தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan > நேரம் நெருங்குகின்றது!

Selected Writings by Sanmugam Sabesan
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

நேரம் நெருங்குகின்றது!
[together with English Translation]

"சமாதானத்தின் பெயரால் ஓர் இனமக்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்ட வருவது நீதியாகாது."

2 August 2005


கடந்த பல வாரங்களாகச் சில முக்கிய விடயங்களை நாம் மீண்டும் மீண்டும் தர்க்கித்து வருவதை நேயர்கள் அறிவீர்கள். இன்று இலங்கைத்தீவில் உருவாகி வருகின்ற அரசியல் இராணுவச் சூழ்நிலைகள் நாம் இவ்விடயங்களைத் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதற்கு அடித்தளமாக அமைந்துள்ளன. கீழ்வரும் விடயங்களைப் பல வழிகளில் நாம் தர்க்கித்து வந்துன்ளோம்.

‘தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமைகளைப் பிரயோகிக்க வேண்டியதற்கான வேளை நெருங்கிக் கொண்டிருப்பதனைத்தான் தற்போதைய அரசியல் இராணுவச் சூழ்நிலைகள் தெளிவாக்கியுள்ளன’ - என்றும் சமாதானத்தின் பெயரால் ஓர் இனமக்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்ட வருவது நீதியாகாது.

 உண்மை தெரிந்தும் உறங்குவது போல் (உலகநாடுகள்) பாவனை செய்வதும் நீதியாகாது!!- என்றும், தமிழீழ மக்கள் தமது விடிவுக்கான அடுத்த கட்ட நகர்வினை மேற்கொள்வதற்கு முதல், சர்வதேச சமூகத்திடம் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் குறித்து முறையிடுவது பொருத்தமானதாகும்.’ என்றும் நாம் பல கட்டங்களாகத் தர்க்கித்து வந்திருப்பதையும் எமது நேயர்கள் கருத்தில் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

அந்த வகையில் கடந்த வாரம் 26-07-2005 அன்று தமிழ் மக்கள் வவனியாவில் நடாத்திய மகாநாடும், அதன்போது அறிவித்த பிரகடனமும் எமது தர்க்கங்களுக்கு வலுச் சேர்ப்பதாகவே அமைந்துள்ளன.

“இலங்கையில் மரவுரித்தாயகம், தேசியஇனம், தன்னாட்சி என்கின்ற சர்வதேசக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழர்கள் நடாத்துகின்ற இறைமைக்கான போராட்டத்தை, சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் ” என்று இப்பிரகடனம்- வலியுறுத்தியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் இந்த நிகழ்வை-இந்தப் பிரகடனத்தை-இவ்வவுனியா பிரகடனத்தை ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக நாம் கருதுகின்றோம்.

அதற்கு வலுவான பல காரணங்கள் உண்டு.!

‘வட்டுக்கோட்டைப் பிரகடனம்’ என்று அழைக்கப்பட்ட தமிழீழப் பிரகடனத்தை அன்றைய தமிழ்த்தலைமைகள் 1976ம் ஆண்டு, மே மாதம் 14ந்திகதியன்று வட்டுக்கோட்டையில் வெளியிட்டனர்.

ஆனால் அதற்கு முன்னரேயே தமிழ் மக்ளின் சுயநிர்ணய உரிமை குறித்து தந்தை செல்வா பிரகடனப் படுத்தியிருந்தார். 1972ம் ஆண்டு இன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் அம்மாவான சிறிமாவோ பண்டாரநாயக்கா அம்மையார் இலங்கையின் அரசியல் யாப்பை ஒரு பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் யாப்பாக மாற்றினார். அதனை எதிர்த்து தன்னுடைய காங்கேசந் துறைப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தந்தை செல்வா உதறித் தள்ளினார். தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை அறிவித்து அதனடிப்படையில் காங்கேசந்துறைத் தொகுதியில் தான் மீளவும் போட்டியிடப் போவதாகவும் அதற்கு சிறிமாவோ பண்டாரநாயக்காவின் சிறிலங்கா அரசால் போட்டியிட்டு வெல்ல முடியுமா என்றும் தந்தை செல்வா சவால் விடுத்தார். சனநாயக பண்புகள் எதனையும் அறிந்திராத சந்திரிக்கா அம்மையாரின் அம்மா சிறிமாவோ அம்மையார் சுமார் மூன்றாண்டுகள் வரை இடைத் தேர்தலை நடாத்தாமல் பின்னர் 1975ம் ஆண்டு காங்கேசந்துறைத் தொகுதியில் இடைத்தேர்தலை நடாத்த முன்வந்தார்.

