தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home   > Tamil National Forum Arugan - Italy > பாடல்

Tamil National Forum
TAMIL NATIONAL FORUM
Selected Writings
- அருகன் (இத்தாலி)

பாடல்

12 June 2006


வணக்கம்.
இவை அனைத்தும் பாடல்களுக்காகப் புனையப்பட்டவற்றில் இருந்து ஒருசிலது, இசைக்குழுக்கள் தேவைப்படின் மேலும் புனைய தயாராகவுள்ளோம். ஏற்கனவே எம்மால் எழுதி இசையமைக்கப்பட்ட பாடல்லள் பல வானொலிகளில் இசைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அன்பன் அருகன்
இத்தாலி

அடங்காத்தமிழர் நாம்

பல்லவி

அடங்காத தமிழன் இன்னும் அடிபணிந்து வாழ்வதா
அகதி வாழ்வை எண்ணி யெண்ணி
அடிமையாகிச் சாவதா!

அனுபல்லவி

துடிதுடிக்கும் பிஞ்சு நெஞ்சம் தூங்கவில்லை கொஞ்சநேரம்
ஆறிப்போகும் காயம் மென்றும்
ஆறிடுமா நெஞ்சின் பள்ளம்!.. .. ஆ..ஆ..ஆ..ஆஆ

சரணம் 1

ஈழத்தாயின் கருவறையில் கோளைகளே பிறப்பதில்லை
வீரத்தாயின் பேரை யென்றும்
வேடன் வந்தும் மழிப்பதில்லை!
வேடம் போட்டு வெள்ளையினம்
வேலிபோட்டுச் சென்றது கோடுபோட்டால் நின்றிடுமா
காளைநெஞ்சம் அஞ்சிடுமா!
அச்சம் மென்ற சொல்லைக் -- கூட
துச்சமாக வெண்ணினேம்
மிச்சம் முள்ள தொல்லையெ -- ல்லாம்
சுட்டுப்போட முந்தினோம்!!
||அடங்கிப்போவேமோ||!! (அடங்காத.. ..)

சரணம் 2

சட்டதிட்டம் போட்டுவிட்டு சதிகள் நடம் மாடுதுபார்
பிச்சை கேட்கும் கூட்டமங்கே
கத்தித் தடம் போடுதுபார்!
குள்ளநரிக் கூட்டம் வந்து
எள்ளிநகை யாடுதுபார் கொள்ளி வைத்துத் தள்ளிப்போட
கொட்டம் மின்றி யோடுது பார்!
பித்தரென்றும் பேயரெ -- ன்றும்
விட்டுவிடு ஓடுவார்
பித்துக்கொண்ட பக்தரைப் -- போல்
சுத்திச் சுத்தியாடுவார்!!
||அடங்கி ஓடுவார்||!! (அடங்காத.. ..)

புலம் பெயர்ந்த பூக்கள்

குயில் கூவும் ஓசைகள் கேட்கும் போது ஆசைகள் - கூவும்
போது கூட்டம் கூடிக் கேட்போமா
தமிழீழச் செல்வங்கள் பேசும் போது ஆசைகள் -கிள்ளை
மொழியில் பேசச்சொல்லிக் கேட்போமா

பூந் தோட்டம் நன்றாய்ப் பூக்காமல்
கம கம நறுமணம் வீசிடுமா- பிள்ளைச்
செல்வங்கள் நன்றாய்ப் பேசாமல்
சரி கம பத நிச பாடிடுமா (குயில். . . . !)

