செப்தெம்பர் 22, 2005
ரொறன்ரோ
தலைவர் யாழ் பொங்குதமிழ் ஏற்பாட்டுக்குழு யாழ்ப்பாணம்.
பொங்குதமிழ் 2005
அன்புடையீர்
பொங்குதமிழ் 2005 சீரோடும் சிறப்போடும் எழிலோடும் பொலிவோடும் நடக்க எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொங்குதமிழ் தமிழீழ விடுதலைப் போராட்டதை மக்கள் மயப்படுத்துவதில் மகத்தான வெற்றி கண்ட இயக்கம்.
பொங்கு தமிழ் மீசைத் தமிழ்மன்னர் ஆண்ட தங்கத் தமிழீழத்தை மீண்டும் ஆள நினைப்பதில் என்ன குறை என சூளுரைத்த பேரெழுச்சி!
பொங்கு தமிழ் 'நாங்கள் எங்கள் வீடுகளுக்குச் செல்வதற்காக இராணுவத்தினரே நீங்கள் உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள்!'
என்ற முழக்கத்தை தமிழீழத்தை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப் படைக்கு அறிவித்தல் கொடுத்த பேரியக்கம்!
பொங்கு தமிழ் சொல்லும் செய்தி அனைத்துலக நாடுகளின் மனக்கதவைத் தட்டட்டும்! பொங்கு தமிழ் விடுக்கும் செய்தி கனேடிய அரசின் செவிப்பறையை எட்டட்டும்!
இப் பொங்கு தமிழ் பொன்நாளில் கண்டம் விட்டுக் கண்டம் வந்தாலும் தாயக விடுதலைப் பயிருக்கு நாளும் பொழுதும் நீர் வார்ப்போம் எனச் சூளுரைக்கிறோம்!
இப் பொங்கு தமிழ் நன்னாளில் மண்மீட்புப் போருக்கு தோள் கொடுக்கும் உங்களுக்கு நாங்கள் கை கொடுப்போம் என உறுதி கூறுகிறோம்!
தலைவர்
|