"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil Language & Literature > Tamil Ilakkanam including Tolkappiyam: இலக்கணம் - தொல்காப்பியம் > நேமிநாதம் - (ஒரு தமிழ் இலக்கண நூல்)
nEminAtam (a work on Tamil Grammar)
நேமிநாதம் - (ஒரு தமிழ் இலக்கண நூல்)
Etext Preparation & proof-reading : Mr. N.D. Logasundaram (input), Ms. L. Selvanayagi (proof-reading), Chennai, Tamilnadu; web version: Mr. N.D. Logasundaram, Chennai, Tamilnadu & Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland; Source Acknowledgement: VAviLLa ramaswAmi sAstrulu and sons, 292, Esplanade, Chennai, printed at The Sri Rama Press 15, Broadway Madras, 1927. PatippAaciriyar 'maNi thirunavuKaracu mudaliar' of chennai (paccaiyppan kallUri tamizAciriyar).
© Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கடவுள் வாழ்த்து
பூவின்மேல் வந்தருளும் புங்கவன்தன் பொற்பாதம்
நாவினால் நாளும் நவின்றேத்தி - மேவுமுடி
பெல்லாம் உணர எழுத்தின் இலக்கணத்தைச்
சொல்லால் உரைப்பன் தொகுத்து.
அவையடக்கம்
உண்ண முடியாத வோதநீர் வான்வாய்ப்பட்
டெண்ண அமுதான தில்லையோ - மண்ணின்மேல்
நல்லாரைச் சேர்ந்தலால் நான்சொன்ன புன்சொல்லும்
எல்லோரும் கைகொள்வர் ஈங்கு.
ஆவி அகரமுதல் ஆயிரண்டாய் ஆய்தமிடை | 1 |
ஆன்றவுயிர் ஈராறும் ஐங்குறில் ஏழ்நெடிலாம் | 2 |
ஓங்குயிர்கள் ஒற்றில்மேல் ஏறி உயிர்மெய்யாய் | 3 |
தொடர்நொடிற் கீழ்வன்மை மேலுகரம் யப்பின்பு | 4 |
குறில்நெடில்கள் ஒன்றிரண்டு மூன்றளவு காலாங் | 5 |
உந்தியிற் றோன்றும் உதான வளிப்பிறந்து | 6 |
காட்டு முயிருங் கசதநப மவ்வரியும் | 7 |
உயிரின்கண் ஒன்பா னுடன்மென்மை இம்மூன்று | 8 |
ஆதியுயிர் வவ்வியையின் ஔவாம் அஃதன்றி | 9 |
அகரத்திற்கு ஆவும் இகரத்திற் ஐயும் | 10 |
நேர்ந்தமொழிப் பொருளை நீக்க வருநகரஞ் | 11 |
மெய்யீறு உயிரீறு உயிர்முதன் மெய்ம்முதலா | 12 |
மூன்றுநான் கொன்பான் உயிர்ப்பின்னும் அல்லாத | 13 |
குற்றுகரம் ஆவி வரிற்சிதையு கூறியவல் | 14 |
குற்றொற் றிரட்டுமுயிர் வந்தால் யரழக்கண் | 15 |
வாய்ந்த வுயிர்ப்பின் வருமெழுத்தின் வர்க்கத்தொற் | 16 |
வன்மை வரினே ளணலன மாண்டறவா | 17 |
மகரந்தான் வன்மைவரின் வர்கத்தொற் றாகும் | 18 |
உரிவரின் நாழியி னீற்றுயிர்மெய் யைந்தாம் | 19 |
நின்றமுதற் குற்றுயிர்தான் நீளுமுதல் நெட்டுயிர்தான் | 20 |
ஒன்பா னொடுபத்து நூறதனை யோதுங்கான் | 21 |
மேய விருசொற்பொருள்தோன்ற வேறிருத்தி | 22 |
உற்றஆ காரம் அகரமாய் ஓங்குகரம் | 23 |
ஐந்தாறாம் ஆறு பதினாறாம் ஒற்றுமிகும் | 24 |
கடவுள் வாழ்த்து
தாதார் மலர்பிண்டித் தத்துவனை வந்தித்துப்
போதார் நறுந்தெரியற் போர்வேற்கட் - பேதாய்
விரித்துரைத்த நூல்களினும் வேண்டுவன கொண்டு
தெரித்துரைப்பன் சொல்லின் திறம்.