1
அம்மாவைப் பார்த்து பிள்ளைகள் இங்கே
அயஅஅய என்று அழைக்குது - அட
அயஅஅல என்றும் அழைக்குது!
அப்பாவைப் பார்த்து பிள்ளைகள் இங்கே
pயிpய என்று அழைக்குது - அட
pயிpல என்றும் அழைக்குது!
தொலைஞ்சு தமிழ் தவிக்குது -அது
தொலைவ நினைச்சு துடிக்குது! (2)
சொல்லிக் கொடுத்தா பிள்ளை மனசு
நெஞ்சில் பதிக்கும் வெள்ளை மனசு - (2)
தெரிஞ்சிருந்தும் தாய் மொழிய பிரிந்து விடாதே! - நல்ல
கதைகளோடு கவிதை சொல்ல மறந்துவிடாதே!
(குயில். . . . )
2
ஐரோப்பா வுந்தன் தாய்நாடு இல்லை
ஈழம் இங்கே இருக்குது - அது
உன்னை நம்பிச் சிவக்குது
லட்சத்தில் மூன்று தமிழ் வார்த்தை உண்டு
லட்சியமாய் எடுத்திடு - அத
கட்சிதமாய்ப் படித்திடு
உறங்கிக் கடக்கும் உணர்விது - அந்த
உறக்கங் கலைக்க உணவிது (2)
நெஞ்சம் முழக்கு எண்ணப் பறவை
வட்டம டிக்குஞ் சின்னப் பறவை (2)
நச்சுக் களைகளை நீ முளையிலேயே கழைந்து விடு -இல்லை
பலன் கொடுக்கும் பயிர் களையே மறந்து விடு
(குயில் . . . . )

ஆறாத வடுக்கள்

நெஞ்சம் பட்ட காயத்துக்குக்
கட்டுப் போதுமா - என்
வேதனையைத் தீர்க்க
வொரு பாட்டுப் பாடம்மா

பொல்லாத உலகமம்மா புண்பட்ட இதயமம்மா
தாய்நாடு நோகுதம்மா தீயால வேகுதம்மா
(நெஞ்சம். . . )

பிஞ்சு உள்ளங்கள் சாகுதம்மா
பிரிஞ்சு நெஞ்சங்கள் வாடுதம்மா
அஞ்சி அஞ்சியே ஓடுதம்மா
உடைஞ்ச ஓடம்போல் ஆடுதம்மா

பஞ்சங்கள் கூடி
பட்டினியால் வாடி
நிம்மதியைத் தேடி
பார் தன்னிலே ஓடி

ஏதேதோ எண்ணங்களே எண்ணுதம்மா
ஏராளம் மின்னல்களாய் மின்னுதம்மா
(நெஞ்சம். . . . )

தள்ளி உள்ளது செந்தமம்மா
தன்னந்தனிமையாக ஏங்குதம்மா
கண்ணில் வெள்ளமாய்ப் பாயுதம்மா
கார்மேகம் தூவிச்சென்ற தூறலம்மா

கண்ணிலே விம்பம்
காணவேண்டும் இன்பம்
தீரவேண்டுந் துன்பம்
கூட வேண்டும் சொந்தம்

நட்சத்திலங்கள் மாலை ஆகுமம்மா
வட்ட நிலாவின் வெண்மை தோன்றுமம்மா
(நெஞ்சம் . . . )

வாழ்க்கையுந்தன் கரத்தில்

ஓ.... ....
ஓடக்காறா ஓடக்காறா - உன்
ஓடம் இப்போ ஆடுதுபார்
கொஞ்ச நாளாய் (2)

நீPரும் ஆடவில்லை
நிழலும் ஆடவில்லை
ஓடம் ஆடுது பார் ஓடக்காறா
ஏலேலோ .. ஓ... ஐலசா

(ஓ..ஓடக்காறா ..!)

(1)
பாராலும் ஆடவில்லை
ஊராலும் ஆடவில்லை
யாரலும் ஆடவில்லை ஓடக்காறா!

அலையாலும் ஆடவில்லை
புயலாலும் ஆடவில்லை
உன்னாலே ஆடுதுபார் ஓடக்காறா!!

துடுப்ப தொலைச்சு விட்டா
துணைக்கு யாரும் இல்லை
தவிக்கும் உன்னக் கொஞ்சம்
தடுக்க ஆளும் இல்லை

எல்ல தெரிஞ்சிருந்தா.... ...
தொல்லை ஏதுமில்லை!!1

(ஓ.. ஓடக்காறா..)

(2)

நெஞ்சோடு ஈரமுண்டு
தோளோடு வீரமுண்டு
கண்ணோடு உறக்கம் என்ன ஓடக்காறா!

கரையோடு சேரும் மட்டும்
கலக்கம் உன்ன முட்டும்
தயக்கம் தேவையில்ல ஓடக்காறா!

கடலின் மீதிலும்
அலையும் ஆடுது
தினமும் ஓடுது
கரையை நாடுது

இதுவும் வாழ்க்கையின்... ... ..
விளக்கம் போலது !!!

