தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Status of Tamil as a  Classical Language

CONTENTS
OF THIS SECTION
Last updated
31/12/06

Tamil the Classical Language Extra Ordinaire - ‘jAzhan’ R. Shanmugalingam, 2004

From a Posting in SysIndia Forum on What is Tamil Classical Language Worth? "...There are some who think that sizable Indian Government funds would be allocated for Tamil development and propagation if it is recognized as a classical language by the Indian Government. They come to this conclusion because India has recognized Sanskrit as a classical language and Sanskrit programs are lavishly funded. I can make a categorical statement right here that the Indian Government will not allocate funds for Tamil comparable to funds it allocates for Sanskrit. I have a suggestion to Tamil Nadu politicians. Ask the Indian Government not only to recognize Tamil as a classical language but also make sure that any Indian Government order or legislation on Tamil as classical language also stipulates that Indian Government's annual budget for Tamil development would equal the budget for Sanskrit. If Tamil Nadu politicians can get that done, then it is something to celebrate. Without such a measure, merely passing an order or legislation that Tamil is a classical language does not bring much benefit to Tamil. I am 99% certain that the Indian Government would not bring such a legislation or order on budget for Tamil development..."


Status of Tamil as a Classical Language
"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே
வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி.
"

India to declare Tamil as classical language, 18 September 2004
The classical status of Tamil -  S.S. Vasan, 9 June 2004

Prof.George Hart, University of California Berkeley, 11 April 2000
Tamil Translation of Professor Hart's Statement on Tamil - a Classical Language
தமிழ் ஒரு  செம்மொழி - முனைவர் வா.செ. குழந்தைசாமி, August 2003
செம்மொழியான தமிழை, இந்திய அரசே உடனே அங்கீகாரம் கொடு - ஞானி, தமிழ் செம்மொழி போராட்ட்க் குழு, August 2003

"...To qualify as a classical tradition, a language must fit several criteria: it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature. Unlike the other modern languages of India, Tamil meets each of these requirements. It is extremely old (as old as Latin and older than Arabic); it arose as an entirely independent tradition, with almost no influence from Sanskrit or other languages; and its ancient literature is indescribably vast and rich..." Professor George Hart

[to read the Tamil text you may need to download & install a Tamil Unicode font from here]


India to declare Tamil as classical language, 18 September 2004 [source Tamilnet.com]

"The Indian Union Cabinet, which met on Friday morning, decided to declare Tamil a "classical language," Press Trust of India (PTI) reported Friday [17 September 2004]. The declaration comes after years of lobbying by Tamil scholars including Prof. George Hart, Professor of Tamil, University of California, who wrote in April 2000, "To deny that Tamil is a classical language is to deny a vital and central part of the greatness and richness of Indian culture." After the Cabinet meeting, Information and Broadcasting Minister, S Jaipal Reddy, said the government would consider assigning Sanskrit and other languages in this category, depending on their "heritage and legacy," the PTI report said. Earlier, The President of India, Dr. Abdul Kalam, in his address to the Parliament on 7 June, expressed his support for declaring Tamil a classical language. Tamil is an official language in the state of Tamil Nadu, India, Sri Lanka and Singapore...."


The classical status of Tamil - S.S. Vasan, Rhodes Scholar, Trinity College, Oxford, U.K  9 June 2004 [source The Hindu ]

"Let me state unequivocally that, by any criteria one may choose, Tamil is one of the great classical literatures and traditions of the world." This quotation was not taken from any recent literary or political statement made in India but from the official "Statement on the Status of Tamil as a Classical Language" issued by the University of California, Berkeley (April 11, 2000). Why has it taken so much time in India to recognise the status of Tamil as a classical language? The reason is political, according to Prof. George L. Hart, who authored the Statement.

And indeed it has taken all the arm-twisting charm of the Dravida Munnetra Kazhagam to correct this historical prejudice, a prejudice that has deep roots in our history and psyche.

As early as 1835, Lord Macaulay was claiming in his "Minute on Education" that

"... it may safely be said that the literature now extant in [English] is of far greater value than all the literature which three hundred years ago was extant in all the languages of the world together."

The growth of `vernacular languages' of India, including Tamil, was set back so seriously that the eminent Tamil poet Subramania Bharati sounded this warning in the early twentieth century:

"Alas slowly will Tamil perish
As languages of the West flourish"

After Independence, things got no better for Tamil as even scholars like Pandit Jawaharlal Nehru tried to impose Hindi as the sole official national language of India. This was a rather misleading aim that backfired as badly as Pakistan's attempts to impose Urdu on Bangladesh during 1952-1971. As Sri V.S. Naipaul cautions: "Cultural purity is a fundamentalist fantasy." The `one language policy' might have worked for China, but as a democracy India has little choice but to celebrate its diversity.

The Congress party has now come a full circle to deliver poetic justice — from its 1960s obsession to impose Hindi in Tamil Nadu — to recognising the long overdue status of Tamil as a classical language in 2004. The declaration of Tamil as a classical language by President A.P.J. Abdul Kalam, a Tamil scholar himself, is not just symbolic but a victory for Indian democracy as well.

What now?

That Tamil has at long last gained recognition in India is wonderful, but not enough. The next step is to get other nations to recognise the classical status of Tamil and also have it recognised by world bodies like the UNESCO. Would it not be wonderful if the Tamil-speaking United Progressive Alliance Government Ministers joined hands with the All-India Anna Dravida Munnetra Kazhagam Ministers in Tamil Nadu to use their combined political clout to bring this about? Governments in Singapore, Sri Lanka and Malaysia could be persuaded to take the cue from India. Tamil is already an official language in Singapore, whose President S.R. Nathan is a Tamil.

