பொங்கு தமிழ் எழுச்சிக்கு ஆயத்தமாகிய பெண் செயலாளிகள் அரங்கு 18 September 2005
சத்தியின் வடிவம் பெண்கள் அவர்களுக்கு சரியான இடம் கிடைத்து விட்டால் இந்த பூமியின் சரித்திரத்தையே வெற்றி உடைய ஒன்றாய் படைத்து விடுவார்கள். ஆத்தினை வீறாப்பும,; பலமும் பொறுமையும் உடையவர்கள். அவர்களின் அடுப்பங்கரை அரசியலின் பரிணாம வளர்ச்சி தேசத்தின் விடிவுக்காய் ஒன்றிணைபவர்களாயும், தேசியம் நோக்கிய ஒன்றிணையும் நிகழ்வாயும் அமைகிறது.
ஆத்தகைய வலுவுடைய நிகழ்வு ஒன்று 18.09.2005 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. யாழ் குடாநாட்டின் வலிகாமம், யாழ்ப்பாணம், தீவகம், வடமராட்சி, தென்மராட்சி என 5 வலயங்;களிலும் உள்ள அத்தனை கிராமங்களில் இருந்தும், ஊரில் எல்லா சந்து பொந்துகளில் இருந்தும் புறப்பட்ட ஆயிரம் பெண்கள் பிரதிநிதிகள் ஒன்று கூடினர். ஆவர்கள் அரட்டை அடிப்பதற்காய் இணையவில்லை. எங்கள் ஈழத்து அரசின் அங்கீகாரத்துக்காய் தேசியம் பற்றி கதைப்பதற்காய் பொங்கு தமிழ் - 2005ற்கு பணிபுரிய பெண் செயலாளிகளாய் ஆயத்த அரங்கில் இணைந்தனர்.
இப் பெண்கள் அணி திரள்வினை அரங்க செயற்பாட்டுக் குழுவும், பெண்கள் பண்பாட்டு மையமும் ஒழுங்கு செய்தது. இதற்கான ஒத்துழைப்பினை சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையும், பல்கலைக்கழகத்தினரும் வழங்கினர்.
அரங்கச்செயற்பாட்டுக்குழு, பெண்கள் பண்பாட்டு மையம் சார்ந்த பெண் செயலாளிகள், உயிர்ப்ப+க்குநர்கள் அவர்களுடன் இணைந்த கைவினை பெண்கள் ஆகியோரின் செயற்பாட்டில் இணைந்த மாதர்சங்க பிரதிநிதிகள் முன்பள்ளி இணைப்பாளர்கள், சு.னு.ழு கள் இவர்கள் ஊடாக திரட்டப்பட்ட பெண் செயலாளிகள் ஆயிரம் பேர் அன்றையதினம் ஒன்று கூடினர்.
ஆரங்கச் செயற்பாட்டு குழுவின் அரங்க கீதங்களும், அரங்க செயற்பாடுகளும் அவர்களை உணர்வு தளத்துடன் உண்மைகளை மீள தம்முள் சிந்திக்க செய்தது. கைகளை உயர்த்தியும் கரங்களைத் தட்டியும் பொங்கு தமிழ் கீதங்களை தாமும் இணைந்து பாடியும் தம்முடைய இன்றையநிலை பற்றிய கதைகளை கூறியும் அவர்கள் ஒன்றிணைந்து வெளிப்படுத்திப் பங்கு கொண்டனர். இன்றும் தொடரும் இராணுவத்தின் அட்டூழியம் பற்றி ஓர் 65 வயதுடைய புங்குடுதீவை சார்ந்த அம்மா கூறுகையில்,
இரவுகளில் விளக்கு எரிஞ்சா வீட்டுக்கு ஆமி வந்து விளக்கை உடைச்சு நொருக்கிப் போட்டுப் போறான்.
மதகலில் வசிக்கும் ஓர் கிறீஸ்தவப்பெண் கூறுகையில்
சனிக்கிழமையில் கடற்கரையில் உள்ள எங்கட கோயிலுக்க போக ஆமிக்காரன் ஐ.சி கேக்கிறான் இல்லாதவையை திருப்பி அனுப்புகிறான்
இன்னும் ஒரு பாடசாலை மாணவியின் தாயார் கூறுகையில்
எங்கட பிள்ளைகள் படிக்கிற பள்ளிககூடத்துக்குப் பக்கத்தில் ஆமிக்காம்ப் இருக்கு பள்ளிக்கூட இடைவேளைக்கு பிள்ளைகள் மலசல கூடம் போனால் ஆமிக்காரன் மதிலோரமா வந்து குந்தி இருந்து பாக்கிறான். புpள்ளைகள் என்ன செய்வது
இவ்வாறு எத்தனையோ இராணுவவன்முறைகளின் பிடியில் இன்று யாழ் தமிழ் மக்கள் நிர்கதியாக்கப்படுகின்றனர். இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் விடைதேட
எங்கள் நிலத்தில் எங்கள் பலத்தில் எங்கள் சுயத்தை நாமே நிர்ணயிப்போம்
என்ற உறுதியுடன் பொங்கு தழிழர்களாய் மக்களை அணிதிரட்டும் நிகழ்வில் ஆயிரம் பெண் செயலாளிகளும் ஆயத்தமாகினர். இந்த நிகழ்வில் கலந்து உரையாற்றிய கௌரவ காராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் உரையாற்றறுகையில்
பொங்குதமிழ் என்றால் என்ன? அது ஏன் தேவை? ஆதில் பெண் செயலாளிகளின் பங்கு என்ன? என பல வினாக்களுக்கு விடை கூறித்தெளிவு படுத்தினார்.
குலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் கூறுகையில்
இன்று ஒரு சரிந்திர பெருமை யாழ் பல்கலைக்கழக கலையரங்கில் இடம்பெற்றிருக்கிறது. ஆயிரம் பெண்கள் இங்கு திரண்டுள்ளனர். இன்று வீரம் மிக்க புறநாணூறு எழுதப்பட்டு விட்டது
என பெண்கள் பொங்கு தமிழ்-2005 ………. செயற்பட முன்வந்துள்ளமை பற்றி தெளிவுபடுத்தினார்.
ஏதிர்வரும் 30ஆம் திகதி நடக்கவிருக்கும் மக்கள் எழுச்சியான பொங்கதமிழில் மக்களை தெளிவுபடுத்தி விருப்புடன் அழைத்துவரும் பெரும் பணியில் கால்பதிக்க பொங்கு தமிழ் உழைப்பாளர்களாய் உறுதி ப+ண்டு ஆயிரம் பெண்களும் சத்தியம் செய்தனர். ஆயிரம் மக்கள் பத்தாயிரமாகி பத்தாயிரம் பல லட்சங்களாகி அணியணியாய் மக்கள் பொங்கு தமிழராய் எழுச்சி பெற்று ஒன்று திரள்வதற்காய் இந்தப் பெண் செயலாளர்கள் பணிசெய்ய புறப்பட்டனர்.
வீரம் விளைகிறது பெண்ணின் நெஞ்சிலே பாச ஒளி வீசி தாய் மண் விடிய வா
என்று எழுச்சி பெருக பெண் செயலாளிகள் புறப்பட்டுவிட்டனர்.
க.துகாரதி (K.Thukarathy) அரங்க செயற்பாட்டுக்குழு.
|