"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Selected Writings by Sanmugam Sabesan
மாவீரர் நாள் உரை 2004 - ஒரு பார்வை
27 November 2004
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் திருப்பு முனைகள் பல நிறைந்த காலப்பகுதியான இவ்வேளையில் தமிழீழ தேசியத்தலைவர் மேன்மை தங்கிய பிரபாகரன் அவர்களின் மாவீரர் தின உரையானது என்ன செய்தியை தரப்போகின்றது என்ற எதிர்பார்ப்பு உலகலாவிய வகையில் மேலோங்கி இருந்தது. தேசியத்தலைவரின் மாவீரர் தின உரையை தமிழீழமும் சிறிலங்காவும் மட்டுமல் உலகநாடுகளும் உன்னிப்பாக செவிமடுத்தன.
உலகலாவிய வகையில் புலம் பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களும் தத்தமது தேசங்களின் நேர வித்தியாசத்தையும் பொருட்படுத்தாத தமது தலைவரின் உரையை மிகுந்த ஆர்வத்துடன் செவி மடுத்தார்கள்.
தமிழீழ தேசியத்தலைவரின் மாவீரர் தின உரை வெளிவந்த உடனேயே வழமைபோல் பல அரசியல் தலைவர்களும் அரசியல் ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் தலைவரின் கருத்துக்களையும் ஆய்வுகளையும் தெரிவித்து வருகின்றார்கள். நாமும் எமது வழமையைப் பேணி எமது பார்வையைத் தருகின்றோம்.
மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த எமது வீர விடுதலைப் போராட்டத்தில் எமது மாவீரர்கள் புரிந்த மகத்தான தியாகங்கள் காரணமாக ஒப்பற்ற போரியற் சாதனைகளை நாம் நிலைநாட்டினோம்.உலகமே வியக்கும் வகையிற் போர் அரங்குகளில் எதிரிப் படைகளை விரட்டியடித்து வெற்றிகளை ஈட்டினோம். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஆளாகியிருந்த எமது தாயக மண்ணின் பெரும்பகுதியை மீட்டெடுத்து அங்கெல்லாம் எமது நிர்வாக ஆட்சியதிகாரத்தை நிறுவினோம்.
உலக நாடுகளின் உதவியுடன் கட்டியெழுப்பப்பட்ட சிறிலங்கா அரசினது ஆயுத படைகளுக்கு ஈடாக படை வலுச் சமநிலையை நிலைநாட்டினோம். தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சர்வதேச மயப்படுத்திää உலகத்தின் கவனத்தை எம்மீது திருப்பினோம்.
என்று மாவீரர்களின் தியாகத்தையும் பெருமையையும் போற்றித் தனது உரையைத் தொடர்ந்த தலைவரின் உரையின் சாராம்சத்தை நாம்1.கடந்த கால வரலாறு
2. தற்போதைய நிலைமை
3. பொதுத்தேர்தல் தந்த அங்கீகாரம்
4. பொதுத்தேர்தல் ஏற்படுத்திய பிரிவு
5. இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பின் அவசியம்.
6. கட்டமைப்புக் குறித்து விவாதிக்க இணக்கம்.
7. சந்திரிக்கா உட்பட்ட சிங்களத் தலைமைகளின் நிலைப்பாடு.
8. தேசியத் தலைவரின் மூன்று வேண்டுகோள்கள்.
9. அடுத்த கட்ட நடவடிக்கை.என்ற ஒன்பது பகுதிகளாகப் பிரித்துத் தர்க்கிக்க விழைகின்றோம். தமிழீழத் தேசியத்தவைரின் உரையை மேற்கூறிய கருத்துக்கள் ரீதியாக வகைப்படுத்தி தொகுத்து எமது பர்வையைத் தருகின்றோம்.
1. கடந்தகால நிகழ்வுகள்
போர்நிறுத்தம் ஏற்பட்டதிலிருந்து இன்றுவரை நடந்ததென்ன? தலைவர் தன்னுடைய உரையில் தெரிவித்த விடயங்களை ஒன்றாக தொகுத்துப் பார்ப்போம்.
மூன்று தசாப்தங்களாக முடிவின்றித் தொடர்ந்த ஆயுதப்போருக்கு நாம் ஓய்வு கொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் அமைதி காத்த இக்கால விரிப்பில்ää சமாதான வழிமூலமாக தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண எம்மாலான சகல முயற்சிகளையும் நேர்மையுடனும்ää உறுதிப்பாட்டுடனும் நாம் மேற்கொண்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நோர்வே நாட்டை நடுநிலையாளராக ஏற்று அந்நாட்டின் அனுசரணையுடன் உலக நாடுகள் சிலவற்றின் தலைநகர்களில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுக்களில் எமது விடுதலை இயக்கம் பங்குபற்றியது.
