்துற் றார்துற் ...... றழுவாருந்
தூரப் போகக் கோரப் பாரச்
சூலப் பாசச் ...... சமனாரும்
பாடைக் கூடத் தீயிற் றேறிப்
பாழ்பட் டேபட் ...... டழியாதே
பாசத் தேனைத் தேசுற் றார்பொற்
பாதத் தேவைத் ...... தருள்வாயே
ஆடற் சூர்கெட் டோ டத் தோயத்
தாரச் சீறிப் ...... பொரும்வேலா
ஆனைச் சேனைக் கானிற் றேனுக்
காரத் தாரைத் ...... தரும்வீரா
கூடற் பாடிக் கோவைப் பாவைக்
கூடப் பாடித் ...... திரிவோனே
கோலச் சாலிச் சோலைச் சீலக்
கோடைத் தேவப் ...... பெருமாளே.
பாடல் 709 ( கோடைநகர் )
ராகம் - ....; தாளம் -
தானத்த தான தந்த தானத்த தான தந்த
தானத்த தான தந்த ...... தனதான
வாசித்த நூல்ம தங்கள் பேசிக்கொ டாத விந்து
வாய்மைப்ர காச மென்று ...... நிலையாக
மாசிக்க பால மன்றில் நாசிக்கு ளோடு கின்ற
வாயுப்பி ராண னொன்று ...... மடைமாறி
யோசித்த யாரு டம்பை நேசித்து றாத லைந்து
ரோமத்து வார மெங்கு ...... முயிர்போக
யோகச்ச மாதி கொண்டு மோகப்ப சாசு மண்டு
லோகத்தில் மாய்வ தென்று ...... மொழியாதோ
வீசப்ப யோதி துஞ்ச வேதக்கு லால னஞ்ச
மேலிட்ட சூர்த டிந்த ...... கதிர்வேலா
வீரப்ர தாப பஞ்ச பாணத்தி னால்ம யங்கி
வேடிச்சி காலி லன்று ...... விழுவோனே
கூசிப்பு காவொ துங்க மாமற்றி காத ரிந்த
கூளப்பு ராரி தந்த ...... சிறியோனே
கோழிப்ப தாகை கொண்ட கோலக்கு மார கண்ட
கோடைக்குள் வாழ வந்த ...... பெருமாளே.
பாடல் 710 ( திருப்பேர்ருர் )
ராகம் - ...; தாளம் -
தனத்தா தானன தானா தானன
தனத்தா தானன தானா தானன
தனத்தா தானன தானா தானன ...... தனதான
அனுத்தே னேர்மொழி யாலே மாமய
லுடைத்தார் போலவு மோர்நா ளானதி
லடுத்தே தூதுகள் நூறா றானதும் ...... விடுவார்கள்
அழைத்தே வீடினி லேதா னேகுவர்
நகைத்தே மோடிக ளாவார் காதலொ
டடுத்தே மாமுலை மீதே மார்புற ...... அணைவார்பின்
குனித்தே பாகிலை யீவார் பாதியில்
கடிப்பார் வாயிதழ் வாய்நீ ரானது
குடிப்பார் தேனென நானா லீலைகள் ...... புரிவார்கள்
குறித்தே மாமய லாலே நீள்பொருள்
பறிப்பா ராசுகள் சூழ்மா பாதக
குணத்தார் மாதர்கள் மேலா சாவிட ...... அருள்வாயே
வனத்தே வேடுவர் மாதா மோர்மினை
யெடுத்தே தான்வர வேதான் யாவரும்
வளைத்தே சூழவு மோர்வா ளால்வெலும் ...... விறல்வீரா
மலர்த்தே னோடையி லோர்மா வானதை
பிடித்தே நீள்கர வாதா டாழியை
மனத்தா லேவிய மாமா லானவர் ...... மருகோனே
சினத்தே சூரர்கள் போராய் மாளவு
மெடுத்தோர் வேல்விடு தீரா தாரணி
திருத்தோ ளாஇரு பாதா தாமரை ...... முருகோனே
திருத்தேர் சூழ்மதி ளேரார் தூபிக
ளடுக்கார் மாளிகை யேநீ ளேருள
திருப்போ ரூருறை தேவா தேவர்கள் ...... பெருமாளே.
பாடல் 711 ( திருப்பேர்ருர் )
ராகம் - ....; தாளம் -
தனத்தா தான தந்த தனத்தா தான தந்த
தனத்தா தான தந்த ...... தனதான
உ ருக்கார் வாளி கண்கள் பொருப்பார் வார்த னங்கள்
உ கப்பார் வால சந்த்ர ...... னுதனூலாம்
உ ருச்சேர் நீண்ம ருங்குல் பணைத்தோ ளோதி கொண்ட
லுவப்பா மேல்வி ழுந்து ...... திரிவோர்கள்
அருக்கா மாதர் தங்கள் வரைக்கே யோடி யின்ப
வலைக்கே பூணு நெஞ்ச ...... னதிபாவி
அசட்டால் மூடு கின்ற மசக்கால் மாயு மிந்த
அவத்தா லீன மின்றி ...... யருள்வாயே
எருக்கார் தாளி தும்பை மருச்சேர் போது கங்கை
யினைச்சூ டாதி நம்பர் ...... புதல்வோனே
இருக்கா லேநி னைந்து துதிப்பார் நாவி னெஞ்சி
லிருப்பா யானை தங்கு ...... மணிமார்பா
செருக்கா லேமி குந்த கடற்சூர் மாள வென்ற
திறற்சேர் வேல்கை கொண்ட ...... முருகோனே
தினைக்கோர் காவல் கொண்ட குறத்தேன் மாது பங்க
திருப்போ ரூர மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 712 ( திருப்பேர்ருர் )
ராகம் - ....; தாளம் -
தான தானன தானன தான தானன தானன
தான தானன தானன ...... தனதான
சீரு லாவிய வோதிம மான மாநடை மாமயில்
சேய சாயல்க லாமதி ...... முகமானார்
தேனு லாவிய மாமொழி மேரு நேரிள மாமுலை
சேலு லாவிய கூர்விழி ...... குமிழ்நாசி
தாரு லாவிய நீள்குழல் வேய ளாவிய தோளியர்
சார்பி லேதிரி வேனைநி ...... னருளாலே
சாம வேதியர் வானவ ரோதி நாண்மலர் தூவிய
தாளில் வீழ வினாமிக ...... அருள்வாயே
காரு லாவிய நீள்புன வேடர் மால்வரை மீதுறை
காவல் மாதினொ டாவல்செய் ...... தணைவோனே
காண ஆகம வேதபு ராண நூல்பல வோதிய
கார ணாகரு ணாகர ...... முருகோனே
போரு லாவிய சூரனை வாரி சேறெழ வேல்விடு
பூப சேவக மாமயில் ...... மிசையோனே
போதன் மாதவன் மாதுமை பாதி யாதியு மேதொழு
போரி மாநகர் மேவிய ...... பெருமாளே.
பாடல் 713 ( திருப்பேர்ருர் )
ராகம் - பந்து வராளி
தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தானன தனன தானன தானன
தனன தானன தானன ...... தனதான
திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ
திமிர மேயரி சூரிய ...... திரிலோக
தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண
சிவசு தாவரி நாரணன் ...... மருகோனே
குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி
குணக லாநிதி நாரணி ...... தருகோவே
குருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுர
குறவர் மாமக ளாசைகொள் ...... மணியேசம்
பமர பாரப்ர பாருண படல தாரக மாசுக
பசுர பாடன பாளித ...... பகளேச
பசித பாரண வாரண துவச ஏடக மாவயில்
பரவு பாணித பாவல ...... பரயோக
சமப ராமத சாதல சமய மாறிரு தேவத
சமய நாயக மாமயில் ...... முதுவீர
சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு
சமர மாபுரி மேவிய ...... பெருமாளே.
பாடல் 714 ( உ த்தரம்ருர் )
ராகம் - காபி
தாளம் - அங்கதாளம் (5 1/2)
(எடுப்பு - 1/2 தள்ளி)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தனன தனதான தனன தனன தனதான
தனன தனன தனதான ...... தனதான
சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவேர்கள்
துகரி லிருடி யெழுபேர்கள் ...... சுடர்மூவர்
சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர்
தொலைவி லுடுவி னுலகோர்கள் ...... மறையோர்கள்
அரிய சமய மொருகோடி அமாரர் சரணர் சதகோடி
அரிய மயனு மொருகொடி ...... யிவர்கூடி
அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும்
அறிவு ளறியு மறிவூர ...... அருள்வாயே
வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியு மழிவாக
மகர சலதி அளறாக ...... முதுசூரும்
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக
மவுலி சிதறி இரைதேடி ...... வருநாய்கள்
நரிகள் கொடிகள் பசியாற உ திர நதிக ளலைமோத
நமனும் வெருவி யடிபேண ...... மயிலேறி
நளின வுபய கரவேலை முடுகு முருக வடமேரு
நகரி யுறையு மிமையோர்கள் ...... பெருமாளே.
பாடல் 715 ( உ த்தரம்ருர் )
ராகம் - ஸிந்து பைரவி
தாளம் - ஆதி - திஸ்ர நடை (12)
தான தந்த தான தந்த தான தந்த தான தந்த
தான தந்த தான தந்த ...... தனதான
தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு
சொரி பிண்ட மாயு ருண்டு ...... வடிவான
தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து
சோரு மிந்த நோய கன்று ...... துயராற
ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்வி ரிஞ்ச
னார ணங்க ளாக மங்கள் ...... புகழ்தாளும்
ஆன னங்கள் மூவி ரண்டு மாறி ரண்டு தோளு மங்கை
யாடல் வென்றி வேலு மென்று ...... நினைவேனோ
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி யம்பை
வாணி பஞ்ச பாணி தந்த ...... முருகோனே
மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து
வாழ்பெ ருஞ்ச ராச ரங்க ...... ளுறைவோனே
வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு
வேடர் மங்கை யோடி யஞ்ச ...... அணைவோனே
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற
மேரு மங்கை யாள வந்த ...... பெருமாளே.
பாடல் 716 ( உ த்தரம்ருர் )
ராகம் - ...;: தாளம் -
தானனத் தனதான தானனத் தனதான
தானனத் தனதான ...... தனதான
நீள்புயற் குழல்மாதர் பேரினிற் க்ருபையாகி
நேசமுற் றடியேனு ...... நெறிகெடாய்
நேமியிற் பொருள்தேடி யோடியெய்த் துளம்வாடி
நீதியிற் சிவவாழ்வை ...... நினையாதே
பாழினுக் கிரையாய நாமம்வைத் தொருகோடி
பாடலுற் றிடவேசெய் ...... திடுமோச
பாவியெப் படிவாழ்வ னேயர்கட் குளதான
பார்வைசற் றருளோடு ...... பணியாயோ
ஆழியிற் றுயில்வோனு மாமலர்ப் பிரமாவு
மாகமப் பொருளோரு ...... மனைவோரும்
ஆனைமத் தகவோனும் ஞானமுற் றியல்வோரு
மாயிரத் திருநூறு ...... மறையோரும்
வாழுமுத் தரமேருர் மேவியற் புதமாக
வாகுசித் திரதோகை ...... மயிலேறி
மாறெனப் பொருசூர னீறெழப் பொரும்வேல
மான்மகட் குளனான ...... பெருமாளே.
பாடல் 717 ( உ த்தரம்ருர் )
ராகம் - ....; தாளம் -
தான தந்தன தத்தா தத்தன
தான தந்தன தத்தா தத்தன
தான தந்தன தத்தா தத்தன ...... தனதான
மாதர் கொங்கையில் வித்தா ரத்திரு
மார்பி லங்கியல் முத்தா ரத்தினில்
வாச மென்குழ லிற்சே லைப்பொரும் ...... விழிவேலில்
மாமை யொன்றும லர்த்தாள் வைப்பினில்
வாகு வஞ்சியில் மெய்த்தா மத்தினில்
வானி ளம்பிறை யைப்போல் நெற்றியில் ...... மயலாகி
ஆத ரங்கொடு கெட்டே யிப்படி
ஆசை யின்கட லுக்கே மெத்தவும்
ஆகி நின்றுத வித்தே நித்தலும் ...... அலைவேனோ
ஆறி ரண்டுப ணைத்தோ ளற்புத
ஆயி ரங்கலை கத்தா மத்திப
னாயு ழன்றலை கிற்பே னுக்கருள் ...... புரிவாயே
சாத னங்கொடு தத்தா மெத்தென
வேந டந்துபொய் பித்தா வுத்தர
மேதெ னும்படி தற்காய் நிற்பவர் ...... சபையூடே
தாழ்வில் சுந்தர னைத்தா னொற்றிகொள்
நீதி தந்திர நற்சார் புற்றருள்
சால நின்றுச மர்த்தா வெற்றிகொ ...... ளரன்வாழ்வே
வேத முங்கரி யைச்சூழ் நித்தமும்
வேள்வி யும்புவி யிற்றா பித்தருள்
வேர்வி ழும்படி செய்த்தேர் மெய்த்தமிழ் ...... மறையோர்வாழ்
மேரு மங்கையி லத்தா வித்தக
வேலொ டும்படை குத்தா வொற்றிய
வேடர் மங்கைகொள் சித்தா பத்தர்கள் ...... பெருமாளே.
பாடல் 718 ( மதுராந்தகம் )
ராகம் - ....; தாளம் -
தனதாந்த தத்த தனன தத்தத்
தந்த தத்த தந்த ...... தனதான
குதிபாய்ந்தி ரத்தம் வடிதொ ளைத்தொக்
கிந்த்ரி யக்கு ரம்பை ...... வினைகூர்தூர்
குணபாண்ட முற்ற கிலமெ னக்கைக்
கொண்டி ளைத்த யர்ந்து ...... சுழலாதே
உ திதாம்ப ரத்தை யுயிர்கெ டப்பொற்
கிண்கி ணிச்ச தங்கை ...... விதகீத
உ பயாம்பு யப்பு ணையையி னிப்பற்
றுங்க ருத்தை யென்று ...... தருவாயே
கதைசார்ங்க கட்கம் வளைய டற்சக்
ரந்த ரித்த கொண்டல் ...... மருகோனே
கருணாஞ்ச னக்க மலவி ழிப்பொற்
பைம்பு னக்க ரும்பின் ...... மணவாளா
மதனாந்த கர்க்கு மகவெ னப்பத்
மந்த னிற்பி றந்த ...... குமரேசா
மதுராந்த கத்து வடதி ருச்சிற்
றம்ப லத்த மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 719 ( மதுராந்தகம் )
ராகம் - பூர்வி கல்யாணி
தாளம் - அங்கதாளம் (15)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதாந்த தத்த தனன தத்தத்
தந்த தத்த தந்த ...... தனதான
சயிலாங்க னைக்கு ருகியி டப்பக்
கங்கொ டுத்த கம்பரிநன் ...... வெகுசாரி
சதிதாண்ட வத்தர் சடையி டத்துக்
கங்கை வைத்த நம்பர் ...... உ ரைமாளச்
செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
த்வம்பெ றப்ப கர்ந்த ...... வுபதேசஞ்
சிறியேன்த னக்கு முரைசெ யிற்சற்
றுங்கு ருத்து வங்கு ...... றையுமோதான்
அயில்வாங்கி யெற்றி யுததி யிற்கொக்
கன்ற னைப்பி ளந்து ...... சுரர்வாழ
அகிலாண்ட முற்று நொடியி னிற்சுற்
றுந்தி றற்ப்ர சண்ட ...... முழுநீல
மயில்தாண்ட விட்டு முதுகு லப்பொற்
குன்றி டித்த சங்க்ர ...... மவிநோதா
மதுராந்த கத்து வடதி ருச்சிற்
றம்ப லத்த மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 720 ( மதுராந்தகம் )
ராகம் - ....; தாளம் -
தனதாந்தன தானன தந்தன
தனதாந்தன தானன தந்தன
தனதாந்தன தானன தந்தன ...... தந்ததான
மனைமாண்சுத ரான சுணங்கரு
மனம்வேந்திணை யான தனங்களு
மடிவேன்றனை யீண அணங்குறு ...... வம்பராதி
மயமாம்பல வான கணங்குல
மெனப்ராந்தியும் யானென தென்றுறு
வணவாம்பிர மாத குணங்குறி ...... யின்பசார
இனவாம்பரி தான்ய தனம்பதி
விடஏன்றெனை மோன தடம்பர
மிகுதாம்பதி காண கணங்கன ...... வும்பரேசா
இடவார்ந்தன சானு நயம்பெறு
கடகாங்கர சோண வியம்பர
இடாமங்கன தாளரு ளும்படி ...... யென்றுதானோ
தனதாந்தன தான தனந்தன
தெனதோங்கிட தோன துனங்கிட
தனவாம்பர மான நடம்பயில் ...... எம்பிரானார்
தமதாஞ்சுத தாபர சங்கம
மெனவோம்புறு தாவன வம்படர்
தகுதாம்பிர சேவித ரஞ்சித ...... வும்பர்வாழ்வே
முனவாம்பத மூடிக வந்தன
முயல்வான்பிடி மாடிமை யைங்கரர்
முகதாம்பின மேவுறு சம்ப்ரம ...... சங்கணாறு
முககாம்பிர மோடமர் சம்பன
மதுராந்தக மாநக ரந்திகழ்
முருகாந்திர மோடம ரும்பர்கள் ...... தம்பிரானே.
பாடல் 721 ( சேயூர் )
ராகம் - ...; தாளம் -
தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன ...... தனதான
முகிலாமெனும் வார்குழ லார்சிலை
புருவார்கயல் வேல்விழி யார்சசி
முகவார்தர ளாமென வேநகை ...... புரிமாதர்
முலைமாலிணை கோபுர மாமென
வடமாடிட வேகொடி நூலிடை
முதுபாளித சேலைகு லாவிய ...... மயில்போல்வார்
அகிசேரல்கு லார்தொடை வாழையின்
அழகார்கழ லார்தர வேய்தரு
அழகார்கன நூபுர மாடிட ...... நடைமேவி
அனமாமென யாரையு மால்கொள
விழியால்சுழ லாவிடு பாவையர்
அவர்பாயலி லேயடி யேனுட ...... லழிவேனோ
ககனார்பதி யோர்முறை கோவென
இருள்காரசு ரார்படை தூள்பட
கடலேழ்கிரி நாகமு நூறிட ...... விடும்வேலா
கமலாலய நாயகி வானவர்
தொழுமீசுர னாரிட மேவிய
கருணாகர ஞானப ராபரை ...... யருள்பாலா
மகிழ்மாலதி நாவல்ப லாகமு
குடனாடநி லாமயில் கோகில
மகிழ்நாடுறை மால்வளி நாயகி ...... மணவாளா
மதிமாமுக வாவடி யேனிரு
வினைதூள் பட வேயயி லேவிய
வளவாபுரி வாழ்மயில் வாகன ...... பெருமாளே.
பாடல் 722 ( திருவக்கரை )
ராகம் - குந்தலவராளி
தாளம் - ஆதி
தனதன தத்தன தனதன தத்தன
தனதன தத்தன ...... தனதானா
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
தொழிவ துனைச்சிறி ...... துரையாதே
கருவழிதத்திய மடுவ தனிற்புகு
கடுநர குக்கிடை ...... யிடைவீழா
உ லகு தனிற்பல பிறவி தரித்தற
வுழல்வது விட்டினி ...... யடிநாயேன்
உ னதடி மைத்திரள் அதனினு முட்பட
வுபய மலர்ப்பத ...... மருள்வாயே
குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
நிசிசர னைப்பொரு ...... மயில்வீரா
குணதர வித்தக குமர புனத்திடை
குறமக ளைப்புணர் ...... மணிமார்பா
அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு
மணிதிரு வக்கரை ...... யுறைவோனே
அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன
அவைதரு வித்தருள் ...... பெருமாளே.
