தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Struggle for Tamil Eelam > International Frame of  Struggle for Tamil Eelam  > India & the Struggle for Tamil Eelam > Removal of POTO, should be followed by removal of ban on  LTTE says LTTE in interview with Revathi

India & the Struggle for Tamil Eelam

"புலித்தடையும் நீக்கப்பட வேண்டும்"
Revathi, South Indian Actress/Director interviews LTTE's Political Wing Leader
Courtesy Virakesari, 27 September 2004
[to read the Tamil text you may need to download & install a Tamil Unicode font from here -
for detailed instructions please also see Tamil Fonts & Software]


பொடா சட்டத்தை இந்தியா நீக்கியதுபோல் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையையும் இந்தியா நீக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். இந்தியாவில் விடுதலைப்புலிகள் தடைசெய்யப் பட்ட அமைப்பாக இருப்பதால் வெளிப்படையான முயற்சிகளை எடுப்பதில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.

புலிகள் மீதான தடை, நடந்த ஒரு தவறான சம்பவத்தை கொண்டு தவறான சில கொள்கை வகுப் பாளர்களால் ஏற்படுத்தப்பட்டதாகும். தமிழகத்துடன் நல்லுறவையே விடுதலைப்புலிகள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள் என தமிழீழ விடு தலைப் புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல் வன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் பெண் போராளிகள் பற்றிய விவரண குறும் திரைப்படம் ஒன்றை தயாரிப்பதற்கு இந்தியாவில் இருந்து இலங்கை வந்திருந்த பெண் படைப்பாளி ரேவதிக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு சென்ற ரேவதி, அங்குள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் நடுவப்பணியகம் பற்றி கூறுகையில் ஒரு இராணுவ அமைப்பின் அரசியல் தலைமையகம் என்று சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாத அளவுக்கு அந்த நடுவப்பணியகம் இருக்கிறது. வாயி லில் இரு காவலர்கள், அலுவலகத்தின் உள்ளே புலிகளின் அரசியல் துறைத் தலைவரின் மெய்க்காப்பாளர்கள் இருவர். உள்ளே வராந்தா வில் அமர்ந்திருந்தார் சு.ப.தமிழ்ச்செல்வன். கருணா விவகாரம், அமைதிப் பேச்சுவார்த்தை முடக்கம், மீண்டும் போர்வரக்கூடிய சூழல் போன்றவற்றைப்பற்றி அவர் புன்னகையுடன் பதிலளித்தார்'' என்றார்.

ரேவதியால் கேட்கட்பட்ட கேள்விகளும், தமிழ்ச்செல்வன் அளித்த பதில்களும் பின்வருமாறு.

கேள்வி: போர் நிறுத்த உடன்படிக்கை அறிவித்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கும் நிலையில், இப்போது அதில் தேக்கநிலை ஏற்பட்டு மீண்டும் போர் ஏற்படக்கூடிய சூழல் வந்து விட்டதா?

பதில்: போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பிறகு அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு சாத் தியம் இருப்பது மாதிரியான ஒரு தோற்றம் உருவானது. ஆனால் இரண்டரை வருடங்களுக் குப் பிறகு, இப்போது பார்த்தால் அரசியல் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இது மக்கள் மத்தியில் ஒரு ஏமாற்றத் தையே தந்திருக்கிறது. தமிழ் மக்கள் தங்கள் நிலங்களில் ராணுவ ஆக்கிரமிப்பால் மிகுந்த துயரத்தை அடைந்தார்கள். போர் நிறுத்தத்திற்குப் பிறகும் அந்த ராணுவ ஆக்கிரமிப்புகள் தொடர் கின்றன.

நீங்கள் ஈழப் பகுதியில் பார்த்திருப் பீர்கள்... விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் சுதந்திரமாகவும், பயமில்லாமலும் தங்கள் இயல்பு வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறார்கள். ஆனால் ராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் கட்டுப்பாடுகளும், தடைகளும் பழையபடியே இருக்கின்றன. மக்கள் விவசாயமோ, கடல் தொழிலோ பயமின்றிச் செய்ய முடியாத சூழலில் இருக்கிறார்கள். போர் நிறுத்த உடன்படிக்கையின் ஷரத்துக்களின்படி இதிலெல்லாம் மாற்றம் வந்திருக்க வேண்டும்.

குறிப்பிட்ட நாட்களுக்குள் ராணுவம் தங்கள் நிலைகளிலிருந்து வெளியேறி இருக்க வேண்டும். அப்படி ஏதும் நடக்கவில்லை. பழைய நிலைதான் தொடர்கிறது. ஒரு சில இடங்களில் மட்டும்தான் இயல்பு நிலை வந்திருக் கிறதே தவிர, பெரும்பாலான இடங்களில், முக்கியமாக கிராமங்களில் எந்த அபிவிருத்தியும் இல்லை. வீடு, வாசல், நிலங்களை இழந்த மக்கள் அதைத் திரும்பப் பெற்றால்தானே அது முன் னேற்றம்? அப்படி ஏதும் நடக்கவில்லை.

