"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Struggle for Tamil Eelam > International Frame of Struggle for Tamil Eelam > New De lhi & the Tamil Struggle > International Federation of Tamils writes to Chief Minister Karunanithi
India & the Struggle for Tamil Eelam
International Federation of Tamils
writes to Chief Minister Karunanithi
8 June 1998
'...இருபத்தியோராவது நூற்றாண்டில் உலக அரங்கில்
இந்தியா வகிக்கப்போகும் பங்கு அளப்பரியது..'
மாண்புமிகு தமிழக முதல்வர்
திரு. மு.கருணாநிதி
சென்னை
தமிழ்நாடு
இந்தியா
08.06.1998மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்களின் கவனத்திற்கு
உலகில் தமிழர் பரந்து வாழும் நாடுகளான டென்மார்க்ää சுவிற்சலாந்துää பிரான்ஸ்ää யேர்மனிää ஐக்கிய இராட்சியம்ää அவுஸ்திரேலியா, இத்தாலி, நேர்வே, சுவீடன், கனடா, ஐக்கிய அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மலேசியா, ஆகிய நாடுகளிலுள்ள தமிழர் அமைப்புக்களின் ஒன்றியங்களை ஒருங்கிணைக்கும் தாய் அமைப்பான அனைத்துலக தமிழர் ஒன்றியத்தின் சார்பில்ää இப் பணிவான வேண்டுகோளை தங்கள் மேலான கவனத்திற்கு சமர்ப்பிக்கிறோம்.இலங்கைத் தீவில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பு உலக நாடுகளின் கவனத்திலிருந்து மாத்திரமன்றிää தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கே தெரியாத வகையில்ää சிறீலங்காவின் சிங்கள பௌத்த பேரினவாத அரசுää தனது அதிகாரமனைத்தையும் பயன்படுத்திää இருட்டடிப்பு செய்து வருகின்றது. இந்த உண்மையை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்து தங்கள் மூலம் இலங்கைத் தீவில் இன்று சிறீலங்கா அரசு நடாத்திக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பை இந்திய மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து அதை நிறுத்தக் கோரும் பணிவான வேண்டுகோளை இலங்கை இந்தியாவிற்கப்பால் வாழும் தமிழர்களின் சார்பில்; அனுப்பி வைக்கின்றோம்.
யாழ்குடாநாடு சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டதாக சிறீலங்கா அரசு உலகிற்குக் கூறி வருகிறது. ஆனால் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் கீழுள்ள யாழ்குடாநாட்டில்ää தமிழ் இளைஞர்களும் யுவதிகளும்ää இராணுவத்தினராலும்ää காவல் துறையினராலும் பெருமளவு கைது செய்யப்பட்டு அவர்களிற் பெரும்பாலானோர் சித்திரவதை செய்து கொலை செய்யப்படுகிறார்கள். அத்துடன் ராஜினி கிருஷாந்தி செல்வி போன்ற பள்ளி மாணவிகள் சிங்கள இராணுவத்தின் கூட்டுப் பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதும் கிழக்கு மாகாணத்தில் கோணேஸ்வரி என்னும ஓர்; இளந்தாய் அவரது கணவன்ää இரு பிள்ளைகள் முன்னிலையில் கூட்டுப் பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கப்பட்ட பின்னர் அவரது பெண்ணுறுப்பில் கிரனைட் குண்டை வைத்து வெடிக்கச் செய்து கோரமான முறையில் கொல்லப் பட்டதும்; வெளிச்சத்துக்கு வந்த ஒரு சில சம்பவங்களே. இது போன்ற 200க்கு மேற்பட்ட பெண்களுக் கெதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றதாக அரசசார்பற்ற நிறுவனங்கள்ää மனித உரிமை அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
சிங்கள இராணுவத்தால் இன்று ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழரின் பாரம்பரிய தாயகமான வடக்குää கிழக்கு மாகாணங்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு சுதந்திர செய்தியாளர்கள் செல்வதற்குப் பல ஆண்டுகளாக சந்திரிகா அரசினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப் பிரதேசங்களில் இன்னற்பட்ட மக்களின் துயர்துடைக்கத் தம்மாலான உதவிகளை செய்துவந்த அரசு சார்பற்ற நிறுவனங்கள் அங்கு தொடர்ந்தும் இயங்குவதற்கு சிங்கள அரசு தடை விதித்தும் முட்டுக்கட்டைகள் இட்டும் வருகிறது.
