Selected Writings by Sanmugam Sabesan, சபேசன், அவுஸ்திரேலியா பயங்கரவாதம் என்றால் என்ன? 27 September 2006 " பயங்கரவாதத்திற்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் என்ன வித்தியாசம்? கள்வனுக்கும், உள்ளங்கவர் கள்வனுக்கும் என்ன வித்தியாசம்? "
இன்று உலகமெங்கும் அதிகமாகப் பேசப்பட்டு வருகின்ற சொல் பயங்கரவாதம் என்ற சொல்லாக இருக்கக் கூடுமோ என்று எண்ணக்கூடிய அளவிற்குப் பயங்கரவாதம் என்ற சொல் பலராலும் பேசப்பட்டு வருகின்றது. ஒரு தேசத்தின் தலைவரிலிருந்து அந்தத் தேசத்தின் அடிமட்டத்துக் குடிமகன் வரை இன்று உலகளாவிய வகையில் ஷபயங்கரவாதம்| என்ற சொல் உச்சரிக்கப்பட்டு வருகின்றது. வேற்று சொற் பிரயோகத்தோடு நின்று விடாமல் ஷபயங்கரவாதம்| என்ற சொல்லின் தாக்கம் உலகக் குடிமக்கள் ஒவ்வொருவரின் நாளாந்த வாழ்விலும் பிரதிபலிக்கக் கூடிய வகையில் வியாபித்து நிற்கின்றது.
பயங்கரவாதம் என்றால் என்ன? இந்த சொல்லுக்கு உரிய அர்த்தமும் ஆழமும் என்ன? வுநுசுசுநுழு என்கின்ற லத்தீன் மூலச்சொல்லை கொண்ட ஆங்கில சொல்லான வுநுசுசுழுசு என்பது நுஓவுசுநுஆநு குநுயுசு என்கின்ற கருத்தைக் கொண்டிருக்கின்றது. அதனை தமிழில் ஷமிகக் கடுமையான பயம்| அல்லது மிகக் கடுமையான பயங்கரம் என்று சொல்லலாம். இதன் நீட்சியான வுநுசுசுழுசுஐளுஆ (பயங்கரவாதம்) என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று ஆராய்ந்து பார்க்க முனைந்தால் அது சற்று கடினமான வேலையாக இருக்ககூடும்.
1988ம் ஆண்டு அமெரிக்க இராணுவத்துறை வுநுசுசுழுசுஐளுஆ என்ற சொல்லை ஆய்வு செய்தபோது நூறுக்கும் மேற்பட்ட அர்த்தங்களை அது கண்டறிந்தது. இதன் காரணமாக அக்காலகட்டத்தில் ஆஐடுடுஐவுயுNவுளுஇ டீழுஆடீநுசுளு என்ற சொற்களைத்தான் ஊடகங்கள் உபயோகித்து வந்தன. பயங்கரவாதம் என்பதனை ஒரு குற்றச்செயலாகத்தான் சகல நாடுகளும் கருதுகின்றன. தனது நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொருட்டு அந்த நாடு மேற்கொள்ளக் கூடிய சட்டரீதியான நடவடிக்கைகள் பயங்கரவாதம் ஆகாது. அதேவேளை தம்மை ஆக்கிரமிப்போர் மீது ஒரு மக்கள் கூட்டம் மேற்கொள்ளக் கூடிய நியாயபூர்வமான வன்முறையை சில வரைவிலக்கணங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. டீசுயுஐN துநுNமுஐNளு என்கின்ற ஆய்வாளர் பயங்கரவாதம் என்றால் என்ன? என்பதை விளக்கும்போது பயங்கரவாதம் என்பதானது ஒருவர் பார்க்கும் பார்வையில் கருத்தில் தங்கியயுள்ளது. என்றுதான் சொல்கின்றார். ஒரு மனிதனின் பார்வையில் பயங்கரவாதியாக தென்படுபவர் இன்னொரு மனிதனின் பார்வையில் விடுதலைப் போராளியாக தென்படுவார். சரியாக சொல்லப் போனால் எது பயங்கரவாதம் என்று தீர்மானிப்பது ஒரு அரசியல் கருத்தேயாகும்!.
