கவிஞர் வாலி From Thamizh Literature Through the Ages - Professor C.R. KrishnamurtiKavignar VAli (கவிஞர் வாலி) has written the story of rAman using the puthuk kavithai (புதுக்கவிதை) style under the heading (அவதார புருஷன்). An example of how appealing the puthuk kavithaikaL can be, is illustrated in the following poem in which Kavignar VAli describes the scene when Hanuman met SIthai in the asOka vanam (அசோகவனம்): எனை மீட்க- ஐயன் வரலாம், மீட்டபின் ஐயம் வரலாம் நான் சிறை நீங்கினாலும் - என் கறை நீங்குமா ? மாற்றான் வசமிருந்த மனையாளை - மன்னவன் மனம் ஏற்றாலும்- ஊர்ச் சனம் ஏற்குமா? - உற்றார் இனம் ஏற்குமா ? என்னைக் கறந்தபால் என்று கணிக்குமா ?- இல்லை திரிந்த பால் இன்று தவிர்க்குமா ? - நான் ஆதர ¢த்த அருங்கற்பு அப்பழுக்கு அற்றதென்று முதரித்தல் எவ்வாறு ?- அது முடியாத பட்சத்தில்- ஏனிங்கு முடங்கியிருக்க வேண்டும் - ஓர் அடிமையாய் இவ்வாறு ? இன்னும் ... உயிர்த்தென்ன புண்ணியம் ? உயிர்நீப்பதே கண்ணியம் , வற்கலை அணிந்திருந்த வைதேகியின் உள்ளத்தில் தற்கொலை எண்ணம தலையெடுக்க - ஒரு - குரக்கத்திக் கொடியைக் கழுத்தில் சுற்றி - அவள் சுருக்கிட்டுக் கொண்டு சாக நினைக்க ... அன்னையின் எதிரில் அனுமன் குதித்தான் அன்னைக்கு அனைத்தனையும் ஆதியோ டந்தமாய் அனுமன் விளக்கினான் அன்னையின் அகத்தில் அப்பியிருந்த ஐயப்பாடு எனும் - அழுக்கைத் துலக்கினான் வார்த்தைகளால் - வள்ளல் ராகவனின் - கருமேனியை - வண்ணத் திருமேனியை- ஒரு வரைபடமாய் வரைந்து காகுத்தன் மனைவிக்குக் காட்டினான், பின்பு நம்பி சொன்னவற்றை அம்பிகைக்குச் சொல்லி- நம்பிக்கையை ஊட்டினான். மகிழ்ந்தாள்- மைதிலி நெகிழ்ந்தாள் ........... பேரானந்தத்தில் - பிராட்டி பேச்சற்று நின்ள் கணையாழியை- ஈரக் கன்களால் தின்றாள். |
chandrodhayam oru pennanatho - Music: MSV, Singers: T.M.S & P.Susheela lyric selected and presented by Rajesh Kumar, 25 August 2005 |
chandrodhayam oru pennanatho senthaamarai irukannanatho ponoviyam yendru peraanatho yen vaasal vazhiyaaga valam vanthatho chandrodhayam oru pennanatho senthaamarai irukannanatho
kulir kaatru killatha malarallavo kilivanthu kothaatha kaniallavo nizhalamegam thazhuvaatha nilavallavo nenjodu nee sertha porulallavo yennalum piriyaatha uravallavo
ilam sooriyan unthan vadiv! aanatho sevvaname unthan niramanatho ponmaaligai unthan manamaanatho yen kaadhal uyir vaazha idam thanthatho
muthaaram sirikindra sirippalavo ul nenjl thodugindra neruppalavo sangeetham pozhigindra mozhiyallavo santhosham varugindra vazhiallavo yenkovil kudikona silaiallavo - chandrodhayam
alaiyodu piravaatha kadal illaye nizhalodu nadakkatha udal illaye thudikkatha imayodu vizhi illaye thunaiodu seraatha idham illaye yen meni unathandri yenathillaye
idhazhodu idhazh vaithu imai moodavo vizhugindra sugam vaanga thadai podavo madi meethu thalai vaithu ilaipaaravo mugathodu mugam vaithu muthaadavo kanjaadai kavi solla isai paadavo
ilam sooriyan unthan vadivaanatho sevvaname unthan niramanatho ponmaaligai unthan manamaanatho yen kaadhal uyir vaazha idam thanthatho |
அம்மா என்றழைக்காத உயிரில்லையே |
அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
(அம்மா)
அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம் புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன் அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன் மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே அதை நீயே தருவாயே