இடைத்தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டவுடன் தந்தை செல்வா தமிழ் மக்களிடம் இறையாணை ஒன்றைக் கோரினார். தமிழ் மக்களின் சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு சுதந்திர தமிழீழத்திற்கான இறையாணையை தந்தை செல்வா தமிழ் மக்களிடம் கோரி அந்த கோரிக்கையை ஏற்று வரலாறு காணாத வெற்றியை தந்தை செல்வாவுக்கு அளித்தார்கள். இந்தத் தேர்தல் வெற்றி கிடைத்தவுடன் தந்தை செல்வா அவர்கள் தனக்கே உரிய பாணியில் தனது கருத்தை வெளியிட்டார்.

‘என்னுடைய தமிழ் மக்களுக்கும், இந்த நாட்டுக்கும் என்னுடைய கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன். தமிழ்த் தேசம் தன்னுடைய மக்களுக்கு ஏற்கனவே உரித்தான உரிமையை பிரயோகித்து தமது விடுதலையை பெறவேண்டும்’.- என்ற தீர்ப்பினை இத்தேர்தல் ஊடாக தங்களது இறையாணையாக எமது தமிழ் மக்கள் வழங்கியிருக்கின்றார்கள்.

-என்று தந்தை செல்வா அவர்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு சுமார் ஓராண்டுக்கு முன்னராகவே தமிழீழக் கோரிக்கையை பிரகடனப் படுத்தியிருந்தார்.

தமிழீழக் கோரிக்கையை ஜனநாயக முறையில் வெளிப்படுத்திய காங்கேசன் துறை இன்று சிறிலங்கா இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்புப் பிரதேசமாக உள்ளதையும் நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை. (தகவல்-ஆசிரியர் எஸ்.சிவநாயகம்- 1998)

1975ம் ஆண்டு காங்கேசந்துறையிலும் 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டையிலும் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்ட தந்தை செல்வா அவர்கள் 1977ம் ஆண்டு இயற்கையெய்தினார். இலங்கைப் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னரேயே அவர் காலமானது அரசியல் ரீதியில் தமிழ்த் தேசியம் தடம் புரள்வதற்கும் வழி வகுத்தது.

1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் மூலம் தமிழீழ மக்கள் ஓர் உறுதியான-தெளிவான இறையாணையை அளித்தார்கள். சுதந்திரத் தமிழீழத் தனி அரசுக்கான ‘இறையாண்மை ஆணையை அன்றைய தினம் தமிழ் மக்கள் திரு அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு நம்பிக்கையுடன் அளித்தார்கள். எதிர்பாராத விதமாக தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கைப் பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரும்பான்மை உடைய கட்சியாக உருவாகியது.

தமிழ் மக்கள் தமிழீழ கோரிக்கையை திரு அமிர்தலிங்கத்திற்கு வழங்கினார்கள். ஜேஆர் ஜெயவர்த்தனாவோ எதிர்க்கட்சித் தலைவர் பதவியை திரு அமிர்தலிங்கத்துக்கு வழங்கினார்.

‘தளபதி அமிர்தலிங்கம் தமிழீழக் கோரிக்கையை அன்றே தாரை வார்த்து விட்டார்.!’ அரசியல் ரீதியாக தமிழீழ மக்கள் வழங்கிய தமிழீழக் கோரிக்கை நீர்த்துப் போயிற்று தந்தை செல்வா கண்ட கனவும் தமிழ் மக்கள் வழங்கிய சுதந்திரத் தமிழீழத்திற்கான ஆணையும் இளைய தலைமுறையினர் தோள்களில் ஏறின.

நேர்மையான அரசியல் தலைமையும் முறையான இராணுவப்பலமும் இல்லாத காலகட்டத்தில் தமிழீழ மக்களின் விடிவுக்கான போராட்டத்தையும் அதற்காக மகத்தான ஒரு தலைமையுடன் வீறு கொண்ட ஒரு சுதந்திரப் போராட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.

மிகச் சரியாக சொல்லப் போனால் மிதவாதத் தமிழ் அரசியல்வாதிகளுக்குத் தெளிவு வருவதற்கு முன்னாலேயே விடுதலைப்புலிகள் தமது போராட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள் என்பதே உண்மையாகும். இக்கருத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் தர்க்கிக்க விரும்புகிறோம்.1

அன்புக்குரிய நேயர்களே!

நாம் சற்று முன்னர் கூறிய தர்க்கங்களின் அடிப்டையில் தற்போதைய அரசியல் இராணுவச் சூழ்நிலைகளை முன்னிறுத்தி தமிழீழ மக்களின் அண்மைய வவுனியாப் பிpரகடனத்தின் முக்கியத்துவம் குறித்துச் சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகின்றோம்.

