அதிகாலை அழகாகத்ததான் மலர்கிறது
ஆதவனும் அமைதியாத்தான் ஆதிக்கம் செலுத்துகின்றான்
அற்புதமும் ஆனந்தமும் நிறைந்த காலைப்பொழுதில்
கண்களின் கதவுகளைத்திறந்து என்னையே பார்த்தேன்
அனத்துலகும் அழகாய் இருந்த போதும்
படுபாவி நான்மட்டும் அழுக்குhய் இருந்தேன்
புழுதிபட்டுப் பழுதான இடத்தையெல்லாம் தூசிதட்டும்
துடைப்பானால் என்னைப் பாசி தட்டினேன்
துடைப்பான் என்னிலும் அதிகம் அழுக்கானது
நான் கொஞ்சங்கூடத் தூய்மையாகவில்லை
கறைநீக்கி குறைதீர்க்கும் புனலால்
என் சுமை தீர்க்க என்னை நீராட்டினேன்
என்மீது பட்டபின் அவை சேறாய் வழிந்தோடின
என் தேகத்தீட்டு தேக்கத்திலே நின்றது
ஓடினேன் தேடினேன் என்கறைபோக்க வேண்டினேன்
என்கறையிலும் பார்க்க அதிகம் கறை அனைவரிலும் படிந்திருந்தது
யாரை கேட்பேன் துணையாய் தூபங்காட்ட
பாரை கேட்டேன் அது எனைப்பார்த்து ஏழனஞ்செய்தது
கதறிக் கதறிக் கண்ணீர்விட்டேன்
கண்ணீரிலும் கலங்கம் தெரிந்தது
பெரும் பாரத்தால் மூச்சு விட்டேன்
அந்த சீற்றத்திலும் நாற்றம் தெரிந்தது
நடந்து சென்று கடந்தபின் திரும்பிப்பார்த்தேன்
கடந்தபாதையில் எல்லாம் படிந்த பாசிதெரிந்தது
வருடிச்சென்ற விரல்களின் தடையம் பார்த்தேன்
கருகிவிட்ட சருகுகளின் வர்ணம் தெரிந்தது???
ஓ... நான் வழுக்கி விட்டேன்!!!.