"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil Language & Literature > Paventhar Bharathidasan - பாரதிதாசன் > தமிழச்சியின் கத்தி
tamizacciyin katti - தமிழச்சியின் கத்தி
Acknowledgements:
EText input : Ms.Suhitha Arasu, Toronto, Ontario, Canada.
Proof-reading: Mr.P.K.Ilango, Erode, Tamilnadu, India.
Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerlandமின்னுரையாக்கம்: திருமதி.சுகிதா அரசு, டொரோண்டோ, ஒண், கனடா.
பிழை திருத்தம்: திரு.பா.கா.இளங்கோ, ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா.
உயருரைக் குறிமொழியாக்கம்:
This webpage presents the Etxt in Tamil script but in Unicode encoding.To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages (Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
© Project Madurai 1999 - 2003 Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
1 | சுதரிசன் சிங்க் துடுக்கு | மின்பதிப்பு |
2 | சுதரிசன் சூழ்ச்சி | மின்பதிப்பு |
3 | திம்மன் பூரிப்பு | மின்பதிப்பு |
4 | சுதரிசன் நினைவு | மின்பதிப்பு |
5 | அவன் பொய்யுரை | மின்பதிப்பு |
6 | சுப்பம்மா தொல்லை | மின்பதிப்பு |
7 | திம்மன் ஆவல் | மின்பதிப்பு |
8 | காடு | மின்பதிப்பு |
9 | சிங்கம் | மின்பதிப்பு |
10 | சுப்பம்மா | மின்பதிப்பு |
11 | பொன்துளிர் | மின்பதிப்பு |
12 | வானப்படம் | மின்பதிப்பு |
13 | புதிய சிப்பாய் | மின்பதிப்பு |
14 | அன்றிரவு | மின்பதிப்பு |
15 | மகிழ்ந்திரு | மின்பதிப்பு |
16 | சுதரிசன் மயக்கம் | மின்பதிப்பு |
17 | சுப்பம்மா நிலை | மின்பதிப்பு |
18 | திம்மன் நிலை | மின்பதிப்பு |
19 | சுதரிசன் நிலை | மின்பதிப்பு |
20 | இங்கே செல்லாது | மின்பதிப்பு |
21 | சேரிக்குள் சென்றாள் | மின்பதிப்பு |
22 | மன்னனைக் கண்டாள் | மின்பதிப்பு |
23 | இருமாதரும் அழைத்தார்கள் | மின்பதிப்பு |
24 | சேரித்தலைவன் செங்கான் | மின்பதிப்பு |
25 | செங்கான் உண்ண அழைத்தான் | மின்பதிப்பு |
26 | சோற்றில் நஞ்சு | மின்பதிப்பு |
27 | உண்ண எழுந்தாள் | மின்பதிப்பு |
28 | நஞ்சுண்டு வீழ்ந்தாள் | மின்பதிப்பு |
29 | மன்னன் வந்தான் | மின்பதிப்பு |
30 | திம்மன் நான் என்றான் | மின்பதிப்பு |
31 | அத்தான் என்றெதிர் வந்தாள் | மின்பதிப்பு |
32 | மறவர் திறம் பாடு | மின்பதிப்பு |
33 | குதிரைவீரர் வருகின்றார்கள் | மின்பதிப்பு |
34 | மேற்பார்வையாளன் | மின்பதிப்பு |
35 | அவள் பிடிப்பட்டாள் | மின்பதிப்பு |
36 | தேசிங்குக்குச் சேதி எட்டிற்று | மின்பதிப்பு |
37 | சுப்பம்மாவை இழுத்து வந்தார்கள் | மின்பதிப்பு |
