"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Sri Lanka's Undeclared War on Eelam Tamils
...in the Shadow of a Ceasefire
புலிகளுக்கு எதிரான தகவல்களை மட்டுமே
மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிடுகிறது
பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் குற்றச்சாட்டு
[see Text of TCHR Report at Tamil Centre for Human Rights Study Mission Reports on Human Rights Violations, 2 November 2004 ]
News Report in Tamil - Courtesy Virakesari, 7 November 2004 - வடக்கு கிழக்கில் போர்க் காலங்களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களையும் பரிசீலிக்க மனித உரிமை ஆணைக்குழு முன்வராமை வருத்தத்துக்குரியது. ஆனால் இவ் ஆணைக்குழு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தகவல்களை மட்டுமே தேடிப் பிரசுரிக்கின்றது என்று பிரான்ஸ் நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தமிழர் மனித உரிமைகள் மையம் இலங்கை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. இலங்கைத் தீவில்இ தமிழர்களின் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கில்இ கடந்த இருபது வருடங்களாக நடைபெற்ற அரசியல் படுகொலைகள்இ சித்திரவதைகள்இ பாலியல் வன்முறைகள்இ காணாமல் போனோர்இ போன்றவற்றை கிழக்கில் மகாஓயாவிலிருந்து வடக்கில் காங்கேசன்துறை வரை சென்று நேரில் கண்டறிந்ததுடன்இ இவற்றில் சம்பந்தப்பட்ட சாட்சிகளுடன் உரையாடி உண்மைகளை அறிக்கையாக தொகுத்து சர்வதேச சமூதாயத்திற்கு பிரான்ஸில் தலைமைச் செயலகத்தை கொண்டு இயங்கும் தமிழர் மனித உரிமைகள் மையம் வெளியிட்டுள்ளது. தமிழர் மனித உரிமைகள் மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இவ்விஜயத்தில்இ இதன் பிரதிநிதிகளான பிரித்தானியாவைச் சேர்ந்த டியெற்றி மக்கோணால்இ பிரான்ஸை சேர்ந்த் விசுவலிங்கம்இ கிருபாகரன்இ நெதர்லாந்தை சேர்ந்த சின்னையா இந்திரன்இ சுவிஸ்லாந்தைச் சேர்ந்த தம்பிராசா கெங்காதரன் ஆகியோருடன் பல உள்நாட்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இவ்விஜயத்தின்போது மட்டக்களப்புஇ திருகோணமலைஇ வவுனியாஇ வன்னி.இ யாழ்ப்பாணம்இ மலைநாடு போன்ற பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள அரச சார்பற்ற பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்இ புத்திஜீவிகள்இ வழக்கறிஞர்கள்இ சமயத் தலைவர்கள்இ பத்திரிகையாளர்கள் போன்றோரையும் சந்தித்தனர்.
கண்கண்ட சாட்சிகளின் தகவலுடன் அறிக்கை மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் சிங்கள குடியேற்றங்கள் எப்படிப் படிப்படியாக அதிகரித்துள்ளது என்பது அட்டவணையுடன் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் தற்பொழுது அம்பாறை, திருகோணமலை பட்டினங்களும், வேறு சில கிராமங்களும் சிங்கள மயமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. திருகோணமலை விஜயம் பற்றி இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இம்மாவட்டத்தில் நடைபெற்ற படுகொலைகளான. கந்தளாய் படுகொலை, சம்பூர் மூதூர் படுகொலை, சாம்பல்தீவு படுகொலை, தம்பலகாமப் படுகொலைகள், முள்ளிப் பொத்தானை படுகொலை, பெறுவில் மணற்சேனை அகதிமுகாம் படுகொலை, பன்குளப் படுகொலை, இருதயபுர படுகொலை, அத்துடன் தற்போதைய யாழ்ப்பாண மாவட்ட தளபதியான கேணல் தென்னக்கோன் திருகோணமலையில் சேவை செய்யும் காலத்தில் காணாமல் போன ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் பல சைவகோயில்கள் இயங்க முடியாத நிலையில் உள்ளதாகவும், சரித்திர புகழ் வாய்ந்த பாடல் பெற்ற திருத்தலமான திருக்கோணஸ்வர ஆலயத்தை மறைக்கும் நோக்குடன் ஓர் புத்த கோயில் பிரேரிக் கோட்டையில் நிறுவப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்தபடியாக வன்னி விஜயம் பற்றி கூறப்பட்டுள்ள இந்த அறிக்கையில் வன்னி முல்லைத்தீவு மாவட்டங்களில் தற்போதைய கல்வி நிலைபற்றியும், வடக்குகிழக்கில் ஏறக்குறைய 5,817 தமிழ் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இக்குழு வன்னியில் தமிழீழ கல்வி பொறுப்பாளர் இளம்குமாரனை சந்தித்து உரையாடியுள்ளது.
