"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil Language & Literature > Project Madurai >Index of Etexts released by Project Madurai - Unicode & PDF > வட மலை நிகண்டு - தொகுப்பு : ஈஸ்வர பாரதி
Etext Preparation & Proof Reading : Mr. & Mrs.V. Devarajan, Durham, NC, USA
PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.The original work was compiled by Iswara Bharati, son of Chidambara Bharati in the Kollam year 876, corresponding to 1700.A.D. It was called "iraiyUr vadamalai nikaNtu". Although it contained three chapters as mentioned in the dedication stanzas, only the second chapter is available in manuscript and is secured in Dr. U.V.Swaminatha Iyer Library.
It was due to the devoted efforts of late Dr. U.V.Swaminatha Iyer, who is revered as தமிழ்த் தாத்தா, that this manuscript was collected and preserved. The source of this text is the edition published by Dr. U.V.Swaminatha Iyer Library, edited by Tiru. R.Nagaswamy in 1983. This pmadurai file contains only the original verses (moolam) and not the meaning and notes included in the printed book.
பாயிரம் காப்புப் பாயிரம்
கொல்லமெண்ணூற் றெழுபத்தா றெனக்கணிதப்
பாவாணர் குறித்த வாண்டின்
மல்கியசீர் விக்கிரம வருடத்தா
வணிமூல வளஞ்சேர் நாளி
னெல்லைநகர் வடிவுகந்த வேய்முத்தைப்
பணிந்துலகி னெடுநா ணிற்கப்
பல்கலைதேர் வடமலைநன் னிகண்டினையீ
சுர கவிஞன் பகர்ந்திட்டானே.
பார்புகழ் திருநெல் வேலியம் பதிவா
ழைங்கரத் தொருகோட் டானையை வடிவேற்
சிங்கந் தன்னைச் சிறப்புட னீன்ற
பிடிவடி வுடைய பெண்கொடி பாகத்
தடிகள் செம்பொன் னடிகளை வணங்கி
ஒருபெய ரொருபொருள் உரைக்குங் காண்டமும்
ஒருபொருள் பலபெயர் ஓதுங் காண்டமும்
பலபெயர்க் கூட்டத் தொருபெயர்க் காண்டமும்
சொற்பொருட் காண்டத் தொகைமூன் றாக்கி
ஈட்டுபுகழ் இரையூர் வடமலை நிகண்டென
நாட்டினன் மடசை நன்னகர் வாழும்
சிதம்பர பாரதி சேய்தின முமையாள்
பதம்பணி யீசுர பாரதி தானே.
காப்புப் பாயிரம் முற்றும்.
கண்ணனுங் கண்ணனைக் காத்த நெல்வேலிக்
கண்ணனுஞ் செந்தமிழ்க் காப்பா குவரே.
திக்கன் புறுபெயர் நூல்செய்யவடி வாளுகந்த
நக்கன் புகழ்நெல்லை நாயக-முக்கண்ணிறை
சாரதிதா னெவவ்வுலகந் தந்தோன்செந் நாவினிற்சேர்
பாரதிதாள் வாழ்த்திநினைப் பாம்.உயிர் வருக்கத் தொகுதியில்
அகர வருக்கம் அருளெரும் பெயர்சிவ சத்தியி னுடனே
கருணையின் பெயருங் கருதப்பெறுமே. ....1
அனந்த னென்னும் பெயர்சிவனு மாதவனும்
சினந்தவிர் அருகனு நாலிரு தெய்வமும்
சேடனும் எனவே செப்புவர் புலவர். ....2
அரம்பை யெனும்பெயர் தெய்வப்பெண் பெயரும்
வாழையின் பெயரும் வழங்கப் பெறுமே. ....3
அரியெனும் பெயர்நித் திரையுமிரு சுடரும்
பரியுஞ் சிங்கமும் பகையுந் தேரையும்
பொன்னும் காற்றும் புரந்தரனு மாலும்
செந்நெற் கதிரும் கிளியும் காந்தியும்
தேரும் ஐம்மையுஞ் சேகும் வரியும்
கூர்மையு நிறமும் கூற்றும் வண்டும்
வேயும் பன்றியும் விசியும் புகையும்
பாயலுஞ் சிலம்பின் பரலும் சோலையும்
கண்ணில் வரியும் கடலும் உரகமும்
எண்ணிய திகிரியும் இகலியர் வாளும்
தகரும் வலியும் அரிசியும் குரங்கும்
புகரு நெருப்பும் புரையுஞ் சயனமும்
எறிதரு முரசமும் எண்படைக் கலமும்
குறிதரு பச்சையும் கூறிய மதுவும்
அரிதலும் நாற்பா னெழு பெயராமே. ....4
அண்ட ரெனும்பெயர் விண்டலத் தமரரும்
இடையரும் பகைஞரும் இயம்புவர் புலவர். ....5
அலரி யெனும்பெய ரலர்க்கணை ஐந்தும்
இரவியு மலருமோர் மரமு நீராவியுந்
தேனீயும் அழகும் செப்பப் பெறுமே. ....6
அருண னெனும்பெய ரருக்கனும் அவன்தேர்ப்
பாகனும் புதனும் பகர்ந்தனர் புலவர். ....7
அளக்க ரெனும்பெயர் சேறும் உப்பளமும்
கடலும் புடவியுங் கார்த்திகை நாளுமாம். ....8
அந்த மெனும்பெய ரருநெறி யுடனே
ஒருநாள் மீனும் உறுகவிப் பொருளும்
காடும் கனகமும் கையும் பாதியும்
கண்ணா டியுமெனக் கருதுவர் புலவர். ....9
அணங்கனெனும் பெயரே ஆசையும் அழகும்
வருத்தமும் கொலையும் மையனோயும்
தெய்வமுந் தெய்வத்து வமைசொல் மாதுமாம். ....10
அங்கத மெனுபெய ரரவுந் தோளணியும்
வசைபுகல் கவிதையும் வழங்கப் பெறுமே. ....11
அரவ மெனுபெய ரோசையும் பாம்பு
சிலம்பும் எனவே செப்புவர் புலவர். ....12
அண்ட மெனும்பெயர் முட்டையும் விசும்புமாம். ....13
அம்பர மெனும்பெய ராடையும் விசும்பும்
கடலு மெனவே கருதப்பெறுமே. ....14
அஞ்சன மெனும்பெயர் கருமை நிறமும்
ஒருதிசை யானையு மெழுதுகண் மையுமாம். ....15
அங்கி யெனும்பெய ரனலும் சட்டையும். ....16
அயமெனும் பெயரே அறலும் குதிரையும்
குளமும் இரும்பும் தகருங் கூறுவர். ....17
அளக மெனுபெயர் புனலு மயிரும்
மயிர்க்குழற் சியுமென வகுத்தனர் புலார். ....18
அளறெனும் பெயரே நரகமும் சேறுமாம். ....19
அந்தரி யெனும்பெயர் துர்க்கையும் உமையுமாம். ....20
அல்கல் எனும் பெயர் தங்கலு நாளும்
கருங்கலும் இரவும் சிறுமையும் சொல்லுவர். ....21
அந்தி யெனும்பெயர் பாலையாழ்த் திறத்தோர்
ஓசைப் பெயரு மாலையும் இரவுமாம். ....22
அடுப்பெனும் பெயரே யியம னாளும்
அச்சப் பெயருமுத் தானமு மாமே. ....23
அறுவை யெனும்பெயர் சித்திரை நாளும்
தூசும் எனவே சொல்லப் பெறுமே. ....24
அன்றில் எனும்பெயர் மூல நாளுமோர்
புள்ளும் எனவே புகன்றனர் புலவர். ....25
அகியெனும் பெயரே அரவும் இரும்புமாம். ....26
அணுவெனும் பெயரே நுண்மையும் உயிரும்
மந்திரப் பெயரும் வழங்கப் பெறுமே. ....27
அகலுள் எனும் பெயர் ஊரு நாடும்
பரப்பும் எனவே பகரப் பெறுமே. ....28
அவந்தி யெனும் பெயர் கிளியின் பெயரும்
உஞ்சேனை நகரமும் உரைத்தனர் புலவர். ....29
அருப்பம் எனும்பெயர் ஊர்ப்பொதுப் பெயரும்
சோலையின் பெயரும் நோயும் காடுமாம். ....30
அடையெனும் பெயரே இலையின் பெயரும்
அடுத்தலும் கனமும் அப்பமும் வழியுமாம். ....31
அருவி யெனும்பெயர் மலைச்சார் நதியுந்
தினைத்தாள் பெயரும் செப்பப் பெறுமே. ....32
அயிரி யெனும்பெயர் நுண்மணற் பெயரு
மீன்முள் ளரித்திடு கருவியும் விளம்புவர். ....33
அணையெனும் பெயரே மெத்தையும் சயனமும்
செய்கரைப் பெயரும் செப்பப் பெருமே. ....34
அகமெனும் பெயர்மரப் பொதுவும் சயிலமும்
இல்லமு மனமும் இடமும் பாவமும்
ஐந்திணைப் பொருளு டனுள்ளு மாமே. ....35
அங்கணம் எனும்பெயர் தூம்பு வாயிலு
முன்றிலுஞ் சேறும் மொழிந்தனர் புலவர். ....36
அரச னெனும்பெயர் வியாழமு மன்னனும். ....37
அன்னை யெனும்பெயர் முன்பிறந் தாளுந்
தாயும் துணைவியும் சாற்றப் பெறுமே. ....38
அம்மை யெனும்பெயர் தாயு மறுபிறப்பும்
யாப்பினோர் வனப்பும் இயம்பப் பெறுமே. ....39
அணியெனும் பெயரே அழகும் பெருமையும்
படையின துறுப்பும் இலக்கண அணியும்
பூணும் ஒப்பனையும் புகன்றனர் புலவர். ....40
அரத்தம் எனும்பெயர் அரத்தமும் சிவப்பும்
அரக்கும் கடம்பு மரத்தவுற் பலமுமாம். ....41
அடியெனும் பெயரே முதன்மையும் காலுங்
கவிதையின் பாதமும் செண்டும் வெளியுமாம். ....42
அரலையெனும் பெயர் அருங்கனி விதையும்
மாலும் கழலையின் பெயரும் வழங்குவர். ....43
அன்னமெனும் பெயர் சோறும் ஓதிமமுமாம். ....44
அக்கார மென்னும் பெயர்சருக் கரையும்
புடவையும் எனவே புகன்றனர் புலவர். ....45
அழனம் எனும்பெயர் அனலும் பிணமுமாம். ....46
அணியெ னும்பெய ரன்பும் நறவமும்
கொடையும் வண்டின் பெயரும் கூறுவர். ....47
அரிட்டம் எனும்பெயர் பிறவியிற் குற்றமும்
கள்ளும் காக்கையும் கருதப் பெறுமே. ....48
அத்தெனும் பெயரே அசைச்சொல்லும் சிவப்பும்
இசைப்புந் துன்னமும் அரைப்பட் டிகையுமாம். ....49
அக்கெனும் பெயரே சங்கின் மணியும்
ஏற்றின் முரிப்பும் எலும்பும் இயம்புவர். ....50
அராகம் எனும்பெயர் பாழையாழ்த் திறமும்
செந்நிறப் பெயரு முடுகியற் கவிதையும்
ஆசையின் பெயரு மாமென வழங்குவர். ....51
அனந்தம் எனும்பெயர் பொன்னும் ஆகாயமும்
அளவின் மைப்பொருட் பெயரு மாமே. ....52
அலங்கல் எனும்பெயர் அசைவும் தொடையலும்
இலங்கலும் தளிரும் இயம்புவர் புலவர். ....53
அரத்தை யெனும்பெயர் குறிஞ்சி யாழிசையும்
துன்பமும் என்னச் சொல்லுவர் புலவர். ....54
அடலெனும் பெயரே சமரும் பெலமும்
வென்றியும் எனவே விளம்பப் பெறுமே. ....55
அயிலெனும் பெயரே வேலுங் கூர்மையும்
ஆர்தலின் பெயரு மாகு மென்ப. ....56
அரணம் எனும்பெயர் காவற் காடும்
வேலுங் காவலும் மதிலும் கவசமும். ....57
அம்பண மென்னும் பெயர்மரக் கலமும்
கதலித் தண்டும் நீர்ப்பந்தலுந் தூம்பும்
ஆமையின் பெயரு மாமெனப் புகலுவர். ....58
அளித்தல் எனும்பெயர் கொடுத்தலும் காத்தலும்
செறிவும் எனவே செப்புவர் புலவர். ....59
அச்சம் எனும்பெயர் அகத்தியும் பயமுமாம். ....60
அருணம் எனும் பெயர் செம்மறி யாடும்
மானும் எலுமிச்சுஞ் சிவப்பும் வழங்குக. ....61
அந்தம் எனும்பெயர் அழகு முடிவுமாம். ....62
அம்பல் எனும்பெயர் பழிமொழி யுடனே
சிலரறிந்து தம்முட் புறங்கூறல் செப்புவர். ....63
அலரெனும் பெயர்பழி மொழியும் பூவும்
பலரரிந் தலர்தூற் றுதலும் பகருவர். ....64
அரற்றல் எனும்பெயர் அழுகையும் ஒலித்தலும். ....65
அஞ்சலி எனும்பெயர் அஞ்சலித் திறைஞ்சலும்
வாவற் பறவையும் வகுத்தனர் புலவர். ....66
அலகெனும் பெயரே நுளம்பும் சோதிடமும்
நெற்கதி ராதியும் பலகறைப் பெயரும்
மகிழின் பரலும் புல்வாயுந் துடைப்பமும். ....67
அல்லி யெனும் பெயர் காசை மரமும்
வெள்ளாம் பலுமக விதழும் விளம்புவர். ....68
அதமெனும் பெயர்பா தாளமும் கீழும்
இறங்குதற் பெயரும் இயம்புவர் புலவர். ....69
அரமெனும் பெயரே பலபொருள் வடிவின்
அருகும் அராவும் கருவியு மாமே. ....70
அகைத்தல் எனும்பெயர் அறுத்தலும் ஒலித்தலும்
ஈர்த்தலும் எனவே இயம்பப் பெறுமே. ....71
அசியெனும் பெயரே அவமதிச் சிரிப்பும்
வசிதரு வாளும் படைக்கலப் பொதுவுமாம். ....72
அமரர் எனும்பெயர் அடுபடை வீரரும்
தேவரும் எனவே செப்புவர் புலவர். ....73
அந்தணர் எனும்பெயர் அறவோர் பெயரும்
பூசுரர் பெயரும் புகலுவர் புலவர். ....74
அள்ளெனும் பெயரே காதும் கூர்மையும்
வரிபத் திரும்பும் வன்மையும் செறிவுமாம். ....75
அலம்எனும் பெயரே அமைவும் கலப்பையும். ....76
அயிரெனும் பெயரே சருக்கரைப் பெயரும்
நுண்மணற் பெயரும் நுண்மையும் நுவலுவர். ....77
அண்டசம் எனும்பெயர் அரவும் தவளையும்
நண்டு முதலையு மாமையு மீனும்
உடும்பும் ஓந்தியும் பல்லியும் அரணையும்
பறவையும் இப்பியும் பகர்ந்தனர் புலவர். ....78
அற்றம் எனும்பெயர் மறைவும் அவகாசமு
முடிவும் எனவே மொழியப் பெறுமே. ....79
அருச்சுனம் எனும்பெயர் மருதுவும் வெளுப்புமாம் ....80
அத்தி யெனும்பெய ரதவு மியானையும்
உவரியும் எலும்பும் உரைக்கப் பெறுமே. ....81
அந்தில் எனும்பெயர் அசைச்சொல்லு மிடமுமாம். ....82
அம்மெனும் பெயரே அசைச்சொல்லு மழகும்
புனலின் பெயரும் புகலப் பெறுமே. ....83
அம்பெனும் பெயரே மேகமும் புனலும்
கணையு மூங்கிலுங் கருதப் பெறுமே. ....84
அகளம் எனும்பெயர் தாழியும் மிடாவுமாம். ....85
அங்காரக மெனும்பெயர் பூசு வனவும்
நெருப்பும் எனவே நிகழ்த்துவர் புலவர். ....86
அஞரெனும் பெயரே அறிவிலோர் பெயரும்
துக்கமும் எனவே சொல்லுவர் புலவர். ....87
அந்தகர் எனும் பெயர் குருடருங் கூற்றுமாம். ....88
அரக்கெனும் பெயரே மதுவிலோர் விகற்பமும்
சிவப்புஞ் சென்னிற மெழுகும் செப்புவர். ....89
அகவல் எனும்பெயர் கூத்துமாசி ரியப்பாவும். ....90
அரங்கம் எனும்பெயர் ஆற்றிடைக் குறையும்
போரிடம் வட்டா டிடமும் சபையும்
கூத்தா டுமிடப் பெயருங் கூறுவர். ....91
அன்னல் எனும்பெயர் நாகமும் சேறுமாம். ....92
அழுங்கல் எனும்பெயர் ஆர வாரமும்
இரங்கலும் கேடும் இசைக்கப் பெறுமே. ....93
அறலெனும் பெயரே நீரு நீர்த்திரையும்
விழவும் நுண்மணலும் விளம்புவர் புலவர். ....94
அளையெனும் பெயரே தயிரும் வன்மீகவும்
உம்மையும் பாளியும் மோர்இன்மைப் பெயருமாம். ....95
அங்கம் எனும்பெயர் உடலும் உறுப்பும்
ஆறங்கமும் கட்டிலும் எலும்பு மாமே. ....96
அழுவ மெனும்பெயர் துருக்கமும் பரப்பும்
நாடும் எனவே நவின்றனர் புலவர். ....97
அறுகெனும் பெயரே யாளியும் சிங்கமும்
புலியும் யானையும் புல்லினோர் விகற்புமாம். ....98
அத்திரி யெனும்பெயர் மலையும் குதிரையும்
கழுதையும் ஒட்டகப் பெயரும் கருதுவர். ....99
அறையெனும் பெயர்மலை முழையும் பாறையும்
சிற்றிலும் மொழியும் செப்பப் பெறுமே. ....100
அரிலெனும் பெயர்சிறு தூறும் பிணக்கமும்
குற்றமும் பரலும் கூறுவர் புலவர். ....101
அவலெனும் பெயர்நீர் நிலையும் பள்ளமும்
முளையு நெற்பெறு சிற்றுண்டியு மொழிகுவர். ....102
அண்ணை யெனும்பெயர் அறிவிலோன் பெயரும்
பேயின் பெயரும் பேசப் பெறுமே. ....103
அகப்பா வெனும்பெயர் மதிளுமுள் ளுயரத்துப்
பொருந்திய மேடையின் பெயரும் புலம்புவர். ....104
அசமெ னும்பெயர் புருவை யாடும்
மூவாட்டை நெல்லின் பெயரு மொழிகுவர். ....105
அசனி யெனும்பெயர் வச்சிரா யுதமும்
இடியின் பெயரும் இயம்பப் பெறுமே. ....106
அல்லெனும் பெயரே இரவும் இருளுமாம். ....107
அரிதம் எனும்பெயர் பசுமையும் திசையும்
பசும்புற் றரையும் பகரப் பெறுமே. ....108
அகடெனும் பெயரே வயிறும் புறமுமாம். ....109
அமரல் எனும்பெயர் மிடைதலும் பொலிவுமாம். ....110
அருகல் எனும்பெயர் கருங்கலுஞ் சார்தலும். ....111
அடுதல் எனும்பெயர் அடர்தலும் கொலையும்
பலபொருள் பாகப் படுத்தலின் பெயருமாம். ....112
அவிர்தல் எனும்பெயர் பீறலும் ஒளியுமாம். ....113
அம்பி யெனும்பெயர் தெப்பமும் தோணியும்
நீர்மே லோடு வனவு நிகழ்த்துவர். ....114
அந்தர மெனும்பெயர் பேத முடிவும்
விண்ணி னிடமும் விளம்பப் பெறுமே. ....115
அங்கா ரகனெனும் பெயருதா சனனும்
செவ்வாய்ப் பெயரும் செப்பப் பெறுமே. ....116
அடரெனும் பெயரே ஐமை வடிவும்
நெருங்குதற் பெயரு நிகழ்த்தப் பெறுமே. ....117
அரங்கெனும் பெயரே மனையின் விகற்பமும்
சபையும் வட்டா டிடமும்ஓ ரிடமுமாம். ....118
அயன மெனும்பெயர் ஆண்டிற் பாதியும்
வழியும் எனவே வகுத்தனர் புலவர். ....119
அமலை யெனும்பெயர் உமையவள் பெயரும்
ஆர வார மும்சபைப் பெயருமாம். ....120
அலவன் எனும்பெயர் நண்டும் பூஞையும்
நிலவுங் கடக ராசியும் நிகழ்த்துவர். ....121
அரசெனும் பெயரோர் தருவு மன்னனும்
ராச்சியப் பெயரும் இயம்பப் பெறுமே. ....122
அறிக்கை எனும்பெயர் அறிதலின் பெயரும்
பற்று வித்தலின் பெயரும் பகருவர். ....123
அதரெனும் பெயரே புழுதியும் வழியும்
நுண்மணற் பெயரு நுவலப் பெறுமே. ....124
அருந்த வெனும்பெயர் அருமையும் பொசித்தலும். ....125
அத்தன் எனும்பெயர் ஈசனும் குருவும்
தந்தையும் எனவே சாற்றினர் புலவர். ....126
அனித்தியம் எனும்பெயர் நிலையாமை பொய்யுமாம். ....127
அண்ணல் எனும்பெயர் தலைவனும் பெருமையும். ....128
அச்சுதன் எனும்பெயர் அமுதிறை பெயருங்
கண்ணனும் அசோகமர் கடவுள் பெயருமாம். ....129
அனுவெனும் பெயரே தொடர்ச்சியும் கவுளுமாம். ....130
அமுதம் எனும்பெயர் முத்தியும் பெருமையும்
புனலும் பயசும் புலவ ருணவுடன்
மேகமும் எனவே விளம்புவர் புலவர். ....131
அம்பரம் எனும்பெயர் அம்புடன் ஆனையிற்
பிறகா லுமெனப் பேசுவர் புலவர். ....132
அலையெனும் பெயரே கடலும் கடற்றிரைப்
பெயரும் எனவே பேசப் பெறுமே. ....133
அராவல் எனும்பெயர் புரைதலும் குறுகலும். ....134
அரணி யெனும்பெயர் தீக்கடை கோலும்
கவசமு மதிலும் கருதப் பெறுமே. ....135
அற்பம் எனும்பெயர் சிறுமையும் நாயுமாம். ....136
அழுக்கா றெனும்பெயர் பொறாமையின் பெயரும்
மனக்கோட் டத்தின் பெயரும் வழங்குவர். ....137
அனங்கம் எனும்பெயர் மல்லிகைப் பெயரும்
இருவாட் சியுமென இயம்புவர் புலவர். ....138
அசையெனும் பெயரீ ரசைகளும் அசைச்சொல்லும். ....139
அமுதெனும் பெயரே பாலும் இன்கதையும்
தெய்வ வுணவின் விகற்பமும் செப்புவர். ....140
அசோக மெனும்பெய ரசோகின் தருவும்
இன்பமும் எனவே இயம்பப் பெறுமே. ....141
அசைத்தல் எனும் பெயர் அசைத்தலின் பெயரும்
கட்டுதற் பெயரும் கருதுவர் புலவர். ....142
-----
அகர வருக்கம் முற்றும்.
ஆகார வருக்கம் ஆதி யெனும்பெய ரான்றிரு நாமமு
மாதவனும் ஒற்றியில் வைத்த பொருளும்
அருகனு முதலு நேரோடலு மாமே. ....143
ஆரல் எனும்பெயர் அங்கா ரகனும்
கார்த்திகை நாளும் கடிமதில் உறுப்பும்
ஒருமீன் பெயரும் உரைத்தனர் புலவர். ....144
ஆவணம் எனும்பெயர் தெருவும் அங்காடியும்
அடிமை யோலையும் புனர்பூ சமுமாம். ....145
ஆடி யெனும்பெயர் மாதத்தி லொன்றும்
நாடி லுத்திராடமும் கண்ணா டியுமாம். ....146
ஆசை யெனும்பெயர் திசையும் காதலும்
பொன்னும் எனவே புகன்றனர் புலவர். ....147
ஆழி யெனும்பெயர் நேமிப் புள்ளும்
கடலும் வட்ட வடிவுந் தேர்க்காலும்
சக்கிரா யுதமு மோதிரமுங் கரையுமாம். ....148
ஆலம் எனும்பெயர் அறலும் விடமும்
ஆல மரமும் மலர்ந்திடு பூவுமாம். ....149
ஆசார மென்னும் பெயர்நல் லொழுக்கமும்
தூசின் பெயரும் மழைப்பெயருஞ் சொல்லுவர். ....150
ஆர்வம் எனும்பெயர் விருப்பொடு நரகுமாம். ....151
ஆறெனும் பெயரே வழியும் நதியுமோர்
எண்ணும் எனவே இயம்புவர் புலவர். ....152
ஆலையம் எனும்பெயர் தேவர் கோயிலும்
நகரமும் யானைக் கூடமும் நவிலுவர். ....153
ஆரை எனும்பெயர் கொத்தளிப்பாய் புரிசையாம்
நீர்செறி யாரையின் பெயரு நிகழ்த்துவர். ....154
ஆடவர் எனும்பெயர் ஆண்பாற் பொதுவும்
இளைஞர் பெயரும் இயம்பப் பெறுமே. ....155
ஆர்வல ரெனும்பெயர் அன்புடை யோனும்
கணவனும் எனவே கருதுவர் புலவர். ....156
ஆக மெனும்பெயர் தேகமு மார்புமாம். ....157
ஆகார மெனும்பெயர் அசனமு நெய்யுந்
தேகமும் எனவே செப்பப் பெறுமே. ....158
ஆம்பல் எனும்பெயர் ஆனையுங் குமுதமும்
இசையின் குழலும் கள்ளு மூங்கிலும்
ஒலியின் பெயரும் உரைத்தனர் புலவர். ....159
ஆரம் எனும்பெயர் அத்தி மரமும்
அணிகலப் பொதுவுந் தரளமு மாலையும்
சந்தன முமணி வடமும் பதக்கமும். ....160
ஆடல் எனும்பெயர் வென்றியு நடனமும்
உரையா டலுமென வுரைத்தனர் புலவர். ....161
ஆர்ப்பெனும் பெயரே ஆரவா ரித்தலும்
அமருஞ் சிரிப்பும் ஆகும் என்ப. ....162
ஆரெனும் பெயரே யாத்தியும் கூர்மையும்
தேராழி யுறுப்பு நிறைவும் செப்புவர். ....163
ஆசெனும் பெயரே அற்பமும் குற்றமும்
மெய்புகு கருவியும் விரைவுமோர் கவியுமாம். ....164
ஆற்ற லெனும்பெயர் ஆண்மையு மிகுதியும்
பொறுமையும் சுமத்தலும் பெலமும் பொய்யாமையும்
ஞானமும் உண்டாக் குதலும் நவிலுவர். ....165
ஆடெனும் பெயரே யாட்டின் விகற்பமும்
மேடவி ராசியும் வென்றியும் விளம்புவர். ....166
ஆகுலம் எனும்பெயர் சத்த வொலியுடன்
வருத்தமும் எனவே வழங்கப் பெறுமே. ....167
ஆர்த லெனும்பெயர் உண்டலும் நிறைதலும்
அணிதலின் பெயரு மாகு மென்ப. ....168
ஆணையெனும் பெயரி லாஞ்சனையு முண்மையும்
சத்திய வசனமும் ஏவலும் சாற்றுவர். ....169
ஆசினி யெனும்பெயர் மாவயி ரத்தொடு
பலாவினோர் விகற்பமும் விசும்பும் பகருவர். ....170
ஆக்கம் எனும்பெயர் அன்புசெய மிலாபம்
பாக்கிய வியல்பும் பயில்பூந் திருவுமாம். ....171
ஆரி எனும்பெயர் அழகும் கதவுமாம். ....172
ஆணம் எனும்பெயர் அன்பும் குழம்புமாம். ....173
ஆகு வெனும்பெயர் எலியின் விகற்பமும்
மூடிகப் பெயரும் மொழியப் பெறுமே. ....174
ஆதித் தியரெனும் பெயர்விண் ணவரும்
சூரியர் பெயரும் சொல்லுவர் புலவர். ....175
ஆவரணம் எனும்பெயர் அரணமு மறைவும்
சட்டையுங் கவசமும் தடையும் துகிலுமாம். ....176
ஆதன் எனும்பெயர் அறிவிலோன் பெயரும்
சீவனும் எனவே செப்பப் பெறுமே. ....177
ஆங்கெனும் பெயரே யவ்விடப் பெயரும்
அசைச்சொற் பெயரும் உவமையு மாமே. ....178
ஆயம் எனும்பெய ரரிவையர் கூட்டமும்
ஆதா யத்தொடு கவற்றின் றாயமுமாம். ....179
ஆயல் எனும்பெயர் ஆய்தலும் வருத்தமும். ....180
ஆய்தல் எனும்பெயர் தேர்தலு நுணுக்கமும். ....181
ஆலல் எனும்பெயர் நடனமும் ஒலியுமாம். ....182
ஆலெனும் பெயரே யசைச்சொலும் புனலும்
பழமரப் பெயரும் பகருவர் புலவர். ....183
ஆனி எனும்பெயர் கெடுதலின் பெயரும்
மாதத்தி லொன்று மூலநாட் பெயருமாம். ....184
ஆனகம் எனும்பெயர் துந்துமிப் பெயரும்
படகமும் எனவே பகர்ந்தனர் புலவர். ....185
ஆனியம் எனும்பெயர் நாளும் பொழுதுமாம். ....186
ஆசுகம் எனும்பெயர் அம்பும் காற்றுமாம். ....187
ஆவி எனும்பெயர் வாவியும் உயிரும்
புகையு நாற்றமு மூச்சும் புகலுவர். ....188
ஆவெனும் பெயரே இரக்கக் குறிப்பும்
உயிரும் பசுவும் உரைக்கப் பெறுமே. ....189
ஆடகம் எனும்பெயர் துவரையும் பொன்னுமாம். ....190
ஆம்பிரம் எனும்பெயர் தேமாப் பெயரும்
புளிமாப் பெயரும் புளிப்பும் புகலுவர். ....191
ஆரியர் எனும்பெயர் அறிவுடை யோரும்
ஆரிய தேசத் தவரு மாமே. ....192
ஆணி யெனப்பெயர் எழுத்தாணியும் அழகும்
ஆணி மானவிகற்பமும் சயனமு மாமே. ....193
------
ஆகார வருக்கம் முற்றும்.
