P.L. Samy - பி.எல். சாமி Nominated by C.R.Selvakumar,Canada "P.L. Samy was one of the most substantial contributors and among his contributions his three books in Tamil ('sanga ilakkiyaththil paRavai ina viaLakkam, sanga ilakkiyaththil vilangkina viaLakkam, sanga ilakkiyaththil nilaththiNai viLakkam', published by South India Saiva Siddhanta Publications, TTK Salai, Chennai) were highly regarded and were seminal publications. பி. எல் சாமி தமிழுக்கு செய்த பணி புதுமையானது காலத்தேவைக்கு பெரிதும் உதவுவது. சாமி அவர்களின் அறிவியல் தமிழுக்கு பெரிதும் உதவியுள்ளார். தமிழ் இலக்கணம் மட்டும் வளர்ந்தால் போதுமா அனைத்து அறிவியல் நிகழ்ச்சிளும் தெரியவேண்டும் என்று எண்ணினார். தமிழ் பல்வேறு துறைகளில் வளரவேண்டியிருக்கிறது. அவற்றில் அறிவியல் தமிழின் வளர்ச்சி நத்தை வேகத்தில் நடந்து கொண்டு இருக்கிறதே என்று எண்ணிய அவர் தமிழுக்கு தம்மாலான தொண்டினை செய்து வந்தார்,உலகின் அறிவியல் வளர்ச்சிக்கு தமிழால் ஈடுகொடுக்க முடியவில்லை அனைத்து அறிஞர்களின் முயற்சியும் தேவைப்படுகிறது. திருவாளர் பி.எல்.சாமி அவர்கள் தம்மாலான தொண்டினை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்.
அனைத்து செடி, கொடிகள், பறவைகள், விலங்கினங்ககள், மரங்கள், கடல்வாழ் உயிரிணங்கள், அவை அறிவியல் இன்னென்ன பெயர்கள் எனவும் இந்த வகை இனத்தைச் சார்ந்தவை எனவும் ஆராய்ந்து அறிந்து தொகுத்து தமிழ் மொழியில் வெளியிட்டார்.
சங்க இலக்கியம், பாசுரங்கள், காப்பியங்கள் போன்ற நூல்களும் எழுதியுள்ளார். மேலும் இன்னின்ன உயிரிணங்கள் எந்தெந்த இடங்களில் வாழ்கின்றன எனவும், இவைகளில் எவையெல்லாம் அழிந்து போய்விட்டன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சாமி அவர்கள் அதுமட்டுமல்லாது வேறு சில கிளைகளிலும் தன் பா‘ர்வையைச் செலுத்தி பல அரிய நூல்களை எழுதியுள்ளார். தமிழகத்தில் நிலவுகின்ற தாய்த்தெய்வ வழிபாடு போன்ற சமுதாயப் பழக்க வழக்கங்களையும் ஆராய்ந்து எழுதியுள்ளார்.
பல்வேறு மணி வகைகள் (முத்து, வைரம், பவளம்) பற்றியும் ஆராய்ந்து அவை காணப்படும் இடங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
அரசுத்துறையில் செயலாளர் பதவிவரை உயர்வு பெற்று பணியாற்றியுள்ளார். தமது அலுவல் வேலைகளுக்கிடையில் தாம் செய்யத் தயங்காத பணி எது என்று தான் நினைக்க வேண்டும். சாமி அவர்களின் அயராத உழைப்பு போற்றுதலுக்குறியதே. Courtesy: Intamm |