"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Selected Writings by Sanmugam Sabesan
நினைவு தினம்
8 November 2004
இவ் ஆய்வு 08.11.04 அன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் தமிழ்க்குரல் வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது
நவம்பர் 11ஆம் திகதி அவுஸ்திரேலிய மக்கள் தங்களுடைய மாவீரர்களை நினைவுகூரும் தினமாகும். நவம்பர் மாதம் 11ஆம் திகதி. ஆமாம் 11ஆம்திகதி 11ஆம் மாதம் அன்று பகல் 11 மணிக்கு அவுஸ்திரேலிய நாட்டுப்பற்றாளர்கள்ää தம்முடைய வீழ்ந்த வீரர்களை நினைத்து ஒரு நிமிடம் அகவணக்கம் செலுத்துவார்கள். இந்த 11ஆம் திகதி 11ஆம் மாதம் 11மணிக்கு பின்னாலும் ஒரு சோகம் நிறைந்த வரலாறு உண்டு. 86 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 1918ஆம் ஆண்டு அன்று நவம்பர் மாதம் 11ஆம் திகதி அன்று பகல் 11 மணிக்கு ஜேர்மன் நாடுää ஒரு தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டது. அத்தோடுää முதலாவது உலக மகாயுத்தம் முடிவுக்கு வந்தது.
அன்றைய தினத்திலிருந்து 1939ஆம் ஆண்டுவரை நவம்பர் மாதம் 11ஆம் திகதியை யுத்த நிறுத்த தினமாக அவுஸ்திரேலிய மக்கள் நினைவு கூர்ந்து வந்தார்கள். முதலாவது உலக மகா யுத்தத்தின்போது மரணித்த அனைவரையும் நினைவுகூரும் தினமாக இத்தினம் அமைந்தது.
ஆனால் யுத்தம் மீண்டும் வெடித்தது. இரண்டாவது உலக மகாயுத்தம் தொடங்கியது. அது 1945இல் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் யுத்த நிறுத்த தினம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நினைவு தினம் (REMEMBERANCE DAY) என்று அழைக்கப்பட்டு நினைவு கூரப்படுகின்றது.
முதலாவது உலக மகாயுத்தத்தின் போது First Australian Imperial Force இல் இணைந்து போர் புரிந்த ஆண்களும் பெண்களுமாக அறுபதினாயிரத்திற்கும் மேற்பட்ட அவுஸ்திரேலியர்கள் மீண்டும் தமது தாய் நாட்டிற்கு திரும்பி வரவில்லை. எதிரியின் தேசத்திலேயே போர்க்களங்களிலே அவர்கள் மரணித்தார்கள். அவர்களை நினைவு கூரும் தினம் நவம்பர் 11.
ஏறிகணைகள் வீழ்ந்து வெடித்ததால் சிதறிய FLANDER போர்கள மண்ணில் 1914ஆம் ஆண்டிற்கும் 1918ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பொப்பி மலர்கள் (Poppy Flowers) என்றழைக்கப்படும் மலர்கள் பூத்துக் குலுங்கின. பல்லாயிரக் கணக்கான வீரர்களின் உடல்கள் புதையுண்டு போன அந்த போர்க்கள மண்ணின்மீது ஆயிரக்கணக்கான பொப்பி மலர்கள் பூத்தது. அது குறித்து லெப்டினன்ட் கேர்ணல் John Mc.Grase என்ற போர் வீரன் 1915ஆம் ஆண்டு கவிதை ஒன்றை எழுதினார்.
இதோ FLANDER போர்க்களத்தில் பொப்பி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
சிலுவை அடையாளங்களுக்கிடையே வரிசை விசையாக பொப்பி மலர்கள் எம்முடைய இருப்பிடங்களை காட்டி நிற்கின்றன.
நாங்கள் இப்போது இறந்தவர்கள்.
சில நாட்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் நாங்கள்.
வாழ்ந்தோம் சூரிய உதயத்தை உணர்ந்தோம்.
சூரிய அஸ்தமனத்தின் ஒளியையும் கண்டோம்.
காதலித்தோம்... காதலிக்கவும் பட்டோம்.இப்போது FLANDER போர்க்கள மண்ணில் படுத்து உறங்குகின்றோம்.
இப்போது FLANDER போர்க்கள மண்ணில் படுத்து உறங்குகின்றோம்.தமிழாக்கத்தின் குறைக்கு எம்மை மன்னிக்கவும்.
இது அவுஸ்திரேலியப் போர் வீரர்களையும் அவர்களுக்கு உரிய பொப்பி மலர்களையும் பற்றிய வரலாற்று செய்தியாகும்.
இந்த உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கு புலம் பெயர்ந்த தமிழீழத்தவர்களாகிய நம்மால் முடியும் அல்லவா?
எந்த தேசத்திலும் மாவீரர்கள் மரியாதைக்கு உரியவர்களே! இனப்பற்றும் மானமும் உள்ளவர்கள் அதை அறிவார்கள்-உணர்வார்கள். தமிழீழத்து மாவீரர்களது மாவீரர் தினம் நெருங்குகின்ற இந்த வேளையில் இந்த நினைவுகளையும்ää நேயர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொண்டோம்.