38 | தேசிங்கு முன் வந்தாள் | மின்பதிப்பு |
39 | முற்றிய பேச்சு | மின்பதிப்பு |
40 | தேசிங்கு சினம் | மின்பதிப்பு |
தில்லியில் பாதுசா செங்கோல் செலுத்தினான்; ஆர்க்காட்டுப் பகுதி அவன்ஆ ணைப்படி நவாப்பினால் ஆட்சி நடத்தப் பட்டது. நுவலும்அவ் வார்க்காடு நூற்றெழு பத்திரண்டு பாளைய மாகப் பகுக்கப் பட்டது; பாளையத் தலைவர்பேர் பாளையப் பட்டுகள்; பகர்நற் செஞ்சிப் பாளையப் பட்டாய்த் தேசிங்கு வாழ்ந்தான் சிற்சில ஆண்டுகள். தேசிங்கு வடக்கிருந்து தென்னாடு போந்தவன்; தமிழரை இகழும் தன்மை வாய்ந்தவன்; தேசிங் கினையும் தென்னாடு வெறுத்தது. சிப்பாய் களிலே சிலர்க்கொரு தலைவன் இருப்பான். 'சுபேதார்' என்ப தவன்பெயர். சுதரிசன் சிங்க்எனும் சுபேதா ருக்குத் தேசிங் கிடத்தில் செல்வாக் குண்டு. புதுவைக் கடற்கரை போனான் சுதரிசன்; வருகையில் இடையில் வளவனூர்ப் புறத்தில் தென்னந் தோப்பில் திம்மனைக் கண்டான். தௌிவிலாத் தமிழில் திம்மனைக் கேட்டான்: உன்னதா இந்தத் தென்னந் தோப்பென்று! திம்மன் ஆம்என்று செப்பி வரவேற்றுக் குளிர்ந்த இளநீர் கொடுத் துதவினான். சுதரிசன் உன்வீடு தொலைவோ என்றான். அருகில் என்றான் அன்புறு திம்மன். சுதரிசன் அவனின் தோழன் ரஞ்சித்தும் திம்மன் வீடு சேர்ந்தனர்; இருந்தார்! மாடு கறந்து வழங்கினான் பாலும்; ஆடு சமைத்தும் அருத்தினான் திம்மன். திண்ணையில் சுதரிசன் திம்மன் ரஞ்சித் உண்ட இளைப்பொடும் உட்கார்ந் திருந்தனர். திம்மன் மனைவி 'சுப்பம்மா' என்பவள் எம்மனி தனையும் ஈன்ற பிள்ளையாய்க் கொள்ளும் உள்ளம் கொண்டவள் பிள்ளை இல்லாதவள் ஆத லாலே! |
சுதரிசன்சிங்க் திம்மனிடம் பேசு கின்றான்;
|
'நற்காலம் வந்ததடி பெண்ணே - இங்கு
|
செஞ்சிக்குச் சென்றிருந்த சுதரி சன்சிங்க்
|
'என்மீதில் ஆசைஅவட் கில்லா மலும்இல்லை; என்மீதில் ஆசையே இல்லா தவள்போலே ஏன்நடந்தாள் என்றுகேள்; என்னை இன்னானென்று தான்அறிவ தற்குள்தன் னைக்காட்டிக் கொள்வாளா? மட்டுப் படுத்தினாள் நெஞ்சை! வளர்காதல் கட்டுப் படுத்தினேன் நானும் கடைசிவரை! அன்னவளின் நெஞ்சத்தின் ஆழத்தை என்சொல்வேன்? என்மீதில் ஆசையே இல்லாதவள் போலும் வீட்டுக்கா ரன்மேல் விருப்பமுடை யாள்போலும் காட்ட நடந்துபோய்க் கண்ணால் வழிபார்த்து நெஞ்சத்தை மட்டும்என் நேயத்தில் வைத்தாளே! வஞ்சி திறமை வரைதல் எளிதா? குறுநகைப்பும் கொஞ்சும் கடைநோக்கும் கூட்டி உறுதி குறித்தாள் உனக்குத் தெரியாமல். மேலும் இதுகேட்பாய் வீட்டில் நடந்தவற்றை. ஓலைத் தடுக்கில்நான் திண்ணையில்உட் கார்ந்திருந்தேன்; உள்ளிருந்து பார்ப்பாள் ஒளிந்துகொள்வாள்; என்முகந்தான் கள்ளிருந்த பூவோ! களிவண்டோ மாதுவிழி! 