"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Selected Writings by Sanmugam Sabesan
சபேசன்-மெல்பேர்ண்-அவுஸ்திரேலியா
மூன்றாவது மொழிப் போரும் - எதிர்ப்பும்
12 May 2005
"..இப்போது மூன்றாவது மொழிப் போர்.இதில் உள்ள அடிப்படை வித்தியாசங்களை முதலில் கவனிப்போம். முதல் இரண்டு மொழிப் போராட்டங்களும், இந்தித் திணிப்புக்கு எதிராக எழுந்தன. மூன்றாவது மொழிப் போர் ஆங்கில மேலாதிக்கத்திற்கு எதிராக எழுந்துள்ளது. ..இன்னுமொரு முக்கியமான வித்தியாசம் இருக்கின்றது... இப்போதோ, தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் இயக்கங்கள் இந்தப் போராட்டத்திற்கு தலைமையேற்றுள்ளனர்... தமிழ்ப் பேரகராதி ‘தமிழன்’ என்ற சொல்லிற்கு ‘ஆரியன் அல்லாத தென்னாட்டான்’ எனவும், ‘பறையன் இல்லாத இதர சாதியினர்’ என்றும் விளக்கம் தருகின்றது. இதன் அடிப்படையில் பார்த்தால் நீண்ட நெடுங்காலமாகவே தீண்டாத மக்களை தமிழர்கள் என்ற அடையாளத்தில் இருந்து விலக்கி வைக்கின்ற அரசியல் தமிழ் நாட்டில் செயற்பட்டு வந்திருப்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்..."
[see also English Version - Third Language War & the Opposition]
தமிழ் மொழியைக் காக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில், தமிழ் நாட்டில், தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ‘மூன்றாவது மொழிப் போர்’ அறிவிக்கப் பட்டுள்ளது. திராவிடக் கட்சிகள் மாறிமாறி ஆட்சி செய்து வருகின்ற தமிழ் நாட்டிலேயே தமிழைக் காப்பதற்காகப் போர்க்கோலம் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதைத்தான் ‘இந்த மொழிப் போர்’ அறிவிப்பு காட்டி நிற்கின்றது.
ஆனால் இந்த மொழிப் போரை எதிர்த்து பல மட்டங்களில் குரல்கள் எழுந்துள்ளன. ‘இந்த மொழிப் போர் தேவையற்ற ஒன்று’ என்றும், ‘அரசியல் இலாபங்களுக்காக நடாத்தப் படுகின்றது’ என்றும், ‘பல முக்கியமான தலைபோகின்ற பிரச்சனைகள் இருக்கின்ற வேளையில் மொழிப் போர் அவசியந்தானா?’ என்றும் மொழிப் போருக்கு எதிராக எதிர்ப்புத் தோன்றியுள்ளதையும் நாம் காணக் கூடியதாக உள்ளது.
இவ்வாறான காலகட்டத்தில் இப்பிரச்சனைகள் குறித்து ஒரு தெளிவான பார்வையைப் பெறும் பொருட்டுச் சிந்தித்து தர்க்கிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இது ‘மூன்றாவது மொழிப் போர்’ என்று அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதால் இதற்கு முன்னரும் இரண்டு மொழிப் போர்கள் நடைபெற்றிருக்க வேண்டும் என்கின்ற எண்ணம் உருவாகின்றது.ஆனால் இதற்கு முன்னர் ஏழு மொழிப் போராட்டங்கள் நடைபெற்றிருப்பதற்காக வரலாற்று ஆய்வாளர் திரு அ. இராமசாமியை மேற்கோள் காட்டி திரு ரவிக்குமார் அவர்கள் காலச்சுவடு சஞ்சிகையில் ஒரு வரலாற்றுப் பார்வையைத் தந்துள்ளார்.