சிங்கள அரசுகளுடன் அப்போதைய தமிழ்த் தலைமைகள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் யாவும் சிங்களத் தலைமைகளால் கிழித்தெறியப்பட்டன. தமிழ் மக்களின் கோரிக்கைகளை வன்முறையூடாகவும், இனக்கலவரங்கள் ஊடாகவும், பேரினவாத பெரும்பான்மைப் பலமூடாகவும் நசுக்குகின்ற நடவடிக்கைகளைச் சகல சிங்கள அரசுகளும் வலிந்து மேற்கொண்டன. தமிழ் மக்கள் மீது சிங்கள அரசுகள் வலிந்து யுத்தத்தை திணித்தன.

தொடர்ச்சியான இனஅழிப்பும் சில ஆக்கிரமிப்பும் தமிழர் தாயகத்தில் நடாத்தப்பட்டன. விமானக்குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள் போன்றவற்றால் வயது, பால் வேறுபாடின்றி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். பாரிய இராணுவ நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் தம் சொத்திழந்து, இருப்பிடம் இழந்து இடம் பெயர்ந்தார்கள். பொருளதார உணவு மருந்துத் தடைகளை தமிழர்கள் மீது சிங்கள அரசுகள் விதித்தன. மிகப்பெரிய தமிழின அழிப்புக்களை சிங்கள அரசுகள் தொடர்ந்து நடாத்தி வந்தன.

ஆனால் தமிழர் தேசம் இவற்றையெல்லாம் எதிர்கொண்டு போராடியது. தமிழீழத் தேசியத் தலைவனின் தலைமையின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகளும், தமிழீழ மக்களும் வீறு கொண்டு எழுந்து வெற்றிகளை படைத்தார்கள். இ;ப்போர்க்காலத்தின் ஊடாக தமிழீழ அரசு ஒன்றுக்கான அடிப்படைக் கட்டுமானங்கள் கட்டியெழுப்பப்பட்டுள்ள அதிசயத்தை இன்று உலக நாடுகளும் உணர்ந்து வியக்கின்றன.

சிங்கள அரசுகளின் யுத்தங்களை முறியடித்து பல வெற்றிகளை கண்ட தமிழ்த் தேசியத் தலைமை தாமாகவே முன்வந்து யுத்த நிறுத்தம் செய்தது. சமாதானத்திற்கான கதவுகளை அகத்திறந்தது. சமாதானப்பேச்சு வார்த்தைகள் ஊடாக தமிழீழ மக்களின் வாழ்வியல் பிரச்சனைக்கும், தேசியப் பிரச்சனைக்கும் தீர்வு காண முன் வந்தது.

ஆனால் கடந்த மூன்றரை ஆண்டுகளாக இரண்டு சிங்கள அரசுகளும் தமது மேலாதிக்கப் போக்கையே கடைப்பிடித்து வந்தனவே தவிர உருப்படியான எதையும் இச்சிங்கள அரசுகள் செய்து விடவில்லை. ஆழிப்பேரலை அவலங்கள் கூட இவர்கள் மனதில மனிதாபிமான உணர்வுகளைத் தூ}ண்டி விடவில்லை.

அன்புக்குரிய நேயர்களே!

இந்த போர் நிறுத்த உடன்படிக்கை செய்யப்பட்டதன் அடிப்படை நோக்கம் தான் என்ன? சமாதானப் பேச்சுக்கள் ஊடாக தமிழர்களின் தேசியப்பிரச்சனைக்கும் வாழ்வியல் பிரச்சனைகட்கும் தீர்வினை காண்பதற்காகத்தான் அந்த போர் நிறுத்த உடன்படிக்கை செய்யப்பட்;டது ஆனால் இப்போது போர்நிறுத்த உடன்படிக்கையே உடைந்து போகும் அளவிற்கு சிறிலங்கா அரசு யுத்த நிறுத்த மீறல்களை தொடர்ந்து புரிந்து வருகிறது.

இப்போது நடைபெறுகின்ற பேச்சுவார்த்தைகள் யாவும் யுத்த நிறுத்த உடன்படிக்கை உடையாமல் இருப்பதற்கான பேச்சு வார்த்தைகளே தவிர சமாதானத் தீர்வுக்கான பேச்சு வார்த்தைகள்; அல்ல.!