பாடல் 723 ( திருவக்கரை )
ராகம் - ....; தாளம் -
தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான
பச்சிலை யிட்டுமு கத்தைமி னுக்கிகள்
குத்திர வித்தைமி குத்தச மர்த்திகள்
பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிட ...... நினைவோர்கள்
பத்திநி ரைத்தவ ளத்தர ளத்தினை
யொத்தந கைப்பில்வி ழிப்பில்ம யக்கிகள்
பக்ஷமி குத்திட முக்கனி சர்க்கரை ...... யித்ழுறல்
எச்சி லளிப்பவர் கச்சணி மெத்தையில்
இச்சக மெத்தவு ரைத்துந யத்தொடு
மெத்திய ழைத்துஅ ணைத்தும யக்கிடு ...... மடமாதர்
இச்சையி லிப்படி நித்தம னத்துயர்
பெற்றுல கத்தவர் சிச்சியெ னத்திரி
இத்தொழி லிக்குணம் விட்டிட நற்பத ...... மருள்வாயே
நச்சர விற்றுயில் பச்சைமு கிற்கரு
ணைக்கடல் பத்மம லர்த்திரு வைப்புணர்
நத்துதரித்தக ரத்தர்தி ருத்துள ...... வணிமார்பர்
நட்டந டுக்கட லிற்பெரு வெற்பினை
நட்டர வப்பணி சுற்றிம தித்துள
நத்தமு தத்தையெ ழுப்பிய ளித்தவர் ...... மருகோனே
கொச்சைமொ ழிச்சிக றுத்தவி ழிச்சிசி
றுத்தஇ டைச்சிபெ ருத்தத னத்திகு
றத்தித னக்கும னப்ரிய முற்றிடு ...... குமரேசா
கொத்தவிழ் பத்மம லர்ப்பழ னத்தொடு
குற்றம றக்கடி கைப்புனல் சுற்றிய
கொட்புள நற்றிரு வக்கரை யுற்றுறை ...... பெருமாளே.
பாடல் 724 ( சிறுவை )
ராகம் - ஸிந்து பைரவி
தாளம் - கண்டசாபு (2 1/2)
(எடுப்பு - 3/4 தள்ளி)
தந்ததன தனதான தந்ததன தனதான
தந்ததன தனதான ...... தனதான
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உ ருமாற
அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா
புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறருப
தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா
சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.
பாடல் 725 ( சிறுவை )
ராகம் - கேதாரம்
தாளம் - அங்கதாளம் (8 1/2)
(எடுப்பு - 1/2 தள்ளி)
தகதிமி தகதிமி-4, தகதகிட-2 1/2, தகதிமி-2
தானன தானன தானான தானன
தானன தானன தானான தானன
தானன தானன தானான தானன ...... தனதான
சீதள வாரிஜ பாதாந மோநம
நாரத கீதவி நோதாந மோநம
சேவல மாமயில் ப்ணதாந மோநம ...... மறைதேடுஞ்
சேகர மானப்ர தாபாந மோநம
ஆகம சாரசொ ரூபாந மோநம
தேவர்கள் சேனைம கீபாந மோநம ...... கதிதோயப்
பாதக நீவுகு டாராந மோநம
மாவசு ரேசக டோ ராந மோநம
பாரினி லேஜய வீராந மோநம ...... மலைமாது
பார்வதி யாள்தரு பாலாந மோநம
நாவல ஞானம னோலாந மோநம
பாலகு மாரசு வாமீந மோநம ...... அருள்தாராய்
போதக மாமுக னேரான சோதர
நீறணி வேணியர் நேயாப்ர பாகர
பூமக ளார்மரு கேசாம கோததி ...... யிகல்சூரா
போதக மாமறை ஞானாத யாகர
தேனவிழ் நீபந றாவாரு மார்பக
பூரண மாமதி போலாறு மாமுக ...... முருகேசா
மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
மாநில மேழினு மோலான நாயக ...... வடிவேலா
வானவ ரூரினும் வீறாகி வீறள
காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் ...... பெருமாளே.
பாடல் 726 ( சிறுவை )
ராகம் - பீம்பளாஸ்
தாளம் - ஆதி - திஸ்ரநடை (12)
தனன தான தனன தந்த தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த ...... தனதான
பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து
பிணிக ளான துயரு ழன்று ...... தடுமாறிப்
பெருகு தீய வினையி னொந்து கதிக டோ று மலைபொ ருந்தி
பிடிப டாத ஜனன நம்பி ...... யழியாதே
நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த
நளின பாத மெனது சிந்தை ...... யகலாதே
நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி
நலன தாக அடிய னென்று ...... பெறுவேனோ
பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்று
பொருநி சாச ரனைநி னைந்து ...... வினைநாடிப்
பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து
புளக மேவ தமிழ்பு னைந்த ...... முருகோனே
சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல்
சிலையி ராம னுடனெ திர்ந்து ...... சமராடிச்
செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த
சிறுவை மேவி வரமி குந்த ...... பெருமாளே.
பாடல் 727 ( சிறுவை )
ராகம் - ...; தாளம் -
தான தந்தன தானன தானன
தான தந்தன தானன தானன
தான தந்தன தானன தானன ...... தனதான
வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள்
காத லின்பொருள் மேவின பாதகர்
வீணில் விண்டுள நாடிய ரூமைகள் ...... விலைகூறி
வேளை யென்பதி லாவசை பேசியர்
வேசி யென்பவ ராமிசை மோகிகள்
மீது நெஞ்சழி யாசையி லேயுழல் ...... சிறியேனும்
மால யன்பர னாரிமை யோர்முனி
வோர் புரந்தர னாதிய ரேதொழ
மாத வம்பெறு தாளிணை யேதின ...... மறவாதே
வாழ்த ருஞ்சிவ போகந னூனெறி
யேவி ரும்பி வினாவுட னேதொழ
வாழ்வ ரந்தரு வாயடி யேனிடர் ...... களைவாயே
நீல சுந்தரி கோமளி யாமளி
நாட கம்பயில் நாரணி பூரணி
நீடு பஞ்சவி சூலினி மாலினி ...... யுமைகாளி
நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ
காம சுந்தரி யேதரு பாலக
நீர்பொ ருஞ்சடை யாரருள் தேசிக ...... முருகேச
ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற
மாநி லங்களெ லாநிலை யேதரு
ஆய னந்திரு வூரக மால்திரு ...... மருகோனே
ஆட கம்பயில் கோபுர மாமதி
லால யம்பல வீதியு மேநிறை
வான தென்சிறு வாபுரி மேவிய ...... பெருமாளே.
பாடல் 728 ( திருவாமாத்தூர் )
ராகம் - ....; தாளம் -
தனதன தான தானன, தனதன தான தானன
தனதன தான தானன ...... தனதான
அடல்வடி வேல்கள் வாளிக ளவைவிட வோடல் நேர்படு
மயில்விழி யாலு மாலெனு ...... மதவேழத்
தளவிய கோடு போல்வினை யளவள வான கூர்முலை
யதின்முக மூடு மாடையி ...... னழகாலுந்
துடியிடை யாலும் வாலர்கள் துயர்வுற மாய மாயொரு
துணிவுட னூடு மாதர்கள் ...... துணையாகத்
தொழுதவர் பாத மோதியுன் வழிவழி யானெ னாவுயர்
துலையலை மாறு போலுயிர் ...... சுழல்வேனோ
அடவியி னூடு வேடர்க ளரிவையொ டாசை பேசியு
மடிதொழு தாடு மாண்மையு ...... முடையோனே
அழகிய தோளி ராறுடை அறுமுக வேளெ னாவுனை
அறிவுட னோது மாதவர் ...... பெருவாழ்வே
விடையெறு மீசர் நேசமு மிகநினை வார்கள் தீவினை
யுகநெடி தோட மேலணை ...... பவர்மூதூர்
விரைசெறி தோகை மாதர்கள் விரகுட னாடு மாதையில்
விறல்மயில் மீது மேவிய ...... பெருமாளே.
பாடல் 729 ( திருவாமாத்தூர் )
ராகம் - ....; தாளம் -
தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன
தந்த தத்தன தானாதன ...... தனதான
கண்க யற்பிணை மானொடுற வுண்டெ னக்கழை தோளானது
நன்க மைக்கின மாமமென ...... முகையான
கஞ்ச மொத்தெழு கூர்மாமுலை குஞ்ச ரத்திரு கோடோ டுற
விஞ்சு மைப்பொரு கார்கோதைகொ ...... டுயர்காலன்
பெண்ட னக்குள கோலாகல மின்றெ டுத்திளை யோராவிகள்
மன்பி டிப்பது போல்நீள்வடி ...... வுடைமாதர்
பின்பொ ழித்திடு மாமாயையி லன்பு வைத்தழி யாதேயுறு
கிஞ்சி லத்தனை தாள்பேணிட ...... அருள்தாராய்
விண்ட னக்குற வானோனுடல் கண்ப டைத்தவன் வேதாவொடு
விண்டு வித்தகன் வீழ்தாளினர் ...... விடையேறி
வெந்த னத்துமை யாள்மேவிய சந்த னப்புய மாதீசுரர்
வெங்க யத்துரி யார்போர்வையர் ...... மிகுவாழ்வே
தண்பு டைப்பொழில் சூழ்மாதையில் நண்பு வைத்தருள் தாராதல
முங்கி ளைத்திட வானீள்திசை ...... யொடுதாவித்
தண்டரக் கர்கள் கோகோவென விண்டி டத்தட மாமீமிசை
சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே.
பாடல் 730 ( திருவாமாத்தூர் )
ராகம் - ....; தாளம் -
தனதன தானத் தானன, தனதன தானத் தானன
தனதன தானத் தானன ...... தனதான
கருமுகில் போல்மட் டாகிய அளகிகள் தேனிற் பாகொடு
கனியமு தூறித் தேறிய ...... மொழிமாதர்
கலவிகள் நேரொப் பாகிகள் மதனிகள் காமக் க்ரோதிகள்
கனதன பாரக் காரிகள் ...... செயலோடே
பொருகயல் வாளைத் தாவிய விழியினர் சூறைக் காரிகள்
பொருளள வாசைப் பாடிகள் ...... புவிமீதே
பொதுவிகள் போகப் பாவிகள் வசமழி வேனுக் கோரருள்
புரிவது தானெப் போதது ...... புகல்வாயே
தருவடு தீரச் சூரர்கள் அவர்கிளை மாளத் தூளெழ
சமனிலை யேறப் பாறொடு ...... கொடிவீழத்
தனதன தானத் தானன எனஇசை பாடிப் பேய்பல
தசையுண வேல்விட் டேவிய ...... தனிவீரா
அரிதிரு மால்சக் ராயுத னவனிளை யாள் முத் தார்நகை
அழகுடை யாள்மெய்ப் பாலுமை ...... யருள்பாலா
அரவொடு பூளைத் தார்மதி அறுகொடு வேணிச் சூடிய
அழகர்தென் மாதைக் கேயுறை ...... பெருமாளே.
பாடல் 731 ( திருவாமாத்தூர் )
ராகம் - ....; தாளம் -
தான தனதன தனதன தனதன
தான தனதன தனதன தனதன
தான தனதன தனதன தனதன ...... தனதான
கால முகிலென நினைவுகொ டுருவிலி
காதி யமர்பொரு கணையென வடுவகிர்
காணு மிதுவென இளைஞர்கள் விதவிடு ...... கயலாலுங்
கான மமர்குழ லரிவையர் சிலுகொடு
காசி னளவொரு தலையணு மனதினர்
காம மிவர்சில கபடிகள் படிறுசொல் ...... கலையாலுஞ்
சால மயல்கொடு புளகித கனதன
பார முறவண முருகவிழ் மலரணை
சாயல் தனின்மிகு கலவியி லழிவுறும் ...... அடியேனைச்
சாதி குலமுறு படியினின் முழுகிய
தாழ்வ தறஇடை தருவன வெளியுயர்
தாள தடைவது தவமிக நினைவது ...... தருவாயே
வேலை தனில்விழி துயில்பவ னரவணை
வேயி னிசையது நிரைதனி லருள்பவன்
வீர துரகத நரபதி வனிதையர் ...... கரமீதே
வேறு வடிவுகொ டுறிவெணெய் தயிரது
வேடை கெடவமு தருளிய பொழுதினில்
வீசு கயிறுட னடிபடு சிறியவ ...... னதிகோப
வாலி யுடனெழு மரமற நிசிசரன்
வாகு முடியொரு பதுகர மிருபது
மாள வொருசரம் விடுமொரு கரியவன் ...... மருகோனே
வாச முறுமலர் விசிறிய பரிமள
மாதை நகர்தனி லுறையுமொ ரறுமுக
வானி லடியவ ரிடர்கெட அருளிய ...... பெருமாளே.
பாடல் 732 ( தச்சூர் )
ராகம் - ...; தாளம் -
தத்தா தனத்தான தாத்தத் தனந்த
தத்தா தனத்தான தாத்தத் தனந்த
தத்தா தனத்தான தாத்தத் தனந்த ...... தனதான
அச்சா யிறுக்காணி காட்டிக் கடைந்த
செப்பார் முலைக்கோடு நீட்டிச் சரங்க
ளைப்போல் விழிக்கூர்மை நோக்கிக் குழைந்து ...... உ றவாடி
அத்தா னெனக்காசை கூட்டித் தயங்க
வைத்தா யெனப்பேசி மூக்கைச் சொறிந்து
அக்கா லொருக்கால மேக்கற் றிருந்தி ...... ரிலையாசை
வைச்சா யெடுப்பான பேச்சுக் கிடங்க
ளொப்பா ருனக்கீடு பார்க்கிற் கடம்பன்
மட்டோ எனப்பாரின் மூர்க்கத் தனங்க ...... ளதனாலே
மைப்பா கெனக்கூறி வீட்டிற் கொணர்ந்து
புற்பா யலிற்காலம் வீற்றுக் கலந்து
வைப்பார் தமக்காசை யாற்பித் தளைந்து ...... திரிவேனோ
எச்சாய் மருட்பாடு மேற்பட் டிருந்த
பிச்சா சருக்கோதி கோட்டைக் கிலங்க
மிக்கா நினைப்போர்கள் வீக்கிற் பொருந்தி ...... நிலையாயே
எட்டா மெழுத்தேழை யேற்குப் பகர்ந்த
முத்தா வலுப்பான போர்க்குட் டொடங்கி
யெக்காலு மக்காத சூர்க்கொத் தரிந்த ...... சினவேலா
தச்சா மயிற்சேவ லாக்கிப் பிளந்த
சித்தா குறப்பாவை தாட்குட் படிந்து
சக்காகி யப்பேடை யாட்குப் புகுந்து ...... மணமாகித்
தப்பாம லிப்பூர்வ மேற்குத் தரங்கள்
தெற்காகு மிப்பாரில் கீர்த்திக் கிசைந்த
தச்சூர் வடக்காகு மார்க்கத் தமர்ந்த ...... பெருமாளே.
பாடல் 733 ( திருக்கோவலுர் )
ராகம் - ....; தாளம் -
தான தானன தானன, தான தானன தானன
தான தானன தானன ...... தனதான
பாவ நாரிகள் மாமட மாதர் வீணிக ளாணவ
பாவை யாரிள நீரன ...... முலையாலும்
பார்வை யாமிகு கூரயி லாலு மாமணி யார்குழை
பார காரன வார்குழ ...... லதனாலுஞ்
சாவ தார விதாரமு தார்த ராவித ழாலித
சாத மூரலி தாமதி ...... முகமாலுஞ்
சார்வ தாவடி யேனிடர் வீற மாலறி வேமிகு
சார மாயதி லேயுற ...... லொழிவேனோ
ஆவ ஆர்வன நான்மறை யாதி மூல பராவரி
யாதி காணரி தாகிய ...... பரமேச
ஆதி யாரருள் மாமுரு கேச மால்மரு கேசுர
னாதி தேவர்க ளியாவர்கள் ...... பணிபாத
கோவ தாமறை யோர்மறை யோது மோதம் விழாவொலி
கோடி யாகம மாவொலி ...... மிகவீறும்
கோவை மாநகர் மேவிய வீர வேலயி லாயுத
கோதை யானையி னோடமர் ...... பெருமாளே.
பாடல் 734 ( தேவனூர் )
ராகம் - நாட்டகுறிஞ்சி
தாளம் - ஆதி - திஸ்ரநடை (12)
தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த
தான தான தந்த தந்த ...... தனதான
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும்
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ...... அறுநாலும்
ஆறு மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்ற
ஆரணாக மங்க டந்த ...... கலையான
ஈறு கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றி
யேது வேறி யம்ப லின்றி ...... யொருதானாய்
யாவு மாய்ம னங்க டந்த மோன வீட டைந்தொ ருங்கி
யான வாவ டங்க என்று ...... பெறுவேனோ
மாறு கூறி வந்தெ திர்ந்த சூரர் சேனை மங்க வங்க
வாரி மேல்வெ குண்ட சண்ட ...... விததாரை
வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவி ளங்கொ ழுந்து
வால சோம னஞ்சு பொங்கு ...... பகுவாய
சீறு மாசு ணங்க ரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர்
தேசி காக டம்ப லங்கல் ...... புனைவோனே
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.
பாடல் 735 ( தேவனூர் )
ராகம் - வலஜி
தாளம் - ஆதி - திஸ்ரநடை (12)
தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த
தான தான தந்த தந்த ...... தனதான
தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து
சாதி பூத ரங்கு லுங்க ...... முதுமீனச்
சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று
தாரை வேல்தொ டுங்க டம்ப ...... மததாரை
ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து
மானை யாளு நின்ற குன்ற ...... மறமானும்
ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்
ஆவல தீர என்று நின்று ...... புகழ்வேனோ
பார மார்த ழும்பர் செம்பொன் மேனி யாளர் கங்கை வெண்க
பால மாலை கொன்றை தும்பை ...... சிறுதாளி
பார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு
பானல் கூவி ளங்க ரந்தை ...... அறுகோடே
சேர வேம ணந்த நம்ப ணச னாரி டஞ்சி றந்த
சீத ளார விந்த வஞ்சி ...... பெருவாழ்வே
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.
பாடல் 736 ( தேவனூர் )
ராகம் - மாண்ட்
தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தான தானன தனனா தனதன
தான தானன தனனா தனதன
தான தானன தனனா தனதன ...... தந்ததான
காணொ ணாதது உ ருவோ டருவது
பேசொ ணாதது உ ரையே தரவது
காணு நான்மறை முடிவாய் நிறைவது ...... பஞ்சபூதக்
காய பாசம தனிலே யுறைவது
மாய மாயுட லறியா வகையது
காய மானவ ரெதிரே யவரென ...... வந்துபேசிப்
பேணொ ணாதது வெளியே யொளியது
மாய னாரய னறியா வகையது
பேத பேதமொ டுலகாய் வளர்வது ...... விந்துநாதப்
பேரு மாய்கலை யறிவாய் துரியவ
தீத மானது வினையேன் முடிதவ
பேறு மாயருள் நிறைவாய் விளைவது ...... ஒன்றுநீயே
வீணொ ணாதென அமையா தசுரரை
நூறி யேயுயிர் நமனீ கொளுவென
வேல்க டாவிய கரனே யுமைமுலை ...... யுண்டகோவே
வேத நான்முக மறையோ னொடும்விளை
யாடி யேகுடு மியிலே கரமொடு
வீற மோதின மறவா குறவர்கு ...... றிஞ்சியூடே
சேணொ ணாயிடு மிதண்மே லரிவையை
மேவி யேமயல் கொளலீ லைகள்செய்து
சேர நாடிய திருடா வருடரு ...... கந்தவேளே
சேரொ ணாவகை வெளியே திரியுமெய்ஞ்
ஞான யோகிக ளுளமே யுறைதரு
தேவ னூர்வரு குமரா வமரர்கள் ...... தம்பிரானே.