ஆறு மாதங்கள் வரை நீடித்த ஆறு சுற்றுப்பேச்சுக்களும் அர்த்தமற்றதாகப் பயன் அற்றுப் போயின. நெருக்கடி நிலையைத் தணித்து இயல்பு நிலையைத் தோற்றுவித்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தவும்ää அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கவும் போரினாற் பேரழிவுக்கு ஆளான கட்டுமாணங்களைப் புனர் நிர்மாணம் செய்யவும் நிறுவப்பட்ட உபகுழுக்கள் செயலிழந்து செத்துப்போயின. இவை ஒருபுறமிருக்கää சிறிலங்கா அரசானது எமது விடுதலை இயக்கத்தை ஓரங்கட்டிவிட்டு வாசிங்டனில் நிகழ்ந்த உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டிற் பங்குபற்றியது. இதனால் சமநிலைப் பங்காளி என்ற தகைமையிலிருந்து நாம் ஒதுக்கப்பட்டோம்.
நீண்டகாலப் போரினாலே பாதிக்கப்பட்ட எமது மக்களுக்குப் புனர்வாழ்வு பெற்றுக் கொடுக்கவும் சிதைந்து போன தமிழர் தேசத்தை மீள்நிhணயம் செய்யவும் கணிசமான அதிகாரத்துடன் ஓர் இடைக்கால நிர்வாகபக்க கட்டமைப்பு அவசியமென்பதை வலியுறுத்தினோம்.
இந்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபைத்திட்டத்தை சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி நாம் ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததுடன் ஊடகங்கள் வாயிலாகப் பொதுசன அரங்கிலும் பகிரங்கப்படுத்தினோம்.
நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைத் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கம் நிராகரிக்கவில்லை. நாம் சமர்ப்பித்த வரைவுகளைப் பார்க்க்pலும் எமது திட்டம் வித்தியாசமானது என்று குறிப்பிட்ட அரசாங்கம் எமது யோசனைகளின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பிக்க இணங்கியது. ஆனால் அதே சமயம் எமது இடைக்கால நிர்வாகத் திட்டத்தை கடுமையாக விமர்சித்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி அது தமிழீழ தனியரசுக்கு இடைப்பட்ட அத்திவாரமெனக் கண்டித்தது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவியும் ஜனாதிபதியுமான சந்திரிக்கா குமாரதுங்கா ஒருபடி மேலே சென்று அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.எமது இடைக்கால நிர்வாகத்திட்டம் அறிவிக்கப்பட்ட நான்காவது நாளே சந்திரிக்கா அம்மையார் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை தென்னிலங்கை அரசியலை பெரும் நெருக்கடிக்குள்ளே தள்ளியது. பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுக்களை ஜனாதிபதி சந்திரிக்கா பறித்தெடுத்து கொண்டதால் ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சிப்பீடம் அதிகார வலுவிழந்து ஆட்டம் கண்டது. இதனைத் தொடர்ந்து மூன்று மாதத்துக்குள் ஜனாதிபதி சந்திரிக்காவினாற் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் விளைவாக ரணில் அரசாங்கம் கலைந்தது.
எதிர்பார்ப்புக்களையெல்லாம் தூக்கியெறிந்துää தமிழீழ மக்களுக்கு ஏமாற்றத்தையுமää; அவநம்பிக்கையையும் தந்த கடந்த கால நிகழ்வுகள் குறித்து நிதர்சனத்தை இவ்வாறு தேசியத்தலைவர் விளக்கியிருந்தார். கடந்த கால நிகழ்வுகள் தமிழீழ மக்களின் நம்பிக்கையை நாசமாக்கியதைத் தெளிவு படுத்திய தலைவர் தற்போதைய நிலைமை குறித்தும் தனது கருத்தை தெரிவிக்கின்றார். தற்போதைய நிலைமைகளாவது நம்பிக்கைகளைத் தரவல்லதாக உள்ளதா? இதோ தலைவரின் கருத்துக்கள்:
2. தற்போதைய நிலைமை
தென்னிலங்கையில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்துää அரசியலதிகாரம் இனவாத சக்திகளிடம் சென்றடைந்தபோதும் நாம் தொடர்ந்தும் அமைதி பேணி சமாதான முயற்சிகளை முன்னெடுக்க விரும்பினோம். இடைக்கால தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பிக்க நாம் தயாரென்பதை நோர்வே அனுசரணையாளர்கள் மூலமாகச் சந்திரிக்காவின் கூட்டணி அரசாங்கத்திற்கு அறிவித்தோம். அவ்வேளையில்தான் அரச கூட்டணிக்குள் குழப்பமும் கொள்கை முரண்பாடும் தலைதூக்கின.