இன்று சிங்களத்தின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளின் முக்கிய கவனமும் நோக்கமும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலேயே குவிந்திருக்கின்றன. அந்தத் தேர்தலில் எப்படியாவது தமது கட்சி வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்றி விடவேண்டும் என்பதிலேயே அவர்கள் தங்கள் நேரத்தை செலவிடுகின்றதை நாம் காணக்கூடியதாக உள்ளது. தேர்தல் வெற்றியானது மீண்டும் ஒரு யுத்தத்தை ஆரம்பிப்பதனால் கிடைக்குமானால் அதற்கும் அவர்கள் தயார்தான்.

கடந்த இரண்டு தசாப்த காலமாக தமிழ் மக்கள் மீது சிங்கள அரசுகள் மேற்கொண்ட இன அழிப்பு நடவடிக்கைகளைச் சர்வதேச சமூகம் தன்னுடைய மூடிய விழிகளினூடாகத்தான் பார்த்து வந்துள்ளது. தமிழ்த் தேசியப் போராட்டத்தை யுத்தத்தினால் வெல்ல முடியாது என்பதை இந்த உலக நாடுகள் உணர்ந்து கெண்டதன் பின்னர்தான் சிறிலங்கா அரசிற்கு இந்த உலகநாடுகள் சமாதானப் பேச்சு வார்த்தை குறித்த அழுத்தங்களையும் பிரயோகித்தன.

காங்கேசந்துறைப் பிரகடனம், வட்டுக்கோட்டைப் பிரகடனம் வவனியாப் பிரகடனம் போன்றவற்றின் ஊடாக மட்டுமன்றி 1975ம் ஆண்டு இடைத்தேர்தல் ஊடாகவும் 1977ம் ஆண்டு பொதுத்தேர்தல் ஊடாகவும் கடைசியாக 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் ஊடாகவும் தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமை குறித்த தமது அங்கீகரத்தையும் இறையாணையையும் வழங்கி விட்டார்கள்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இம்முறை இலங்கைப் பிரச்சனையில் சர்தேச சமூகம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. முன்னரைப்போல் தூங்குவதைப் போன்ற ‘பாவனையையும்’ இச் சர்வ தேச சமூகம் மேற்கொள்ள முடியாது!. மேற்கௌ;ளவும் கூடாது!!. வவனியா பிரகடனம் ஊடாக தம்முடைய இறைமைக்கான போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தை கோரியுள்ளார்கள்.

சிங்கள பேரினவாத அரசுகள் தமிழ் மக்களின் இறைமைப் போராட்டத்தை வரவேற்கவோ, அல்லது அங்கீகரிக்கவோ போவதில்லை என்பதை யாவும் அறிவர். சிறிலங்காவின் பேரினவாத சட்டதிட்டங்களும் அதற்கேற்ப அமைந்துள்ளன. ஆனால் மரபுவழித் தாயகம், தேசியஇனம், தன்னாட்சி என்கின்ற சர்வதேச கோட்பாடுகளின் அடிப்டையில் தமிழர்கள் நடத்துகின்ற இறைமைக்கான பேராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் சர்வதேச சமூகத்திற்கு உண்டு. அதனை அது செவ்வனே செய்யுமா, செய்ய வேண்டும் என்றே நாமும் நம்புகின்றோம்.

அது அங்ஙனம் ஆகாத பட்சத்தில் தமிழீழ மக்களின் விடுதலைக்கான அடுத்த கட்ட நகர்வுக்கரிய நேரம் நெருங்குவதாகவே நாம் கருதுகின்றோம்.


 


Time is Drawing Near - Tamils & Sovereignty
English translation by Arvalan.

Recently, I have been analyzing the various aspects of the emerging political development is Sri Lanka. Some of these developments are

• Tamil people are in the verge of exercising their right to self determination
• It is not justifiable to suppress an ethnic community in the name of peace negotiation.
• It is not justifiable for the International community to be silent, despite the fact that they understand the reality in Sri Lanka
• Tamil people need to justify their cause in the hearts and minds of the international community

In this respect the conference held in Vavuniya on the 26th of July 2005 and the declaration made at this convention are significant. “We seek recognition by the international community of our basic rights and life of freedom with peace on the basis of our traditional homeland, our nationhood and self rule and struggle for sovereignty” states the declaration made at the convention.

In the current context this is a historic declaration. S.J.V.Chelvanayakam, leader of the Tamil United Liberation Front on 7 February 1975 after winning the by-election for the Kankesanturai Parliamentary seat, held belatedly on 7 February 1975, two years after he had resigned the seat to seek a mandate for Tamil Eelam issued a statement proclaiming the Tamils right to sovereignty. He said "Throughout the ages the Sinhalese and Tamils in the country lived as distinct sovereign people till they were brought under foreign domination. It should be remembered that the Tamils were in the vanguard of the struggle for independence in the full confidence that they also will regain their freedom”.