பாடல் 737 ( திருவதிகை )
ராகம் - .... ; தாளம் -
தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்
தனதனனத் தனதனனத் ...... தனதான
பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப்
பவளநிறத் ததரம்விளைத் ...... தமுதூறல்
பருகிநிறத் தரளமணிக் களபமுலைக் குவடசையப்
படைமதனக் கலையடவிப் ...... பொதுமாதர்
சொருகுமலர்க் குழல்சரியத் தளர்வுறுசிற் றிடைதுவளத்
துகிலகலக் க்ருபைவிளைவித் ...... துருகாமுன்
சொரிமலர்மட் டலரணைபுக் கிதமதுரக் கலவிதனிற்
சுழலுமனக் கவலையொழித் ...... தருள்வாயே
கருகுநிறத் தசுரன்முடித் தலையொருபத் தறமுடுகிக்
கணைதொடுமச் சுதன்மருகக் ...... குமரேசா
கயிலைமலைக் கிழவனிடக் குமரிவிருப் பொடுகருதக்
கவிநிறையப் பெறும்வரிசைப் ...... புலவோனே
திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச்
செறியும்வயற் கதிரலையத் ...... திரைமோதித்
திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடிலநதித்
திருவதிகைப் பதிமுருகப் ...... பெருமாளே.
பாடல் 738 ( திருவதிகை )
ராகம் - ....; தாளம் -
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன ...... தனதான
விடமும் வேலன மலரன விழிகளு
மிரத மேதரு மமுதெனு மொழிகளும்
விரகி னாலெழு மிருதன வகைகளு ...... மிதமாடி
மிகவு மாண்மையு மெழினல முடையவர்
வினையு மாவியு முடனிரு வலையிடை
வெளியி லேபட விசிறிய விஷமிக ...... ளுடன்மேவா
இடரு றாதுனை நினைபவர் துணைகொள
இனிமை போலெழு பிறவியெ னுவரியி
னிடைகெ டாதினி யிருவினை யிழிவினி ...... லிழியாதே
இசையி னாடொறு மிமையவர் முநிவர்கள்
ககன பூபதி யிடர்கெட அருளிய
இறைநி னாறிரு புயமென வுரைசெய ...... அருள்வாயே
படரு மார்பினி லிருபது புயமதொ
டரிய மாமணி முடியொளி ரொருபது
படியி லேவிழ வொருகணை தொடுபவ ...... ரிடமாராய்
பரவை யூடெரி பகழியை விடுபவர்
பரவு வார்வினை கெடஅரு ளுதவியெ
பரவு பால்கட லரவணை துயில்பவர் ...... மருகோனே
அடர வேவரு மசுரர்கள் குருதியை
அரக ராவென அலகைகள் பலியுண
அலையும் வேலையும் அலறிட எதிர்பொரு ...... மயில்வீரா
அமர ராதிய ரிடர்பட அடர்தரு
கொடிய தானவர் திரிபுர மெரிசெய்த
அதிகை மாநகர் மருவிய சசிமகள் ...... பெருமாளே.
பாடல் 739 ( திருவர்முர் )
ராகம் - ....; தாளம் -
தான தனன தனத்தந் ...... தனதான
சீத மதிய மெறிக்குந் ...... தழலாலே
சீறி மதனன் வளைக்குஞ் ...... சிலையாலே
ஓத மருவி யலைக்குங் ...... கடலாலே
ஊழி யிரவு தொலைக்கும் ...... படியொதான்
மாது புகழை வளர்க்குந் ...... திருவர்முர்
வாழு மயிலி லிருக்குங் ...... குமரேசா
காத லடியர் கருத்தின் ...... பெருவாழ்வே
காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.
பாடல் 740 ( வடுகூர் )
ராகம் - ரேவதி
தாளம் - ஆதி
தனதன தனனா தனதன தனனா
தனதன தனனா ...... தனதான
அரியய னறியா தவரெரி புர்மு
ணதுபுக நகையே ...... வியநாதர்
அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ
றழலையு மழுநேர் ...... பிடிநாதர்
வரைமக ளொருகூ றுடையவர் மதனா
கமும்விழ விழியே ...... வியநாதர்
மனமகிழ் குமரா எனவுன திருதாள்
மலரடி தொழுமா ...... றருள்வாயே
அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல்
அவனியை வலமாய் ...... வருவோனே
அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல்
அயில்தனை விசையாய் ...... விடுவோனே
வரிசையொ டொருமா தினைதரு வனமே
மருவியொர் குறமா ...... தணைவேடா
மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்
வருதவ முநிவோர் ...... பெருமாளே.
பாடல் 741 ( திருத்துறையூர் )
ராகம் - ....; தாளம் -
தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
தானத்தன தானத்தன ...... தனதான
ஆரத்தன பாரத்துகில் மூடிப்பலர் காணக்கையில்
யாழ்வைத்திசை கூரக்குழ ...... லுடைசோர
ஆகப்பனி நீரப்புழு கோடக்குழை யாடப்பிரை
யாசப்படு வார்பொட்டணி ...... சசிநேர்வாள்
கூரக்கணை வேல்கட்கயல் போலச்சுழல் வார்சர்க்கரை
கோவைக்கனி வாய்பற்கதி ...... ரொளிசேருங்
கோலக்குயி லார்பட்டுடை நூலொத்திடை யார்சித்திர
கோபச்செய லார்பித்தர்க ...... ளுறவாமோ
பூரித்தன பாரச்சடை வேதக்குழ லாள்பத்தர்கள்
பூசைக்கியல் வாள்பத்தினி ...... சிவகாமி
பூமிக்கடல் மூவர்க்குமு னாள்பத்திர காளிப்புணர்
போகர்க்குப தேசித்தருள் ...... குருநாதா
சூரக்குவ டாழித்தவி டாய்முட்டசு ராருக்கிட
சோர்விற்கதிர் வேல்விட்டருள் ...... விறல்வீரா
தோகைச்செய லாள்பொற்பிர காசக்குற மான்முத்தொடு
சோதித்துறை யூர்நத்திய ...... பெருமாளே.
பாடல் 742 ( திருத்துறையூர் )
ராகம் - ....; தாளம் -
தனதான தனத்தன தானன
தனதான தனத்தன தானன
தனதான தனத்தன தானன ...... தனதான
வெகுமாய விதத்துரு வாகிய
திறமேப ழகப்படு சாதக
விதமேழ்க டலிற்பெரி தாமதில் ...... சுழலாகி
வினையான கருக்குழி யாமெனு
மடையாள முளத்தினின் மேவினும்
விதியாரும் விலக்கவொ ணாதெனு ...... முதியோர்சொல்
தகவாம தெனைப்பிடி யாமிடை
கயிறாலு மிறுக்கிம காகட
சலதாரை வெளிக்கிடை யேசெல ...... வுருவாகிச்
சதிகாரர் விடக்கதி லேதிரள்
புழுவாக நெளித்தெரி யேபெறு
மெழுகாக வுருக்குமு பாதிகள் ...... தவிர்வேனோ
உ ககால நெருப்பதி லேபுகை
யெழவேகு முறைப்படு பாவனை
யுறவேகு கையிற்புட மாய்விட ...... வெளியாகி
உ லவாநர குக்கிரை யாமவர்
பலவோர்கள் தலைக்கடை போயெதிர்
உ ளமாழ்கி மிகக்குழை வாகவு ...... முறவாடித்
தொகலாவ தெனக்கினி தானற
வளமாக அருட்பத மாமலர்
துணையேப ணியத்தரு வாய்பரி ...... மயில்வேலா
துதிமாத வர்சித்தர்ம கேசுரர்
அரிமால்பி ரமர்க்கருள் கூர்தரு
துறையூர்நக ரிற்குடி யாய்வரு ...... பெருமாளே.
பாடல் 743 ( திருநாவலுர் )
ராகம் - ....; தாளம் -
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
கோல மறை யொத்த மாலைதனி லுற்ற
கோரமதன் விட்ட ...... கணையாலே
கோதிலத ருக்கள் மேவுபொழி லுற்ற
கோகிலமி குத்த ...... குரலாலே
ஆலமென விட்டு வீசுகலை பற்றி
ஆரழலி றைக்கு ...... நிலவாலே
ஆவிதளர் வுற்று வாடுமெனை நித்த
மாசைகொட ணைக்க ...... வரவேணும்
நாலுமறை கற்ற நான்முகனு தித்த
நாரணனு மெச்சு ...... மருகோனே
நாவலர்ம திக்க வேல்தனையெ டுத்து
நாகமற விட்ட ...... மயில்வீரா
சேலெனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி
சீரணி தனத்தி ...... லணைவோனே
சீதவயல் சுற்று நாவல்தனி லுற்ற
தேவர்சிறை விட்ட ...... பெருமாளே.
பாடல் 744 ( திருவெண்ணெய்நல்லுர் )
ராகம் - ...; தாளம் -
தனதன தத்தன தனதன தத்தன
தனதன தத்தன தனதன தத்தன
தனதன தத்தன தனதன தத்தன ...... தனதான
பலபல தத்துவ மதனை யெரித்திருள்
பரையர ணப்படர் வடவன லுக்கிரை
படநட நச்சுடர் பெருவெளி யிற்கொள ...... விடமேவிப்
பவன மொழித்திரு வழியை யடைத்தொரு
பருதி வழிப்பட விடல்கக னத்தொடு
பவுரி கொளச்சிவ மயமென முற்றிய ...... பர்முடே
கலகலெ னக்கழல் பரிபுர பொற்பத
வொலிமலி யத்திரு நடன மியற்றிய
கனக சபைக்குளி லுருகி நிறைக்கட ...... லதில்மூழ்கிக்
கவுரி மினற்சடை யரனொடு நித்தமொ
டனக சகத்துவம் வருதலு மிப்படி
கழிய நலக்கினி நிறமென விற்றுட ...... லருள்வாயே
புலையர் பொடித்தளும் அமண ருடற்களை
நிரையில் கழுக்களி லுறவிடு சித்திர
புலவனெ னச்சில விருது படைத்திடு ...... மிளையோனே
புனமலை யிற்குற மகளய லுற்றொரு
கிழவ னெனச்சுனை தனில வளைப்புய
புளகித முற்றிபம் வரவணை யப்புணர் ...... மணிமார்பா
மலைசிலை பற்றிய கடவு ளிடத்துறை
கிழவி யறச்சுக குமரி தகப்பனை
மழுகொடு வெட்டிய நிமலிகை பெற்றருள் ...... முருகோனே
மகிழ்பெணை யிற்கரை பொழில்முகில் சுற்றிய
திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத
மயிலின் மிசைக்கொடு திருநட மிட்டுறை ...... பெருமாளே.
பாடல் 745 ( திருப்பாதிரிப்புலியூர் )
ராகம் - பைரவி
தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதன தனன தனந்த தானன
தனதன தனன தனந்த தானன
தனதன தனன தனந்த தானன ...... தனதான
நிணமொடு குருதி நரம்பு மாறிய
தசைகுடல் மிடையு மெலும்பு தோலிவை
நிரைநிரை செறியு முடம்பு நோய்படு ...... முதுகாயம்
நிலைநிலை யுருவ மலங்க ளாவது
நவதொளை யுடைய குரம்பை யாமிதில்
நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவ ...... முயவோரும்
உ ணர்விலி செபமுத லொன்று தானிலி
நிறையிலி முறையிலி யன்பு தானிலி
உ யர்விலி யெனினுமெ னெஞ்சு தானினை ...... வழியாமுன்
ஒருதிரு மரகத துங்க மாமிசை
யறுமுக மொளிவிட வந்து நான்மறை
யுபநிட மதனை விளங்க நீயருள் ...... புரிவாயே
புணரியில் விரவி யெழுந்த ஞாயிறு
விலகிய புரிசை யிலங்கை வாழ்பதி
பொலமணி மகுட சிரங்கள் தாமொரு ...... பதுமாறிப்
புவியிடை யுருள முனிந்து கூர்கணை
யுறுசிலை வளைய வலிந்து நாடிய
புயலதி விறலரி விண்டு மால்திரு ...... மருகோனே
அணிதரு கயிலை நடுங்க வோரெழு
குலகிரி யடைய இடிந்து தூளெழ
அலையெறி யுததி குழம்ப வேல்விடு ...... முருகோனே
அமலைமு னரிய தவஞ்செய் பாடல
வளநகர் மருவி யமர்ந்த தேசிக
அறுமுக குறமக ளன்ப மாதவர் ...... பெருமாளே.
பாடல் 746 ( திருமாணிகுழி )
ராகம் - ....; தாளம் -
தனத்த தானன தானான தானன
தனத்த தானன தானான தானன
தனத்த தானன தானான தானன ...... தந்ததான
மதிக்கு நேரெனும் வாண்மூகம் வான்மக
நதிக்கு மேல்வரு சேலேனு நேர்விழி
மணத்த வார்குழல் மாமாத ராரிரு ...... கொங்நக்முழ்கி
மதித்த பூதர மாமாம னோலயர்
செருக்கி மேல்விழ நாடோ று மேமிக
வடித்த தேன்மொழி வாயூற லேநுகர் ...... பண்டநாயேன்
பதித்த நூபுர சீர்பாத மாமலர்
படைக்குள் மேவிய சீராவொ டேகலை
பணைத்த தோள்களொ டீராறு தோடுகள் ...... தங்குகாதும்
பணக்க லாபமும் வேலொடு சேவலும்
வடிக்கொள் சூலமும் வாள்வீசு நீள்சிலை
படைத்த வாகையு நாடாது பாழில்ம ...... யங்கலாமோ
கதித்து மேல்வரு மாசூரர் சூழ்படை
நொறுக்கி மாவுயர் தேரோடு மேகரி
கலக்கி யூர்பதி தநமுள வேவிடும் ...... வஞ்சவேலா
களித்த பேய்கண மாகாளி கூளிகள்
திரட்பி ரேதமெ லேமேவி மூளைகள்
கடித்த பூதமொ டேபாடி யாடுதல் ...... கண்டவீரா
குதித்து வானர மேலேறு தாறுகள்
குலைத்து நீள்கமு கூடாடி வாழைகொள்
குலைக்கு மேல்விழ வேரேறு போகமும் ...... வஞ்சிதோயுங்
குளத்தி லுறிய தேனூறல் மாதுகள்
குடித்து லாவியெ சேலோடு மாணிகொள்
குழிக்குள் மேவிய வானோர்க ளேதொழு ...... தம்பிரானே.
பாடல் 747 ( திருவேட்களம் )
ராகம் - பெஹாக்
தாளம் - திஸ்ர த்ருபுடை (7)
தனனத்தன தாத்தன தானன
தனனத்தன தாத்தன தானன
தனனத்தன தாத்தன தானன ......தனதான
சதுரத்தரை நோக்கிய பூவொடு
கதிரொத்திட ஆக்கிய கோளகை
தழையச்சிவ பாக்கிய நாடக ...... அநுபூதி
சரணக்கழல் காட்டியெ னாணவ
மலமற்றிட வாட்டிய ஆறிரு
சயிலக்குல மீட்டிய தோளொடு ...... முகமாறுங்
கதிர்சுற்றுக நோக்கிய பாதமு
மயிலிற்புற நோக்கிய னாமென
கருணைக்கடல் காட்டிய கோலமும் ...... அடியேனைக்
கனகத்தினு நோக்கினி தாயடி
யவர்முத்தமி ழாற்புக வேபர
கதிபெற்றிட நோக்கிய பார்வையு ...... மறவேனே
சிதறத்தரை நாற்றிசை பூதர
நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி
சிதறக்கட லார்ப்புற வேயயில் ...... விடுவோனே
சிவபத்தினி கூற்றினை மோதிய
பதசத்தினி மூத்தவி நாயகி
செகமிப்படி தோற்றிய பார்வதி ...... யருள்பாலா
விதுரற்கும ராக்கொடி யானையும்
விகடத்துற வாக்கிய மாதவன்
விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் ...... மருகோனே
வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடிய
கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய
விறல்மெய்த்திரு வேட்கள மேவிய ...... பெருமாளே.
பாடல் 748 ( திருவேட்களம் )
ராகம் - மனோலயம்
தாளம் - ஆதி
தாத்தன தானன தாத்தன தானன
தாத்தன தானன ...... தனதான)
மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன்
வாழ்க்கையை நீடென ...... மதியாமல்
மாக்களை யாரையு மேற்றிடு சீலிகள்
மாப்பரி வேயெய்தி ...... அநுபோக
பாத்திர மீதென மூட்டிடு மாசைகள்
பாற்படு ஆடக ...... மதுதேடப்
பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி
பாற்கட லானென ...... வுழல்வேனோ
சாத்திர மாறையு நீத்தம னோலய
சாத்தியர் மேவிய ...... பதவேளே
தாத்தரி தாகிட சேக்கெனு மாநட
தாட்பர னார்தரு...... குமரேசா
வேத்திர சாலம தேற்றிடு வேடுவர்
மீக்கமு தாமயில் ...... மணவாளா
வேத்தம தாமறை யார்த்திடு சீர்திரு
வேட்கள மேவிய ...... பெருமாளே.
பாடல் 749 ( திருநெல்வாயில் )
ராகம் - நாட்டை
தாளம் - அங்கதாளம் (8)
தகிட-1 1/2, தக-1, திமி-1
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனன தானன தானனாத் தனந்த
தனன தானன தானனாத் தனந்த
தனன தானன தானனாத் தனந்த ...... தனதான
அறிவி லாதவ ணனர்பேச் சிரண்டு
பகரு நாவினர் லோபர்தீக் குணங்க
ளதிக பாதகர் மாதர்மேற் கலன்கள் ...... புனையாதர்
அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து
திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி
யழியு மாலினர் நீதிநூற் பயன்கள் ...... தெரியாத
நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து
பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச
நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த ...... தமிழ்கூறி
நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து
வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து
நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி ...... யருள்வாயே
நறிய வார்குழல் வானநாட் டரம்பை
மகளிர் காதலர் தோள்கள்வேட் டிணங்கி
நகைகொ டேழிசை பாடிமேற் பொலிந்து ...... களிகூர
நடுவி லாதகு ரோதமாய்த் தடிந்த
தகுவர் மாதர்ம ணாளர்தோட் பிரிந்து
நசைபொ றாதழு தாகமாய்த் தழுங்கி ...... யிடர்கூர
மறியு மாழ்கட லுடுபோய்க் கரந்து
கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து
வளரு மாவிரு கூறதாய்த் தடிந்த ...... வடிவேலா
மரவு காளமு கீல்கள்கூட் டெழுந்து
மதியு லாவிய மாடமேற் படிந்த
வயல்கள் மேவுநெல் வாயில்வீற் றிருந்த ...... பெருமாளே.
