Home > Tamil Diaspora - a Trans State Nation - தமிழ் அகம் - ஓர் உணர்வா, அல்லது இடமா? > Switzerland > கறுப்பு ஜூலை நினைவாக "சாவிலும் வாழ்வோம்" நினைவு கூரல் Tamils - a Trans State Nation:Switzerland கறுப்பு ஜூலை நினைவாக "சாவிலும் வாழ்வோம்" நினைவு கூரல் 22 July 2007 [see also Indictment Against Sri Lanka - 'Genocide '83 and Appeal by Swiss Forum to UN Secretary General, 25 July 2007]
Courtesy Puthinam: [சுவிஸ் நிருபர்] சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரில் கறுப்பு ஜூலையின் 24 ஆவது ஆண்டு நினைவாக "சாவிலும் வாழ்வோம்" நினைவு கூரல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (22.07.07) சிறப்பாக நடைபெற்றது.
சுவிஸ் மகளிர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்விவில் தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் குலம் அண்ணா ஏற்றி வைத்தார்.
நினைவுச்சுடரினை சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட பேர்ண் மாநிலத்தைச் சேர்ந்த காசநோய் மருத்துவ ஆலோசகர் மார்கிரட்டா ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து மாவீரர்களுக்கும், போரில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
மலர் வணக்கத்தினை பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் ஆரம்பித்து வைக்க, மக்களும் தங்கள் உணர்வுபூர்வமான மலர் வணக்கத்தினை செலுத்தினர். அரங்க நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், கறுப்பு ஜூலையினை நினைவு கூரும் கவிதையும் காட்சியும், எழுச்சி நடனங்கள், வீணை இசை, வில்லிசை, சிறப்புரைகள் ஆகியன இடம்பெற்றன.
இதனிடையே சுவிஸ் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் நாளை மறுநாள் புதன்கிழமை "சாவிலும் வாழ்வோம்" நிகழ்வின் கவனயீர்ப்பு நிகழ்வு சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
கறுப்பு ஜூலையினை முன்னிட்டு இவ்வாரம் முழுவதும் சுவிசில் ஆலயங்களில் சிறப்பு பூசைகளுக்கு உரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
|