(அம்மா)
பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம் இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும் கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா உன்னாலே பிறந்தேனே
(அம்மா) |
உலகத்தின் தூக்கம் கலையாதோ... |
உலகத்தின் தூக்கம் கலையாதோ ஓ.. உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ஓ.. உழைப்பவர் வாழ்க்கை மலராதோ ஓ .. ஒரு நாள் பொழுதும் புலராதோ ஓ.. தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தன் கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான் தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தன் கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான் கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை உறவை கொடுத்தவர் அங்கே அலை கடல் மேலே அலையாய் அலைந்து உயிரைக் கொடுப்பவர் இங்கே வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல் தான் எங்கள் வீடு வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல் தான் எங்கள் வீடு முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை இதுதான் எங்கள் வாழ்க்கை தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தன் கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான் தரைமேல் பிறக்க வைத்தான் கடல் நீர் நடுவே பயணம் போனால் குடி நீர் தருபவர் யாரோ தனியாய் வந்தால் துணிவைத் தவிர துணையாய் வருபவர் யாரோ ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் ஒரு சாண் வயிறை வளார்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் ஊரார் நினைப்பது சுலபம் தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தன் கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான் தரைமேல் பிறக்க வைத்தான் |
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் |
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் இசைவெள்ளம் நதியாக ஓடும் அதில் இளனெஞ்சம் படகாக ஆடும்
(நான் பாடும்)
தாழம்பூவில் காணும் பொன்வண்ணம் நாளும் வாழும் தோகைப்பூங்கன்னம் (2) எங்கே நானென்று தேடட்டும் உன்னை சிந்தாத முத்தங்கள் சிந்த (2) அவளெந்தன் மனமேடை தவழ்கின்ற பனிவாடை (2) காலம் கொண்டாடும் கவிதை மகள் கவிதை மகள்
(நான் பாடும்)
நாதத்தோடு கீதம் உண்டாக தாளத்தோடு பாதம் தள்ளாட (2) வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை வாராதிருந்தாலோ தனிமை (2) நிழல்போலுன் குழலாட தளிர்மேனி எழுந்தாட (2) அழகே உன் பின்னால் அன்னம் வரும் அன்னம் வரும்
(நான் பாடும்) |
நீ ஒரு காதல் சங்கீதம் |
நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
(நீ ஒரு)
வானம்பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது இசை மழை எங்கும்... இசை மழை எங்கும் பொழிகிறது எங்களின் ஜீவன் நனைகிறது கடலலை யாவும் இசை மகள் மீட்டும் அழகிய வீணை சுரஸ்தானம் இரவும் பகலும் ரசித்திருப்போம்
(நீ ஒரு)
பூவினைச் சூட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்? தேனை ஊற்றும் நிலவினில் கூட தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்? கடற்கரைக் காற்றே... கடற்கரைக் காற்றே வழியை விடு தேவதை வந்தாள் என்னோடு மணலலை யாவும் இருவரின் பாதம் நடந்ததைக் காற்றே மறைக்காதே தினமும் பயணம் தொடரட்டுமே
(நீ ஒரு) |
வாழ்வே மாயம் |
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா... யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது யாரோடு யார் செல்வது?
