தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham > இப்சனின் (Ibsen's) நோர்வே
 

Selected Writings
M.Thanapalasingham, Australia
ம.தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

இப்சனின் (Ibsen's) நோர்வே & நவீன நோர்வே
2 March 2005

இப்சனின் (Ibsen's) நோர்வே

"இப்சனின் அரங்கம் ஆத்மாவின் அரங்கம் என்பர்...1905இல் நோர்வே தன்னிச்சையாக சுவீடனில் இருந்து தனது தொடர்பை துண்டித்தது. . பிரித்தானியரின் தலையீட்டாலும் சுவிடன் மன்னனின் நிலைப்பாட்டாலும் யுத்தமின்றி நோர்வே பிரிந்தது. இவ்வாண்டு 100 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடவதற்கான ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. சுவீடனும் இதில் கலந்து கொள்ள உள்ளது.பலாத்காரமான ஒரு இணைப்பால் அல்லல் உறும் ஈழத்தமிழ் மக்களும் பல வேதனைகளைப்பட்டு களைத்துப் போய்விட்டார்கள். இப்சனின் நோறாவைப் போல் கதவை அடித்து அவர்கள் வெளியேறும்போது நோர்வே அதை ஏற்று உலகின் மனச்சாட்சியை உலுப்பும் என தமிழ் மக்கள் எதிர்பார்கின்றனர்..."


இன்று ஈழத் தமிழ் மக்களுக்கு நோர்வே நாடும் அந்த நாட்டு மக்களும் நம்பிக்கையின் உறைவிடமாக விளங்குகின்றனர்.

எனவே இவர்களைப்பற்றி அறிந்துகொள்ள முயல்வது இயல்பானதே. ஒரு நாட்டை, அந்த மக்களை விளங்கிக்கொள்ளவேண்டின் அவர்களது புவியலை, அது அவர்கள்மேல் கொண்டுள்ள செல்வாக்கை அது வளிவந்த அவர்களது கலை இலக்கியங்களை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

இந்தவகையில் நோர்வே நாட்டின் புகழ்மிக்க ஹென்றிக் இப்சன் என்னும் நவீன அரங்கின் (Modern Theatre) பிதாமகரையும் அவர் மூலம் நோர்வே நாட்டின் ஆத்மாவையும் அறிந்து கொள்ளும் ஒரு முயற்சியே இச்சிறு கட்டுரையாகும்.

ஹென்றிக் இப்சன் 20 மார்ச் மாதம் 1828 ஆம் ஆண்டு நோர்வேயின் கிழக்கில் ஒரு சிறிய வியாபாரப் பட்டனத்தில் பிறந்தார். 1906 வரை வாழ்ந்து பல நாடகங்களையும்இ கவிதைகளையும் எழுதினார். மேற்குலகின் நவீன வசன நடை அரங்கின் தந்தை எனப் போற்றப்படும் இவர் தன்னை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டின் தனது தேசத்தை விளங்கிக் கொள்ளவேண்டும் எனக் கூறுகின்றார்.

" Anyone who wishes to understand me fully must know Norway. The spectacular but severe landscape which people have around them in the north, and the lonely shut-off life – the houses often lie miles from each other- force them not to bother about other people, but only their own concerns, so that they become reflective and serious, they brood and doubt and often despair. In Norway every second man is a philosopher. And those dark winters , with the thick mists outside – ah , they long for the sun ! (Ibsen in conversation, quoted by Felix Philippi )

"என்னை முழுமையாக அறிந்து கொள்ள விரும்பும் எவரும் நோர்வேயை அறிந்து கொள்ள வேண்டும். வியப்பைத் தரும் ஆனால் கடுமையான நில அமைப்பை தம்மைச் சுற்றி வரித்துக் கொண்டுள்ள நோர்வே மக்களது. தனிமையானதும் மற்றவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டதுமான வாழ்வு. அவர்களது வீடுகளுகளுக்கிடையே உள்ள துஃரம் மைல் கணக்குகளாகும். இது அவர்களை மற்றவர்கள்மேல் கரிசனை கொள்ளாது தம்மைப்பற்றியே கரிசனை கொள்ளவும் அதனால் சிந்திப்பவர்களாகவும் இவாழ்வை கடுமையாக நோக்குபவர்களாகவும் எந்த நேரமும் யோசிப்பவர்ககளாகவும் இசந்தேகம் கொண்டவர்களாகவும்இ நம்பிக்கை இழந்தவர்களாவும் காணப்படுவர். நோர்வேயில் ஒவஈகவாரு அடுத்த மனிதனும் ஒரு தத்துவஞானி எனலாம். அந்த இருண்ட குளிர்காலம் இ வெளஹயே கிடக்கும் பட்டையான பனிப்படலம் அவை கதிரவனின் வரவுக்காக ஏங்கிக் கிடக்கும்." எனக் கூறுகின்றார்.