If three or more nations declare that Tamil is a classical language, world bodies like UNESCO could be persuaded to recognise the classical status of Tamil — like Arabic, Chinese, Greek, Latin, Persian and Sanskrit. If this sounds like a pipe dream, it is worth remembering that Tamil is comparable to French, which is one of the official languages of the United Nations. For instance, French is spoken by 98 million people around the world, with the bulk of the speakers in France. Tamil is spoken by 66 million people, and while a bulk of them live in South India, there is a considerable population of Tamil speakers in Canada, Fiji, Malaysia, Mauritius, Singapore, South Africa, Sri Lanka, the United Kingdom and the United States of America. Recognition by UNESCO would bring in the much-needed international funds to support the ongoing work to preserve the cultural and linguistic heritage of Tamil.


Prof.George Hart, University of California Berkeley, 11 April 2000 - [source University of California Berkeley ]

Professor Maraimalai has asked me to write regarding the position of Tamil as a classical language, and I am delighted to respond to his request.

I have been a Professor of Tamil at the University of California, Berkeley, since 1975 and am currently holder of the Tamil Chair at that institution. My degree, which I received in 1970, is in Sanskrit, from Harvard, and my first employment was as a Sanskrit professor at the University of Wisconsin, Madison, in 1969. Besides Tamil and Sanskrit, I know the classical languages of Latin and Greek and have read extensively in their literatures in the original.

I am also well-acquainted with comparative linguistics and the literatures of modern Europe (I know Russian, German, and French and have read extensively in those languages) as well as the literatures of modern India, which, with the exception of Tamil and some Malayalam, I have read in translation. I have spent much time discussing Telugu literature and its tradition with V. Narayanarao, one of the greatest living Telugu scholars, and so I know that tradition especially well. As a long-standing member of a South Asian Studies department, I have also been exposed to the richness of both Hindi literature, and I have read in detail about Mahadevi Varma, Tulsi, and Kabir.

I have spent many years -- most of my life (since 1963) -- studying Sanskrit. I have read in the original all of Kalidasa, Magha, and parts of Bharavi and Sri Harsa. I have also read in the original the fifth book of the Rig Veda as well as many other sections, many of the Upanisads, most of the Mahabharata, the Kathasaritsagara, Adi Sankaras works, and many other works in Sanskrit.

I say this not because I wish to show my erudition, but rather to establish my fitness for judging whether a literature is classical. Let me state unequivocally that, by any criteria one may choose, Tamil is one of the great classical literatures and traditions of the world.

The reasons for this are many; let me consider them one by one.

First, Tamil is of considerable antiquity. It predates the literatures of other modern Indian languages by more than a thousand years. Its oldest work, the Tolkappiyam, contains parts that, judging from the earliest Tamil inscriptions, date back to about 200 BCE. The greatest works of ancient Tamil, the Sangam anthologies and the Pattuppattu, date to the first two centuries of the current era. They are the first great secular body of poetry written in India, predating Kalidasa's works by two hundred years.

Second, Tamil constitutes the only literary tradition indigenous to India that is not derived from Sanskrit. Indeed, its literature arose before the influence of Sanskrit in the South became strong and so is qualitatively different from anything we have in Sanskrit or other Indian languages. It has its own poetic theory, its own grammatical tradition, its own aesthetics, and, above all, a large body of literature that is quite unique. It shows a sort of Indian sensibility that is quite different from anything in Sanskrit or other Indian languages, and it contains its own extremely rich and vast intellectual tradition.

Third, the quality of classical Tamil literature is such that it is fit to stand beside the great literatures of Sanskrit, Greek, Latin, Chinese, Persian and Arabic. The subtlety and profundity of its works, their varied scope (Tamil is the only pre modern Indian literature to treat the subaltern extensively), and their universality qualify Tamil to stand as one of the great classical traditions and literatures of the world. Everyone knows the Tirukkural, one of the world's greatest works on ethics; but this is merely one of a myriad of major and extremely varied works that comprise the Tamil classical tradition. There is not a facet of human existence that is not explored and illuminated by this great literature.

Finally, Tamil is one of the primary independent sources of modern Indian culture and tradition. I have written extensively on the influence of a Southern tradition on the Sanskrit poetic tradition. But equally important, the great sacred works of Tamil Hinduism, beginning with the Sangam Anthologies, have undergirded the development of modern Hinduism. Their ideas were taken into the Bhagavata Purana and other texts (in Telugu and Kannada as well as Sanskrit), whence they spread all over India. Tamil has its own works that are considered to be as sacred as the Vedas and that are recited alongside Vedic mantras in the great Vaisnava temples of South India (such as Tirupati). And just as Sanskrit is the source of the modern Indo-Aryan languages, classical Tamil is the source language of modern Tamil and Malayalam. As Sanskrit is the most conservative and least changed of the Indo-Aryan languages, Tamil is the most conservative of the Dravidian languages, the touchstone that linguists must consult to understand the nature and development of Dravidian.

In trying to discern why Tamil has not been recognised as a modern language, I can see only a political reason: there is a fear that if Tamil is selected as a classical language, other Indian languages may claim similar status. This is an unnecessary worry. I am well aware of the richness of the modern Indian languages -- I know that they are among the most fecund and productive languages on earth, each having begotten a modern (and often medieval) literature that can stand with any of the major literatures of the world. Yet none of them is a classical language. Like English and the other modern languages of Europe (with the exception of Greek), they rose on pre-existing traditions rather late and developed in the second millennium. The fact that Greek is universally recognised as a classical language in Europe does not lead the French or the English to claim classical status for their languages.

To qualify as a classical tradition, a language must fit several criteria: it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature. Unlike the other modern languages of India, Tamil meets each of these requirements. It is extremely old (as old as Latin and older than Arabic); it arose as an entirely independent tradition, with almost no influence from Sanskrit or other languages; and its ancient literature is indescribably vast and rich.

