தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments
Home > Tamil National ForumSelected Writings - Sanmugam Sabesan >சந்திர மண்டல பயணமும் பயங்கரவாதத் தடைச்சட்டமும்

Selected Writings by Sanmugam Sabesan

[to read the Tamil text you may need to download & install a Tamil Unicode font from here -
for detailed instructions please also see Tamil Fonts & Software]

சந்திர மண்டல பயணமும்
பயங்கரவாதத் தடைச்சட்டமும்

26 July 2004

இவ் ஆய்வு 26.07.04 அன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில்
தமிழ்க்குரல் வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது


அன்பு நேயர்களே - ஜூலை மாதம் 20ம் திகதி உலக வரலாற்றிலேயே மறக்க முடியாத நாளாகும். ஆமாம் 35 ஆண்டுகளுக்கு முன்னால் - அதாவது 1969ம் ஆண்டு மனிதன் முதன் முதலாக சந்திரனில் காலடி எடுத்து வைத்த நாள், ஜூலை இருபதாம் திகதியாகும்.

எதையும் அறிந்து உணர வேண்டும் என்ற ஆர்வமும், அறிவும் துணிச்சலும் ஒன்று சேர்ந்து - அதன் விலையாக சமூக பிராணியான மனிதன் தனது பூமிப்பந்தை விட்டு புறப்பட்டு, முதன்முதலாக - தனக்கு அருகில் உள்ள துணைக்கோளான சந்திரனை அடைந்த நாள்! விஞ்ஞான hPதியாகவும் - அறிவு hPதியாகவும் மனித வரலாற்றில் இடம் பெற்ற நாள்! - ஜூலைத் திங்கள் 20ம் திகதி 1969ம் ஆண்டு.

அன்று அந்த மகத்தான சாதனை நடைபெற்ற போது மானுடக்குலமே ஒன்று சேர்ந்து வியந்து, குது}கலித்தது, கும்மாளமிட்டது. மனிதன் தன் பேதங்களை சற்று மறந்து - உலகமனிதனாக - வேற்றுக் கிரகத்திற்கு விஜயம் செய்த நிகழ்ச்சி. மனித குலத்தை ஒருங்கிணைத்து பிரதிநிதித்துவப் படுத்தியதாகவே கருதப்பட்டது.

ஆனால் இப்படிப்பட்ட ஒருங்கிணைந்த பிரதிநிதித்துவம், பின்னால் பேணப்பட்டதா? - இல்லை, அச்சிந்தனைதான் வளர்வதற்கு இடம் கொடுக்கப்பட்டதா? இல்லை! இல்லவே இல்லை!!

மாறாக, மனித குலத்திலேயே, ஓர் இனம், இன்னொரு இனத்தை அடிமைப்படுத்தவும், அடக்கி ஒடுக்கவும் முனைகின்ற செயல்கள் அதிகரித்து வருவதைத்தான் நாம் காண முடிகிறது.
ஈழத்தமிழ் இனத்தைப் பொறுத்த வரையிலும் கூட, இந்த ஜூலை இருபதாம் திகதி, மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது.

ஆனால் துர் அதிஷ்டவசமாக அது மறக்கப்பட வேண்டிய நாளாகவும் விளங்குகிறது ஆமாம், உலக ஒற்றமையை விளக்கிக் காட்டும் வகையில் மனிதன் சந்திரனில் காலடி வைத்துப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னால் - அதே ஜூலை 20ம் திகதி அன்று தான், தமிழருக்கு எதிரான - மிகவும் கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை - அன்றைய சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்தியது! - 1979ம் ஆண்டு ஜூலை 20ம் திகதி.


தனது விஞ்ஞான அறிவை விருத்தி செய்து கொள்வதற்காக - மனிதன் வேற்றுக் கிரகத்தில் காலடி எடுத்து வைத்தான். ஆனால் தனது பேரினவாதக் கொள்கையை விருத்தி செய்வதற்காக - இன்னொரு இனத்தின் பாரம்பரிய மண்ணில் காலடி எடுத்து வைத்து அடக்கு முறையை மேற்கொள்வதற்காக- சிறிலங்கா அரசு செய்த சாதனைதான் பயங்கரவாத தடைச் சட்டம்! 25 ஆண்டுகளுக்கு முன்பு, இதே தினத்தில் அமுலாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம், தமிழருக்கு மட்டுமே எதிராகச் செய்யப்பட்டது - என்று சொல்வதில் ஓர் உண்மை உண்டு.

ஆமாம், எந்த ஒரு சிங்களக் குடிமகனுக்கு எதிராகவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட வில்லை, என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும். ஜே.வி.பி சிங்கள இளைஞர்கள் கைது செய்யப்பட்போது கூட அவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்ற செய்தியையும் நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

வேற்றுக் கிரகத்தில் மனிதகுலம் காலடி வைத்த திகதியில், இங்கே, இன்னுமொரு இனத்தின் பாரம்பரிய மண்ணில் அகலக்கால் பதிப்பதற்கு, சட்டங்களைக் கொண்டு வந்தது ஒரு பேரினவாத அரசு. இன்று வரை அந்தப் பாரம்பரியத் தமிழ் மண்ணிலே, இராணுவ அடக்கு முறைகளைப் பிரயோகித்து, தமிழ் மக்களைத் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கி வருத்தி வந்துள்ளன சிங்கள அரசுகள்.
மனிதன் தன்னை ஓர் உலக மனிதனாகக் காட்டும் பொருட்டு, 35 ஆண்டுகளுக்கு முன்னர், சந்திர மண்டலத்திற்குப் பயணம் செய்தான்.

 ஆனால் இலங்கைத் தீவில்- இரண்டு தேசங்கள்- இரண்டு இனங்கள் இருப்பதனை- அதே தினத்தில் - 25 ஆண்டுகளுக்கு முன்பு - சிங்கள சிறிலங்கா அரசு- பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் உறுதி செய்தது. தமக்கு ஒரு சட்டம்- தமிழனனுக்கு ஒரு சட்டம் - என்கின்ற hPதியில் தான் தோன்றித் தனமாக நடந்த சிங்கள அரசுகள் நிரூபித்தது ஒரு தீவில் - இரு நாடுகள் என்ற விடயத்தைத்தான்!

 

Mail Usup- truth is a pathless land -Home