பாடல் 750 ( விருத்தாசலம் )
ராகம் - ...; தாளம் -
தனத்தானன தானன தானன
தனத்தானன தானன தானன
தனத்தானன தானன தானன ...... தனதான
குடத்தாமரை யாமென வேயிரு
தனத்தார்மதி வாணுத லாரிருள்
குழற்காடின மாமுகில் போல்மது ...... கலைமோதக்
குலக்கார்மயி லாமென வேகயல்
விழித்தார்கர மேல்கொடு மாமுலை
குடத்தியாழ்கிளி யாமென வேகுயில் ...... குரலோசை
படித்தார்மயி லாமென வேநடை
நெளித்தார்பல காமுகர் வார்கலை
பழிப்பாரவ ராசையை மேல்கொடு ...... விலைமாதர்
படிக்கார்மின லாமென வேநகை
புரித்தார்பலர் வாயிதழ் சேர்பொருள்
பறிப்பார்பழி காரிகள் நாரிக ...... ளுறவாமோ
அடைத்தார்கட லோர்வலி ராவண
குலத்தோடரி யோர்சர னார்சின
மழித்தார்முகி லேய்நிற ராகவர் ...... மருகோனே
அறுத்தாரய னார்தலை யேபுர
மெரித்தாரதி லேபுல னாருயி
ரளித்தாருடல் பாதியி லேயுமை ...... அருள்பாலா
விடத்தாரசு ரார்பதி வேரற
அடித்தாய்கதிர் வேல்கொடு சேவகம்
விளைத்தாய்குடி வாழம ரோர்சிறை ...... மிடிதீர
விழித்தாமரை போலழ காகுற
மகட்கானவ ணாஎன தாயுறை
விருத்தாசலம் வாழ்மயில் வாகன ...... பெருமாளே.
பாடல் 751 ( விருத்தாசலம் )
ராகம் - ஹரிகாம்போதி
தாளம் - ஆதி ( 2 களை)
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
திருமொழி யுரைபெற அரனுன துழிபணி
செயமுன மருளிய ...... குளவோனே
திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு
தெறிபட மறுகிட ...... விடுவோனே
ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி
னுறுபட ருறுமெனை ...... யருள்வாயோ
உ லகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில்
ஒருநொடி தனில்வரு ...... மயில்வீரா
கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள்
கணினெதிர் தருவென ...... முனமானாய்
கருமுகில் பொருநிற அரிதிரு மருமக
கருணையில் மொழிதரு ...... முதல்வோனே
முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட
முரணுறு மசுரனை ...... முனிவோனே
முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ்
முதுகிரி வலம்வரு ...... பெருமாளே.
பாடல் 752 ( விருத்தாசலம் )
ராகம் - ...; தாளம் -
தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
தனதத்த தனதத்த ...... தனதான
பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி
பறியக்கை சொறியப்பல் ...... வெளியாகிப்
படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க
பழமுற்று நரைகொக்கி ...... னிறமாகி
விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு
மெலிவுற்று விரல்பற்று ...... தடியோடே
வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை
விடுவித்து னருள்வைப்ப ...... தொருநாளே
அசைவற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தி
னடல்வஜ்ர கரன்மற்று ...... முளவானோர்
அளவற்ற மலர்விட்டு நிலமுற்று மறையச்செய்
அதுலச்ச மரவெற்றி ...... யுடையோனே
வசையற்று முடிவற்று வளர்பற்றி னளவற்ற
வடிவுற்ற முகில்கிட்ணன் ...... மருகோனே
மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர்
வளர் விர்த்த கிரியுற்ற ...... பெருமாளே.
பாடல் 753 ( வேப்பூர் )
ராகம் - பீம்பளாஸ்
தாளம் - அங்கதாளம் (15 1/2)
தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனதன தனதன தனதன தாந்த
தாத்தான தந்த ...... தனதான
குரைகட லுலகினி லுயிர்கொடு போந்து
கூத்தாடு கின்ற ...... குடில்பேணிக்
குகையிட மருவிய கருவிழி மாந்தர்
கோட்டாலை யின்றி ...... யவிரோதம்
வரஇரு வினையற உ ணர்வொடு தூங்கு
வார்க்கே விளங்கு ...... மநுபூதி
வடிவினை யுனதழ கியதிரு வார்ந்த
வாக்கால்மொ ழிந்த ...... ருளவேணும்
திரள்வரை பகமிகு குருகுல வேந்து
தேர்ப்பாகன் மைந்தன் ...... மறையோடு
தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து
தீப்பாய இந்த்ர ...... புரிவாழ
விரிதிரை யெரியெழ முதலுற வாங்கு
வேற்கார கந்த ...... புவியேழும்
மிடிகெட விளைவன வளவயல் சூழ்ந்த
வேப்பூர மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 754 ( நிம்பபுரம் )
ராகம் - ஸிம்மேந்திர மத்யமம்
தாளம் - ஆதி
தந்ததன தான தந்ததன தான
தந்ததன தான ...... தனதான
அஞ்சுவித பூத முங்கரண நாலு
மந்திபகல் யாது ...... மறியாத
அந்தநடு வாதி யொன்றுமில தான
அந்தவொரு வீடு ...... பெறுமாறு
மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர்
மங்கைதனை நாடி ...... வனமீது
வந்தசர ணார விந்தமது பாட
வண்டமிழ்வி நோத ...... மருள்வாயே
குஞ்சரக லாப வஞ்சியபி ராம
குங்குமப டீர ...... வதிரேகக்
கும்பதன மீது சென்றணையு மார்ப
குன்றுதடு மாற ...... இகல்கோப
வெஞ்சமர சூர னெஞ்சுபக வீர
வென்றிவடி வேலை ...... விடுவோனே
விம்பமதில் சூழு நிம்பபுர வாண
விண்டலம கீபர் ...... பெருமாளே.
பாடல் 755 ( வேப்பஞ்சந்தி )
ராகம் -
தாளம் -
தாத்தந் தந்தத் தந்தத் தனனத் ...... தனதான
நாட்டந் தங்கிக் கொங்கைக் குவடிற் ...... படியாதே
நாட்டுந் தொண்டர்க் கண்டக் கமலப் ...... பதமீவாய்
வாட்டங் கண்டுற் றண்டத் தமரப் ...... படைமீதே
மாற்றந் தந்துப் பந்திச் சமருக் ...... கெதிரானோர்
கூட்டங் கந்திச் சிந்திச் சிதறப் ...... பொருவோனே
கூற்றன் பந்திச் சிந்தைக் குணமொத் ...... தொளிர்வேலா
வேட்டந் தொந்தித் தந்திப் பரனுக் ...... கிளையோனே
வேப்பஞ் சந்திக் கந்தக் குமரப் ...... பெருமாளே.
பாடல் 756 ( திருக்கூடலையாற்றுர் )
ராகம் -....; தாளம் -
தாத்ததனத் தாந்ததன தானதன தானதன
தாத்ததனத் தாந்ததன தானதன தானதன
தாத்ததனத் தாந்ததன தானதன தானதன ...... தந்ததான
வாட்டியெனைச் சூழ்ந்தவினை யாசையமு வாசையனல்
மூட்டியுலைக் காய்ந்தமழு வாமெனவி காசமொடு
மாட்டியெனைப் பாய்ந்துகட வோடடமொ டாடிவிடு ...... விஞ்சையாலே
வாய்த்தமலர்ச் சாந்துபுழு கானபனி நீர்களொடு
காற்றுவரத் தாங்குவன மார்பிலணி யாரமொடு
வாய்க்குமெனப் பூண்டழக தாகபவி சோடுமகிழ் ...... வன்புகூரத்
தீட்டுவிழிக் காந்திமட வார்களுட னாடிவலை
பூட்டிவிடப் போந்துபிணி யோடுவலி வாதமென
சேர்த்துவிடப் பேர்ந்துவினை மூடியடி யேனுமுன ...... தன்பிலாமல்
தேட்டமுறத் தேர்ந்துமமிர் தாமெனவெ யேகிநம
னோட்டிவிடக் காய்ந்துவரி வேதனடை யாளமருள்
சீட்டுவரக் காண்டுநலி காலனணு காநினரு ...... ளன்புதாராய்
வேட்டுவரைக் காய்ந்துகுற மாதையுற வாடியிருள்
நாட்டவரைச் சேந்தகதிர் வேல்கொடம ராடிசிறை
மீட்டமரர்க் காண்டவனை வாழ்கநிலை யாகவைகும் ...... விஞ்சையோனே
வேற்றுருவிற் போந்துமது ராபுரியி லாடிவைகை
யாற்றின்மணற் றாங்குமழு வாளியென தாதைபுர
மேட்டையெரித் தாண்டசிவ லோகன்விடை யேறியிட ...... முங்கொளாயி
கோட்டுமுலைத் தாங்குமிழை யானஇடை கோடிமதி
தோற்றமெனப் போந்தஅழ கானசிவ காமிவிறல்
கூற்றுவனைக் காய்ந்தஅபி ராமிமன தாரஅருள் ...... கந்தவேளே
கூட்டுநதித் தேங்கியவெ ளாறுதர ளாறுதிகழ்
நாட்டிலுறைச் சேந்தமயி லாவளிதெய் வானையொடெ
கூற்றுவிழத் தாண்டியென தாகமதில் வாழ்குமர ...... தம்பிரானே.
பாடல் 757 ( கடம்பூர் )
ராகம் - ....; தாளம் -
தானனம் தானான தானனம் தானான
தானனம் தானான ...... தனதான
வாருமிங் கேவீடி தோபணம் பாஷாண
மால்கடந் தேபோமே ...... னியலுடே
வாடிபெண் காள்பாயை போடுமென் றாசார
வாசகம் போல்கூறி ...... யணைமீதே
சேருமுன் காசாடை வாவியும் போதாமை
தீமைகொண் டேபோமெ ...... னடமாதர்
சேரிடம் போகாம லாசுவந் தேறாமல்
சீதளம் பாதார ...... மருள்வாயே
நாரணன் சீராம கேசவன் கூராழி
நாயகன் பூவாயன் ...... மருகோனே
நாரதும் பூர்கீத மோதநின் றேயாடு
நாடகஞ் சேய்தாள ...... ரருள்பாலா
சூரணங் கோடாழி போய்கிடந் தேவாட
சூரியன் தேரோட ...... அயிலேவீ
தூநறுங் காவேரி சேருமொண் சீறாறு
சூழ்கடம் பூர்தேவர் ...... பெருமாளே.
பாடல் 758 ( திருவரத்துறை )
ராகம் - ....; தாளம் -
தனன தத்தனத் தனன தத்தனத்
தனன தத்தனத் ...... தனதான
கறுவி மைக்கணிட் டினித ழைத்தியற்
கவிசொ லிச்சிரித் ...... துறவாடிக்
களவு வித்தையட் டுளமு ருக்கிமுற்
கருதி வைத்தவைப் ...... பவைசேரத்
தறுக ணிற்பறித் திருக ழுத்துறத்
தழுவி நெக்குநெக் ...... குயிர்சோரச்
சயன மெத்தையிற் செயல ழிக்குமித்
தருணி கட்ககப் ...... படலாமோ
பிறவி யைத்தணித் தருளு நிட்களப்
பிரம சிற்சுகக் ...... கடல்மூழ்கும்
பெருமு னித்திரட் பரவு செய்ப்பதிப்
ப்ரபல கொச்சையிற் ...... சதுர்வேதச்
சிறுவ நிற்கருட் கவிகை நித்திலச்
சிவிகை யைக்கொடுத் ...... தருளீசன்
செகத லத்தினிற் புகழ்ப டைத்தமெய்த்
திருவ ரத்துறைப் ...... பெருமாளே.
பாடல் 759 ( யாழ்ப்பாணாயன்பட்டினம் )
ராகம் - ....; தாளம் -
தாத்தா தானம் தத்தன தனதன
தாத்தா தானம் தத்தன தனதன
தாத்தா தானம் தத்தன தனதன ...... தனதான
பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர்
பார்த்தால் வேலுங் கட்கமு மதன்விடு
போர்க்கார் நீடுங் கட்சர மொடுநமன் ...... விடுதூதும்
போற்றாய் நாளுங் கைப்பொரு ளுடையவர்
மேற்றா ளார்தம் பற்றிடு ப்ரமையது
பூட்டா மாயங் கற்றமை விழியின ...... ரமுதூறல்
வாய்த்தார் பேதஞ் செப்புபொய் விரகியர்
நூற்றேய் நூலின் சிற்றிடை யிடர்பட
வாட்டாய் வீசுங் கர்ப்புர ம்ருகமத ...... மகிலாரம்
மாப்பூ ணாரங் கச்சணி முலையினர்
வேட்பூ ணாகங் கெட்டெனை யுனதுமெய்
வாக்கால் ஞானம் பெற்றினி வழிபட ...... அருளாயோ
ஆத்தாள் மால்தங் கைச்சிக னிகையுமை
கூத்தா டாநந் தச்சிவை திரிபுரை
யாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி ...... புவநேசை
ஆக்கா யாவும் பற்றியெ திரிபுற
நோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளை
யாட்டா லீசன் பக்கம் துறைபவள் ...... பெறுசேயே
ஏத்தா நாளுந் தர்ப்பண செபமொடு
நீத்தார் ஞானம் பற்றிய குருபர
யாப்பா ராயுஞ் சொற்றமி ழருள்தரு ...... முருகோனே
ஏற்போர் தாம்வந் திச்சையின் மகிழ்வொடு
வாய்ப்பாய் வீசும் பொற்ப்ரபை நெடுமதிள்
யாழ்ப்பா ணாயன் பட்டின மருவிய ...... பெருமாளே.
பாடல் 760 ( ஸ்ரீ முஷ்டம் )
ராகம் - மத்யமாவதி
தாளம் - ஆதி
தனனத்த தான தனனத்த தான
தனனத்த தான ...... தனதான
கழைமுத்து மாலை புயல்முத்து மாலை
கரிமுத்து மாலை ...... மலைமேவுங்
கடிமுத்து மாலை வளைமுத்து மாலை
கடல்முத்து மாலை ...... யரவீனும்
அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பி
னடைவொத்து லாவ ...... அடியேன்முன்
அடர்பச்சை மாவி லருளிற்பெ ணோடு
மடிமைக்கு ழாமொ ...... டருள்வாயே
மழையொத்த சோதி குயில்தத்தை போலு
மழலைச்சொ லாயி ...... யெமையீனு
மதமத்த நீல களநித்த நாதர்
மகிழ்சத்தி யீனு ...... முருகோனே
செழுமுத்து மார்பி னமுதத்தெய் வானை
திருமுத்தி மாதின் ...... மணவாளா
சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான
திருமுட்ட மேவு ...... பெருமாளே.
பாடல் 761 ( ஸ்ரீ முஷ்டம் )
ராகம் - ...; தாளம் -
தனனத் தத்தன தானன தானன
தனனத் தத்தன தானன தானன
தனனத் தத்தன தானன தானன ...... தனதான
சரம்வெற் றிக்கய லாமெனும் வேல்விழி
சிலைவட் டப்புரு வார்குழல் கார்முகில்
தனமுத் துக்கிரி யாமெனு நூலிடை ...... மடவார்கள்
சனுமெத் தப்பரி வாகிய மாமய
லிடுமுத் தித்திகழ் மால்கொடு பாவையர்
தகுதத் தக்கிட தோதகு தீதென ...... விளையாடும்
விரகத் துர்க்குண வேசைய ராசையர்
பணமெத் தப்பறி காரிகள் மாறிகள்
விதமெத் தக்கொடு மேவிகள் பாவிகள் ...... அதிபோக
மெலிவுற் றுக்குறி நாறிகள் பீறிகள்
கலகத் தைச்செயு மோடிகள் பீடிகள்
விருதிட் டுக்குடி கேடிகள் சேடிகள் ...... உ றவாமோ
பொருவெற் றிக்கழை வார்சிலை யானுட
லெரிபட் டுச்சரு காய்விழ வேநகை
புகுவித் தப்பிறை வாழ்சடை யானிட ...... மொருமாது
புகழ்சத் திச்சிலு காவண மீதுறை
சிவபத் திப்பர மேஸ்வரி யாள்திரி
புவனத் தைப்பரி வாய்முத லீனுமை ...... யருள்பாலா
திரையிற் பொற்கிரி யாடவும் வாசுகி
புனைவித் துத்தலை நாளமு தார்சுவை
சிவபத் தர்க்கிது வாமென வேபகி ...... ரரிராமர்
திருவுற் றுப்பணி யாதிவ ராகர்த
மகளைப் பொற்றன வாசையொ டாடிய
திருமுட் டப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.
பாடல் 762 ( திருநல்லுர் )
ராகம் - ....; தாளம் -
தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான
மூல முண்டகனு பூதி மந்திரப
ராப ரஞ்சுடர்கள் மூணு மண்டலஅ
தார சந்திமுக மாறு மிந்த்ரதரு ...... வுந்தளாமேல்
மூது ரம்பலவர் பீட மந்தமுமி
லாத பந்தவொளி யாயி ரங்கிரண
மூணு மிந்துவொளிர் சோதி விண்படிக ...... விந்துநாதம்
ஓல மென்றுபல தாள சந்தமிடு
சேவை கண்டமுதை வாரி யுண்டுலகி
ரேழு கண்டுவிளை யாடி யிந்துகதி ...... ரங்கிசூலம்
ஓடு மந்தகலி காலொ டுங்கநடு
தூணில் தங்கவரி ஞான வண்கயிறு
மீத ணைந்துசத கோடி சந்த்ரவொளி ...... சந்தியாதோ
சூலி யந்தரிக பாலி சங்கரிபு
ராரி யம்பரிகு மாரி யெண்குணசு
வாமி பங்கிசிவ காம சுந்தரியு ...... கந்தசேயே
சூர சங்கரகு மார இந்திரச
காய அன்பருப கார சுந்தரகு
காஎ னுஞ்சுருதி யோல மொன்றநட ...... னங்கொள்வேலா
சீல வெண்பொடியி டாத வெஞ்சமணர்
மாள வெங்கழுவி லேறு மென்றுபொடி
நீறி டுங்கமல பாணி சந்த்ரமுக ...... கந்தவேளே
தேவ ரம்பையமு தீண மங்கைதரு
மான ணைந்தபுய தீர சங்கரதி
யாகர் வந்துறைந லுர மர்ந்துவளர் ...... தம்பிரானே.
பாடல் 763 ( திருமயேந்திரம் )
ராகம் - ....; தாளம் -
தந்தன தந்தன தாந்த தானன
தந்தன தந்தன தாந்த தானன
தந்தன தந்தன தாந்த தானன ...... தனதான
வண்டணி யுங்கமழ் கூந்த லார்விழி
அம்பிய லுஞ்சிலை போந்த வாணுதல்
வண்டர ளந்திக ழாய்ந்த வார்நகை ...... குயில்போல
வண்பயி லுங்குவ டாண்ட மார்முலை
யின்பொறி யங்குமி ழாம்பல் தோள்கர
வஞ்சியெ னுங்கொடி சேர்ந்த நூலிடை ...... மடவார்பொன்
கண்டவு டன்களி கூர்ந்து பேசிகள்
குண்டுணி யுங்குரல் சாங்க மோதிகள்
கண்சுழ லும்படி தாண்டி யாடிகள் ...... சதிகாரர்
கஞ்சுளி யுந்தடி யீந்து போவென
நஞ்சையி டுங்கவ டார்ந்த பாவிகள்
கம்பையி லுஞ்சட மாய்ந்து நாயனு ...... முழல்வேனோ
அண்டரு டன்தவ சேந்து மாதவர்
புண்டரி கன்திரு பாங்கர் கோவென
அஞ்சலெ னும்படி போந்து வீரமொ ...... டசுராரை
அங்கமொ டுங்கிட மாண்டொ டாழிக
ளென்கிரி யும்பொடி சாம்பர் நூறிட
அந்தக னுங்கயி றாங்கை வீசிட ...... விடும்வேலா
செண்டணி யுஞ்சடை பாந்தள் நீர்மதி
யென்பணி யன்கன சாம்பல் பூசிய
செஞ்சட லன்சுத சேந்த வேலவ ...... முருகொனே
திங்கள்மு கந்தன சாந்து மார்பின
ளென்றனு ளம்புகு பாங்கி மானொடு
சிந்தைம கிழ்ந்தும யேந்த்ர மேவிய ...... பெருமாளே.