இதற்குக் காரணம்ää இவர்கள் மூலம் வெளியுலகு அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை அறிந்து கொள்ளும் என்றுதான். அத்துடன் சிறீலங்கா அரசு இலங்கை பூராகவும் 05.06.1998இல் இருந்து மீண்டும் பத்திரிகைத் தணிக்கையை அமுலுக்குக் கொண்டுவந்துள்ளது.
சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு எதிரான அதன் மனித உரிமை மீறல்களை உலகுக்குத் தெரிய வராமல் நடவடிக்கை எடுப்பதுடன் தமிழரின் உயிரையும்ää உடமைகளையும் பாரம்பரியத் தாயகத்தையும் அதன் இறைமையையும் பாதுகாப்பதற்காக்க ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைப் பேராட்டத்தைää பயங்கரவாதம் என உலகெங்கும் பெருமளவு பணத்தைச் செலவழித்துப் பறைசாற்றி வருகின்றது.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களாகிய நாம் சந்திரிகா அரசின் பொய்களை உலகுக்குப் பல வழிகளிலும் வெளிப்படுத்தி ஈழத் தமிழரின் உண்மையான அவல நிலையையும்ää அவர்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்படும் மனித உரிமை மீறல்களையும் விளக்கி வருகின்றோம். அந்த நடவடிக்கையின் ஒரு அம்சமாகவே இந்த வேண்டுகோளையும்; தங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.
இன்றைய நிலையில் எந்தவொரு சிங்கள அரசியற் தலைவரினாலோ அல்லது கூட்டுத் தலைமை யினாலோ தமிழர் போராட்டத்திற்கு ஓர் நியாயமான தீர்வைää சிங்கள மக்கள் முன்வைத்துää அவர்களினால் அதை ஏற்கச் செய்ய இயலாது. இரு பெரும் கட்சிகளாகவும்ää மற்றும் சிறிய கட்சிகளாகவும் பிரிவுபட்டுக் காணும் சிங்கள அரசியற் கட்சிகள் யாவுமே ஆட்சியைக் கைப்பற்றி அதைத் தக்க வைத்துக் கொள்வதிலேயே தமது முழுக் கவனத்தையும் செலுத்துகின்றன. தமிழர் உரிமை பற்றிய அக்கறை இவற்றிற்குச் சிறிதும் கிடையாது.
தமிழர் போராட்டத்தைப் பயங்கரவாதமாகக் காட்டிää அப் போராட்டத்தை முன்னெடுக்கும் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் எனக் கூறிää அவர்களை அழிக்கவே 'போர் மூலம் சமாதானம்" என்ற நடவடிக்கை செய்வதாகக் கூறிää உலகை ஏமாற்றிக்கொண்டிருக்கும் சந்திரிகா அரசின் உண்மையான நோக்கம் மிகவும் பயங்கரமானது.
'போர் மூலம் சமாதானம்" என்று கூறி தமிழரின் தாயகப் பகுதியில் பொது மக்கள் வாழுமிடங்கள்ää ஆலயங்கள்ää வைத்தியசாலைகள்ää பாடசாலைகள் மீது கண்மூடித்தனமாக வானிருந்து குண்டுகள் வீசியும்ää இரவு வேளையில் செல்லடித்தும்ää பொது மக்களை பட்டினி போட்டும்ää மருந்துகளைத் தடை செய்தும் நாள் தோறும் எண்ணற்ற தமிழரை சந்திரிகா அரசு அழித்துக்கொண்டிருக்கிறது.
நாட்டின் பொருளாதாரம் சீரழிந்தாலென்னää எத்தனை ஆயிரம் சிங்களச் சிப்பாய்கள் செத்தொழிந்தாலென்னää தமிழரைப் பெருவாரியாகக் கொன்று அவர்களுடைய தொகையை ஆனமட்டும் குறைத்துவிட முயல்கிறது. இதுமட்டுமல்லாதுää தமிழீழத்தின் சமூகக் கட்டுமானத்தை நிர்மூலமாக்கிää போர் மூலமாக ஈழத் தமிழர்களின் கல்விää விவசாயம்ää மீன்பிடித்துறைää கால்நடைவளர்ப்புää நிலவளம்ää கனிவளம்ää தாவரவளம் அத்தனையையுமே திட்டமிட்ட முறையில் சீரழித்துää ஏஞ்சியிருக்கும் தமிழரைää சிறையிலடைத்துச் சித்திரவதை செய்தும்ää துன்புறுத்தியும்ää பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியும் ஓர் தமிழின அழிப்புப் போரை அமுல்படுத்தி வருகிறது.
ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைத்த கையுடனேயேää செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் மீறிää மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமையையும்ää வாக்குரிமையையும் பறித்த முதலாவது சிங்கள அரசின்; தலைமையை அடியொற்றியே அதைத் தொடர்ந்து வந்த சிங்களத் தலைமைகளும் தமிழருக்குத் தாம் முன்வந்து வழங்கிய வாக்குறுதிகளையும்ää ஒப்பந்தங்களையும் கிழித்தெறிந்தனர்.
மலையகத் தமிழிரின் வாக்குரிமைப் பறிப்;பு சந்திரிகா ஆட்சியிலும் தொடர்கிறது. எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தேசிய அடயாளஅட்டை இல்லாத மலையகத்தமிழர் வாக்களிக்க முடியாதென்று தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கிறார். மலையகத்தில் தேசிய அடயாளஅட்டை பெறுவதென்பது மிகக் கடினமான காரியம். இது பற்றிப் பாராளுமன்றத்தில் பல தடவைகள் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
தமிழருக்கு நடந்த அநீதியைத் தட்டிக் கேட்டுää தமிழருக்குத் தனியானதொரு ஆட்சியமைப்புத் தேவை என்பதை இலட்சியமாகக் கொண்டு புதிய தமிழ்க் கட்சியொன்றை உருவாக்கியவர் தந்தை செல்வநாயகம் அவர்கள். முப்பது வருடங்களுக்கு மேலாக நடாத்திய அகிம்சைவழிப் போராட்டங்களை சிங்கள ஆட்சியினர் வன்முறை மூலம் அடக்கி ஒடுக்கினர். இவ் ஆயுத அடக்குமுறை எல்லை மீறியபோதே தமிழர்களும் ஆயதமேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஈழத் தமிழரை அடக்கியொடுக்கி விட்டால்ää மலையகத் தமிழரும் குடியுரிமையற்ற கொத்தடிமைகளாக இருப்பார் என்று சிங்கள அரசு செயற்படுகின்றது. மலையகத்தில் வாழும் தமிழர்களுக்கும்ää குறிப்பாக மலையக இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் இன்று நடக்கும் கொடுமைகள் பல.
இருபத்தியோராவது நூற்றாண்டில்ää உலக அரங்கில் இந்தியா வகிக்கப்போகும் பங்கு அளப்பரியது. அதன் இலட்சியத்தைää அது சிறந்த முறையில் சென்றடைவதற்குää ஈழத் தமிழர்களுடைய பங்களிப்பும் பலவகையில் ஒத்தாசையாகவே இருக்கும் என்பது நிச்சயம். இவர்களது எண்ணிக்கை குறைவாக இருந்தாலுங்கூட இவர்களது அர்ப்பணிப்பு உலகறிந்த ஒன்றாகும். இப் பணியில்ää உலகெங்கும் பல நாடுகளில் இன்று வாழும் ஈழத் தமிழரின் ஈடுபாடு மிக்க ஒத்துழைப்பும் மேலும் இந்தியாவிற்கு பலத்தை வழங்கும் என்பதும் உண்மையே!
எனவே இவையெல்லாவற்றையும் தங்கள் மேலான கவனத்திற் கொண்டுää ஈழத் தமிழர் போராட்டத்தை மத்திய அரசுக்கு புரிய வைக்கää அக்கறையுடன் முயற்சி மேற்கொள்ள வேண்டுமெனப் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
இலங்கைத் தீவில் தமிழர் தாயகம்ää தமிழர் சுயநிர்னய உரிமை அங்கீகரிக்கப்பட்டுää தற்போது அங்கு ஆக்கிரமிப்பில் ஈடுபடடுடிருக்கும் சிறீலங்கா இராணுவம் வெழியேற்றப்பட்டுää சிறீலங்கா அரசும்ää தமிழ் மக்களின்; பிரதிநிதியான விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்யவேண்டும் எனää நீங்கள் இந்திய மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு சார்பிலும்ää தமிழ்நாட்டு மக்கள் சார்பிலும் கோரிக்கை விடுக்குமாறு தங்களை அனைத்துலகத் தமிழர் ஒன்றியத்தின் சார்பாக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எமது நன்றி கலந்த வணக்கங்கள் என்றும் உங்களுக்கு உரியதாக.
இப்படிக்கு
பொன்ராசா அன்ரன்
அனைத்துலக ஒருங்கிணைப்பாளர்