2.1. மொழியாக்க மரபு
ஏற்ற திணையரண்டும் பாலைந்தும் ஏழ்வழுவும் | 1 |
மக்கள் நரகரே வானோர் எனும்பொருள்கள் | 2 |
ஒருவன் ஒருத்திபலர் ஒன்றுபல வென்று | 3 |
அன்னானும் அள்ளாளும் அர்ஆர்பவ் வீறுமா | 4 |
பாலே திணையே வினாவே பகர்மரபே | 5 |
ஓதும் எதிர்வினா உற்ற துரைத்தலும் | 6 |
ஐயந் திணைபாலில் தோன்றுமேல் அவ்விரண்டும் | 7 |
குழுவடிமை வேந்து குழவி விருந்து | 8 |
எண்ணும் இருதிணையும் எய்தும் அஃறிணையாம் | 9 |
உயர்வும் இழிவும் உவப்பும் சிறப்பும் | 10 |
பெண்ணான் ஒழிந்த பெயர்தொழி லாகியசொல் | 11 |
பொதுபிரிபால் எண்ணொருமைக் கண்ணன்றிப் போகா | 12 |
ஒப்பிகந்த பல்பொருள்மேற் சொல்லும் உருசொல்லைத் | 13 |
இனமின்றிப் பண்புண்டாஞ் செய்யுஞ் வழக்கேல் | 14 |
2.2. வேற்றுமை மரபு
காண்டகுபே ரையொடுகு இன்னது கண்விளியென் | 15 |
பெயரெழுவாய் வேற்றுமையாம் பின்பதுதா னாறு | 16 |
ஐயென் னுருபிரண் டாவ ததுவினையும் | 17 |
ஓதுங் குகர உருபுநான் காவதஃது | 18 |
அதுவென்ப தாறாம் உருபாம் இதனது | 19 |
2.3. உருபு மயங்கியல்
வேற்றுமை யொன்றன் உரிமைக்கண் வேறொன்று | 20 |
இருசொல் லிருதி யிரண்டே ழலாத | 21 |
ஒன்றன்பேர் ஒன்றற்கு உரைப்பதாம் ஆகுபெயர் | 22 |
2.4. விளி மரபு
ஈறு திரிதலும் ஈற்றயல் நீடலும் | 23 |
இகரம் ஈகாரமாம் ஐஆயாம் ஏயாம் | 24 |
அன்னிறுதி யாவாகும் அண்மைக் ககரமாம் | 25 |
ஈராகும் அர்ஆர் இதன்மேலும் ஏகாரம் | 26 |
ஈற்றயல் நீடும் லளக்கள்தாம் ஏகாரந் | 27 |
விரவுப்பே ரெல்லாம் விளிக்குங்கான் முன்னை | 28 |
2.5. பெயர் மரபு
பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் | 29 |
சுட்டே வினாவொப்பே பண்பே தொகுனளர | 30 |
பகரு முறைசினைப் பல்லோர்நம் மூர்ந்த | 31 |
ஆதியினிற் சுட்டாம் உகரஐ காரப்பேர் | 32 |
இயற்பேர் சினைப்பேர் சினைமுதற்பேர் என்று | 33 |
தந்தைதாய் என்பனவுஞ் சார்ந்த முறைமையால் | 34 |
பேராம் பெயர்பெயர்த்துப் பேர்த்தாம் ஒடுவோடா | 35 |
பாங்கார் பெயர்வினை கொண்டன்றிப் பாறோன்றா | 36 |
ஆய்ந்த வுயர்திணைபேர் ஆவோவாஞ் செய்யுளிடை | 37 |
2.6. வினை மரபு
இறப்பு நிகழ்வெதிர்வாங் காலங்க ளேற்றுங் | 38 |
அம்மாமெம் மேமுங் கடதறமேல் ஆங்கணைந்த | 39 |
ஆங்குரைத்த அன்னானும் அள்ளாலும் அர்ஆர்ப | 40 |
சொன்னஅ ஆவத் துடுறுவும் அஃறிணையின் | 41 |
மின்னும்இர் ஈரும் விளம்பும் இருதிணையின் | 42 |
செய்து செயச்செய்யாச் செய்யிய செய்தெனச் | 43 |
ஆறன்மேற் செல்லும் பெயரெச்சம் அன்றல்ல | 44 |
சாற்றும் பெயர்வினை யெச்சங்கள் தாமடுக்கித் | 45 |
நெடியன் உடையன் நிலத்தன் இளைஞன் | 46 |
கரிதரிது தீது கடிது நெடிது | 47 |
சென்று முதலோடு சேருஞ் சினைவினையும் | 48 |
இசைநிறை நான்கு வரம்பாம் விரைசொல் | 49 |
2. 7. இடைச்சொல் மரபு
சாரியையா யொன்றல் உருபாதல் தங்குறிப்பி | 50 |
தெரிநிலை யாக்கஞ் சிறப்பெச்சம் முற்றெண் | 51 |
காண்டகுமன் னுாக்கங் கழிவே யொழியிசைகொன் | 52 |
வினைபெயரும் எண்ணும் இசைகுறிப்பும் பண்பும் | 53 |
சிறப்பும் வினாவுந் தெரிநிலையும் எண்ணும் | 54 |
2.8. உரிச்சொல் மரபு.
ஒண்பேர் வினையொடுந் தோன்றி யுரிச்சொலிசை | 55 |
கம்பலை சும்மை கலியழுங்கல் ஆர்ப்பரவம் | 56 |
விரைவு விளக்கம் மிகுதி சிறப்பு | 57 |
வெம்மை விருப்பாம் வியலகல மாகுமரி | 58 |
புரையுயர் பாகும் புனிறீன் றணிமை | 59 |
2.9 எச்ச மரபு.
வேற்றுமை யும்மை வினைபண் புவமையுந் | 60 |
உருபுவமை யும்மை விரியி னடைவே | 61 |
ஏனைத் தொகைச்சொற்கள் ஐந்தின் இறுதிக்கண் | 62 |
முன்மொழியும் பின்மொழியும் மூண்ட இருமொழியும் | 63 |
உலவி லுயிர்திணைமே லும்மைத் தொகைதான் | 64 |
இன்னரென முன்னத்தாற் சொல்லுத லென்றசென்ற | 65 |
மெலித்தல்குறுக்கல் விரித்தல் தொகுத்தல் | 66 |
அடிமொழி சுண்ண நிரனிறை விற்பூட் | 67 |
சொல்லாற் றெரிதல் குறிப்பினாற் றோன்றுதலென் | 68 |
முந்துரைத்த காலங்கண் முன்று மயங்கிடினும் | 69 |
புல்லா வெழுத்தின் கிளவிப் பொருள்படினும் | 70 |