Political Resolution unanimously adopted at the First National Convention of the Tamil United Liberation Front held at Pannakam (Vaddukoddai Constituency) on 14 May 1976 presided over by Mr. S.J.V. Chelvanayakam, This convention resolved that restoration and reconstitution of the Free, Sovereign, Secular Socialist State of Tamil Eelam based on the right of self determination inherent to every nation has become inevitable in order to safeguard the very existence of the Tamil Nation in this Country.

Kankesanthurai, where the Tamils democratically proclaimed their right to sovereignty falls under the Sri Lankan Army’s High Security Zone (HSZ) [note S. Sivanayagam in a Hot Spring issue of 1998.] S.J.V. Chelvanayakam, who lead the proclamation of Tamil Eelam in 1975 and in 1976 passed away in 1977, a few months before the general elections, which lead to the derailment of Tamil Nationalism politically. In the 1977 General elections, Tamil people voted for the TULF for the emancipation of the Tamil Nation, and the Freedom of Tamil Eelam. Unexpectedly TULF became the second largest party in the Sri Lankan parliament, leading Mr. Amirthalingam to take on the mantle of Leader of the Opposition.

Mr. Amirthalingam surrendered the Tamil Eelam cause; the election mandate overwhelmingly endorsed by the Tamil people was not executed; S.J.V. Chelvanayakam’s dream was forgotten by the TULF leadership; this lead to the younger generation taking responsibility for the achievement of Tamil Eelam.

It should be noted that the Liberation Tigers of Tamil Eelam has launched their long journey towards achieving the dream of Tamil Eelam, amidst dishonest political leadership and lack of military strength. Further the LTTE has launched its struggle before the Tamil politicians diagnosed the reality.

Let me analyse the recent Vavuniya declaration in the context of historical events explained above.

Peace agreements reached between the Tamil leadership and Sinhalese nation were abrogated by the Sinhalese leadership. Non-violent civil disobedience campaigns launched by Tamils were suppressed by successive Sinhalese governments by force. Ethnic riots were organized time to time to suppress the Tamils. War was thrust upon the Tamils, due to continued pogrom and colonization of Tamil land. Aerial bombardment, continued artillery attacks and military offences destructed the Tamil home land. Economic embargo destructed the socio-economic life of the Tamil people.

However, Tamil people fought hard against these hardships. Tamil people and the LTTE under the able leadership of our national leader successfully defeated the Sri Lankan security forces in many battles and laid the foundation for an independent state. International community is admiring the infrastructure laid by the LTTE and the Tamil people for an independent nation.
Tamil leadership unilaterally declared a ceasefire after successfully defeating the Sri Lankan security forces in many battles. This opened the door for peace negotiations and came forward to find solutions for the problems faced by the Tamil nation through peaceful means.

However, the Sinhalese governments have not delivered any substantial peace dividends to the Tamil people. They have continued with their supremacist mentality. They have not even responded compassionately to the Tsunami disaster.
The basic objective of the ceasefire agreement is to resolve the day to day problems faced by the Tamil people and to find a permanent solution to the political problems. However, the ceasefire agreement is in taters due to Sri Lankan government continuing to violate the terms of the agreement.

The peace talks happening at the moment is to save the ceasefire agreement; not to find a peaceful resolution to the ethnic problem.

The two main Sinhalese political parties are busy preparing for the forthcoming Presidential elections. They are spending their efforts and time to win the election to secure power for their party. If the election could be won by starting the war, they are even prepared to do that.

The International community watched passively in the past when the Sri Lankan government unleashed its military machine on the Tamil nation. It is after they realized that the Tamil nation could not be defeated militarily they intervened to pressurize the Sri Lankan government to enter into negotiations.

Tamil people have expressed their desire for a sovereign nation through not only the Kankesanthurai declaration, Vattukottai proclamation and Vavuniya convention; they have also expressed their decision thought the 1975, 1977 and even recently 2004 elections.

The international community is actively involved in the Sri Lankan peace process for the first time in the history of the island. They cannot be passive anymore. Tamil people have sought recognition from the international community for their struggle for sovereignty.

Everyone knows that the Sinhalese government is not going to recognize the Tamils right to sovereignty. Sri Lanka’s constitution has been drafted to serve this purpose. However, International community has a duty to respect the Tamil’s struggle based on the concepts of homeland, nationhood and self rule which are in accordance with the international norms. I believe they will fulfill this moral responsibility.

If this expectation is not fulfilled, then we could consider that the stage will be set for the Tamil people’s liberation.
 

 
Mail Usup- truth is a pathless land -Home