'தன்கணவன் எப்போது சாவானோ, இச்சுதரி சன்கணவன் ஆவதென்றோ' என்பதவள் கவலை. இன்னும் விடியா திருக்குதடா ரஞ்சித்சிங்க்; பொன்னங் கதிர்கிழக்கிற் பூக்கா திருக்குதடா! சேவலும் கூவா திருக்குதடா! செக்குந்தான் காவென்றும் கர்ரென்றும் கத்தா திருக்குதடா! மாவின் வடுப்போன்ற கண்ணாள்காண்! மாங்குயிற்கும் கூவும் இனிமைதனைச் சொல்லிக் கொடுப்பவள்காண்! யாவரும் தம்அடிமை என்னும் இரண்டுதடும் கோவைப் பழமிரண்டின் கொத்து! நகைமுல்லை! அன்னம் பழித்தும் அகத்தில் குடிபுகுந்தும் பின்னும்எனை வாட்டுகின்ற பெண்நடைபோற் காணேன்! கொடிபோல் இடைஅசைந்து கொஞ்சுகையில், யானைப் பிடிபோல் அடிகள் பெயர்க்கையிலே அம்மங்கை கூட்ட வளையல் குலுங்கக்கை வீசிடுவாள் பாட்டொன்று வந்து பழிவாங்கிப் போடுமடா! அன்னவள்தான் என்னுடைய வாழ்வே! அழகுடையாள் என்னைப் புறக்கணித்தல் என்பதென் றன்சாவு! நிலவுமுகம் அப்பட்டம்! சாயல் நினைத்தால் கலப மயிலேதான்! கச்சிதமாய்க் கொண்டையிட்டுப் பூச்சூடி மண்ணிற் புறப்பட்ட பெண்ணழகை மூச்சுடையேன் கண்டுவிட்டேன்; செத்தால் முகமறப்பேன்' என்று சுதரிசன்சிங்க் சொன்னான். இரவில்நொடி ஒன்றொன்றாய்ப் போபோஎன் றோட்டி ஒருசேவல் நெட்டைக் கழுத்தை வளைக்க நெடும்பரியைத் தட்டினான்; வீட்டெதிரே சாணமிடும் சுப்பம்மா அண்டையிலே நின்றான்! வரவேற்றாள் அன்னவனைக் கண்ட இனியகற் கண்டு! |
அப்போது தான்திம்மன் கண்விழித்தான்! 'ஆ'என்றான்; 'எப்போது வந்தீர்கள்?' என்றெழுந்தான் - 'இப்போது தான்வந்தேன்' என்றான் சுதரிசன். 'தங்கட்கு மீன்வாங்க நான்போக வேண்டுமே - ஆனதினால் இங்கே இருங்கள் இதோவருகின் றே'னென்று தங்காது திம்மன் தனிச்சென்றான் - அங்கந்தச் சுப்பம்மா தன்னந் தனியாகத் தோட்டத்தில் செப்புக் குடம்துலக்கிச் செங்கையால் - இப்புறத்தில் வைக்கத் திரும்பினாள்; வந்த சுதரிசன்சிங்க் பக்கத்தில் நின்றிருந்தான்; பார்த்துவிட்டாள் - திக்கென்று தீப்பற்றும் நெஞ்சோடு 'சேதிஎன்ன?' என்றுரைத்தாள். 'தோப்புக்குப் போகின்றேன் சொல்லவந்தேன் - சாப்பிட்டுச் செஞ்சிக்குப் போவதென்ற தீர்ப்போடு வந்தேன்.நீர் அஞ்சிப்பின் வாங்காதீர்; அவ்விடத்தில் - கெஞ்சி அரசரிடம் கேட்டேன்; அதற்கென்ன என்றார். அரசாங்கத் துச்சிப்பாய் ஆக்கி - இருக்கின்றேன் திம்மனுக்கு நான்செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன். ஐம்பது வராகன் அரசாங்கச் - சம்பளத்தை வாங்கலாம் நீங்கள் வயிறாரச் சாப்பிடலாம்; தீங்கின்றி எவ்வளவோ சேர்க்கலாம் - நாங்களெல்லாம் அப்படித்தான் சேர்த்தோம். அதனால்தான் எம்மிடத்தில் இப்போது கையில் இருப்பாக - முப்பத்து மூவா யிரவரா கன்சேர்த்து மூலையிலே யாவருங் காணாமல் இருத்தினோம்; - சாவுவந்தால் யாரெடுத்துப் போவாரோ? பெண்டுபிள்ளை யாருமில்லை. ஊரெடுத்துப் போவதிலும் உங்கட்குச் - சேருவதில் ஒன்றும் கவலையில்லை. உங்கட்குப் பிள்ளைகள் இன்றில்லை யேனும் இனிப்பிறக்கும்; - என்பிள்ளை வேறு பிறர்பிள்ளை வேறா? இதைநீயே கூறுவாய்' என்று சுதரிசன் - கூறினான். 