It seems strange to me that I should have to write an essay such as this claiming that Tamil is a classical literature -- it is akin to claiming that India is a great country or Hinduism is one of the world's great religions. The status of Tamil as one of the great classical languages of the world is something that is patently obvious to anyone who knows the subject. To deny that Tamil is a classical language is to deny a vital and central part of the greatness and richness of Indian culture.


Tamil Translation of Professor Hart's Statement on Tamil - a Classical Language [source Thamizh Mann]
முனைவர் ஜியார்ஜ் எல்.வறார்ட் அவர்கள் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்

தமிழ் ஒரு செம்மொழி என்ற தகுநிலை பற்றிய ஒரு விளக்கவுரை வழங்கவேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க, பெருமகிழ்ச்சியுடன் ஏற்று இதனை எழுதுகிறேன்.

1975-ம் ஆண்டு முதல் பெர்க்ளி கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் நான் ஒரு பேராசிரியராக உள்ளேன் தற்சமயம் அங்கு தமிழ்த்துறை தலைவன். 1970 ஆம் ஆண்டு ஃகார்வடு பல்கலைக் கழகத்தில் வடமொழி (சமசுகிரித)ப் பட்டம் பெற்றேன். எனது முதல் அனுபவம் 1969ல் மேடிசன், விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வடமொழிப் பேராசிரியர் வேலை ஏற்றது. தமிழ், வடமொழி தவிர இலத்தீன், கிரேக்கச் செம்மொழிகளை அறிந்து அவற்றின் மூலம் அந்த இலக்கியங்களையும், மொழி ஒப்பியல் ஆய்வு நு}ல்களையும் விரிவாக படித்துள்ளேன்.

அவற்றுடன் உருசியன், செர்மன், ஃபிரென்சு ஆகிய தற்கால ஐரேப்பிய மொழிகளிரும் நல்ல பரிச்சயம் உண்டு. அம்மொழி இலக்கியங்களையும் விரிவாகக் கற்றுள்ளேன். இவை தவிர இந்திய இலக்கியங்களில், தமிழ் மலையாள நு}ல்களை அம்மொழிகள் வாயிலாகவும், பிற மொழி நு}ல்களை ஆங்கில மொழியாக்கங்களின் வழியும் படித்துள்ளேன். தெலுங்கு மொழியின் தலையாய் அறிஞர்களுள்; ஒருவரான திரு வி.நாராயணராவ் அவர்களுடன் நெடிது உரையாடப்பெற்ற வாய்ப்புக்கள் வழி அம்மொழியின் பாரம்பரியத்தையும் நன்கு அறிவேன். கிழக்காசிய மொழிகள் துறையின் நீண்ட நாள் உறுப்பினன் என்ற முறையில் இந்திமொழி இலக்கியச் செழிப்பை அறிந்துணரும் வாய்ப்பும் பெற்றேன்;. துளசி, கபீர், மகாதேவ வர்மா நு}ல்களை ஆழமாகப் பயின்றுள்ளேன்.

நான் பல ஆண்டுகளை உண்மையில் 1969 முதல் என் வாழ்வின் பெரும்பகுதியை வடமொழிக் கல்வி ஃ ஆய்வில் பயன்படுத்தியுள்ளேன். காளிதாசர் மகா படைப்புக்களை முழுமையாகவும், பவாரி, சிறீஃகர்சா நு}ல்களில் பல பகுதிகளையும் வடமொழி மூலத்தில் படித்துள்ளேன். இவை தவிர இருக்வேத ஐந்தாவது மூலப் பொத்தகத்தையும், பல உபனிசத்துக்களையும் மாபாரதம், கதா சரிதசாகரம், ஆதிசங்கரர் நு}ல்களில் பெரும் பகுதிகளையும், மற்றும் பல மொழி வடமொழி நு}ல்களையும் கற்றுள்ளேன்.

நான் இவற்றையெல்லாம் இங்கு சொல்வது, எனது அறிவாற்றலை வெளிப்படுத்தும் நோக்கத்தில் அன்று. ஒரு இலக்கியத்தில் செம்மொழிப் பாங்கைச் சீர்து}க்கும் தகுதி எனக்கு உண்டு என்பதைத் தெளிவுபடுத்த மட்டுமே. எவ்வகையான அளவைக் கோட்பாடுகளைத் தேர்ந்து நோக்கினாலும், மேலான உலக பாரம்பரியங்கள், செம்மொழி இலக்கியங்களைக் கொண்ட மொழிகளில், நிச்சயமாகத் தமிழ் ஒரு சிறப்பான இடம் பெற்றுள்ளது என்பதை எந்தத் தயக்கமுமின்றி உறுதியாகச் சொல்ல முடியும்.

இதற்கான காரணங்கள் பல, அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

முதன்மையாக, தமிழ் மிகத் தொன்மையான மொழி. பிற இந்திய மொழிகளின் தற்கால இலக்கியங்களை விடத் தமிழ் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் காலத்தால் முற்பட்டது. தமிழின் பழமையான நு}லான தொல்காப்பியத்தின் பகுதிகள், பழைய கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும் வைத்து நோக்கும்போது கி.மு. 200 ஆண்டிற்கு முற்பட்டதாகத் தெரிகிறது. பழந்தமிழின் பெருமை போற்றும் சங்ககாலத் தனிப்பாடல் திரட்டுக்கள், பத்துப்பாட்டு போன்றவை கி.பி. முதல் இரண்டு நு}ற்றாண்டுகளைச் சேர்ந்தவை. அவை இந்தியாவில் முதல்முதலான, சமயங்களுக்கு அப்பாற்பட்ட, உலகியல் வாழ்வு தழுவிய சிறப்புடைய பாடல் தொகுதிகளாகும்.