இகர வருக்கம் இரவி எனும்பெயர் எழுஞ்சூ ரியனுடன்
மலையும் வாணிகத் தொழிலும் வழங்குவர். ....194
இருளெனும் பெயரே கருமையு மயக்கமும்
நரகமுந் திமிரமு நவின்றனர் புலவர். ....195
இரலை யெனும்பெயர் மானி னேறும்
அசுபதியு மூதுங் கொம்பு மாமே. ....196
இறையெனும் பெயரே சிவனும் இல்லிறப்பும்
தலைமையுந் தலைவன் பெயருந் தங்கலும்
புள்ளிற குங்கை வரையும் சிறுமையும்
குடியிறைப் பெயரும் சொல்லும் கூறுவர். ....197
இடியெனும் பெயரே நென்மா முதலும்
உறுதி வார்த்தையும் அசனியும் ஓதுவர். ....198
இறாலெனும் பெயர்கார்த் திகையும் இடபமும்
தேன்கூ டுமொரு மீனுஞ் செப்புவர். ....199
இறும்பெனும் பெயரே தாமரைப் பூவும்
மலையும் காடும் வழங்கப் பெறுமே. ....200
இலஞ்சி யெனும்பெயர் மகிழமரப் பெயரும்
கொப்புளுந் தடாகமும் கூறுவர் புலவர். ....201
இடையெனும் பெயரெ இடமும் நுகப்பும்
நடுவும் எனவே நவிலப் பெறுமே. ....202
இகுளை யெனும்பெயர் சுற்றமும் பாங்கியும். ....203
இரதம் எனுபெயர் தேரும் இன்சுவையும்
அரைநாண் புணர்ச்சி பாத ரதமுமாம். ....204
இலம்பக மெனும்பெய ரத்தி யாயமும்
நுதலணிப் பெயருந் தொடையலு நுவலும். ....205
இந்தனம் எனும்பெயர் இசையும் காட்டமும்
நெருப்பிடு கலனு நிகழ்த்துவர் புலவர். ....206
இளியெனும் பெயரோ ரிசையும் யாழ்நரம்பும்
இகழ்ச்சியில் வருக்கப் பெயரும் இயம்புவர். ....207
இலையம் எனும்பெயர் கூத்தின் விகற்பமும்
கூத்தின் பெயருங் கேடுங் கூறுவர். ....208
இறைவை யெனும்பெயர் ஏணிநீர்ப் புட்டிலாம். ....209
இழுக்கம் எனும்பெயர் பிழைத்தல் பொல்லாங்குமாம். ....210
இறப்பெனும் பெயரே யிறத்தலும் மிகுதியும்
நடத்தலு மில்லி றப்பும் நவிலுவர். ....211
இலாங்கலி யெனும்பெயர் தென்ன மரமும்
கலப்பைப் பெயரும் வெண்காந்தளும் கருதுவர். ....212
இகுத்தல் எனும்பெயர் கொடுத்தலும் வீழ்த்தலும்
செகுத்தலு மவிர்தலும் இளைத்தலும் செப்புவர். ....213
இல்லெனும் பெயரே யில்லை யென்றலும்
இராசியு மனைவியு மனையும் இடமுமாம். ....214
இராசி யெனும்பெய ரோசையுங் கூட்டமும். ....215
இராசிய மெனும்பெயர் யோனியும் மறைவுமாம். ....216
இபமெனும் பெயரே மரத்தின் கொம்பும்
யானையின் பெயரும் இயம்புவர் புலவர். ....217
இகலெனும் பெயரே பெலமும் சமரமும்
பகையும் எனவே பகரப் பெறுமே. ....218
இடமெனும் பெயரிடப் புறமும் விசாலமும்
இடங்களின் விகற்பமும் செல்வமும் இயம்புவர். ....219
இடக்க ரெனும்பெயர் குடத்தின் பெயரும்
மறைத்திடு வார்த்தையும் வழங்கப் பெறுமே. ....220
இதழெனும் பெயர்பூ வினிதழு மதரமும்
பனைமடல் போலவும் பகரப் பெறுமே. ....221
இயமெனும் பெயரே யுரையும் ஓசையும்
வாத்தியப் பெயரும் வழங்கப் பெறுமே. ....222
இருபிறப் பெனும்பெய ரெயிறும் பறவையும்
பார்ப்பெனும் சாதியும் நிலவும் பகருவர். ....223
இருசெனும் பெயரே பண்டியுள் இரும்பும்
செவ்வையும் எனவே செப்புவர் புலவர். ....224
இவர்தல் எனும்பெயர் ஏறலும் விரும்பலும். ....225
இவறல் எனும்பெயர் ஓசையு மறப்புமாம். ....226
இழுமென லெனும்பெயர் இனிமையும் ஒலியுமாம். ....227
இறத்தல் எனும்பெயர் மிகுத்தலும் கடத்தலும்
மரணமும் எனவே வழங்கப் பெறுமே. ....228
இறுத்த லெனும்பெயர் தங்கலும் இயம்பலும்
ஒடித்தலும் எனவே யுரைத்தனர் புலவர். ....229
இளமை யெனும்பெயர் தண்மையும் காமமும்
இளமையின் பருவமு மியம்பப் பெறுமே. ....230
இரதி யெனும்பெயர் மதனன் றேவியும்
பித்தளைப் பெயரும் பிடியா னையுமாம். ....231
இக்கெனும் பெயரே மதுவும் கரும்புமாம். ....232
இறும்பூ தெனும்பெயர் மலையும் அதிசயமும்
சிறுதூறும் குழையுந் தகைமையும் செப்புவர். ....233
இடங்க ரெனும்பெயர் குடமும் தூர்த்தரும்
முதலையு மெனவே மொழிந்தனர் புலவர். ....234
-------
இகர வருக்கம் முற்றும்.
ஈகார வருக்கம் ஈழ மெனும்பெயர் பொன்னின் பெயரும்
சிங்கள தேசமு நறவுஞ் செப்புவர். ....235
ஈகை யெனும்பெயர் ஈங்கையும் கொடுத்தலும்
பொன்னும் எனவே புகன்றனர் புலவர். ....236
ஈடெனும் பெயரே பெலமும் குழைவும்
பெருமையு முவமையும் பேசுவர் புலவர். ....237
ஈமம் எனும்பெய ரெரியிடு கலனும்
மயானமும் விறகும் வழங்கப் பெறுமே. ....238
ஈண்டெனும் பெயரே யிவ்விடப் பெயரும்
ஈங்கையின் பெயரும் இயம்புவர் புலவர். ....239
ஈர மெனும்பெயர் அன்புங் குளிர்ச்சியும்
பகுத்தலும் எனவே பகரப் பெறுமே. ....240
ஈன்றா னெனும்பெயர் பிரமனும் பிதாவுமாம். ....241
-----
ஈகார வருக்கம் முற்றும்.
உகர வருக்கம் உடுவெனும் பெயரே யொளிவான் மீனும்
பகழியும் அம்புத் தலையொடு நாவாய்
நடத்திய மரக்கலக் கோலு நவிலுவர். ....242
உத்திர மெனும்பெய ரொருநா ளுடனே
சித்திர மாளிகை சேர்ந்த தோருறுப்பே. ....243
உத்தி யெனும் பெய ருரகப் பொறியுடன்
திருவினு றுப்பொடு நுண்மைப் பொருளுமாம். ....244
உத்திர மெனும்பெயர் மேலும் வடக்கும்
மறுவார்த் தையுமென வழங்கப்பெறுமே. ....245
உலவை யெனும்பெயர் மரத்தின் கோடும்
விலங்கின் மருப்புங் காற்றுந் தழையுமாம். ....246
உந்தி யெனும்பெயர் நீரும்நீர்ச் சுழியும்
தேரின் றட்டும் நாபியும் கடலும்
பெண்கள் விளையாடலு நதியும் பேசுவர். ....247
உப்பெனும் பெயரே மகளிர் விளையாடலும்
கடலும் இனிமையும் கடல்விளையு வருமாம். ....248
உறையெனும் பெயரே நீர்த்துளி முதலாந்
துளியு நீர்நோய் தொலைத்திடு மருந்தும்
பெருமையும் பாலும் பிரையும் விழுமமும்
வெண்கலப் பெயரும் இடைச்சொலு முணவும்
ஊழியுங் காரமும் உவர்நீரு நீளமும்
படையுறை யுடனே நன்னில வூரும்
எண்குறித் திறுதி யெய்வதும் இயம்புவர். ....249
உலகெனும் பெயருயர்ந் தோரும் பூமியும்
திசையு மாகாயமு நாடுஞ் செப்புவர். ....250
உலக்கை யெனும்பெய ரோண நாளு
முரோங்கலு மெனவே யுரைத்தனர் புலவர். ....251
உறுவ னெனும்பெயர் அசோகமர் கடவுளும்
இருடியு மெனவே யியம்பப் பெறுமே. ....252
உறையுள் எனும்பெய ரூரு நாடும்
வீட்டின் பெயரும் விளம்புவர் புலவர். ....253
உயவை யெனும்பெயர் கானை யாறுங்
காக்கணங் கருவிளைப் பெயருங் கருதுவர். ....254
உழையெனும் பெயரே யாழி னரம்பும்
இடமும் மானும் இயம்புவர் புலவர். ....255
உம்பல் எனும்பெயர் விலங்கினாண் பெயருங்
குடிவழித் தோன்றலும் யானையுங் கூறுவர். ....256
உவாவெனும் பெயரினை யோனும் யானையும்
ஈருவா வின்பெயர் தானும் விளம்புவர். ....257
உண்டை யெனும்பெயர் படையின துறுப்பும்
திரண்ட வடிவின் பெயருஞ் செப்புவர். ....258
உளையெனும் பெயரே பரிக்க டிவாளத்
தணிம யிராயவு மஃறிணை மயிரும்
ஆண்பான் மயிரொடு சத்த வொலியுமாம். ....259
உடையெனும் பெயரே செல்வமும் கூறையும்
குடைவேலு முடைமைப் பெயரும் கூறுவர். ....260
உணர்வெனும் பெயரே உளத்தின் தெளிவும்
ஞானமு மெனவே நவிலப் பெறுமே. ....261
உரையெனும் பெயரே சத்த வொலியும்
தேய்தலு மொழியுஞ் செப்புவர் புலவர். ....262
உவளக மெனும்பெயர் மதிலும் பள்ளமும்
ஆய ரூருமோர் பக்கமும் வாவியும். ....263
உயிரெனும் பெயரே சீவனுங் காற்றுமாம். ....264
உறழ்வெனும் பெயரிடை யீடு முவமையும்
புணர்வும் செறிவும் புகலப் பெறுமே. ....265
உருத்த லெனும்பெயர் தோன்றுதல் சினமுமாம். ....266
உக்கம் எனும்பெய ரிடையின் பக்கமும்
விசிறியு மிடபப் பெயரும் விளம்புவர். ....267
உம்ப ரெனும்பெயர் உயர்நில மேடையும்
தேவரும் விசும்பும் செப்பப் பெறுமே. ....268
உரமெனும் பெயரே யூக்கமும் ஞானமும்
பெலமு மருமமும் பேசுவர் புலவர். ....269
உருவெனும் பெயரே நிறமும் வடிவமும்
அட்டையின் பெயரு மாகு மென்ப. ....270
உவப்பெனும் பெயரே யுயரமு மகிழ்ச்சியும். ....271
உறவி யெனும்பெயர் உயிர்நிலைக் களமும்
நீரூற்றும் உறவும் எறும்பும் உணர்த்துவர். ....272
உறுப்பெனும் பெயரே யுடலு மங்கமும்
படையின துறுப்பும் பகர்ந்தனர் புலவர். ....273
உடலெனும் பெயரே யுடம்பும் பொருளுமாம். ....274
உவணம் எனும்பெயர் கழுகும் பருந்துமாம். ....275
உளர்தல் எனும்பெயர் உதறலும் வருடலும். ....276
உள்ள மெனும்பெயர் நெஞ்சமு நினைவுமாம். ....277
உழப்பெனும் பெயரே வலியு முச்சாகமும். ....278
உள்ள மெனும்பெயர் முயற்சியின் பெயரும்
நெஞ்சின் பெயரு நிகழ்த்துவர் புலவர். ....279
உறுகண் எனும்பெயர் நோயும் துன்பமும்
மிடியும் பயமும் விளம்பப் பெறுமே. ....280
உஞற்றெனும் பெயரே வழுக்குடன் ஒளிர்ட்சியுந்
தாளாண் மையுமெனச் சாற்றினர் புலவர். ....281
உறதி யெனும்பெயர் கல்வியும் நன்மையும். ....282
--------
உகர வருக்கம் முற்றும்.
ஊகார வருக்கம் ஊக்க மெனும்பெய ருள்ளத்தின் மிகுதியும்
பெலமு முச்சாகமும் பேசப் பெறுமே. ....283
ஊழ்எனும் பெயரே பகையும் பழமையும்
மரபும் வெயிலும் விதியும் வழங்குவர். ....284
ஊதிய மெனும்பெயர் லாபமும் கல்வியும். ....285
ஊழ்த்த லெனும்பெயர் பதனழிவுஞ் செவ்வியும்
நினைத்தலும் எனவே நிகழ்த்தப் பெறுமே. ....286
ஊசி யெனும்பெயர் எழுத்தாணியுஞ் சூரியும். ....287
ஊறெனும் பெயரே தீண்டலுந் தீமையும்
கொலையும் இடையூறுங் கூறப் பெறுமே. ....288
ஊற்றெனும் பெயரே யூற்றி னுடனே
ஊன்றிய கோலும் உரைத்தனர் புலவர். ....289
ஊர்தி யெனும்பெயர் விமானமுந் தேரும்
யானையும் பரியும் சிவிகையும் பாண்டிலும். ....290
---
ஊகார வருக்கம் முற்றும்.
எகர வருக்கம் என்றூழ் எனும்பெயர் இரவியும் வெயிலும்
கோடைக் காலமும் கூறப்பெறுமே. ....291
எல்லெனும் பெயரே யிரவியும் ஒளியும்
இருளு மிகழ்ச்சியும் இயம்புவர் பெரியோர். ....292
எலியெனும் பெயரே யெலியின் விகற்பமும்
பூர நாளொடு மதுவும் புகலுவர். ....293
எருவை யெனும் பெயர் கொறுக்கையுடனே
கழுகுந் தாம்பிரப் பெயரும் கருதுவர். ....294
எறுழெனும் பெயரே தண்டா யுதமும்
பெலமு மெனவே பேசப் பெறுமே. ....295
எக்கர் எனும்பெயர் சொரிதலும் குவிதலும். ....296
எகின மென்னும்பெயர் புளிமாவு மன்னமும்
காவரிமாவு நீர்நாயும் புளியின்றருவும் புகலப்பெறுமே. ....297
எஃகெனும் பெயரே வேலுங் கூர்மையும்
உருக்கு மெனவே யுரைத்தனர் புலவர். ....298
எள்த லெனும்பெயர் இகழ்தலு நகையுமாம். ....299
எற்றெனும் பெயரே யிரக்கமும் எறிதலும்
அடித்தலும் எத்தன்மைத் தென்றலு மாமே. ....300
எற்றுதல் எனும்பெயர் எறிதலும் புடைத்தலும். ....301
எண்ணெனும் பெயரே யெள்ளு மிலக்கமுஞ்
சொதிடப் பெயரும் விசாரமு மெளிமையும். ....302
எழிலெனும் பெயரே யிளமையு மழகுமாம். ....303
எல்லை யெனும்பெயர் அளவையும் இரவியும். ....304
-----
எகர வருக்கம் முற்றும்.
ஏகார வருக்கம் ஏல்வை யெனும்பெயர் வாவியும் பொழுதுமாம். ....305
ஏமம் எனும்பெயர் இன்பமும் வெண்ணீறுஞ்
சேமமும் பொன்னுமே மாப்பு மயக்கும்
காவலும் இரவுங் கருதுவர் புலவர். ....306
ஏறெனும் பெயரிடி யேற்றின் பெயரும்
விலங்கி னாண்பாற் பெயரு மிடபமும்
அசுபதிப் பெயரு மாகு மென்ப. ....307
ஏனல் எனும்பெயர் தினைதினைப் புனமுமாம். ....308
ஏனாதி யெனும்பெயர் மயிர்வினை யோனும்
மந்திரித் தந்திரிப் பெயரும் வழங்குக. ....309
ஏந்த லெனும்பெயர் பெருமையு முயரமும்
தலைவனும் எனவே சாற்றினர் புலவர். ....310
ஏதி யெனும்பெயர் ஆயுதப் பொதுவும்
வாளும் எனவே வகுத்தனர் புலவர். ....311
ஏதம் எனும்பெயர் குற்றமும் துன்பமும். ....312
ஏணி யெனும்பெயர் எல்லையு முலகமு
மானுங் கண்ணே ணியுமே வழங்குவர். ....313
ஏங்கல் எனும்பெயர் ஒலியும் இரங்கலும்
ஏங்குதற் பெயரும் இயம்புவர் புலவர். ....314
ஏற்றல் எனும்பெயர் எதிர்ந்துபோர் செய்தலும்
கோடலின் பெயருங் கூறுவர் புலவர். ....315
ஏரெனும் பெயரே யழகுமுழு பெற்றமும்
உழவுடை யோனும் உரைக்கப் பெறுமே. ....316
ஏனையெனும் பெயரிடைச் சொல்லும் ஒலியுமாம். ....317
ஏவலெனும் பெயர் வியங்கோளும் வறுமையும். ....318
ஏல மெனும்பெய ரேலவி கற்பமும்
மயிர்ச்சாந் துமென வழங்குவர் புலவர். ....319
----
ஏகார வருக்கம் முற்றும்.
ஐகார வருக்கம் ஐயம் எனும்பெயர் பிச்சைகொள் கலனும்
பிச்சையும் வெண்ணெயுஞ் சந்தே கமுமாம். ....320
ஐயை யெனும்பெயர் உமையும் துர்க்கையும்
அருந்தவப் பெண்ணும் அரசாளும் காளியும்
புதல்வியும் என்னப் புகன்றனர் புலவர். ....321
ஐயெனும் பெயரே குருவும் அரசனும்
எழிலும் இருமலு மிடைச்சொல்லுங் கோழையும்
தலைவனும் தாரமும் சாற்றப் பெறுமே. ....322
ஐயன் எனும்பெயர் குருவுஞ் சாத்துனுந்
தந்தையு முதல்வனு மந்தணண் பெயருமாம். ....323
ஐதெனும் பெயரே நொய்தும் விரைவுமாம். ....324
---
ஐகார வருக்கம் முற்றும்.
ஒகர வருக்கம் ஒளியெனும் பெயரே யொண்சுட ரோனும்
விதுவும் கனலும் விளக்கொடு கீர்த்தியும்
கேட்டை யுமொளிப் பினிடமுங் கிரணமும். ....325
ஒலியெனும் பெயரே ஓசையும் காற்றும்
இடியு மெனவே யியம்பப் பெறுமே. ....326
ஒழுக்க மெனும்பெயர் வழியும் குலமும்
ஆசா ரமுமென அறியப் பெறுமே. ....327
ஒலியல் எனும்பெயர் ஒண்புனல் யாறும
ணில்லுஞ் சருமமும் உடுத்த ஆடையுமாம். ....328
ஒளிவட்ட மெனும்பெயர் சக்கரா யுதமும்
கண்ணா டியுமெனக் கருதுவர் புலவர். ....329
ஒண்மை யெனும்பெயர் நன்மையு மழகும்
மிகுதியும் ஒழுங்கு மறிவும் விளம்புவர். ....330
ஒதுக்க மெனும்பெயர் மறைவும் நடையுமாம். ....331
ஒன்றெனும் பெயரோ ரெண்ணு முத்தியுமாம். ....332
ஒல்லை யெனும்பெயர் சிறுபொழுதும் விரைவும்
தொல்லையும் எனவே சொல்லுவர் புலவர். ....333
ஒதுங்கல் எனும்பெயர் ஒதுங்குதல் நடையுமாம். ....334
------
ஒகர வருக்கம் முற்றும்.
ஓகார வருக்கம் ஓண மெனும்பெயர் மாதவ னாளும்
வருபுனல் யாறும் வகுத்தனர் புலவர். ....335
ஓரை யெனும்பெயர் அரிவையர் கூட்டமும்
அவர்விளை யாடலும் விளையாடு கலனும்
இராசியின் பொதுவு மிடைச்சொல் லுமாமே. ....336
ஓங்க லெனும்பெய ருயரமு மலையும்
மேடு மூங்கிலுந் தலைவனும் விளம்புவர். ....337
ஓடை யெனும்பெயர் வாவியின் பெயரும்
யானை நுதலணி பட்டமும் கிடங்கும்
ஒருகொடிப் பெயரும் உரைத்தனர் புலவர். ....338
ஒதை யெனும்பெயர் சத்த வொலியும்
புரிசையுள் ளுயர்வும் பொருந்திய மேடையும்
நதியும் நகரமும் நவிலப் பெறுமே. ....339
ஓரி யெனும்பெயர் முசுவும் நரியும்
அரிவையர் மயிரொழித் தெல்லா மயிரும்
கொடைதரு மொருவள்ளல் பெயருங் கூறுவர். ....340
ஓவியரெனும் பெயர் சித்திர காரரும்
சிற்பநூல் வினைஞரும் செப்பப் பெறுமே. ....341
ஓட்ட மெனும்பெயர் மேலுதடும் தோல்வியும்
ஓடுதற் பெயரும் உரைத்தனர் புலவர். ....342
ஓதனம் எனும்பெயர் உணவும் சோறுமாம். ....343
ஓவெனும் பெயரே நீர்த்தகை கதவும்
நீக்கமும் இரக்கக் குறிப்பின் வார்த்தையுமாம். ....344
ஓதிமம் எனும்பெயர் அன்னமும் வெற்பும்
கவரி மாவின் பெயருங் கருதுவர். ....345
ஓதி யெனும்பெயர் வெற்பு மனனமும்
பெண்பான் மயிரு மறிவும் பூஞையும்
ஒத்தியு மெனவே யுரைக்கப் பெறுமே. ....346
ஒளியெனும் பெயர் யானைக் கூட்டமும்
ஒழுங்கு மெனவே யுரைத்தனர் புலவர். ....347
----
ஓகார வருக்கம் முற்றும்.