'திண்ணையிலே குந்துங்கள்' என்றுரைத்தாள் சேல்விழியாள். வெண்ணெய்என்ற பிள்ளைக்கு மண்ணையள்ளி - உண்ணென்று தந்ததுபோல் இவ்வாறு சாற்றினளே - இந்தமங்கை என்று நினைத்த சுதரிசன் திண்ணைக்கே ஒன்றும்சொல் லாமல் ஒதுங்கினான் - பின்அவளோ கூடத்தைச் சுற்றிக் குனிந்து பெருக்கினாள்; 'மாடத்திற் பற்கொம்பு வைத்ததுண்டோ? - தேடிப்பார்' என்றுரைத்துக் கொண்டே எதிர்வந்து 'சுப்பம்மா ஒன்றுரைக்க நான்மறந்தேன் உன்னிடத்தில் - அன்றொருநாள் செஞ்சியில் ஒருத்தி சிவப்புக்கல் கம்மலொன்றை அஞ்சு வராகன் அடகுக்குக் - கெஞ்சினாள் முற்றுங் கொடுத்தேன் முழுகிற்று வட்டியிலே. சிற்றினச் சிவப்போ குருவிரத்தம் - உற்றதுபோல் கோவைப் பழத்தில் மெருகு கொடுத்ததுபோல் தீவட்டி போல்ஒளியைச் செய்வதுதான் - தேவை யுண்டா? என்று சுதரிசன் கேட்டான். 'எனக்கதுஏன்?' என்றுசுப் பம்மா எதிர்அறைக்குச் - சென்றுவிட்டாள். திண்ணைக்குச் சென்றான் சுதரிசன்சிங்க். இன்னுமென்ன பண்ணுவேன் என்று பதறுகையில் - பெண்ணாள் தெருவிலே கட்டிவைத்த சேங்கன்று தின்ன இருகையில் வைக்கோலை ஏந்தி - வரக்கண்டே 'இப்பக்கம் நன்செய்நிலம் என்ன விலை?'என்றான். 'அப்பக்கம் எப்படியோ அப்படித்தான் - இப்பக்கம்' என்று நடந்தாள். இவனும் உடன்சென்றே 'இன்றுகறி என்ன?' எனக்கேட்டான் - ஒன்றுமே பேசா திருந்தாள். பிறகுதிண் ணைக்குவந்தான். கூசாது பின்னும் குறுக்கிட்டு - 'நீசாது வேலைஎலாம் செய்கின்றாய்; வேறு துணையில்லை காலையிலி ருந்துநான் காணுகின்றேன் - பாலைக் கறப்பாயா? எங்கே கறபார்ப்போம்' என்றான். அறப்பேசா மல்போய் அறைக்குள் - முறத்தில் அரிசி எடுத்தாள். அவனும் அரிசி பெரிசிதன் என்றுரைத்தான். பேசாள் - 'ஒருசிறிய குச்சிகொடு பற்குத்த' என்பான். கொடுத்திட்டால் மச்சுவீ டாய்இதையேன் மாற்றவில்லை? - சீச்சீ இதுபோது மாஎன்பான். சுப்பம்மா இந்தப் புதுநோயை எண்ணிப் புழுங்கிப் - பதறாமல் திம்மனுக் கஞ்சித் திகைத்தாள்.அந் நேரத்தில் திம்மனும் வந்தான் சிடுசிடுத்தே - 'இம்மட்டும் வேலையொன்றும் பாராமல் வீணாக நீவீட்டு மூலையிலே தூங்கினாய் முண்டமே! - பாலைவற்றக் காய்ச்'சென்றான். சென்றாள் கணவனது கட்டளைக்குக் கீச்சென்று பேசாக் கிளி. |
காலை உணவருந்திச் - சுதரிசன்
|
'நாளைநடப் பதைமனிதன் அறியான்' என்று
|
'காட்டு வழிதனிலே சிங்கமே! - எம்மைக்
|
இவ்வாறு கூறிப்பின் சுதரி சன்சிங்க்
|
சுப்பம்மா கால்தூக்கம், சுப்பம் மாவின்
|
'பொன்னான வானப் படத்தில் - வியிரப்
|
'சுதரிசன்சிங்க் செய்தநன்றி பெரிது கண்டாய்!