கேள்வி: தற்போதைய தேக்க நிலைக்கோ அல்லது பின்னடைவுக்கோ கருணா விவகாரம் ஒரு காரணமாக இருக்கிறதா? இலங்கை அரசுத் தரப்பிலும் இப்படி விமர்சனம் நிலவுகிறதே?

பதில்: அது உண்மையல்ல. தமிழீழ விடுத லைப்புலிகளின் கட்டுப்பாடுகள், ஒழுக்க விதிகள் இதையெல்லாம் மீறியதால் நடவடிக்கை எடுக்கப் பட்டு வெளியேற்றப்பட்டவர்தான் கருணா. அதற்கும் இந்த தேக்க நிலைக்கும் எந்த சம்பந் தமும் கிடையாது. மட்டக்களப்பு மற்றும் கிழக்கு பகுதிகள் அனைத்தும் தேசியத் தலைவருடைய ஆளுமையின் கட்டுப்பாட்டின் கீழ் முழுமை யாக வந்துவிட்டன.

இலங்கை ராணுவம் கருணா வைத் தங்கள் பாதுகாப்பில் வைத்து சில குழுப் பங்களை ஏற்படுத்த முயன்றதே தவிர, எங்கள் அரசியல் முன்னெடுப்புகளில் அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. நாற்பது நாட்கள் கருணா கிழக் கில் இருந்து சில சிறு குழப்பங்களை ஏற்படுத்த முயன்றார். அவ்வளவுதான். அதை முற்றிலும் சரிப்படுத்தியாகிவிட்டது. இலங்கை ராணுவம் தான் கருணாவைப் பயன்படுத்திக் கொண்டது. கருணா விவகாரம் முடிந்துபோன ஒன்று.

கேள்வி: கருணா விவகாரம் இல்லையென் றால், பேச்சுவார்த்தை முடக்கத்திற்கான உண்மையான காரணம் என்ன?

பதில்: பேச்சுவார்த்தை முடக்கமடைந்திருப்பது உண்மை. சந்திரிகா அம்மையார் சில அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தி, ஆட்சிக் கவிழ்ப்புகள் செய்து தெற்கில் சில குளறுபடிகளை செய்ததுதான் இந்த முடக்கத்திற்குக் காரணமே தவிர வேறொன் றுமில்லை.

கேள்வி: வடக்கு, கிழக்கு பகுதிகளில் பூகோள ரீதியாகவே சில ஏற்றத்தாழ்வுகள் உண்டு. அது மேலும் வளர்ச்சியடைந்ததாக சில இலங்கை அரசியல், சமூக விமர்சகர்கள் சொல்வது பற்றி?

பதில்: உண்டு. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சமூகத்தினர் கல்வியிலும் நிர்வாகத்திலும் வளர்ச்சியடைந்து இருந்தார்கள். பிரிட்டிஷ்காரர் களின் காலனி இருப்பு யாழ்ப்பாணத்தில் நிறை யவே இருந்ததால் கல்வி, சுகாதாரம், நிர்வாகம் போன்றவை வேகமாக வளர்ந்தது உண்மை.

அதனால் மக்கள் அங்கேயே குவியத் தொடங் கினார்கள். பாடசாலைகள் மிகுந்ததால் வளர்ச்சி சாதகமாகவே இருந்தது. ஆனால் வன்னி, மட்டக் களப்பு பகுதிகளைப் பொறுத்தவரை காட்டுப் பிரதேசமாய் இருந்ததால் அங்கே கவனம்; நகர்வுகள் குறைவாகவே இருந்தன. அதனாலே யாழ்ப்பாணத்தவர்களின் மேலாதிக் கம் எல்லா பகுதிகளிலும் இருப்பதான கருத்தும் பரவலாக ஏற்படலாயிற்று. எங்கள் விடுதலை அமைப்பு தோன்றிய பிறகு இந்தப் பாகுபாடுகளை நீக்கி சகோதரத்துவத்தை கொõண்டுவர, பல பரந்துபட்ட திட்டங்களைத்தீட்டி, அவற்றை செயற்படுத்தி வந்தோம். அதில் நல்ல முன்னேற்றத்தையும் கண்டிருக்கிறோம். இன்றைக்கும் சிறுசிறு வேறு பாடுகள் உண்டு. அதை முற்றிலும் சரி செய்யவே நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: பேச்சுவார்த்தை முடக்கத்திற்கு இன்னொரு காரணமாக , புதிதாக கொழும் பிலும் பிற இடங்களிலும் நடத்தப்பட்டு வரும் படுகொலைகளைச் சொல்லலாமா?

