"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil National Forum > Selected Writings & Poems - Raj Swarnan > Sudar
ஏற்றுக ஓர் சுடர்..
Sudar
A poem by Raj Swarnan
15 November 1999
23.11.1999 திருக்கார்த்திகை தினமாகும். அன்றைய தினம் முருகன் ஆலயங்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். 22.11.1999 தத்தம் இல்லங்களில் மக்கள் தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.
அதோ..
சுடர் விட்டு எரிகிறது விளக்கு..
என்னடா தமிழா?
இன்னுமா உனக்கு
இருட்டு வாழ்க்கை?
கார்த்திகை மாதம் - நம்
கந்தக் கடம்பன்
தோன்றிய மாதம்..
பகை முடிக்கப் பாரினில்
பன்னிருகையோன்
பிறப்பெடுத்த பொன்னாளைப்
போற்றிக் கொண்டாடவும்
மறந்திடல் தகுமோ?
சாற்றிய பகையைச்
சட்டென ஓட்டிய
கார்த்திகைக் குமரன்
பிறப்பினைக் குறித்திட
ஏற்றிடு சுடர்கள் - உன்
இல்லம் எங்கணும்..
கார்த்திகை மாதம் - திருக்
கார்த்திகை நாளில்
காலமெல்லாம் நாம்
கடந்து வந்த
கவலைகள் மறந்திட
ஏற்றிடு சுடர்கள் - உன்
இல்லம் எங்கணும்..
வாட்டமிகுந்த எம்
வாழ்வினை மாற்றிய
வள்ளலர் தம்மை
வாழ்த்தி வணங்கி
ஏற்றிடு சுடர்கள் - உன்
இல்லம் எங்கணும்..
ஏற்றிடு சுடர்கள் - உன்
இல்லம் எங்கணும்..
காரிருள் நீக்கி - எம்
இன்னல்கள் போக்க
ஏற்றிடு சுடர்கள் - உன்
இல்லம் எங்கணும்..
வீடுகள் தோறும் நீ
விளக்கு வைத்தால்
வில்லங்கம் வருமென்று
வீணே கலங்கிறாயா?
இல்லத்தில் இன்றேலும் - உன்
உள்ளத்திலாவது
உண்மையுணர்வுடன்
ஏற்றிடோர் விளக்கு..
அவ் விளக்கின் ஒளியிலேனும்
உனக்கு
விடிவு புலப்படட்டும்..