அவருடைய விரிவான பார்வையை உள்வாங்குவதோடு மட்டுமல்லாது திரு சு.வெங்கடேசன் எழுதிய ‘ஆட்சித் தமிழ் ஓர் வரலாற்றுப் பார்வை’ என்ற நூல் குறித்து பிரபஞ்சன் அவர்கள் தந்த விமர்சனம் பார்வையில் உள்ள கருத்துக்களையும் உள்வாங்கி, இக்கட்டுரையைத் தொகுத்தளிக்க முனைகின்றோம். இதில் வேறு பலரின் பார்வைகளும் உள்ளடங்குகின்றன.
நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று இம் மொழிப் போராட்டத்திற்கு எதிரான காரணங்களைத் தர்க்கிப்பது மட்டுமன்றி இம்மொழிப் போராட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களின் உள் நோக்கங்கள் குறித்தும் தர்க்கிப்பது அவசியமானது என்றே கருதுகின்றோம். அதன் அடிப்படையில் சில விடயங்களைத் தொகுத்துத் தர்க்கிக்க விழைகின்றோம்.
1937ம் ஆண்டு தொடங்கி 1994ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஏழு மொழிப் போர்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. இவற்றில் அதிக தாக்கங்களை ஏற்படுத்திய போராட்டங்களாக இரண்டு போராட்டங்களை தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் மதிப்பிட்டுள்ளது. அவை 1937-1940 காலப்பகுதி போராட்டமும், 1963-1965 காலப்பகுதி போராட்டமும் ஆகும்.
ஆனால் முந்தைய மொழிப் போராட்டங்களுக்கும், தற்போதைய மொழிப் போராட்டத்திற்கும் இடையே உள்ள - வெளிப்படையான -வித்தியாசம் குறித்து நம் கவனம் செலுத்த வேண்டும். முன்னைய மொழிப் போராட்டங்கள் யாவும் மத்திய அரசாலும், மாநில அரசுகளாலும் மேற்கொள்ளப்பட்ட இந்திமொழித் திணிப்புக்கு எதிராக மேற்கொள்ளப் பட்டவையாகும். இம்முறை நடாத்தப் படுகின்ற மொழிப் போராட்டம், ஆங்கில மேலாதிக்கத்திற்கு எதிராக நடாத்தப் படுகின்ற போராட்டமாகும்.
அந்த வகையில் முன்னைய மொழிப் போராட்டங்கள் குறித்த சில வரலாற்றுப் பதிவுகளைக் கவனிப்போம்.இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் நடைபெற்ற விடயங்களையும் கருத்தில் கொள்வது தெளிவான பார்வையைத் தரக்கூடும்.
தமிழ் மொழிக்கான எதிர்ப்பை மகாத்மா காந்தி அவர்களும் காட்டி வந்ததையும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். 1908ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் போராடிச் சிறை சென்ற மகாத்மா காந்தி அச்சிறை வாசத்தின் போது தமிழ் மொழியை கற்றுக் கொண்டார். தென்னாபிரிக்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு தமிழர்கள் செய்த பங்களிப்புக்கு நன்றி பாராட்டும் விதமாகவே தாம் தமிழை கற்றுக் கொண்டதாக காந்தி தெரிவித்தார். (ஆதாரம்-மகாத்மா காந்தி நூல்கள் முதல் தொகுப்பு பக்கம் 558)
ஆனால் காந்தி இந்தியாவிற்குத் திரும்பி வந்ததும் 1918ம் ஆண்டு சென்னைக்கு வந்து இந்தியப் பிரச்சார சபையை தொடக்கி வைத்தார். அது மட்டுமல்ல, 1931ம் ஆண்டு கராச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் நாட்டவரை அவர்கள் இந்தி கற்றுக் கொள்ளாதற்காக காந்தி கடிந்து கொண்டார்.இந்தி கற்றுக் கொள்ளாத தமிழரை காந்தி கடுமையான வார்த்தைகளால் கண்டித்தார். ‘சிறுபான்மையினரின் கொடுங்கோன்மை’ என்று இந்தி தெரியாத தமிழர்களின் செயலை காந்தி வர்ணித்தார்.
