தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Tamil National Forum > Selected Writings & Poems - Raj Swarnan > Truth Never Sleeps 

Ezhuga

Truth never sleeps...
Poem in Tamil by
Raj Swarnan
Poem by Swarnan
written on the occasion of the International Conference On Tamil Nationhood
& Search for Peace in Sri Lanka, Carleton University, Canada
- 19 May 1999

இலங்கைப் பிரச்சினையின் தாற்பரியங்களை எடுதியம்பி உலகுக்கு உண்மை நிலைவரத்தை வெளிப்படுத்தும் வகையில் கனடாவில் மே மாதம் 21ம்,22ம் திகதிகளில் இருநாள் மாநாடொன்று நடைபெறவுள்ளது. இதுபோன்ற மாநாடுகள் முலம் ஈழத்தின் இன்றைய நிலையைச் சர்வதேச சமுகத்துக்கு எடுத்துக்கூறி, பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டியது இன்று எம்முன்னுள்ள முக்கிய பணியாகவுள்ளது.

உண்மைகள் ஒருபோதும்
உறங்குவதில்லை..

எரிகின்ற நெருப்பை
அணைத்திடும் நோக்கில்
எவரேனும் வருவரோ வருவரோவென்று
எதிர் பார்த்துப் பார்த்துக்
களைத்தது போதும்..
எழுக...எழுக..
உலகத் தமிழினமே எழுக..
உண்மைகள் ஒருபோதும்
உறங்குவதில்லை..
உறங்கவும் கூடா..
உலகைத் துயிலெழுப்பி
உண்மையை எடுத்துரைக்க
உலகத் தமிழினமே எழுக..
நேட்டோ போட்ட குண்டால்
நாற்பதுபேர் செத்தார் என்று
நாற்பத்தெட்டு மணிநேரமாக
ரீ.வீ. அழுதது...
சீ.என்.என்., ஸகை நியூஸ,
பீ.பீ.சீ. வேள்டு
அவர்லி அப்டேற்றுகளாய்
அறுத்துத் தள்ளியது...

பற்றி எரிந்த சாம்பல் மேட்டிடை
பாறிக் கிடக்கும் சடலங்கள்..
ஈழத்திலும் இருப்பது
இவர்களுக்குத் தெரியாதோ?
நேபாம் குண்டுகளால் கூட
எங்கள் தேசம்
நெருப்பூட்டப் பட்டிருக்கிறது..
உரிமைப் போரை
உருச்சிதைப்பதற்காய்
உணவும் மருந்தும் கூட
உலுத்தர் கை ஆயுதங்கள்..
அமைதி நிலவிய
ஆலயங்களிலும் - இன்று
ஆயுததாரிகளின்
ஆக்கிரமிப்பு..
ஆயர்களின் குரல் கூட
இனவாதச் செவிகளை
இணங்கச் செய்யவில்லை..
நேசநாடுகள் பாசம் காட்டுவதில்
நேர்மையிருக்கிறதா?
மேற்கில் நடந்தால்
இனப்படுகொலை..
கிழக்கில் நடந்தால்
உள்ளுர்ப் பிரச்சினையா?
உலகம் எம்மை நோக்கி
நகர மறுக்குமெனில்
எம்மை உலகை நோக்கி
நகர்த்தலே ஒரேவழி..
ஈழத்தில் அமைதி வேண்டி
இருநாள் அரங்கொன்றைக்
கனடாத் தமிழர்கள்
காண்பதாய் அறிகின்றோம்..
தமிழன் வாழும்
நாடுகள் யாவிலும்
தருமத்தை எடுத்துரைக்கத்
தலை நிமிர்தல் அவசியம்..
எங்கள் பிரச்சினையை
உள்ளுர்ப் பிரச்சினையாய்
அமுக்கி வைப்பதில்..
தமிழனென்று கூறுகின்ற
தமிழ் தெரியாத் தமிழனது
பிரச்சார தந்திரம்
இன்று பலிக்கலாம்..
என்றும் பலிக்காது..

உண்மைகள் ஒருபோதும்
உறங்குவதில்லை..
உறங்கவும் கூடா..

புத்திஜீவிகளின்
வித்தியா வல்லமை
நெம்புகளாகட்டும்..
சர்வதேச சமுகத்தின்
சற்றலைட் பார்வைக்குள்
எங்கள் தேசத்தை
மெல்ல நகர்த்திடுவோம்..
இரும்பு மனங்களையும்
இளக்கிடும் வகையில்
ஈழத்து நிலையதனைப் - புவிக்
கோளத்துக்கெடுத்தியம்ப
உலகத்தமிழர்களே..
ஒன்றுபட்டெழுந்திடுவீர்..
உடனே செயற்படுவீர்..

Mail Usup- truth is a pathless land -Home