"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Selected Writings - M.Thanapalasingham, Australia
ம.தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா
புத்தாண்டும் புதுயுகமும்
1 January 2005
"...இன்று பாரதியின் சபதங்களும், பாரதிதாசனாரின் கனவுகளும் ஈழத்தமிழ் மண்ணில்தான் புதுயுகம் ஒன்றிற்கான களத்தினை அமைத்துவிட்டு இருப்பதை காண்கின்றோம்... ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் வீரமும், தன்னம்பிக்கையும், கொண்ட மக்கள் கூட்டம் தமிழ் மக்களிடையே வலம்வருவதை காண்கின்றோம். இவர்களே புதுயுகத்தின் மாந்தர்கள். போரும் புலம்பெயர்வும் பல இழப்புக்களுடன் கூடியதாயினும் அது புத்தாயிரத்தில் தமிழர் வல்லபங்களை உலகிற்கு பறைசாற்றி நிற்கும் வீரயுகமாக விளங்குகின்றது..."
புராண, இதிகாசங்களில் திரேதா, துவாபர, கலி, கிருதம் என்னும் நான்கு யுகங்களைப் பற்றி பேசப்படுகின்றது. புராண,இதிகாச நம்பிக்கைகளின்படி இப்போது நடப்பது கலியுகம், இனிமேல் வருவது கிருத (சத்திய) யுகம். கலியுகத்தில் துன்பமும், வறுமையும், அழிவும்,அச்சமும், அடக்குமுறையும் தலைவிரித்தாடும். கிருதயுகத்தில் சுதந்திரம், சுபீட்சம், வீரம் என்பன எம் வசமாகும். இவை புராண நம்பிக்கைகள். மானிடத்தின் விடுதலைக்காக போர்க்ககொடி உயர்த்திய விடுதலை வெறியன் பாரதி இவற்றை உள்வாங்கி
என மனித முயற்சியில் நம்பிக்கை கொண்டு சபதம் எடுக்கின்றான். தமிழர் தேசியத்தின் விடிவுக்காக ஏங்கிய பாரதிதாசனார் "......அணிபெறத் தமிழர் கூட்டம் போர்தொழில் பயில்வதெண்ணிப் என ஏங்குகிறான். இன்று பாரதியின் சபதங்களும், பாரதிதாசனாரின் கனவுகளும் ஈழத்தமிழ் மண்ணில்தான் புதுயுகம் ஒன்றிற்கான களத்தினை அமைத்துவிட்டு இருப்பதை காண்கின்றோம். எனெனில்
உலகின் தனிப்பெரும் வல்லரசான அமெரிக்காவும், பின்நவீனத்துவ (post modern)
இந்த பலத்திற்கு பின்னால் ஒரு வீரயுகம் கோலம் காட்டி நிற்கின்றது. பின்னால் நடுகற்களாக பர்ணமித்து நிற்கும் மாவீரர்கள், முன்னால் அணிவகுத்து போர்தொழில் பழகுவோர், அங்கே அன்னை பூபதி இங்கே திலீபன். ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் வீரமும், தன்னம்பிக்கையும், கொண்ட மக்கள் கூட்டம் தமிழ் மக்களிடையே வலம்வருவதை காண்கின்றோம். இவர்களே புதுயுகத்தின் மாந்தர்கள். போரும் புலம்பெயர்வும் பல இழப்புக்களுடன் கூடியதாயினும் அது புத்தாயிரத்தில் தமிழர் வல்லபங்களை உலகிற்கு பறைசாற்றி நிற்கும் வீரயுகமாக விளங்குகின்றது. எங்கெல்லாம் போரின் மத்தியில் அரசு என்ற தாபனம் முதன் முதல் தோற்றம் பெறுகின்றதோ அங்கெல்லாம் வீரயுகம் கோலம் காட்டும் என்பது ஒரு பொதுவான கோட்பாடு. அந்த வீரயுகத்தில்
நாம் நுழையும் புதுயுகத்தின் சிற்பிகள் இவர்களே. இவர்கள் எமது பலம். உலகின் பெரும் வல்லரசுகளின் நவின ஆயுதங்களுக்கு, போரியலுக்கு மேலாக " ஆவி கொடுக்க அசையாத்திடம் கொண்ட மாவீரர் வாழும் மண்ணாக " எமது மண் காட்சி தருகின்றது. அன்று யேசுநாதரின் பிறப்பை தரிசிக்க மூன்று சான்றோர் சென்றனர். இன்று ஒரு தேசத்தின் பிறப்பை எப்படியாவது தடுத்து நிறுத்த அமெரிக்கா, ஐரோப்பா, யப்பான் என்னும் மூன்று சக்திகள் அம்மையாரை தேடிச் சென்றனர். ஆனால் இந்த மூன்று சக்திகளின் அரசியல் பரிபாசையில் சொல்வதானால் சிறிங்கா ஒரு நாடாக இருக்க தகுதியற்ற தேசமாகும். இயற்கையின் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் அவலங்களில் கூட வேறுபாடு காட்டும் ஒரு நாடு. "சமூக முன்னேற்ற திட்கடங்களைவிட ராணுவபாதுகாப்பிற்கென ஒவ்வொரு ஆண்டும் பணத்தை ஒதுக்கும் நாடானது அதனுடைய தார்மீக மரணத்தை நெருஙகிக்கொண்டு இருக்கின்றது" - மாட்டின் லுஃதர் கிங் சிறிலங்கா என்ற தீவு சிங்களமாக, தமிழ் ஈழமாக கோலம் காட்டுவதன் மூலமே அந்த தீவில் புதுயுகம் பிறக்க வழிவகுக்கும். இதுவே இன்றைய வரலாற்று புறநிலையும், யதார்தமுமாகும். |