|
மாலை ஆயிற்று! வரும்வழி பார்த்துச் சோலை மலர்விழி துளிகள் உதிர்க்கக் குடிசையின் வாசலில் குந்தி யிருந்தாள்! சுப்பம் மாவுக்குத் துணையாய் இருந்த குப்பும் முருகியும் செப்பினார் தேறுதல். குப்பு 'மங்கையே, சிப்பாய் இப்போது வருவார்; அதற்குள் வருத்தமேன்?' என்றாள். முருகி, 'இதற்கே உருகுகின் றாயே சிப்பாய் வேலைக் கொப்பிச் சென்றவர் மாசக் கணக்காய் வாரக் கணக்காய் வீட்டை மறந்து கோட்டையில் இருப்பார்; எப்படி உன்னுளம் ஒப்பும்?' என்றாள். கோதைசுப் பம்மா கூறு கின்றாள்: 'புயற்காற்று வந்து போகாது தடுப்பினும் அயலில் தங்க அவருக்குப் பிடிக்காது; நெஞ்சம் எனைவிட்டு நீங்கவே நீங்காது; பிரிந்தால் எனக்கும் பிடிக்கா துலகமே! வீட்டை விட்டவர் வௌியே செல்வது கூட்டைவிட் டுயிர்வேறு கூடு செல்வதே! அதென்ன மோயாம் அப்படிப் பழகினோம். அயல்போ வாரெனில் அதுவும் எங்கே? வயல்போ வதுதான். வலக்கைப் பக்கத்து வீடு, மற்றொரு வீடு, தோப்பு மாமரம் அதனருகு வயல்தான்! முருகியே இப்போ தென்ன இருக்கும் மணி?அவர் எப்போது வருவார்?' என்று கேட்டாள்! குப்பு,மணி ஆறென்று கூறினாள்! முருகி விளக்கு வைக்கும் வேளை என்றாள்! குப்பு, முருகி, சுப்பம்மா இவர் இருந்த இடமோ திருந்தாக் குடிசை! நாற்பு றம்சுவர் நடுவி லேஓர் அறையு மில்லை. மறைவு மில்லை. வீட்டு வாசல், தோட்ட வாசல் இருவா சல்களும் நரிநுழை போலக் குள்ள மாகவும் குறுக லாகவும் இருந்தன. முருகி எழுந்து விளக்கை ஏற்றிக் கும்பிட்டுச் சோற்றை வட்டித்தாள். குப்பு மகிழ்ந்து குந்தினாள் சாப்பிட. சுப்பம் மாமுகம் சுருக்கிக் கூறுவாள்: 'கணவர் உண்டபின் உணவு கொள்வேன்; முதலில் நீங்கள் முடிப்பீர்' என்றனள். குப்பு 'வாவா சுப்பம் மாநீ இப்படி வா!நான் செப்புவ தைக்கேள். வருவா ரோஅவர் வரமாட் டாரோ? சிப்பாய் வேலை அப்படிப் பட்டது. உண்டு காத்திரு. சிப்பாய் வந்தால் உண்பார்; உணவு மண்ணாய் விடாது. சொல்வதைக் கேள்'என்று சொல்லவே மங்கை 'சரிதான் என்று சாப்பிட் டிருந்தாள். காலம் போகக் கதைகள் நடந்தன. முருகி வரலாறு முடிந்ததும் குப்பு மாமியார் கதையை வளர்த்தினாள். பிறகு மூவரும் தனித்தனி மூன்று பாயில் தலையணை யிட்டுத் தலையைச் சாய்த்தனர். அப்போது தெருப்புறம் அதிக மெதுவாய் 'என்னடி முருகி' என்ற ஒருகுரல் கேட்டது. முருகி கேட்டதும் எழுந்துபோய் 'ஏனிந் நேரம்' என்று வரவேற்று வீட்டில் அழைத்து வெற்றிலை தந்தாள். இருவரு மாக ஒரேபாய் தன்னில் உட்கார்ந் தார்கள்! உற்றுப் பார்த்த சுப்பம் மாஉளம் துண்டாய் உடைந்தது! சிங்கன் இரவில் இங்கு வந்ததேன்? முருகியும் அவனும் அருகில் நெருங்கி உரையாடு கின்றனர். உறவும் உண்டோ? என்று பலவா றெண்ணி இருக்கையில் முருகிக்குச் சிங்கன் முத்த மிட்டான். குப்பும் கதவினைத் தொப்பென்று சாத்திச் சூழ நடந்து சுடர்விளக் கவித்தாள். 