ககரவருக்கத் தொகுதி
ககர அகர வருக்கம் கலையெனும் பெயரே கல்வியு நூலு
மானி னேறு மகர விராசியும்
மதியின் பங்கு மரத்தின் சுவடு
மாண்முகப் பெயருங் கால நுட்பமும்
புடைவை யுஞ்செகுமே கலையும் புகலுவர். ....348
கனலி யெனும்பெயர் கனலு மருக்கனும்
பன்றியு மெனவே பகரப் பெறுமே. ....349
கரமெனும் பெயரே கையுங் கழுதையும்
கிரணமு நஞ்சுங் குடியிறைப் பெயருமாம். ....350
கழியெனும் பெயரே காலைக் காலமு
மிகுதியுங் கழிமுகப் பெயரும் விளம்புவர். ....351
கவியெனும் பெயரே கவிவல் லோனும்
குதிரை வாய்ப்பெய் கருவியுங் குரங்கும்
வெள்ளியுங் கவிதை விகற்பமும் விளம்புவர். ....352
கவையெனும் பெயரே கவருங் காடும்
எள்ளிளங் காயு மாயிலிய நாளுமாம். ....353
கணையெனும் பெயரே யம்புந் திரட்சியும்
பூர நாளும் புகலப் பெறுமே. ....354
களிறெனும் பெயரே யத்த நாளும்
எள்ளும் சுறாமுத லிவற்றி னாண்பாலும்
யானையும் புகல்வரி னிதுணர்ந் தோரே. ....355
கள்வ னெனும்பெயர் கடக விராசியுங்
கருநிறத் தவனொடு களிறு ஞெண்டுஞ்
சோரனு முகவுஞ் சொல்லுவர் புலவர். ....356
கன்னி யெனும்பெயர் பெண்ணு மிளமையு
மழிவிலாப் பொருளுங் குமரி யாறும்
கற்றாழை யினொடு கன்னி யிராசியுந்
துர்க்கையு மெனவே சொல்லப் பெறுமே. ....357
கள்ளெனும் பெயர்தேன் மதுவுங் களவுமாம். ....358
கலியெனும் பெயரே கடையுகப் பெயரும்
வலியு மொலியும் வலியோன் பெயருமாம். ....359
கணமெனும் பெயரே கால நுட்பமும்
உடுவுங் கூட்டமும் நோயும் வட்டமும்
திரட்சியின் பெயரின் விகற்பமுஞ் செப்புவர். ....360
கன்ன லெனும்பெயர் கரகமுங் கரும்பும்
நாழிகை வட்டமு நாழிகைப் பெயரும்
சருக்கரைப் பெயருங் குப்பமுஞ் சாற்றுவர். ....361
கடிகை யெனும்பெயர் கதவொடு தாளுந்
துண்டமும் நாழிகைப் பெயருஞ் சொல்லுவர். ....362
கடியெனும் பெயரே காவலும் விரைவும்
அச்சமுங் கூர்மையும் வரைவுஞ் சிறப்பும்
விளக்கமும் புதுவையு மணமு முடுகலும்
பேயு நெற்கரிப்பும் பேசுவர் புலவர். ....363
கழுதெனும் பெயரே காவற் பரணும்
வண்டும் பேயும் வழங்கப் பெறுமே. ....364
கம்மெனும் பெயரே ககனமும் பிரமனும்
தலைவனும் வெளுப்பும் புலனும் வாயுவும்
சுவர்க்கமும் புத்தியுஞ் சொல்லுவர் புலவர். ....365
கயமெனும் பெயரே களிறும் ஆழமுங்
குளமும் புனலுங் குறைவுமோர் நோயுமாம். ....366
கமல மெனும்பெயர் தாமரை புனலுமாம். ....367
கவந்த மெனும்பெயர் தலைகுறை பிணமும்
நீரும் பேயு நிகழ்த்துவர் புலவர். ....368
கனமெனும் பெயரே மேகமும் பாரமும்
தேகமும் அடைகொடுத் தலுஞ்செம் பொன்னும்
முட்டிய வண்டிலின் முலைக்கன முமாமே. ....369
கரக மெனும்பெயர் ஆலாங் கட்டியும்
கங்கையுந் துளியுங் கமண்டல முமாமே. ....370
கந்தர மெனும்பெயர் கழுத்து மேகமும்
மலைமுழை யுமென வழங்கப் பெறுமே. ....371
ககன மெனும்பெயர் காடுஞ் சேனையும்
விசும்பு மெனவே விளம்பப் பெறுமே. ....372
கழையெனும் பெயரே கரும்பு மூங்கிலும்
புணர்த நாட்பெயரும் புகலப் பெறுமே. ....373
கயினி யெனும்பெயர் அந்த நாளும்
விதவையு மெனவே விளம்பப் பெறுமே. ....374
கடமெனும் பெயரே யானைத் திரளும்
மற்றதன் கொடிறு மதமும் கானமும்
யாக்கை யும்அருஞ் சுரப்பெயருங் கயிறும்
நீதியுங் கும்பமு நெடுமநச் சாரலும்
எதிர்ப்பை கடன்குட முழவு மியம்புவர். ....375
கவலை யெனும்பெயர் கவர்படு வழியும்
துன்பமுஞ் செந்தினைப் பெயருமோர் கொடியுமாம். ....376
கடக மெனும்பெயர் கங்கணப் பெயரும்
வட்ட வடிவு மலையின் பக்கமும்
படைவீ டுமெனப் பகர்ந்தனர் புலவர். ....377
கட்சி யெனும்பெயர் காடுங் கூடும்
கிடப்பிட முமெனக் கிளத்துவர் புலவர். ....378
கண்டக மெனும்பெயர் வாளுஞ் சுரிகையும்
முள்ளுங் கானமு மொழியப் பெறுமே. ....379
கணியெனும் பெயரே மருத நன்னிலமும்
வேங்கை மரமும் விளம்புவர் புலவர். ....380
கங்கெனும் பெயர்கருந் தினைவரம் பருகுமாம். ....381
களமெனும் பெயர்களா மரமுங் கழுத்தும்
கருநிற மும்போர்க் களமும் விடமுமாம். ....382
கடையெனும் பெயரே கதவு முடிவும்
இடமு மெனவே யியம்பப் பெறுமே. ....383
கறையெனும் பெயரே கருமையு முரலுங்
குருதி மாசுங் குடியிறைப் பெயருமாம். ....384
கண்ட மெனும்பெயர் கரியின் கச்சையுந்
துண்டமு மெய்புகு கருவியும் வாளுங்
கண்ட சர்க்கரையுந் தேசமுங் கழுத்தும்
இடுதிரைப் பெயரும் இயம்புவர் புலவர். ....385
கதுப்பெனும் பெயரே யிருபான் மயிரும்
கொடிறும் விலங்கின் றிரளுங் கூறுவர். ....386
கந்தெனும் பெயரே பண்டி யுளிரும்பும்
கம்பமும் திரட்சி யாக்கையின் மூட்டும்
ஆதார நிலையும் காய்க்கு மரமுமாம். ....387
கடிப்ப மெனும்பெயர் காதணிப் பொதுவும்
அணிகலச் செப்பும் அச்சு மணியும்
வாச்சியத் தொன்றும் பதக்க மெனவே
பகர்ந்தனர் புலவர். ....388
கன்றெனும் பெயரே யொருசார் விலங்கினது
கன்றும் இளமரக் கன்றும் சிறுமையும்
கைவளை விகற்பமுங் கருதப் பெறுமே. ....389
கலாப மெனும்பெயர் மேகலைப் பெயரும்
மணிவடப் பெயரு மயிலிறகு மாமே. ....390
கரண்ட மெனும்பெய ரணிகலச் செப்பும்
நீர்க்காக் கையுமென நிகழ்த்துவர் புலவர். ....391
கரண மெனும்பெயர் மெய்க்கூத்தின் விகற்பமும்
கலவியுங் கணிதமும் புலனுங் கருதுவர். ....392
கல்லெனும் பெயரே யருவியு மோசையும்
மலையுங் கற்பொதுப் பெயரும் வழங்குப. ....393
கவிகை யெனும்பெயர் குடையுங் கொடையுமாம். ....394
கணிச்சி யெனும்பெயர் மழுவுந் தறிகையுந்
தோட்டியு முளியுஞ் சொல்லுவர் புலவர். ....395
கதையெனும் பெயரே காரணச் சொல்லுந்
தண்டா யுதமொடு வார்த்தையுஞ் சாற்றுவர். ....396
கச்ச மெனும்பெயர் புரோசக் கயிறும்
மரக்காலு மளவும் வழங்கப் பெறுமே. ....397
கதவெனும் பெயரே கபாடமும் காவலும். ....398
கறுப்பெனும் பெயரே கருமையும் சினமும்
வெறுத்திடு சினக்குறிப் புமென விளம்புவர். ....399
கம்பலை யெனும்பெயர் நடுக்கமு மச்சமுந்
துன்பமுஞ் சத்த வொலியுஞ் சொல்லுவர். ....400
கம்பம் எனும்பெயர் நடுக்கமும் தூணுமாம். ....401
கண்டூ வெனும்பெயர் காஞ்சொறி தினவுமாம். ....402
கந்த மெனும்பெயர் மணமு மைம்புலனும்
கிழங்கு மெனவே கிளத்துவர் புலவர். ....403
கறங்கெனும் பெயரே காற்றாடி வட்டமும்
கழலுஞ் சத்த வொலியும் சொல்லுவர். ....404
கஞற லெனும்பெயர் பொலிவும் சிறுமையும். ....405
கரிணி யெனும்பெயர் கடகரிப் பெயரும்
பிடியின் பெயரும் பேசுவர் புலவர். ....406
கதலி யெனும்பெயர் காற்றா டியுடனே
வாழையுந் துவசமும் தேற்றா மரமுமாம். ....407
கடவு ளெனும்பெயர் நன்மையுந் தெய்வமும்
முனிவன் பெயரு மொழியப் பெறுமே. ....408
கணக்கெனும் பெயரே கலைகளின் விகற்பமும்
எண்ணின் பெயரும் இயம்புவர் புலவர். ....409
கச்சை யெனும்பெயர் கவசமும் கயிறும்
தழும்பு மெனவே சாற்றினர் புலவர். ....410
கயிலெனும் பெயர்பூ ணின்கடைப் புணர்வும்
பிடர்த்தலை பெயரும் பேசப் பெறுமே ....411
கஞ்ச மெனும்பெயர் கமலமுந் தாளமும்
வெண்கலசமும் அப்ப விகற்பமுங் கஞ்சாவும்
கண்ணா டியுமெனக் கருதுவர் புலவர். ....412
கலிங்க மெனும்பெயர் ஊர்க்குருவியும் புடைவையும்
வானம் பாடியும் கலிங்க தேசமுமாம். ....413
கந்தருவ மெனும்பெயர் பெண்ணோடு குதிரையாம். ....414
சுகமெனும் பெயரே புள்ளின் பொதுவும்
அம்பின் பெயரு மாகு மென்ப. ....415
கவடெனும் பெயரே புரோசக் கயிறும்
மரத்தின் கவடு மனக்க படமுமாம். ....416
கருமை யெனும்பெயர் கறுப்பும் பெருமையும்
பெலமும் புலவோர் பேசப் பெறுமே. ....417
கரேணு வெனும்பெயர் கொலையானை யினொடு
பிடியா னையுமெனப் பேசப் பெறுமே. ....418
கனைத்த லெனும்பெயர் ஒலித்தலின் பெயரும்
திரண்ட விருளின் பெயருஞ் செப்புவர். ....419
கடைப்பிடி யெனும்பெயர் மறப்பிலா தவனும்
தேற்றமு மெனவே செப்பப் பெறுமே. ....420
கட்டளை யெனும்பெயர் இட்டிகை யியற்றலுந்
தத்துவ விகற்பமு நிறையறி கருவியும்
பிறவின ஒப்பும் ஓரிராசியும் பேசுவர். ....421
கண்ட லெனும்பெயர் கைதைநீர் முள்ளியாம் ....422
கரைதல் எனும்பெயர் ஒலித்தல் கூவுதலுமாம். ....423
கதழ்வெனும் பெயரே சிறப்பும் வேகமுமாம். ....424
களியெனும் பெயரே களிப்பொடு குழம்புமாம். ....425
கத்திகை யெனும் பெயர் சிறுகொடிப் பெயரும்
தொடையல் விகற்பமும் வாசந்தியும் சொல்லுவர். ....426
கந்துக மெனும்பெயர் குதிரையும் பந்துமாம். ....427
கப்பண மெனும்பெயர் கைவேல் விகற்பமும்
இரும்பினிற் புரிந்திடு நெருஞ்சிமுட் பெயருமாம். ....428
கலாமெனும் பெயரே கொடுமையும் சினமுமாம். ...429
கரியெனும் பெயரே களிறுஞ் சாட்சியும்
இருந்தையு மெனவே யியம்புவர் புலவர். ....430
கரீர மெனும்பெயர் மிடாவும் அகத்தியும்
தந்தியின் பல்லடிப் பெயருஞ் சாற்றுவர். ....431
கனவெனும் பெயரே கனாவு மயக்கமும். ....432
கட்ட லெனும்பெயர் களைதலும் பிணித்தலும்
தடுத்தலு மெனவே சாற்றினர் புலவர். ....433
கந்த னெனும்பெயர் முருகனும் அருகனும். ....434
களரி யெனும்பெயர் போர்க்களமும் காடும்
கருமஞ் செய்யிடமுங் கருதுவர் புலவர். ....435
கறங்க லெனும்பெயர் சுழற்றுதலு மொலியும்
வளைதடிப் பெயரும் வழங்கப் பெறுமே. ....436
கற்பக மெனும்பெயர் கற்பக தருவும்
சொர்க்கமும் பிரமன் வாழ்நாளுஞ் சொல்லுவர். ....437
கடுத்தல் எனும்பெயர் உவமையும் விரைவுமாம். ....438
கதவ மெனும்பெயர்க் கபாடமும் காவலும். ....439
கரியவ னெனும்பெயர் கண்ணனிந் திரனுடன்
சனியின் பெயரும் சாற்றப் பெறுமே. ....440
கரிலெனும் பெயரே கொடுமையுங் குற்றமும்
காழ்த்தலு மெனவே கருதுவர் புலவர். ....441
கலுழி யெனும்பெயர் கானி யாறும்
கலங்கிய நீருங் கருதப் பெறுமே. ....442
கவன மெனும்பெயர் காடுங் கலக்கமும்
விரைவு மெனவே விளம்புவர் புலவர். ....443
கழித்த லெனும்பெயர் மிகுதலுஞ் சாதலும்
கடத்தலு மெனவே கருதப் பெறுமே. ....444
கழலெனும் பெயரே கழங்குஞ் செருப்பும்
காலுங் காலணிப் பெயருங் கருதுவர். ....445
கழும லெனும்பெயர் மயக்கமும் பற்றும்
நிறைவின் பெயரு நிகழ்த்துவர் புலவர். ....446
கயமெனும் பெயரே மென்மையும் பெருமையும்
களவின் பெயருங் கருதப் பெறுமே. ....447
களப மெனும்பெயர் யானைக் கன்றும்
கலவையுஞ் சாந்தும் கருதப் பெறுமே. ....448
கம்புள் எனும்பெயர் சம்பங் கோழியுஞ்
சங்கின் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....449
கண்ணெனும் பெயரே கணுவு மூங்கிலும்
இடத்தின் பெயரும் விழியு மியம்புவர். ....450
கருவி யெனும்பெயர் கவசமும் யாழும்
பலவினைப் பெயருந் தொடர்பு மீட்டமுந்
துணைக்கா ரணமுந் துகிலு மாயுதமும்
கசையும் பல்லியப் பெயருங் கலணையுந்
தொகுதியு மெனவே சொல்லுவர் புலவர். ....451
கடுவெனும் பெயரே கடுமரப் பெயரும்
விடமும் கடுத்தலும் விளம்பப் பெறுமே. ....452
கழங்கெனும் பெயரே வேல னாடலுங்
கொடியின் கழலுங் கூறுவர் புலவர். ....453
கலமெனும் பெயரோ ரெண்ணுமா பரணமும்
உண்கல மரக்கல மட்கலம் யாவுமாம். ....454
கஞ்ச னெனும்பெயர் பிரமனுங் குறளனும். ....455
கவ்வை யெனும்பெயர் கவலையுந் துன்பமும்
ஆர வாரத்தின் பெயரு மாமே. ....456
கரையெனும் பெயர்நீர்க் கரையுஞ் சேர்க்கையின்
சொல்லின் பெயருஞ் சொல்லப் பெறுமே. ....457
கண்ணுத லெனும்பெயர் கறைமிடற் றிறையையும்
நினைத்தலின் பெயரு நிகழ்த்துவர் புலவர். ....458
ககர வருக்கம் முற்றும்.ககர ஆகார வருக்கம்
காரி யெனும்பெயர் சனியுஞ் சாத்தனுங்
கருமையுங் காகமுங் கரிக்கு ருவியும்
வடுகக் கடவுளுந் தெய்வேந் திரனும்
கடுவுமோர் வள்ளலுங் கருதப் பெறுமே. ....459
கால மெனும்பெயர் விடியற் காலமும்
விடிந்த பிற்காலமு முக்கா லமுமாம். ....460
காலெனும் பெயரே காற்றுங் கூற்றுந்
தாளும் பொழுதுந் தறியு மளவையும்
வழியுந் தேரி னுருளும் வாய்க்காலும்
பெலமு மலர்க்காம்பு மிடமும் பிள்ளையும்
முளையு மெனவே மொழிந்தனர் புலவர். ....461
காள மெனும்பெயர் கருமையு நஞ்சும்
ஊது சின்னத்தின் வருக்கமு முரைப்பர். ....462
காரெனும் பெயரே மாரிக் காலமும்
கறுவிய கருமங் கடைமுடி வளவும்
தவிராச் சினமு நீருங் கருங்குரங்கும்
உழவின் பருவமு மேகமுங் கூந்தலுங்
கருமையு மிருளும் வெள்ளாடுங் கருதுவர். ....463
காஞ்சி யெனும்பெயர் காஞ்சி நன்னகரமும்
மேகலைப் பெயருமோர் பண்ணுமோர் மரமுமாம். ...464
காண்டை யெனும்பெயர் கற்பா ழியினொடு
தவத்தோ ரிடமுஞ் சாற்றப் பெறுமே. ....465
காந்தார மெனும்பெய ரிசையுங் காடுமாம். ....466
காமர மெனும்பெய ரிசைப் பொதுப்பெயரும்
அத்த நாளு மோரிசையு மடுப்புமாம். ....467
காளை யெனும்பெயர் பாலைக் கதிபனும்
இளமையோன் பெயரு மெருதும் இயம்புவர். ....468
காய மெனும்பெயர் கறியின் கரிப்பும்
ஆகமும் விசும்பும் பெருங்கா யமுமாம். ....469
காத்திர மெனும்பெயர் களிற்றின் முற்காலும்
ஆக்கையுங் கனமும் கோப முமாமே. ....470
காசெனும் பெயரே மணியின் கோவையும்
குற்றமுங் காசின் விகற்பமும் கூறுவர். ....471
காவி யெனும்பெயர் கள்ளும் குவளையும்
காவிக் கல்லுங் கருதப் பெறுமே. ....472
காழக மெனும்பெயர் கருநிறந் தூசுமாம். ....473
கான மெனும்பெயர் காடு மிசையுமாம். ....474
காகுளி யெனும்பெயர் மந்த விசையொடு
நாசியி னெழுமொலி தவிசு நவிலுவர். ....475
கான லெனும்பெயர் கடற்கரைச் சோலையும்
மலைசார் சோலைப்பெயரு நல்லொளியும்
பேய்த்தேர்ப் பெயரும் பேசப் பெறுமே. ....476
காவெனும் பெயரே காடிமலர்ச் சோலையும்
துலாமுங் காத்தலுந் தோட்சுமைப் பெயருமாம். ....477
காசை யெனும்பெயர் புற்பிடிப் பெயரும்
நாணலும் காசை மரமு நவிலுவர். ....478
காண மெனும்பெயர் பொன்னும் பொற்காசும்
பரியூ ணுஞ்செக்கு மோர்கட் செந்துமாம். ....479
காம்பு எனும்பெயர் மலர்க்காம்பு மூங்கிலும்
பட்டின் விகற்பமும் பகரப் பெறுமே. ....480
காழெனும் பெயரே மணியின் கோவையு
மரத்தின் வயிரமும் விதையும் பரலுமாம். ....481
காழிய ரெனும்பெயர் கடற்கழிப் பரதரும்
ஈரங் கோலியர் பெயரும் இயம்புவர். ....482
கானெனும் பெயரே காடு மணமுமாம். ....483
காப்ப, எனும்பெயர் வெண்ணீருங் காவலும்
தூசுங் கதவும் சொல்லுவர் புலவர். ....484
காத லெனும்பெயர் விருப்பமுங் கோறலும். ....485
காலிலி யெனும்பெய ரருணனும் சனியும்
பாம்பு மெனவே பகரப் பெறுமே. ....486
காண்ட மெனும்பெயர் காடுந் தீர்த்தமுந்
தூசு நூன்முடிவும் படைக்கலப் பொதுவும்
அம்புங் கோலு மணிகலச் செப்பும்
குதிரை யுங்கமண் டலமு மியம்புவர். ....487
காதை யெனும்பெயர் கதையொடு சொல்லுமாம். ....488
காம னெனும்பெயர் கணைவேள் பெயரும்
ஐந்தரு விறைவன் பெயரு மாமே. ....489
காம ரெனும்பெயர் கட்ட ழகுடனே
விருப்பமு மெனவே விளம்புவர் புலவர். ....490
காம மெனும்பெயர் விரகமும் விருப்பும். ....491
ககர ஆகார வருக்கம் முற்றும்.ககர இகர வருக்கம்
கிடக்கை யெனும்பெயர் கிளர்புவிப் பெயரும்
சயனமு மென்னச் சாற்றப் பெறுமே. ....492
கிழமை யெனும்பெயர் குணமு முரிமையும்
வாரமு மெனவே வழங்குவர் புலவர். ....493
கிளையெனும் பெயரே மூங்கிலும் சுற்றமும்
கிளைத்தலு மோர்பண் பெயருங் கிளத்துவர். ....494
கிட்டி யெனும்பெயர் தலையீற் றாவும்
தாளமு மெனவே சாற்றுவர் புலவர். ....495
கின்னர மெனும்பெயர் கின்னர மிதுனமும்
யாழின் பெயரு நீர்ப்பறவையு மாந்தையும். ....496
கிடுகெனும் பெயரே தேர்மரச் சுற்றும்
பரிசையு மெனவே பகரப் பெறுமே. ....497
கிளரெனும் பெயரே கிளர்த்தெழு கிரணமும்
கோட்டு மலர்ப்பூந் தாதுங் கூறுவர். ....498
கிஞ்சுக மெனும்பெயர் முண்முருக் குடனே
சென்னிறப் பெயருஞ் செப்பப் பெறுமே. ....499
கிள்ளை யெனும்பெயர் கிளியுங் குதிரையும். ....500
கிருட்டின னெனும்பெயர் கேசவன் பெயரும்
அருச்சனன் பெயரு மாகு மென்ப. ....501
கிருத்திம மெனும்பெயர் தொழிலுஞ் சருமமும்
பூதமும் பொய்யும் புகலப் பெறுமே. ....502
கிம்புரி யெனும்பெயர் கிரீட விகற்பமும்
களிற்றின் மருப்பின் பூணுங் கருதுவர். ....503
கிழியெனும் பெயரே கிழிபடு துகிலும்
இருநிதிப் பெயரு மெழுது படமுமாம். ....504
கிருட்டி யெனும்பெயர் பன்றியின் பெயரும்
ஓரீற் றாவும் உரைக்கப் பெறுமே. ....505
ககர இகர வருக்கம் முற்றும்.ககர ஈகார வருக்கம்
கீர மெனும்பெயர் கிளியும் பாலுமாம். ....506
கீச கமெனும் பெயர் மூங்கிலுங் குரங்குமாம். ....507
கீத மெனும்பெயர் இசையுடன் வண்டுமாம். ....508
கீலால மெனும்பெயர் நீருங் காடியும்
உதிரமு மெனவே யுரைக்கப் பெறுமே. ....509
கீழெனும் பெயரே கிழக்குங் கீழ்மையும்
கீழ்ப்படு சாதியு மிடமுங் கிளத்துவர். ....510
ககர ஈகார வருக்கம் முற்றும்.ககர உகர வருக்கம்
குருதி யெனும்பெயர் குசனும் சிவப்பும்
உதிரமு மெனவே யுரைக்கப் பெறுமே. ....511
குலமெனும் பெயரி ரேவதியுங் கூட்டமும்
வருண விகற்பமு மனையுங் கோயிலும். ....512
கும்ப மெனும்பெயர் கும்ப விராசியும்
வெங்கிரி நெற்றியுங் குடமும் விளம்புவர். ....513
கும்பி யெனும்பெயர் யானையும் சேறும்
நிரயமு மெனவே நிகழ்த்தப் பெறுமே. ....514
குமுத மெனும்பெயர் மிகும்பே ரோசையும்
அடுப்பு நெய்தலு மோர்திசை யானையுமாம். ....515
குண்டெனும் பெயரே குதிரை ஆண்பெயரும்
ஆழமும் கொலையுந் தாழ்வு மாமே. ....516
குயிலெனும் பெயரே கோகிலமுந் துளையும்
உரையுங் கருமுகிற் பெயரும் ஓதுவர். ....517
குவலைய மெனும்பெயர் குவளையும் புவியுமாம். ....518
குமரி யெனும்பெயர் அழிவிலா மாதரும்
உமையுந் துர்க்கையு மழிவிலாப் பொருளும்
சத்த மாதாக்களிற் சாற்று மோரணங்கும்
கற்றா ழையுமோர் நதியுங் கருதுவர். ....519
குருகெனும் பெயரே கொல்லுலை மூக்கும்
கோழியுங் கைவளை யுங்குருக் கத்தியும்
நாரை பெயரோடு மூல நாளும்
புள்ளின் பொதுவும் வெண்மையும் இளமையும். ...520
குன்றெனும் பெயரே வருண னாளும்
சிறுமலைப் பெயர்பெரு மலையுஞ் செப்புவர் ....521
குருவெனும் பெயரே குரவனு நிறமும்
அரசனும் வியாழமும் பாரமும் பெருமையும்
தாளத்தி னிருமாத் திரையுமோர் நோயுமாம். ....522
குடியெனும் பெயரே கோத்திர விகற்பமும்
குலத்தின் பெயருமூர்ப் பொதுவும் புருவமும். ....523
குறிஞ்சி யெனும்பெயர் மலைச்சார்பு நிலமும்
அந்நில யாழுமோர் மரமு மாமே. ....524
குவடெனும் பெயர்மரக் கோடுஞ் சயிலமும்
மலையி னுச்சியும் வழங்கப் பெறுமே. ....525
குறும்பொறை யெனும்பெயர் குறிஞ்சி யூரும்
காடு மெனவே கருதுவர் புலவர். ....526
குடிஞை யெனும்பெயர் கூகையும் யாறும்
புட்பொதுப் பெயரும் புகலப் பெறுமே. ....527
குளமெனும் பெயரே நுதலும் பொய்கையும்
சருக்கரைப் பெயருஞ் சாற்றுவர் புலவர். ....528
குழையெனும் பெயரே சேறுந் துவாரமும்
தளிறுங் குண்டலப் பெயருஞ் சாற்றுவர். ....529
குடமெனும் பெயரே கும்பமும் பசுவும்
கொட்டிக் கைகள் குவித்தாடு கூத்தும்
நகர மக்காரமு நவிலப் பெறுமே. ....530
குணுங்க ரெனும்பெயர் தோற்கரு வியருடன்
புலைஞரு மெனவே புகன்றனர் புலவர். ....531
குஞ்ச மெனும்பெயர் குறளைச் சொல்லும்
நாழியுங் குறளு நவிலப் பெறுமே. ....532
குரலெனும் பெயரே வாசிக் கோவையும்
கிண்கிணி மாலையும் கிளர்நெற் கதிரும்
கோதையர் மயிரும் யாழ்நரம் பிலொன்றும்
புள்ளின் சிறகும் புகன்றனர் புலவர். ....533
குணிலெனும் பெயர்கவ ணுங்குறுந் தடியுங்
கடிப்பெனும் பணையுங் கருதப் பெறுமே. ....534
குளிரெனும் பெயரே குடமுழவும் ஞெண்டும்
குளிர்ச்சியு மிலைமூக் கரியுங் கருவியுங்
கவணு மழுவுங் கருதப் பெறுமே. ....535
குரையெனும் பெயரே குதிரைப் பெயரும்
ஒலியுமிடைச் சொல்லு முரைக்கப் பெறுமே. ....536
குலையெனும் பெயர்காய்க் கொத்துஞ் செய்கரையும்
அம்பின் குதையும் விற்குதையு மாமே. ....537
குய்யெனும் பெயரே குளிர்மணப் புகையுடன்
கறிகரித் தலின்பெயர் தானுங் கருதுவர். ....538
குடம்பை யெனும்பெயர் முட்டையும் கூடுமாம். ....539
குஞ்சி யெனும்பெயர் குன்றியின் புதலும்
பறவை யிளமையு மாண்பான் மயிருமாம். ....540
குழலெனும் பெயரே துளையுடைப் பொருளும்
இசையின் குழலும் இருபான் மயிருமாம். ....541
கும்பச னெனும்பெயர் செந்தமிழ் முனியும்
துரோணா சாரியன் பெயருஞ் சொல்லுவர். ....542
குடுமி யெனும்பெயர் மலையி னுச்சியும்
வென்றியு மாண்பான் மயிரும் விளம்புவர். ....543
குயமெனும் பெயரே யிளமையு முலையுங்
கொடுவா ளெனவுங் கூறப்பெறுமே. ....544
குட்ட மெனும்பெயர் குளமு மாழமுந்
தொழுநோ யெனவுஞ் சொல்லுவர் புலவர். ....545
குணமெனும் பெயரே கும்பமு மியல்புங்
கயிறுங் குணத்தின் விகற்பமும் கருதுவர். ....546
குல்லை யெனும்பெயர் வெட்சியுந் துளசியும்
கஞ்சா வின்பெய ரதனையுங் கருதுவர். ....547
குத்தி யெனும்பெயர் அடக்கமு மண்ணுமாம் . ....548
குபேர னெனும்பெயர் வயிச்சிர வணனோடு
மதியின் பெயரும் வழங்கப் பெறுமே. ....549
குறளெனும் பெயரே குறளர்தம் பெயரும்
பாரிடப் பெயரும் குறுமையும் பகருவர். ....550
குறடெனும் பெயரே திண்ணையும் பலகையும். ....551
குற்ற லெனும்பெயர் கோறலும் பறித்தலும். ....552
குந்த மெனும்பெயர் குருந்தமும் வியாதியும்
கைவேல் குதிரைப் பெயருங் கருதுவர். ....553
குயிறல் எனும்பெயர் கூவலும் குடைதலும்
செறிதலும் செய்தலும் செப்பப் பெறுமே. ....554
குவவெனும் பெயரே குவிதலுந் திரட்சியும்
பெருமையு மெனவே பேசப் பெறுமே. ....555
குய்யம் எனும்பெயர் யோனியு மறைவுமாம். ....556
குரங்கெனும் பெயரே வளைவும் வானரமும்
மிருகப் பொதுவின் பெயரும் விளம்புவர். ....557
நகர உகர வருக்கம் முற்றும்.ககர ஊகார வருக்கம்
கூற்றெனும் பெயரே கூற்றனும் வார்த்தையும். ....558
கூனியெனும்பெயர் குடும்பமுங் கூட்டமும்
பேயுஞ் சேனைத் தலைவனும் பேசுவர். ....559
கூட மெனும்பெயர் மலையின் குவடும்
கூட்டமு மறைவு மனவஞ் சனையும்
கொல்லன் சம்மட் டியையுங் கூறுவர். ....560
கூல மெனும்பெயர் பாகலும் பகவும்
வரம்பும் விலங்கின் வாலு நீர்க்கரையும்
தெருவும் பலபண்ட முமங்கா டியுமாம். ....561
கூளிய ரெனும்பெயர் பூதகண வீரரும்
கொலைத்திற லோருநட் பாளருங் கூறுவர். ....562
கூந்தலெனும் பெயர் மயிலின் றோகையும்
கோதையர் குழலுங் கூறப் பெறுமே. ....563
கூவிர மெனும்பெயர் தேரின் கொடிஞ்சியுந்
தேரு மெனவே செப்புவர் புலவர். ....564
கூத்த னெனும்பெய ருயிரின் பெயரும்
நடிப்போன் பெயரு நவிலப் பெறுமே. ....565
கூழெனும் பெயரே பலவகை யுணவும்
நெற்பயிர் முதலவுங் கனகமு நிகழ்த்துவர். ....566
கூரெனும் பெயரே கூர்மையு மிகுதியும். ....567
கூர லெனும்பெயர் மாதர்தம் மயிரும்
புள்ளின் சிறகும் புகலப் பெறுமே. ....568
கூழை யெனும் பெயர் கொடும்படை யுறுப்பும்
புட்சிறகு பெண்பான் மயிரும் புகலுவர். ....569
நகர ஊகார வருக்கம் முற்றும்.ககர எகர வருக்கம்
கெழுவுத லெனும்பெயர் மயக்கமும் பற்றுமாம் ....570
கெதியெனும் பெயர்பர கெதிநடை விரைவுமாம். ....571
ககர எகர வருக்கம் முற்றும்.ககர ஏகார வருக்கம்
கேடக மெனும்பெயர் ஊர்பொதுப் பெயரும்
பரிசையும் பலகையும் பகர்ந்தனர் புலவர். ....572
கேச மெனும்பெயர் பெண்பான் மயிரும்
ஆண்பான் மயிரு மஃறிணை மயிருமாம். ....573
கேழெனும் பெயரே நிறமும் ஒளியும்
உவமையு மெனவே யுரைத்தனர் புலவர். ....574
கேசர மெனும்பெயர் மகிழமரப் பெயரும்
பூந்தாது மெனவே புகலப் பெறுமே. ....575
கேது வெனும் பெயர் ஒன்பான் கிரகமும்
துவசமு நெருப்புஞ் சொல்லுவர் புலவர். ....576
கேவல மெனும்பெயர் தனிமையு முத்தியும். ....577
கேட்டை யெனும்பெயர் புரந்தர னாளும்
அசைச்சொற் பெயரு மூதேவியு மாமே. ....578
கேள்வி யெனும்பெயர் கல்வியும் செவியுமாம். ....579
கேகய மெனும்பெயர் மயிலுமோர் பண்ணும்
அகண மாவின் பெயரு மாமே. ....580
ககர ஏகார வருக்கம் முற்றும்.