பயங்கரவாதத்தை வரைவிலக்கணம் செய்வது ஒரு அரசியல் கருத்தேயாகும் என்று நாம் சொல்வதற்கும் பல காரணங்கள் உண்டு. அதன் ஒரு கூறை நாம் இப்பொழுது காணலாம். இரண்டாவது உலகமகா யுத்தத்தின்போது ஜப்பானியர்களுக்கு எதிராக பிரித்தானியாவுடன் இணைந்து போராடிய மலேயன் மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவத்தை பிரிட்டிஷ் அரசு விடுதலை இயக்கம் என்ற கௌரவித்து. ஆனால் இந்த இயக்கத்தின் வழித்தோன்றலான மலேயன் இன விடுதலை இராணுவத்தை பயங்கரவாதிகள் என்று இதே பிரிட்டிஷ் அரசு பின்னர் கூறியது. இதேபோல் ஆப்கான் முகாஜீதின் சோவியத் இரஷ்யாவிற்கு எதிராகப் போராடியபோது அன்றைய அமெரிக்க அரசும் அதன் ஜனாதிபதி ரொனால்ட் றீகனும் முகாஜீதினை விடுதலைப் போராளிகள் என்று பாராட்டி வந்தார்கள். ஆனால் பின்னாளில் இதே முகாஜீதின் வெளிச்சக்திகளால் உருவாக்கப்பட்ட அரசுக்கு எதிராக போராடியபோது அவர்களை அமெரிக்க அரசு பயங்கரவாதிகள் என்று அழைத்தது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் றீகனால் விடுதலைப் போராளிகள் என்று அழைக்கப் பட்டவர்களைப் பயங்கரவாதிகள் என்ற பெயர் மாற்றம் செய்தவர் வேறு யாருமல்ல அமெரிக்கவின் இன்றைய ஜனாதிபதியான ஜோர்ஜ் புஷ் அவர்கள் தான்.
இந்த விடயங்கள் மறு வழமாக நடந்த சம்பவங்களும் நிறைய உண்டு. முன்னாள் விடுதலைப் போராளிகள் பின்னாளில் பயங்கரவாதிகள் என்று அழைக்கப்பட்டது போல் முன்னர் பயங்கரவாதிகள் என்று அழைககப்பட்டவர்கள் பின்னாளில் விடுதலை வீரர்களாக அழைக்கப்பட்டும் உள்ளார்கள் அவர்களுக்கு நோபல் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டின் BEGIN அவர்களையும் தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டெலா அவர்களையும் நாம் இங்கே குறிப்பிடலாம். இங்கே ஓர் ஒற்றுமையையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். பயங்கரவாதிகள் என்று முன்னர் அழைக்கப்பட்ட இந்த தலைவர்கள் விடுதலை வீரர்கள் என்று அழைக்கப் பட்டது தங்களுடைய நாடுகள் சுதந்திரம் அடைந்த பின்னர்தான்.
இந்த இரண்டு வித்தியாசமான நடைமுறைகளைத் தர்க்கித்த நாம் மூன்றாவது பரிமாணமாக இன்னமொரு விடயத்தையும் குறிப்பிட விரும்புகின்றோம். தம்மிடையே நெருங்கிய நட்பையும் உறவையும் கொண்டிருக்கும் நேசநாடுகள் பயங்கரவாதம் குறித்து வேறுபட்ட மாற்றுக் கருத்துக்களையும் கொண்டிருந்தது உண்டு. பிரித்தானியாவும், அமெரிக்காவும் மிக நெருங்கிய உறவைக் கொண்டிருந்தபோதும் IRA குறித்து அமெரிக்கா வேறு கருத்தைக் கொண்டிருந்தது. பிரித்தானிய அரசோடு IRA போரிட்டுக் கொண்டிருந்தபோது ஐக்கிய அமெரிக்க இராட்சியத்தின் சில கிளைகள் IRA இயக்கத்தைப் பயங்கரவாதிகள் என்று ஏற்றுக்கொள்ள மறுத்தன. இதற்கு வரலாற்று ரீதியான, பண்பாட்டு ரீதியான, அரசியல் ரீதியான காரணங்கள் அடிப்படையாக அமைந்தன. இந்தக் கருத்து QUINN VS ROBINSON என்ற வழக்கு மூலம் நிலைநாட்டப் பட்டிருந்தது.
ஆகையால் எது பயங்கரவாதம் என்று தீர்மானிப்பது அரசியல் கருத்துக்கள்தான் என்று நாம் முன்னர் கூறினோம்.
தம்மை ஆளுகின்ற அரசோ, அல்லது வேற்று நாட்டு அரசோ தம்மை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் அடக்கி தம்மை வன்முறையூடாக அழிக்க முயலும்போது அதனை எதிர்த்து போராடுவதற்கு எந்த இனத்திற்கும், நாட்டுக்கும் நியாயபூர்வமான உரிமை உண்டு. உரிமைகள் அழிக்கப்படும்போது அதனை எதிர்த்து போராட முனைவதும் ஓர் அடிப்படை உரிமைதான் என்பது எம்முடைய தீர்க்கமான கருத்தாகும்.