அரச கூட்டணிக்குள் ஆதிக்க வலுவுடைய கட்சியான ஜேவிபி சமாதானப்பேச்சுக்கள் வாயிலாக தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமையும்ää ஆட்சியதிகாரமும் வழங்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தது. மூன்றாந் தரப்பு நடுநிலையாளராகச் செயற்பட்ட நோர்வே அரசையும் வன்மையாக கண்டித்தது.நாம் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை முற்று முழுதாக நிராகரித்தது. எமது திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்கள் ஆரம்பமானால் அரச கூட்டணியிலிருந்து வெளியேறி விடப்போவதாகவும் மிரட்டியது. சமாதானப் பேச்சுக்கும் சமரச முயற்சிக்கும் எதிரான ஜேவிபியினரின் தீவிரவாத கடும்போக்கு சந்திரிக்கா அம்மையாருக்கு பெரும் சவாலாக அமைந்தது. இந்நிலையே தொடர்ந்தும் நீடிக்கிறது.
இவ்வாறு கடந்தகல நிகழ்வுகள் தந்த ஏமாற்றமும்ää அவநம்பிக்கையும் நிகழ்காலத்திலும் தொடர்ந்து நீடித்து வருவதைää தமிழீழ தேசிய தலைவர் தெட்டத்தெளிவாக விளக்கியிருந்தார்.
அதே வேளைää கடந்த காலத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய விடயத்தை தலைவர் அடிக்கோடிட்டுச் சுட்டிக்காட்டுகின்றார். அது இந்த ஆண்டு முற்பகுதியில் இடம்பெற்ற பொதுத் தேர்தலாகும்.
அது குறித்துத் தமிழீழத் தேசியத் தலைவர் தன்னுடைய கருத்தை இவ்வாறு கூறுகின்றார்.
3. பொதுத்தேர்தல் தந்த அங்கீகாரம்
பொதுசனத் தீர்ப்பின் வாயிலாக தென்னலங்கை அரசியலரங்கிற் சிங்களப் பௌத்த மேலாண்மைவாதம் வலுப்பெற்ற அதேசமயம் தமிழரின் தாயகமான வடகிழக்கில் ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாகத் தமிழ்த் தேசியம் எழுச்சி பெற்றது. எமது விடுதலை இயக்கத்தின் அரசியல் இலட்சியத்திற்கு மக்கள் சக்தியின் ஏகோபித்த ஆதரவு கிட்டியது.தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற வெகுசன அங்கீகாரமும் இடமும் விடுதலை இயக்கத்திற்கு வழங்கப்பட்டது. எமது இயக்கம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்திற்கு எமது மக்களின் மனுவும் கிடைத்தது. விடுதலைப் புலிகளின் இலட்சியக் குரலாக அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சனநாயக சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருபத்திரண்டு ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் இலட்சியத்திற்கு மக்கள் சக்தியின் ஏகோபித்த ஆதரவும்ää தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற அங்கீகாரமும் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை திட்டத்திற்கு தமிழ் மக்களின் மனுவும் கிடைத்ததை தலைவர் இவ்வாறு அடிக்கோடிட்டுச் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த அடிப்படையான - அதேவேளை மிக வெளிப்படையான விடயங்களைத் தேசியத்தலைவர் சுட்டிக்காட்டியதற்குää தகுந்த காரணம் இருக்கின்றது. எல்லோரும் அறிந்து கொண்டää புரிந்து கொண்ட விடயங்களை தலைவர் சுட்டிக்காட்டுவதன் காரணம் என்ன?
அதனை - அந்தக் காரணத்தை - கீழ்வரும் வார்த்தைகள் மூலம் தலைவர் தெளிவு படுத்துகின்றார். தமிழீழ மக்களின் ஆதரவையும் அங்கீகாரத்தையும் மட்டும் தானா இந்தத் தேர்தல் பெற்றுத்தந்தது.? இல்லை - இந்தப் பொதுத்தேர்தல் இன்னுமொரு முக்கிய விடயத்தை
- மிகமிக முக்கிய விடயத்தை மறைமுகமாகத் தெரிவித்து நிற்கின்றது. அதனை எமது தேசியத்தலைவர் இவ்வாறு வெளிப்படையாகத் தெளிவு படுத்துகின்றார்.
4. பொதுத்தேர்தல் ஏற்படுத்திய பிரிவு
பொதுத்தேர்தல் சிங்கள தமிழ்த் தேசங்கள் மத்தியிலான இன முரண்பாட்டினை மேலும் கூர்மையடையச் செய்தது. சமாதானத்திற்கும்ää இன இணக்கப்பாட்டிற்கும் விரோதமான சிங்களபௌத்த பேரினவாத சக்திகள் என்றுமில்லாதவாறு தென்னிலங்கை அரசியல் அரங்கில் மேலாண்மை வகிக்க இப்பொதுத் தேர்தல் வழிவகுத்தது.