ககர ஐகார வருக்கம்
கையெனும் பெயரலங் கரித்தலுஞ் சிறுமையும்
தானையி னுறுப்பும் தங்கையும் செங்கையும்
ஒழுக்கமு மிடமுங் குற்றமுஞ் சார்புமாம். ....581
கைத்த லெனும்பெயர் கைப்புஞ் சினமுமாம். ....582
கைக்கிளை யெனும்பெய ரொருதலைக் காமமும்
இசையின் விகற்பமு மியம்பப் பெறுமே. ....583
ககர ஐகார வருக்கம் முற்றும்.ககர ஒகர வருக்கம்
கொடிறெனும் பெயரசுரர் குருவி னாளுங்
கவுளியின் பெயருங் கருவிப் பற்றுமாம். ....584
கொக்கெனும் பெயரே குதிரையு மூலமும்
பேகமுஞ் செந்நாயு மாமரமும் பேசுவர். ....585
கொன்னெனும் பெயரே ஓரசைச் சொல்லும்
பெருமையுங் காலமும் வறிது மச்சமும்
பயனி லாததும் பகருவர் புலவர். ....586
கொற்றி யெனும்பெயர் கோவிளங் கன்றும்
துர்க்கையுங் கொத்தியுஞ் சொல்லப் பெறுமே. ....587
கொண்மூ வெனும்பெயர் மேகமா காயமுமாம். ....588
கொந்தள மெனும்பெயர் கோதையர் மயிரும்
குருளையுங் கருங்குழற் கொத்து மாமே. ....589
கொடிய னெனும்பெயர் கொடியவன் பெயரும்
கேதுவின் பெயருங் கிளர்த்தப் பெருமே. ....590
கொம்மை யெனும்பெயர் கொங்கையும் பெலமும்
இளமையும் அங்கை குவித்துக் கொட்டலும்
வட்ட வடிவுந் திடரும் வழங்குவர். ....591
கொண்டை யெனும்பெயர் இரந்தையின் கனியும்
மயிர்முடிப் பெயரும் வழங்கப் பெறுமே. ....592
கொற்ற மெனும்பெயர் அரசியற் பெயரும்
வெற்றியின் பெயரும் விளம்புவர் புலவர். ....593
கொல்லெனும் பெயர்கொலை யேவலு மசைச்சொல்லும்
ஐயமும் வருத்தமும் செங்கொல்லும் கருங்கொல்லும். .... 594
கொடியெனும் பெயரே யொழுங்கும் வல்லியும்
துவசமுங் காக்கையின் பெயருஞ் சொல்லுவர். ....595
ககர ஒகர வருக்கம் முற்றும்.ககர ஓகார வருக்கம்
கோடை யெனும்பெயர் மேற்றிசைக் காற்றும்
குதிரையும் வெயிலும் வெண்காந்தளுங் கூறுவர். ....596
கோவெனும் பெயரே குலிசமுந் தலைவனும்
அம்பும் பூமியும் அறலுங் கிரணமும்
சுவர்க்கமும் விழியுஞ்சூழ் பெருந்திசையும்
மலையும் பதவும் வானமு மிரக்கமும்
குறிப்பின் வார்த்தையுங் கூறுவர் புலவர். ....597
கோளெனும் பெயரே யொன்பான் கிரகமும்
வலியுங் கொள்கையுங் கொலையு மிடையூறும்
குறளையின் புன்சொல்லுங் கூறப் பெறுமே. ....598
கோல மெனும்பெயர் கொழுந்து நீரோட்டமும்
பாக்கும் பீர்க்கும் பன்றியு மழகும்
இரந்தையும் இரந்தைக் கனிக்கும் இயம்புவர். ....599
கோட்ட மெனும்பெயர் கோயிலு நாடும்
கோட்டமும் வளைவும் உண்கலனு மான்கொட்டிலும்
குரவு மனக்கோட்ட முமெனக் கூறுவர். ....600
கோத்திர மெனும்பெயர் குடியு மலையும்
புவனியு மெனவே புகன்றனர் புலவர். ....601
கோடெனும் பெயரே மலையின் குவடும்
வார்புனற் கரையும் விலங்கின் மருப்பும்
மரத்தின் பணையு மூதுங் கொம்பும்
சங்கின் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....602
கோச மெனும்பெயர் மதிலுறுப்பு முட்டையும்
பொத்தகமும் பொருள் பொருந்து பெட்டகமும்
ஆண்குறிப் பெயரு மாகு மென்ப. ....603
கோட்டி யெனும்பெயர் கோபுர வாயிலும்
ஈட்டு பலசபையு மியம்பப் பெறுமே. ....604
கோதை யெனும்பெயர் மடந்தையர் குழலுஞ்
சேரனு முடும்புஞ் சிறந்த கைக்கட்டியும்
மாலையுங் காற்றின் பெயரும் வழங்குவர். ....604
கோணெனும் பெயரே வளைவும் கூனுமாம். ....606
கோடக மெனும்பெயர் முடியின துறுப்பும்
குதிரையும் புதுமையுங் கூறப் பெறுமே. ....607
கோர மெனும்பெயர் கொடுமையும் வட்டிலும்
சோழன் குதிரையுஞ் சொல்லப் பெறுமே. ....608
கோசிக மெனும்பெயர் பட்டும் கூறையும்
சாமவேத முமெனச் சாற்றுவர் புலவர். ....609
கோடிக மெனும்பெயர் கூறையின் பெயரும்
பூவின் றட்டும் புகலப் பெறுமே. ....610
கோடர மெனும்பெயர் குரங்கும் குதிரையும்
மரத்தின் கோடும் எட்டிமரச் செறிவுமாம். ....611
கோகுல மெனும்பெயர் குயிலொடு குரங்கும்
பல்லியு மெனவே பகர்ந்தனர் புலவர். ....612
கோளி யெனும்பெயர் கொளிஞ்சி மரமும்
அந்தியால் பூவாது காய்க்கு மரமுமாம். ....613
கோழி யெனும்பெயர் சோழ னுறையூரும்
ஆண்டலைப் புள்ளு மாமென வுரைப்பர். ....614
கோண மெனும்பெயர் குதிரையு மூக்கும்
அங்குச முங்கூன் வாளு மாமே. ....615
கோடி யெனும்பெயர் தூசும் புதுமையும்
ஓரெண் பெயரு முரைக்கப் பெறுமே. ....616
கோண லெனும்பெயர் கூனலும் வளைதலும்
மாறுபடு குணத்தின் பெயரும் வழங்கும். ....617
கோலெனும் பெயரே யாழி னரம்பும்
அம்புந் துலாமுந் தூரிகைக் கோலும்
அஞ்சனக் கல்லு மளந்திடு கோலும்
குதிரை மத்திகையுந் திரட்சியு மீட்டியும்
இறைமுறை நடத்தல் வாட்கோலு மியம்புவர். ....618
ககர ஓகார வருக்கம் முற்றும்.ககர ஒளகார வருக்கம்
கெளசிக மெனும்பெய ரோரி சையுடன்
கூகையும் சுடர்நிலைத் தண்டும் பட்டுமாம். ....619
கொளவை யெனும்பெயர் கள்ளும் துன்பமும்
எள்ளிலங் காயும் பழிச்சொலு மோசையும். ....620
கெளந்தி யெனும்பெயர் பாண்டவ ரன்னையும்
அருந்த வப்பெண் பெயரு மாமே. ....621
கெளட மெனும்பெய ரொருதே சத்துடன்
ஓருகொடிப் பெயரு முரைக்கப் பெறுமே. ....622
ககர ஔகார வருக்கம் முற்றும்.
------
ககர வருக்கம் முற்றும்.
3வது சகர வருக்கத் தொகுதி
சகர வருக்கம்
சம்பு வெனும்பெயர் சங்கரன் றிருமால்
நான்முக னாவன ரியுமோர் புல்லுஞ்
சூரியன் பெயருஞ் சொல்லப் பெறுமே. ....623
சத்தி யெனும்பெயர் வேலும் பெலமும்
உமையுந் துவசமுங் குடைமுற் காரமும். ....624
சமனெனும் பெயரே யியமனு நடுவுமாம். ....625
சதியெனும் பெயரே தாள வொத்துடன்
உரோகிணிப் பெயருங் கற்பாட் டியுமாம். ....626
சந்தி யெனும்பெய ரந்திப் பொழுது
மூங்கிலுஞ் சதுக்கமு மொழியப் பெறுமே. ....627
சரியெனும் பெயர்கை வளையும் வழியுமாம். ....628
சரண மெனும்பெயர் தாளுங் கரமுஞ்
சார்பு மெனவே சாற்றுவர் புலவர். ....629
சடையெனும் பெயர்கோ டீரமும் வேருமாம். ....630
சவியெனும் பெயரே யழகும் பெலமும்
மணிக்கோவை வடமு மொளியும் வழங்கும். ....631
சரமெனும் பெயரே தனிமணி வடமும்
அம்புஞ் சமரும் கொறுக்கச் சியுமாம். ....632
சலாகை யெனும்பெயர் சவளப் பெயரோடு
நாரா சமுநன் மணியு நவின்றனர். ....633
சகுனி யெனும்பெயர் நிமித்தம் பார்ப்பவனும்
பறவையின் பொதுவும் பகரப் பெறுமே. ....634
சத்திர மெனும்பெயர் அன்ன சாலையும்
கைவிடாப் படையுங் கவின்பெறு குடையும்
குடையின் திரும்பும் வேள்வியும் கூறுவர். ....635
சடமெனும் பெயரே பொய்யுஞ் சரீரமும்
கொடுமையு மெனவே கூறப் பெறுமே. ....636
சகுந்த மெனும்பெயர் புள்ளின் பொதுவும்
கழுகு மெனவே கருதுவர் புலவர். ....637
சகுன மெனும்பெயர் புட்பொதுப் பெயரும்
நிமித்தமும் கிழங்கு நிகழ்த்தப் பெறுமே. ....638
சடில மெனும்பெயர் சடையு நெருக்கமும் ....639
சக்கிரி யெனும்பெயர் தராபதி யரவுடன்
மிக்கசீர் முகுந்தன் செக்கான் குயவனாம். ....640
சசியெனும் பெயரே மதியும் கற்பூரமும்
இந்திரன் மனைவியும் வெண்மையு மியம்புவர். ....641
சங்க மெனும்பெய ரன்புஞ் சபையும்
வென்றியுங் கவிஞரு மோரெண் பெயரும்
கணைக்கால் சங்கின் பெயருங் கருதுவர். ....642
சண்டனெனும்பெயர் சூரியன் யமனுடன்
நபுஞ்சகன் பெயரு நவிலப் பெறுமே. ....643
சக்கர மெனும்பெயர் சுதரி சனமும்
சக்கர யூகமும் சகதலப் பெயரும்
தேரி னுருளும் பெருமையும் பிறப்பும்
நேமிப் புள்ளுங் கடலும் சகடமும்
வட்டமுந் திகிரி வரையுஞ் செப்புவர். ....644
சத்திய மெனும்பெயர் சபதமு மெய்யுமாம். ....645
சந்த மெனும்பெயர் நிறமும பிராமமுஞ்
சாந்தமு மினம்பெறு கவிதையுஞ் சாற்றுவர். ....646
சலமெனும் பெயரே பொய்யுங் கோபமும்
புள்ளின் பெயரு நடுக்கமும் புகலுவர். ....647
சயமெனும் பெயரே சருக்கரை வென்றியாம். ....648
சரப மெனும்பெயர் சிம்புள்வரை யாடுமாம். ....649
சராவ மெனும்பெயர் விளக்கின் தகளியும்
சலாகையு மெனவே சாற்றினர் புலவர். ....650
சமழ்த்த லெனும்பெய ரழித்தலு நாணமும் ....651
சயிந்தவ மெனும்பெயர் கலையும் குதிரையும்
இந்துப் பின்பெயர் தானு மியம்புவர். ....652
சகமெனும் பெயரே புள்ளின் சிறகும்
இலையுமோ ரிலக்கமு மியம்பப் பெறுமே. ....653
சகர அகர வருக்கம் முற்றும்.சகர ஆகார வருக்கம்
சான்றா ரெனும்பெயர் சார்புளெனும் பெயரும்
அருக்கனு மிருக சீரிடமு மானே. ....654
சாதக மெனும்பெயர் பூதமுஞ் சனனமும்
வானம் பாடிப் புள்ளும் வழங்குவர். ....655
சாமி யெனும்பெயர் தலைவனு மரசனும்
குரவனும் வியாழமுங் கூறுவர் புலவர். ....656
சாம மெனும்பெயர் பச்சை நிறமும்
யாமமு மிரவுமோர் வேதமு மியம்புவர். ....657
சானு வெனும்பெயர் மலையின் பக்கமும்
மலையு முழந்தாட் பெயரும் வழங்கும். ....658
சார லெனும்பெயர் மலையின் பக்கமும்
மருத யாழ்த்திறத் தோரோசையும் வழங்கும். ....659
சானகி யெனும்பெயர் சீதையு மூங்கிலும். ....660
சாம்ப லெனப்பெயர் பழம்பூவும் சாம்பரும்
முற்றுத லெனவு மொழியப்பெறுமே. ....661
சால மெனும்பெயர் ஆச்சார மரமும்
மதிலுஞ் சாளரப் பெயரும் வலையுமாம். ....662
சாலேக மென்னும் பெயர்பூ வரும்பும்
வாதா யனமும் வகுக்கப் பெறுமே. ....663
சாதி யெனும்பெயர் பிரம்புந் தேறலும்
தேனும் தேக்குஞ் சிறுசண் பகமும்
சாதியின் விகற்பமுஞ் சாற்றப் பெறுமே. ....664
சாறெனும் பெயரே தாழமரக் குலையும்
வேரியு முயர்திரு விழாவுமாமே. ....665
சாலி யெனும்பெயர் நெற்பொதுப் பெயரும்
வேரியு மருந்ததிப் பெயரும் விளம்புவர். ....666
சார்ங்க மெனும்பெயர் விற்பொதுப் பெயரும்
மாயோன் சிலையும் வகுத்து ரைத்தனரே. ...667
சாப மெனும்பெயர் சபித்தலும் சிலையுமாம். ...668
சாக மெனும்பெயர் சாகினி விகற்பமும்
தேனீப் பெயரும் வெள்ளாடுந் தேக்குமாம். ...669
சாகினி யெனும்பெயர் தழைத்திடு சேம்பொடு
கீரையின் விகற்பமும் கிளத்தப் பெறுமே. ...670
சாரங்க மெனும்பெயர் மானும் வண்டுமாம். ...671
சாரிகை யெனும்பெயர் சூறையும் சுங்கமும்
நாகண வாய்ப்புட் பெயரு நவிலுவர். ...672
சாய லெனப்பெயர் மெய்ப்பாட் டினழகும்
மேன்மையு மெனவே விளம்பப் பெறுமே. ....673
சாகர மெனும்பெயர் துயிலொழிந் திடுதலும்
ஏழ்கடற் பெயரும் இயம்புவர் புலவர். ....674
சாலை யெனும்பெயர் குதிரைப் பந்தியும்
அறப்புற மடமும் அரசர்தங் கோயிலும்
வழிநடைச் சாலையும் வழங்கப் பெறுமே. ....675
சால்பெனும் பெயர்சான் றாண்மையு மியல்புமாம். ....676
சாந்த மெனும்பெயர் சந்தனமும் பொறுமையும் ....677
சாம்பு வெனும்பெயர் பறையொடு பொன்னுமாம். ....678
சார்பெனும் பெயரே சார்தலு மிடமுமாம். ....679
சாத்த னெனும்பெயர் அய்யனும் அருகனும்
புத்தனு மெனவே புகலுவர் புலவர். ....680
சாத மெனும்பெயர் மெய்மையும் பூதமும். ....681
சாலெனும் பெயரே யுழவின் சாலும்
நீர்பெய் பசானமு நிகழ்த்துவர் புலவர். ....682
சகர ஆகார வருக்கம் முற்றும்.சகர இகர வருக்கம்
சிவையெனும் பெயரே நவையிலா வுமையுடன்
கொல்ல னுலையும் பெரும் நரியுமாம். ....683
சிதமெனும் பெயரே செயமுறப் படுதலும்
ஞானமும் வெளுப்பும் வான் மீனுமாம். ....684
சிந்தெனும் பெயரே நீருங் கடலும்
நதியுங் குறளும் யாப்பின் முச்சீரும்
ஓர்தேச முமென வுரைத்தனர் புலவர். ....685
சிதரெனும் பெயரே சீலைத் துணியுந்
துவலையு முறியும் வண்டுஞ் சொல்லுவர். ....686
சிமைய மெனும்பெயர் சிகரமுங் குடுமியும். ....687
சிலையெனும் பெயரே மலையும் பாறையும்
வில்லு மெனவே விளம்புவர் புலவர். ....688
சினையெனும் பெயரே செழுமரக் கோடுங்
கருவின் பெயரு முட்டையு முறுப்புமாம். ....689
சிலீமுக மெனும்பெயர் அம்பும் வண்டும்
முலைக்கணின் பெயரு மொழியப் பெறுமே. ....690
சிமிலி யெனும்பெயர் உறியுங் கீழ்வீடும்
குடுமியு மெனவே கூறுவர் புலவர். ....691
சிக்க மெனும்பெயர் சீப்புங் குடுமியும்
உறியு மெனவே யுரைத்தனர் புலவர். ....692
சிந்துர மெனும்பெயர் திலகமும் வெட்சியும்
செந்நிறப் பொருள்களுஞ் செங்குடைப் பெயரும்
மதகரிப் பெயர்புளி மாவும் வழங்கும். ....693
சிரக மெனும்பெயர் கரகமும் வட்டிலுஞ்
சென்னியிற் கோடுஞ் செப்பப் பெறுமே. ....694
சிதலை யெனும்பெயர் செல்லொடு துணியுமாம். ....695
சிகண்டி யெனும்பெயர் பாலையாழ்த் திறத்தின்
ஓசையும் அலியு மயிலு மாமே. ....696
சில்லி யெனப்பெயர் சிள்வீடும் வட்டமும்
தேருரு ளுஞ்சிறு கீரையும் செப்புவர். ....697
சிறை யெனும்பெயரே புள்ளி னிறகும்
காவலு மோர்பா லிடமும் கரையுமாம். ....698
சிவப்பெனும் பெயரே செம்மையும் சினமும்
சினக்குறிப் புமெனச் செப்புவர் புலவர். ....699
சில்லை யெனும்பெயர் பகண்டைப் புள்ளும்
சிள்வீடுங் கிலுகிலுப் பையுஞ் செப்புவர். ....700
சிகரி யெனும்பெயர் மலையு மெலியும்
கருநா ரையுங் கோபுரமுங் கருதுவர். ....701
சித்த மெனும்பெயர் திடமும் உளமுமாம். ....702
சித்திர னெனும்பெயர் சித்திர காரனுந்
தச்சனு மெனவே சாற்றப் பெறுமே. ....703
சிகியெனும் பெயரே மயிலும் கேதுவும்
நெருப்பு நூபுரமு நிகழ்த்தப் பெறுமே. ....704
சித்திர மெனும்பெயர் சித்திர கவிதையும்
மெய்போற் பொய்யை யுரைத்தலு மழகும்
துணித்த பலபொரு ளுமதி சயமுஞ்
செய்சொல் வடிவுங் காடுமா மணக்குமாம். ....705
சித்திர பானு வெனும்பெயர் நெருப்புஞ்
சூரியன் பெயரு மோராண்டுஞ் சொல்லுவர். ....706
சிலம்பெனும் பெயரே மலையு மோசையும்
பரிபுரப் பெயரும் பகர்ந்தனர் புலவர். ....707
சிகர மெனும்பெயர் திரையுந் திவலையு
மலையி னுச்சியும் சென்னியுங்
கவரி மாவின் பெயருங் கருதுவர். ....708
சிகழிகை யெனும்பெயர் மயிர்முடிப் பெயரும்
மாலையின் பெயரும் வழங்கப் பெறுமே. ....709
சிதட னெனும்பெயர் குருடனு மூடனும். ....710
சிரமெனும் பெயர்நெடுங் காலமுஞ் சென்னியும். ....711
சிவமெனும் பெயரே முத்தியும் பெருமையும்
குறுணியின் பெயருங் கூவப் பெறுமே. ....712
சித்தெனும் பெயரே செயமும் ஞானமுமாம். ....713
சகர இகர வருக்கம் முற்றும்.சகர ஈகார வருக்கம்
சீதம் எனும்பெயர் மேகமும் பாலும்
குளிர்ச்சியும் புனலுங் கூறுவர் புலவர். ....714
சீவ னெனும்பெயர் வியாழமு முயிரும். ....715
சீரு ளெனும்பெயர் செல்வமுஞ் செம்பும்
ஈயமு மெனவே இயம்பப் பெறுமே. ....716
சீவனி யெனும்பெயர் செவ்வழி யாழ்த்திறத்
தோரிசைப் பெயரு முயிர்தரு மருந்துமாம். ....717
சீரெனும் பெயரே செல்வமுங் கீர்த்தியும்
பாரமு மழகும் பகர்ந்திடு சீர்மையும்
தாள வொத்துந் தடியுங் காத்தண்டுஞ்
சொற்சீர் எனவுஞ் சொல்லுவர் புலவர். ....718
சீப்பெனும் பெயரே கதவின் றாழும்
மயிர்வார் சீப்பும் வழங்கப் பெறுமே. ....719
சீகர மெனும்பெயர் திரையுந் திவலையும்
கவரி மாவுங் கருதுவர் புலவர். ....720
சீல மெனும்பெய ரொழுக்கமுங் குணமும்
தருமமு மெனவே சாற்றுவர் புலவர். ....721
சீதை யெனும்பெயர் உழுபடைச் சாலும்
இராமன் றேவியு மியம்பப் பெறுமே. ....722
சகர ஈகார வருக்கம் முற்றும்.சகர உகர வருக்கம்
சுந்தரி யெனும்பெயர் உமையுந் துர்க்கையும்
சூரனு மெனவே சொல்லுவர் புலவர். ....723
சுக்கை யெனும்பெ யர்வான் மீனொடு
மாலையு மெனவே வகுத்தனர் புலவர். ....724
சுசியெனும் பெயரே கோடைக் காலமும்
சுத்தமுங் கனலின் பெயருஞ் சொல்லுவர். ....725
சுதையெனும் பெயரே சுண்ணச் சாந்தும்
மறிகட லமுதமும் புதல்வியும் வழங்குவர். ....726
சுடரெனும் பெயரே சூரியன் மதிகனல்
விளக்கு மொளியும் விளம்பப் பெறுமே. ....727
சுவவெனும் பெயர்சுவர்க் கத்தின் பெயரும்
புள்ளின் மூக்குஞ் சுண்டனும் புகலுவர். ....728
சுண்ட னெனும்பெயர் சூரனுஞ் சதையமும். ....729
சும்மை யெனும்பெயர் ஊர்ப்பொதுப் பெயரும்
நென்முதற் போரும் நிறைந்த நீர்நாடுஞ்
சுமையோடு சத்த வொலியுஞ் சொல்லுவர். ....730
சுவலெனும் பெயரே தோளின் மேலும்
மேடுங் குரகதக் குசையின் மயிரும்
பிடர்த்தலைப் பெயரும் பேசப் பெறுமே. ....731
சுருங்கை யெனும்பெயர் கரந்த கற்படையும்
நுழைவாய் தலுமென நுவலப் பெறுமே. ....732
சுரிய லெனும்பெயர் ஆண்பான் மயிரும்
பெண்பால் மயிரும் பேசுவர் புலவர். ....733
சுரையெனும் பெயரே யுட்டுளை வடிவும்
ஆவின் முலையும் நறவும் அலாபுமாம். ....734
சுடிகை யெனும்பெயர் சுட்டியு மகுடமும்
உச்சியு மெனவே மொழியப் பெறுமே. ....735
சுரிகை யெனும்பெய ருடைவா ளுடனே
மெய்புகு கருவியும் விளம்புவர் புலவர். ....736
சுகமெனும் பெயரே யின்பமுங் கிளியுமாம். ....737
சுரர்குரு வெனும்பெயர் தேவர் மந்திரியும்
இந்திரன் பெயரும் இயம்பப் பெறுமே. ....738
சுவேத மெனும்பெயர் வெண்மையும் வெயர்வுமாம். ....739
சுவாமி யெனும்பெயர் முருகனும் வியாழமும்
குருவுந் தலைவனுங் கூறுவர் புலவர். ....740
சுருதி யெனும்பெயர் வேதமும் ஒலியுமாம். ....741
சுரமெனும் பெயரே வழியுங் காடும்
அருநெறிப் பெயரும் பாலை நிலமுமாம். ....742
சகர உகர வருக்கம் முற்றும்.சகர ஊகார வருக்கம்
சூர னெனும்பெயர் சூரியன் பெயரும்
தீரனு மருகனு நாயையுஞ் செப்புவர். ....743
சூரெனும் பெயரே தெய்வமு நோயும்
வஞ்சமு மஞ்சா மையுமே வழங்கும். ....744
சூழி யெனும்பெயர் கரிமுக படாமும்
வாவியு மெனவே வகுத்துரைத் தனரே. ....745
சூதக மெனும்பெயர் பிறப்பின் பெயரும்
ஆசூ சப்பெயர் தானு மாமே. ....746
சூத்திர மெனும்பெயர் நூற்பா வகவலும்
நூற்கும் வெண்ணூலும் நுவல்பல் பொறியுமாம். ....747
சூத னெனும்பெயர் சூதாடு பவனும்
சூது சேருளத்தனும் தேர்ப்பா கனுமாம். ....748
சூத மெனும்பெயர் பரதா ரத்தொடு
மாமர மெனவும் வழங்குவர் புலவர். ....749
சூழ லனும்பெயர் விசாரமு மிடமுமாம். ....750
சகா ஊகார வருக்கம் முற்றும்.சகர எகர வருக்கம்
செவ்வி யெனும்பெயர் பொழுதும் பருவமும். ....751
செல்லெனும் பெயரே யிடியு மேகமும்
முன்னிலை யேவலுஞ் சிதலு மொழிந்தனர். ....752
செந்தெனும் பெயரே சீவனுஞ் சிவப்பும்
ஓரியு மணுவும் நரகத்தி லொன்றுமாம். ....753
செப்ப மெனும்பெயர் நடுநிலைப் பெயரும்
தெருவுஞ் செவ்வையு நெஞ்சமுஞ் செப்புவர். ....754
செம்புல மெனும்பெயர் வன்பாலை நிலமும்