(ஓ... ...ஓடக்காறா)

அவள் என்ஜீவன்

உயிரே.........! உயிரின்உயிரே..........!
உயிராய்............! உனையே நினைத்தேன்........!

வெண்ணிலவா சூரியனா . . . . நீ சொல்....?
மென் மலரா முள்நுனியா . . . நீ சொல்......?
ஏன் என்னைக்கொல்ல நினைத்தாய்?
வாள்வீச்சில் என்னைச்சரித்தாய்!!
உயிரே.........! உயிரின்உயிரே..........!
உயிராய்............! உனையே நினைத்தேன்........!

(1)

அமுதம் என்றிருந்தேன் நஞ்சாய் . . . . .நீ திரிந்தாய்
பறுவம் என்றிருந்தேன் மறைவாய் . . . நீ யிருந்தாய்
புல் வெளியா கல் நிலம
கலங்குதடி நெஞ்சம்
செல் மொழியால் வில் தொடுத்தாய்
சரிந்ததடி யங்கம்
நான் இன்று நானாய் இல்லை (யே)
நாள் ஒன்றும் நாளாய் இல்லை (யே)
உடல் உண்டுஉயிராய் இல்லை (யே)
நீ வந்து புகுந்து கொண்டால் புதிதாய் நான் பிறப்பேன்.!
உயிரே.........! உயிரின்உயிரே..........!
உயிராய்............! உனையே நினைத்தேன்........!

(2)

இன்பம் என்றிருந்தேன் துன்பம் . . . . . நீ தந்தாய்....!
பகலா யுனைநினைத்தேன் இருளாய் . . . .நீ வந்தாய்
வல்லினமா ..? மெல்லினமா..? நீயிருந்தா லென்ன..?
வாய் மொழியால் நல் மொழியாய்
நீ விடுத்தாலென்ன..? வான் மீது ஒழியே யில்லை....!
வாழ்வேடு தெளிவேயில்லை.....!
வாழ்த்துக்கள் வரவேயில்லை...!
என்னுடன் நீயினைந்து கொண்டால்
எரிந்திடுமே ஸ்பரிசம்...!
உயிரே.........! உயிரின்உயிரே..........!
உயிராய்............! உனையே நினைத்தேன்........!

அவள்என்காதலி

இனியவளே இனியவளே
இன்மொழி வார்த்தைகள் செல்லாய் ...!
என்னுடல் தீயில் வேகிடுதே
காற்றே தூதுபோய் செல்லாய்..!

மூன்றாம் பிறையின் நெத்தியிலே
முத்தாம் நீர்த்துளி மத்தியிலே
சித்தம் நித்தம் சிக்கிடுதே.. .. .. கேளாய்..!
மேகம் தூவும் தூறலிலே
மோகம் கொண்டு நீ நனைய
தாகம் கொண்ட என்னுயிரே .. .. .. கேளாய்..!
(இனியவளே)

(1)
கண்கள் இரண்டும் மூடுமிங்கே
நெஞ்சம் ஒண்றைத் தேடுமெங்கோ .. .. ஓடி
தூங்கும் போதும் ஏங்குதிங்கே
தூது போகத் தூண்டுதிங்கே .. .. .. போடி

ஆண்டவன் கூடவே
ஆண்களாய் தோண்றினால்
ஆடவள் தான் கூடத்தேவையே
அண்று போல் இன்றுமே
இன்று போல் என்றுமே
தேவை கொள்ள இந்தப் பாவையே..!
உன்னைக் கண்டு கொண்ட பின்னே
என்னைக் கொண்டு செல்லும் பெண்ணே
நம்மைக் கண்டு வண்டு முன்னே
காதல் கொண்டு பூவின் பின்னெ..!

(இனியவளே)
(2)
அச்சம் என்ற ஆணியிலே
சிக்கிக் கொண்ட சேலையிங்கே -- -- சேதம்
மிச்சம் இங்கே நணமது
செல்லிக் கொள்ளா ஆசை இங்கே -- --மீதம்

பண்பாடு எண்றுமே
பாரம் மெண் றாணால்
பாசத்தில் வேசங்கள் தோண்றுமே
கனவிலும் நினைவிலும்
கண்களின் திரை யிலுங்
காண்பதெல்லாம் உந்தன் கனலே ..!
உந்தன் கூந்தல் கண்டு கெண்டே
தோகை ஆட்டம் போடும் வந்தே
உந்தன் தோள்கள் கண்டு கொண்டே
சோலைப் பூக்கள் ஆகும் செண்டே .. !
(இனியவளே)

நீயில்லாத உறக்கத்திற்கு ஒரு தாலாட்டு!

