"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Selected Writings M.Thanapalasingham, Australia
ம.தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா
மொழி ஒரு தேசியத்தின் மூச்சு.....
அயர்லாந்து மக்களின் போராட்டத்தில் இருந்து
ஒரு பார்வையும் சில பதிவுகளும்
31 January 2005
[English translation by Phillip Pragasam]
அயர்லாந்து மக்கள் தமது சுதந்திரத்திற்காக பல நுஃற்றாண்டுகளாகப் போராடினார்கள். இந்தப் போராட்டம் பல சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்ததை நாம் அறிவோம். இந்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாக 24 ஏப்பிரல் 1916 இல் அயர்லாந்து குடியரசுப் பிரகடனம் செய்யப்பட்டது. இதனை சிலுவையில் மரணித்த யேசநாதர் உயிர்த்து எழுந்த ஈஸ்ரருடன் தொடர்பு படுத்தி ஈஸ்ரர் எழுச்சி என்பர். இதில் பங்குகொண்ட புரட்சியாளர்களுள் பற்றிக் பியேஸ் (Patrick Pearse) இயேம்ஸ் கொனொலி(James Connolly) மற்றும் பன்னிருவர் இராணுவ சட்டத்தின் கீழ் சுட்டுக்கொல்லப்பட்டனர். பற்றிக் பியேஸ் மே மாதம் 3 ஆம் திகதி 1916 ஆம் ஆண்டு அதிகாலை 3.30 மணியில் சுட்டு கொல்லப்பட்டார். குற்றவாளிக் கூண்டில் இருந்து மரணத்துக்கு முகம் கொடுத்த வேளையிலும் பியேஸ் தன்னை தண்டித்தோரை பார்த்து
போராட்டத்தின் வளர்ச்சியின் இன்னொரு 1920 இல் Dublin தலைநகராகக் கொண்ட அயர்லாந்தின் பெரும்பகுதிகளுக்கு ஒரு பாராளுமன்றமும் Belfast இனை தலைநகராகக்கொண்ட ஆறு மாவட்டங்களுக்கு ஒரு பாராளுமன்றமும் ஏற்படுத்தப்பட்டது. இந்தப் பிரிவினையை சின் பென் (நாம் எமக்கு என்னும் அரசியல் இயக்கம்) ஏற்கமறுத்தனர். உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தபோதும் அயர்லாந்து தேசத்திற்கான அங்கீகாரத்தை டிசம்பர் 5 1922 இல் பிரித்தானிய பாராளுமன்றம் அங்கீகரித்தது. கெரிலா கொமாண்டராக, அரசியல் கைதியாக, வெற்றிகண்ட புரட்சிவாதியாக, உள்நாட்டு யுத்தத்தில் தன்பக்கத்தில் திடமாக நின்ற எட்மொன் டி வலெறா (1882 1975) 1932 இல் ஒரு அரசாங்கத்தை அமைத்தார். இதன் பிரதமமந்திரியாக இருந்து படிப்படியாக பிரித்தானியாவுடனான தொடர்புகளை துண்டித்தார். முடிவாக 1937 இல் புதிய அரசியல் யாப்புடன் இறைமை கொண்ட ஜ்றிஸ் சனநாயக அரசு உருவாக்கப்பட்டது. இந்த அரசு அயிறிஸ் தேசியத்தையும் கத்தோலிக்கத்தையும் தமது தனித்துவத்தை நிலைநிறுத்த இணைத்தது என Roy Foster என்னும் அயர்லாந்து வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுவர். அயர்லாந்து தேசம் எப்படி அமையவேண்டும் எனக் கனவுகண்ட டி வலெறா
எனக் கூறுகின்றார். டி வலெறா கூறும் உயர்ந்த சிந்தனைகளுள் மொழி முதல் இடத்தை பெறுகின்றது (அவர் குறிக்கும் மொழி தொன்மையும், செம்மையும் கொண்ட அயர்லாந்தின் ஹேலிக் மொழியாகும்)
எனக்குறிப்பிடுகின்றார். இன்று அயர்லாந்தின் அரச கல்விக்கூடங்கள் யாவற்றிலும் அயர்லாந்து மொழி கற்பிக்கப்படுகின்றது . அத்தோடு சில அரச நிர்வாகப் பதவிகளுக்கு இந்த மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி போன்று தொன்மையும் செம்மையும் கொண்ட மொழியாக இருப்பினும் எமது சங்கப் பாணர்களை ஒத்த பாடுனர்களைக் கொண்ட மொழியாக இருப்பினும், தீதும் நன்றும் பிறர்தர வாரா, என்பதையொத்த சான்றோர் வாக்கியங்களைக் கொண்டிருப்பினும், நுஃற்றாண்டுகால அன்னியர் ஆட்சியினால் அயர்லாந்து மொழி அதன் பாவனைத் தொடர்ச்சியை இழந்து விட்டது. நூற்றாண்டுகாலமான ஆங்கிலமயமாக்கலும், எலிசபெத்தியரின் அமுக்கங்களும், அயர்லாந்து மொழியினை புறக்கணித்தன. சுதந்திரப் போராட்டத்தின் உடன் நிகழ்ச்சியாக ஏற்பட்ட தேசியமும், மறுமலர்ச்சியும் அயர்லாந்து மொழிக்கு இன்று புதிய சக்தியை அளித்துள்ளது. இருப்பினும் ஒரு மொழியின் இருப்பு அதன் தொன்மையில் அல்ல அதனது தொடர்ச்சியில் தங்கியுள்ளது என்பதை அயர்லாந்து மொழியின் இன்றைய நிலைப்பாடு காட்டி நிற்கின்றது. சீரிளமைத்திறம் கொண்ட தமிழ் மொழியோ அன்னியர் ஆட்சிகளின் அமுக்கங்களையும் தாண்டி, சிங்களம் மட்டும் என்ற கோசங்களுக்கும் மசுங்காது, சுயநிர்ணயப் போராட்டம் வரித்துக்கொண்டுள்ள போர்க்குணத்தாலும், போரியலாலும் புதிய வீரியத்தை பெற்றுள்ளது எனலாம். புலம் பெயர்ந்த தமிழர்களின் புதிய அனுபவங்களும் தமிழ் இலக்கியத்திற்கு புதிய பாடு பொருட்களையும் அளித்துள்ளது எனலாம். பனையின் கீழ் வாழ்ந்தவர்கள் பனியின் கீழ் பெறும் அனுபவங்களும், போராளிக்கலைஞர்களின் ஆக்க இலக்கிய படைப்புக்களும் எமது மொழிக்கு புதியவை. இவற்றை உள்வாங்கி தமிழ் தேசியத்தின் மூச்சாக விளங்கும் எமது மொழி இன்றைய உலகமயமாக்கலுக்கும், வணிகமொழிக்கும் முகம் கொடுக்க நாம் உழைத்திடவேண்டும்.