பொருக ளமுமெனப் புகன்றனர் புலவர். ....755
செய்ய லெனும்பெயர் சேறு மொழுக்கமும்
காவலு மெனவே கருதப் பெறுமே. ....756
செம்ம லெனும்பெயர் சீவனும் செயினனும்
தலைவனுஞ் சிறுவனும் வீரனும் பெருமையும்
பழம்பூ வுமெனப் பகர்ந்தனர் புலவர். ....757
செவிலி யெனும்பெயர் முன்பிறந் தாளும்
வளர்ந்த கைத்தாயும் வகுத்தனர் புலவர். ....758
செழுமை யெனும்பெயர் வளமையும் கொழுப்பும்
வனப்பு மாட்சிமையும் வழங்குவர் புலவர். ....759
செடியெனும் பெயரே யொளியுஞ் செறிவும்
பாவமுங் குணமின் மைப்பெயரும் பகர்ந்தனர். ....760
செத்தெனும் பெயரே செம்மையு முவமையும்
அசைச்சொலு முறுப்புங் கருத்துஞ் சந்தேகமும். ....761
செட்டி யெனும்பெயர் முருகன் பெயரும்
வணிகனு மெனவே வழங்கப் பெறுமே. ....762
செச்சை யெனும்பெயர் வெள்ளாட் டேறொடு
வெட்சி செஞ்சாத்தும் விளம்புவர் புலவர். ....763
செவியெனும் பெயரே கேள்வியுங் காதுமாம். ....764
செம்மை யெனும்பெயர் சிவப்புஞ் செவ்வையும். ....765
செப்பெணும் பெயர்பணிச் செப்புஞ் செப்பலும். ....766
செய்யெனும் பெயரே செய்தொழிற் பெயரும்
ஒழுக்கமு மெனவே யுரைக்கப் பெறுமே. ....767
செயிரெனும் பெயரே சினமும் குற்றமும். ....768
சகர எகர வருக்கம் முற்றும்.சகர ஏகார வருக்கம்
சேயெனும் பெயரே சிவப்புஞ் செவ்வேளும்
செவ்வாய்க் கிரகமும் சிறுவனு நீளமும்
தூரமு மிளமையுஞ் சொல்லுவர் புலவர். ....769
சேடி யெனும்பெயர் விஞ்சையர் நகரமும்
சிலதியு மெனவே செப்பப் பெறுமே. ....770
சேக்கை யெனும்பெயர் முலையும் சயனமும்
விலங்கு துயிலிடமும் விளம்புவர் புலவர். ....771
சேடனெ னும்பெயர் அனந்தனும் பாங்கனும்
இளையோன் பெயருட னடிமையு மியம்புவர். ....772
சேணுனும் பெயரே யகலமு நீளமும்
உயரமு மெனவே யுரைக்கப் பெறுமே. ....773
சேடெனும் பெயரே சிறப்பு நன்மையும்
அழகுந் திரட்சியு மிளமையு மாமே. ....774
சேதக மெனும்பெயர் சேறு செந்நிறமுமாம். ....775
சேவ லெனும்பெயர் புள்ளி னாண்பாலும்
காவலுஞ் சேறுஞ் சாவலும் கருதுவர். ....776
சேவக மெனும்பெயர் யானை துயிலிடமும்
வீரமு மெனவே விளம்புவர் புலவர். ....777
சேதார மெனப்பெயர் தேமாவும் வெட்சியும்
பொன்னின் பெயரும் புகன்றனர் புலவர். ....778
சகர ஏகார வருக்கம் முற்றும்.
சகர ஐகார வருக்கம்
சைவ மெனும்பெயர் புராணத்தி லொன்றும்
சிவசம யத்தின் விகற்பமும் செப்புவர். ....779
சகர ஐகார வருக்கம் முற்றும்.சகர ஒகர வருக்கம்
சொல்லெனும் பெயரே கீர்த்தியும் வார்த்தையும்
நெல்லும் பல்கலைப் பெயரு நிகழ்த்துவர். ....780
சொர்க்க மெனும்பெயர் சுவர்க்கமு முலையுமாம். ....781
சகர ஒகர வருக்கம் முற்றும்.சகர ஓகார வருக்கம்
சோதி யெனும்பெய ரொருநாள் மீனும்
அருகனும் அரனும் ஆதித்தனும் விளக்கும்
தாரா கணமும் விளம்புவர் புலவர். ....782
சகர ஓகார வருக்கம் முற்றும்.சகர ஒளகார வருக்கம்
செளரி யெனும்பெயர் சளியுங் கன்னனும்
இமயனுங் கண்ணனும் யமுனை நதியுமாம். ....783
செளரிய மெனும்பெயர் வீரமும் களவுமாம் ....784
சகர ஒளகார வருக்கம் முற்றும்.
சகர வருக்கத் தொகுதி முற்றும்.
4 வது ஞகர வருக்கத் தொகுதி
ஞகர அகர வருக்கம்
ஞமலி யெனும்பெயர் நாயும் மயிலும்
கள்ளு மெனவே கருதப் பெறுமே. ....785
ஞகர அகர வருக்கம் முற்றும்.ஞகர ஆகார வருக்கம்
ஞாளி யெனும்பெயர் நறவு நாயுமாம். ....786
ஞாட்பெனும் பெயரே பாரமும் கூட்டமும்
செருவு மெனவே செப்புவர் புலவர். ....787
ஞான மெனும்பெயர் கல்வியு மறிவுந்
தத்துவ நூலுஞ் சாற்றப் பெறுமே. ....788
ஞாங்க ரெனும்பெயர் பக்கமு மேலும்
வேலு மெனவே விளம்பப் பெறுமே. ....789
ஞகர ஆகார வருக்கம் முற்றும்.ஞகர எகர வருக்கம்
ஞெள்ள லெனும்பெயர் தெருவு மேன்மையும்
பள்ளமு மெனவே பகர்ந்தனர் புலவர். ....790
ஞெரே லெனும்பெயர் விரைவு மொலியுமாம். ....791
ஞெமிர்த லெனும்பெயர் முறிதலும் பரத்தலும். ....792
ஞெகிழி யெனும்பெயர் நெருப்புறு விறகும்
தீயுடன் அனற்பொறி சிலம்பு மாமே. ....793
ஞகர எகர வருக்கம் முற்றும்.ஞகர ஒகர வருக்கம்
ஞொள்க லெனும்பெயர் நொய்படு வனவும்
இளைத்தலு மச்சக் குறிப்போடு சோம்புமாம். ....794
ஞகர ஒகர வருக்கம் முற்றும்.
ஞகர வருக்கத் தொகுதி முற்றும்.
5 வது தகர வருக்கத் தொகுதி
தகர அகர வருக்கம்தரணி யெனும்பெயர் தருகதிர் இரவியும்
நிலமுஞ் சயிலமு நிகழ்த்துவர் புலவர். ....795
தமமெனும் பெயரே ராகுவு மிருளுமாம். ....796
தண்டெனும் பெயரே தடியு மிதுனமுஞ்
சிவிகையின் பெயரும் செருமிகு தானையும்
வரம்பும் வீணையுங் குழாயும் வழங்குவர். ....797
தழலெனும் பெயரே கிளிகடி கருவியும்
நெருப்பு மெனவே நிகழ்த்துவர் புலவர். ....798
தண்ணடை யெனும்பெயர் மருத நிலவூரும்
நாடு மெனவே நவிலப் பெறுமே. ....799
தண்ட மெனும்பெயர் தண்டா யுதமும்
சேனையும் யானை செல்வழியுந் தெண்டித்தலும். ....800
தடமெனும் பெயரே மலையும் பொய்கையும்
பெருமையு மகலமு மலையடி வழியும்
வளைவுங் குளக்கரைப் பெயரும் வழங்குவர். ....801
தடியெனும் பெயரே தனுவு முலக்கையும்
தசையு முடும்புந் தண்டா யுதமும்
வயலொடு மின்னும் வகுத்தனர் புலவர். ....802
தனஞ்செய னெனும்பெயர் சவ்விய சாசியும்
மெய்யின் மாருத விகற்பத்தி னொன்றும்
நெருப்பு மெனவே நிகழ்த்துவர் புலவர். ....803
தளிம மெனும்பெயர் சயனமு மெத்தையும்
அழகின் பெயரு மாகு மென்ப. ....804
தத்தை யெனும்பெயர் முன்பிறந் தாளும்
கிளியு மெனவே கிளத்துவர் புலவர். ....805
தனுவெனும் பெயரே சடமும் சிறுமையும்
வில்லின் பெயரு மோரிராசியும் விளம்புவர். ....806
தளையெனும் பெயரே தமிழ்நூற் பாதமு
மலர்முகை முறுக்கு மாண்பான் மயிரும்
தொடரொடு சிலம்புந் தொடையலுஞ் சொல்லுவர். ....807
தனமெனும் பெயர்சந் தனமும் பொன்னும்
முத்திறப் பொருளு முலையுமான் கன்றுமாம். ....808
தவிசெனும் பெயரே மெத்தையுந் தடுக்கும்
பலகையும் பீடமும் பகர்ந்தனர் புலவர். ....809
தளமெனும் பெயரே தாழியும் சாந்தமும்
படையும் பூவிதழ்ப் பெயரும் பகர்ந்தனர். ....810
தண்ண மெனும்பெயர் தரித்தடா மழுவும்
ஒருகட் பறையு முரைக்கப் பெறுமே. ....811
தட்டை யெனும்பெயர் கரடிகைப் பறையும்
கிளிகடி குருவியுந் தினைத்தாளு முண்டமும்
மூங்கிலு மெனவே மொழிந்தனர் புலவர். ....812
தம்ப மெனும்பெயர் மெய்புகு கருவியும்
கம்பமும் பற்றுக் கோடுங் கருதுவர். ....813
தண்மை யெனும்பெயர் தாழ்வும் எளிமையும்
குளிர்ச்சியும் புலவோர் கூறப்பெறுமே. ....814
தகடெனும் பெயரே ஐமை வடிவும்
இலையு மெனவே யியம்புவர் புலவர். ....815
தராவெனும் பெயரே சங்கும் மதுகமும். ....816
தரும ராச னெனும்பெயர் யமனும்
அருகனும் புத்தனும் பாண்டு மைந்தனுமாம். ....817
தட்டெனும் பெயரே நடுவட் டேரும்
திரிகையும் பரிசையும் பகுத்தலும் தடுத்தலும்
வட்டமும் பூத்தட்டு முதலவும் வழங்கும். ....818
தன்மை யெனும்பெயர் தன்மை யினிடமும்
இயல்பு மெனவே இயம்புவர் புலவர். ....819
தளியெனும் பெயரே துளியும் கோயிலும்
தளநடத் தியசமர்த் தலமும் புகலுவர். ....820
தகையெனும் பெயரே பெருமையு மழகும்
அன்பும் பண்பு மியல்பு மாமே. ....821
தபுத லெனும்பெயர் சாதலும் கேடுமாம். ....822
தமிழெனும் பெயரே தமிழின் விகற்பமும்
நீர்மையு மினிமையு நிகழ்த்தினர் புலவர். ....823
தன்ன மெனும்பெயர் சிறுமையான் கன்றுமாம். ....824
தபன னெனும்பெயர் தழலு மருக்கனும். ....825
தலமெனும் பெயரே பச்சை நிறமும்
இலையும் புவியும் இயம்புவர் புலவர். ....826
தசும்பெனும் பெயரே குடமு மிடாவுமாம். ....827
தட்ட லென்பெய ரொத்தறுத்த லினுடனே
தடுத்தலின் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....828
தலையெனும் பெயரே இடமும் சென்னியும்
விசும்பு முதன்மையும் விளம்பப் பெறுமே. ....829
தவவெனும் பெயரே மிகுதியும் குறைவுமாம். ....830
தந்தெனும் பெயரே சாத்திரப் பெயரும்
நூலின் பெயரு நுவலப் பெறுமே. ....831
தகைமை யெனும்பெயர் அழகும் பெருமையும்
இயல்பு மெனவே யியம்பப் பெறுமே. ....832
தனியெனும் பெயரொப் பின்மைப் பெயருந்
தனிமையின் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....833
தன்னை யெனும்பெயர் முன்பிறந் தானும்
அன்னையும் செவிலியு மாகு மென்ப. ....834
தகர அகர வருக்கம் முற்றும்.தகர ஆகார வருக்கம்
தாணு வெனும்பெயர் சங்கரன் பெயரும்
தூணு மலையு நிலையுஞ் சொல்லிய
ஆவு ரிஞ்சுதறிப் பெயரு மாவே. ....835
தாதி யெனும்பெயர் அடிமையும் பரணியும். ....836
தால மெனும்பெயர் கூத்தற் கமுகொடு
ஞாலமும் பனையு முண்கலமு நாவுமாம். ....837
தாரை யெனும்பெயர் வழியும் விழியும்
ஒழுங்குஞ் சின்னமு முரைக்கப் பெறுமே. ....838
தாம மெனும்பெயர் தாரும் பூவும்
மணிவடப் பெயரு நகரமுங் கயிறும்
ஒளியுங் கொன்றையு மிருப்பிடப் பொதுவுமாம். ....839
தார மெனும்பெயர் தராவும் நாவும்
வல்லிசைப் பெயரும் வாழ்க்கைத் துணைவியும்
அரும்பண்டப் பெயரும் யாழ்நரம்பி லொன்றும்
வெள்ளியு மெனவே விளம்பப் பெறுமே. ....840
தானை யெனும்பெயர் சேனையுந் துகிலும்
ஆயுதப் பொதுவு மாகு மென்ப. ....841
தாரெனும் பெயர்பூந் தாமமு மலரும்
மாவினுக் கணியுங் கிண்கிணி மாலையும்
ஒழுங்கோடு தூசிப் படையையு முரைப்பர். ....842
தாழெனும் பெயரே கதவிடு தாழும்
பதமு முயற்சியும் பகரப் பெறுமே. ....843
தாறுனும் பெயர்மரக் குலையு மளவும்
விற்குதைப் பெயரு முட்கோலும் விளம்புவர். ....844
தாதெனும் பெயரே யெழுவகைத் தாதும்
பொன்முத லேழும் புவிமுத லைந்தும்
காவிக் கல்லுங் கருதப் பெறுமே. ....845
தாண்டவ மெனும்பெயர் தாவலும் கூத்துமாம். ....846
தான மெனுபெயர் தருமக் கொடையும்
பல்வகை யுதவியு மதமு நீராடலுஞ்
சுவர்க்கமும் புலவோர் சொல்லப் பெறுமே. ....847
தாழை யெனும்பெயர் நாளி கேரமும்
கைதையின் பெயருங் கருதப் பெறுமே. ....848
தாவெனும் பெயரே பகையும் கெடுதலும்
பெலமும் வருத்தமும் தாண்டுதற் பெயருமாம். ....849
தாம்பெனும் பெயரே தாமணிக் கயிறுமாம். ....850
தாபர மெனும்பெயர் மரமுடன் மலைபோல்
நிற்பன யாவையு முடம்பு நிகழ்த்துவர். ....851
தாசி யெனும்பெய ரியம னாளும்
தொழும்பு செய்பெண்ணின் பெயருஞ் சொல்வர். ....852
தாடெனும் பெயரே தலைமையும் வலியுமாம். ....853
தாளி யெனும்பெயர் தாளிப் புதலும்
பனையு மெனவே பகர்ந்தனர் புலவர். ....854
தகர ஆகார வருக்கம் முற்றும்.தகர இகர வருக்கம்
திங்க ளெனும்பெயர் மதியு மாதமுமாம். ....855
திகையெனும் பெயரே திசையுஞ் சுணங்குமாம். ....856
திதியெனும் பெயர்நிலை பேறும் பக்கமும்
காத்தலு மெனவே கருதுவர் புலவர். ....857
திணையெனும் பெயரே குலமும் ஒழுக்கமும்
ஐந்திணைப் பெயரு மாகு மென்ப. ....858
திட்டை யெனும்பெயர் திண்ணையு முரலும்
மேடு மெனவே விளம்புவர் புலவர். ....859
திகிரி யெனும்பெயர் தேருந் தேராழியும்
மலையு மூங்கிலும் வட்ட வடிவும்
சக்கரமு நேமிப் புள்ளும் சாற்றுவர். ....860
திலமெனும் பெயரே யெள்ளு மஞ்சாடியும். ....861
திருவெனும் பெயரே சிறப்பும் செல்வமும்
கமலையு மெனவே கருதப் பெறுமே. ....862
திரிதல் எனும்பெய ருலாவுங் கெடலுமாம். ....863
திளைத் தலெனுபெய ரனுபவப் பெயரும்
நிறைவின் பெயரும் நெருங்குதற் பெயருமாம். ....864
தகர இகர வருக்கம் முற்றும்.
தகர ஈகார வருக்கம்
தீயெனும் பெயரே தீமையும் கனலும்
நரகமும் எனவே நவிலப் பெறுமே. ....865
தீவினை எனும்பெயர் பாவமும் கொடுமையும் ....866
தீர்த்த மெனும்பெயர் திருவிழா வுடனே
புண்ணிய தீர்த்தப் பெயரும் புகலுவர். ....867
தீர்த்த னெனும்பெயர் தேவனும் குருவுமாம். ....868
தகர ஈகார வருக்கம் முற்றும்.தகர உகர வருக்கம்
துணங்கற லென்னும் பெயர்திரு விழாவும்
இருளு மெனவே யியம்புவர் புலவர். ....869
துடியெனும் பெயரே கால நுட்பமும்
சிற்றேல முமேழ் மாதர் நிருத்தமும்
சிறுபறை யுங்கூ தாளமும் செப்புவர். ....870
துத்தி யெனும்பெயர் முலையின் சுணங்கும்
பாம்பின் படத்தின் பொறியுமோர் புதலுமாம். ....871
துண்ட மெனும்பெயர் சாரைப் பாம்பும்
கண்டமு முகமு மூக்குங் கருதவர். ....872
துருத்தி யெனும்பெயர் ஆற்றிடைக் குறையும்
சருமமு மெனவே சாற்றுவர் புலவர். ....873
துகளெனும் பெயர்நுண் பொடியுங் குற்றமும். ....874
துவக்கெனும் பெயரே தோலும் பிணக்குமாம். ....875
துத்த மெனும்பெயர் யாழி னரம்பும்
எழுவகை யினோர்வி கற்பமும் வயிறும்
பாலுமோர் மருந்தும் பகரப் பெறுமே. ....876
துப்பெனும் பெயரே துணைக்கா ரணமும்
அரக்கு மாயுதமும் பெலமும் பவளமும்
நெய்யும் பொலிவும் அனுபவப் பெயருமாம். ....877
துரோண மெனும்பெயர் தும்பையுஞ் சிம்புளும்
பதக்கொடு காகமுஞ் சிலையும் பகருவர். ....878
துணியெனும் பெயரே துண்டமுஞ் சீரையும்
சோதிநாட் பெயரும் சொல்லுவர் புலவர். ....879
தும்பி யெனும்பெயர் சுரையும் யானையும்
வண்டு மதுவும் வழங்கப் பெறுமே. ....880
துளியெனும் பெயர்மழைத் துளிபெண் ணாமையாம். ....881
துஞ்ச லெனப்பெயர் நிலைபேறு முறக்கமும்
மரணமு மெனவே வழங்கப் பெறுமே. ....882
துணையெனும் பெயரே யுழவும் சகாயமும்
உவமையு முவமையும் உரைத்தனர் புலவர். ....883
தும்பெனும் பெயரே தோடுஞ் சிம்புளும். ....884
துவையெனும் பெயர்பிண் ணாக்கும் இறைச்சியும்
பருகுவ புளிங்கறிப் பெயரும் பகருவர். ....885
துனியெனும் பெயரே புலவி நீடுதலும்
கோபமும் வரியுங் கூறுவர் புலவர். ....886
துன்ன லெனும்பெயர் குறுகலுஞ் செறிவுமாம். ....887
துணங்கை யெனும்பெயர் திருவிழா வுடனே
மெய்க்கூத் தெனவும் விளம்புவர் புலவர். ....888
துளும்ப லெனும்பெய ரலைதலுந் திமிறலும். ....889
துணித லெனும்பெயர் துணிபடற் பெயரும்
தெளிவு மெனவே செப்பப் பெறுமே. ....890
தகர உகர வருக்கம் முற்றும்.தகர ஊகார வருக்கம்
தூம்பெனும் பெயரே யுட்டுளை வடிவும்
நீர்நுழை யிடமு மரக்காலு மூங்கிலும். ....891
தூசெனும் பெயரே தூசிப் படையும்
புரோசைக் கயிறும் புடவையு மியானையும். ....892
தூவெனும் பெயரே சுசியு மிறைச்சியும்
பற்றுக் கோடும் பகரப் பெறுமே. ....893
தூரிய மெனும்பெயர் பேரெரு துடனே
முரசமு மெனவே மொழியப் பெறுமே. ....894
தூக்கெனும் பெயரே யுறியுந் துலாமும்
கூத்து மாராய்தலுங் கூறுசொற் கலையுமாம். ....895
தூங்க லெனும்பெயர் துயிலும் சோம்புங்
குறைவுந் தந்தியுங் கூத்தின் பெயருமாம். ....896
தகா ஊகார வருக்கம் முற்றும்.தகர எகர வருக்கம்
தெய்வெனும் பெயரே கொலையுந் தெய்வமும். ....897
தென்னெனும் பெயரே தெற்கு மழகும்
கற்புட னிசையு மிலாங்கலிப் பெயருமாம். ....898
தெவ்வெனும் பெயரே பகையுஞ் சமருமாம். ....899
தெவிட்ட லெனும்பெயர் நிறைதலு மொலியும்
கான்றலு மடைத்திடற் பெயருங் கருதுவர். ....900
தெய்வ மெனும்பெயர் புத்தேளும் வாசமும். ....901
தகர எகர வருக்கம் முற்றும்.தகர ஏகார வருக்கம்
தேளெனும் பெயரே தெருக்கா லுடனே
விருச்சிக ராசியும் அனுடமும் விளம்புவர். ....902
தேசிக னெனும்பெயர் குருவும் வணிகனும்
தேசாந் திரியையுஞ் செப்பப் பெறுமே. ....903
தேமெனும் பெயரே தித்திப்பும் வாசமும்
தேசமுந் திசையு மிடமுஞ் செப்புவர். ....904
தேசிக மெனும்பெயர் திசைச்சொல்லு மொளியும்
அரும் பொன்னுங் கூத்தின் விகற்பும் அழகுமாம். ....905
தேர்தல் எனும்பெயர் கொள்கையின் பெயரும்
ஆராய் தலுமே யாகும் என்ப. ....906
தேனெனும் பெயரே வண்டு மதுவுமாம். ....907
தகர ஏகார வருக்கம் முற்றும்.தகர ஐகார வருக்கம்
தைத்த லெனும்பெயர் துன்னத்தின் பெயரும்
தைத்திடு தொழிலுஞ் சாற்றப் பெறுமே. ....908
தைய லெனும்பெயர் பெண்ணுட னழகுமாம். ....909
தையெனும் பெயரே பூச நாளும்
மகர மாதத்தின் பெயரும் வழங்கும். ....910
தகர ஐகார வருக்கம் முற்றும்.தகர ஒகர வருக்கம்
தொழுவெனும் பெயரே யிரேவதி நாளும்
உழலைத் தொழுவு முரைத்தனர் புலவர். ....911
தொடுவெனும் பெயரே தோட்டமும் வஞ்சமும்
மருத நிலமும் வழங்கப் பெறுமே. ....912
தொய்யி லெனும்பெயர் சேறும் இன்பமும்
துயிரு முலைமேற் றொய்யிலு முழுவுமாம். ....913
தொத்தெனும் பெயர்பூங் கொத்துந் தொழும்புமாம்....914
தொறுவெனும் பெயரே தோழமு நிரையும்
தொகுதியு மெனவே சொல்லுவர் புலவர். ....915
தொடியெனும் பெயர்கை வளையு மோர்பலமும்
கங்கணப் பெயருங் கருதப் பெறுமே. ....916
தொங்க லெனும் பெயர்பீலிக் குஞ்சமும்
வெண்குடைப் பெயரு மாலையுந் தூக்கமும். ....917
தொண்டை யெனும்பெயர் யானைத் துதிக்கையும்
ஆதொண்டை யினொடு கோவையு மாமே. ....918
தொண்டெனும் பெயரே தொழும்பும் பழமையும்
ஒன்பது நுழைவழிப் பெயரு மோதுவர். ....919
தொட்ட லெனும்பெயர் தோண்டுதற் பெயரும்
தொடுதற் பெயரும் உணவும் சொல்லுவர். ....920
தொடுத்தல் எனும்பெயர் பிணித்தலும் வளைத்தலும்
பற்றுத லெனவும் பகரப் பெறுமே. ....921
தொழுதி யெனும்பெயர் புள்ளொலியுங் கூட்டமும்....922
தகர ஒகர வருக்கம் முற்றும்.தகர ஓகார வருக்கம்
தோணி யெனும்பெயரி ரேவதி நாளும்
நீருஞ் சேறு மெயில துறுப்பும்
தெப்பமு மோடமும் பகழியுஞ் செப்புவர். ....923
தோட்டி யெனும்பெயர் அங்குசப் படையும்
கதவு மென கருதப் பெறுமே. ....924
தோன்ற லெனும்பெயர் சுதனு நாதனுமாம். ....925
தோலெனும் பெயரே தோல்வியும் யானையும்
கேடகப் பலகையுங் கிளத்திடு சருமமும்
இயாப்பினோர் வனப்பும் இயம்புவர் புலவர். ....926
தோற்ற மெனும்பெயர் ஏற்றமும் பிறப்பும்
ஆற்றலும் உண்டாக் குதலும் உயர்ச்சியுந்
தோன்றுதற் பெயரும் சொல்லப் பெறுமே. ....927
தோடெனும் பெயரே பனைமடல் போலவும்
பூவி னிதழும் தொகுதியும் புகலுவர். ....928
தோளெனும் பெயரே துணையும் புயமுமாம். ....929
தோரை யெனும்பெயர் மூங்கி லரிசியும்
கைவரை யோடுநெல் விகற்பமும் கருதுவர். ....930
தகர ஓகார வருக்கம் முற்றும்.தகர ஒளகார வருக்கம்
தெளவை யெனும்பெயர் தாயுமுன் பிறந்தாளு
மூதேவியுஞ் சாற்றப் பெறுமே. ....931
தகர ஒளகார வருக்கம் முற்றும்.