இப்பொதுத் தேர்தலானது என்றுமில்லாதவாறு தமிழ் சிங்கள இனங்களை வேறுபட்ட இருதேசங்களாகப் பிளவுபடுத்தியது. கருத்தாலும் உணர்வாலும் இலட்சியத்தாலும் வேறுபட்டுää முரண்பட்டு நிற்கும் இரு மக்கள் சமூகங்களாகப் பிரிவுறச் செய்தது.
ஆகவே இலங்கைத்தீவில் வேறுபட்ட இரண்டு தேசங்கள் இருப்பதை இப்பொதுத்தேர்தல் காட்டி நிற்கின்றது. அந்த இரண்டு தேசங்கள் தமக்கிடையே பிளவு பட்டு நிற்பதையும் இந்த பொதுத்தேர்தல் தெளிவு படுத்தி நிற்கின்றது. அது மட்டுமல்லää இந்த இரண்டு தேசத்து மக்களும் - கருத்தாலும்ää உணர்வாலும்ää இலட்சியத்தாலும் வேறுபட்டு மாறுபட்டு முரண்பட்டு நிற்கும் இரண்டு மக்கள் சமூகங்களாகப் பிளவுபட்டு நிற்பதையும் இந்தப் பொதுத்தேர்தல் மறைமுகமாக-ஆனால் தெளிவாகக் காட்டிவிட்டது.- இந்த முக்கிய விடயத்தைதான் தமிழீழ தேசியத்தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்தை சற்று விரிவாகத் தர்க்கித்துப் பார்ப்போம். தொடர்ந்து நடைபெற்ற போர்களினால் இலங்கைத்தீவு இரண்டு தேசங்களாகப் பிரிவுற்று இருப்பதைத்தான் இவ்வளவு காலமும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வந்துள்ளார்கள். ஆனல் ஆயுதப் போராட்டம் மட்டுமல்லää ஜனநாயக வழிமுறை கூடää இலங்கைத்தீவில் வேறுபட்ட முரண்பட்ட இரண்டு தேசங்கள்-இனங்கள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளதை இங்கே தலைவர் தெளிவுபடுத்துகிறார்.ஆகவே தமிழரின் தேசியப்பிரச்சனையை எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் அவை இலங்கைத்தீவில் இரண்டு தேசங்கள்ää இரண்டு தேசிய இனங்கள் தனித்து பிரிவுற்று இயங்குவதையே புலனாக்குகின்றன. ஆகவே போர்க்காலத்திலும் சரிää சமாதானத்திற்கான காலத்திலும் சரிää இலங்கைத்தீவில் இரண்டு தேசங்கள் இரண்டு தேசிய இனங்கள் இருப்பதை அவற்றின் இருப்பை இப்பொதுத்தேர்தல் சுட்டிக்காட்டி விட்டது. இது- இந்தப் பொதுத்தேர்தல் ஜனநாயக ரீதியாக ஏற்படுத்திய பிரிவு ஆகும். இந்த மிக முக்கியமான விடயத்தை தமிழீழத் தேசியத்தலைவர் தன்னுடைய கூர்மையான சிந்தனையூடாக தெளிவாக சுட்டி காட்டியுள்ளார்.
இந்த இரண்டு தேசங்களின் வேறுபட்ட இருப்பை இவ்வாறு விளக்கிய தலைவர்ää அதில் ஒரு தேசத்திற்கு தற்போதைக்கு தேவையான மிக முக்கியமான அத்தியாவசிய - அடிப்படைத் தேவை ஒன்றை கீழ்வருமாறு வலியுறுத்துகிறார்.
5. இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பின் அவசியம்
காலதாமதமின்றி இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு தமிழர் தாயகத்தில் அமையப் பெறவேண்டுமென நாம் வலியுறுத்துவதற்கு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. நீண்ட காலமாகத் தொடர்ந்த கொடிய போரினாற் பாதிக்கப்பட்ட எமது மக்கள் மிகவும் அவசரமான வாழ்நிலைத் தேவைகளையும் பாரிய மனிதாபிமானப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு நிற்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் அகதிமுகாம்களில் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.போரினாற் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும்ää வழங்குவதற்கு உதவி வழங்கும் நாடுகள் பெருந்தொகையில் நிதி ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளன. துன்பப்படும் எமது மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் வழங்கவும் அழிவுற்ற தமிழர் தேசத்தை மீளக்கட்டியமைக்கவும் தகுந்த அதிகாரங்களுடன் வடகிழக்கில் ஓர் இடைக்கால நிர்வாக கட்டமைப்பு நிறுவப்படுதல் அவசியம்.
