தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Tamil Diaspora - a Trans State Nation > Pongu Thamizh  > International Federation of Tamils to Yarl Pongu Thamizh > Struggle for Tamil Eelam

International Federation of Tamils to Yarl Pongu Thamizh

30 September 2005

"..இந்த வரலாற்று விரிவில் அனைத்துலக சமூகம் சார்பில் அனைத்துலக தமிழர் கூட்டமைப்பான நாங்களும் பங்கேற்றோம் என்கின்ற பெருஉணர்வுடன் இன்றைய உங்கள் குரலின் உயிர்தாங்கி எங்கள் குரலும் தொடர்ந்தும் ஒலிக்கும் என்பதை இந்நாளில் மீள உறுதி செய்கின்றோம்...தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்.." [also in PDF]

30.09.2005

அன்பு பொங்கும் யாழ் பொங்குதமிழ் சமூகமே!,

உஙக்ள் பொங்கு தமிழ் எழுச்சி எட்டுத்திக்கும் பரவும் வகை செய்வோம்!

இலங்கைத்தீவின் வடக்குக்கிழக்குத் தமிழீழ தாயகம் பொங்குதமிழின் எழுச்சியினால் சிவந்து கிடப்பதை உணர்வுடனும், உரிமையுடனும் போற்றி, இன்றைய யாழ் பொங்குதமிழ் எழுச்சி வெற்றி பெற அனைத்துலக தமிழ் சமூகம் சார்பில் வாழத்துகின்றோம.

போரும்துன்பமும் உச்சமான காலத்தில்,  தாயகம் - தேசியம் - சுயநிர்ணயம் என்கின்ற
ஈழத்தமிழர்களின் ஆதாரஇருப்பின் தளததில் நின்று மக்கள் போராக புயல்வீச ஆரம்பித்த பொங்குதமிழ், இன்று இணக்க முயற்சிகள் படிப்படியாக தோல்விகண்டு, கடும் சிங்கள தேசியவாதம் மீண்டும் தலையெடுக்கும் காலத்தில் உரிமைக்குரலாய் ஒலித்து ஒளிர்கின்றது.

சிறீலங்கா ஆக்கிரமிப்பு இராணுவக் கெடுபிடிகள் மத்தியில் தமீழீழச் சமூகத்தின்
பிரகடனமாக வெளிப்படும் இன்றைய நிகழ்வு அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்த்து வெற்றிபெறும் என்கின்ற பெருநம்பிக்கையை நாங்கள் கொண்டுள்ளோம்.

இன்று ஐரோப்பிய சமூகம், தமிழர்களின தலைமைக்கு எதிராக நீதீயறற் நடவடிக்கையை எடுத்துள்ள காலச்சூழலில் தமிழ் சமூகமானது தன் தலைமையின் பின்னால் உறுதியுடன் நிற்கின்றது என்கின்ற வலுவான பிரகடனத்தை இந்தப் பொங்குதமிழ் உலக சமூகத்திற்கு வெளிப்படுத்தும் எனவும் நம்புகின்றோம்.

அன்று யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் முன்னெடுப்பில் கருக்கொண்டு ஜெனீவாவில்
ஐக்கியநாடுகள் சபையின் முன்றல் வரை விரிந்து
- பரந்த வரலாற்றைக் கொண்டது இந்தப் பொங்குதமிழ் எழுச்சி என்பதை இந்த நாளில் நினைவூட்ட விரும்புகின்றோம்.

இந்த வரலாற்று விரிவில் அனைத்துலக சமூகம் சார்பில் அனைத்துலக தமிழர் கூட்டமைப்பான நாங்களும் பங்கேற்றோம் என்கின்ற பெருஉணர்வுடன் இன்றைய உங்கள் குரலின் உயிர்தாங்கி எங்கள் குரலும் தொடர்ந்தும் ஒலிக்கும் என்பதை இந்நாளில் மீள உறுதி செய்கின்றோம்.

நன்றி
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு
ஜெனீவா - நியூயோர்க்

 

Mail Usup- truth is a pathless land -Home