என்ற பாரதியின் குரல் என் காதில் விழுகின்றது. | |
“Language is the very life breath of a nation…” M. Thanapalasingham [English translation by Phillip Pragasam]
The Irish people struggled for centuries for their freedom. We know of the trials and tribulations of that epic struggle. A pivotal event in this struggle occurred on the 24th of April 1916, Easter Monday. To this day this episode is referred to as the Easter uprising - Easter being the day of the risen Christ. Fourteen of the leaders of the uprising including Patrick Pearce and James Connolly were executed by firing squad under British martial law. Patrick Pearce was executed at 3:30 am on the morning of 3rd May 1916. In the face of certain death, as he faced his British government adversary, Patrick Pearce declared:
The continued growth of the struggle resulted in the establishment in1920, of the Republic of Ireland with a parliament and Dublin as its capital and a separate parliament for the six counties of Northern Ireland with Belfast as its capital. Sinn Fein (the name means ‘we ourselves’) the Irish republican political movement, refused to accept the partition of Ireland. Guerrilla commander, political prisoner, successful revolutionary, a partisan in the civil war, Eamon de Valera (1882-1975) formed the government in 1932. As Prime Minister he gradually cut the links binding Dublin to British rule. A new constitution in 1937 created the sovereign democratic state of Eire. As Roy Foster, the historian of Ireland says, “[de Valera’s] Ireland was a nation set apart by Catholicism and nationality.” As de Valera declared:
Amongst the things that de Valera speaks of, the language is given pride of place. The language that he refers to is the ancient and classical Gaelic language of the Irish people. Consider his words:
Today, Gaelic is taught in all of Ireland’s government schools. Besides knowledge of Gaelic is a pre requisite for certain government jobs. It is remarkable that the Gaelic language shares certain features with Tamil. Like Tamil, Gaelic is an ancient and classical language. Not unlike the Sangam period of Tamil literature, Gaelic literature boasts many bards and poets. Gaelic also possesses many a saying of profound wisdom in the vein of Tamils’ “Good and evil come not from without [but are from within]”. However, due to centuries of foreign domination Gaelic lost that vital element of continuity of usage. Centuries of Anglicisation and Elizabethan oppression had taken their toll. Be that as it may, the Nationalist fervour and cultural awakening born of the freedom struggle have given a boost to Gaelic. Even so, the resilience of a language depends more on its continued use than its status as an ancient and classical language. The current state of Gaelic bears witness to this truism. Meanwhile Tamil, with its youthful vibrancy had defiantly resisted foreign rule and ‘Sinhhala Only’ . The struggle for self determination, has given it a renewed energy, a fighting spirit and the skills of warfare. Again, those who lived under the palmyrah palm now live in cooler, snowy climes and the life experiences of the Tamil Diaspora, living in many lands and across distant seas, has enlivened and enrichened Tamil literature. The creative outpourings of Tamil freedom fighters have added a fresh dimension to our language. All this internalised in our being, has reinforced the Tamil language as the very life breath of the Tamil nation. We should strive to secure that this language, our language, is equipped to face upto the challenges of globalisation, internationalism, and commercialisation. The words of Bharathi come to mind.. “Good and wisdom whosoever proclaims or whence they emanate, let’s fearlessly embrace” |