தகர வருக்கத் தொகுதி முற்றும்.
6 வது நகர வருக்கத் தொகுதி நகர அகர வருக்கம்நந்தி யெனும் பெயர் ஈசனு மிடபமும்
சிறுபே ரிகையொடு செக்கான் பெயருமாம். ....932
நலமெனும் பெயரே நல்லுப காரமும்
சுகமும் விருச்சிக ராசியும் சொல்லுவர். ....933
நவமெனும் பெயரே யொன்பதுங் கேண்மையும்
புதுமையுங் கார்கா லமுமெனப் புகலுவர். ....934
நடையெனும் பெயரே வழியு மொழுக்கமும். ....935
நகமெனும் பெயரே மரப்பொதுப் பெயரும்
உசிரு மலையும் உரைக்கப் பெறுமே. ....936
நவிர மெனும்பெயர் மலையி னுச்சியும்
மலையும் புன்மையும் வகுத்தனர் புலவர். ....937
நயந்தோ னெனும்பெயர் நட்புடை யோனும்
கணவனு மெனவே கருதப் பெறுமே. ....938
நகையெனும் பெயரே மகிழ்ச்சியும் ஒளியும்
எயிறும் சிரிப்பும் இயம்புவர் புலவர். ....939
நவிரெனும் பெயரே யாண்பான் மயிரும்
தக்கேசி யிசையு மருதயாழ்த் திறமும்
வாளா யுதமும் வழங்கப் பெறுமே. ....940
நனையெனும் பெயரே பூவின் முகையும்
நறவு மெனவே நவிலுவர் புலவர். ....941
நவிய மெனும்பெயர் மழுவும் குடாரியும். ....942
நயமெனும் பெயரே நன்மையுஞ் சுகமுமாம். ....943
நரையெனும் பெயரே ஆனி னேறும்
வெண்ணிறக் குதிரையு மிகுபெறு நாரையும்
கவரியுந் தவள நிறமும் கருதுவர். ....944
நளியெனும் பெயரே சீதமுஞ் செறிவும்
பெருமையு முரைப்பர் பெரிது ணர்ந்தேரே. ....945
நரந்த மெனும்பெயர் நாரத்தை மரமும்
கத்தூ ரியுமெனக் கருதப் பெறுமே. ....946
நந்தெனும் பெயரே நத்தையுஞ் சங்குமாம். ....947
நடலை யெனும்பெயர் வஞ்சமும் பொய்யுமாம். ....948
நந்த லெனும்பெயர் ஆக்கமும் கேடுமாம். ....949
நகரெனும் பெயரே நகரமும் வீடுமாம். ....950
நத்த மெனும்பெயர் நகரின் கெடுதியும்
இரவும் பணிலமு மிருளும் இயம்புவர். ....951
நன்றெனும் பெயரே நன்மையும் பெரிதுமாம். ....952
நட்ட மெனும்பெயர் நடனமும் கேடுமாம். ....953
நவிலல் எனும்பெயர் பண்ணுதல் சொல்லுதல். ....954
நக்க லெனும்பெயர் நகையுந் தின்றலும். ....955
நக்க னெனும்பெயர் சிவனும் அருக்கனும்
நின்மா ணியுமென நிகழ்த்துவர் புலவர். ....956
நன்பெனும் பெயரே அகலமுந் தெளிவுமாம். ....957
நயனெனும் பெயரே இன்பமும் மகிழ்வும்
பயனு நன்மையும் பகரப் பெறுமே. ....958
நகர அகர வருக்கம் முற்றும்.நகர ஆகார வருக்கம்
நாழி யெனும்பெயர் உட்டுளை வடிவும்
அளக்கு நாழியும் பூரட் டாதியும்
நாழிகைப் பெயரு நவின்றனர் புலவர். ....959
நாக மெனும்பெயர் நன்மத யானையும்
வெற்புங் கடவுள ருலகுங் காரியமும்
ஒருமரப் பெயரும் குரங்கும் பாம்பும்
நற்றூசும் புன்னைப் பெயரு நவிலுவர். ....960
நாவிதன் எனும்பெயர் பூர நாளும்
கார்த்திகை நாளு மயிர்வினை ஞனுமாம். ....961
நாஞ்சில் எனும்பெயர் கலப்பைப் படையும்
எயிலு றுப்புமென வியம்பப் பெறுமே. ....962
நாட்ட மெனும்பெயர் நயனமும் வாளும்
பண்ணின் விகற்பமும் பகரப் பெறுமே. ....963
நாரி யெனும்பெயர் நறவும் பன்னாடையும்
பெண்ணுஞ் சிலைநாண் பெயரும் பேசுவர். ....964
நாப்பண் எனும்பெயர் நடுவட் டேரும்
நடுவு மெனவே நவிலப் பெறுமே. ....965
நான மெனும்பெயர் ஞானமும் பாசமும்
பூசு வனவும் புனலா டுதலும்
கத்தூ ரியுமெனக் கருதப் பெறுமே. ....966
நாடி யெனும்பெயர் நாழிகை நரம்புமாம். ....967
நாகெனும் பெயரே யீனா விளமையும்
இளமரக் கன்றும் சங்கும் நத்தையும்
ஒருசார் விலங்கின் பெண்பாலு மோதுவர். ....968
நாணுனும் பெயரே மாதர் மங்கலமும்
பூணு மிலச்சையுங் கயிறும் புகலுவர். ....969
நாரெனும் பெயரே அன்பும் கயிறுமாம். ....970
நாறுதல் எனும்பெயர் உண்டாதல் மணமுமாம். ....971
நான்முகன் எனும்பெயர் அருகனும் பிரமனும். ....972
நகர ஆகார வருக்கம் முற்றும்.நகர இகர வருக்கம்
நிறையெனும் பெயர்துலா ராசிப் பெயரும்
துலையு நீர்ச்சாலு மழியா நிலைமையும். ....973
நிசியெனும் பெயரே கங்குற் பொழுதும்
மஞ்சளும் பொன்னும் வகுக்கப் பெறுமே. ....974
நிதம்ப மெனும்பெயர் மலையின் பக்கமும்
அல்குலின் பெயரு மாகு மென்ப. ....975
நியமம் எனும்பெயர் நியதியு நகரமும்
தெருவும் அங்காடியுந் தேவரா லையமும்
நிச்சயப் பெயரும் நிகழ்த்துவர் புலவர். ....976
நிருமித்த லென்னும் பெயரா ராய்தலும்
படைத்தலு மெனவே பகர்ந்தனர் புலவர். ....977
நிறமெனும் பெயரே நிறங்களு மார்பும்
காந்தியு மெனவே கருதுவர் புலவர். ....978
நிரப்பு எனும்பெயர் குறைபாடும் வறுமையும். ....979
நிழற்ற லெனும்பெயர் நிழற்செய லுடனே
நுணுக்க மெனவே நுவன்றனர் புலவர். ....980
நகர இகர வருக்கம் முற்றும்.நகர ஈகார வருக்கம்
நீலி யெனும்பெயர் பாலைக் கிழத்தியும்
கருநிற முமொரு புதலுங் கருதுவர். ....981
நீரெனும் பெயரே நீர்மையும் புனலும்
பூராட நாளும் புகலப் பெறுமே. ....982
நீப மெனும்பெயர் உத்திரட் டாதியும்
நிமித்தமும் கடம்பு நிகழ்த்துவர் புலவர். ....983
நீவி யெனும்பெயர் ஆடையுந் துடைத்தலும்
நெருங்கிய கொய்சகப் பெயரு நிகழ்த்துவர். ....984
நகர ஈகார வருக்கம் முற்றும்.நகர உகர வருக்கம்
நுதலெனும் பெயரே நெற்றியும் புருவமும். ....985
நுணங்க லெனும்பெயர் நுண்மையுந் தேமலும். ....986
நுனியெனும் பெயரே நுண்மையும் நுனியுமாம். ....987
நுணவை யெனும்பெயர் நுண்பிண் டியினுடன்
எண்ணோ லையுமென இயம்பப் பெறுமே. ....988
நுவணை யெனும் பெயர் தினையின் பிண்டியும்
நூலு நுண்மையு நுவன்றனர் புலவர். ....989
நகர உகர வருக்கம் முற்றும்.நகர ஊகார வருக்கம்
நூலோ ரெனும்பெய ரந்தண ருடனே
மந்திரி யர்பெயர் புலவோரும் வழங்குவர். ....990
நூழி லெனும்பெயர் யானையுங் கோறலும்
கொடியின் பெயரும் கொடிக்கொற் றானும்
பொடியின் பெயரும் புகன்றனர் புலவர். ....991
நூலெனும் பெயரே வேத நூலொடு
சாத்திர விகற்பமும் தந்தும் பேசுவர். ....992
நூண மெனும்பெயர் குறைவு நிச்சயமுமாம். ....993
நகர ஊகார வருக்கம் முற்றும்.நகர எகர வருக்கம்
நெறியெனும் பெயரே நீதியும் வழியுமாம். ....994
நெற்றி யெனும்பெயர் நெடும்படை யுறுப்பும்
நுதலு மெனவே நுவன்றனர் புலவர். ....995
நெய்தலின் பெயரோர் நிலமும் கடலும்
நெய்தற் பூவொடு சாப்பறை நிகழ்த்துவர். ....996
நகர எகர வருக்கம் முற்றும்.நகர ஏகார வருக்கம்
நேத்திர மெனப்பெயர் பட்டின் விகற்பமும்
கண்ணு மெனவே கருதப் பெறுமே. ....997
நேய மெனும்பெயர் நெய்யும் எண்ணெயும்
அன்பின் பெயரு மாமென வுரைப்பர். ....998
நேமி யெனும்பெயர் திகிரியும் வண்டிலும்
பூமியும் புணரியும் புகலப் பெறுமே. ....999
நேரெனும் பெயரே கொடுத்தலும் பாதியும்
தனிமையும் நிகரும் நுட்பமுடன் பரஞ்சமமு
மிகுதியுந் தலைப்படல் விலையு மாமே. ....1000
நகர ஏகார வருக்கம் முற்றும்.நகர ஒகர வருக்கம்
நொச்சி யெனும்பெயர் சிந்து வாரமும்
சிற்றூரு மதிலும் எயில் காத்தலுமாம். ....1001
நொடியெனும் பெயர்கை நொடியும் வார்த்தையும். ....1002
நொறிலெனும் பெயரே நுடக்கமும் விரைவும்
ஒடுக்கமு மெனவே யுரைக்கப் பெறுமே. ....1003
நகர ஒகர வருக்கம் முற்றும்.நகர ஓகார வருக்கம்
நோனாமை யென்னும் பெயர்பொ றாமையும்
தவம்பண்ணா மையுஞ் சாற்றுவர் புலவர். ....1004
நோக்கெனும் பெயரே யழகும் விழியுமாம். ....1005
நோற்ற லெனும்பெயர் பொறையும் தவமுமாம். ....1006
நோனா ரெனும்பெயர் தவமில் லோருடன்
பகைஞர்தம் பெயரும் பகர்ந்தனர் புலவர். ....1007
நகர ஓகார வருக்கம்.நகர ஒளகார வருக்கம்
நெளவிய மெனும்பெயர் மரக்கலப் பெயரும்
மானு மெனவே வழங்கப் பெறுமே. ....1008
நகர ஒளகார வருக்கம் முற்றும்.
நகர வருக்கத் தொகுதி முற்றும்.
7 வது பகர வருக்கத் தொகுதி
பகர அகர வருக்கம்பகுதி யெனும்பெயர் பரிவே டத்துடன்
வட்ட வடிவு மிரவியு நேமியும். ....1009
பகலெனும் பெயர்பகற் போதும் பிரிவும்
நடுவும் பரணி நாளும் இயம்புவர். ....1010
பச்சை யெனும்பெயர் பசுமையும் புதனும்
தோலும் இலாபமு மரகத மணியுமாம். ....1011
பங்கெனும் பெயரே பகுத்தலும் சனியும்
முடமும் பாதியும் மொழிந்தனர் புலவர். ....1012
பக்க மெனும்பெய ரருகு மிறகுந்
திதியு மண்மையுஞ் செப்பப் பெறுமே. ....1013
பதமெனும் பெயரே பாதமும் சோறும்
வரிசையும் விழாவும் வழியும் வார்த்தையும்
உணவு மீரமுஞ் செல்வியுஞ் சேமமும்
பொழுது மெனவே புகன்றனர் புலவர். ....1014
பணியெனும் பெயரே பணமுடைப் பாம்பும்
தொழிலுந் தொழில்படு கலனுஞ் சொல்லுவர். ....1015
பயமெனும் பெயரே பாலும் சலிலமு
மச்சமும முதுமி லாபமு மாமே. ....1016
பரவை யெனும்பெயர் பரப்புங் கடலுமாம். ....1017
பயோதர மெனும்பெயர் மேகமு முலையுமாம். ....1018
பனியெனும் பெயரே துன்பமு நடுக்கமும்
அச்சமுங் குளிர்ச்சியு மிமமு மாமே. ....1019
பகவ னெனும்பெயர் பரமனு மாலும்
பிரமனும் அருகனும் குருவும் புத்தனும். ....1020
பண்ணவ னெனும்பெயர் முனியும் தேவனும்
குருவுந் திறலோன் பெயருங் கூறுவர். ....1021
பசுவெனும் பெயர்வெண் பெற்றமு முயிருமாம். ....1022
படியெனும் பெயரே பகையும் குணமும்
புவனமு முலகமும் புகலப் பெறுமே. ....1023
படப்பை யெனும்பெயர் நாடு நகரமும்
தோட்டமும் பசுநிரைப் பெயருஞ் சொல்லுவர். ....1024
பட்டெனும் பெயரே பட்டின் விகற்பமும்
சிற்றூர்ப் பெயரும் துகிலுஞ் செப்புவர். ....1025
பள்ளி யெனும்பெயர் தவத்தோ ரிடமும்
துயிறலும் பாயலுஞ் சிற்றூர்ப் பெயரும்
கோயிலின் பெயருங் கூறப் பெறுமே. ....1026
பட்ட மெனும்பெயர் மேம்படு பதவியும்
வழியுங் கவரி மாவுந் துகிலும்
வாயிலு மதகரி முகப டாமும்
விலங்கு துயிலிடமும் படமும் விளம்புவர். ....1027
பதுக்கை யெனும்பெயர் பாறையு மேடும்
சிறுதூ றுமெனச் செப்புவர் புலவர். ....1028
பதலை யெனும்பெயர் மலையுந் தாழியும்
ஒருகட் பரந்த வாய்ப்பறையு மோதுவர். ....1029
பணையெனும் பெயரே பருத்தலு ழூங்கிலும்
மருத நிலமும் வயலு முரசமும்
குதிரையின் பந்தியு மரத்தின் கொம்புமாம். ....1030
பண்ணை யெனும்பெயர் வயலும் வாவியும்
சபையு மகளிர் விளையா டிடமும்
விலங்கு துயிலிடமும் விளம்புவர் புலவர். ....1031
படுவெனும் பெயரே மரத்தின் குலையும்
மதுவும் நன்மையும் வாவியு மாமே. ....1032
பயம்பெனும் பெயரே பகடுபடு குழியும்
நீர்நிலைப் பெயரு நிகழ்த்தினர் புலவர். ....1033
பங்க மெனும்பெயர் சேறும் துகிலும்
பின்னமுந் தீவினைப் பெயரும் பேசுவர். ....1034
பரிசு மென்பெயர் கணைப்படைக் கலமும்
புரிசை யுள்ளுயர்ந்த நிலமும் அகழியும்
மேடையு மெனவே விளம்புவர் புலவர். ....1035
பணவை யெனும்பெயர் பரணுங் கழுதுமாம். ....1036
படையெனும் பெயரே பரிமாக் கலனையும்
ஆயுதப் பொதுவு மடர்கொடுஞ் சேனையும்
கண்படை யுடனே கலப்பையுங் கருதுவர். ....1037
பலமெனும் பெயரே பழமும் கிழங்கும்
சேனையும் லாபமும் நிறையும் செப்புவர். ....1038
பங்கி யெனும்பெயர் ஆண்பான் மயிரும்
அஃறிணைப் பொதுவின் பெயரு மாமே. ....1039
பண்ட மெனும்பெயர் பண்ணி காரத்துடன்
விண்டொளிர் பொன்னும் விளம்பப் பெறுமே. ....1040
படலிகை யென்னும் பெயர்பெரும் பீர்க்கும்
கைமணி வட்டமும் பூத்தட்டின் பெயருமாம். ....1041
படங்கென் பெயர்பெருங் கொடியு மேற்கட்டியும். ....1042
படலை யெனும்பெயர் வாசிக் கோவையும்
படர்தலுந் தொடையலும் பரந்தவாய்ப் பறையுமாம்.....1043
பண்ணெனும் பெயரே பரிமாக் கலனையும்
பாட்டின் பண்ணும் பகரப் பெறுமே. ....1044
பறையென் பெயர்புள்ளி னிறகும் பணையும்
வசனமு மெனவே வழங்கப் பெறுமே. ....1045
பகழி யெனும்பெயர் பகழிக் குதையும்
கணையு மெனவே கருதப் பெறுமே. ....1046
பரமெனும் பெயரே பரிமாக் கலனையும்
மெய்யு மெய்புகு கருவியும் பாரமும்
முன்பு மேலு மொழிந்தனர் புலவர். ....1047
பழங்கணெ னும்பெய ரோசையும் துன்பமும். ....1048
படிறெனும் பெயரே பொய்யொடு களவுமாம். ....1049
பந்த மெனும்பெயர் சீரின் தொடர்ச்சியும்
அழகும் திரட்சியும் கிளையொடு கட்டுமாம். ....1050
பத்திர மெனும்பெய ரழகும் நன்மையும்
சுரிகையும் சிங்கா சனமும் புள்ளிறகும்
இலையு மெனவே இயம்பப் பெறுமே. ....1051
பலியெனும் பெயரே தேவ பூசையும்
பிச்சையும் பலித்தலும் பேசுவர் புலவர். ....1052
பரியெனும் பெயரே பாது காத்தலும்
பருத்தியுஞ் சுமத்தலுங் குதிரையும் பெருமையும். ....1053
பகடெனும் பெயரே பெருமையு மெருதும்
எருமை யாண்பெயருந் தோணியுங் களிறுமாம். ....1054
பதங்க மெனும்பெயர் விட்டிற் பறவையும்
புட்பொதுப் பெயரும் புகலப் பெறுமே. ....1055
பயலெனும் பெயர்ச்சிற் றாளும் பள்ளமும்
பந்தியு மெனவே பகருவர் புலவர். ....1056
பணில மெனும்பெயர் சலஞ்சலப் பெயரும்
சங்கின் பெயருஞ் சாற்றுவர் புலவர். ....1057
பப்பெனும் பெயரே பரப்பும் உவமையும். ....1058
பந்தெனும் பெயர்கந் துகமும் கட்டும்
நீர்தூவுஞ் சிறுது ருத்தியும் நிகழ்த்துவர். ....1059
பவன மெனும்பெயர் பாருங் காற்றும்
இராசியும் கோயிலு நாடு மில்லமுமாம். ....1060
படமெனும் பெயரே பாம்பின் பணமும்
சித்திரப் படமும் சிலையும் கொடியுமாம். ....1061
பறம்பெனும் பெயரே மலையு முலையுமாம். ....1062
பரத ரெனும்பெயர் தனவைசியர் பேரும்
நெய்தனில மாக்களு நிகழ்த்தப் பெறுமே. ....1063
பவமெனும் பெயரே பாவமும் பிறப்புமாம். ....1064
பண்ணல் எனும்பெயர் சொல்லு நெருக்கமும்
பருத்தியின் பெயரும் பகரப் பெறுமே. ....1065
பயிரெனும் பெயரே யொலியும் பைங்கூழும்
விதந்து கட்டிய வழக்கும் புட்குரலும்
விலங்கின் குரலும் விளம்புவர் புலவர். ....1066
படரெனும் பெயரே பரியும் நோயும்
வீரரு நினைத்தலு நடையும் விளம்புவர். ....1067
பவித்திர மெனும்பெயர் தருப்பையுஞ் சுசியுமாம். ....1068
படிவ மெனும்பெயர் வடிவமு நோன்புமாம். ....1069
படுத்த லெனும்பெய ரொலியு முண்டாதலும்
பூத்தலு மின்மைப் பெயரும் புகலுவர். ....1070
பதியெனும் பெயரே கணவனும் நாகமும்
தலைவனு மெனவே சாற்றப் பெறுமே. ....1071
பத்தி யென்பெயர் வழிபாடு மொழுங்கும்
அடைப்பது முறைமையு மாமென வியம்புவர். ....1072
பரித்தல் எனும்பெயர் அறுத்தலும் வெட்டலும்
இரங்கலு மன்பும் இசைக்கப் பெறுமே. ....1073
பஞ்ச மெனும்பெயர் ஐந்துஞ் சிறுமையும். ....1074
பனுவ லெனும்பெயர் செய்யுளும் நூலுமாம். ....1075
பராக மென்பெயர் மலர்த்தாதுவு மிரேணுவும். ....1076
பல்ல மெனும்பெயர் பாணமும் கரடியும்
கணக்கிலோர் குணிப்பும் கருதப் பெறுமே. ....1077
பத்திரி யெனும்பெயர் பறவையும் பரியுமாம். ....1078
பட்டிகை யெனும்பெயர் பணையு மீரமும்
கச்சு மெனவே கருதப் பெறுமே. ....1079
பரிவெனும் பெயரே யின்பமுந் துன்பமும்
அன்பு மிதன்பெய ராமென வியம்புவர். ....1080
பற்ப மெனும்பெயர் பதுமமுந் தூளுமாம். ....1081
பரணி யெனும்பெயர் தரும னாளும்
அழுந்திடு கலனு மதகரிப் பெயருமாம். ....1082
பனையெனும் பெயரே போந்தையின் தருவும்
அநுடநாட் பெயரு மாகு மென்ப. ....1083
பணமெனும் பெயரே பாம்பின் படமும்
அரவுஞ் செம்பொற் காசு மாமே. ....1084
பகர அகர வருக்கம் முற்றும்.