அன்றும் இன்றும் உரிமைக்காக போராடிய பல விடுதலை இயக்கங்களுக்கு பயங்கரவாதப் பட்டம் சூட்டப் பட்டதை வரலாறு கூறும். பின்னர் போராட்டம் வெற்றி பெற்று சுதந்திரம் கிடைத்த பின்னர் பயங்கரவாதப் பட்டம் திரும்ப பெறப்பட்டு ஷவிடுதலைப் போராட்ட இயக்கம்| என்ற பெயர் சூட்டப் பட்டதையும் இதே வரலாறு சுட்டிக் காட்டும்.
ஆனால் ஜனநாயக அரசுகள் என்று அழைக்கப்படுகின்ற அரசுகள் அரச பயங்கரவாதச் செயல்களைப் புரியும்போது அவற்றை பயங்கரவாதம் என்று கூறுவதற்குப் பலரும் முன்வருவதில்லை. எனினும் அரச பயங்கரவாதப் பட்டியலில் பல உலக நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. பாக்கிஸ்தான், பிரித்தானியா, அமெரிக்கா சூடான், சிரியா, ஆர்ஜென்டினா இந்தியா இத்தாலி, இலங்கை என்று பல நாடுகள் மீது அரச பயங்கரவாதக் குற்றங்கள் சுமத்தப் பட்டிருக்கின்றன.
உதாரணத்திற்கு ஒரு விடயத்தை பார்ப்போம். சர்வதேச பயங்கரவாதத்திற்காக உலக நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஒரே ஒரு நாடாக அமெரிக்கா திகழ்கிறது. நிக்கராகுவாவையும் மற்றைய சம்பவங்களையும் சுட்டிக் காட்டுகின்ற அறிஞர் நோம் சொட்ஸ்கி (NOAM CHOMSKY) அமெரிக்கா தொடர்ந்தும் உலக பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றார். இதேபோல் வேறு பல நாடுகளின் அரச பயங்கரவாதற்திற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஆதரவு அளித்து வருவதையும் அறிஞர் நோம் சொம்ஸ்கி சாடுகின்றார்.
இங்கே ஒரு விடயத்தை நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம். அரச பயங்கரவாத்திற்கான ஆதரவை நாம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அதேபோல் அரச பயங்கரவாதத்தையும் நாம் இரண்டு வகையாக பிரிக்கலாம்.
முதலில் அரச பயங்கரவாதத்திற்கான ஆதரவை நாம் கவனிப்போம். ஒரு நாட்டின் அரசு வேறொரு நாட்டின்மீது புரியும் பயங்கரவாதத்தை ஆதரிப்பது முதலாவது வகை. உதாரணத்திற்கு இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது புரியும் தாக்குதலுக்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவை குறிப்பிடலாம். மற்றது ஒரு நாட்டின் அரசு தன்னுடைய நாட்டின் ஒரு இனத்து மக்கள்மீதே புரியும் அரச பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகும். உதாரணத்திற்கு துருக்கி அரசானது தனது நாட்டின் KURDISH இன மக்களை அழிப்பதற்காக கிளின்டனின் அமெரிக்க அரசு வழங்கிய எண்பது சதவீத ஆயுத உதவியையும் ஆதரவையும் சுட்டிக்காட்டலாம்.
இதனடிப்படையில் அதாவது இரண்டாவது வகையில் பல உலக நாடுகள் சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருவதை நாம் இவ்வேளையில் வருத்தத்துடன் சுட்டிக்காட்ட விழைகின்றோம். ஒரு நாட்டின் அரசான சிறிலங்கா அரசு தனது நாட்டில் வாழ்கிற இன்னுமொரு தேசிய இனமான தமிழினத்தைத் தனது அரச பயங்கரவாதச் செயல்கள் ஊடாக அழிக்க முனைந்து வருகின்றது. சிறிலங்கா அரசின் இந்த அரச பயங்கரவாதச் செயல்களுக்கு துணையாக ஆயுத உதவியையும் அரசியல் ஆதரவையும் வழங்கி வருவதன் மூலம் இந்த உலக நாடுகள் தமது உலக பயங்கரவாதத்தின் இரண்டாவது அம்சத்தை நிறைவேற்றி வருகின்றன.
