"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Eelam Tamil Literature > ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - மு. தளையசிங்கம் முன்னுரை > அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி > பொதுப் பின்னணியைப் பிரதிபலிக்காது முன்னுக்குத் தள்ளப்பட்ட 'முற்போக்கு இலக்கியம்' > சோஷலிச யதார்த்தமும் 'முற்போக்கு' இலக்கியமும் > 'நற்போக்கும்' 'முற்போக்கும்' > 'முற்போக்கு' எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள் > சர்வாதிகாரத்தைக் கண்டு தப்பி ஓடியவர் > சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர் > பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு
20th Century Eelam Tamil Literature at Project Madurai
EzANTu ilakkiya vaLarcci - M. Thalaiyasingam
5. 'முற்போக்கு' எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள் இதே ஓசையின் தேவைக்காகத்தான் இவர்களுடைய பெரும்பாலான கதைகளில் அருவருக்கத்தக்க காட்சிகள் அதிகமாக இடம் பெறுகின்றன. 'பிராண்டி', 'விராண்டி' என்ற சொற்களைப் போல் 'சீழ்', 'பீழை' என்ற சொற்களும் அவை சம்பந்தப்பட்ட காட்சிகளும் வர்ணனைகளும் இவர்களுடைய கதைகளில் அதிகமாக வருகின்றன. முக்கியமாக 'முற்போக்கு' எழுத்தாளர்கள் என்று சொல்லப்படுபவர்களின் கதைகளில் இவை அதிகம். உதாரணத்துக்கு சில. வெறும் ஒலிக் கூட்டங்களைக் கேட்கும் ஒரு பா¢தாப நிலைதான். ஆனால் அதுதான் இவர்களுக்குக் கலையாக மாறி ஒரு மருட்சியைக் கொடுக்கிறது. 'அவன் யோசித்தான்' என்ற சாதாரண உண்மை சென்னிக்குள் ஜனித்து, கபாலத்தின் நரம்புகளை உதைத்து, இதய வெளியில் குளம்போசை தன்னை மறந்து......' என்று முடிவில்லாத வார்த்தைச் சிலம்பாக மாறிவிடுகிறது. நான் caricature பண்ணுகிறேன் என்று நினைக்கத் தேவையில்லை. இந்த நடையைப் பொ¢யதோர் சாதனையாக மதிப்பிடுவதுபோல், அதற்கோர் பொ¢யதோர் சாதனையாக மதிப்பிடுவதுபோல், அதற்கோர் உதாரணமாகக் 'குட்டி' என்ற கதையின் அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும் ஓர் வசனத்தைப் பார்த்தால் போதும். அதோடு கனவுக் காட்சிகள் எப்படி ஆச்சா¢யப்படும் முறையில் கலை நிறைந்த உருவ அமைப்புகளைக் கொண்டுள்ளனவோ அதேபோல் அத்தகைய அமைப்பையும் அது பெற முயல்கிறது. ஆனால் நம் நாட்டு எழுத்தாளர்களுக்கு இவை தொ¢யவில்லை. வெறும் அடிமை மனப்பான்மையோடு அறியாமையின் காரணமாய்ச் செய்யப்படும் அபிநயந்தான் அவர்களுக்குப் பழக்கமாக இருக்கிறது. அர்த்தமற்ற வெறும் வார்த்தைக் குவியல்கள் 56க்குப் பின் வந்த யதார்த்தப் பார்வை இந்த வகையான நடையை எப்படி ஈன்றது என்று யோசிக்கும்போதுதான் பொன்னுத்துரையின் பங்கும் பொறுப்பும் தெரியவரும். இதுதான் பொன்னுத்துரையின் புதிய பண்டிதம் ஏற்படுத்திய முக்கிய விளைவு. நம் நாட்டு இளம் எழுத்தாளர்களின் பக்குவமின்மைக்கும் பார்வை ஆழக் குறைவுக்குமு¡¢ய ஒரு முத்திரையாக அது இப்போ மாறிவிட்டிருக்கிறது. ஒரு சர்வாதிகார அமைப்பில் ஏற்படக்கூடிய வார்த்தை விளைச்சல், வார்த்தை வித்தை. பாஸ்டர் நாக் கூறும் 'Power of glittering phrases' என்பது இதை விளக்குவதற்கு உதவும். இந்த