இந்தப் பண்பை இப்சனின் அரங்கிலும் காண்கின்றோம்.

நவீன அரங்கிற்கு இப்சனின் பங்களிப்பினை விளக்கும், MICHAEL MEYER (Winner of the whitbread biography award ) முக்கியமாக மூன்று காரணிகளைக் குறிப்பிடுவர்:

1.இதுவரை துன்பியல் நாடகங்களுக்கிற்கு கருவாக மன்னர்களும். மகாராணிகளும்இ இளவரசர்களும்இ பிரபுக்களும் மாத்திரமே இடம் பெற்றனர். இதனை மாற்றி சாதாரண மக்கள் வாழ்விலும் அரங்கேறக்கூடிய துன்பியல் நாடகத்தை அறிமுகம் செய்து வெற்றி கண்டவர் இப்சனாகும். இதனால் சாதாரண மக்கள் பேசும் மொழியையும் அரங்கேற்றியவர்

2. பிறரின் உதவியின்றி பாத்திரங்களின் மூலமே அவர்களின் ஆசாபாசங்களைஇ ஆத்மானுபவங்களை வெளஹக்கொணர்ந்தவர் இப்சன். இந்த வகையில் இவர் சேக்ஸ்பியரில் இருந்து வேறுபட்டு காணப்படுகின்றார்.

3.சமூகத்தில் இருந்த விழுமியங்களுக்கு அரங்கத்தில் சவால் விட்டவர் இப்சனே. (There were more social abuses in Shakespeare's England than in Ibsen's Norway, but Shakespeare never challenged one of them.)

இப்சனின் அரங்கம் ஆத்மாவின் அரங்கம் என்பர். சமுதாயம் கெதியில் மாறலாம். மனசு மாறுவதே இல்லை. இதுவே இவரின் அரங்கின் மாறாத்தன்மை என்பர்.
இப்சனின் நாடகங்களில் "டொல்ஸ்ஹவுஸ் " பொம்மைகளுக்கான வீடு எமது மண்ணில் கூட அரங்கேறிய நாடகமாகும். இரண்டு வித ஒழுக்க விதிகள்இ இரண்டுவிதமான மனச்சாட்சி. ஆணுக்கு ஒன்றுஇ பெண்ணுக்க இன்னொன்று.

ஆயின் நடைமுறை வாழ்வில் ஆண்மையின் சட்டத்தால் பெண் மதிப்பிடப்படுகின்றாள். கணவனால் பொம்மையாக நடத்தப்பட்டு பாவனைப் பண்டமாக்கப்பட்ட நோறா முடிவில் மேடையின் முன்கதவை அடித்து வெளியேறுவதுடன் திரை விழுகின்றது. கலியாணம் என்பது இறைவனின் தாபனம் அல்ல. விருப்பமற்றோர் இடையே விவாகரத்து ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதை நோறா மூலம் வெளிப்படுத்துகின்றார்.

கடைசிக் காட்சியில் நோறாவின் கணவன் ஹெல்மர் நோறாவை தனக்கு ஏற்றவாறு மாறும்படி கேட்கிறான். அதற்கு நோறா உனக்கும் எனக்கும் இடையேயான கூட்டு இருப்பு மணவாழ்வாகலாம். நான் போகின்றேன் எனக் கதவை அடித்து வெளஹயேறும் சத்தம் அரங்கை அதிரவைக்கின்றது என இப்சன் குறிப்பிடவர்.
இது தனிமனிதத்தின் வாழ்வு.

1814 வரை 450 ஆண்டுகளாக டென்மார்கின் ஆட்சியில் இருந்த நோர்வே 1814 இல் புதிய அரசியல் யாப்பு மூலம் சுயாதீனம் பெற முயன்றபோதும் நெப்போலியனின் யுத்தத்தில் சுவீடன் செய்த பங்களிப்பிற்காக இங்கிலாந்தும்,  றஸ்சியாவும் நோர்வேயை சுவீடனுக்கு தாரைவார்த்தனர். நோர்வே மீதான சுவீடனின் ஆதிக்கம் 1905 வரை தொடர்ந்தது.