இரண்டாவதாக, இந்திய மண்ணின் மணம் கமழும் இலக்கியப் பாரம்பரியமாக, வடமொழித் தொடர்பில்லாது தோன்றிச் செழித்தது தமிழ் மட்டுமேயாகும். வடமொழியின் தாக்கம் தெற்கே பரவி வலுப்பெறுவதற்கு மிக முன்னதாகத் தோன்றியவை தமிழ் இலக்கியங்கள.; அவை பண்பில் தரத்தில் வடமொழி, பிற இந்திய மொழி இலக்கியங்களிலிருந்து வேறுபட்டு நிற்க்கின்றன. தனக்கே உரிய செய்யுள் அமைப்பு முறைகள், இலக்கணப் பாரம்பரியம், தமிழ் மண்ணில் தோன்றிய நுண்ணறிவியலின் எழில், தன்னேரில்லாது பரந்து விரிந்து இலக்கியச் செழிப்பும், தனித்தன்மையும் கொண்டது.

ஒப்புவமையற்ற இந்தியப் பண்பாட்டு உணர்வுகளை தமக்கே உரிய முறையில் தமிழ் இலக்கிங்கள் வெளிக்கொணர்ந்துள்ளன. விரிந்த பரந்த, மிகச் செழிப்பான, நுண்மாண் நுழைபுலன் விளைச்சலைக் கொண்ட பெட்டகங்கள் அவை. வடமொழி, மற்ற இந்திய மொழிகளில் உள்ளதைவிட பெரிதும் மாறுபட்ட, இந்திய அறிவுணர்வை உள்ளடக்கியவை.

மூன்றாவதாக, உலகப் புகழ்பெற்ற சமசுகிருத, கிரேக்க, இலத்தீன், பார்சி, அரபியப் பேரிலக்கியங்களுடன் ஒப்பிடும்போது, தரத்தில் முன்னணியில் நிற்கும் தகுதியுடையவை தமிழிலக்கியங்கள். அவற்றின் நுட்பமும், முழுமையும,; திண்மையும், உலகளாவிய பல்நோக்குப் பார்வையும், தமிழை உலகின் சிறந்த பண்பாட்டுப் பாரம்பரியங்கள், இலக்கியங்களின் வரிசையில் அமர்த்தும் தகுதியைத் தந்துள்ளன. முதன்மையான, முதன்மைக்கு அடுத்த நிலையினரல்லாது பொதுமக்களைப் பற்றியும் விரிவாகப் பேசும் முற்கால இந்திய இலக்கியம் தமிழ் ஒன்றே. அறம்பாடும் உலகின் முதன்மையான நு}ல்களில் பொதுவானது திருக்குறள் என்பது யாவரும் அறிந்ததே.

திருக்குறள் தமிழின் இலக்கியப் பாரம்பரியத்தைப் பறைசாற்றத் தோன்றிய பல பன்முக, பல்வகை துறை முதன்மை நு}ல்களில் ஒன்றேயாம். மாந்தர் வாழ்வியலை அகழ்ந்தாய்ந்து அதன் பன்முகத் தோற்றங்களுக்கு ஒளியேற்றியதில் தமிழ் இலக்கியம் ஈடுஇணையற்றது.

முத்தாய்ப்பாக, தமிழ் தற்கால இந்தியக் கலாசாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் ஊற்றுக்கண்ணாக விளங்கும் ஒரு முதன்மையான தன்னிலை, தற்சார்புள்ள (சுதந்திரமான) மொழி. தெற்கத்திய பாரம்பரியத்தின் தாக்கம் வடமொழி செய்யுள் பாரம்பரியத்தில் பரவியுள்ளது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன்.

அதேபோல் சிறப்புடையவை. சங்ககாலம் தொடங்கிய பாடல் தொகுதிகள், தமிழர் இந்து சமயத்தின் புனிதமிக்க பேரிலக்கியங்கள் அவை தற்கால இந்துக் கோட்பாடுகளுக்கு அடித்தள அதார உறுதி தருபவை. அவற்றினுடைய கருத்துக்கள் சமசுகிருத, தெலுங்கு, கன்னட மொழிகளில் பகவத புராணம், மற்ற நு}ல்களில் ஏற்றொழுகப்பட்டு, மேல் இந்தியா முழுதும் பரவியுள்ளன. புனிதத்தில் வடக்கின் நான்கு வேதங்களுக்கு இணையாகக் கருதப்படும் நு}ல்கள் தமிழில் உள்ளன. அத்திருமறைகள் வேத மந்திரங்களோடு, திருப்பதி போன்ற வைணவத் தலங்களில் ஓதப்படுகின்றன. தற்கால ஆரிய - இந்திய மொழிகளுக்கு வடமொழி ஊற்றுக்கண்ணாக இருப்பதைப்போலவே, தற்காலத் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளுக்குச் செந்தமிழ் அடிப்படை. இந்திய ஆரிய மொழிகளில் சமசுகிருதம் மாற்றங்களை ஏற்காத, பழமை பேணும் மொழியாக இருப்பதைப் போலவே, திராவிட மொழிகளில் பழமை போற்றும் மொழி தமிழ், திராவிடரின் இயல்பு. முன்னேற்றம் பற்றி அறிய விரும்பும் மொழியியலார் நாடும் உரைகல்.

தமிழ் ஏன் இன்னும் செம்மொழியாகக் கண்டு ஏற்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முனையும்போது, நான் ஒரு அரசியல் காரணத்தையே காணுகிறேன். தமிழ் செம்மொழியாகத் தேர்வு செய்யப்பட்டால், மற்ற இந்திய மொழிகளும் அந்த நிலைக்கு உரிமை கொண்டாக்கூடும் என்ற அச்சமே. இது தேவையற்ற கவலை. தற்கால இந்திய மொழிகளின் சிறப்பையும் நான் அறிவேன் - அவை உலக மொழிகள் பலவற்றுடன் ஒப்பிடும்போது செழிப்பும், ஆக்கத்திறனும் கொண்டவை.