நடை மலிந்துவிட்ட இத்தகைய நம் இலக்கியச் சூழல் இன்னும் சில வருடங்கள் நீடிக்குமானால் இதற்கு எதிராக மிகச் சாதாரணமான வார்த்தைகளில் எழுதுவது கூட ஒரு பெரும் கலைப் புரட்சியாக மாறிவிடும். அது மட்டுமல்ல, விசயங்களுக்கும் பொருட்களுக்குமு¡¢ய மிகச் சாதாரணமான சொற்களையும் கூட நம் எழுத்தாளர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய நிலையும் வந்துவிடும். ஹிட்லா¢ன் சர்வாதிகாரம் ஏற்படுத்திய வார்த்தைத் திருகல்களிலிருந்து திமிறித் தப்புவதற்காக ஓர் கவிஞன் திரும்பவும், அ¡¢ச்சுவடி படிப்பதுபோல பழைய பெயர்களையும், பழைய சொற்களையும் ஒப்புவிக்க முயலும் ஒர் புரட்சிக் கவிதையை இங்கே நினைவுபடுத்திக்கொள்வது சுவையாக இருக்கும், Gunter Eich கவிதை ஒன்று. கட்சியிலுள்ள எல்லோரையும் எப்படியாவது போற்ற வேண்டும் என்ற எண்ணம் உண்மையான விமர்சனத்துக்கு இடம் வைப்பதில்லை. அதோடு இந்த விமர்சகர்களுக்கும் பார்வை அந்தளவு இல்லை. (4) 'முற்போக்கு'க் கூட்டிலிருக்கும் பழைய எழுத்தாளர்களின் சிருஷ்டிகள் அவர்களது இளம் எழுத்தாளர்களையே கவர முடியாதவை. முடிந்திருந்தால் இளம் எழுத்தாளர்கள் பொன்னுத்துரையைப் பின்பற்றியிருக்க மாட்டார்கள். (5) 'முற்போக்கு' சர்வாதிகாரம் பொன்னுத்துரையை வெளியே ஓதுக்கிவிட்டாலும் அவரைத் தான் இலக்கிய ரீதியில் பின்பற்றியிருக்கிறது. 'முற்போக்கு' சர்வாதிகாரத்துக்குரிய சிருஷ்டி வெறுமையை மறைப்பதற்குப் பொன்னுத்துரையின் இலக்கியச் சாயல்தான் கையாளப்பட்டிருக்கிறது. (6) முற்போக்கு இளம் எழுத்தாளர்களிடம் (ஏன் எல்லோ¡¢டமும்தான்) இருப்பதெல்லாம் பெரும்பாலும் வளரளம் பருவப் பக்குவமின்மையும் தங்கள் கட்சிதான் சிறந்ததென்ற ஒரு fanaticism மும் தான். மூன்று, நடந்த கதையைத் திரும்ப நினைக்கும்போது, எழுதும்போது எற்படும் நினைவுகள். ஆனால் பெனடிக்ற் பாலன் அவையன்றையும் பு¡¢ந்துகொள்ளாமல் பந்தி அளவை மாற்ற வேண்டும் என்பதற்காக, சும்மா மாற்றுவதினாலேயே கலை ஏற்பட்டுவிடுகிறது என்ற அறியாமையின் காரணமாய் மாற்றுகிறார். நாலைந்து வகையான பந்திகள் 'குட்டி'யில் இடம் பெறுகின்றன. ஆனால் என்ன அடிப்படையில்? பதில், திரும்பவும் 'ஊத்தை' என்பது 'ஊற்றை'யாகிய கதைதான். 'நிற்க, அடுத்தது 'குட்டி' என்ற நாவல் பொன்னுத்துரையின் கதை நடையை நக்கல் செய்ய எழுதப்பட்டதாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு parody தான். அப்படி அது பாவிக்கப்பட்டிருந்தால் அதன் முக்கியத்துவம் நிச்சயமாக நின்றுபிடிக்கக் கூடியதாக மாறிவிட்டிருக்கும். ஆனால் தொ¢யாத்தனமாக ஒரு parodyஐ எழுதிவிட்டு அதைத் தனித்தன்மை கலந்த ஒரு புதிய சிருஷ்டியாகக் கருதும்போது அது வேடிக்கையையும் தாண்டிய விசித்திரத்தின் உச்சியைத் தொட்டுவிடுகிறது. அதோடு ஜேம்ஸ் ஜொய்ஸின் பெயரையும் இழுக்கும்போது திரும்பவும் காதைத்தான் பொத்திக்கொள்ள வேண்டும். பொன்னுத்துரை அப்படி என்ன புரட்சியைச் செய்துவிட்டார் என்று எதிர்க்கும் முற்போக்கு எழுத்தாளர்கள் பொன்னுத்துரை செய்த புரட்சியின் உண்மையான தரமான பகுதியை விட்டுவிட்டுப் பிழையான பகுதியைப் பின்பற்றுவதுதான் விசித்திரமாக இருக்கிறது. ஆனால், பொன்னுத்துரையை