பாடல் 764 ( சீகாழி )
ராகம் - ....; தாளம் -
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன ...... தந்ததான
அலைகடல் சிலைமதன் அந்தி யூதையும்
அரிவையர் வசையுட னங்கி போல்வர
அசைவன விடைமணி யன்றில் கோகிலம் ...... அஞ்சிநானும்
அழலிடு மெழுகென வெம்பி வேர்வெழ
அகிலொடு ம்ருகமத நஞ்சு போலுற
அணிபணி மணிபல வெந்து நீறெழ ...... அங்கம்வேறாய்
முலைகனல் சொரிவர முன்பு போல்நினை
வழிவச மறஅற நின்று சோர்வுற
முழுதுகொள் விரகனல் மொண்டு வீசிட ...... மங்கிடாதே
முருகவிழ் திரள்புய முந்து வேலணி
முளரியொ டழகிய தொங்கல் தாரினை
முனிவற நினதருள் தந்தென் மாலைமு ...... னிந்திடாதோ
சிலைநுதல் கயல்விழி செஞ்சொல் வானவி
திரிபுரை பயிரவி திங்கள் சூடிய
திகழ்சடை நெடியவள் செம்பொன் மேனியள் ...... சிங்கமேறி
திரள்படை யலகைகள் பொங்கு கோடுகள்
திமிலையொ டறைபறை நின்று மோதிட
சிவனுட னடம்வரு மங்கை மாதுமை ...... தந்தவேளே
மலைதனி லொருமுநி தந்த மாதுதன்
மாலரடி வருடியெ நின்று நாடொறு
மயில்பயில் குயில்கிளி வம்பி லேகடி ...... தொண்டினோனே
மழைமுகில் தவழ்தரு மண்டு கோபுர
மதிள்வயல் புடையுற விஞ்சு காழியில்
வருமொரு கவுணியர் மைந்த தேவர்கள் ...... தம்பிரானே.
பாடல் 765 ( சீகாழி )
ராகம் - ....; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
இரத மான தேனூற லதர மான மாமாத
ரெதிரி லாத பூணார ...... முலைமீதே
இனது போடு மேகாச உ டையி னாலு மாலால
விழியி னாலு மாலாகி ...... யநுராக
விரக மாகி யேபாய லிடைவி டாமல் நாடோ று
ம்ருகம தாதி சேரோதி ...... நிழல்மூழ்கி
விளையு மோக மாமாயை கழலு மாறு நாயேனும்
விழல னாய்வி டாதேநி ...... னருள்தாராய்
அரக ராஎ னர்முடர் திருவெ ணீறி டர்முடர்
அடிகள் பூசி யர்முடர் ...... கரையேற
அறிவு நூல்க லர்முடர் நெறியி லேநி லர்முடர்
அறம்வி சாரி யர்முடர் ...... நரகேழிற்
புரள வீழ்வ ணராறு கரவி நோத சேய்சோதி
புரண பூர ணாகார ...... முருகோனே
புயலு லாவு சேணாடு பரவி நாளு மீடேறு
புகலி மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.
பாடல் 766 ( சீகாழி )
ராகம் - ஜோன்புரி
தாளம் - அங்கதாளம் (6 1/2)
தகதிமி-2, தகதிமி-2, தக-1, தகிட-1 1/2
தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த
தானத்தன தான தனந்த ...... தனதான
ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த
ஊசற்சுடு நாறு குரம்பை ...... மறைநாலும்
ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து
ஓடித்தடு மாறி யுழன்று ...... தளர்வாகிக்
கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த
கூளச்சட மீதை யுகந்து ...... புவிமீதே
கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்க ளகன்று
கோலக்கழ லேபெற இன்று ...... அருள்வாயே
சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து
சேனைச்சம ணோர்கழு வின்கண் ...... மிசையேறத்
தீரத்திரு நீறு புரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று
தீமைப்பிணி தீர வுவந்த ...... குருநாதா
கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து
காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர்
காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து
காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே.
பாடல் 767 ( சீகாழி )
ராகம் - ...; தாளம் -
தய்யா தத்தன தானன தானன
தய்யா தத்தன தானன தானன
தய்யா தத்தன தானன தானன ...... தனதான
ஒய்யா ரச்சிலை யாமென வாசனை
மெய்யா ரப்பணி பூஷண மாலைக
ளுய்யா நற்கலை யேகொடு மாமத ...... விதமாகி
ஒவ்வா ரிப்படி யோரென வேயிரு
கையா ரக்கணை மோதிர மேய்பல
வுள்ளார் செப்பிட ஏமுற நாளிலு ...... முடல்பேணிச்
செய்வா ரிப்படி யேபல வாணிப
மிய்யா ரிற்பண மேயொரு காசிடை
செய்யார் சற்பனை காரர்பி சாசரு ...... னடிபேணாச்
செய்வா ரிற்படு நானொரு பாதகன்
மெய்யா எப்படி யோர்கரை சேர்வது
செய்யா யற்புத மேபெற வோர்பொரு ...... ளருள்வாயே
மையா ரக்கிரி யேபொடி யாய்விட
பொய்சூ ரப்பதி யேகெட வானவர்
வையாய் பொற்சர ணாஎன வேதொழ ...... விடும்வேலா
வையா ளிப்பரி வாகன மாகொளு
துவ்வா ழிக்கட லேழ்மலை தூளிசெய்
மைபோ லக்கதி ரேய்நிற மாகிய ...... மயில்வாழ்வே
தெய்வா னைக்கர சேகுற மான்மகிழ்
செய்யா முத்தமி ழாகர னேபுகழ்
தெய்வீ கப்பர மாகுரு வேயென ...... விருதூதத்
திய்யா ரக்கழு வேறிட நீறிடு
கையா அற்புத னேபிர மாபுர
செய்கா ழிப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.
பாடல் 768 ( சீகாழி )
ராகம் - ...; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ...... தனதான
கட்கா மக்ரோ தத்தே கட்சீ
மிழ்த்தோர் கட்குக் ...... கவிபாடிக்
கச்சா பிச்சா கத்தா வித்தா
ரத்தே யக்கொட் ...... களைநீளக்
கொட்கா லக்கோ லக்ஆகா ணத்தே
யிட்டா சைப்பட் ...... டிடவேவை
கொட்டா னக்கூ னுக்கா எய்த்தே
னித்தீ தத்தைக் ...... களைவாயே
வெட்கா மற்பாய் சுற்று மர்ச்சேர்
விக்கா னத்தைத் ...... தரிமாறன்
வெப்பா றப்பா டிக்கா ழிக்கே
புக்காய் வெற்பிற் ...... குறமானை
முட்கா னிற்கால் வைத்தோ டிப்போய்
முற்சார் செச்சைப் ...... புயவீரா
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே.
பாடல் 769 ( சீகாழி )
ராகம் - ...; தாளம் -
தந்த தானன தனதன தனதன
தந்த தானன தனதன தனதன
தந்த தானன தனதன தனதன ...... தனதான
கொங்கு லாவிய குழலினு நிழலினு
நஞ்ச ளாவிய விழியினு மிரணிய
குன்று போல்வளர் முலையினு நிலையினு ...... மடமாதர்
கொம்பு சேர்வன இடையினு நடையினு
மன்பு கூர்வன மொழியினு மெழில்குடி
கொண்ட சேயித ழமுதினு நகையினு ...... மனதாய
சங்கை யாளியை அணுவிடை பிளவள
வின்சொல் வாசக மொழிவன இவையில
சம்ப்ர தாயனை அவலனை ஒளிதிக ...... ழிசைகூருந்
தண்டை நூபுர மணுகிய இருகழல்
கண்டு நாளவ மிகையற விழியருள்
தந்த பேரருள் கனவிலு நனவிலு ...... மறவேனே
வங்க வாரிதி முறையிட நிசிசரர்
துங்க மாமுடி பொடிபட வடவனல்
மங்கி நீறெழ அலகைகள் நடமிட ...... மயிலேறி
வஞ்ச வேல்கொடு முனிபவ அழகிய
சண்பை மாநக ருறையுமொ ரறுமுக
வந்த வானவர் மனதினி லிடர்கெட ...... நினைவோனே
பங்க வீரியர் பறிதலை விரகினர்
மிஞ்சு பாதக ரறநெறி பயனிலர்
பந்த மேவிய பகடிகள் கபடிகள் ...... நிலைகேடர்
பண்பி லாதவர் கொலைசெயு மனதின
ரிங்கெ ணாயிர ருயரிய கழுமிசை
பஞ்ச பாதகர் முனைகெட அருளிய ...... பெருமாளே.
பாடல் 770 ( சீகாழி )
ராகம் - ...; தாளம் -
தந்த தந்தன தனதன தனதன
தந்த தந்தன தனதன தனதன
தந்த தந்தன தனதன தனதன ...... தனதான
சந்த னம்பரி மளபுழு கொடுபுனை
கொங்கை வஞ்சியர் சரியொடு கொடுவளை
தங்கு செங்கையர் அனமென வருநடை ...... மடமாதர்
சந்த தம்பொலி வழகுள வடிவினர்
வஞ்ச கம்பொதி மனதின ரணுகினர்
தங்கள் நெஞ்சக மகிழ்வுற நிதிதர ...... அவர்மீதே
சிந்தை வஞ்சக நயமொடு பொருள்கவர்
தந்த்ர மந்த்ரிகள் தரணியி லணைபவர்
செம்பொ னிங்கினி யிலையெனில் மிகுதியு ...... முனிவாகித்
திங்க ளொன்றினில் நெனல்பொரு ளுதவில
னென்று சண்டைகள் புரிதரு மயலியர்
சிங்கி யுங்கொடு மிடிமையு மகலநி ...... னருள்கூர்வாய்
மந்த ரங்குடை யெனநிரை யுறுதுயர்
சிந்த அன்றடர் மழைதனி லுதவிய
மஞ்செ னும்படி வடிவுறு மரிபுகழ் ...... மருகோனே
மங்கை யம்பிகை மகிழ்சர வணபவ
துங்க வெங்கய முகன்மகிழ் துணைவநல்
வஞ்சி தண்குற மகள்பத மலர்பணி ...... மணவாளா
தந்த னந்தன தனதன தனவென
வண்டு விண்டிசை முரல்தரு மணமலர்
தங்கு சண்பக முகிலள வுயர்தரு ...... பொழில்மீதே
சங்கு நன்குமிழ் தரளமு மெழில்பெறு
துங்க வொண்பணி மணிகளும் வெயில்விடு
சண்பை யம்பதி மருவிய அமரர்கள் ...... பெருமாளே.
பாடல் 771 ( சீகாழி )
ராகம் - ராக மாலிகை
தாளம் - ஆதி
தனதன தந்தன தந்தன தந்தன
தனதன தந்தன தந்தன தந்தன
தனதன தந்தன தந்தன தந்தன ...... தனதான
சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு
சமயமு மொன்றிலை யென்ற வரும்பறி
தலையரு நின்று கலங்க விரும்பிய ...... தமிழ்கூறுஞ்
சலிகையு நன்றியும் வென்றியு மங்கள
பெருமைக ளுங்கன முங்குண மும்பயில்
சரவண மும்பொறை யும்புக ழுந்திகழ் ...... தனிவேலும்
விருது துலங்க சிகண்டியி லண்டரு
முருகி வணங்க வரும்பத மும்பல
விதரண முந்திற முந்தர முந்தினை ...... புனமானின்
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்தடி
வருடிம ணந்துபு ணர்ந்தது வும்பல
விஜயமு மன்பின்மொ ழிந்துமொ ழிந்தியல் ...... மறவேனே
கருதியி லங்கை யழிந்துவி டும்படி
அவுணர டங்கம டிந்துவி ழும்படி
கதிரவ னிந்து விளங்கி வரும்படி ...... விடுமாயன்
கடகரி யஞ்சி நடுங்கி வருந்திடு
மடுவினில் வந்துத வும்புய லிந்திரை
கணவன ரங்க முகுந்தன் வருஞ்சக ...... டறமோதி
மருது குலுங்கி நலங்க முனிந்திடு
வரதன லங்கல் புனைந்தரு ளுங்குறள்
வடிவனெ டுங்கடல் மங்கவொ ரம்புகை ...... தொடுமீளி
மருகபு ரந்தர னுந்தவ மொன்றிய
பிரமபு ரந்தனி லுங்குக னென்பவர்
மனதினி லும்பரி வொன்றிய மர்ந்தருள் ...... பெருமாளே.
பாடல் 772 ( சீகாழி )
ராகம் - ....; தாளம் -
தந்தத்தன தானன தந்தத் ...... தனதான
சிந்துற்றெழு மாமதி அங்கித் ...... திரளாலே
தென்றற்றரு வாசமி குந்துற் ...... றெழலாலே
அந்திப்பொழு தாகிய கங்குற் ...... றிரளாலே
அன்புற்றெழு பேதைம யங்கித் ...... தனியானாள்
நந்துற்றிடு வாரியை மங்கத் ...... திகழாயே
நஞ்சொத்தொளிர் வேலினை யுந்திப் ...... பொருவேளே
சந்தக்கவி நூலினர் தஞ்சொற் ...... கினியோனே
சண்பைப்பதி மேவிய கந்தப் ...... பெருமாளே.
பாடல் 773 ( சீகாழி )
ராகம் - ...; தாளம் -
தத்தனா தத்தனத் தத்தனா தத்தனத்
தத்தனா தத்தனத் ...... தனதான
செக்கர்வா னப்பிறைக் கிக்குமா ரற்கலத்
தெற்கிலு தைக்கனற் ...... றணியாத
சித்ரவீ ணைக்கலர்ப் பெற்றதா யர்க்கவச்
சித்தம்வா டிக்கனக் ...... கவிபாடிக்
கைக்கபோ லக்கிரிப் பொற்கொள்ரா சிக்கொடைக்
கற்பதா ருச்செகத் ...... த்ரயபாநு
கற்றபேர் வைப்பெனச் செத்தையோ கத்தினர்க்
கைக்குணான் வெட்கிநிற் ...... பதுபாராய்
சக்ரபா ணிக்குமப் பத்மயோ னிக்குநித்
தப்ரதா பர்க்குமெட் ...... டரிதாய
தத்வவே தத்தனுற் பத்திபோ தித்தஅத்
தத்வ்ரு பக்கிரிப் ...... புரைசாடிக்
கொக்கிலே புக்கொளித் திட்டசூர் பொட்டெழக்
குத்துரா வுத்தபொற் ...... குமரோனே
கொற்றவா வுற்பலச் செச்சைமா லைப்புயக்
கொச்சைவாழ் முத்தமிழ்ப் ...... பெருமாளே.
பாடல் 774 ( சீகாழி )
ராகம் - ஹம்ஸநாதம்
தாளம் - அங்கதாளம் (5) (திஸ்ர்ருபகம்)
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதன தாந்த தான தனதன தாந்த தான
தனதன தாந்த தான ...... தனதான
தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால
தினகர னேய்ந்த மாளி ...... கையிலாரஞ்
செழுமணி சேர்ந்த பீடி கையிலிசை வாய்ந்த பாடல்
வயிரியர் சேர்ந்து பாட ...... இருபாலும்
இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலை
புழுககில் சாந்து பூசி ...... யரசாகி
இனிதிரு மாந்து வாழு மிருவினை நீண்ட காய
மொருபிடி சாம்ப லாகி ...... விடலாமோ
வனசர ரேங்க வான முகடுற வோங்கி ஆசை
மயிலொடு பாங்கி மார்க ...... ளருகாக
மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகி
மலைமிசை தோன்று மாய ...... வடிவோனே
கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறு
கருணைகொள் பாண்டி நாடு ...... பெறவேதக்
கவிதரு காந்த பால கழுமல பூந்த ராய
கவுணியர் வேந்த தேவர் ...... பெருமாளே.
பாடல் 775 ( சீகாழி )
ராகம் - பந்துவராளி
தாளம் - திஸ்ர த்ருபுடை (7)
தானாதன தானன தானன
தானாதன தானன தானன
தானாதன தானன தானன ...... தந்ததான
பூமாதுர மேயணி மான்மறை
வாய்நாலுடை யோன்மலி வானவர்
கோமான்முநி வோர்முதல் யாருமி ...... யம்புவேதம்
பூராயம தாய்மொழி நூல்களும்
ஆராய்வதி லாதட லாசுரர்
போரால்மறை வாயுறு பீதியின் ...... வந்துகூடி
நீமாறரு ளாயென ஈசனை
பாமாலைக ளால்தொழு தேதிரு
நீறார்தரு மேனிய தேனியல் ...... கொன்றையோடு
நீரேர்தரு சானவி மாமதி
காகோதர மாதுளை கூவிளை
நேரோடம் விளாமுத லார்சடை ...... யெம்பிரானே
போமாறினி வேறெது வோதென
வேயாரரு ளாலவ ணதரு
போர்வேலவ நீலக லாவியி ...... வர்ந்துநீடு
பூலோகமொ டேயறு லோகமு
நேரோர் நொடி யேவரு வோய்சுர
சேனாபதி யாயவ னேயுனை ...... யன்பினோடுங்
காமாவறு சோம ஸமானன
தாமாமண மார்தரு நீபசு
தாமாவென வேதுதி யாதுழல் ...... வஞ்சனேனைக்
காவாயடி நாளசு ரேசரை
யேசாடிய கூர்வடி வேலவ
காரார்தரு காழியின் மேவிய ...... தம்பிரானே.
பாடல் 776 ( சீகாழி )
ராகம் - ...; தாளம் -
தனனத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானன
தனனத்தத் தானத் தானன ...... தனதான
மதனச்சொற் காரக் காரிகள் பவளக்கொப் பாடச் சீறிகள்
மருளப்பட் டாடைக் காரிக ...... ளழகாக
மவுனச்சுட் டாடிச் சோலிகள் இசலிப்பித் தாசைக் காரிகள்
வகைமுத்துச் சாரச் சூடிகள் ...... விலைமாதர்
குதலைச்சொற் சாரப் பேசிகள் நரகச்சிற் சாடிப் பீடிகள்
குசலைக்கொட் சூலைக் காலிகள் ...... மயல்மேலாய்க்
கொளுவிக்கட் டாசைப் பாசனை பவதுக்கக் காரச் சூதனை
குமுதப்பொற் பாதச் சேவையி ...... லருள்வாயே
கதறக்கற் சூரைக் கார்கட லெரியத்திக் கூறிற் பாழ்பட
ககனக்கட் டாரிக் காயிரை ...... யிடும்வேலா
கதிர்சுற்றிட் டாசைப் பால்கிரி யுறைபச்சைப் பாசக் கோகில
கவுரிப்பொற் சேர்வைச் சேகர ...... முருகோனே
திதலைப்பொற் பாணிக் கார்குயி லழகிற்பொற் றோகைப் பாவையை
தினமுற்றுச் சாரத் தோள்மிசை ...... யணைவோனே
திலதப்பொட் டாசைச் சேர்முக மயிலுற்றிட் டேறிக் காழியில்
சிவன்மெச்சக் காதுக் கோதிய ...... பெருமாளே.
பாடல் 777 ( சீகாழி )
ராகம் - ....; தாளம் -
தனதனன தத்ததன தனதனன தத்ததன
தனதனன தத்ததன ...... தனதான
விடமெனமி குத்தவட வனலென வுயர்த்துரவி
விரிகதி ரெனப்பரவு ...... நிலவாலே
விதனமிக வுற்றுவரு ரதிபதி கடுத்துவிடு
விரைதரு விதட்கமல ...... கணையாலே
அடலமரி யற்றுதிசை யினில்மருவி மிக்கவனல்
அழலொடு கொதித்துவரு ...... கடைநாளில்
அணுகிநம னெற்றமயல் கொளுமநிலை சித்தமுற
அவசமொ டணைத்தருள ...... வரவேணும்
அடவிதனில் மிக்கபரு வரையவ ரளித்ததிரு
அனையமயில் முத்தமணி ...... சுரயானை
அழகிய மணிக்கலச முலைகளில் மயக்கமுறு
மதிவிரக சித்ரமணி ...... மயில்வீரா
கடதடக ளிற்றுமுக ரிளையவ கிரிக்குமரி
கருணையொ டளித்ததிற ...... முருகோனே
கமலமல ரொத்தவிழி யரிமருக பத்தர்பணி
கழுமலந கர்க்குமர ...... பெருமாளே.