பகர ஆகார வருக்கம்பாரதி யெனும்பெயர் பனுவ லாட்டியும்
தோணியு மெனவே சொல்லப் பெறுமே. ....1085
பாண்டி லெனும்பெய ரிடப ராசியும்
சகடமு மூங்கிலுந் தாங்குறு சிவிகையும்
காளையுங் கட்டிலும் விளக்கின் றகளியும்
வட்டமு மெனவே வழங்கப் பெறுமே. ....1086
பரணி யெனும்பெயர் பதியொடு சேர்ந்த
சோலையு நாடுங் காடு நீரும்
பாடற் பல்லியமும் பாட்டுமோ ரிசையும்
கையும் பொழுது நீட்டித்தலுங் கருதுவர். ....1087
பாரா வார மெனும்பெயர் கடலும்
கடற்கரைப் பெயருங் கருதப் பெறுமே. ....1088
பாசெனும் பெயரே பசுமையு மூங்கிலும். ....1089
பாரெனும் பெயரே தேரின் பரப்பும்
உரோகிணிப் பெயரும் புவனியு முரைப்பர். ....1090
பாம்பெனும் பெயரே பன்னக விகற்பமும்
வரம்பின் பெயரும் வழங்கப் பெறுமே. ....1091
பாரி யெனும்பெயர் பாரின் பெயருங்
கட்டிலின் பெயருநல் லாடையு முந்நீரும்
மனைவி பெயருமோர் வள்ளலு மாமே. ....1092
பாடி யெனும்பெயர் ஊரு நாடும்
நகர மும்படை வீடு நவிலுவர். ....1093
பானல் எனும்பெயர் கருநிறக் குவளையும்
மருத நிலமும் வயலும் வழங்கும். ....1094
பாத்தி யெனும்பெயர் பகுத்தலும் வீடும்
சிறுசெய்யு மென்னச் செப்புவர் புலவர். ....1095
பாழி யெனும்பெயர் தவத்தோர் சாலையும்
நகரமும் பெலமும் நண்ணல ரூரும்
படுக்கையும் பாயலும் பாழ்படு பொருளும்
மலைமுழை விலங்கு துயிலிடமு மாமே. ....1096
பாலெனும் பெயரே பகுத்தலும் பக்கமும்
கீரமும் இயல்பும் இடமுங் கிளத்துவர். ....1097
பாசன மெனும்பெயர் பாண்டமுஞ் சுற்றமும்
உண்கலப் பெயரும் உரைக்கப் பெறுமே. ....1098
பாடெனும் பெயரே பக்கமும் படுதலும்
பெருமையுஞ் சத்த வொலியும் பேசுவர். ....1099
பாலிகை யெனும்பெயர் பட்டவாள் முட்டும்
அதரமும் வட்டப் பெயரு மாமே. ....1100
பாகெனும் பெயரே பாக்கின் பெயரும்
பகுத்தலும் குழம்பும் பாலும் பாகனும்
சருக்கரைப் பெயருஞ் சாற்றப் பெறுமே. ....1101
பாளித மெனும் பெயர் கண்ட சர்க்கரையும்
குழம்பும் பட்டா டையுமே கூறுவர். ....1102
பாணமெனும் பெயர் பட்டின் விகற்பமும்
அம்பும் பவள வண்ணக் குறிஞ்சியுமாம். ....1103
பாக மெனும்பெயர் பாதியும் பிச்சையும்
நாவலர் கவிதைப் பாகமும் நவிலுவர். ....1104
பாக லெனும்பெயர் பலாவின் தருவும்
ழூவகைக் கார வல்லியு மொழிகுவர். ....1105
பாதிரி யெனும்பெயர் பாதிரி மரமும்
மூங்கிலு மெனவே மொழியப் பெறுமே. ....1106
பால மெனுலெனும் பெயர் நெற்றியு மழுவும்
நீரிடைப் பரப்புகற் பாலமு நிகழ்த்துவர். ....1107
பாவ மெனும்பெயர் பாவகப் பெயருந்
தீவினைப் பெயரும் செப்பப் பெறுமே. ....1108
பாய்மா வெனும்பெயர் பரியொடு புலியுமாம். ....1109
பாக்கெனும் பெயர்செம் பழுக்காய்ப் பெயரும்
எதிர்கா லத்தைப் பகரிடைச் சொல்லுமாம். ....1110
பாடல மெனும்பெயர் சிவப்பும் பாதிரியும்
குதிரையு மெனவே கூறப் பெறுமே. ....1111
பாத்தெனும் பெயரே பருத்தூண் பெயரும்
அடிசிற் பெயரொடு கஞ்சியு மாமே. ....1112
பார மெனும்பெயர் கவசமும் பொறையும்
கலனையும் பாரும் நீரின் கரையும்
வன்பா ரமுமரக் கலமும் வழங்கும். ....1113
பாவெனும் பெயரே பரத்தலும் பனுவலும். ....1114
பாலை யெனும்பெயர் பாலை நிலமும்
அந்நிலப் பாடலும் பிரிவ துரைத்தலும்
பொருண்மேற் பிரிதலும் புணர்ந்துடன் போதலும்
புனர்பூ சமுமோர் மரமும் புகலுவர். ....1115
பார்த்த லென்னும் பெயர்பரப் புதலும்
தோற்றுதற் பெயருஞ் சொல்லப் பெறுமே. ....1116
பாவை யெனும்பெயர் சித்திரப் பாவையும்
திருமக ளாடலுஞ் செப்புவர் புலவர். ....1117
பாயச மெனும்பெயர் பாற்சோற் றினுடனே
பாற்குறண் டியென் பெயர்தானும் பகருவர். ....1118
பகர ஆகார வருக்கம் முற்றும்.பகர இகர வருக்கம்
பிள்ளை யெனும்பெயர் வடுகக் கடவுளுங்
காரிப் புள்ளுட னிளமரக் கன்றும்
மகவின் பெயரும் வகுத்துரைத் தனரே. ....1119
பிதா வெனும்பெயர் சிவபெருமான் பெயரும்
பிரமன் பெயரும் தாதைதன் பெயரும்
பெருநா ரைப்புட் பெயரும் பேசுவர். ....1120
பிசித மெனும்பெயர் நீறும் புலாலும்
வேம்பின் பெயரும் விளம்புவர் புலவர். ....1121
பிச்ச மெனும்பெயர் பீலிக் குடையும்
ஆண்பான் மயிரும் வெண்குடையு மாமே. ....1122
பிசியெனும் பெயரே பேசுதற் பொருளும்
பொய்யுஞ் சோறும் புகலப் பெறுமே. ....1123
பிண்டி யெனும்பெயர் நென்மா முதலவும்
அசோக மரமும் பிண்ணாக்கு மாமே. ....1124
பிரச மெனும்பெயர் தேனீப் பெயரும்
தேனின் பெயரு மிறாலுஞ் செப்புவர். ....1125
பிறங்க லெனும்பெயர் பெருமையு நிறைவும்
மலையு முயரமும் வகுக்கப் பெறுமே. ....1126
பிணையெனும் பெயரே விலங்கின் பெண்பாலும்
விருப்பமு மானும் விளம்புவர் புலவர். ....1127
பிணிமுக மெனும்பெயர் புட்பொதுப் பெயருடன்
மயிலு மன்னமும் வகுத்து ரைத்தனரே. ....1128
பிங்கல மெனும்பெயர் செங்கன கத்தொடு
பொன்னி னிறமும் புகன்றனர் புலவர். ....1129
பின்னை யெனும்பெயர் பிற்றைப் பொழுதும்
தங்கையுங் கண்ணன் மனைவியுஞ் சாற்றுவர். ....1130
பிண்ட மெனும்பெயர் பிச்சையுந் திரட்சியும்
தேகமு மென்னச் செப்புவர் புலவர். ....1131
பிரம மெனும்பெயர் சிவனு மாயனும்
பிரமனும் இரவியு மதியுங் கனலும்
மந்திரமும் வேதமும் முத்தித் தருமமும்
வேள்வியு முனிவரும் விளம்பப் பெறுமே. ....1132
பிப்பில மெனும்பெயர் திப்பிலி அரசுமாம். ....1133
பிலவங்க மென்பெயர் தேரையுங் குரங்குமாம். ....1134
பிதிரெனும் பெயரே தென்புலத் தெய்வமும்
நொடித்தலும் திவலையுங் கிளியின் விகற்பமும்
கதையு மெனவே கருதப் பெறுமே. ....1135
பித்திகை யெனும்பெயர் கவர்த்த லத்துடனே
கொத்தவிழ் கருமுகைப் பெயருங் கூறுவர். ....1136
பிறழ்த லெனும்பெயர் பெயர்தலும் ஒளிர்தலும். ....1137
பிசின மெனும்பெயர் பொய்யனுங் கோளனும். ....1138
பகர இகர வருக்கம் முற்றும்.
பகர ஐகார வருக்கம்
பையெனும் பெயரே பசுமை நிறமும்
பாம்பின் படமும் கூறையின் விகற்புமாம். ....1139
பையுள் எனும்பெயர் நோயும் சிறுமையும். ....1140
பைத்த லெனும்பெயர் பசுத்தலு முனிவுமாம். ....1141
பகர ஐகார வருக்கம் முற்றும்.பகர ஒகர வருக்கம்
பொறியெனும் பெயரே பொடித்தெழு நுண்
சிறுகல னோடு மரக்கலம் செல்வம்
இலாஞ்சினை திருவும் ஐம்புலனு மோதிரமு
மெழுத்துமாம். ....1142
பொன்னெனும் பெயரே பொறியுங் கனகமும்
அழகும் வியாழமும் திருவுங் குபேரனும்
இரும்பு மெனவே யியம்புவர் புலவர். ....1143
பொழிலெனும் பெயரே யுலகமுஞ் சோலையும்
பெருமையு மெனவே பேசப் பெறுமே. ....1144
பொறையெனும் பெயரே பூமியும் பொறுமையும்
துறுகல் லுடனே மலையுஞ் சொல்லுவர். ....1145
பொங்க ரெனும்பெயர் மரத்தின் கோடும்
பொருப்பும் இலவ மரமும் புகலுவர். ....1146
பொருட்டெனும் பெயரே பொருப்பு மொக்குளும்
பங்கயப் பொன்னிறக் கொட்டையும் பகருவர். ....1147
பொருந ரெனும்பெயர் பொருபடை வீரரும்
கொற்றவர் பெயரும் கூத்தர்தம் பெயரும்
திண்ணியோர் பெயரும் செப்பப் பெறுமே. ....1148
பொகிலெனும் பெயரே புட்பொதுப் பெயரும்
கொப்புளு முகையுங் கூறப் பெறுமே. ....1149
பொம்ம லெனும்பெயர் பொலிவுஞ் சோறுமாம். ....1150
பொங்க லெனும்பெயர் மிகுதியுங் கொதித்தலும். ....1151
பொய்த்த லெனும்பெயர் மகளிர் விளையாடலும்
பொய்த்திடு சொல்லும் புகலப் பெறுமே. ....1152
பொத்தக மெனும்பெயர் சித்திரப் படாமும்
திருமுறைப் பெயருஞ் செப்புவர் புலவர். ....1153
பொய்யெனும் பெயரே பொந்தும் பொய்மையும். ....1154
பொச்சாப் பெனும்பெயர் மறவி பொல்லாங்குமாம்.....1155
பகர ஒகர வருக்கம் முற்றும்.பகர ஓகார வருக்கம்
போகி யெனும்பெயர் புரந்தரன் பெயரும்
பாம்பின் பெயரும் பகரப் பெறுமே. ....1156
போரெனும் பெயரே நென்முதற் சும்மையும்
சதைய நாளொடு சமரு மாமே. ....1157
போக்கெனும் பெயரே யினமரக் கன்றும்
வழியுங் குற்றமும் போதலும் பொய்யுமாம். ....1158
போதக மெனும்பெய ரப்ப வருக்கமும்
மதகரிக் கன்றொடு மரத்தின் கன்றும்
இளமையும் ஞானமு மியம்பப் பெறுமே. ....1159
போக மெனும்பெயர் போக விகற்பமும்
பாம்பின துடம்பும் பகரப் பெறுமே. ....1160
போர்வை யெனும்பெயர் தோலின் பெயரும்
சாலிகைப் பெயரொடு போர்த்தலுஞ் சாற்றுவர். ....1161
போத மெனும்பெயர் ஞானமும் தோணியும். ....1162
பகர ஓகார வருக்கம் முற்றும்.
பகர ஒளகார வருக்கம்பெளவ மெனும்பெயர் கடலும் கணுவும்.
பகர ஒளகார வருக்கம் முற்றும்.
பகர வருக்கத் தொகுதி முற்றும்.
8 வது மகர வருக்கத் தொகுதி
மகர அகர வருக்கம்மன்ன னெனும்பெய ருத்திரட் டாதியும்
மன்னவன் பெயரும் வகுத்தனர் புலவர். ....1164
மதியெனும் பெயரே முன்னிலை யசைச்சொலும்
உடுபதிப் பெயரு முணர்வு மாதமுமாம். ....1165
மரக்கா லெனும்பெயர் மாதவ னாடலும்
சோதி நாளு மளவையுஞ் சொல்லுவர். ....1166
மயிலை யெனும்பெயர் மலரிரு வாட்சியும்
மீன ராசியும் மீன்பொதுப் பெயருமாம். ....1167
மடங்க லெனும்பெய ரிடியு மறலியும்
முடங்கலு நொயுட னூழியுஞ் சிங்கமும். ....1168
மறலி யெனும்பெயர் மறப்பு மழுக்காறும்
கூற்றனு மெனவே கூறுவர் புலவர். ....1169
மருளெனும் பெயரே மயக்கத்தின் பெயரும்
குறிஞ்சி யாழ்த்திறமும் பேயுங் கூறுவர். ....1170
மஞ்செனும் பெயரே வலிமையு மிளமையும்
மேகமும் பணியும் வேழத்தின் முதுகும்
எழிலு மெனவே யியம்பினர் புலவர். ....1171
மதனெனும் பெயரே மாட்சிமைப் பெயரும்
அனங்கனும் பெலமு மழகு மாமே. ....1172
மண்டலி யெனும்பெயர் நாயும் பூஞையும்
மண்டலி யரவும் வழங்கப் பெறுமே. ....1173
மண்டல மெனும்பெயர் நாடுங் குதிரையும்
வட்டமுங் குதிரைச் சாரியும் வழங்கும். ....1174
மன்ற மென்பெயர் அம்பலமும் வாசமும். ....1175
மந்திர மெனும்பெயர் குதிரைப் பந்தியும்
கோயிலும் விசாரமு மதவு மில்லமும்
இறையவர் நாம வெழுத்து மாமே. ....1176
மறவ ரெனும்பெயர் வனசரர் பெயரும்
படைவீரர் பெயரும் பகரப் பெறுமே. ....1177
மள்ளர் எனும் பெயர் வன்சமர் வீரரும்
திண்ணியோர் பெயரு மருதநில மாக்களும். ....1178
மதலை யெனும்பெயர் மரக்கலப் பெயரும்
புதல்வர் பெயரும் கொடுங்கைப் பாவும்
கொன்றையும் தூணும் சார்பின வையுமாம். ....1179
மடை யெனும்பெயர் மணிப்பணிப் பூட்டும்
புனலின் மடையும் அடிசிலும் புகலுவர். ....1180
மட்டெனும் பெயரே யளவு மதுவுமாம். ....1181
மனவெனும் பெயரே மணிப்பொதுப் பெயரும்
அக்கு மணியின் பெயரு மாமே. ....1182
மணியெனும் பெயரே வனப்பு நன்மையும்
கருநிற முதவ மணியுங் கண்டையும்
இசையு மெனவே யியம்பப் பெறுமே. ....1183
மதுக மெனும்பெயர் வண்டுந் தராவும்
இருப்பையு மட்டி மதுரமும் இயம்புவர். ....1184
மடியெனும் பெயரே வயிறுத் தாழையும்
சோம்பும் புடைவையுந் துன்ப நோயுமாம். ....1185
மன்ற லெனும்பெயர் மணமும் கல்யாணமும்
பாலையாழ்த் திறமும் பகரப் பெறுமே. ....1186
மத்திகை யெனும்பெயர் மாலையின் பெயரும்
சம்மட்டி யினோடு சுடர்நிலைத் தண்டுமாம். ....1187
மல் லெனும்பெயரே மாயோ னாடலும்
வளமும் பெலமும் வகுத்துரைத் தனரே. ....1188
மல்லிகை யெனும்பெயர் மாலதிப் புதலும்
சுடர்நிலைத் தண்டுஞ் சொல்லுவர் புலவர். ....1189
மறமெனும் பெயரே பாவமும் கொடுமையும்
சினமு மெனவே செப்பப் பெறுமே. ....1190
மஞ்சரி யெனும்பெயர் மலர்ப்பூங் கொத்தும்
மாலையுந் தளிரும் வகுத்தனர் புலவர். ....1191
மகர மெனும்பெயர் மலர்ப்பூந் தாதும்
கறவு மகர விராசியுஞ் சொல்லுவர். ....1192
மந்தார மெனும்பெய ரைந்தரு விலொன்றும்
செம்பரத் தையுமெனச் செப்புவர் புலவர். ....1193
மத்தெனும் பெயரே தயிர்கடை தறிமுதன்
மத்தின் விகற்பமு மத்து முணர்த்துவர். ....1194
மல்ல லெனும்பெயர் வலிமையும் வளமுமாம். ....1195
மடமெனும் பெயரே முனிவர் வாசமும்
அறியாமை யுஞ்சத்திர மனையு மென்மையும். ....1196
மகனெனும் பெயரே மைந்தன் பெருமையும்
மகிமையிற் சிறந்தோன் பெயரும் வழங்கும். ....1197
மணமெனும் பெயரே கல்யாணமும் வாசமும்
கூட்டமு மெனவே கூறப் பெறுமே. ....1198
மறையெனும் பெயர்மந் திரமும் வேதமும்
பரிசையு மறைவும் ராசியப் பெயருமாம். ....1199
மகமெனும் பெயர்மக நாளுடன் யாகமாம். ....1200
மடலெனும் பெயர்பனை மடல்போல் வனவும்
பூவி னிதழு மோர்நூலும் புகலுவர். ....1201
மத்தக மெனும்பெயர் நெற்றியுந் தலையுமாம். ....1202
மண்ணெனும் பெயரே முழவின் மார்ச்சனையும்
அலங்கரித்தலு நல்ல வனியு மாமே. ....1203
மதுவெனும் பெயரே வசந்த காலமும்
இனிமையு நறவொடு தேனு மியம்புவர். ....1204
மரபெனும் பெயரே பழமையும் இயல்புமாம். ....1205
மறலெனும் பெயரே மயக்கமும் கூற்றுமாம். ....1206
மருமான் எனும்பெயர் வழித்தோன் றலுடனே
மருமகன் பெயரும் வழங்கப் பெறுமே. ....1207
மயலெனும் பெயரே மயக்கமும் செற்றையும்
பேயின் பெயரும் பேசுவர் புலவர். ....1208
மலைத லெனும்பெயர் மறுத்தலும் பொருதலும்
சூடலு மெனவே சொல்லப் பெறுமே. ....1209
மருத மெனும்பெயர் மருத நிலமும்
அந்நிலப் பாடலும் வயலுமோர் மரமுமாம். ....1210
மங்கு லெனும்பெயர் மேகமும் விசும்பும்
இருளு மெனவே இயம்புவர் புலவர். ....1211
மன்னெனும் பெயரே அசைச்சொலும் வேந்தனும்
நிலைபேறு மிகுதிப் பெயரு நிகழ்த்துவர். ....1212
மலர்தல் எனும்பெயர் எதிர்தலுந் தோன்றலும்
மலர்தலின் பெயரும் வகுத்தனர் புலவர். ....1213
மகரந்த மென்னும் பெயர்மலர்த் தேனும்
நறவும் பூந்தாது நவிலப் பெறுமே. ....1214
மதவெனும் பெயரே வன்மையு மிகுதியும். ....1215
மதமெனும் பெயர்கரி மதமும் செருக்குமாம். ....1216
மனையெனும் பெயரே மனைவியும் வீடுமாம். ....1217
மருந்தெனும் பெயரே மருந்தின் விகற்பமும்
அமர ருணவின் பெயரு மாமே. ....1218
மந்தி யெனும்பெயர் வண்டும் ஆதித்தனும்
குரங்கின் விகற்பமும் கூறப் பெறுமே. ....1219
மன்ற வெனும்பெயர் தேற்றமும் இடைச்சொலும்
மருவு மெனவே வழங்கப் பெறுமே. ....1220
மகர அகர வருக்கம் முற்றும்.மகர ஆகார வருக்கம்
மாலெனும் பெயர்திரு மாலொடு மதிமகன்
காரிநிற வலாரியுங் காற்றொடு சோழனும்
கண்குத்திப் பாம்பும் கருமையும் பெருமையும்
மயக்கமும் விருப்பும் கண்ணே ணியுமாகும். ....1221
மாவெனும் பெயரொரு மரமு மழைத்தலும்
திருவுங் குதிரையும் செல்வமும் கறுப்பும்
விலங்கின் பொதுவும் விளைநிலமு மழகும்
வண்டு மோரிலக்கமும் பெருமை நிறமும்
நென்மா முதலவு நிகழ்த்தப் பெறுமே. ....1222
மாலை யெனும்பெய ரொழுக்கமு மியல்பும்
நதியும் இரவும் மலரான் மணியாற்
சொல்லாற் பொன்னாற் றொடுத்திடு தொடையுமாம்....1223
மானெனும் பெயரே மகர விராசியும்
விலங்கின் பொதுவுட னுழையையும் விளம்புவர். ....1224
மாரி யெனும்பெயர் மழையு மேகமும்
வடுகியு மதுவு மரணமும் வழங்கும். ....1225
மாதிர மெனும்பெயர் திசையும் யானையும்
மலையு மெனவே வழங்கப் பெறுமே. ....1226
மாதவ மெனும்பெயர் வளர்தவப் பெயரும்
இளவேனிற் பெயரு மதுவு மியம்புவர். ....1227
மார்க்க மெனும்பெயர் வழியுந் தெருவும்
சமைய விகற்பமுஞ் சாற்றப் பெறுமே. ....1228
மாட மெனும்பெயர் மனையும் உழுந்துமாம். ....1229
மாழை யெனும்பெயரு லோகக் கட்டியும்
பொன்னு மழகும் புளிமாவும் ஓலையும்
திரண்ட வடிவும் செப்புவர் புலவர். ....1230
மாசெனும் பெயரே மேகமும் அழுக்கும்
சிறுமையுங் குற்றமும் செப்பப் பெறுமே. ....1231
மாத ரெனும்பெய ரிடைச்சொலு மழகும்
காதலும் அரிவையர் பெயரும் கருதுவர். ....1232
மாந்த லெனும்பெயர் மரித்தலும் குடித்தலும்
உண்டலு மெனவே யுரைத்தனர் புலவர். ....1233
மாய னெனும்பெயர் மாதவன் பெயரும்
கருநிற முடையோன் பெயரும் கருதுவர். ....1234
மாய்த லெனும்பெயர் மறைதலும் மரணமும். ....1235
மாருதி யெனும்பெயர் அநுமன் பெயரும்
வீமன் பிதாவின் பெயரும் விளம்புவர். ....1236
மாய மெனும்பெயர் வஞ்சனைப் பெயரும்
பொய்யுங் கருநிறப் பெயரும் புகலுவர். ....1237
மாயை யெனும்பெயர் மாயமும் சத்தியும். ....1238
மாடெனும் பெயரே தனமும் பக்கமும்
மணியுஞ் செல்வமு நிரையும் வழங்கும். ....1239
மாலிகை யெனும்பெயர் மதுவு மாலியும். ....1240
மானுத லெனும்பெயர் மயக்கமு முவமையும்
இலச்சையு மெனவே இயம்புவர் புலவர். ....1241
மான மெனும்பெயர் லச்சையு மளவும்
விமானமுங் குற்றமும் பெருமையும் விளம்புவர். ....1242
மகர ஆகார வருக்கம் முற்றும்.மகர இகர வருக்கம்
மிசையெனும் பெயரே மீமிசைச் சொல்லும்
உணவுடன் மேடு முரைக்கப் பெறுமே. ....1243
மிச்சை யெனும்பெயர் மிடித்தலும் பொய்த்தலும்
அறிவின் மைப்பெயர் தானு மாமே. ....1244
மிதவை யெனும்பெயர் தெப்பமுஞ் சோறுமாம். ....1245
மகர இகர வருக்கம் முற்றும்.மகர ஈகார வருக்கம்
மீனெனும் பெயரே வான்மீ னோடு
மச்சமும் சித்திரை நாளும் வழங்கும். ....1246
மீளி யெனும்பெயர் மிடலும் பெருமையும்
தலைவனும் விறலோன் பெயருஞ் சாற்றுவர். ....1247
மீக்கூ றெனும்பெயர் சொற்செல வுடனே
கீர்த்திப் பெயருங் கிளத்தப் பெறுமே. ....1248
மகர ஈகார வருக்கம் முற்றும்.மகர உகர வருக்கம்
முறமெனும் பெயரே வியாகமுஞ் சுளகுமாம். ....1249
முறிகுள மெனும்பெயர் பூராட நாளும்
உடைகுளப் பெயரு முரைத்தனர் புலவர். ....1250
முரசெனும் பெயரே முரசின் விகற்பமும்
உத்திரட் டாதியு முரைக்கப் பெறுமே. ....1251
முனியெனும் பெயர்தவ முனிவன் பெயரும்
தந்தியின் கன்றுந் தனுவி ராசியும்
வில்லும் புலவோர் விளம்பப் பெறுமே. ....1252
முதலை யென்பெயர் செங்கிடையு மிடங்கரும்
மயிலிறகின் முதன் முள்ளும் வழங்கும். ....1253
முரம்பெனும் பெயரே மேடும் பாறையும்
பரலடுத் துயர்ந்த நிலமும் பகருவர். ....1254
முளையெனும் பெயரே மூங்கிலும் சுதனும்
அங்குரத் தின்பெயர் தானு மாமே. ....1255
முறுவ லெனும்பெயர் தந்தமு முகையுமாம். ....1256
முன்ன லெனும்பெயர் நெஞ்சமு நினைவுமாம். ....1257
முனையெனும் பெயரே முரண்பெறு பகையும்
கூர்மையும் வெறுப்பும் கூறுவர் புலவர். ....1258
முரணெனும் பெயரே பெலமும் பகையுமாம். ....1259
முருகெனும் பெயரே முருகக் கடவுளும்
இளமையும் விழாவு மெழிலும் வாசமும்
மதுவு மெலுமிச்சும் வழங்கப் பெறுமே. ....1260
முறையெனும் பெயரே முறைப்பெயர் விகற்பமும்
இயல்பும் பொத்தகப் பெயரும் இயம்புவர். ....1261
முடலை யெனும்பெயர் திரண்ட வடிவும்
பெருமையு மென்னப் பேசுவர் புலவர். ....1262
முன்ன மெனும்பெயர் முற்கா லத்தொடு
சிங்கமும் குறிப்பும் சீக்கிரமு மாமே. ....1263
முடங்க லெனும்பெயர் மடங்கலுந் தாழையும்
மூங்கிலு நோயு மொழியப் பெறுமே. ....1264
முத்த மெனும்பெயர் அதரமும் பிரியமும்
முத்து மருத நிலமு மொழிகுவர். ....1265
முண்டசு மெனும்பெயர் முள்ளுடை மூலமும்
கமலமும் தாழையும் கள்ளுநீர் முள்ளியும்
நெற்றியு மெனவே நிகழ்த்தப் பெறுமே. ....1266
முல்லை யெனும்பெயர் முல்லை நன்னிலமும்
மல்லிகைப் பெயரும் வெற்றியுங் கற்புமாம். ....1267
முடியெனும் பெயர்மயிர் முடியும் தலையும்
மகுடமு மெனவே வழங்குவர் புலவர். ....1268
முச்சி யென்பெயர் மயிர்முடியு முச்சியும். ....1269
முற்றெனும் பெயரே முழுதும் வளைத்தலும். ....1270
முற்ற லெனும்பெயர் சூழ்போதலும் வெறுத்தலும்
முதுமையு முடிவின் பெயரு மொழிகுவர். ....1271
முளரி யெனும்பெயர் விறகுஞ் சிறுமையும்
கமலமும் காடும் கனலும் முண்மரமும்மாம். ....1272
மகர உகர வருக்கம் முற்றும்.மகர ஊகார வருக்கம்
மூதிரை யெனும்பெயர் முக்கண்ணன் பெயரும்
ஆதிரை நாளு மாமென நவில்வர். ....1273
மூல மெனும்பெயர் கிழங்கு மோர்நாளும்
முதலு நிமித்தமும் வேரு மொழிந்தனர். ....1274
மூர லெனும்பெயர் முறுவலும் தந்தமும்
சோறு மெனவே சொல்லுவர் புலவர். ....1275
மூரி யெனும்பெயர் முரணும் பெருமையும்
எருமையு மிடபமுஞ் சோம்பு நெரிவுமாம். ....1276
மூச லெனும்பெயர் மொய்த்தலுஞ் சாவுமாம். ....1277
மூழி யெனும்பெயர் வாவியுஞ் சேறும்
அகப்பையின் பெயரு மாகு மென்ப. ....1278
மூழை யெனும்பெயர் அகப்பையுஞ் சேறுமாம். ....1279.
