உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி - நெஞ்சில் தூங்கிக் கிடக்குது நீதி
(உள்ளம் என்பது)
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும் சிலையென்றால் அது சிலைதான் தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும் சிலையென்றால் அது சிலைதான் உண்டென்றால் அது உண்டு உண்டென்றால் அது உண்டு இல்லையென்றால் அது இல்லை இல்லையென்றால் அது இல்லை
(உள்ளம் என்பது)
தண்ணீ தணல் போல் எரியும் - சென் தணலும் நீராய்க் குளிரும் தண்ணீ தணல் போல் எரியும் - சென் தணலும் நீராய்க் குளிரும் நண்பரும் பகை போல் தெரியும் நண்பரும் பகை போல் தெரியும் - அது நாட்பட நாட்படப் புரியும் நாட்பட நாட்படப் புரியும்
(உள்ளம் என்பது) |