'மேல்என் னென்ன விளையுமோ? கண்ணிலாள் போல்இவ் விருளில் புரளு கின்றேன்; சுதரிசன் சிங்கின் துடுக்குக் கைகள் பதறிஎன் மீது பாய்ந்திடக் கூடுமோ?' என்று நினைத்தாள்; இடையில் கத்தியை இன்னொரு தரம்பார்த்துப் பின்னும் மறைத்தாள். கரைகண்டு கண்டு காட்டாற்றில் மூழ்கும் சேய்போல் நங்கை திடுக்கிடும் நினைப்பில் ஆழ்வதும் மீள்வது மாக இருந்தாள். கருவிழி உறங்கா திரவைக் கழிக்கக் கருதினாள்; ஆயினும் களையுண் டானதால் இருட்சேற் றுக்குள் இருந்த மணிவிழியைக் கரும்பாம் பாம்துயில் கவர இரவு போயிற்றே! இரவு போயிற்றே! |
நீரடை பாசியில் | |
தாமரை பூத்தது | போலே - நல்ல |
நீலத் திரைகடல் | மேலே - பெருங் |
காரிருள் நீக்கக் | |
கதிர்வந்து பூத்ததி | னாலே |
வாரிச் சுருட்டி | |
எழுந்தனன் சிங்கனப் | போது - உடை |
மாற்றினன் தன்னுடல் | மீது - அவன் |
நேரில் அழைத்தனன் | |
வந்துநின் றாளந்த | மாது. |
'ஆயிரம் பேரொடு | |
திம்மனும் அங்கிருக் | கின்றான் - கவாத் |
தாரம்பம் செய்திருக் | கின்றான் - அவன் |
ஞாயிறு செல்லத்திங் | |
கட்கிழ மைவரு | கின்றான். |
போயிருந் தாலென்ன | |
அச்சம் உனக்கென்ன | இங்கு? - ந |
பொன்போலப் பாயில்உ | றங்கு - இரு |
தாய்மாரும் உண்டு | |
துயர்செய்வ தெந்தக்கு | ரங்கு? |
ஆவிஉன் மேல்வைத்த | |
திம்ம னிடத்திலும் | சென்று - நான் |
ஆறுதல் கூறுவேன் | இன்று - நீ |
தேவை இருப்பதைக் | |
கேள்இங்குத் தங்குதல் | நன்று. |
கோவை படர்ந்திட்ட | |
கொய்யாப் பழந்தரும் | தோட்டம் - இங்குக் |
கூவும் பறவையின் | கூட்டம் - மிக |
நாவிற்றுப் போகும் இனிக்கும் பழச்சுளை | ஊட்டம். |
தெற்குப் புறத்தினில் | |
ஓடி உலாவிடும் | மானும் - அங்குச் |
செந்தினை மாவோடு | தேனும் - உண்டு |
சற்றே ஒழிந்திடில் | |
செல்லுவ துண்டங்கு | நானும்! |
சிற்றோடை நீரைச் | |
சிறுத்தையின் குட்டி | குடிக்கும் - அதைச் |
செந்நாய் தொடர்ந்து | கடிக்கும் - அங்கே |
உற்ற வரிப்புலி< | |
நாயின் கழுத்தை | ஒடிக்கும். |
மாங்குயில் கூவிஇவ் | |
வண்ணத் தமிழ்மொழி | விற்கும் - இந்த |
வையமெலாம் அதைக் | கற்கும் - களி |
தாங்காது தோகை | |
விரித்தாடி மாமயில் | நிற்கும். |
பாங்கிலோர் காட்டில் | |
படர்கொடி ஊஞ்சலில் | மந்தி - ஒரு |
பாறையின் உச்சியை | உந்தி - உயர் |
மூங்கில் கடுவனை | |
முத்தமிடும் அன்பு | சிந்தி |