அவை ஒவ்வொன்றும் உலக மொழி இலக்கியங்களுக்கு இணையான இடைக்கால, தற்கால இலக்கியங்களைக் கொண்டவை. ஆனாலும் அவற்றில் எதுவும் செம்மொழியன்று. ஆங்கிலம் போன்ற தற்கால ஐரோப்பிய மொழிகள் (கிரேக்கம் தவிர) ஏற்கனவே இருந்த செம்மொழிகளின் பாரம்பரியத்தைத் தழுவிப் பின்னால் கி.பி. இரண்டாயிரத்தாணடில் வளர்ந்தவை. ஐரோப்பாவின் செம்மொழியாக உலகமுழுதும் கிரேக்கம் அறியப்பட்டுள்ளது என்றாலும் அதனால் ஃபிரென்சும், ஆங்கிலமும் செம்மொழிகளுக்கான நிலையைக் கோரமுடியும்.

செம்மொழிப் பாரம்பரியத் தகுதிபெற, ஒரு மொழி பல சீர்நிலைக் கோட்பாடுகளுக்குப் பொருந்தவேண்டும். அதற்குப் பழந்தொன்மை, வேறொரு பாரம்பரியத்தின் கிளையாக அமையாத தற்சார்பு வளர்ச்சிப் பாரம்பரியம் இவற்றுடன் செல்வச் செழிப்பு மிகுந்த பழம் இலக்கியத் தொகுப்புக்களைக் கணிசமான அளவு பெற்றிருக்கவேண்டும். பிற தற்கால இந்திய மொழிகளைப் போலல்லாது தமிழ் மேற்சொன்ன எல்லாத் தகுதிகளையும் தன்னகத்தே கொண்டது. தமிழ், இலத்தீன் மொழிபோல் மிகமிகப் பழமையானது, அரபி மொழிக்கு மூத்தது. வடமொழி அல்லது வேற்றுமொழித் தாக்கங்கள் இல்லாமல், முழுமையான தன்னிலைத் தோற்றம். வளர்ச்சிப் பாரம்பரியங்களுடையது. அதன் பழம்பெரும் இலக்கியங்கள் சொல்லில் விரிக்கவியலாப் பரப்பும், செல்வச் செழிப்பும் கொண்டவை.

தமிழ் செம்மொழி இலக்கியச் சிறப்புக்கள் உடையது என்ற உரிமையை நிலைநாட்ட, நான் இதுபோல் ஒரு உரையை எழுதவேண்டும் என்பது, விந்தையாகத் தோன்றுகிறது. இது இந்தியா பெருமைமிக்க நாடு, இந்துசமயம் உலக மதங்களில் சிறந்த ஒன்று என்று வாதாடுவதைப்போன்றது. உலகில் சிறந்து விளங்கும் செம்மொழிகளில் தமிழ் ஒன்று என்ற மேலான தகுதி, மொழியியல் அறிந்தவர்களுக்கு வெள்ளிடை மலை, உள்ளங்கை நெல்லிக்கனி. தமிழின் செம்மொழித் தகுதியை ஏற்க மறுப்பது, இந்திய நாகரிகத்தின் பெருமைக்குக் கருவான மையப் பகுதியைக் காண மறுப்பதாகும்.


தமிழ் ஒரு செம்மொழி - முனைவர் வா.செ. குழந்தைசாமி [source - Thamiz Mann, August 2003]

எந்த ஓர் இனமும் சமுதாயமும் தனது பண்டைப் பெருமைபற்றிப் பெருமிதத்துடன் எண்ணுவதும் பேசுவதும் இயல்பு. பாரம்பரியம் என்பது மரத்துக்கு ஆணி வேர் போல. அசையாது நிலைத்து நிற்கும் தன்மைக்கு அதுதான் அடீப்படை. பாரம்பரியம் என்பது பழைமை என்பதும் கழிந்த நாள்களின் கணக்கன்று. அது முன்னோர் அனுபவங்களின் தொகுப்பு. இந்த அனுபவங்களெனும் செல்வத்தை, அது சேரச் சேர தொகுத்துப் பாதுகாத்து வைத்திருக்கும் கொள்கலன் (container) ஓர் இனத்தின் மொழிதான்.

தான். தாங்கி நிற்கும் கருவுலத்தை அது தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வருகிற தலைமுறைக்கு விட்டுச் செல்கிறது. ஓர் இனத்தின் பெருமையை அந்த இனத்தின் மொழி பிரதிபலிக்கிறது. மாபெரும் நாகரிகங்கள் மகத்தான மொழியை உருவாக்கத் தவறியதுமில்லை. வரலாற்றுப் பெருமை இல்லாத மக்கள் வளம் மிக்க மொழியை உருவாக்கத் தவறியதுமில்லை. வரலாற்றுப் பெருமை இல்லாத மக்கள் வளம் மிக்க மொழியை உருவாக்கியதுமில்லை.

மூவாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் உள்ள இந்திய நாகரிகம் கண்ட இரு மொழிகள்தாம் தமிழும் வட மொழியும். இவை இரண்டுமே வரலாற்றுக் காலத்துக்கு முந்திய வாழ்வுடையவை. மறைந்துபோன வரலாறுடையவை. இது தனிப்பட்டவர் அபிப்பிராயம் அன்று. அறிஞர்கள் ஒப்பிய உண்மை. ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு.