பல்கலைக் கழகங்களில் இந்தியை கட்டாயமாக்குவதும், ஆங்கிலத்தை விரும்பினால் படிக்கலாம் என மாற்றுவதும் காந்தியின் திட்டமாக இருந்தது. (ஆதாரம் வுயஅடை சுநஎiஎயடளைஅ in வாந 1930ள) இந்தியாவில் படித்தவர்களின் பொது மொழியாக இந்தி மட்டுமே இருக்க முடியும் என்று 1917ம் ஆண்டிலேயே காந்தி எழுதி வைத்துள்ளார்;.
1920ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தை நீதிக்கட்சி கைப்பற்றியது. இதன்போது சென்னை மாகாணத்தில் இந்தியை பரப்ப முயற்சி மேற்கொண்டதில் நீதிக்கட்சிக்கு முக்கிய பங்கிருந்ததாக ரவிக்குமார் குற்றம் சாட்டுகின்றார்.
காங்கிரஸின் மொழிக்கொள்கை காந்தியால் தீர்மானிக்கப் பட்டது. இதனால்தான் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி ஏற்படுத்தப் பட்ட உடனே இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் அறிவிப்பினை ராஜாஜி செய்தார்.இந்திய தேசியக் காங்கிரஸ் ஓர் அரசியல் இயக்கம் மாத்திரமன்று. அது ஒரு பண்பாட்டு இயக்கமும் கூட. பிரச்சனை என்னவென்றால் காங்கிரசின் பண்பாட்டு மீட்டுருவாக்கம் சமஸ்கிருதத்தை அடிப்டையாகக் கொண்டது.
எனவே வருணாசிரமப் பார்ப்பனிய உயர்சாதித் தன்மையைக் கொண்டதாக உள்ளது.
விடுதலைக்கு முன்னரேயே தங்கள் வர்க்க நலம் கருதி இந்தியை பொதுமொழியாக்குவதற்காக ‘பெல்கொம்’ மகாநாட்டில் 1924ம் ஆண்டு இந்திய காங்கிரஸ் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி தமிழ்நாட்டில் ஓயாத மொழிப் பிரச்சனையைத் தோற்றுவித்தது. தமிழ்நாட்டு ஆட்சி மொழி முதலான அனைத்து பிரச்சனைகளுக்கும் மூலகாரணம் இதுதான். (ஆதாரம்-ஆட்சித்தமிழ் - ஒரு வரலாற்றுப் பார்வை.)
ராஜாஜி 1938ம் ஆண்டு இந்தியைக் கட்டாயமாக்கினார். ‘ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமாக்கினால் இன்னும் 15 ஆண்டுகளில் இந்தியா இந்துநாடாக மாறிவிடும்’ என்று கூறினார் சத்தியமூர்த்தி.இந்தி படித்தால் சமஸ்கிருதம் படிக்க சுலபமாக இருக்கும் என்று தெரிவித்தார் ராஜாஜி. இருந்த போதிலும் காங்கிரஸ்காரர்கள் அனைவரும் இந்தித் திணிப்புக்குத் துணை போய் விடவில்லை. முதல் மொழிப் போரின் தலைவராக இருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் ஒரு காங்கிரஸ்காரர் ஆவார். அவரோடு இந்த போராட்டத்தில் துணை நின்ற காஞ்சி பரவஸ்து ராஜகோபாலாச்சாரியார் என்பவர் ஒரு வைணவப் பிராமணர் ஆவார். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென வலியுறுத்தி, உயிர்த் தியாகம் செய்த சங்கரலிங்கனாரும் ஒரு காங்கிரஸ்காரர் ஆவார்.
முதல் மொழிப் போரில் தந்தை பெரியார் மாபெரும் இந்தி எதிர்ப்புப் போரட்டத்தை எடுத்தார். சமஸ்கிருதம் சார்ந்த வைதிகத்தை எதிர்த்த சைவர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களின் துணை பெரியாருக்கு கிடைத்தது. கட்டாய இந்தித்திணிப்பை தாய்மொழி மீதான தாக்குதலாக மறைமலை அடிகளும், சோமசுந்தர பாரதியாரும் கருதினார்கள். இதனை ஒரு ‘பண்பாட்டுத் தாக்குதலாக’ பெரியார் கருதினார்.