போர்நிறுத்தம் செய்து மூன்று ஆண்டு காலமாக அமைதி பேணி ஆறு மாதங்கள்வரை பேச்சுக்களை நடத்தியபோதும் சமாதானத்தின் பலாபலன்களை; இன்னும் எமது மக்களைச் சென்றடையவில்லை.
தாங்கமுடியாத அளவிற்கு அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளின் சுமை எமது மக்களை நசுக்கி வருகிறது. முதலில் உடனடியாகத் தமது அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு தீர்வுகிட்ட வேண்டும் என்பதையே எமது மக்கள் ஆவலாக எதிர்பார்த்து நிற்கின்றார்கள். எனவே தான் நம் முன்வைத்த யோசகைளின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பித்து வெகுசீக்க்pரமாக இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை நிறுவ வேண்டுமென நாம் விரும்புகின்றோம்.
சிறிலங்கா அரசுகளின் ஒடுக்குமுறையாலும் அரச பயங்கரவாதப் போர்களினாலும்ää இரண்டு தசாப்தகாலத்திற்கும் மேலாக மிகுந்த இன்னல் நிறைந்த வாழ்வை அனுபவித்து வருகி;ற தமிழீழ மக்கள் இயல்பு வாழ்க்கை முறைக்கு திரும்பி தமது வாழ்க்கையையும் தேசத்தையும் மீளக் கட்டியமைப்பதற்காக வாய்ப்பை எதிர்பார்த்து ஏங்கி நிற்கிறார்கள். இந்தச் சமாதானத்திற்கான பலனை அவர்கள் இன்னும் அடையவில்லை. தமிழ் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புவதும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்ட வேண்டும் என்பதுவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி இந்த முக்கிய விடயமானது தமிழ் மக்களதுää அடிப்படை வாழ்வியல் உரிமையும் கூட.சமாதானப் பேச்சுக்களின் மூலம்ää தமிழ்மக்களின் அவசரமான வாழ்நிலைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - என்றும் அதன்பின்னர் தமிழீழ மக்களின் தேசியப்பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்;வை காணவேண்டும் என்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்ந்து கூறி வந்துள்ளார்கள்.
ஆனால் கடந்த இரண்டு தசாப்த காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநர்த்தங்களைத் தீர்க்க முடியாத சந்திரிக்கா அம்மையார் கடந்த ஐந்து தசாப்த காலத் தேசியப் பிரச்சனைகளைத் தீர்ப்பது போல் போக்கு காட்டுகின்றார் என்பதானது வேடிக்கையாக மட்டுமல்ல வேதனையாகவும் உள்ளது.
தவிரவும் தேசியத்தலைவர் கூறியது போல் இந்த நிர்வாகக் கட்டமைப்பு ஓர் இடைக்காலத்திற்கான நிர்வாகக் கட்டமைப்பு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.தமிழீழ மக்களின் தேசியப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு கிட்டுவதற்கு முதல் அவர்களுடைய பாரிய மனிதாபிமான அன்றாடப்பிரச்சனைகளுக்கு ஓர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பின் ஊடாக உடனடித் தீர்வை காணவேண்டும். இந்த இடைக்கால நிர்வாகக் கட்மைப்புக்குரிய திட்டம் 'ஏனோ-தானோ" என்று தயரிக்கப்படவில்லை!. பல மட்டங்களிலே தமிழீழ மக்களின் கருத்தைப்பெற்று வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் அரசியல் அறிஞர்கள்ää சட்டவல்லுனர்கள் அரசியல் அமைப்பு நிபுணர்கள் ஆகியோரின் கலந்தாலோசனையுடன் தான் இத்திட்டம் தயாரிக்கப்ட்டுள்ளது.
தமிழீழ மக்களின் சர்பாக விடுதலைப்புலிகள் சமர்ப்பித்த இத்திட்டத்தினை தென்னிலங்கையின் சிங்கள-பௌத்த பேரினவாத சக்திகள்-சந்திரிக்கா அம்மையார் உட்பட) - கடுமையாக எதிர்த்தன. ஒரு சமாதானத்திற்கான காலத்தில் கூட ஒரு திட்டத்தை விவாதிக்கவும் அவர்கள் தயாராக இருக்கவில்லை. ஆனால் தமிழீழ தேசியத்தலைவர் என்ன கூறுகிறார்? தலைவர் பின்வருமாறு கூறிய கருத்துகள் இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் சமாதானக் கதவுகளை அவர் திறந்து வைத்திருப்பதையே காட்டுகின்றன.
6. கட்டமைப்புக் குறித்து விவாதித்துத் தெளிதல்.