தமிழ், வடமொழி ஆகிய இரு மொழிகட்கும் தொன்மைச் சிறப்புண்டு. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முந்திய இலக்கணம் உண்டு. பழைமை வாய்ந்தவை என்று பாராட்டத்தக்க கவிதை இலக்கியங்கள் உண்டு. இலக்கிய உலகங்கள் போற்றும் காப்பியங்கள் உண்டு. உலகில் இந்த அளவுக்குப் பெருமையுடைய மொழிகள் ஆறு. அவற்றுள் இரண்டு மொழிகளின் தாயகம் இந்தியா. இரண்டும் செம்மொழிகளின் வரிசையில் இடம் பெறுபவை. இந்தப் பெருமை Nவுறு எந்த நாட்டுக்கும் இல்லை. வடமொழியை அதன் இலக்கியத்தின் அகலத்தை, ஆழத்தை அடையாளம் கண்டு அதை இலத்தின்போல கிரேக்கம் போல ஒரு செம்மொழி எனக் கூறியவர்கள் நாம் அல்லர். மேலை நாட்டினர். அதேபோல ஐரோப்பிய நாடுகள் முதல் இங்கிலாந்து. அமெரிக்க வரையுள்ள மொழி வல்லுநர்கள் இந்திய அயல் நிபுணர்கள் விவாதத்திற்கிடமின்றி ஏற்கப்பட்ட உண்மையாகும். இயல்பாகத் தமிழைச் செம்மொழி என்று தங்கள் பேச்சில் எழுத்தில் குறிப்பிடுகிறார்கள். இது விவாதத்திற்காகவோ இனிமேல் நிறுவப்பட வேண்டிய தகுதிக்காகவோ எண்ணப்படவில்லை. இன்று இந்தியப் பண்பாட்டை இந்தியச் சிந்தனை மரபை முழுமையாக அறிந்துகொள்ள இந்த இரண்டு மொழிகளின் துணை தேவை என்பதை வலியுறுத்தாத மேலை நாட்டு இந்தியவியல் (Indology) அறிஞர்கள் யாரமில்லை. ஐரோப்பிய நாகரிகத்திற்கு இலத்தினும் கிரேக்கமும் போல இந்திய நாகரிகத்திற்குத் தமிழும் வடமொழியும் என்ற கருத்து பரவலாக ஏற்கப்பட்ட ஒன்று. அது நாளுக்கு நாள் வலிமைபெற்றும் வருகிறது.

ஏதோ வாலாற்று நிகழ்வுகள் காரணமாக இந்திய அரசு தயாரித்த செம்மொழிகள் பட்டியலில் வடமொழியோடு பாரசீகம் அராபியம் ஆகியனவும் இடம்பெற்றிருக்க தமிழ் விடுபட்டு விட்டது. இந்தக் குறையை நீக்குதல் வேண்டுமென்பதுதான் இன்றைய தமிழ்றிஞர்களின் வேண்டுகோள். தமிழகத்தலைவர்களின் வேண்டுகோளும் இதுவே. இது ஏதோ தமிழுக்காகப் புதிதாக ஒரு மகுடம் சூட்டும் முயற்சி அன்று.

பரிதிமாற் கலைஞர் இராமானுசம் போன்ற இந்திய அறிஞர்கள் எமனனோவ் கதில்பெல் போன்ற மேலைநாட்டு அறிஞர்கள் எழுதியது, பேசியது ஒருபுறம் இருக்க. அமெரிக்காவில் பெர்க்லி (Berkeley)வளாகத்தில் இருக்கும் புகழ் வாய்ந்த கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (University of California) பேராசிரியரான டாக்டர் ஜார்ஜ் வறார்ட் அண்மையில் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே குறிப்பிடுவது பொருந்தும். அவருடைய பின்னணி பற்றிய சுருக்கமான தகவல் பின்வருமாறு.

அவர் வறார்வர்டு பல்கலைக் கழகத்தில் வடமொழி படித்துப் பட்டம் பெற்றவர். 1969 முதல் 1975 வரை அமெரிக்காவில் மேடிசன் நகரில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் (University of Wisconsin) வட மொழிப் பேராசிரியராக இருந்தவர். 1963இல் தொடங்கி வடமொழி இலக்கியங்களை விரிவாக்கக் கற்று வந்தவர். காளிதாசன் மாகன் (ஆயபாய) பாரவி வறர்சூன் (Sri Harsha) போன்றோர் படைப்பின் மூலத்தை ஆழ்ந்து படித்தவர். ரிக் வேதத்தின் ஐந்தாவது பகுதி பெரும்பாலான உபநிடங்கள் ஆகியவற்றை அவற்றின் மூலமொழியிலேயே கற்றவர்.

அவருக்கு இலத்தின் கிரெக்கம் ஆகிய இரு மொழிகளிலும் நல்ல புலமை உண்டு. அவற்றிலுள்ள இலக்கியங்களை அந்தந்த மொழிகளில் விரிவாகப் படித்தவர். மேலும் நவீன் மொழிகளான இரசூ;;யா, ஜெர்மன் பிரஞ் ஆகிய மொழிகளிலும் புலமை உள்ளவர். அவற்றிலுள்ள் இலக்கியங்களையும் பரவலாகப் படித்தவர். 1975 முதல் பெர்க்லி வளாகத்தில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிகிறார். நாம் அவரைப்பற்றி இவ்வளவும் கூறுவது அவருடைய பெருமைக்காக அல்ல. ஒரு மொழியின் செம்மொழித் தகுதியைத் தீர்மானிக்கும் வளமான பின்னணி அவருக்கண்டு என்பதை எடுத்துக் காட்டவே ஆகும். ஏனெனில் செம்மொழித் தகுதி என்பது பொதுக்கூட்டத்தில் முடிவு செய்வதன்று. அரசின் ஆணையால் உருவாக்கப்படுவதும் அன்று. அது அறிஞர்களின் ஏற்பால் ஒரு மொழிக்கு வருவது. துமிழில் செம்மொழி;த் தகுதிக்கான அடிப்படைகள் பற்றி விரிவாக்க கூறிவிட்டு அவர் பின்வருமாறு முடிக்கிறார்.