1956ம் ஆண்டு டிசம்பர் 27ம் நாள் தமிழ் ஆட்சிமொழி மசோதா நிறைவேற்றப் பட்டது.
1963-1965ம் ஆண்டுக் காலப்பகுதியில் நடைபெற்ற இரண்டாவது மொழிப் போராட்டமாக கருதப்படுகின்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் காரணமாக ஆட்சியைக் கைப்பற்றும் அளவிற்கு தி.மு.க பயனடைந்தது. இதன் காரணமாக இந்த மொழிப் போராட்டத்திற்கு கூடுதல் சிறப்பு தரப்பட்டது. 1965 ஜனவரி 25 முதல் 1965 மார்ச் 15ம் திகதி வரையில் தொடர்ந்து 50 நாட்கள் நடைபெற்ற அப்போராட்டத்தில் 70பேர் இறந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதில் ஆறுபேர் தீக்குளித்தும் இரண்டுபேர் விஷம் அருந்தியும் உயிர் நீத்தார்கள்.ஒரு மாத காலத்திற்கும் மேலாக தமிழ்நாட்டின் பாதுகாப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டது. முதன் மொழி;ப் போரில் இத்தகைய இழப்புக்கள் ஏற்பட வில்லை. என்றாலும் முதன் மொழிப் போரில்தான் முதன்முதலாக உயிர்த் தியாகம் செய்யப்பட்டது. முதல் களப்பலியாக திரு நடராசன் கைது செய்யப்பட்டு ஒரு கைதியாகவே சாவை தழுவி கொண்டார்.
இப்போது மூன்றாவது மொழிப் போர்.
இதில் உள்ள அடிப்படை வித்தியாசங்களை முதலில் கவனிப்போம். முதல் இரண்டு மொழிப் போராட்டங்களும், இந்தித் திணிப்புக்கு எதிராக எழுந்தன.மூன்றாவது மொழிப் போர் ஆங்கில மேலாதிக்கத்திற்கு எதிராக எழுந்துள்ளது.
முன்னைய போராட்டங்கள் அரசுகளுக்கு எதிராக எழுந்தன. இப்போதைய போராட்டம் குடிமைச் சமூகத்தினை களமாகக் கொண்டுள்ளது.
இவை எல்லாவற்றையும் விட இன்னுமொரு முக்கியமான வித்தியாசம் இருக்கின்றது. முதல் மொழிப் போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்திய நாவலர் சோமசுந்தர பாரதியாரோ. இ.ஆ.பெ விசுவநாதமோ, அடிநிலை மக்களின் பிரதிநிதிகள் அல்லர். அதே போன்று இரண்டாவது மொழிப் போராட்டத்திலும் அடித்தள மக்களின் பிரதிநிதிகள் தலைமையேற்றதாகக் கூறமுடியாது.
ஆனல் இப்போதோ, தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் இயக்கங்கள் இந்தப் போராட்டத்திற்கு தலைமையேற்றுள்ளனர்.
இந்தப் புதிய தலைமைத்துவம் குறித்துத் தர்க்கிப்பதற்கு பதிலாக ‘தமிழன்’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்பதைப் பார்க்க விழைகின்றோம்.தமிழ்ப் பேரகராதி ‘தமிழன்’ என்ற சொல்லிற்கு ‘ஆரியன் அல்லாத தென்னாட்டான்’ எனவும், ‘பறையன் இல்லாத இதர சாதியினர்’ என்றும் விளக்கம் தருகின்றது. இதன் அடிப்படையில் பார்த்தால் நீண்ட நெடுங்காலமாகவே தீண்டாத மக்களை தமிழர்கள் என்ற அடையாளத்தில் இருந்து விலக்கி வைக்கின்ற அரசியல் தமிழ் நாட்டில் செயற்பட்டு வந்திருப்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.