இந்த உலகநாடுகள் தமது உலக பயங்கரவாதத்தின் இரண்டாவது அம்சத்தை இவ்வாறு நிறைவேற்றி வைக்கின்ற அதேவேளையில் சிறிலங்கா அரசு தன்னுடைய அரச பயங்கரவாதத்தை இரண்டு வழிகளினால் செய்து வருகின்றது. ஒன்று தனது நேரடியான அரச பயங்கரவாதம் மற்றது அரச ஆதரவில் நடாத்தப்படும் பயங்கரவாதம். (SRILANKA STATE TERRORISM AND SRILANKAN-STATE SPONSORED TERRORISM)
அரச பயங்கரவாதம் என்றால் என்ன? அதன் வரைவிலக்கணம் என்ன? ஓர் அரசானது தனது ஆளுமைக்குக் கீழ் உள்ள மக்கள் மீது நியாhயப்படுத்த முடியாத நீதியற்ற போர் ஒன்றை தொடுப்பதேயாகும். இப்படிப்பட்ட போர் ஒன்றின் மூலம் குறிப்பிட்ட மக்கள் இனத்தை அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் கட்டாயப்படுத்தி தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது சிறிலங்காவின் அரச பயங்கரவாதமாகும். இது சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் முதலாவது செயற்பாட்டு வகையாகும்.
சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்ற இரண்டாவது அரச பயங்கரவாதம் STATE SPONSORED TERRORISM என்பதாகும். அதாவது அரச ஆதரவில் நடாத்தப்படுகின்ற பயங்கரவாதமாகும்.
அரச ஆதரவில் நடாத்தப்படுகின்ற பயங்கரவாதம் என்றால் என்ன? அதன் வரைவிலக்கணம் என்ன?
ஓர் அரசானது சில ஆயுதக் குழுக்களுக்குப் பண உதவியையும், ஆயுத உதவியையும், பரிசுகளையும் வழங்கி அதனூடாக குறிப்பிட்ட இனத்தின் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடாத்துவதாகும்.
சரி, இந்தத் தாக்குதல்களை அரச ஆதரவில் நடாத்த வேண்டிய காரணம் என்ன?
அதற்குரிய வரைவிலக்கணம் வருமாறு:
ஓர் அரசு தான் தொடுக்கின்ற மரபு ரீதியான போர் மூலம் (CONNVENTIONAL WAR) இந்த குறிப்பிட்ட இன மக்களை வெல்ல முடியாத நிலை வரும்போது அரச ஆதரவில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டி விடுவதேயாகும்.
அன்புக்குரிய வாசகர்களே!
இன்று சிறிலங்கா அரசு தன்னுடைய அரச பயங்கர வாதத்தையும் அரச ஆதரவு பயங்கர வாதத்தையும் தமிழீழ மக்கள் மீது கட்டவிழித்து விட்டிருக்கின்றது. அதாவது அரச பயங்கரவாதத்தின் இரண்டு அம்சங்களையும் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. சம்பந்தப்பட்ட சில உலக நாடுகள் சிறிலங்காவின் அரச பயங்கரவாத்திற்கு துணையாக - அதாவது தனது நாட்டின் ஒரு தேசிய இனத்தை அழிக்கின்ற சிறிலங்கா அரச பயங்கரவாத செயல்களுக்கு துணையாக - தமது அரச பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
சிறிலங்கா அரசானது தனது அரச பயங்கர வாதத்தையும், அரச ஆதரவு பயங்கர வாதத்தையும் அண்மையில்தான் ஆரம்பித்தது என்று சொல்பவர்களும் இருக்கின்றார்கள். உண்மையில் சிறிலங்காவின் அரச பயங்கரவாதம் 50களிலே ஆரம்பமாகி விட்டது. தமிழ் மக்களின் வன்முறையற்ற அமைதி வழிச் சாத்வீக போராட்டங்களை சிறிலங்கா அரசு அரச பயங்கரவாத வன்முறையூடாக நசுக்க முனைந்தது. அத்தோடு தமிழ்ப் பொதுமக்கள் மீதும் தொடர்ந்தும் வன்முறையைப் பிரயோகித்து வந்துள்ளது. 1958,1961,1977,1979,1981,1983 என்று தொடர்ச்ச்pயான வெளிப்டையான தமிழின அழிப்புக்களை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வந்துள்ளது. இதேபோல் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையிலும் சமாதானத்திற்கான யுத்தம் என்ற போர்வையிலும் அரச பயங்கரவாதப் போர்களை தமிழ் மக்கள்மீது சிங்கள பௌத்தப் பேரினவாத அரசு திணித்து வந்துள்ளது.