தமிழ் ஒரு செம்மொழி என நிறுவ நான் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருப்பது எனக்கு விந்தையாக இருக்கிறது. இது இந்தியா ஒரு நாடு என்பதையும் இந்து மதம் உலகின் மாபெரும் சமயங்களில் ஒன்று என்பதையும் நிரூபிக்க வேண்டும் என்பதுபோல் இருக்கிறது. ("It seems strange to me that I should have to write an essay such as this claiming that the Tamil is a Classical Language - It is akin to claiming that India is a great country or Hindustan is one of the world's great religions)"

உலகின் பெருமை வாய்ந்த செவ்வியல் மொழி தமிழ் என்பது இத்துறையில் ஞானம் உள்ளவர்கட்கு ஐயம் திரிபற வெளிப்படை. தமிழின் செம்மொழித் தகுதியைப் புறக்கணிப்பது இந்தியப் பண்பாட்டுப் பெருமையின் அதன் வளத்தின் சக்தி வாய்ந்ததும் மையமெனத் தக்கதுமான சிறப்பை இழப்பதுமாகும். (The Status of Tamil as one of the great classical languages of the world is something that patently obvious to any one who knows the subject. To deny that Tamil is a classical Language is to deny a vital and central part of the greatness and richness of Indian Culture.")

தமிழின் செம்மொழித் தகுதி என்பது தமிழின் பெருமையொட நிற்பதன்று: அது மொழி வளர்ச்சியில் இந்தியப் பண்பாடு எட்டியுளள உச்சியின் இன்னொரு சிகரம். நமது பாரத அரசு நிலை நிறுத்த முயலும் இந்தியத்துவத்தின் பெருமைக்கு இன்னொரு மகுடம்.

முக்கியமானது என நான் கருதுகிற இன்னொரு கருத்தையும் இங்குப் பதிவு செய்தல் வேண்டும். தமிழ் மொழியின் வரலாறு சற்று அசாதாரணமானது. ஆயிரம் கண்டங்களை (ஊசளைநள) தாண்டி வந்தது. தமிழர்கள் தங்கள் மொழியைப்; படையெடுப்புத் தீயிலிருந்தும் காத்தார்கள் மேலும் மேலும் வந்த பண்பாட்டு வெள்ளத்திலிருந்தும் காத்தாத்கள். படை வலிமை கொண்டும் பாதுகாத்தார்கள்.

பக்தி மார்ககத் துணையுடனும் பாதுகாத்தார்கள். பகுத்தறிவு இயக்கத்தின் வழியும் பாதுகாத்தார்கள். இந்தப் பின்னணியில் சுதந்தர இந்தியாவில் கொங்கனி டோகிரி 19 மாநில மொழிகளில் ஒன்றாக மட்டுமே தமிழ் பெற்றுள்ள இடம் அதன் பழைமைக்கும் உலக அளவில் ஒப்புகொள்ளப்பட்டிருக்கும் அதன் தகுதிக்கும் இந்தியப் பண்பாட்டுக்கு அது வழங்கியிருக்கும் பங்களிப்புக்கும் ஏற்ற ஒன்றாக இல்லையே என்ற நியாயமான ஆதங்கம் தமிழர்களிடம் ஆழ்மனத்தில் கனன்று கொண்டிருக்கிறது. தமிழின் செம்மொழித் தகுதிக்கு இந்திய அரசு அங்கீகாரம் வழங்குவது இக்கனலைத் தணிக்கும். இந்தியத் தேசிய நீரோட்டத்தில் தமிழர் இதயப10ர்மாக பங்கேற்பதை வலப்படுத்தும்.


செம்மொழியான தமிழை, இந்திய அரசே உடனே அங்கீகாரம் கொடு - ஞானி, தமிழ் செம்மொழி போராட்ட்க் குழு, August 2003 [source - Thamizh Mann]

கிரேக்கம், இலத்தீன், சீனம், சமஸ்கிருதம் முதலிய உலகளவில் தொன்மையும், மேன்மையும் உடைய மொழி தமிழ்மொழி. இந்த உண்மையை தமிழகத்திலும் சரி, வெளி உலகிலும் சரி, மொழியியல் அறிஞர்கள் எந்தத் தடங்களும் இல்லாமல் ஒப்புக் கொள்கின்றனர்.

ஐரோப்பா அமெரிக்காவில் உள்ள பல்கலைக் கழகங்கள் சமஸ்கிருத மொழியோடு தமிழையும் ஏற்று ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர். இந்தியாவின் வரலாற்றை வடக்கிலிருந்து தொடங்குவதற்கு மாறாகத் தெற்கிலிருந்து தான் தொடங்க வேண்டும் என்ற பேருண்மையையும் அறிஞர்கள் இன்று ஒப்புக் கொள்கின்றனர்.

இந்திய நாகரிகத்தின் மேலாக ஆரிய நாகரிகம் என்பதாக அமர்ந்த போதிலும், அடித்தளம் திராவிட நாகரிகம் தான் என்பதையும் அறிஞர்கள் மறுக்கவில்லை. தமிழ் மொழியின் தொன்மை, மேன்மை இலக்கிய இலக்கணத் திறன் நவீன காலத்திற்கும் ஒத்த முறையில் எல்லா வகைகளிலும் தனக்குள் வளர்த்துக் கொண்ட ஆக்கத்திறன் முதலிய பல்வேறு பண்புகளையும் வைத்துப் பார்க்கும் பொழுது தமிழ் செவ்வியல்மொழி தான் என்பதை ஆயிரம் கோவில்களில் நாம் அடித்துச் சொல்ல முடியும்.

