"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil National Forum > Selected Writings & Poems - Raj Swarnan > ChemmaNiyin Sethi KeLir
A poem by Raj Swarnan
28 June 1999
".. Only a skull believed to be either of a mouse or a reptile, was retrieved after a two-hour excavation at a site in Chemmani, Jaffna on Wednesday which is alleged to be a mass grave... State Counsel, Yasantha Kodagoda, who is leading the legal team from the Attorney General's Department pointed out that the objective of the present investigation was to ascertain the veracity of Rajapakse's statement and if human skeletons are found to map out logistics for further exhumation..Foreign Ministry Spokesman Ravinatha Aryasinha, who presided over the media added that the international observers were here only to observe and not to conduct collateral inquiries in this process..." (Sri Lanka Government controlled Daily News, 17 June 1999)
இருபத்தொராம் நூற்றாண்டில்
காலடி வைப்பதற்காய்
இருவிழி முடாது காத்திருக்கும்
இவ்வையகத்திலுள்ளோரே..
வாரீர்..
வந்து பாரீர்..
சட்டை போட்டதோர்
எலியின்
எலும்புக் கூடுபற்றி - நீர்
கண்டதுண்டோ?
கேட்டதுண்டோ?
திகைக்காதீர்..
இந்து சமுத்திரத்து
நித்திலத் தீவதனில்
இதுவும் உண்டு..
இன்னமும் உண்டு..
யாழ்ப்பாணத்து மண்ணில்
வாழ்ந்த எலிகள்
சட்டை போட்டுத்தான்
வாழ்ந்தனவாம்..
இருக்கலாம்..
இவர்கள்
ஆயுததாரிகளைப்
புலிகள் என்றும்
அப்பாவிகளை
எலிகள் என்றும் தான்
எண்ணுகின்றார்ளோ?
சொன்னாயே ஒரு சொல்
சோமரட்ண..
அப்பா.. உனக்காய்ச்
சொர்க்கவாசல்
திறந்திருக்கு..
நீ பாவியோ?
அப்பாவியோ?
நானறியேன்..
எனில்,
உன் பாவங்களுக்குப்
பரிகாரம் தேடிவிட்டாய்..
உன் பணி முடிந்தது..
நீ சொன்ன சொல் பலித்தது..
இனி,
உலகே..
உன் பணி ஆரம்பம்..
கண்டெடுத்த
காலெலும்பும் கையெலும்பும்
கற்காலச் சுவடென்பார்..
மண்டையோடுகளைக்
கண்டால் - அவை
புத்த பிட்சுகளின்
பிச்சைப் பாத்திரங்களென்பார்..
பல்லொன்றைக்
கண்டெடுத்தால் - அது
புனிதத் தந்தமென்றங்கோர்
புதுக் கோவிலுங் கட்டிடுவார்..
சிதைந்து போன
சிறுதுணிகள்
பாம்புச் சட்டையென்பார்..
புத்தன் தேசமது
புனைகதைகள் கூறாதெனச்
செத்தாலும் நீவிர்
ஒத்துக் கொண்டிடாதீர்..
எங்கும் அணிதிரண்டு
ஆர்ப்பரித்து எழுந்திடுவீர்..
எங்களுக்கு வேண்டும்
நீதியான விசாரணையென
எங்கும் குரல் கொடுக்க
ஒன்றுபட்டு எழுந்திடுவீர்..