நாம் தெரிவித்த யோசனைகளினாற் சில சர்ச்சைக்குரியனவாகத் தென்பட்டால் அவைபற்றி பேச்சுவார்த்தை மேசையில் விவாதித்துத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். முதலில் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை நிறுவிää அது செம்மையாகச் செயற்படத் தொடங்குவதை அடுத்தே இனப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வுபற்றிப் பேச்சுக்களை நடத்தலாம் என்பதே எனது நிலைப்பாடு. எமது கோரிக்கை நியாயமானது தமிழர் தாயகத்தில் நிலவும் வாழ்நிலை நிதர்சனத்தை கருத்திற்கொண்டே நாம் இக்கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
இந்த இடைக்காலத்திற்கான திட்டத்தை விவாதிக்க முன்வருவதற்கு சந்திரிக்கா அம்மையாரின் அரசு விரும்பவில்லை. இப்படிப்பட்ட இடைக்கால நிர்வாகத்திற்கான திட்டம் தயாரிக்கப்பட வேண்டியதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளவர் சந்திரிக்கா
அம்மையாரே- என்ற கருத்தை நாம் இங்கே வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.சந்திரிக்காவின் கடந்த கால அரசாட்சியின் போது தான் தமிழீழ மக்களுக்கு எதிரான போர் உச்சமடைந்தது. சந்திரிக்கா அம்மையாரின் கடந்த கால ஆட்சியின் போது தான் தமிழ் மக்களுக்கு எதிரான உணவு-மருந்து-பொருளாதாரத் தடைகளும் உக்கிரமடைந்தன. அந்த சிங்கள பௌத்த இனவாத அரசினால்தான் போரின் கொடூரமும் அழிவுகளும் பொருளாதார ரீதியான அவலவாழ்க்கையும் தமிழீழ மக்களுக்கு ஏற்பட்டன. இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய கடமை-தார்மீக கடமை-சந்திரிக்கா அம்மையாருக்கு இருக்கின்றது.
ஆனால் அந்த அம்மையாரா தனது தார்மீகக் கடமை குறித்துக் கவலைப்படக் கூடியவர். சந்திரிக்கா அம்மையாரின் கடந்தகால-நிகழ்கால அரசியல் நிலைப்பாடுகள் அவருடைய முரண்பட்ட சிந்தனைகளை வெளிப்படுத்தி நிற்பதோடு அவர் தமிழீழ மக்களுக்கு எந்தவிதமான நியாயமான தீர்வையும் தரப்போவதில்லை என்பதை புலப்படுத்தி நிற்கின்றன. சந்;திரிக்கா அம்மையார் மட்டுமல்ல சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் அமைப்புகள் எவையுமே தமிழீழ மக்களின் அரசியல்-வாழ்வியல் வேட்கைகளை புரிந்து கொள்ள போவதில்லை. சமாதானத்திற்கான கதவுகளை என்றுமே திறந்து வைத்திருக்கும் தமிழீழ தேசியத்தலைவர் எதிர்காலத்தின் யதார்த்த நிலையையும் வெளிப்படையாகவே தெரிவிக்கின்றார்.
7. சந்திரிக்கா உட்பட்ட சிங்கள தலைமைகளின் நிலைப்பாடு
ஒன்றை மட்டும் நாம் திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகின்றோம். அதாவது சந்திரிக்கா அம்மையாரின் முரண்பட்ட ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிலைப்பாடுகளைப் பார்க்கும் போது அவரது அரசானது தமிழ் மக்களுக்கு ஓர் இடைக்காலத் தீர்வையோ நிரந்தரமான தீர்வையோ வழங்கப்போவதில்லை என்பது புலனாகும்.
சிங்கள பௌத்த பேரினவாதச் சக்திக்குட் புதைந்து கிடக்கும் அரசியல் அமைப்புககளும்ää அவற்றின் தலைமைகளும் தமிழீழ மக்களின் அபிலாசைகளை ஒருபோதும் புரிந்து கொள்ளப்போவதில்லை. சிங்களத் தேசத்தின் பிரதான அரசியற் கட்சிகள் எவையுமே தமிழரின் தேசிய இனப்பிரச்சகையின் அடிப்படைகளை கூட அங்கீகரிக்கத் தயாhராக இல்லை.வடகிழக்கு மாநிலமானது தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகம் என்பதையோ தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக் கட்டமைப்பைக் கொண்ட மக்கள் சமூகம் என்பதையோ தமிழீழ மக்களுக்கு பிரிந்து செல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமையுண்டு என்பதையோ எந்தஒரு சிங்கள அரசியல் இயக்கமும் ஏற்றுக் கொள்ளத்தயாராகவி;ல்லை.