ஆகவேதான் இப்போது தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தமிழில் பேசுவதைக் கேலி செய்கின்றார்கள். ஜீனியர் விகடன், குமுதம் ரிப்போட்டர் போன்ற தமிழ் பத்திரிகைகளும் கேலி செய்து எழுதுகின்றன.
‘மூன்றாவது மொழிப் போரை ஆரம்பித்திருப்பது அரசியல் ஆதாயத்திற்காக என்று குற்றம் சாட்டுபவர்கள் தான் உண்மையில் அரசியல் லாபத்தை குறி வைத்திருப்பதை நாம் பார்க்க கூடியதாக உள்ளது. தவிரவும் ‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் உள்ள பழ. நெடுமாறன், அய்யா, பேராசிரியர் சுப. வீரபாண்டியன் போன்றோர் வாக்கு வேட்டையாடும் அரசியல்வாதிகள் அல்லர்.
‘தமிழ்த் தேசியம்’ என்பது ஒரு ‘பாசிச’ சிந்தனை என்றும் சில ‘தமிழர்கள்’ குற்றம் சாட்டுகின்றார்கள். தாய்மொழியில் சிந்திப்பது ‘பாசிச’ சிந்தனை என்ற கூற்றை உலகத்திலேயே தமிழ் நாட்டில்தான் கேட்க முடியும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழ் தேவையில்லை. அவர்களுக்கு முக்கியமான பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை முதலில் அவர்களின் தலைவர்கள் கவனிக்க வேண்டும். என்று சிலர் முழக்கமிடுவதையும் நாம் பார்க்கின்றோம். இந்தக்கருத்தை நாம் இரண்டு விதமாகத் தர்க்கிக்க விழைகின்றோம்.
ஒன்று: இந்தக் கூற்றின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தலையான பிரச்சனைகள் இருப்பதை இந்த உயர்த்தப் பட்டவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள். நன்றி.
இரண்டு: தாழ்த்தப்பட்டவனுக்கு தாய்மொழி தேவையில்லையா? ஓர் இனம் இந்த மண்ணுக்கு உரியவர்கள் என்பதற்கு மொழியே சான்று. அதனையும் இழந்தால் அவர்கள் அடையாளமும் இழந்து அகதிகளாகவே வாழும் நிலை ஏற்பட்டு விடும். தமிழ் பேரகராதி தமிழன் என்ற சொல்லுக்கு தந்துள்ள அர்த்தத்தை நாம் எமது நேயர்களுக்கு மீண்டும் ஞாபகமூட்ட விரும்புகின்றோம்.
‘மூன்றாவது மொழிப் போர்’ என்று சொல்லும்போது அதிலே ஒரு தொடர்ச்சியைக் காண்கின்றோம். இதற்கு முன்பு நடந்த போராட்டங்களின் தொடர்ச்சியாகவே இப்போதைய போராட்டம் முன்னெடுக்கப் படுகின்றது என்ற அர்த்தம் அதில் தெரிகின்றது.ஒரு போராட்டத்தின் தலைமை என்பது பதவி மற்றும் பொறுப்பு சார்ந்தது அல்ல. இன்றைய மொழிப் போருக்கு தாழ்த்தப் பட்டவர்கள் தலைமை ஏற்றுள்ளார்கள் என்பதானது திராவிடக் கட்சிகளின் அரசியலை மறுபடியும் நடாத்திக் காட்டுவதற்காக அல்ல. வடிவத்திலும், உள்ளடக்கத்திலும் தான் வேறுபடுவது எப்படி என்பதைத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் தெளிவு படுத்திட வேண்டும். என்று ரவிக்குமார் வலியுறுத்துவதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம்.
மூன்றாவது மொழிப் போர் தற்சமயம் தமிழ் நாட்டுக்கும், அங்கு வாழும் தமிழர்களுக்கும் மிகத்தேவையான, அத்தியாவசியமான ஒன்று! நல்லது நடக்கட்டும்! அது விரைவில் நடக்கட்டும்.