ஒரு நு}றாண்டுகளுக்கு மேலாகத் தமிழ் அறிஞர்கள், தமிழ் பல்கலைக் கழகங்கள், தமிழ் செவ்வியல் மொழிதான் என்பதற்குத் தேலையான ஆதாரங்களைத் தேடித் தேடி நிறுவியுள்ளனர். மைய அரசே சமஸ்கிருதம் மட்டுமல்லாமல் அரபு, பாரசீகம் ஆகிய அந்நிய மொழிகளைக் கூட செவ்வியல் மொழி என அறிவித்து தற்காலச் சு10ழலிலும் அவற்றை வாழ்விப்பதற்கும், வளர்ப்பதற்கும் தேவையான நிதி உதவிகள் முதலியவற்றை வழங்கிவருகிறது.

ஆனால் தமிழைப் பார்த்துத் தன்னைத் திருத்தம் செய்து கொண்ட சமஸ்கிருதமொழிக்கு நிகராக தமிழை ஒப்புக் கொள்ள மறுக்கின்றது. தமிழக முதல்வர்கள் பல முறை மைய அரசுக்கு கோரிக்கைகள் விருத்துள்ளனர். திராவிடமொழி அறிஞர்களும் தமிழைச் செவ்வியல் மொழி என ஏற்பதை ஒப்புக் கொள்கிள்றனர். மைய அரசுக்கு இது வரை மனம் வரவில்லை. சமஸ்கிருதம் தான் இந்திய மொழிகளுக்கு எல்லாம் மூல மொழி என்றும், தெய்வ மொழி என்றும் நம்புகிற இந்துமதவாதிகள் மைய அரசில் ஆதிக்கம் பெற்றுள்ள சு10ழலில் தமிழின் மேன்மையை இன்றுவரை ஒப்புக் கொள்ள மறுப்பதை, மொழிச் சார்ந்த சிக்கல் என்பதைக் காட்டிலும், இந்தச் சிக்கலை அரசியல் சிக்கல், அதுவும் இந்துமதம் ஃ இந்துக்குலம் சார்ந்த அரசியல் என்றே நம்மால் கருத முடியும்.

தமிழையும், தமிழ் மக்களையும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பலவகைகளிலும் ஒடுக்கி வருவது ஆரிய நாகரிகம். விடுதலைக்குப் பின்னரும் இந்த ஒடுக்கு முறை குறைவில்லாமல் நடந்து வருகிறது. அரசியல், பொருளியல், கல்வி, பண்பாடு முதலிய பல களங்களிலும் தொடர்ந்து இந்த ஒடுக்குமுறையின் இன்னொரு கூறுதான் தமிழின் மீதான ஒடுக்கு முறை. தமிழர்களுக்கு ஒரு காலத்தில் தனி நாடு இருந்தது. தமிழ் மக்கள் என்றைக்கும் மதத்திற்கும் பார்ப்பணியத்திற்க்கும் முன்னரிமை தராதவர்கள்.

சமத்துவமும், சமதர்மமும் தமிழர்களின் அறம். அறிவுத் தரத்தில், பண்பாட்டுச் செழமையில் தமிழர் உலகளவில் மரியாதைக்குரியவர்கள். தமிழைச் செவ்வியல் மொழி என ஏற்றுக் கொண்டால், இ;த்தகைய உண்மைகளையும் ஏற்க வேண்டிவரும். அதற்கு மாறாக தமிழர்களை வைத்தே தமிழ் மக்களை ஒடுக்க முடியும் என்பதையும் பல பத்தாண்டுகளாக வடக்கிலுள்ள ஆதிக்கவாதிகள் நன்றாக அறிந்துள்ளனர். தமிழின் வளர்ச்சியைக் கூட தமிழகத்தில் உள்ள ஆதிக்க வாதிகளைக் கொண்டு தடுத்துவிட முடியும் என்பதிலும் அவர்கள் உணர்வுள்ள தமிழர் ஒரு நாளும் ஏற்க முடியாது.

ஆகவே தான் நு}று தமிழ் அறிஞர்கள் தமிழ் உணர்வாளர்கள், டெல்லியில் பாராளுமன்ற குளிர்காலத் தொடரின்போது பட்டினிப் போர் மேற் கொள்வதென முடிவு செய்து அதற்கான பணிகளை ஈடுபட்டுள்ளனர். சென்னையிலும், தமிழ்நாட்டிலும் பரவலாக உள்ள தமிழ் அமைப்புகள் சார்ந்த பலரையும் ஒன்று திரட்டி இந்தப் போரை மேற்கொள்கின்றனர். தலை நகர் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த தா. சுந்தரராசன் அவர்கள் ஒருங்கினைப்பாளராகப் பணிபுரிகிறார்.

பெருங்கவி கோ.வா.மு. சேதுராமன் போன்ற பலரும் முனைப்போடு செயல்படுகின்றர். தமிழைச் செவ்வியல் மொழி என மைய அரசு உடனடியாக ஒப்புக் கொள்ளும் என்று யாரும் நம்புவதற்கு ஆதாரம் இல்லை. எனினும் தமிழகத்ததைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அனைவரும் ஏற்கனவே பிரதமரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வற்புறுத்தியுள்ளனர். தமிழகத்தின் பாரதிய சனதாவும் இக் கோரிக்கையை ஏற்கிறது. தமிழின் ஆக்கத்திற்கான இந்தக் கோரிக்ககையை டெல்லிவரை கொண்டு செல்லும் தமிழ் அறிஞர்களை நாம் மனமாற வாழ்த்துகிறோம். வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறோம்.
 

Mail Usup- truth is a pathless land -Home