"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
ம.தனபாலசிங்கம் 2 October 2005
இந்த மாபெரும் ஒன்று கூடலில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். எனக்கு முன்பு பேசியோர் வவுனியாப் பிரகடனம் பற்றி விரிவாக விளக்கியுள்ளனர். எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் அன்னிய சிங்களராணுவம் எமது மண்ணை விட்டு வெளியேற வேண்டும் என்பது முதலாவது கோரிக்கை. எமது மக்களை கொன்றுகுவித்து, எமது சகோதரிகளை கற்பளித்து, எமது சிறுவர்களை பாடசாலைகளில் குண்டு வீசி கொலை செய்து, கிரிசாந்திகளை கடத்தி கற்பழித்து புதை குழிகளில் புதைத்து, ஏதிலிகளாய் தேவாலயங்களிலும், கோவில்களிலும் அடைக்கலம் புகுந்த பெண்களையும் சிறார்களையும் கொன்று குவித்த அன்னிய சிங்கள ராணுவத்திற்கு எம்மண்னில் இருக்க என்ன தகுதி. அதனால்தான் அவர்கள் உடனடியாக எம்மண்ணைவிட்டு வெளியேறவேண்டும் என வவுனியாப் பிரகடனம் வேண்டுகின்றது. அத்தோடு எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தை வேண்டுகின்றோம். எமது போராட்டம் நீதியானது, நியாயமானது, தர்மத்தின்பாற்பட்டது. " எப்பொழுதெல்லாம் அதர்மம் தலைதூக்கி தர்மம் நலிவுறுகின்றதோ அப்பொழுதெல்லாம் நான் வருவேன் " என்றான் கீதாசிரியன். அவன் வரக்காணோம். ஆனால் எம் உடன்பிறப்புக்கள் ஆணாகப் பெண்ணாக விடுதலைப்படையாக ஈற்றில் அடிபணியமறுக்கும் தேசமாக அவதரித்துச் சென்ற எம் மண்ணும் இந்தப்போராட்டத்தை ஒரு யோகமாக தவமாக அவர்கள் வரித்துக் கொண்டுள்ளமையும் எமது மக்களை ஆகர்சித்துக் கொண்டுள்ளதன் வெளிப்பாடுகளில் ஒன்றே பொங்கு தமிழ் எழுச்சிகளாகும். பசித்த வயிறோடு எங்கள் பூபதி அம்மா மட்டக்களப்பில் தவம் இருந்தும் " பஞ்சம் படை வந்தாலும் இபாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவமோ நாங்களடி ஆறுமுகன் தஞ்சமடி " என யோகசுவாமிகளால் பாடப்பட்ட நல்லூரான் வீதியிலே தன்னை அழித்து காந்தி பிறந்த தேசத்தை தலை குனிய வைத்த எங்கள் திலீபனும் எமது தேசத்தின் ஆத்மாவுடன் கலந்து விட்ட சக்தியும் நாமறிந்ததே. விடுதலை வேட்கை என்னும் நூலில் எமது மக்களின் தணியாத சுதந்திர தாகத்தை அடேல் பாலசிங்கம் பின்வருமாறு கூறுகின்றார்
ஆம் தமிழ் ஈழத்தின் மூத்த கவிஞர்களில் ஒருவரான முருகையன் 1992 இல் எழுதிய கவிதை ஒன்றில்
இன்று இறைமை அரசியல்யாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு, என்றெல்லாம் பிதற்றுகிறார்கள். தமிழ் மக்கள் தமது இறைமையை என்றுமே சிங்களத்திடம் அடைவு வைக்கவில்லை சிங்கள தேசத்தின் அரசியல் யாப்பினை வரைவதில் அவர்கள் பங்குபற்றவும் இல்லை. எமது தாயக எல்லைகளை நாம் சிங்களத்துடன் இணைக்க சம்மதம் அளிக்கவுமில்லை, அன்று பிரித்தானியா எம்மைக் கேட்காது எமது மண்ணை சிங்களத்துடன் இணைத்தார்கள். இன்று அதே பிரித்தானியா எம்மை வேண்டா விருந்தாளிகள் எனக்கூறுகின்றனர். இதுவே அவர்களது இறுதி நடவடிக்கையாக இருக்கலாம். தமிழ் மக்கள்மேல் சவாரி செய்வதை எம்மக்கள் ஏற்கப்போவதில்லை என்பதை காலம் அவர்களுக்குப் புகட்டும். ஏனெனில்
என்ற பாரதியின் சபதமும்
என ஏங்கிய பாரதிதாசனாரின் கனவுகளும் தமிழ் ஈழமண்ணில் நிழல் அல்ல நிசமாகின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் வீரமும் தன்நம்பிக்கையும் கொண்ட மக்கள் கூட்டம் பொங்கு தமிழாக எழுச்சி பெற்றுள்ளதை காண்கின்றோம்....
இன்று எம்மண்ணின் பெரும் பகுதி அன்னிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அங்கு நஞ்சணிந்த வீரர் நாடமைத்து வருகின்றனர். புதுவையார் கூறுவதுபோல் இனிமேல் பேச்சுவார்த்தை என்பது
அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் சிரஞ்சீவித்தன்மையே வவுனியாப் பிரகடனத்தின் சாராம்சம் எனலாம்.
தமிழ் ஈழத் தேசியத்தலைவர் கூறியதுபோல்
வவுனியாப் பிரகடனம் இதனையே வலியுறுத்துகின்றது. எமது போராட்டத்தின் தர்மம் அது தரித்துள்ள காண்டீபம் காலத்தை மாற்றிக்கொண்டிருக்கும் காட்சிகள் எம் கண்முன்னே விரிகின்றது .
|