அன்புக்குரிய நேயர்களே!
இந்தக் கட்டுரைக்கு காலச்சுவடு, கணையாழி உயிர்மை, தீராநதி போன்ற சஞ்சிகைகள் மிகவும் பயன்பட்டன. முக்கியமாக திருவாளர்கள் ரவிக்குமார் - பிரபஞ்சன் - சு.வெங்கடேசன் ஆகியோரின் சொல்லாக்கங்களும், சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்;பட்டுள்ளன. அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.
Third Language War & the Opposition - English version of a Broadcast in Tamil by Sanmugam Sabesan, on “Tamil Voice”, Melbourne Australia on 9 May 2005.
The Tamil Protection Movement (TPM) has launched the “Third Tamil Language War" in Tamil Nadu with the objective of protecting the Tamil language. It is worth noting that this declaration has been made in a state which has been ruled by the Dravidian parties for several decades. However, some parties have dissented from this declaration.
"This Language war is unnecessary", "Language war has been launched to serve political ends" and "this is not the priority in the current context" are some of the criticisms levelled against the Tamil Protection Movement. This article aims to analyse some of the issues, the motives of those who criticise and attempts to present the reader with an oversight.
The “Third Language War” pronouncement gives the impression that there have been two previous language wars. However, between 1937 and 1994 there have been seven Language Wars in Tamil Nadu. The Tamil Protection Movement has identified two of these wars as having significant impact in the protection of Tamil language. They are the Language Wars in the 1937-1940 periods and 1963-1965 periods.
We need to concentrate on the difference between the previous Language wars and the current Language war. The previous Language wars were against the Central and State government’s endeavours to impose Hindi language in Tamil Nadu. The current Language war is against the domination of English language.
In analyzing the previous two wars we need to consider the events that happened prior to India gaining independence. We should also note that Mahatma Gandhi himself had expressed anti Tamil sentiments. Mahatma Gandhi learned Tamil whilst being jailed in South Africa in 1908. He stated that he learned Tamil in appreciation of the contribution Tamils made to the satyagraha in that country. However, in his return to India in 1918 he inaugurated the Hindi Propaganda Council in Chennai. Further during the 1931 Congress held in Karachi he reprimanded the delegates from Tamil Nadu for not learning Hindi, labeling them as “oppressing minorities”. Gandhi had a plan to make Hindi as a compulsory language at Universities and English as an optional language. In 1917, Gandhi stated that Hindi must be the common language of the literates in India.
The Justice Party won the elections for the Chennai province in 1920. Mr. Ravikumar accuses the Justice Party for its attempts to superimpose Hindi in the province. Congress’s language policy was predetermined by Gandhi, which lead to Rajaji making Hindi as a compulsory subject as soon as the party came to power.
Indian National Congress was not only a political movement; but a cultural movement as well. Congress’s cultural revitalization was centered on Sanskrit and was based on the hegemony of the Brahmins. The Indian National Congress created a never ending Language war in Tamil Nadu by proclaiming Hindi as a language even before the independence in 1924. This is the core reason behind all the Language related problems in Tamil Nadu.
Rajaji made Hindi as a compulsory language in classes 6-9 whilst Satyamoorthy proclaimed India will become a Hindu state in the next 15 years. Rajaji also stated that it will be easy to learn Sanskrit if one learns Hindi. However there were some Congress Party members who were against Hindi. Navalar Somasundara Pulavar, the leader of the first Language war is a congress party stalwart. Sangaralingam who sacrificed his life demanding the state be renamed as Tamil Nadu is also a Congress party stalwart.
Periyar launched the first Language war as an Anti Hindi campaign. He was ably supported by the Saiva scholars who were against the Sanskrit based vaishnava religion. Maraimalai Adikal and Somasundara Barathiyar noted the compulsory education of Hindi language as an attack on the mother tongue. Periyar also considered this as a “cultural assault”. Tamil was proclaimed as a state language on the 27th of December 1956.