இவை வெளிப்படையான வன்முறை தோய்ந்த அரச பயங்கரவாதம் இதனை ஒரு புறத்தில் சிறிலங்கா அரசு நடாத்தி வருகின்றது. மறுபுறத்தில் வேறு விதமான அரச பயங்கரவாதத்தை சிறிலங்கா அரசு புரிந்து வருகின்றது.
அது அரசியல், பொருளாதாரம் மற்றும் கல்வி சம்பந்தமான அரச பயங்கரவாதமாகும்.
தமிழ் மக்களை அரசியல் யாப்பினூடாக இரண்டாம் தரப்பிரசைகள் ஆக்கியது. தரப்படுத்தல் ஊடாக தமிழ் மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பைப் பறித்தது. சிங்கள மொழித் தேர்வுச் சட்டம் மூலம் தமிழ் மக்களின் வேலை உயர்வினை தடுத்தது. பொருளாதார, உணவு, மருந்துத் தடைகள் ஊடாக தமிழ் மக்களின் இயல்பு வழ்க்கையினை பறித்தது. சிங்கள குடியேற்றங்கள் மூலமாக தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை கவர்ந்தது.- இவை போன்ற பல அரசியல் ரீதியான பொருளாதார - கல்வி ரீதியான அரச பயங்கரவாதச் செயல்களையும் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் செய்து வருகின்றது.
ஒரு தர்க்கத்திற்காக இதனை மறு வழமாகச் சிந்தித்துப் பார்க்க விழைகின்றோம். சிங்கள அரசுகள் தமிழ் மக்கள்மீது தொடர்ந்து இழைத்து வந்த இவ்வளவு கொடுமைகளையும் தமிழீழ விடுதலைப் புலிகள் சிங்கள மக்களுக்கு இழைத்திருந்தால் சிங்கள அரசு அதனை என்ன பெயரிட்டு அழைக்கும்? இந்த உலக நாடுகளும் அதனை என்னவென்று அழைக்கும்.?
இங்கே தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்ல! தமிழர்கள் அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப் பட்டவர்கள்.!!
இன்று மேற்குலகம் பாதிக்கப்பட்ட மக்கள்மீது தேவையற்ற அழுத்தத்தையும் தடைகளையும் விதித்து வருவதானது சர்வதேச பயங்கரவாதமாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் தடைகளும் அழுத்தங்களும் மேற்கொள்ளப் பட்டன - என்று கூறுவது முட்டாள் தனமாகும். இச்செயல்கள் மூலம் போர்தான் மூழுமே தவிர பேச்சு வார்த்தைகள் முறையாக நடக்காது. இதனைத்தான் சிறிலங்கா அரசம் விரும்புகின்றது. தவிரவும் பேச்சு வார்த்தை என்பது தீர்வு அல்ல! தீர்வுக்கான வழிகளில் ஒன்றுதான் பேச்சு வார்த்தையாகும்!! அந்த வழியையே மூடிவிட நினைத்தால் அதனூடாகத் தீர்வு எவ்வாறுதான் கிட்டும்.?
தாங்கள் சர்வதேச பயங்கரவாதிகள் இல்லை என்பதை நிரூபிக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட மேற்குலக நாடுகள் சிpறிலங்கா அரசிற்கு முறையான அழுத்தங்களையும் தடைகளையும் விதிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது ஒருதலைப் பட்சக் கொள்கைகளே அவர்களை விலக்கி வைத்து விடும்.
பயங்கரவாதம் குறித்தும் விடுதலைப் போராட்டம் குறித்தும் பல தர்க்கங்களை இன்று முன்வைத்தோம். மேற்குலகின் வரைவிலக்கணங்களையும், முரண்நிலைச் செயற்பாடுகளையும் சுட்டிக் காட்டினோம். சற்றுவிலகி நின்று வேறொரு தளத்தில் சில சொற்களைக் கவனிப்பதானது ஓர் உளவியல் ரீதியான தகவலைத் தரக்கூடும்.
தமிழில் ஷகள்வன்| என்ற சொல்லும் 'உள்ளம் கவர் கள்வன்' என்ற சொற்றொடரும் உண்டு. 'கள்வன்' என்ற தனிச்சொல் உள்ளம் கவர் என்ற சொற்றொடரோடு இணையும்போது அதற்கு அர்த்தமே வேறு. தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்! அவர்கள் விடுதலைப் போராளிகள்! அவர்கள் கள்வர்கள் அல்லர்! ஆனால் உள்ளங்கவர் கள்வர்கள்! தமிழீழ மக்களின் உள்ளங் கவர் கள்வர்கள்!! |