என்னைத் தாலாட்டி நான் தூங்க
ஆரிரரோ பாடுகின்றேன்
தூங்கா விழி இரண்டும் வாடியிருக்க
காலைவரை ஏங்குகிறேன்

உன் பெயரைச் சொல்லிநான் வாழ்கின்றேன்
நீயில்லாமல் (தனியே) வாடினேன் - தேடினேனே
உனைத் தேடினேனே - வாடினேனே
தினம் வாடினேனே (என்னைத். . . . . . . .
(1)
நீயெங்கு சென்றாய் இதயத்தைத்திருடி
நான் மட்டும் நின்றேன் தனிமையை வருடி (2)

உனை தினம் நினைத்து நான் தரும் சுருதி
காற் றுன்னில் வந்து தொடும் எனக் கருதி

மனமே உனைத்தானே என்னாளும் நினைத்தே வாடுதடி
மலராய் என்மேலே இன்னாள் வரை மணமாய் வீசுதடி
கார் முகிலாகி விழி பெய்தது
கண்ணே உன் பெயர் பதில் சொல்லுது (என்னைத். . . . ..
(2)
நீசெய்த மாயங்கள் காயங்களாகி
காளை யென் நெஞ்சினைச் சோகங்களாக்கி (2)

நான் செய்த காதலும் காலங்களாகி
நாளைய மண்ணில் காவியமாகி

போர்க் களமானதடி உன் பார்வை தீச்சுடரானதம்மா
ஊர்வலம் போகுதடி என் மூச்சு வேருடன் வேகுதம்மா
கானல் நீராய்க் கதை சொல்லுது
பெண்ணே உன் முகம் தினம் வெல்லுது ( என்னைத் . . . . .

உனக்காக ஒருபாடல்.

வாணவில்லே தரையில் வந்துஉடைந்து கிடக்குமா
வீட்டுக்குள்ளே ஒளிந்திருந்தால் வெளிச்சந் தெரியுமா

கண்ணே நீ காகிதமா காற்றில் லுன்னை வீசட்டுமா
கண்ணாடி ஓவியாய் உடைந்தாய் உன்னைக் கொட்டட்டுமா
(1)
அன்பாய் நீ வந்தாய் யவை யெல்லாம் பொய்யா
பொய்யாய் யவை போனால் லென் னுயிர்தான் மெய்யா
சொன்னாய் யந்த வார்த்தை யவை யெல்லாங் கதையா
சோகம் மென் வாழ்க்கை யினி சொர்க்கம் பிழையா

சொற்கத்தை யுன்னாலே கண்டுநான் நன்றுதான்
சோகத்தை விட்டுத்தான் னிருந்தேன்
சொல்லாமல் விட்டுத்தான் மின்னலாய் யின்றுநீ
சென்றதால்த் தீயினில் லெரிந்தேன்

எரிகின்ற உடலில்
சிதைகின்ற மனதில்
மழையெனப் பொழிந்தால்
மலரும் முல்லையடி
என் மனசும் வெள்ளையடி
உன் மௌனந் தொல்லையடி ( வாணவில்லுந். . .. . . . )
(2)
சஞ்சை நீதந்தால் அதை யுண்பேன் னமிர்தம்
வஞ்சம் நீதந்தால் லென் நெஞ்சம் மிருகம்
கொஞ்சம் மின்னுங் கொஞ்சம் மென்னுயிரு மிஞ்சும்
தஞ்சம் உன் நெஞ்சம் பஞ்சில் தாடி மஞ்சம்

தாய்க்குப் பின் தாரமே யென்றுதான் சொன்னாரே
தாயாக உன்னைநான் நினைத்தேன்
சேயாக என்னைநீ யெண்ணாமல் தள்ளியே
சேறாக அள்ளியே யெறிந்தாய்

எனக்கொரு துணைவி
துணைக்கொரு மனைவி
நீ யில்லை யடியே
நான் நுந்தன் பிள்ளையடி
தினம் நாடும் முந்தன் மடி
உயிர் தேடும் முந்தனடி (வாணவில்லுந். . . . )


இயேசு யெந்தன் தோழன்

பல்லவி

எந்தன் நண்பன் அவர்தான் -நல்ல நண்பன் அவர்தான்
என்னை யென்றுங் கைவிடமாட்டார்

அனுபல்லவி
சொந்தம் மாறலாம் - நல்ல பந்தம் மாறலாம் மென்
நேசரென்றும் மாறவேமாட்டார்
நேசரென்றும் மாறவேமாட்டார்!!