The second Language war, during 1963-65, was also based on the anti Hindi slogan. The intensity of the campaign enabled DMK to capture power in the state, increasing the significance of the second Language war. The Second Language war lasted 50 days from 25th January 1965 to 15th March 1965, where 70 people sacrificed their lives. Military took over the security of Tamil Nadu during this period. Even though there was no significant loss of lives during the First Language war, the first martyr to sacrifice his life was Mr.Nadarajan who died in custody during this period.Let us have a look at the significant differences in the Third Language war. The first two Language wars were against the imposition of Hindi language, whilst the Third Language war is against the hegemony of the English language.
The first two wars were against the state, whilst the current Language war is fought in the civil community. However, the most significant difference is the fact that the current Language war is lead by political movements representing the oppressed communities.
The first Language war was lead by Navalar Somasundara Barathiyar and Vishvanatham who did not have any political affiliations and the second Language war was also led by leaders who did not belong to any political affiliations.
Rather than arguing about this new leadership, let us analyse the definition of a “Tamilan”. The Great Tamil dictionary defines “Tamilan” as a person who is not an Aryan who resides in southern India and who belongs to a caste which is not parayar. Based on his definition it is clear that people who belong to the untouchable castes have been deprived on their Tamil identity by people with vested political interests for a very long time.
That is the reason the legislators who speak in Tamil at the legislature have been ridiculed by some people, and journals like the Junior Vikatan and Kumudam reporter.
The very people who criticise the Third Language War as political opportunism are the people who are endeavouring to derive political mileage out of this. The record of Tamil Protection Movement leaders like P. Nedumaran and Professor Suba Veera Panndiyan is proof enough that they are not engaged in vote gathering rhetoric for political gain but have been concerned to nurture and consolidate Tamil national identity
Some so called “Tamils” are calling the concept of Tamil Nationalism as Fascism. It should be noted that it is only in Tamil Nadu that people call the right to speak in their mother tongue as Fascism.
Note by tamilnation.org Eamon de Valera On Language & the Irish Nation, 1943 " (Gaelic) is for us what no other language can be. It is our very own. It is more than a symbol, it is an essential part of our nationhood. It has been moulded by the thought of a hundred generations of our forebearers. In it is stored the accumulated experience of a people - our people who, even before Christianity was brought to them, were already cultured and living in a well ordered society. The Irish language spoken in Ireland today is the direct descendant without break of the language our ancestors spoke in those far off days. A vessel for three thousand years of our history, the language is for us precious beyond measure. As the bearer to us of a philosophy, ..rich in practical wisdom, the language today is worth far too much to dream of letting it go.
To part with it would be to abandon a great part of ourselves, to loose the key to our past, to cut away the roots from the tree. With the language gone we could never again aspire to being more than half a nation..."Those against the Third Language war are arguing that the oppressed people do not need Tamil; they have more pressing needs, which is what their leaders should address. We could analyse this statement in two ways.
Firstly the above statement is an admission by the higher class that the oppressed people are facing pressing needs. That is welcome!Secondly, does this mean that an oppressed people do not need a mother tongue? Language is the evidence which links a people to their homeland. If they lose their language then they will lose their identity and become destitute.
When we say the Third Language war, we see continuity - a continuation of the previous two Language wars. We agree with Ravikumar when he says that the Tamil Protection Movement should make clear1. that the leadership of a struggle is not a position or status and
2. that the fact that political leaders from the oppressed communities are leading the current Language war does not mean that they seek to follow in the 'path of political opportunism' that the Dravidian parties trod in the past.
The Tamil Protection Movement should clearly state how they differ in this regard.
The Third Language War is a necessity for Tamil Nadu and the people who live there. Let us hope for the best and hope that that best will happen sooner rather than later.
Acknowledgements:
Kalachuvadu, Kanayali, Uyirmai, Theeranathi, Mr. Ravikumar, Prabanjan, S.Venkadesan.