தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil National ForumSelected Writings - M.Thanapalasingham > கௌசல்யன் வாழ்கிறான்
 

Selected Writings
M.Thanapalasingham, Australia
ம.தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா

கௌசல்யன் வாழ்கிறான்
16 January 2005

"அன்று புலேந்திரன், குமரப்பா, பின்பு கிட்டு என்னும் சகாப்தம். இன்று கௌசல்யன்... அவன் மரணம் தமிழர் தேசம், தேசியம், சுயநிர்ணயம் என்னும் தாரகமந்திரங்களின் மூச்சாகி விட்டன. இதுவரை வன்னி வந்த சர்வதேசம் இன்று கொக்கடிச்சோலைவரை வந்துவிட்டது. தமிழ் முஸ்லீம் சகோதரங்கள் விடுதலைப்புலிகளின் தியாகங்களை உள்வாங்கி நேசக்கரம் நீட்டியுள்ளனர். புலம் பெயர்ந்த அவன் உறவுகள் மேலும் உறுதிகொண்டு நிற்கின்றனர். சேக்ஸ்பியர் கூறியதுபோல்..... ”....He lives, he wakes, 'tis death is dead, not he.." கௌசல்யன் வாழ்கிறான். அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல..."



சேக்ஸ்பியர் என்னும் மாபெரும் மனிதன் மனிதத்தின் ஆழங்களையெல்லாம் ஊடுருவிய ஓரு உன்னதப் பிறவி. யலிய சீசரின் படுகொலையை பலவாறு விளக்கும் போது

".........this was the most unkindest cut of all "

எல்லாவிதமான குரூருங்களில் இது மிகவும் ஈவிரக்கம் அற்ற வெட்டு எனக் குறிப்பிடுவர். கட்டுறுதி உள்ள உடல். கண்ணிலே நல்ல குணம். புன்னகை தவழும் முக அழகு. சு.ப தமிழ்செல்வன் கூறியதுபோல் எங்கள் செல்லப்பிள்ளை. பொருவில் அன்புருவமானவன். அந்த அன்பின் வடிவத்தை காணப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.

நிராயுதபாணியாக இவீர அபிமன்னுவாக அவன் நின்றபோது ஆயுதம் தரித்த சிங்களபேரினவாதம் தமிழ் துரோகிகளின் பெயரில் கௌசல்லியனை படுகொலை செய்துள்ளனர்.

போர்க்காலத்தில் எதிரியுடன் நேராகவும், மறைமுகமாகவும் முட்டி மோதுவது வேறு. அங்கு சமர்களம் உண்டு. யுத்த தர்மம் உண்டு. இங்கோ சமாதான காலம். நிராயுதபாணியாக நிவாரணப் பணிமேற்கொண்டு அவன் பயணம் அமைந்தபோது இமுற்று முழுதான இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நிகழ்ந்த அதர்மம் இது.

அன்று புலேந்திரன், குமரப்பா, பின்பு கிட்டு என்னும் சகாப்தம். இன்று கௌசல்யன். இவர்களின் மறைவுகளுக்குப் பின்னால் பலவீனமான ஈனப்பிறவிகளின் செயல்பாடுகள் எம் கண்முன்னே விரிகின்றன.

ஆயின் இவர்கள் இழப்புக்கள் எல்லாம் எதிரிகள் நினைத்ததிற்கு மாறாக தமிழ் தேசியத்தைஇ தமிழர் தாயகக்கோட்பாட்டை மேலும் வலுப்பெறச் செய்துள்ளன என்பதே இன்றைய யதார்த்தமாகும்.
சி.சிவசேகரம் என்னும் கவிஞன் யாரை உள்வாங்கி எழுதினானோ நான் அறியேன் . ஆயின் அவர் குறிப்பிடும் கவிதை வரிகளான

."............ஆழக்கிடங்கினின்று அலைகடலின் கீழிருந்து
விலங்கின் குடல் கிழித்து வானவெளஹ கடந்து
சுட்டெரித்த சாம்பலின் ஃ பீனிக்ஸ் பறவையென
வெட்டுண்டு கீழ் வழிந்த குருதித் துளியுயிர்த்து
சஞ்சீவி மாமலையின் காற்றுறிஞ்சி நான் வருவேன்.
அறைகின்ற சிலுவைகளில் மரித்து உயிர்த்தெழுவேன்
வானளந்து நான் வருவேன் தூண்பிளந்து நான் வருவேன்
நீ நம்ப மறுக்கின்ற கதையெல்லாம் நிசமாக்க
விடுதலையும் சமத்துவமும் முழங்குமொவ்வோர் மு~ச்சினிலும்
அடிமைத்தனத்துடனே அடக்குமுறை உள்ளவரை
மறுபடியும் மறுபடியும் மறுபடியும் நான் வருவேன்......"

என்னும் கவிக்கோலங்கள் எங்கள் கௌசல்யனுக்காகவே எழுதப்பட்டதோ?

ஆம் தமிழ் தேசியத்தின் மூச்சில்,  தமிழர் தாயகக்கோட்பாட்டில் அவன் சம்பவாமி யுகே யுகே.

கடற்கோளின் அனர்த்தத்தால் அல்லல்பட்டு ஆற்றாது தவிக்கும் தென் தமிழ் ஈழ மக்களை இன மத பாகுபாடின்றி அணைத்து நின்றவன் கௌசல்யன். எழுவான் கரை முதல் படுவான் கரை வரை வலம்வந்த உருவம் கௌசல்யன். பிரதேசவாதம் என்னும் நஞ்சு கக்கப்பட்டபோது அதை விழுங்கிய திருநீலகண்டன் எங்கள் கௌசல்யன்.

அவன் மரணம் தமிழர் தேசம், தேசியம், சுயநிர்ணயம் என்னும் தாரகமந்திரங்களின் மூச்சாகி விட்டன. இதுவரை வன்னி வந்த சர்வதேசம் இன்று கொக்கடிச்சோலைவரை வந்துவிட்டது. தமிழ் முஸ்லீம் சகோதரங்கள் விடுதலைப்புலிகளின் தியாகங்களை உள்வாங்கி நேசக்கரம் நீட்டியுள்ளனர். புலம் பெயர்ந்த அவன் உறவுகள் மேலும் உறுதிகொண்டு நிற்கின்றனர்.

சேக்ஸ்பியர் கூறியதுபோல்.....

”....He lives, he wakes, 'tis death is dead, not he.."

கௌசல்யன் வாழ்கிறான். அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல.

 

Mail Usup- truth is a pathless land -Home