பாடல் 778 ( கரியவனகர் )
ராகம் - ...; தாளம் -
தனதன தனனத் தான தாத்தன
தனதன தனனத் தான தாத்தன
தனதன தனனத் தான தாத்தன ...... தனதான
அளிசுழ லளகக் காடு காட்டவும்
விழிகொடு கலவித் தீயை மூட்டவும்
அமளியில் முடியப் போது போக்கவும் ...... இளைஞோர்கள்
அவர்வச மொழுகிக் காசு கேட்கவும்
அழகிய மயிலிற் சாயல் காட்டவும்
அளவிய தெருவிற் போயு லாத்தவும் ...... அதிபார
இளமுலை மிசையிற் றுசு நீக்கவும்
முகமொடு முகம்வைத் தாசை யாக்கவும்
இருநிதி யிலரைத் தூர நீக்கவும் ...... இனிதாக
எவரையு மளவிப் போய ணாப்பவும்
நினைபவ ரளவிற் காதல் நீக்கியென்
இடரது தொலையத் தாள்கள் காட்டிநின் ...... அருள்தாராய்
நெளிபடு களமுற் றாறு போற்சுழல்
குருதியில் முழுகிப் பேய்கள் கூப்பிட
நிணமது பருகிப் பாறு காக்கைகள் ...... கழுகாட
நிரைநிரை யணியிட் டோ ரி யார்த்திட
அதிர்தரு சமரிற் சேனை கூட்டிய
நிசிசரர் மடியச் சாடு வேற்கொடு ...... பொரும்வீரா
களிமயில் தனில்புக் கேறு தாட்டிக
அழகிய கனகத் தாம மார்த்தொளிர்
கனகிரி புயமுத் தார மேற்றருள் ...... திருமார்பா
கரியவ னகரிற் றேவ பார்ப்பதி
யருள்சுத குறநற் பாவை தாட்பணி
கருணைய தமிழிற் பாடல் கேட்டருள் ...... பெருமாளே.
பாடல் 779 ( வைத்தீசுரன் கோயில் )
ராகம் - வாசஸ்பதி
தாளம் - சதுஸ்ர ஜம்பை (7)
தனத்தன தானத் ...... தனதான
உ ரத்துறை போதத் ...... தனியான
உ னைச்சிறி தோதத் ...... தெரியாது
மரத்துறை போலுற் ...... றடியேனும்
மலத்திருள் மூடிக் ...... கெடலாமோ
பரத்துறை சீலத் ...... தவர்வாழ்வே
பணித்தடி வாழ்வுற் ...... றருள்வோனே
வரத்துறை நீதர்க் ...... கொருசேயே
வயித்திய நாதப் ...... பெருமாளே.
பாடல் 780 ( வைத்தீசுரன் கோயில் )
ராகம் - திலங்
தாளம் - திஸ்ர்ருபகம் (5) 0/3
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தத்தன தான தான தத்தன தான தான
தத்தன தான தான ...... தனதான
எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
யெத்தனை கோடி போன ...... தளவேதோ
இப்படி மோக போக மிப்படி யாகி யாகி
யிப்படி யாவ தேது ...... இனிமேலோ
சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச்
சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
சித்திர ஞான பாத ...... மருள்வாயே
நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக
நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு
நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா
பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு
பத்திர பாத நீல ...... மயில்வீரா
பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வ்ளுர்
பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே.
பாடல் 781 ( வைத்தீசுரன் கோயில் )
ராகம் - ...; தாளம் -
தான தத்தனந் தான தத்ததன
தான தத்தனந் தான தத்ததன
தான தத்தனந் தான தத்ததன ...... தனதான
பாட கச்சிலம் போடு செச்சைமணி
கோவெ னக்கலந் தாடு பொற்சரணர்
பாவை சித்திரம் போல்வர் பட்டுடையி ...... னிடைநூலார்
பார பொற்றனங் கோபு ரச்சிகர
மாமெ னப்படர்ந் தேம லிப்பரித
மாகு நற்கரும் போடு சர்க்கரையின் ...... மொழிமாதர்
ஏட கக்குலஞ் சேரு மைக்குழலொ
டாட ளிக்குலம் பாட நற்றெருவி
லேகி புட்குலம் போல பற்பலசொ ...... லிசைபாடி
ஏறி யிச்சகம் பேசி யெத்தியிதம்
வாரு முற்பணந் தாரு மிட்டமென
ஏணி வைத்துவந் தேற விட்டிடுவர் ...... செயலாமோ
சேட னுக்கசண் டாள ரக்கர்குல
மாள அட்டகுன் றேழ லைக்கடல்கள்
சேர வற்றநின் றாட யிற்கரமி ...... ரறுதோள்மேல்
சேணி லத்தர்பொன் பூவை விட்டிருடி
யோர்கள் கட்டியம் பாட எட்டரசர்
சேசெ யொத்தசெந் தாம ரைக்கிழவி ...... புகழ்வேலா
நாட கப்புனங் காவ லுற்றசுக
மோக னத்திமென் தோளி சித்ரவளி
நாய கிக்கிதம் பாடி நித்தமணி ...... புனைவோனே
ஞான வெற்புகந் தாடு மத்தர்தையல்
நாய கிக்குநன் பாக ரக்கணியும்
நாதர் மெச்சவந் தாடு முத்தமருள் ...... பெருமாளே.
பாடல் 782 ( வைத்தீசுரன் கோயில் )
ராகம் - மனோலயம் (மத்யம ஸ்ருதி)
தாளம் - ஆதி - 2 களை (திஸ்ரநடை) (24)
தான தான தத்த தந்த தான தான தத்த தந்த
தான தான தத்த தந்த ...... தனதான
மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி
மாறி யாடெ டுத்தசி ந்தை ...... யநியாய
மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி
வாரை யாயி னிப்பி றந்து ...... இறவாமல்
வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உ ன்றன்
வீடு தாப ரித்த அன்பர் ...... கண்முடே
மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த
வேளெ யாமெ னப்ப ரிந்து ...... அருள்வாயே
காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட
கால பாநு சத்தி யங்கை ...... முருகோனே
காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த
காளை யேறு கர்த்த னெந்தை ...... யருள்பாலா
சேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்து
சீரை யோது பத்த ரன்பி ...... லுறைவோனே
தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த
சேவல் கேது சுற்று கந்த ...... பெருமாளே.
பாடல் 783 ( வைத்தீசுரன் கோயில் )
ராகம் -....; தாளம் -
தானா தானன தாத்த தந்தன
தானா தானன தாத்த தந்தன
தானா தானன தாத்த தந்தன ...... தனதானா
முலா தாரமொ டேற்றி யங்கியை
ஆறா தாரமொ டோ ட்டி யந்திர
மூலா வாயுவை யேற்று நன்சுழி ...... முனையூடே
மூதா தாரம ரூப்பி லந்தர
நாதா கீதம தார்த்தி டும்பர
மூடே பாலொளி ஆத்து மந்தனை ...... விலகாமல்
மாலா டூனொடு சேர்த்தி தம்பெற
நானா வேதம சாத்தி ரஞ்சொலும்
வாழ்ஞா னாபுரி யேற்றி மந்திர ...... தவிசூடே
மாதா நாதனும் வீற்றி ருந்திடும்
வீடே மூணொளி காட்டி சந்திர
வாகார் தேனமு தூட்டி யென்றனை ...... யுடனாள்வாய்
சூலாள் மாதுமை தூர்த்த சம்பவி
மாதா ராபகல் காத்த மைந்தனை
சூடோ டீர்வினை வாட்டி மைந்தரெ ...... னெமையாளுந்
தூயாள் மூவரை நாட்டு மெந்தையர்
வ்ளுர் வாழ்வினை தீர்த்த சங்கரர்
தோய்சா ரூபரொ டேற்றி ருந்தவ ...... ளருள்பாலா
வேலா ஏழ்கடல் வீட்டி வஞ்சக
மூடார் சூரரை வாட்டி யந்தகன்
வீடு டேவிய காத்தி ரம்பரி ...... மயில்வாழ்வே
வேதா நால்தலை சீக்கொ ளும்படி
கோலா காலம தாட்டு மந்திர
வேலா மால்மக ளார்க்கி ரங்கிய ...... பெருமாளே.
பாடல் 784 ( வைத்தீசுரன் கோயில் )
ராகம் - ...; தாளம் -
தான தானதன தானதன தானதன
தான தானதன தானதன தானதன
தான தானதன தானதன தானதன ...... தனதான
மேக வார்குழல தாடதன பாரமிசை
யார மாடகுழை யாடவிழி யாடபொறி
மேனி வாசனைகள் வீச அல்குல் மோதிபரி ...... மளமேற
மீனு லாடையிடை யாடமயில் போலநடை
யோல மோலமென பாதமணி நூபுரமு
மேல்வில் வீசபணி கீரகுயில் போலகுரல் ...... முழவோசை
ஆக வேயவைகள் கூடிடுவர் வீதிவரு
வோரை வாருமென வேசரச மோடுருகி
ஆசை போலமனை யேகொடணை வார்கள்குவ ...... டதிபார
ஆணி மாமுலையின் மூழ்கிசுக வாரிகொடு
வேர்வை பாயஅணை யூடமளி யாடியிட
ரான சூலைபல நோய்கள்கட லாடியுட ...... லுழல்வேனோ
நாக லோகர்மதி லோகர்பக லோகர்விதி
நாடு ளோர்களம ரோர்கள்கண நாதர்விடை
நாதர் வேதியர்கள் ஆதிசர சோதிதிகழ் ...... முநிவோர்கள்
நாத ரேநரர்ம னாரணர்பு ராணவகை
வேத கீதவொலி பூரையிது பூரையென
நாச மாயசுரர் மேவுகிரி தூளிபட ...... விடும்வேலா
தோகை மாதுகுற மாதமுத மாதுவினல்
தோழி மாதுவளி நாயகிமி னாளைசுக
சோக மோடிறுகி மார்முலைவி டாமலணை ...... புணர்வோனே
தோளி ராறுமுக மாறுமயில் வேலழகு
மீதெய் வானவடி வாதொழுதெ ணாவயனர்
சூழு காவிரியும் வ்ளுர்முரு காவமரர் ...... பெருமாளே.
பாடல் 785 ( திருக்கடவூர் )
ராகம் - பைரவி
தாளம் - ஆதி (2 களை)
(எடுப்பு - 1/4 இடம்)
தாத்த தனத்தன தானன தானன
தாத்த தனத்தன தானன தானன
தாத்த தனத்தன தானன தானன ...... தனதான
ஏட்டின் விதிப்படி யேகொடு மாபுர
வீட்டி லடைத்திசை வேகசை மூணதி
லேற்றி யடித்திட வேகட லோடம ...... தெனவேகி
ஏற்கு மெனப்பொரு ளாசைபெ ணாசைகொ
ளாத்து வெனத்திரி யாபரி யாதவ
மேற்றி யிருப்பிட மேயறி யாமலு ...... முடல்பேணிப்
பூட்டு சரப்பளி யேமத னாமென
ஆட்டி யசைத்திய லேதிரி நாளையில்
பூத்த மலக்குகை யோபொதி சோறென ...... கழுகாகம்
போற்றி நமக்கிரை யாமென வேகொள
நாட்டி லொடுக்கென வேவிழு போதினில்
பூட்டு பணிப்பத மாமயி லாவருள் ...... புரிவாயே
வீட்டி லடைத்தெரி யேயிடு பாதக
னாட்டை விடுத்திட வேபல சூதினில
வீழ்த்த விதிப்படி யேகுரு காவலர் ...... வனமேபோய்
வேற்றுமை யுற்றுரு வோடியல் நாளது
பார்த்து முடித்திட வேயொரு பாரத
மேற்புனை வித்தம காவிர மாயவன் ...... மருகோனே
கோட்டை யழித்தசு ரார்பதி கோவென
மூட்டி யெரித்தப ராபர சேகர
கோத்த மணிக்கதி ரேநிக ராகிய ...... வடிவேலா
கூற்று மரித்திட வேயுதை பார்வதி
யார்க்கு மினித்தபெ ணாகிய மான்மகள்
கோட்டு முலைக்கதி பாகட வூருறை ...... பெருமாளே.
பாடல் 786 ( திருக்கடவூர் )
ராகம் - ...; தாளம் -
தானதன தான தத்த தானதன தான தத்த
தானதன தான தத்த ...... தனதான
சூலமென வோடு சர்ப்ப வாயுவைவி டாத டக்கி
தூயவொளி காண முத்தி ...... விதமாகச்
சூழுமிருள் பாவ கத்தை வீழ அழ லுடெ ரித்து
சோதிமணி பீட மிட்ட ...... மடமேவி
மேலைவெளி யாயி ரத்து நாலிருப ராப ரத்தின்
மேவியரு ணாச லத்தி ...... னுடன்மூழ்கி
வேலுமயில் வாக னப்ர காசமதி லேத ரித்து
வீடுமது வேசி றக்க ...... அருள்தாராய்
ஓலசுர ராழி யெட்டு வாளகிரி மாய வெற்பு
மூடுருவ வேல்தொ டுத்த ...... மயில்வீரா
ஓதுகுற மான்வ னத்தில் மேவியவள் கால்பி டித்து
ளோமெனுப தேச வித்தொ ...... டணைவோனே
காலனொடு மேதி மட்க வூழிபுவி மேல்கி டத்து
காலனிட மேவு சத்தி ...... யருள்பாலா
காலமுதல் வாழ்பு விக்க தாரநகர் கோபு ரத்துள்
கானமயில் மேல்த ரித்த ...... பெருமாளே.
பாடல் 787 ( திருப்படிக்கரை )
ராகம் - ...; தாளம் -
தனத்த தத்தனத் தனத்த தத்தனத்
தனத்த தத்தனத் ...... தனதான
அருக்கி மெத்தெனச் சிரித்து மைக்கணிட்
டழைத்தி தப்தடச் ...... சிலகூறி
அரைப்ப ணத்தைவிற் றுடுத்த பட்டவிழ்த்
தணைத்தி தழ்க்கொடுத் ...... தநுராகத்
துருக்கி மட்டறப் பொருட்ப றிப்பவர்க்
குளக்க ருத்தினற் ...... ப்ரமைகூரா
துரைத்து செய்ப்பதித் தலத்தி னைத்துதித்
துனைத்தி ருப்புகழ்ப் ...... பகர்வேனோ
தருக்கு மற்கடப் படைப்ப லத்தினிற்
றடப்பொ ருப்பெடுத் ...... தணையாகச்
சமுத்திர த்தினைக் குறுக்க டைத்ததிற்
றரித்த ரக்கர்பொட் ...... டெழவேபோர்
செருக்கு விக்ரமச் சரத்தை விட்டுறச்
செயித்த வுத்தமத் ...... திருமாமன்
திருத்த கப்பன்மெச் சொருத்த முத்தமிழ்த்
திருப்ப டிக்கரைப் ...... பெருமாளே.
பாடல் 788 ( மாயூரம் )
ராகம் - ....; தாளம் -
தனதன தத்தத் தனந்த தானன
தனதன தத்தத் தனந்த தானன
தனதன தத்தத் தனந்த தானன ...... தனதான
அமுதினை மெத்தச் சொரிந்து மாவின
தினியப ழத்தைப் பிழிந்து பானற
வதனொடு தித்தித் தகண்ட ளாவிய ...... விதழாராய்
அழகிய பொற்றட்டி னொண்டு வேடையின்
வருபசி யர்க்குற் றவன்பி னாலுண
வருள்பவ ரொத்துத் தளர்ந்த காமுகர் ...... மயல்தீரக்
குமுதம் விளர்க்கத் தடங்கு லாவிய
நிலவெழு முத்தைப் புனைந்த பாரிய
குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண ...... தனபாரக்
குவடிள கக்கட் டியுந்தி மேல்விழு
மவர்மய லிற்புக் கழிந்த பாவியை
குரைகழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வுற ...... அருள்வாயே
வமிசமி குத்துப் ப்ரபஞ்சம் யாவையு
மறுகிட வுக்ரக் கொடும்பை யானபுன்
மதிகொ டழித்திட் டிடும்பை ராவணன் ...... மதியாமே
மறுவறு கற்பிற் சிறந்த சீதையை
விதனம் விளைக்கக் குரங்கி னாலவன்
வமிச மறுத்திட் டிலங்கு மாயவன் ...... மருகோனே
எமதும லத்தைக் களைந்து பாடென
அருள அதற்குப் புகழ்ந்து பாடிய
இயல்கவி மெச்சிட் டுயர்ந்த பேறருள் ...... முருகோனே
எழில்வளை மிக்கத் தவழ்ந்து லாவிய
பொனிநதி தெற்கிற் றிகழ்ந்து மேவிய
இணையிலி ரத்னச் சிகண்டி யூருறை ...... பெருமாளே.
பாடல் 789 ( பாகை )
ராகம் - ...; தாளம் -
தான தானன தானம், தான தானன தானம்
தான தானன தானம் ...... தனதான
ஆடல் மாமத ராஜன் பூசல் வாளியி லேநொந்
தாகம் வேர்வுற மால்கொண் ...... டயராதே
ஆர வாணகை யார்செஞ் சேலி னேவலி லேசென்
றாயு வேதனை யேயென் ...... றுலையாதே
சேடன் மாமுடி மேவும் பாரு ளோர்களுள் நீடுந்
த்யாக மீபவர் யாரென் ...... றலையாதே
தேடி நான்மறை நாடுங் காடு மோடிய தாளுந்
தேவ நாயக நானின் ...... றடைவேனோ
பாடு நான்மறை யோனுந் தாதை யாகிய மாலும்
பாவை பாகனு நாளும் ...... தவறாதே
பாக நாண்மலர் சூடுஞ் சேக ராமதில் சூழ்தென்
பாகை மாநக ராளுங் ...... குமரேசா
கூட லான்முது கூனன் றோட வாதுயர் வேதங்
கூறு நாவல மேவுந் ...... தமிழ்வீரா
கோடி தானவர் தோளுந் தாளும் வீழவு லாவுங்
கோல மாமயி லேறும் ...... பெருமாளே.
பாடல் 790 ( பாகை )
ராகம் - ஹிந்தோளம்
தாளம் - ஆதி - 2 களை
தான தனந்தன தான தனந்தன
தான தனந்தன ...... தனதான
ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல
நோய்கள் வளைந்தற ...... இளையாதே
ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு
காடு பயின்றுயி ...... ரிழவாதே
மூளை யெலும்புகள் நாடி நரம்புகள்
வேறு படுந்தழல் ...... முழுகாதே
மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில்
வாழ்வு பெறும்படி ...... மொழிவாயே
வாளை நெருங்கிய வாவியி லுங்கயல்
சேல்கள் மறிந்திட ...... வலைபீறா
வாகை துதைந்தணி கேதகை மங்கிட
மோதி வெகுண்டிள ...... மதிதோயும்
பாளை நறுங்கமழ் பூக வனந்தலை
சாடி நெடுங்கடல் ...... கழிபாயும்
பாகை வளம்பதி மேவி வளஞ்செறி
தோகை விரும்பிய ...... பெருமாளே.