பதில்: ஈ.பி.டி.பி.,ராணுவப் புலனாய்வு, கருணா குழு போன்றவை சேர்ந்து கொண்டு வேண்டு மென்றே படுகொலைகளைச் செய்து குழப்பம் ஏற்படச் செய்கிறார்கள். படுகொலை முயற்சி யிலிருந்து தப்பிய பலர் அக்குழுவையே சேர்ந்த வர்கள் எங்களிடம் வந்து சேர்ந்திருக் கிறார்கள். இவ்வளவு காலமாக இல்லாத படு கொலைகள் திடீரென்று நடப்பதற்குக்காரணம் இக்குழுக்கள் தான். அவர்களிடையே உள்ள முரண்பாடுகளும் அதற்குக் காரணமாக இருக்க லாம். எங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் எங்கே யும் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.

கேள்வி: மீண்டும் அமைதிப் பேச்சுவார்த் தைக்கான சாத்தியம் எந்த அளவுக்கு இருக்கிறது?

பதில்: வரலாற்று ரீதியாகப் பார்த்தால் தமிழர்களுக்கு சொந்தமான அவர்கள் ஆட்சி செய்த தாயகத்தை அந்நியர்கள் ஆக்கிரமித்து பிறகு ஒரே நாடாக மாற்றினார்கள். பிறகு எங்களுடைய உரிமை பறிக்கப்பட்டு, ஒடுக்கப் பட்டு அடிமைகள் ஆக்கப்பட்டு இருக்கிறோம். இது எங்கள் வாழ்க்கைப் பிரச்சினை. அதிலிருந்து விடுபட போராடிக் கொண்டிருக்கிறோம். அந்த லட்சியத்திலிருந்து ஒரு போதும் நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. அமைதிக்கான சூழ்நிலை உருவான சமயத்தில் அதற்கு உடன் பட்டு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டோம்.

உடன்படிக்கை ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாமல், விட்டுக்கொடுக்கவும் முன்வரா மல் அவர்கள் இருந்தால் அதற்கான நெருடிக் கடியை சந்தித்துத்தான் தீர வேண்டும். கொழும் பிலும், தெற்கிலும் நடக்கக் கூடியவைகளைப் பார்க்கும்போது தமிழ் மக்களுக்கு ஒரு“ தீர்வை நிரந்தர அமைதியைதர அவர்கள் ஒத்துழைப் பார்களா என்பது ஒரு கேள்விக்குறியாகவே ஆகிவிட்டது. இன்று தெற்கிலேயே வாழ்க்கை நிலை மிகமோசமாகிவிட்டது. அவர்கள் என்றா வது ஒருநாள் எங்கள் தமிழ் மக்களின் நியாயத்தை ஏற்கத்தான் வேண்டும். எங்களை உணர்ச்சி வசப்படுத்தி, ஆத்திரப்படுத்தி, தூண்டிவிடும் காரியங்களை அவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்களும் பொறுமையாகத்தான் இருக்கிறோம். ஆனால் எங்களின் பொறுமைக் கும் ஒரு எல்லையுண்டு.

கேள்வி: இந்தியாவின் நிலை, இந்தப் பிரச்சினையில் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: இந்தியாவை ஒரு நேச சக்தியாகத்தான் பார்க்கிறோம். கடந்த காலங்களில் சில கொள்கை வகுப்பாளர்களால் ஏற்பட்ட சில நடவடிக்கைகள் காரணமாக, சில கசப்பான நிகழ்வுகள் நடந்ததே ஒழிய இந்தியாவை, இந்திய மக்களை, தமிழ் நாட்டு மக்களை ஒரு நேச சக்தியாகவே நாங்கள் பார்க்கிறோம். இடையில் நடந்த சம்பவத்தை வைத்து தவறான கணிப்புகள் செய்ய வேண்டாம் என்பதுதான் எங்கள் எண்ணம். இங்கே பாதிக் கப்பட்ட தமிழ் மக்களின் அபிலாஷைகளையும், பிரச்சினைகளையும் புரிந்து கொண்டு தங்கள் நிலைப்பாடுகளை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறோம். ஏற்கனவே எங்களுக்கு நேசக்கரம் நீட்டியவர்கள் தானே தமிழகமக்கள்?

கேள்வி: அதற்கான முயற்சிகளை நீங்கள் எடுத்திருக்கிறீர்களா?

பதில்: இந்தியாவில் நாங்கள் ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால் வெளிப் படையான முயற்சிகளை எடுப்பதில் முடக்கம் ஏற்பட்டிருக்கிறது. பொடா சட்டத்தினால் பல குரல்கள் அடக்கப்பட்டன. இன்றுதான் அங்கே பொடா சட்டம் நீக்கம் மூலமாக மாறியி ருக்கிறது. கலைஞர் போன்றவர்களின் பெரு முயற்சியி னால் ஆளும் கட்சிக்கு பரிந்துரைக் கப்பட்டு அந்தச் சட் டம் நீக்கப்பட்டிருக்கிறது. தவறான சில கொள்கை வகுப்பாளர்களால் நடந்த ஒரு தவறான சம்ப வத்தை கொண்டு ஏற்படுத் தப்பட்ட அந்தத் தடை நீக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறோம். தமிழகத்துடன் நல்லுறவை நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம்.


 

Mail Usup- truth is a pathless land -Home