இதுதான் யதார்த்த நிலை! இதுதான் உண்மையான நிலை! இவை எல்லாவற்றையும் தெளிவாகக் கூறிய தேசியத்தலைவர்ää மேலும் ஒரு படி சென்று மூன்று வேண்டுகோள்களையும் விடுக்கின்றார். நிலைமை மேலும் மோசமாகப் போகாமல் இருப்பதற்காக ஆளும் கட்சி-எதிர்கட்சி உட்பட்ட சிங்களத் தலைமைகளிடம் பொதுவான ஒரு வேண்டுகோளையும் தற்போது ஆட்சியில் இருக்கும் சிறிலங்கா அரசிடம் முக்கியமான ஒரு வேண்டுகோளையும்ää ஈழத்தமிழரின் இனப்பிரச்சiயில் அக்கறை கொண்டுள்ள உலகநாடுகளிடம் குறிப்பாக ஒரு வேண்டுகோளையும் தேசியத்தலைவர் விடுக்கின்றார். அவருடைய பண்பமைந்த வார்த்தைப் பிரயோகங்கள் வருமாறு:-
எமது விடுதலை இயக்கம் ஒரு வேண்டுகோளை முன் வைக்க விரும்புகிறது.
காலம் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
இப்போது அவருடைய மூன்று வேண்டுகோள்களின் முழுவிபரத்தையும் கீழே தருகின்றோம்.
8. தமிழீழத் தேசியத் தலைவரின் மூன்று வேண்டுகோள்கள்
சிங்களத் தலைமைகளுக்கு:
ஜனாதிபதி சந்திரிக்காவிடமும் அவர் கூட்டாட்சி அமைத்திருக்கும் கட்சிகளிடமும்ää எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக ;கட்சியிடமும் எமது விடுதலை இயக்கம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறது. அதவது தமிழ் மக்களது இனப்பிரச்சனையின் அடிப்படைகள் குறித்து அவர்களது மூலாதாரக் கோரிக்கைகளான தாயகம் தேசீயம் சுயநிர்ணய உரிமை குறித்து உங்களது கட்சிகளின் கொள்கை நிலைப்பாட்டினை அதிகார பூர்வமாகப் பகிரங்கப் படுத்துங்கள்.
சிறிலங்கா அரசிற்கு:
இந்த நெருக்கடியான சூழ்நிலையிற் சிறிலங்கா அரசுக்கு நாம் அவசரமான அழைப்பு ஒன்றை விடுக்க விரும்புகின்றோம். அதாவது நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத்திட்டத்த்pன் அடிப்படையில் நிபந்தனையற்ற முறையில் காலந்தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
உலக நாடுகளுக்கு:
எமது இந்த இக்கட்டான நிலையை தமிழரின் இனப்பிரச்சனையில் அக்கறையுடைய உலகநாடுகள் கருத்தில் எடுத்து எமது தயாகமான நிலைப்பாட்டின் அடிப்படையிற் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
இந்த வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டால் அல்லது அசட்டை செய்யப்பட்டால் அடுத்த வழிதான் என்ன? தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தங்கள் மக்கள் கொடுத்துள்ள இறையாணையை நிறைவேற்ற வேண்டிய கடமை உண்டு! அந்தக்கடமையை நிறைவேற்றி எமது மக்களுக்கு விடிவையும் விடுதலையையும் பெற்றுக்கொடுப்பதற்காக விடுதலைப்புலிகள் மேற்கொள்ள வேண்டிய மேற்கொள்ளக்கூடிய அடுத்த கட்ட நகர்வுதான் என்ன?
அதனை தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்.
9. அடுத்த கட்ட நடவடிக்கை
எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து காலத்தை இழுத்தடித்து எமது மக்களின் துயர வாழ்வை நீடித்து செல்ல சிறிலங்கா அரசு முற்படுமானால் நாம் எமது தேசத்தின் சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.
பொறுமைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் எல்லைக்கோடுகள் உள்ளன. அந்த எல்லைக்கோடுகளை நாம் அடைந்துவிட்டோம்.
எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு
வழியில்லை.- என்று எமது தேசியத்தலைவர் கூறியது குறித்துப் பல அரசியல் வல்லுனர்களும் பல விதமாகக் கருத்துக்கள் வெளியிட்டு வருகின்றார்கள். இது குறித்து எமக்கும் ஒரு தாழ்மையான கருத்து உண்டு.
'போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்டத்தின் இலட்சியம் மாறப்போவதில்லை' என்று தேசியத்தலைவர் பலமுறை வலியுறுத்திக்கூறி வந்துள்ளார்.இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாகப் பலம் பெற்று விளங்குகிறது மட்டுமல்லாதுää அரசியல் ரீதியாகவும் பலம் பெற்று தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக விளங்குகிறார்கள். சுpங்கள-பௌத்த பேரினவாத சக்திகள் தமிழீழ மக்களின் அரசியல்-தேசிய வேட்கைகளை எந்த உருவத்திலும் நசுக்க முனைந்தாலும் அதற்;கேற்ப முகம் கொடுத்து தமது அடுத்த கட்ட நகர்வை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் முன்னெடுத்துச் செல்லும். அது ஜனநாயக ரீதியிலும் இருக்கலாம். ஆயுதபேராட்ட ரீதியிலும் இருக்கலாம்.