கைவைத்த தாவில் பறித்திட லாகும்ப | லாக்காய் - நீ |
கால்வைத்த தாவில்க | ளாக்காய் - வெறும் |
பொய்யல்ல நீஇதைப் | |
போயறி வாய்காலப் | போக்காய். |
ஐவிரல் கூட்டி | |
இசைத்திடும் யாழ்கண்ட | துண்டு - யாழின் |
அப்பனன் றோவரி | வண்டு? - மக்கள் |
உய்யும் படிக்கல்ல | |
வோஇவை செய்தன | தொண்டு? |
'போய்வரு வேன்'என்று | |
சொல்லிச் சுதரிசன் | போனான் - அந்தப் |
பூவையின் மேல்மைய | லானான் - அவன் |
வாய்மட்டும் நல்லது; | |
உள்ளம் நினைத்திடில் | ஈனன். |
தூய்மொழி யாளும் | |
சுதரிச னைநம்ப | வில்லை - என்று |
தொலையுமோ இப்பெருந் | தொல்லை - என்று |
வாய்மொழி இன்றி | |
இருந்தனள் அக்கொடி | முல்லை. |
சுதரிசன் தொலைந்தான்! அன்னோன்
|
விடிந்தது சுப்பம் மாவும்
|
கோட்டையிலே அடைப்பட்டுக் கிடந்தான் வீட்டில்
|
மாவடு வொத்த விழிக்கும் - அவள்
|
தூங்கும் குயிலினை நோக்கி ஓராயிரம்
|
எட்டிஇருந் திட்டபல சேரி மக்கள்
|
தேசிங்கு மன்னன் - சில
|
> 'எப்படி இங்குவந்தாய்? - சுப்பம்மா
|
சேரிவாழ் செங்கானை இரண்டு பேரும்
|
ஆனைத் தலைப் பாறையாம் - அத னண்டையில்
|
'உண்டால் கசக்காது; கண்டால் வெறுக்காதே உண்ணக் கொடுத்து விடடி! - அடி கொண்டைக் கருங்கூந்தல் கோதை அருந்தினால் கொல்லாது; சோற்றில் இடடி! தொண்டைக்குள் சென்றவுடன் தோகை மயக்கமுறக் கெண்டை விழிகள் சுழலும்; - அடி தண்டா மரைமலரின் தண்டாய் உடம்பில்நௌி உண்டாக மண்ணில் உழலும். இந்தா மருந்துப்பொடி தந்தேன் கலந்திடு;வி ரைந்தே புறப்படு பெண்ணே! - அந்தச் செந்தேன் உதட்டுமங்கை தின்பாள் ஒளிந்திருந்து வந்தே நுழைகுவேன் கண்ணே!' அந்தச் சுதரிசனும் இந்த வகையுரைத்துத் தந்த மயக்க மருந்தைக் - குப்பும் அந்தி உணவொடுக லந்து கொடுத்துவிட்டு வந்தாள் திரும்பி விரைந்தே. |
குப்பு மகிழ்வோடு கொண்டு கொடுத்திட்ட செப்புக்குண்டான் சோற்றைச் செய்த கறிவகையைச் சேரிச்செங் கான்வாங்கித் திண்ணையிலே வைத்திருந்தான். யாரையும் நம்பும் இயல்புடையான் ஆதலினால் நஞ்சக் கலப்புணவை நல்லுணவே என்றெண்ணிக் கொஞ்சம் இருட்டியதும் கோழி அடைந்தவுடன் கூப்பிட்டான் நங்கையினை. 'ஏன்?'என்றாள் கோதையும். 'சாப்பிடம்மா' என்றுமே சாற்றினான். அப்போது கள்ளர்கள் போலே இருமாதர் கண்உறுத்தே உள்ளே வராமல் ஒளிந்துகொண்டு பார்த்திருந்தார். சிங்கன் தெருவை அடைகின்றான் அந்நேரம்! நங்கை எழுந்தாள் நலிந்து. |
வாழை இலைதனில் சோற்றைச் - செங்கான்
|
காட்டுதீப் போலேசு பேதார் சாவு
|
'திம்மன்பெண் டாட்டிஎங்கே?' என்றான் மன்னன்.
|
'அத்தான்'என் றெதிர்வந்தாள். 'ஐயோ!' என்றாள்.