பாடல் 791 ( பாகை )
ராகம் - ...; தாளம் -
தனன தனதன தனன தனதன
தான தானன ...... தனதான
குவளை பொருதிரு குழையை முடுகிய
கோல வேல்விழி ...... மடவார்தங்
கொடிய ம்ருகமத புளக தனகிரி
கூடி நாடொறு ...... மயலாகித்
துவள வுருகிய சரச விதமது
சோர வாரிதி ...... யலையூடே
சுழலு மெனதுயிர் மவுன பரமசு
கோம கோததி ...... படியாதோ
கவள கரதல கரட விகடக
போல பூதர ...... முகமான
கடவுள் கணபதி பிறகு வருமொரு
கார ணாகதிர் ...... வடிவேலா
பவள மரகத கநக வயிரக
பாட கோபுர ...... அரிதேரின்
பரியு மிடறிய புரிசை தழுவிய
பாகை மேவிய ...... பெருமாளே.
பாடல் 792 ( திருவிடைக்கழி )
ராகம் - ....; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
அனலப் பரிபுக் ககுணத் ரயம்வைத்
தடர்பொய்க் குருதிக் ...... குடில்பேணா
அவலக் கவலைச் சவலைக் கலைகற்
றதனிற் பொருள்சற் ...... றறியாதே
குணகித் தனகிக் கனலொத் துருகிக்
குலவிக் கலவிக் ...... கொடியார்தங்
கொடுமைக் கடுமைக் குவளைக் கடையிற்
குலைபட் டலையக் ...... கடவேனோ
தினைவித் தினநற் புனமுற் றகுறத்
திருவைப் புணர்பொற் ...... புயவீரா
தெளியத் தெளியப் பவளச் சடிலச்
சிவனுக் கொருசொற் ...... பகர்வோனே
கனகச் சிகரக் குலவெற் புருவக்
கறுவிப் பொருகைக் ...... கதிர்வேலா
கழியைக் கிழியக் கயல்தத் துமிடைக்
கழியிற் குமரப் ...... பெருமாளே.
பாடல் 793 ( திருவிடைக்கழி )
ராகம் -...; தாளம் -
தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத்
தனத்தனதத் தனத்தனதத் ...... தனதான
இரக்குமவர்க் கிரக்கமிகுத் தளிப்பனசொப் பனத்திலுமற்
றெனக்கியலுக் கிசைக்கெதிரெப் ...... புலவோரென்
றெடுத்துமுடித் தடக்கைமுடித் திரட்டையுடுத் திலச்சினையிட்
டடைப்பையிடப் ப்ரபுத்துவமுற் ...... றியல்மாதர்
குரக்குமுகத் தினைக்குழலைப் பனிப்பிறையொப் பெனப்புயலொப்
பெனக்குறுகிக் கலைக்குள்மறைத் ...... திடுமானின்
குளப்படியிற் சளப்படுமிப் பவக்கடலைக் கடக்கஇனிக்
குறித்திருபொற் கழற்புணையைத் ...... தருவாயே
அரக்கரடற் கடக்கஅமர்க் களத்தடையப் புடைத்துலகுக்
கலக்கணறக் குலக்கிரிபொட் ...... டெழவாரி
அனைத்தும்வறப் புறச்சுரர்கற் பகப்புரியிற் புகக்கமலத்
தனைச்சிறையிட் டிடைக்கழியிற் ...... பயில்வோனே
கரக்கரடக் களிற்றுமருப் புலக்கையினிற் கொழித்தமணிக்
கழைத்தரளத் தினைத்தினையிற் ...... குறுவாளைக்
கணிக்குறவக் குறிச்சியினிற் சிலைக்குறவர்க் கிலச்சைவரக்
கயத்தொடுகைப் பிடித்தமணப் ...... பெருமாளே.
பாடல் 794 ( திருவிடைக்கழி )
ராகம் - ஸெளராஷ்டிரம்
தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2
தனன தத்தனத் தனன தத்தனத்
தனன தத்தனத் ...... தனதான
பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
பயனு மெப்படிப் ...... பலவாழ்வும்
பழைய முத்தியிற் பதமு நட்புறப்
பரவு கற்பகத் ...... தருவாழ்வும்
புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
பொலியும் அற்புதப் ......பெருவாழ்வும்
புலன கற்றிடப் பலவி தத்தினைப்
புகழ்ப லத்தினைத் ...... தரவேணும்
தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்
சரவ ணத்தினிற் ...... பயில்வோனே
தனிவ னத்தினிற் புனம றத்தியைத்
தழுவு பொற்புயத் ...... திருமார்பா
சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
திறல யிற்சுடர்க் ...... குமரேசா
செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்
றிருவி டைக்கழிப் ...... பெருமாளே.
பாடல் 795 ( திருவிடைக்கழி )
ராகம் - ரேவதி
தாளம் - அங்கதாளம் (5)
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தனனதன தத்தனத் தனனதன தத்தனத்
தனனதன தத்தனத் ...... தனதான
படிபுனல்நெ ருப்படற் பவனம்வெளி பொய்கருப்
பவமுறைய வத்தைமுக் ...... குணநீடு
பயில்பிணிகள் மச்சைசுக் கிலமுதிர மத்திமெய்ப்
பசிபடுநி ணச்சடக் ...... குடில்பேணும்
உ டலது பொ றுத்தறக் கடைபெறுபி றப்பினுக்
குணர்வுடைய சித்தமற் ...... றடிநாயேன்
உ ழலுமது கற்பலக் கழலிணையெ னக்களித்
துனதுதம ரொக்கவைத் ...... தருள்வாயே
கொடியவொரு குக்குடக் கொடியவடி விற்புனக்
கொடிபடர்பு யக்கிரிக் ...... கதிர்வேலா
குமரசம ரச்சினக் குமரவணி யத்தன்மெய்க்
குமரமகிழ் முத்தமிழ்ப் ...... புலவோனே
தடவிகட மத்தகத் தடவரைய ரத்தரத்
தடலனுச வித்தகத் ...... துறையோனே
தருமருவு மெத்தலத் தருமருவ முத்தியைத்
தருதிருவி டைக்கழிப் ...... பெருமாளே.
பாடல் 796 ( திருவிடைக்கழி )
ராகம் - கல்யாணி
தாளம் - கண்டசாபு (2 1/2)
தனதனனத் தனதான தனதனனத் தனதான
தனதனனத் தனதான ...... தனதான
பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான
பகரும்வினைச் செயல்மாதர் ...... தருமாயப்
படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாது
பழமைபிதற் றிடுலொக ...... முமுடர்
உ ழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி
யொருபயனைத் தெளியாது ...... விளியாமுன்
உ னகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற
உ னதுதிருப் புழோத ...... அருள்வாயே
தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு
திடுதிடெனப் பலபூதர் ...... விதமாகத்
திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப் பலதேவர்
ஜெயஜெயெனக் கொதிவேலை ...... விடுவோனே
அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல
அடல்தருகெற் சிதநீல ...... மயில்வீரா
அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை
அதிபஇடைக் கழிமேவு ...... பெருமாளே.
பாடல் 797 ( திருவிடைக்கழி )
ராகம் - ...; தாளம் -
தனத்த தானன தனதன தனதன
தனத்த தானன தனதன தனதன
தனத்த தானன தனதன தனதன ...... தனதான
பெருக்க மாகிய நிதியினர் வரின்மிக
நகைத்து வாமென அமளிய ருகுவிரல்
பிடித்து போயவர் தொடையொடு தொடைபட ...... வுறவாடிப்
பிதற்றி யேயள விடுபண மதுதம
திடத்தி லேவரு மளவுந லுரைகொடு
பிலுக்கி யேவெகு சரசமொ டணைகுவர் ...... கனமாலாய்
முருக்கி னேரித ழமுதுப ருகுமென
வுரைத்து லீலைக ளதிவித மொடுமலை
முலைக்கு ளேதுயில் கொளமயல் புரிகுவர் ...... பொருள்தீரின்
முறுக்கி யேயுதை கொடுவசை யுரைதரு
மனத்து ரோகிக ளிடுதொழில் வினையற
முடுக்கி யேயுன திருகழல் மலர்தொழ ...... அருள்தாராய்
நெருக்கி யேவரு மவுணர்கள் குலமற
வுறுக்கி யேமயில் முதுகினில் விசைகொடு
நிலத்தி லேசமர் பொருதவ ருயிர்பலி ...... கொளும்வேலா
நெகத்தி லேஅயன் முடிபறி யிறைதிரி
புரத்தி லேநகை புரிபர னடியவர்
நினைப்பி லேயருள் தருசிவ னுதவிய ...... புதல்வோனே
செருக்கு வேடுவர் தருமொரு சிறுமியை
மருக்கு லாவிய மலரணை மிசைபுணர்
திருக்கை வேல்வடி வழகிய குருபர ...... முருகோனே
சிறக்கு மாதவ முனிவரர் மகபதி
யிருக்கு வேதனு மிமையவர் பரவிய
திருக்கு ராவடி நிழல்தனி லுலவிய ...... பெருமாளே.
பாடல் 798 ( திருவிடைக்கழி )
ராகம் - காபி
தாளம் - சதுஸ்ர ரூபகம் - திஸ்ர நடை (9)
(எடுப்பு - அதீதம் வீச்சில் 1 தள்ளி )
தனத்த தானன தனதன ...... தனதான
மருக்கு லாவிய மலரணை ...... கொதியாதே
வளர்த்த தாய்தமர் வசையது ...... மொழியாதே
கருக்கு லாவிய அயலவர் ...... பழியாதே
கடப்ப மாலையை யினிவர ...... விடவேணும்
தருக்கு லாவிய கொடியிடை ...... மணவாளா
சமர்த்த னேமணி மரகத ...... மயில்வீரா
திருக்கு ராவடி நிழல்தனி ...... லுறைவோனே
திருக்கை வேல்வடி வழகிய ...... பெருமாளே.
பாடல் 799 ( திருவிடைக்கழி )
ராகம் - ....; தாளம் -
தனன தத்தன தனதன தனன தத்தன தனதன
தனன தத்தன தனதன ...... தனதான
முலைகு லுக்கிகள் கபடிகள் வடிபு ழுக்கைக ளசடிகள்
முறைம சக்கிகள் திருடிகள் ...... மதவேணூல்
மொழிப சப்பிகள் விகடிகள் அழும னத்திகள் தகுநகை
முகமி னுக்கிகள் கசடிகள் ...... இடையேசூழ்
கலைநெ கிழ்த்திக ளிளைஞர்கள் பொருள்ப றித்தம
கனியி தழ்ச்சுருள் பிளவிலை ...... யொருபாதி
கலவி யிற்றரும் வசவிகள் விழிம யக்கினில் வசமழி
கவலை யற்றிட நினதருள் ...... புரிவாயே
அலைநெ ருப்பெழ வடவரை பொடிப டச்சம ணர்கள்குலம்
அணிக ழுப்பெற நடவிய ...... மயில்வீரா
அரன ரிப்பிர மர்கள்முதல் வழிப டப்பிரி யமும்வர
அவர வர்க்கொரு பொருள்புகல் ...... பெரியோனே
சிலைமொ ளுக்கென முறிபட மிதிலை யிற்சந கமனருள்
திருவி னைப்புண ரரிதிரு ...... மருகோனே
திரள்வ ருக்கைகள் கமுகுகள் சொரிம துக்கத லிகள்வளர்
திருவி டைக்கழி மருவிய ...... பெருமாளே.
பாடல் 800 ( தான் தோன்றி )
ராகம் - ....; தாளம் -
தாந்தாந்த தத்ததன தாந்தாந்த தத்ததன
தாந்தாந்த தத்ததன ...... தனதான
சூழ்ந்தேன்ற துக்கவினை செர்ந்தூன்று மப்பில்வளர்
தூண்போன்ற இக்குடிலு ...... முலகூடே
சோர்ந் தூய்ந்து மக்கினியில் நூண்சாம்பல் பட்டுவிடு
தோம்பாங்கை யுட்பெரிது ...... முணராமே
வீழ்ந்தீண்டி நற்கலைகள் தான்தோண்டி மிக்கபொருள்
வேண்டீங்கை யிட்டுவர ...... குழுவார்போல்
வேம்பாங்கு மற்றுவினை யாம்பாங்கு மற்றுவிளை
வாம்பாங்கில் நற்கழல்கள் ...... தொழஆளாய்
வாழ்ந்தான்ற கற்புடைமை வாய்ந்தாய்ந்த நற்றவர்கள்
வான்தோன்று மற்றவரு ...... மடிபேண
மான்போன்ற பொற்றொடிகள் தாந்தோய்ந்த நற்புயமும்
வான்தீண்ட வுற்றமயில் ...... மிசையேறித்
தாழ்ந்தாழ்ந்த மிக்கடல் வீழ்ந்தீண்டு வெற்பசுரர்
சாய்ந்தேங்க வுற்றமர்செய் ...... வடிவேலா
தானதோன்றி யப்பர்குடி வாழ்ந்தீன்ற நற்புதல்வ
தான்தோன்றி நிற்கவல ...... பெருமாளே.
பாடல் 801 ( கந்தன்குடி )
ராகம் - ஸஹானா
தாளம் - திஸ்ர ஏகம் (3)
தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன
தந்தந்தன தந்தந்தன ...... தனதான
எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை
யென்றுந்துயர் பொன்றும்படி ...... யொருநாளே
இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை
யென்றும்படி பந்தங்கெட ...... மயிலேறி
வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை
மண்டும்படி நின்றுஞ்சுட ...... ரொளிபோலும்
வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும்
வண்டன்தமி யன்றன்பவம் ...... ஒழியாதோ
தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு
தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு ...... மணியாரம்
சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி
சம்புந்தொழ நின்றுந்தினம் ...... விளையாடும்
கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி
கண்டுய்ந்திட அன்றன்பொடு ...... வருவோனே
கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை
கந்தன்குடி யின்தங்கிய ...... பெருமாளே.
பாடல் 801 ( கந்தன்குடி )
ராகம் - ஸஹானா
தாளம் - திஸ்ர ஏகம் (3)
தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன
தந்தந்தன தந்தந்தன ...... தனதான
எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை
யென்றுந்துயர் பொன்றும்படி ...... யொருநாளே
இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை
யென்றும்படி பந்தங்கெட ...... மயிலேறி
வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை
மண்டும்படி நின்றுஞ்சுட ...... ரொளிபோலும்
வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும்
வண்டன்தமி யன்றன்பவம் ...... ஒழியாதோ
தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு
தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு ...... மணியாரம்
சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி
சம்புந்தொழ நின்றுந்தினம் ...... விளையாடும்
கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி
கண்டுய்ந்திட அன்றன்பொடு ...... வருவோனே
கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை
கந்தன்குடி யின்தங்கிய ...... பெருமாளே.
பாடல் 802 ( திலதைப்பதி )
ராகம் - ஜனரஞ்சனி
தாளம் - திஸ்ர ஏகம் (3)
தனனத் தனனா ...... தனதான
இறையத் தனையோ ...... அதுதானும்
இலையிட் டுணலேய் ...... தருகாலம்
அறையிற் பெரிதா ...... மலமாயை
அலையப் படுமா ...... றினியாமொ
மறையத் தனைமா ...... சிறைசாலை
வழியுய்த் துயர்வா ...... னுறுதேவர்
சிறையைத் தவிரா ...... விடும்வேலா
திலதைப் பதிவாழ் ...... பெருமாளே.
பாடல் 803 ( திலதைப்பதி )
ராகம் - ....; தாளம் -
தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
தனனத் தனன தந்த ...... தனதான
பனகப் படமி சைந்த முழையிற் றரள நின்று
பாடர்பொற் பணிபு னைந்த ...... முலைமீதிற்
பரிவற் றெரியு நெஞ்சில் முகிலிற் களிய கொண்டை
படுபுட் பவன முன்றி ...... லியலாரும்
அனமொத் திடுசி றந்த நடையிற் கிளியி னின்சொல்
அழகிற் றனித ளர்ந்து ...... மதிமோக
மளவிப் புளக கொங்கை குழையத் தழுவி யின்ப
அலையிற் றிரிவ னென்று ...... மறிவோனே
தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
தனனத் தனன தந்த ...... தனதானா
தகிடத் தகிட தந்த திமிதத் திமித வென்று
தனிமத் தளமு ழங்க ...... வருவோனே
செநெனற் கழனி பொங்கி திமிலக் கமல மண்டி
செறிநற் கழைதி ரண்டு ...... வளமேவித்
திருநற் சிகரி துங்க வரையைப் பெருவு கின்ற
திலதைப் பதிய மர்ந்த ...... பெருமாளே.
பாடல் 804 ( திலதைப்பதி )
ராகம் - ....; தாளம் -
தனனத் தனத்த தந்த தனனத் தனத்த தந்த
தனனத் தனத்த தந்த ...... தனதான
மகரக் குழைக்கு ளுந்து நயனக் கடைக்கி லங்கு
வசியச் சரத்தி யைந்த ...... குறியாலே
வடவெற் பதைத்து ரந்து களபக் குடத்தை வென்று
மதர்விற் பணைத்தெ ழுந்த ...... முலைமீதே
உ கமெய்ப் பதைத்து நெஞ்சும் விரகக் கடற்பொ திந்த
வுலைபட் டலர்ச்ச ரங்கள் ...... நலியாமல்
உ லகப் புகழ்ப்பு லம்பு கலியற் றுணர்ச்சி கொண்டு
னுரிமைப் புகழ்ப்ப கர்ந்து ...... திரிவேனோ
புகர்கைக் கரிப்பொ திந்த முளரிக் குளத்தி ழிந்த
பொழுதிற் கரத்தொ டர்ந்து ...... பிடிநாளிற்
பொருமித் திகைத்து நின்று வரதற் கடைக்க லங்கள்
புகுதக் கணத்து வந்து ...... கையிலாருந்
திகிரிப் படைத்து ரந்த வரதற் குடற்பி றந்த
சிவைதற் பரைக்கி சைந்த ...... புதல்வோனே
சிவபத் தர்முத்த ரும்பர் தவசித் தர்சித்த மொன்று
திலதைப் பதிக்கு கந்த ...... பெருமாளே.
பாடல் 805 ( திருவம்பர் )
ராகம் - ...; தாளம் -
தான தந்தனந் தான தந்ததன
தான தந்தனந் தான தந்ததன
தான தந்தனந் தான தந்ததன ...... தந்ததான
சோதி மந்திரம் போத கம்பரவு
ஞான கம்பரந் தேயி ருந்தவெளி
தோட லர்ந்தபொன் பூவி ருந்தஇட ...... முங்கொளாமல்
சூது பந்தயம் பேசி யஞ்சுவகை
சாதி விண்பறிந் தோடு கண்டர்மிகு
தோத கம்பரிந் தாடு சிந்துபரி ...... கந்துபாயும்
வீதி மண்டலம் பூண மர்ந்துகழி
கோல மண்டிநின் றாடி யின்பவகை
வேணு மென்றுகண் சோர ஐம்புலனொ ...... டுங்குபோதில்
வேதி யன்புரிந் தேடு கண்டளவி
லோடி வெஞ்சுடுங் காட ணைந்துசுட
வீழ்கி வெந்துகுந் தீடு மிந்தஇட ...... ரென்றுபோமோ
ஆதி மண்டலஞ் சேர வும்பரம
சோம மண்டலங் கூட வும்பதும
வாளன் மண்டலஞ் சார வுஞ்சுழிப ...... டர்ந்ததோகை
ஆழி மண்டலந் தாவி யண்டமுத
லான மண்டலந் தேடி யொன்றதொழு
கான மண்டலஞ் சேட னங்கணயில் ...... கொண்டுலாவிச்
சூதர் மண்டலந் தூளெ ழுந்துபொடி
யாகி விண்பறந் தோட மண்டியொரு
சூரி யன்திரண் டோ ட கண்டுநகை ...... கொண்டவேலா
சோடை கொண்டுளங் கான மங்கைமய
லாடி இந்திரன் தேவர் வந்துதொழ
சோழ மண்டலஞ் சாரு மம்பர்வளர் ...... தம்பிரானே.