புலி புல்லைத் தின்னமாட்டாது தான். ஆனால் இந்தப்புலி புல்லையும் ஆயுதமாக உபயோகிக்கும்.
இந்த வேளையில்-இந்த முக்கியமான வேளையில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களாகிய எமக்கு முக்கியமான கடமை ஒன்று உண்டு.
தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் ஆற்றிய மாவீர தின உரையில் உள்ள கருத்துக்களும்-வேண்டுகோள்களும்-எதிர்பார்ப்புகளும் நியாயமானவை. அவை ஒட்டு மொத்தமாக தமிழீழ மக்களின் வேட்கையை பிரதிபலித்து நிற்பவை. தமிழீழ மக்கள்மீது சிங்கள பௌத்த பேரினவாதமானது வலிந்து போர் ஒன்றைத் திணிக்கக் கூடும். ஏன்ற அபாயத்தையும் சுட்டிக்காட்டி நிற்கிறது தலைவரது இந்த உரை.
இந்த வேளையில் புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் தத்தமது நாடுகள் ஊடாக சிறிலங்கா அரசிற்கு அரசியல் அழுத்தங்கள் கொடுப்பதன்மூலம் சிறிலங்கா அரசைப்புலிகளுடன் சமாதானப்பேச்சை ஆரம்பிக்க வைக்க வேண்டும்.உலக நாடுகளில் இயங்குகின்ற தமிழ்ச்சங்கங்கள் தமிழ் கூட்டமைப்புக்கள்ää தமிழ் அமைப்புக்கள் தமிழ் ஒன்றியங்கள் போன்றவற்றினூடாக தமிழீழ மக்களின் நியாயபூர்வமான அரசியல் வேட்கைகளை ஆதரித்து அறிக்கைகளை விடுத்து தத்தமது நாடுகளின் அரசுகளினூடாக சிறிலங்கா அரசிற்கு முறையான-நியாயமான அரசியல் அழுத்தங்களை கொடுத்து சமாதானப் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க வைக்க வேண்டும். இது எமது மக்களின் வாழ்வுக்காக விடிவிற்காக நாம் செய்ய வேண்டிய செய்தாக வேண்டிய முக்கியமான அவசியமான கடமையாகும்.
முத்தாய்ப்பாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் கூறிய ஒரு கருத்தை கூற விழைகிறோம்.நேற்றைய உண்மையையும் இன்றைய யதார்த்தத்தையும் நாளைய விடிவையும் ஒருங்கிணைத்து எமது தேசியத்தலைவர் கூறியதைத் தருகிறோம்.
எமது மாவீரர் கண்ட இலட்சியக் கனவு இன்னும் நிறைவேறவில்லை. எமது தாயக மண் இன்னும் முழுமையாக விடுதலை பெறவில்லை. எமது மக்கள் இன்னும் பூரண சுதந்திரம் அடைந்து விடவில்லை.
தமிழீழத்தின் தொன்மைவாய்ந்த வரலாற்றுப் புகழ் மிக்க நகரங்களும் பட்டினங்களும் அங்கு வாழ்ந்து வரும் எமது மக்களும் இன்னும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புப் பிடியிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்ட்டு நசிக்கப்ட்டு மிதிபட்டு வாழ்கிறார்கள். தமது சொந்த மண்ணில் இருந்து வேர் அறுபட்டு இடம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தாம் பிறந்து வாழ்ந்த நிலங்களுக்கு திரும்ப முடியாது அகதி முகாம்களில் அல்லல் படுகிறார்கள். எமது மக்களின் துயரும் துன்பமும் தொடர்கிறது. தேச விடுதலை என்ற எமது இலட்சியம் எமது மாவீரர்கள் கனவு கண்ட அந்த சத்திய இலட்சியம் இன்னும் நிறைவு பெறவில்லை.
எமது மண்ணின் விடிவிற்காகவும் எமது மக்களின் விடுதலைக்காகவும் களமாடி வீழ்ந்த எமது மாவீரர்களை நினைவுகூரும் இப் புனிதநாளில் தேச விடுதலை என்ற அவர்களது இலட்சியக்கனவை எத்தகைய இடர்கள் சாவல்களை எதிர்கொண்ட போதும் நிறைவு செய்வோமென நாம் உறுதி
பூணுவோமாக.
'புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்."