|
பாட்டொன்று பாடு! பழைய மறவர் திறம் கேட்டுப் பலநாட்கள் ஆயினவே கிள்ளையே! ஊட்டக் கருத்தில் உயிர்ப்பாட்டை என்றனுக்கே ஊட்டா துயிர்விடுதல் ஒண்ணுமோ என்றானே. அச்சத்துக் கப்பால் அழகுமணி வீட்டினிலே எச்சமயம் எச்சாதி என்றுமே பாராமல் மச்சான் வருகையிலே மங்கையுறும் இன்பத்தை வைச்சிருக்கும் சாவே! எனைத்தழுவ வாராயோ! தன்னலத்துக் கப்பால் தனித்தமணி வீட்டினிலே இன்னார் இனியார் எனயாதும் பாராமல் பொன்னைப் புதிதாய் வறியோன்கொள் இன்பத்தை மன்னியருள் சாவே எனைத்தழுவ வாராயோ! நான்பாடக் கேட்பீரே என்றுரைத்த நல்லாளைத் தான்பாடக் கேட்பதற்குத் திம்மனவன் சாற்றுகின்றான்: கான்பாடும் வண்ணக் கருங்குயிலாள் காதுகளை ஊன்பாடு தீர்க்க உடன்படுத்தி வைத்தாளே! ஆயிரம் மக்களுக்கே ஆனதுசெய் தோன்ஆவி ஓயுமெனக் கேட்கையிலும் உள்ளங் களிக்கும்;உயிர் ஓயினும் வந்தென்றும் ஓயாத இன்பத்தை ஓயும் படியளிக்கும் சாவே எனைத்தழுவே! ஏழை ஒருவனுக்கே ஏற்றதுசெய் தோன்ஆவி பாழாதல் கேட்கையிலும் அன்பு பழுக்கும்;உயிர் பாழாகிப் போனாலும் ஊழிவரை இன்பத்தைத் தாழாது நல்குவாய் சாவே எனைத்தழுவே! |
நாவினிக்கப் பாடினார் மரத்தி னின்று!
|
ஏறித் - தலைக் | |
கட்டோடு வந்தனன் | சீறி! |
எட்டுத்திக் குட்பட்ட மக்கட்கூட் டந்தன்னை | |
ஏங்கிட வைப்பவன் | போலே - இமை |
கொட்டாமல் பார்த்தனன் | மேலே! |
சொட்டச்சொட் டவேர்வை உகார்ந்தி ருந்தவர் | |
துள்ளிஎ ழுந்தங்குத் | தாவிச் - சிரித் |
திட்டனர் அன்னோனை | மேவி! |
திட்டுத்திட் டென்றடி வைக்கும் பரிமீது | |
தேசிங்கு வந்தனன் | என்றே - திம்மன் |
பட்டாவை ஏந்தினன் | நன்றே! |
சுற்றிஇ ரையினைக் கொத்தும் பருந்தென | |
உற்றுவி ழித்தசுப் | பம்மா - அங்குச் |
சற்றும்இ ருப்பாளோ | சும்மா? |
வெற்பும் அதிர்ந்திட வேற்றுவர் அஞ்சிட | |
மேற்கிளை விட்டுக் | குதித்தாள் - பகை |
அற்றிட நெஞ்சம் | கொதித்தாள். |
சுற்றின கத்திகள் தூறிற்றுச் செம்மழை | |
துள்ளி யெழுந்தன | மெய்கள் - அங்கே |
அற்று விழுந்தன | கைகள் |
முற்றும் முன்னேறி நெருங்கினன் திம்மனும் | |
கண்டனன் அவ்வதி | காரி - கண்டு |
தெற்றென வீழ்ந்தனன் | பாரில் |
உற்றது திம்மனின் வாள்அவன் மார்பில் | |
ஒழிந்தது வேஅவன் | ஆவி - கண்ட |
ரற்றினர் சிப்பாய்கள் | மேவி. |
மற்றவர் திம்மனைக் குத்தினர் திம்மனும் | |
மாய்ந்தனன் மண்ணில் | விழுந்து - கண் |
ணுற்றனள் இன்பக் | கொழுந்து. |
சுற்றிய வாள்விசை சற்றுக் குறைந்ததும் | |
தோகை பதைத்ததும் | கண்டார் - கைப் |
பற்றிட எண்ணமே | கொண்டார். |
பற்பலர் வந்தனர் பாவையைச் சூழ்ந்தனர் | |
பாய்ந்தனர் அன்னவள் | மேலே - மிகச் |
சிற்றின நாய்களைப் | போலே! |
திம்மன்மேல் சென்றவிழி திரும்பு தற்குள்
|
செஞ்சிப் பெருங்கோயில் - தன்னிலே
|
கோட்டைநெடும் வாயிலினைக் குறுகி விட்டார் - அந்தக்
|
புதுப்பரிதி இருவிழிகள் ஒளியைச் சிந்த
|
'உண்மையைச் சொல்லிடுவாய்! - எவன்தான்
|
'நாள்வரட்டும் போகட்டும்; ஆனால் இந்த
|