மகர ஊகார வருக்கம் முற்றும்.மகர எகர வருக்கம்
மெய்யெனும் பெயரே மெய்மையும் ஞானமும்
சடமும் ஒற்றெழுத்தும் மெய்ப்பொருளும் சாற்றுவர். ....1280
மெத்தை யெனும்பெயர் சட்டையு மணையுமாம். ....1281
மகர எகர வருக்கம் முற்றும்.மகர ஏகார வருக்கம்
மேதை யெனும்பெயர் அறிவும் புதனும்
இறைச்சியு மெனவே யியம்புவர் புலவர். ....1282
மேலெனும் பெயரே மேல்பால் திசையும்
இடமும் விசும்பு மியல்புளோர் பெயருமாம். ....1283
மேக்கெனும் பெயரே மேலு மேற்றிசையுமாம். ....1284
மேனி யெனும்பெயர் நிறைவும் வடிவுமாம். ....1285
மகர ஏகார வருக்கம் முற்றும்.மகர ஐகார வருக்கம்
மையெனும் பெயரே மேட விராசியும்
ஆடுங் குற்றமும் அஞ்சனமும் கறுப்பும்
மேகமு மெனவே விளம்புவர் புலவர். ....1286
மைந்த னெனும்பெயர் திறலோன் பெயரும்
புதல்வன் பெயரும் புகலப் பெறுமே. ....1287
மகர ஐகார வருக்கம் முற்றும்.மகர ஒகர வருக்கம்
மொக்கு ளெனும்பெயர் பூவின் முகுளமும்
குமிழியு மெனவே கூறுவர் புலவர். ....1288
மொய்யெனும் பெயர்போர்க் களமும் யானையும்
வண்டுங் கூட்டமும் வகுக்கப் பெறுமெ. ....1289
மொய்ம்பெனும் பெயரே பெலமும் புயமுமாம். ....1290
மகர ஒகர வருக்கம் முற்றும்.
மகர ஓகார வருக்கம்
மோடெனும் பெயரே உயரமும் பெருமையும்
வயிறு மெனவே வகுத்தனர் புலவர். ....1291
மகர ஓகார வருக்கம் முற்றும்.மகர ஒளகார வருக்கம்
மெளலி யெனும்பெயர் சடையும் கிரீடமும். ....1292
யவன ரெனும்பெயர் சோனகர் பெயரும்
மகர ஒளகார வருக்கம் முற்றும்.
8 வது மகர வருக்கத் தொகுதி முற்றும்.
9 வது யகர வருக்கத் தொகுதி
யகர அகர வருக்கம்
சித்திர காரர்தம் பெயரும் செப்புவர். ....1293
யகர அகர வருக்கம் முற்றும்.யகர ஆகார வருக்கம்
யாம மெனும்பெயர் இரவும் தெற்கும்
சாமமு மெனவே சாற்றப் பெறுமே. ....1294
யாழெனும் பெயரே வீணைக் கருவியும்
ஆதிரை நாளும் அசுபதிப் பெயரும்
மிதுன ராசியும் விளம்புவர் புலவர். ....1295
யாண ரெனும்பெய ரழகும் புதுமையும்
நன்மையும் யாழ்பயி னல்லோர் பெயரும்
தச்சரு மெனவே சாற்றப் பெறுமே. ....1296
யாப்பெனும் பெயரே கவிதையும் கட்டுமாம். ....1297
யான மெனும்பெயர் ஊர்தியின் விகற்பமும்
மரக்கால் பெயரும் வழங்கப் பெறுமே. ....1298
யானு வெனும்பெயர் நன்மையு மழகுமாம். ....1299
யகர ஆகார வருக்கம் முற்றும்யகர ஊகார வருக்கம்
யூப மெனும்பெயர் படையின் துறுப்பும்
கபந்தமும் வேள்வித் தறியுங் கருதுவர். ....1300
யூக மெனும்பெய ருட்பொரு ளுணர்த்தலும்
கோட்டா னுங்கருங் குரங்குந் தருக்கமும்
உடற்குறை யுமென வுரைக்கப் பெறுமே. ....1301
யகர ஊகார வருக்கம் முற்றும்.யகர ஓகார வருக்கம்
யோக மெனும்பெயர் உபாயமு முயற்சியும்
வலவை யெனும்பெயர் வஞ்சப் பெண்ணொடு
தியானமுங் கூட்டமுஞ் செல்வமும் சிறப்புமாம். ....1302
யகர ஓகார வருக்கம் முற்றும்.
யகர வருக்கத் தொகுதி முற்றும்.
10 வது வகர வருக்கத் தொகுதி
வகர அகர வருக்கம்
வெறியாட் டாளனும் வல்லோன் பெயருமாம். ....1303
வருட மெனும்பெயர் மழையும் யாண்டுமாம். ....1304
வன்னி யெனும்பெயர் ஒருமரப் பெயரும்
நெருப்புங் கிளியும் பிரம சாரியுமாம். ....1305
வயலெனும் பெயரே செய்யும் வெளியும்
மருத நன்னிலமும் வழங்கப் பெறுமே. ....1306
வசியெ னும்பெயர் வாளும் வடுவும்
வசிகமுங் கூர்மையும் வழங்கப் பெறுமே. ....1307
வடவை யெனும்பெயர் வடவா வனலும்
குதிரைப் பெட்டையு மதகரிப் பிடியும்
பெண்பா லெருமைப் பெயரும் பேசுவர். ....1308
வயமெனும் பெயரே வலிமையும் புனலும்
புட்பொதுப் பெயரும் புகலுவர் புலவர். ....1309
வழியெனும் பெயரே மரபுந் தொடர்ச்சியும்
தருமமு மிடமுந் தனையனும் நடவையும். ....1310
வஞ்சனை யெனும்பெயர் மாயையும் பொய்யும்
வஞ்சகப் பெயரும் வழங்கப் பெறுமே. ....1311
வரையெனும் பெயரே மலையு மூங்கிலும்
அளவுங் கைவரையு மாகு மென்ப. ....1312
வசதி யெனும்பெயர் மனையு மூரும்
சிறப்புறு மிடமும் செப்புவர் புலவர். ....1313
வயவன் எனும்பெயர் வலிமான் குருவியும்
விறலோன் காதலன் பெயரும் விளம்புவர். ....1314
வயாவெனும் பெயரே வருத்தமும் விருப்பமும்
நோயும் கருப்பமும் நுவலுவர் புலவர். ....1315
வள்ளெனும் பெயரே வல்லி பற்றிரும்பும்
கூர்மையுங் காதும் வகிர்தலும் கூறுவர். ....1316
வண்டெனும் பெயர்கை வளையும் குற்றமும்
பூசமும் சுரும்பும் புரியும் வெண்பணிலமும்
மாதர் விளையாடலும் அம்பும் வழங்கும். ....1317
வட்ட மெனும்பெயர் பாரா வளையமும்
பரிசையுந் திகிரியும் பரந்த கைமணியும்
வட்ட வடிவுந் தடாகமு நீர்ச்சாலுந்
துகிலு மூர்கோளுஞ் சொல்லுவர் புலவர். ....1318
வஞ்சி யெனும்பெயர் மாதுமோர் கொடியும்
பாவின் விகற்பமும் போர்மேற் செலவும்
மருத யாழ்த்திறமும் வகுத்துரைத் தனரே. ....1319
வடுகெனும் பெயரே யிந்தள விசையும்
மருத யாழ்த்திறமும் வகுத்துரைத் தனரே. ....1320
வஞ்சக மெனும்பெயர் வாளுங் கபடுமாம். ....1321
வயிர மெனும்பெயர் வச்சிர மணியும்
மரத்தின் வயிரமும் வச்சிரா யுதமும்
சினமும் கூர்மையும் செப்புவர் புலவர். ....1322
வறிதெனும் பெயரே பயனில் வார்த்தையும்
சிறிதும் அறியாமையு மருகலுஞ் செப்புவர். ....1323
வம்பெனும் பெயரே மணமு மிடாவும்
நிலையின் மையு முலைக்கச்சும் புதுமையும். ....1324
வதுவை யெனும்பெயர் மணமும் கலியாணமும். ....1325
வழங்க லெனும்பெய ருலாவலு முரைத்தலும்
கொடுத்தலு மெனவே யறைந்தனர் புலவர். ....1326
வலித்த லெனும்பெயர் நினைத்தலும் பேசலும். ....1327
வலம்புரி யெனும்பெயர் சலஞ்சலப் பெயரும்
நந்தியா வத்தமு நவிலப் பெறுமே. ....1328
வலவ னெனும்பெயர் வெற்றி யாளனும்
தேர்ப்பா கனுமெனச் செப்புவர் புலவர். ....1329
வள்ள மென்பெயர் மரக்காலும் வட்டிலும். ....1330
வக்கிர மெனும்பெயர் மடங்கலும் கொடுமையும்
வட்டமு மெனவே வழங்கப் பெறுமே. ....1331
வசந்த னெனும்பெயர் மதனுந் தென்காலுமாம். ....1332
வரியெனும் பெயர்நெற் பொதுவும் வாரியும்
எழுத்துஞ் சுணங்கு மின்னிசைப் பாடலும்
குடியிறைப் பெயரும் சந்தித் தெருவும்
நீளமு மெனவே நிகழ்த்துவர் புலவர். ....1333
வனமெனும் பெயரே யூர்சூழ் சோலையும்
நீருந் துழாயும் காடு மிகுதியும்
ஈரமு மெனவே யியம்பப் பெறுமே. ....1334
வடக மெனும்பெயர் வடக வுடையும்
தோலின் பெயரும் சொல்லப் பெறுமே. ....1335
வங்க மெனும்பெயர் வழுதுணைப் பெயரும்
வெள்ளீ யத்தினொடு தோணியும் விளம்புவர். ....1336
வசந்த மெனும்பெயர் வசந்த காலமும்
புரந்தரன் மாளிகை மணமும் புகலுவர். ....1337
வல்லி யெனும்பெயர் கொடியும் ஆய்ப்பாடியும்
நிகளமு மெனவே நிகழ்த்தப் பெறுமே. ....1338
வல்லெனும் பெயரே வலிமையும் விரைவும்
சூது மெனவே சொல்லுவர் புலவர். ....1339
வடுவெனும் பெயரே குற்றமும் சிறுமையும்
தழும்புஞ் சுரும்பொடு சோம்புங் காய்ப்
பிஞ்சுமாம். ....1340
வண்ண மெனும்பெயர் வடிவு மோசையும்
நிறங்களின் விகற்பமு நிகழ்த்தப் பெறுமே. ....1341
வயினெனும் பெயரே வயிறிட மனையுமாம். ....1342
வண்மை யெனும்பெயர் வளமையும் கொடுத்தலும்
வலிமையும் புகழும் வாய்மையும் வழங்கும். ....1343
வசுவெனும் பெயரே பொன்னும் கனலும்
எண்வகை யமரரும் பசுவின் கன்றுமாம். ....1344
வலமெனும் பெயரே கனமும் வெற்றியும்
இடமும் வலப்பாற் பெயரு மியம்புவர். ....1345
வன்மை யெனும்பெயர் வன்மையுங் காடும்
விரைவு மெனவே விளம்புவர் புலவர். ....1346
வளமெனும் பெயரே வனப்பும் பலவகை
வளமும் பதவியும் வழங்கப் பெறுமே. ....1347
வள்ளி யென்பெயர் கைவளையுங் கொடியுமாம். ....1348
வட்க லெனும்பெயர் நாணமும் கேடுமாம். ....1349
வரைதல் எனும்பெயர் நீக்கமும் கொளலுமாம். ....1350
வடமெனும் பெயரால மரமும் கயிறும்
மணிவடப் பெயரும் வழங்குவர் புலவர். ....1351
வயமா வெனும்பெயர் வாசியும் யானையும்
சிங்கமும் புலியும் செப்பப் பெறுமே. ....1352
வகர அகர வருக்கம் முற்றும்.வகர ஆகார வருக்கம்
வார மென்பெயர் மலைச்சார்பும் பகுத்தலும்
கடலு நீர்க்கரை யுங்கரு ஏழ்கிழமையும்
புரிவுறு மன்பையும் புகலுவர் புலவர். ....1353
வானெனும் பெயரே வானமும் பெருமையும்
மேகமும் மழையும் விளம்பப் பெறுமே. ....1354
வாருண மெனும்பெயர் நீருங் கடலும்
மேற்கு மெனவே விளம்புவர் புலவர். ....1355
வாடை யென்பெயர் வடகாற்றும் வீதியும்
சிற்றூர்ப் பெயரையுஞ் செப்பப் பெறுமே. ....1356
வாரி யெனும்பெயர் கடலு நீர் மிகுதியும்
நீரும் விளைவுங் கதவின் விகற்பமும்
மதிலின் சுற்றும் வருபுனல் மடையும்
வாய்தலுஞ் செல்வ வரத்தும் வழியும்
ஆனை படுக்கு மிடமு மாமே. ....1357
வாமன மெனும்பெயர் குறளுமோர் சமயமும்
திசைநிலைக் குஞ்சரத் தொன்றும் செப்புவர். ....1358
வான மெனும்பெயர் மழையு மாகாயமும்
உலர்மரப் பெயரதன் கனியையு முணர்த்துவர். ....1359
வாணி யெனும்பெயர் வார்த்தையின் பெயரும்
பாரதி பெயரும் பகழியு நடமுமாம். ....1360
வாச மெனும்பெயர் புள்ளின் சிறகும்
பூவின் மணமும் புடைவையின் பெயரும்
இருப்பிட முமென வியம்புவர் புலவர். ....1361
வாயி லென்பெயர் ஐம்புலனு மேதுவும்
கதவின் விகற்பமும் இடமும் கருதுவர். ....1362
வானி யெனும்பெயர் சேனையும் துவசமும்
மேற்கட்டி யுமென விளம்பப் பெறுமே. ....1363
வாளெனும் பெயரே வாளா யுதமும்
ஒளியு மெனவே யுரைத்தனர் புலவர். ....1364
வாலெனும் பெயரே பெருமையுஞ் சுத்தமும்
விலங்கின் வாலும் வெண்மை நிறமுமாம். ....1365
வாரணம் எனும்பெயர் மதகரிப் பெயரும்
சங்கும் கவசமும் தடுத்தலும் கோழியும்
கடலு மெனவே கருதப் பெறுமே. ....1366
வாங்கல் லெனும்பெயர் வளைத்தலுங்கொளலுமாம். ....1367
வாசி யெனும்பெயர் குழலிசை விகற்பமும்
குதிரையின் பெயரும் கூறப் பெறுமே. ....1368
வாலி யெனும்பெய ரலாயுதன் பெயரும்
கிட்கிந்தை யரசன் பெயரும் கிளத்துவர். ....1369
வாத மெனும்பெயர் தர்க்கமும் காற்றுமாம். ....1370
வாம மென்பெய ரிடப்பாலு மழகும்
குறளு மோர்சமையப் பெயருங் கூறுவர். ....1371
வாரெனும் பெயர்முலைக் கச்சு நெடுமையு
நீரு நேர்மையும் வகிர்தலும் நிகழ்த்துவர். ....1372
வாயெனும் பெயர்வரு வாயும் வாய்மையும்
வாய்தலும் வாயின் பெயரு மிடமுமாம். ....1373
வாகை யெனும்பெய ரொழுக்கமும் தவமும்
தருமக் கருமமுஞ் சால்பு மிகுதியும்
ஆள்வினை முதலாஞ் செய்கை நலமும்
கைவல முதலாங் கல்வி ஆண்மையும்
ஒருவரி லொருவர் வென்றியுமோர் மரமும்
பண்பு மிகையும் பகரப் பெறுமே. ....1374
வாழி யெனும்பெயர் வாழ்கவென் சொல்லும்
இடைச்சொலின் பெயரும் இயம்புவர் புலவர். ....1375
வகர ஆகார வருக்கம் முற்றும்.வகர இகர வருக்கம்
விண்டெனும் பெயரே மேகமும் மூங்கிலும்
மாயனும் காற்றும் மலையும் விளம்புவர். ....1376
விசும்பெனும் பெயரே விண்ணுஞ் சுவர்க்கமும்
மேகமுந் திசையும் விளம்பப் பெறுமே. ....1377
விசைய மெனும்பெயர் வென்றியி னொடுசர்க்
கரையுங் கதிர்மண் டலமுங் கருதுவர். ....1378
விழவெனும் பெயரே மிதுன ராசியும்
உத்சவப் பெயரு முரைக்கப் பெறுமே. ....1379
விடமெனும் பெயரே நஞ்சுந் தேளும்
ஒருமரப் பெயரு முரைத்தனர் புலவர். ....1380
விடரெனும் பெயரே வெற்பின் முழையும்
கமருந் தவத்தோ ரிடமும் காடுமாம். ....1381
விளவெனும் பெயரே விளமரமும் கமருமாம். ....1382
விடங்க மெனும்பெயர் வீதிக் கொடியும்
ஆண்மையு மழகும் கொடுங்கையு மனையின்
முகடு மெனவே மொழிந்தனர் புலவர். ....1383
விடலை யெனும்பெயர் விறலோன் பெயரும்
தலைவன் பெயரும் சாற்றுவர் புலவர். ....1384
விழைந்தோ னெனும்பெயர் வேட்டோ ன் பெயரும்
கொண்கனு மெனவே கூறப் பெறுமே. ....1385
விலோத மெனும்பெயர் பெண்பான் மயிரும்
மியிர்ச்சுரு ளும்மென வழங்குவர் புலவர். ....1386
விறலெனும் பெயரே வென்றியும் பலமுமாம். ....1387
விதப்பெனும் பெயரே மிகுதியும் பெலமுமாம். ....1388
விறப்பெனும் பெயரே யச்சமும் பெலமும்
செறிவு மெனவே செப்புவர் புலவர். ....1389
வியப்பெனும் பெயர்சினக் குறிப்புஞ் சினமும்
அதிசயப் பெயரு மாகு மென்ப. ....1390
விழைச்செனும் பெயரே விருப்பு நல்லிளமையும்
புணர்ச்சி யனுபோகப் பெயரும் புகலுவர். ....1391
விடையெனும் பெயரெதிர் மொழியு மெருது
மேவுதற் பெயரும் இயம்புவர் புலவர். ....1392
விந்த மென்பெயர் தாமரையு மோர்கிரியுமாம். ....1393
விம்ம லெனும்பெயர் ஒலித்தலும் அழுகையும். ....1394
வியலெனும் பெயரே பெருமையும் அகலமும். ....1395
விபுல மெனும்பெயர் பெருமையும் அகலமும். ....1396
வில்லெனும் பெயரே மூல நாளும்
ஒளியும் வார்சிலையு முரைக்கப் பெறுமே. ....1397
விதியெனும் பெயரே பிரமனுந் தொழிலும்
இயல்புமூழ் முறையு மியம்பப் பெறுமே. ....1398
விருகோ தரனெனும் பெயர்யம ராயனும்
வீமன் பெயரும் விளம்பப் பெறுமே. ....1339
வித்த மெனும்பெயர் அறிவும் கனகமும்
பழித்தலு மெனவே பகரப் பெறுமே. ....1400
விளிவெனும் பெயரே வீதலும் கேடுமாம். ....1401
விருத்தி யெனும்பெயர் விரித்திடு பொருளும்
தன்றொழி லிலாபமும் ஆக்கத்தின் பெயருமாம். ....1402
விபூதி யெனும்பெயர் செல்வமு நீறும்
கொடுமையுந் தசையுங் குற்றமு நரகுமாம். ....1403
விடப மெனும்பெயர் மரக்கொம்புங் காளையும்
இடப ராசியும் இயம்புவர் புலவர். ....1404
விளரி யெனும்பெயர் வேட்கையின் மிகுதியும்
இளமையும் யாழிலோர் நரம்பும் யாழுமாம். ....1405
விழும மெனும்பெயர் சீர்மையும் சிறப்பும்
இடும்பையு மெனவே யியம்பப் பெறுமே. ....1406
விளரெனும் பெயரே வெளுப்பு மிளமையுங்
கொழுப்பு மெனவே கூறுவர் புலவர். ....1407
விண்ணெனும் பெயரே விசும்பு மேகமுமாம். ....1408
விரையெனும் பெயரே சாந்தும் தூமமும்
மணமு மெனவே வழங்கப் பெறுமே. ....1409
வியாள மெனும்பெயர் அரவும் புலியுமாம். ....1410
விலங்கெனும் பெயரே மிருகமுந் தளையுமாம். ....1411
விநாயக னெனும்பெயர் விறற்கரி முகனும்
அருகனும் புத்தனு மாகு மென்ப. ....1412
வகர இகர வருக்கம் முற்றும்.வகர ஈகார வருக்கம்
வீரை யெனும்பெயர் விரிகடற் பெயரொடு
துயரையு மொருமரப் பெயரையுஞ் சொல்லுவர். ....1413
வீதி யெனும்பெயர் நேரோ டுதலுந்
தெருவு மெனவே செப்பப் பெறுமே. ....1414
வீயெனும் பெயரே வீதலு நீக்கமும்
பூவும் புள்ளின் பொதுவு மாமே. ....1415
வீச லெனும்பெயர் எறிதலும் கொடையுமாம். ....1416
வீதல் எனும்பெயர் கெடுதலும் சாதலும். ....1417
வகர ஈகார வருக்கம் முற்றும்.வகர எகர வருக்கம்
வெள்ளை யெனும்பெயர் வெளிறும் வெண்பாவும்
வெள்ளாட் டேறும் வெண்மையு மதுவும்
பெலதே வனும்வெண் சங்கும் பேசுவர். ....1418
வெறியெனும் பெயரே யணங்காட்டு வட்டமும்
அச்சமும் பேயு மணம்பெறு நாற்றமும்
ஆடுங் கலகமு நோயு மாமே. ....1419
வெள்ள மென்பெயர் நீர்மிகுதியுங் கடலும்
கடற்றிரைப் பெயரு மோரெண்ணுங் கருதுவர். ....1420
வெதிரெனும் பெயரே செவிடனு மூங்கிலும். ....1421
வெறுக்கை யெனும்பெயர் விபவமும் கனகமும்
வெறுத்தலும் புலவோர் விளம்பப் பெறுமே. ....1422
வெளிலெனும் பெயரே வேழத் தம்பமும்
அணிலும் பாடையும் தயிர்கடை தறியுமாம். ....1423
வெடியெனும் பெயரே யச்சமும் வெளியும்
பரிமளப் புகையும் பகரப் பெறுமே. ....1424
வெம்மை யெனும்பெயர் விருப்பு முட்டிணமும்
விரைவு மெனவே விளம்பப் பெறுமே. ....1425
வெள்ளி லெனும்பெயர் விளவும் பாடையும். ....1426
வெய்யோ னெனும்பெயர் விருப்பினன் பெயரும்
இரவியுங் கொடியோன் பெயரு மியம்புவர். ....1427
வெள்ளி யெனும்பெயர் அசுரர் மந்திரியும்
இரசதப் பெயரு மியம்புவர் புலவர். ....1428
வகர எகர வருக்கம் முற்றும்.வகர ஏகார வருக்கம்
வேளெனும் பெயரே வேற்கும ரேசனும்
வில்வேளுஞ் சழுக்கி வேந்தரு மாமே. ....1429
வேட்டுவ னெனும்பெயர் வேடனு மகமும்
குழவிச் சிறுபுட் பெயருங் கூறுவர். ....1430
வேலை யெனும்பெயர் கடலுடன் கடற்கரை
பொழுது மெனவே புகன்றனர் புலவர். ....1431
வேணி யெனும்பெயர் விசும்புங் கோடீரமும். ....1432
வேள்வி யெனும்பெயர் வேள்விக் குண்டமும்
கொடுத்தலும் யாகமும் குறைவில் பூசனையும்
மகாநாட் பெயரும் வழங்குவர் புலவர். ....1433
வேலி யெனும்பெயர் ஊருங் காவலும்
விளைநில மும்பயிர் வேலியு மதிலுமாம். ....1434
வேய்த லெனும்பெயர் வேயுள் சூடுதலுமாம். ....1435
வேதிகை யெனும்பெயர் பலகையுந் திண்ணையும். ....1436
வேளாள ரென்பெயர் தனவசியர் பேரும்
தியாகியர் பெயருடன் சிறந்த காராளரும். ....1437
வேங்கை யெனும்பெயர் புலியுமோர் தருவும்
பொன்னு மெனவே புகன்றனர் புலவர். ....1438
வேலெனும் பெயரே மரத்தின் விகற்பமும்
படைக்கலப் பொதுவும் வேற்படையும் பகருவர். ....1439
வேளாண்மை யெனும்பெயர் மெய்யும் கொடையுமாம். ....1440
வேயெனும் பெயரே யொற்று மூங்கிலும்
உட்டுளை வடிவு முரைத்தனர் புலவர்.
வேணு வெனும்பெய ருட்டுளைப் பொருளும்
மூங்கிலும் வில்லும் வாளு மொழிகுவர். ....1441
வேழ மெனும்பெயர் வேழப் பூச்சியுங்
கரும்பு மூங்கிலுங் கொறுக்கச்சியும் யானையும். ....1442
வேசரி யெனும்பெயர் கோவேறு கழுதையும்
மூதேவி யூர்தியும் மொழியப் பெறுமே. ....1444
வேந்த னெனும்பெயர் வியாழமு மரசனும்
சந்திரன் பெயரும் தருகதி ரிரவியும்
இந்திரன் பெயரு மியம்புவர் புலவர். ....1445
வேலா வலய மெனும்பெயர் கடலும்
பூமியு மெனவே புகன்றனர் புலவர். ....1446
வேரெனும் பெயர்மர வேரும் வெயர்வுமாம். ....1447
வேதண்ட மென்பெயர் வெள்ளி மலையும்
பொருப்பின் பொதுவும் புகலப் பெறுமே. ....1448
வேல னெனும்பெயர் செவ்வேள் பெயரும்
வெறியாட் டாளன் பெயரு மியம்புவர். ....1449
வகர ஏகார வருக்கம் முற்றும்.வகர ஐகார வருக்கம்
வைக லெனும்பெயர் தங்கலுந் தினமும்
புலரிக் காலமும் புகன்றனர் புலவர். ....1450
வையெனும் பெயரே நெல்லின் றாளும்
கூர்மையும் புல்லும் கூறப் பெறுமே. ....1451
வைய மெனும்பெயர் உரோகிணி நாளும்
ஆனே றுஞ்சகட வூர்தியும் சிவிகையும்
பாருந் தேரும் பகரப் பெறுமே. ....1452
வகர ஐகார வருக்கம் முற்றும்.
10 வது வகர வருக்கத் தொகுதி முற்றும்.
1452 சூத்திரங்கள்.
வடமலை நிகண்டு முற்றும்.