த.ம.உ. மையத்தினர், வன்னியில் தமிழீழ காவற்படை பொறுப்பாளர் நடேசனை சந்தித்து உரையாடியுள்ளனர். தமிழீழ காவற்படையின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் தமிழீழ சிறைச்சாலையை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
நடேசன் கூறியதாவது,. சிறிலங்கா, ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்தவராக மிக நீண்டகாலமாக இருந்து வருகிறது. அப்படியானால் 1948ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகளான சிங்கள குடியேற்றங்கள், கல்வி தரப்படுத்தல், தனிச்சிங்கள சட்டம், பயங்கரவாதச் சட்டம், பல தரப்பட்ட இனக்கலவரங்கள் போன்றவை சர்வதேச சட்டங்களுக்கு மிகவும் முரண்பட்டவை. அப்படியானால் இந்த ஐ.நா. சபையும், சர்வதேச சமுதாயமும் முன்பு சிறிலங்கா மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? இவற்றுக்கு நடவடிக்கை எடுத்து தடுக்க தவறியவர்கள், தற்போது சர்வதேச சட்டங்கள் பற்றி பேசுகிறார்கள், என்று கூறியதாக கூறப்பட்டுள்ளது.
மனித புதை குழிகள்
அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்ட "மனித புதைகுழிகள்'' பற்றியும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இக்குழு வன்னியில் உள்ள மற்றைய நலன்புரி அமைப்புக்களான காந்தரூபன் அறிவுச்சோலை, லெப். கேணல் நவம் அறிவுக்கூடம், செஞ்சோலை சிறுமிகள் இல்லம்,, வெற்றிமனை, மலர்சோலை, நிறைமதி இல்லம், செந்தமிழர் இல்லம், குருகுலம் சிறுவர் இல்லம் போன்றவை பற்றியும் கூறப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள இன்னுமொரு முக்கியவிடயம் என்னவெனில் முன்பு இலங்கைதீவின் தென்பகுதியிலிருந்து மத்திய கிழக்குக்கு வேலை தேடிச்சென்ற நெறிப்படுத்தப்பட்ட தொழிலாளர்களான மேசன், தச்சுதொழிலாளர், மின்சாரம் போன்றவற்றில் தொழில் செய்வோர், தற்போது வன்னிக்கு சென்று உழைக்கின்றனர் என்றும், இவர்கள் மற்றைய நாடுகளுக்கு செல்வது போலவே தமிழீழ குடிவரவு சுங்க பிரிவுகளின் சம்பிரதாயங்களை முடித்த பின்னரே வேலை செய்கிறார்கள் என த.ம.உ. மையத்தினரின் அறிக்கை கூறுகிறது. தோட்ட தொழிலாளரும் பாதிப்பு மலைநாட்டுக்கு விஜயம் செய்திருந்த இக்குழுவினர் கடந்த இருபது வருடகால யுத்தம், தோட்டத் தொழிலாளர் வாழ்க்கையிலும் மிகவும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், தோட்டத் தொழிலாளர் சிலர் வன்னியில் குடியேறியுள்ளதாகவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் ஈ.பி.டி.பி. குழுவினர் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி.யினருடைய இணையதளத்தில் அகõலமரணமடைந்த தமது உறுப்பினர்களை கதாநாயகர்கள் என்ற வரிசையில் பெயர்பட்டியலிட்டு வந்துள்ளனர் என்றும், ஆனால் 1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் திகதி கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் தினமுரசு ஆசிரியருமான நடராசா அற்புதராசா (ராமேஷ்) பெயர் ஈ.பி.டி.பி.யினருடைய பட்டியலில் காணப்படவில்லை என்றும், ஆகையால் முன்பும் தற்போதும் நிலவிவரும் ஈ.பி.டி.பி.யின் உட்பூசலினால் ஏற்பட்ட கொலைகள் என நம்பப்படுபவை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. |