1905இல் நோர்வே தன்னிச்சையாக சுவீடனில் இருந்து தனது தொடர்பை துண்டித்தது.  பிரித்தானியரின் தலையீட்டாலும் சுவிடன் மன்னனின் நிலைப்பாட்டாலும் யுத்தமின்றி நோர்வே பிரிந்தது.

இவ்வாண்டு 100 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடவதற்கான ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. சுவீடனும் இதில் கலந்து கொள்ள உள்ளது.

பலாத்காரமான ஒரு இணைப்பால் அல்லல் உறும் ஈழத்தமிழ் மக்களும் பல வேதனைகளைப்பட்டு களைத்துப் போய்விட்டார்கள். இப்சனின் நொறாவைப் போல் கதவை அடித்து அவர்கள் வெளியேறும்போது, நோர்வே அதை ஏற்று உலகின் மனச்சாட்சியை உலுப்பும் என தமிழ் மக்கள் எதிர்பார்கின்றனர்.


நவீன நோர்வே

இப்சனின் நோர்வே தன்னம்பிக்கை அற்றதாகவும் தம்மைப்பற்றியே சிந்திந்திருந்ததையும் பார்த்தோம். இப்சன் தனது 78 ஆவது வயதில் 1906 ஆம் ஆண்டு காலமானார். அதற்கு ஒரு ஆண்டுக்கு முன்புதான் 1905 இல் நோர்வே கத்தியின்றி, இரத்தமின்றி சமாதானமாக தன்னை ஆண்ட சுவீடனில் இருந்து பிரிந்து தன்னைத் தானே ஆளத்தொடங்கியது. 

வைக்கிங்ஸ் காலம் (கி.பி 800 முதல் 1050)

வரலாற்றுக்கு முற்பட்ட நோர்வேயை அறிந்து கொள்ள வாய்வழியாக வந்த ஐதீகங்களே பயன்படுகின்றன. அகழ்வாராட்சிக் கண்டுபிடிப்புக்களும் இவற்றிற்கு ஆதாரமாகின்றன. வைக்கிங்ஸ் வருகை வழமைபோல் கொள்ளை சூறையாடல் என்பவற்றில் தொடங்கியபோதும், அயர்லாந்தில் குடியேறியது போல் இங்கும் இவர்கள் நிரந்தர வதிவிடங்களை ஏற்படுத்தினர்.

பல சிற்றரசுகளாக சிறுமன்னர்களாலும் சண்டியர்களாலும் ஆளப்பட்டவர்கள் முட்டிமோதினர். பாரியின் பறம்புமலை வீழ்ந்ததுபோல் பல சிற்றரசுகள் அழிக்கப்பட்டு அகண்ட நோர்வே 1060 இல் உருவாக்கப்பட்டது.

மத்தியகாலம்

பஞ்சம்இபட்டினி, தொற்றுநோய்கள், கடுமையான காலநிலை என்பன நோர்வேயின் சனத்தொகையில்,  அவர்களது வருமானத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. அரசியலிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியது. இக்காலப்பகுதியில் நோடிக் நிலப்பரப்பில் டென்மார்கின் கை ஓங்கியது.

இவையாவும் நோர்வே மக்களின் தேசிய சுயமானத்தில், தன்னம்பிக்கையில் உடைவுகளை ஏற்படுத்தியது என்பர். 1450 இல் ஒப்பந்தம் முலம் நோர்வே டென்மார்குடன் இணைக்கப்பட்டது. 1536 இல் நோர்வே தனியான இராச்சியம் என்ற தகமையை இழந்தது. 1814 வரை இந்தநிலை தொடர்ந்தது, இங்கிலாந்திற்கு அயர்லாந்து போல் டென்மார்கிற்கு நோர்வே. இக்காலப்பகுதியில் நோர்வே மக்களின் தேசிய பிரக்ஞையின் வளர்ச்சியாக நோர்வீயியன் பல்கலைக்கழகத்தின் தோற்றத்தையும், (1811) தேசிய வங்கியின் பிறப்பினையும் குறிப்பிடுவர். 1807 முதல் 1814 வரை நெப்போலியனின் யுத்தங்களில் டென்மார்க்கும் நோர்வேயும் பிரான்சுடன் இணைந்ததன் விளைவாக நோர்வே தனது தனித்துவத்தை வெளஹக்காட்ட தொடங்கியது.

1814 முதல் 1905 வரை

நெப்போலின் யுத்தத்தின் விளைவுகளில் ஒன்றாக நோர்வே சுவீடனின் ஆளுகைக்குள் வந்தது.