(வாழ்வே)
யாரார்க்கு எந்த மேடையோ இங்கே யாரார்க்கு என்ன வேஷமோ ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும் தாயாலே வந்தது தீயாலே வெந்தது (2) மெய் என்று மேனியை யார் சொன்னது
(வாழ்வே)
பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார் உண்டாவது ரெண்டாலதான் ஊர்போவது நாலாலதான் கருவோடு வந்தது தெருவோடு போவது (2) மெய் என்று மேனியை யார் சொன்னது
(வாழ்வே) |
ராக்கம்மா கையத்தட்டு |
ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு ராசாத்தி பந்தல் நட்டு ராவெல்லாம் தாளந்தட்டு ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது எனக் கட்டிப்போட ஒரு சூரன் ஏது ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ (2)
(அடி ரக்கம்மா)
தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு அட ஊருசனம் யாவும் ஒத்தமையாச் சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக வக்கிர வாணம் அந்த வானையே தெக்கணும் தம்பி விடு நேராக அட தம்பட்டம் தாரதான் தட்டிப்பாடு
(ஜாங்குஜக்குச்)
வாசலுக்கு வாசல் வன்ண வண்ணமாக இங்கே அங்கே ஓடி வௌளக்கேத்து அட தட்டிருட்டுப் போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் என்று நீ கூறு? நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா அட என்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்
அடி முத்தம்மா முத்தம் சிந்து பனி முத்துப்போல் நித்தம் வந்து பூமால வெச்சிப்புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு
(குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவழம் போல் பால் மேனியும் இனித்தமுடனெடுத்த பொற்பாதமும்...பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே)
ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு ரோக்கோழி மேளங்கொட்டு இந்த ராசாவின் நெஞ்சத்தொட்டு அட ஒன்னப்போல இங்கு நானுந்தாண்டி ஒண்ணு சேர இது நேரந்தாண்டி
(ஜாங்குஜக்குச்) |
கண்ணன் வருவான் - Film:panjavarNakiLi, Singer: P.Susheela, Music: MSV-TKR lyric selected and presented by Rajesh Kumar, 4 September 2005 |
கண்ணன் வருவான் கதை சொல்லுவான் வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான் குழலெடுப்பான் பாட்டிசைப்பான் வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான் வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
கண்ணன் வருவான் கதை சொல்லுவான் வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான் குழலெடுப்பான் பாட்டிசைப்பான் வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான் வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க முத்தம் கொடுக்க...முத்தம் கொடுக்க
தத்தி தத்தி நடக்கையில் மயில் போலே திக்கி திக்கி பேசுகையில் குயில் போலே கொஞ்சி கொஞ்சி எடுக்கையில் கொடி போலே அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ ஆராரோ ஆரிராரிராரிராரிராரஓ ஆரிராரிராரிராரிராரோ
கண்ணன் வருவான் கதை சொல்லுவான் வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான் குழலெடுப்பான் பாட்டிசைப்பான் வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான் வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான் இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான் உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான் இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான் ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான் உண்மையை அதிலே உறங்க வைத்தான் உறங்க வைத்தான் ..உறங்க வைத்தான் ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ ஆராரோ ஆரிராரிராரிராரிராரஓ ஆரிராரிராரிராரிராரோ
கண்ணன் வருவான் கதை சொல்லுவான் வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான் குழலெடுப்பான் பாட்டிசைப்பான் வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான் வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான் | kaNNan varuvaan kadhai solluvaan vaNNa malar thottil katti thaalaattuvaan kuzaleduppaan paattisaippaan valampuri sangkeduththu paalUttuvaan valampuri sangkeduththu paalUttuvaan
kaNNan varuvaan kadhai solluvaan vaNNa malar thottil katti thaalaattuvaan kuzaleduppaan paattisaippaan valampuri sangkeduththu paalUttuvaan valampuri sangkeduththu paalUttuvaan
paccai vaNNak kiLi vanthu pazam kodukka pattu vaNNa sittu vanthu malar kodukka paccai vaNNak kiLi vanthu pazam kodukka pattu vaNNa sittu vanthu malar kodukka kannangkaru kaakkai vanthu mai kodukka kaNNan mattum kannaththilE muththam kodukka muththam kodukka...muththam kodukka
thaththi thaththi nadakkaiyil mayil pOlE thikki thikki pEsugaiyil kuyil pOlE konjci konjci edukkaiyil kodi pOlE anjci anjci vizuvaay madi mElE aarirO aariraariraariraariraarirO aaraarO aariraariraariraariraaraO aariraariraariraariraarO
kaNNan varuvaan kadhai solluvaan vaNNa malar thottil katti thaalaattuvaan kuzaleduppaan paattisaippaan valampuri sangkeduththu paalUttuvaan valampuri sangkeduththu paalUttuvaan
unakkenRum enakkenRum uRavu vaiththaan iruvarin kaNakkilum varavu vaiththaan unakkenRum enakkenRum uRavu vaiththaan iruvarin kaNakkilum varavu vaiththaan oruvarin kuralukku mayangka vaiththaan uNmaiyai adhilE uRangka vaiththaan uRangka vaiththaan ..uRangka vaiththaan aarirO aariraariraariraariraarirO aaraarO aariraariraariraariraaraO aariraariraariraariraarO
kaNNan varuvaan kadhai solluvaan vaNNa malar thottil katti thaalaattuvaan kuzaleduppaan paattisaippaan valampuri sangkeduththu paalUttuvaan valampuri sangkeduththu paalUttuvaan |