போனால் போகட்டும் போடா; இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? போனால் போகட்டும் போடா.
வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது! வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும் ஜனனம் என்பது வரவாகும்; அதில் மரணம் என்பது செலவாகும் போனால் போகட்டும் போடா.
இரவல் தந்தவன் கேட்கின்றான் ; அதை இல்லை என்றால் அவன் விடுவானா? உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது; இது கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது; அந்த கோட்டையில் நுழைந்தால் திரும்பாது போனால் போகட்டும் போடா. |