பாடல் 806 ( திருமாகாளம் )
ராகம் - ....; தாளம் -
தானான தானதன தானதன தானதன
தானான தானதன தானதன தானதன
தானான தானதன தானதன தானதன ...... தனதான
காதோடு தோடிகலி யாடவிழி வாள்சுழல
கோலாக லாரமுலை மார்புதைய பூணகல
காரோடு கூடளக பாரமல ரோடலைய ...... அணைமீதே
காலோடு காலிகலி யாடபரி நூபுரமொ
டேகாச மானவுடை வீசியிடை நூல்துவள
காவீர மானஇத ழூறல்தர நேசமென ...... மிடறோதை
நாதான கீதகுயில் போலஅல்குல் மால்புரள
மார்போடு தோள்கரமொ டாடிமிக நாணழிய
நானாவி நோதமுற மாதரொடு கூடிமயல் ...... படுவேனை
நானாரு நீயெவனெ னாமலென தாவிகவர்
சீர்பாத மேகவலை யாயுமுன வேநிதமு
நாதாகு மாரமுரு காஎனவு மோதஅருள் ...... புரிவாயே
பாதாள சேடனுட லாயிரப ணாமகுட
மாமேரொ டேழுகட லோதமலை சூரருடல்
பாழாக தூளிவிணி லேறபுவி வாழவிடு ...... சுடர்வேலா
பாலாழி மீதரவின் மேல்திருவொ டேயமளி
சேர்நீல ரூபன்வலி ராவணகு ழாமிரிய
பாரேவை யேவியமு ராரியைவர் தோழனரி ...... மருகோனே
மாதாபு ராரிசுக வாரிபரை நாரியுமை
ஆகாச ரூபியபி ராமிவல மேவுசிவன்
மாடேறி யாடுமொரு நாதன்மகிழ் போதமருள் ...... குருநாதா
வானோர்க ளீசன்மயி லோடுகுற மாதுமண
வாளாகு காகுமர மாமயிலின் மீதுதிரு
மாகாள மாநகரில் மாலொடடி யார்பரவு ...... பெருமாளே.
பாடல் 807 ( இஞ்சிகுடி )
ராகம் - ....; தாளம் -
தந்ததனத் தான தான தனதன
தந்ததனத் தான தான தனதன
தந்ததனத் தான தான தனதன ...... தனதான
குங்குமகற் பூர நாவி யிமசல
சந்தனகத் தூரி லேப பரிமள
கொங்கைதனைக் கோலி நீடு முகபட ...... நகரேகை
கொண்டைதனைக் கோதி வாரி வகைவகை
துங்கமுடித் தால கால மெனவடல்
கொண்டவிடப் பார்வை காதி னெதிர்பொரு ...... மமுதேயாம்
அங்குளநிட் டூர மாய விழிகொடு
வஞ்சமனத் தாசை கூறி யெவரையு
மன்புடைமெய்க் கோல ராக விரகினி ...... லுறவாடி
அன்றளவுக் கான காசு பொருள்கவர்
மங்கையர்பொய்க் காதல் மோக வலைவிழ
லன்றியுனைப் பாடி வீடு புகுவது ...... மொருநாளே
சங்கதசக் ணவ னோடு சொலவள
மிண்டுசெயப் போன வாயு சுதனொடு
சம்பவசுக் ணவ னாதி யெழுபது ...... வெளமாகச்
சண்டகவிச் சேனை யால்மு னலைகடல்
குன்றிலடைத் தேறி மோச நிசிசரர்
தங்கிளைகெட் டோ ட ஏவு சரபதி ...... மருகோனே
எங்குநினைப் போர்கள் நேச சரவண
சிந்துரகர்ப் பூர ஆறு முககுக
எந்தனுடைச் சாமி நாத வயலியி ...... லுறைவேலா
இன்புறுபொற் கூட மாட நவமணி
மண்டபவித் தார வீதி புடைவளர்
இஞ்சிகுடிப் பார்வ தீச ரருளிய ...... பெருமாளே.
பாடல் 808 ( திருநள்ளாறு )
ராகம் - யதுகுல காம்போதி
தாளம் - அங்கதாளம் (7 1/2)
(எடுப்பு - 3/4 தள்ளி)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தத்த தந்தன தானன தானன
தத்த தந்தன தானன தானன
தத்த தந்தன தானன தானன ...... தனதான
பச்சை யொண்கிரி போலிரு மாதன
முற்றி தம்பொறி சேர்குழல் வாளயில்
பற்று புண்டரி காமென ஏய்கயல் ...... விழிஞான
பத்தி வெண்டர ளாமெனும் வாணகை
வித்ரு மஞ்சிலை போல்நுத லாரிதழ்
பத்ம செண்பக மாமநு பூதியி ...... னழகாளென்
றிச்சை யந்தரி பார்வதி மோகினி
தத்தை பொன்கவி னாலிலை போல்வயி
றிற்ப சுங்கிளி யானமி னூலிடை ...... யபிராமி
எக்கு லங்குடி லோடுல கியாவையு
மிற்ப திந்திரு நாழிநெ லாலற
மெப்பொ தும்பகிர் வாள்கும ராஎன ...... வுருகேனோ
கச்சை யுந்திரு வாளுமி ராறுடை
பொற்பு யங்களும் வேலுமி ராறுள
கட்சி வங்கம லாமுக மாறுள ...... முருகோனே
கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற
சித்தர் விஞ்சையர் மாகர்ச பாசென
கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற ...... விடும்வேலா
நச்சு வெண்பட மீதணை வார்முகில்
பச்சை வண்புய னார்கரு டாசனர்
நற்க ரந்தநு கோல்வளை நேமியர் ...... மருகோனே
நற்பு னந்தனில் வாழ்வளி நாயகி
யிச்சை கொண்டொரு வாரண மாதொடு
நத்தி வந்துந ளாறுறை தேவர்கள் ...... பெருமாளே.
பாடல் 809 ( வழுவூர் )
ராகம் - ....; தாளம் -
தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன
தனனாதன தானன தானன ...... தனதானா
தருவூரிசை யாரமு தார்நிகர்
குயிலார்மொழி தோதக மாதர்கள்
தணியாமய லாழியி லாழவு ...... மமிழாதே
தழலேபொழி கோரவி லோசன
மெறிபாசம காமுனை சூலமுள்
சமனார்முகில் மேனிக டாவினி ...... லணுகாதே
கருவூறிய நாளுமு நூறெழு
மலதேகமு மாவலு மாசைக
படமாகிய பாதக தீதற ...... மிடிதீரக்
கனிவீறிய போதமெய் ஞானமு
மியலார்சிவ நேசமு மேவர
கழல்சேரணி நூபுர தாளிணை ...... நிழல்தாராய்
புருகூதன்மி னாளொரு பாலுற
சிலைவேடுவர் மானொரு பாலுற
புதுமாமயில் மீதணை யாவரு ...... மழகோனே
புழுகார்பனிர் மூசிய வாசனை
யுரகாலணி கோலமென் மாலைய
புரிநூலுமு லாவுது வாதச ...... புயவீரா
மருவூர்குளிர் வாவிகள் சோலைகள்
செழிசாலிகு லாவிய கார்வயல்
மகதாபத சீலமு மேபுனை ...... வள்முதூர்
மகதேவர்பு ராரிச தாசிவர்
சுதராகிய தேவசி காமணி
வழுவூரில்நி லாவிய வாழ்வருள் ...... பெருமாளே.
பாடல் 810 ( வழுவூர் )
ராகம் - ....; தாளம் -
தனனா தத்தன தாத்த தந்தன
தனனா தத்தன தாத்த தந்தன
தனனா தத்தன தாத்த தந்தன ...... தனதான
தலைநா ளிற்பத மேத்தி யன்புற
வுபதே சப்பொரு ளூட்டி மந்திர
தவஞா னக்கட லாட்டி யென்றனை ...... யருளாலுன்
சதுரா கத்தொடு கூட்டி யண்டர்க
ளறியா முத்தமி ழூட்டி முண்டக
தளிர்வே தத்துறை காட்டி மண்டலம் ...... வலமேவும்
கலைசோ திக்கதிர் காட்டி நன்சுட
ரொளிநா தப்பர மேற்றி முன்சுழி
கமழ்வா சற்படி நாட்ட முங்கொள ...... விதிதாவிக்
கமலா லைப்பதி சேர்த்து முன்பதி
வெளியா கப்புக ஏற்றி யன்பொடு
கதிர்தோ கைப்பரி மேற்கொ ளுஞ்செயல் ...... மறவேனே
சிலைவீ ழக்கடல் கூட்ட முங்கெட
அவுணோ ரைத்தலை வாட்டி யம்பர
சிரமா லைப்புக வேற்ற வுந்தொடு ...... கதிர்வேலா
சிவகா மிக்கொரு தூர்த்த ரெந்தையர்
வரிநா கத்தொடை யார்க்கு கந்தொரு
சிவஞா னப்பொரு ளூட்டு முண்டக ...... அழகோனே
மலைமே வித்தினை காக்கு மொண்கிளி
யமுதா கத்தன வாட்டி யிந்துள
மலர்மா லைக்குழ லாட்ட ணங்கிதன் ...... மணவாளா
வரிகோ ழிக்கொடி மீக்கொ ளும்படி
நடமா டிச்சுரர் போற்று தண்பொழில்
வழுவூர் நற்பதி வீற்றி ருந்தருள் ...... பெருமாளே.
பாடல் 811 ( கன்னபுரம் )
ராகம் - ....; தாளம் -
தன்னதனத் தன்னதனத் தன்னதனத்
தன்னதனத் தனாதாத்த ...... தந்ததான
அன்னமிசைச் செந்நளிநச் சென்மிகணக் கந்நியமத்
தன்னமயப் புலால்யாக்கை ...... துஞ்சிடாதென்
றந்நினைவுற் றன்னினைவுற் றன்னியரிற் றன்னெறிபுக்
கன்னியசற் றுலர்முச்ச ...... டங்கயோகம்
என்னுமருட் கின்னமுடைப் பன்னவைகற் றின்னவைவிட்
டின்னணமெய்த் தடாமார்க்க ...... மின்புறாதென்
றின்னதெனக் கென்னுமதப் புன்மைகெடுத் தின்னல்விடுத்
தின்னதெனப் படாவாழ்க்கை ...... தந்திடாதோ
கன்னல்மொழிப் பின்னளகத் தன்னநடைப் பன்னவுடைக்
கண்ணவிரச் சுறாவீட்டு ...... கெண்டையாளைக்
கன்னமிடப் பின்னிரவிற் றுன்னுபுரைக் கன்முழையிற்
கன்னிலையிற் புகாவேர்த்து ...... நின்றவாழ்வே
பொன்னசலப் பின்னசலச் சென்னியினற் கன்னபுரப்
பொன்னிநதிக் கராநீர்ப்பு ...... யங்கனாதா
பொன்மலையிற் பொன்னினகர்ப் புண்ணியர்பொற் பொன்மவுலிப்
பொன்னுலகத் திராசாக்கள் ...... தம்பிரானே.
பாடல் 812 ( திருவாஞ்சியம் )
ராகம் - காம்போதி
தாளம் - அங்கதாளம் (6)
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2
தனதாந்த தத்த தனதன
தனதாந்த தத்த தனதன
தனதாந்த தத்த தனதன ...... தனதான
இபமாந்தர் சக்ர பதிசெறி
படையாண்டு சக்ர வரிசைக
ளிடவாழ்ந்து திக்கு விசயம ...... ணரசாகி
இறுமாந்து வட்ட வணைமிசை
விரிசார்ந்து வெற்றி மலர்தொடை
யெழிலார்ந்த பட்டி வகைபரி ...... மளலேபந்
தபனாங்க ரத்ந வணிகல
னிவைசேர்ந்த விச்சு வடிவது
தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு ...... வியபோது
தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு
பிடிசாம்பல் பட்ட தறிகிலர்
னவாஞ்சை மிக்கு னடிதொழ ...... நினையாரே
உ பசாந்த சித்த குருகுல
பவபாண்ட வர்க்கு வரதன்மை
யுருவோன்ப்ர சித்த நெடியவன் ...... ரிஷிகேசன்
உ லகீன்ற பச்சை யுமையணன்
வடவேங்க டத்தி லுறைபவ
னுயர்சார்ங்க சக்ர கரதலன் ...... மருகோனே
த்ரிபுராந்த கற்கு வரசுத
ரதிகாந்தன் மைத்து னமுருக
திறல்பூண்ட சுப்ர மணியஷண் ......முகவேலா
திசைபாய்ந்த பத்ம தடவய
லியில்வேந்த முத்தி யருள்தரு
திருவாஞ்சி யத்தி லமரர்கள் ...... பெருமாளே.
பாடல் 813 ( திருச்செங்காட்டங்குடி )
ராகம் - ஸிந்துபைரவி
தாளம் - சதுஸ்ரத்ருவம் - கண்டநடை (35)
நடை - தகதகிட
எடுப்பு - /4/4/4 0
தந்தான தானதன தானதன தானதன
தந்தான தானதன தானதன தானதன
தந்தான தானதன தானதன தானதன ...... தனதான
வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள
வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ் ...... மலர்போல
மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற
வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய ...... லிடுமாதர்
சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்
சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெ ...... னுழலாமற்
சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது
தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் ...... புரிவாயே
சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென ...... விருதோதை
சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென
கங்காள வேணிகுரு வானவந மோநமனெ
திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு ...... முருகோனே
இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு
பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை
யின்பான தேனிரச மார்முலைவி டாதகர ...... மணிமார்பா
எண்டோ ளர் காதல்கொடு காதல்கறி யேபருகு
செங்காடு மேவிபிர காசமயில் மேலழகொ
டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர் ...... பெருமாளே.
பாடல் 814 ( திருவிற்குடி )
ராகம் - ....; தாளம் -
தத்த தத்ததன தத்த தத்ததன
தத்த தத்ததன தத்த தத்ததன
தத்த தத்ததன தத்த தத்ததன ...... தந்ததான
சித்தி ரத்திலுமி குத்த பொற்பவள
மொத்த மெத்தஅழ குற்ற குத்துமுலை
சிற்ப சிற்பமயி ரொத்த சிற்றிடைய ...... வஞ்சிமாதர்
சித்த மத்தனையு முற்ற ளப்பகடல்
மொய்த்த சிற்றுமண லுக்கு மெட்டியது
சிக்கு மைக்குழல்கள் கஸ்து ரிப்பரிம ...... ளங்கள்வீசப்
பத்தி ரத்திலுமி குத்த கட்கயல்கள்
வித்து ருத்துநுவ ளைத்த நெற்றிவனை
பற்க ளைப்பளிரெ னச்சி ரித்துமயல் ...... விஞ்சைபேசிப்
பச்சை ரத்நமயி லைப்பொ லத்தெருவி
லத்தி யொத்தமத மொத்து நிற்பர்வலை
பட்டு ழைத்துகுழி யுற்ற அத்தியென ...... மங்குவேனா
தத்த னத்தனத னத்த னத்தனன
தித்தி மித்திமிதி மித்தி மித்திமித
தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடென ...... சங்குபேரி
சத்த முற்றுகடல் திக்கு லக்கிரிகள்
நெக்கு விட்டுமுகி லுக்கு சர்ப்பமுடி
சக்கு முக்கிவிட கட்க துட்டசுர ...... ரங்கமாள
வெற்றி யுற்றகதிர் பத்தி ரத்தையரு
ளிச்சு ரர்க்கதிப திப்ப தத்தையரு
வித்த ளித்தமதி பெற்ற தத்தைமண ...... முண்டவேலா
வெட்கி டப்பிரம னைப்பி டித்துமுடி
யைக்கு லைத்துசிறை வைத்து முத்தர்புகழ்
விற்கு டிப்பதியி லிச்சை யுற்றுமகிழ் ...... தம்பிரானே.
பாடல் 815 ( விஜயபுரம் )
ராகம் - ஹம்ஸாநந்தி
தாளம் - சதுஸ்ர ரூபகம் (6)
தனதன தந்தன தானன தனதன தந்தன தானன
தனதன தந்தன தானன ...... தனதான
குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடை
குளுகுளெ னும்படி மூடிய ...... மலமாசு
குதிகொளு மொன்பது வாசலை யுடையகு ரம்பையை நீரெழு
குமிழியி னுங்கடி தாகியெ ...... யழிமாய
அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சாரமி
லவுடத மும்பல யோகமு ...... முயலாநின்
றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றினி யானுநி
னழகிய தண்டைவி டாமல ...... ரடைவேனோ
இடமற மண்டு நிசாசர ரடைய மடிந்தெழு பூதர
மிடிபட இன்பம கோததி ...... வறிதாக
இமையவ ருஞ்சிறை போயவர் பதியு ளிலங்க விடாதர
எழில்பட மொன்று மொராயிர ...... முகமான
விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்புர நீறெழ
வெயில்நகை தந்த புராரிம ...... தனகோபர்
விழியினில் வந்து பகீரதி மிசைவள ருஞ்சிறு வாவட
விஜயபு ரந்தனில் மேவிய ...... பெருமாளே.
பாடல் 816 ( திருவர்ருர் )
ராகம் - ....; தாளம் -
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
கூசா தேபா ரேசா தேமால்
கூறா நூல்கற் ...... றுளம்வேறு
கோடா தேவேல் பாடா தேமால்
கூர்கூ தாளத் ...... தொடைதோளில்
வீசா தேபேர் பேசா தேசீர்
வேதா தீதக் ...... கழல்மீதே
வீழா தேபோய் நாயேன் வாணாள்
வீணே போகத் ...... தகுமோதான்
நேசா வானோ ணசா வாமா
நீபா கானப் ...... புனமானை
நேர்வா யார்வாய் சூர்வாய் சார்வாய்
நீள்கார் சூழ்கற் ...... பகசாலத்
தேசா தீனா தீனா ணசா
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
பாடல் 817 ( திருவாருர் )
ராகம் - ...; தாளம் -
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
கூர்வாய் நாராய் வாராய் போனார்
கூடா ரேசற் ...... றலஆவி
கோதா னேன்மா தாமா றானாள்
கோளே கேள்மற் ...... றிளவாடை
ஈர்வாள் போலே மேலே வீசா
ஏறா வேறிட் ...... டதுதீயின்
ஈயா வாழ்வோர் பேரே பாடா
ஈடே றாற் ...... கெடலாமோ
சூர்வா ழாதே மாறா தேவாழ்
சூழ்வா னோர்கட் ...... கருள்கூருந்
தோலா வேலா வீறா ரூர்வாழ்
சோதீ பாகத் ...... துமையூடே
சேர்வாய் நீதீ வானோர் வீரா
சேரா ரூரைச் ...... சுடுவார்தஞ்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
பாடல் 818 ( திருவர்ருர் )
ராகம் - நீலாம்பரி
தாளம் - ஆதி 2 களை
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
பாலோ தேனோ பாகோ வானோர்
பாரா வாரத் ...... தமுதேயோ
பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ
பானோ வான்முத் ...... தெனநீளத்
தாலோ தாலே லோபா டாதே
தாயமார் நேசத் ...... துனுசாரந்
தாரா தேபே ணயா தேபே
சாதே யேசத் ...... தகுமோதான்