விளங்கிக்கொள்ளும் போது ஏழாண்டு இலக்கிய விவகாரங்களை மட்டுமல்ல, 'முற்போக்கு'க் கூட்டினரையும் விளக்கிக்கொள்ளலாம். அதனால்தான் பொன்னுத்துரையை இந்தளவுக்கு நான் ஆராய முயல்கிறேன். ஆனால் பொன்னுத்துரையைப் பற்றிய பார்வையை முடிக்கும்போது அவருக்குச் சாதகமாகவே முடிவெடுக்க வேண்டும். அப்படி முடிவெடுக்க வேண்டும் என்ற 'மா¢யாதை'க்காக அல்ல, நான் அப்படிக் கூறுவது. அப்படி முடிக்காமல் இருக்க முடியாது. பொன்னுத்துரையின் குறைகளை அந்தளவுக்கு ஆராய்ந்ததும் அதனால்தான். பொன்னுத்துரை புதிய பரம்பரைக்குரிய ஏழாண்டு எல்லைக்குரிய ஒரு major எழுத்தாளர், major எழுத்தாளர் என்று குறிப்பிடக்கூடிய வகையில் புதிய இலக்கியத்துறைகளில் நம் நாட்டில் இதுவரை யாராவது தோன்றியிருந்தால்! பொன்னுத்துரையின் குறைகளைக் காட்டுவது, அவருடைய நிறைவுகளை அழுத்துவதற்காகவேதான். அவற்றைப்பற்றிய உணர்வை அவரிடமே எழுப்புவதற்காகத்தான். வளர்ச்சிக்குத் தேவையாக முதலில் குறைகளைத் தெரிந்துகொள்ளும் திறமை இருக்க வேண்டும். (இந்த இடத்தில் வேறு ஒன்றையும் கூறுவது பொருத்தம். 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' என்று கூறிவிட்டு இக்கட்டுரைத் தொடா¢ல் இந்த எல்லைக்கு¡¢ய குறைகளைத்தான் அதிகமாகக் காட்டியிருக்கிறேன். அப்படியென்றால், அது எப்படி வளர்ச்சியாகும்? என்ற கேள்வி எழக்கூடும். ஆனால் வளர்ச்சி என்பது அந்தப் பண்பிலேயே, குறைகளைக் கண்டுபிடிப்பதிலேயே இருக்கிறது என்பதுதான் என் எண்ணம். எப்படி ஆத்மத் தேடலுக்கு சுய விசாரணை அவசியமோ அப்படி. இதுவரை இல்லாத வகையில் இப்போது இத்தகைய இலக்கிய விசாரணைகள் இங்கு ஆரம்பித்திருக்கின்றன. அது ஒன்று மட்டும் போதும் நாம் வளர ஆரம்பித்திருக்கிறோம் என்பதை காட்டுதற்கு.) பொன்னுத்துரை பல வகைகளில் தன் திறமையைச் செலுத்தக்கூடிய ஓர் பேர்வழி. நாடகம், உருவகக் கதை, நாவல், கட்டுரை, சிறுகதை போன்ற எல்லாத் துறைகளிலுமே தன் கைவா¢சையைக் காட்டக் கூடியவர். சாதாரண வாழ்க்கை விசயங்களையும் அவற்றிலுள்ள உண்மைகளையும் பற்றிய அவருடைய அவதானம் மிகப் பிரமாதமானது. அப்படிப்பட்ட கதைகளை அவர் எழுதும்போதுதான் உண்மையாக அவர் தன் உச்சங்களைக் காட்டுகிறார். சாதாரண மக்களின் பேச்சு வழக்கைக் கையாள்வதிலும் அவருக்கு நிகர் அவராகவே இருக்கிறார். 'பங்கம்' போன்ற கதைகள் பிரதேசப் பேச்சுவழக்கைக் கையாள்வதிலும் சமகால சமூக ஒட்டங்களைக் கலையோடு பிடித்து நிரந்தரமாக்கிவிடுவதிலும் நம் ஈழத்து இலக்கிய உலகில் நிகரற்றவையாக நிற்கின்றன. பொன்னுத்துரை உலக இலக்கியத் தரத்தைத் தொடுவதற்கு ஓடிக்கொண்டிருக்கும் ஓர் எழுத்தாளன். அதை அடைவதற்கு அவர் செய்ய வேண்டியது, அவருடைய திறமை எப்படிப்பட்டது, எங்கு கிடக்கிறது என்பவற்றை அவர் கண்டுபிடிப்பதுதான். அதற்கேற்ற வகையில் அவர் தன் பார்வையை வி¡¢த்து ஆழமாக்கிக் கொள்வதுதான். அந்தக் குறைகள்தான் அவரை அடிக்கடி தாக்கிவிடுகின்றன. அவைதான் அவருடைய தேவைகள். காரணம், பெரும்பாலும் ஓர் `misguided talent` ஆகவே தான் அவர் இப்போ நிற்கிறார். ஆனால் குறை நீக்கப்படக்கூடியது. நீக்கப்பட்ட பின் எதிர்காலம் அவருடைய உண்மையான வளர்ச்சியையும் உச்சத்தையும் காட்டி நிற்கும். |