இக்காலப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி, புகையிரதப் போக்குவரத்து சாதனங்களின் வளர்ச்சி, அரசியல் கட்சிகளின் தோற்றம் என்பன நோர்வே மக்களை சுவீடனின் ஆளுகைக்கு எதிராக குரல் எழுப்ப வைத்தது. நோர்வேயிண் வெளஹவிவகார அமைச்சர் சுவீடிஸ் ஆக இருக்கவேண்டும் என சுவீடன் வலியுறத்த நோர்வே தமது சொந்த வெளஹவிவகார அதிகாரிகள் அமர்தப்படவேண்டும் எனச் செயல்பட்டனர். சுவீடனின் இராணுவம் இதனை தடுத்து நிறுத்தினர். பதிலாக நோர்வே மக்கள் தமக்கான இராணுவசக்தியை கட்டி எழுப்புவதில் இக்காலத்தின் கடைசி ஆண்டுகளைப் பயன்படுத்தினர். முடிவில் வெளஹயுறவு அதிகாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இரு நாடுகளுக்குமிடையே இறுதி முரண்பாட்டிற்கு இட்டுச்சென்றது. சுவீடன் , நோர்வே சுவீடனை விட்டுப் பிரிந்து சசெல்வதற்கு கட்டுப்பாடுகளைப் போட்டதுடன் நோர்வே மக்களின் விருப்பினையும் அறியவேண்டும் என கேட்டது. 1905 ஆகஸ்டில் சுவீடனில் இருந்து பிரியவேண்டுமென 368,392 நோர்வீயர்களும் எதிராக 184 பேர்வழிகளும் வாக்களித்தனர். தொடர்ந்த பேச்சுவார்தைகள் சமாதானமான பிரிவினைக்கு வழிசமைத்தது.

இதன் பின்னணியல்தான் இப்சனின் நோர்வேயை நாம் கண்டுகொள்ளவேண்டும். இன்று தன்னைத் தானே ஆளும் நோர்வே தன்னம்பிக்கையும், தாராளமனப்பான்மையும் கொண்டு உலகை வலம் வரக்காண்கின்றோம். இது எப்படி முடிந்தது.

நவீன நோர்வே

இலங்கையைப்போல் 15 மடங்கிற்கும் மேற்பட்ட (386,958 சதுரமைல்) பரப்பளவைக் கொண்டுள்ள நோர்வேயின் இன்றைய மக்கள்தொகை 4. 5 மில்லியனாகும் (4,525, 000) எண்ணைவளம்,கடல்வளம், என்பன இவர்களது பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக இருந்தபோதும் மானிடத்தின் உயர்ந்த விழுமியங்களின் உன்னதங்களை தொட்டு நிற்கவேண்டும் என்ற இவர்களது தேடல்களே நவீன நோர்வேயை கொடிகட்டிப் பறக்கவைத்துள்ளது.

சிறிய மக்கள்தொகையைக் கொண்ட நாடாயினும் உயர்ந்த லட்சியங்களை அது வரித்துக்கொண்டுள்கது. வருடம்தோறும் எடுக்கப்படும் புள்ளிவிபரங்களில் மனிதநேயம் கொண்ட நாடாகவும், தனது மக்கள் யாவரினதும் தகைமைகளை இதிறமைகளை வெளஹக்கொணர்வதற்கான செயல்முறைகளைக் கொண்ட நாடாகவும் நோர்வே முனனணியில் நிற்கின்றது.

தமிழ் ஈழ மக்களும் தம்மைதாமே ஆளும்போது பிறரிடம் கையேந்தாது தன்மானம் அகவாழ்விலும் புறவாழ்விலும் அடிநாதமாக, அமைய மனுக்குலத்தின் உயர்ந்த விழுமியங்களின் உன்னதங்களை மறுபடியும் தொட்டு ,நிற்கவும் உலகிடம் இருந்து நல்லவற்றை பெறுவதுடன் உலகிற்கு நாமும் எமது வல்லபங்களை கொடுப்பதன் மு~லம் நல்லதோர் உலகம் செய்யவும் வழிவகுப்போம்.

தமிழ் ஈழம்:.

" பசியென்று வருவோர்க்கு விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்து புலியாகச் சீறும்.
நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்...."

நாடு அதை நாடு , நாடாவிட்டால் ஏது வீடு. முகவரி கொண்ட வீட்டிற்காகப் பாகப்பிரிவினையும் வேண்டுவதே இந்த மாநிலத்தே என்பதற்கு சுதந்திர நோர்வே நாட்டின் நூற்றாண்டும் எமக்கு வழிகாட்டட்டும்.
 

Mail Usup- truth is a pathless land -Home