சரணம் (1)

நல்லதும் தீயதும் மெல்லாம்; மறிவார் (2);-
என்னை நன்மையிலே நடத்திடுவார்
பொல்லாப்பு யென்னை யென்றும் மணுகாமல் -தன்
கைகளினால் மூடிக்கொள்ளுவார்!!
கைகளினால் மூடிக்கொள்ளுவார்!! (எந்தன்..)

சரணம் (2)

நிழலாக நினைவாக கூடவருவார் (2)-
பாவச் சேற்றில் லென்னை விடமாட்டார்
வானம் பூமி யெல்லா முன் கையில்தருவார் - எனை
வான்வீட்டி லிருக்கச் செய்வார்!!
வான்வீட்டி லிருக்கச் செய்வார்!! (எந்தன்.. )

சரணம் (3)

அல்லேலூயா அல்லேலூயா பாடிடுவேன் (2)
தேவ தூதரிலும் மேலாக்கினார்
இன்னாளி லென்னுயிரே பிரிந்தாலும் -என்
நேசரென்னைப் பிரியவேமாட்டார்!!
நேசரென்னைப் பிரியவேமாட்டார்!! (எந்தன்.. )


அவருக்கும் இடங்கொடு

பல்லவி

இயேசு வல்லவர் ஆவி யுள்ளவர்
பாரில் லுள்ளோரிலே அவரே நல்லவர் - (இயேசு..)

அனு பல்லவி

துன்பம் முன்னை ஓருபோதும் மணுகாது - அவரை
ஸ்தோத்தரித்தால் இன்பம் மென்றும் விலகாது.. இயேசு..

சரணம்

உந்தன் நெஞ்செல்லாம்சுமையாக ச்சுமக்கின்றதா-அந்த
நெஞ்சத்தில் அவருக்கும் இடங் கொடுப்பாய்
பாரமெல்லாம் பஞ்சாக மாற்றிடுவார் – எந்த
சோகமெல்லாம் துரும்பாக்கித் தூக்கியெறிவார்! (இயேசு.. ..)

சரணம்

நாங்கள் மந்தைக்கூட்டம் போலவே இருக்கின்றோம் - அவரே
மேய்ப்பனாகி எம்மை என்றும் நடத்திடுவார்
பச்சைப் புல்வெளியில் என்றென்றும் மேய்த்திடுவார் àஅன்பு
பாசமுடன் எங்களுக்கு மோட்சந்தருவார்! (இயேசு.. ..

இசையும் அவரே

பல்லவி

நாதா நீ என் நெஞ்சில்
வா.. வா..-இயேசு

அனு பல்லவி

தினம் பாமாலை நான்
சூட்ட பா கொண்டு தா.. தா.. சாதா

சரணம் (1)

நீயன்றி ஒரு தொய்வம்
என் வாழ்வில் ஏது..
நீயின்றி என் வாழ்வில்
ஒழி என்ன கூறு

நான் பாடும் சரணங்கள் நீ தந்ததாகும்
நீ கேட்டு மகிழத்தான் என் பாடல் ஊறும்

இன்னொரு பிறவி என்றால் அன்றும் உன்னைப் பாட
வரம் இன்றே தருவாய் அருளைப் பொழிவாய்
அடியேன் ..சரணம் சரணம் - நாதா

சரணம் (2)

நான் எந்தன் நெஞ்சோடு
உனை ஏந்தும் நாளில்
நீ யென்னைக் கண்ணோடு
தினம் காப்பாய் தோழில்

நினைக்காத மனம் என்றும் கனியாத காயே!
மலராத மனம் என்றும் முணம் இல்லப் பூவே!

மானிட பிறவி தந்தாய் மௌனத்தில் உன்னைக் கண்டேன்
மறவேன் மறவேன் நானுன்னை மறவேன்
தினமும் தருவேன் சரி கம பதநி - நாதா
 

Mail Usup- truth is a pathless land -Home