தமிழ்த் தேசியம்

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Thus have we seen in visions of the wise !."

- Tamil Poem in Purananuru, circa 500 B.C 

Home

 Whats New

Trans State NationTamil EelamBeyond Tamil NationComments

Home > Tamils - A Transtate Nation > Eelam > Once Upon a Jaffna - இறைக்கும் பேயும் இதர பேய்களும்

Once upon a Jaffna
இறைக்கும் பேயும் இதர பேய்களும்

C.Kumaraparathy
[to read the Tamil text you may need to download & install a Tamil Unicode font from here -
for detailed instructions please also see Tamil Fonts & Software]


இன்றைய  Once Upon Jaffna  நிகழ்ச்சி ஒரு கோடை கால முன்னிரவுவேளையில் நடை பெறுகிறது. தோட்டத்தின் ஒரு தொங்கலில் - எல்லையில் பயிர்களுக்கு தண்ணீர் கட்டிக்கொண்டிருக்கும் கட்டத்தில் இதை ஆரம்பிக்கிறேன். இந்நிகழ்ச்சிக்கு ஆதாரமான பின்னணியை முதலில் கொஞ்சம் சொல்ல வேண்டும்.

அப்பொழுதெல்லாம் மின்சாரம் இன்னமும் ஊரை எட்டிப்பார்க்கவில்லை. காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை எல்லையுடன் இரவைப் பகலாக்கும் இந்த அதிசயம் நின்றுவிட்டது. கோவிலடியையும் அதையட்டிய முச்சந்திக் கடைகளிலும் மட்டும் பெற்மோக்சு எனப்படும் காஸ விளக்குகள் புஸ -புஸ என்ற ஹம்மிங் சுருதியுடன் இருளை ஒரு சிறு பிரதேசத்திற்கு வெளியே விரடட எத்தனித்துக் கொண்டிருக்கும். இவை கூட பக்டரிச் சங்கு பத்து மணிக்கு ஊதிக் கார்வை அடங்கும் கையுடன் நிறுத்தப் பட்டுவிடும்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக ஊர் வீடுகளில் கை விளக்குகளும் அரிக்கோன் லாந்தர் எனப்படும் ¤உரரிசாந¦ லாமபஸ ம் மின்மினி பூச்சிகள் போல் மினுங்கிக் கொண்டிருக்கும். இவைகூட இருளின் அந்தகாரத்தை மேலும் அதிகப்ப் படுத்துவதாகவே இருக்கும். தெரு விளக்குகள் கிடையாது. அதுவும் அமாவாசை இரவில் எதிரில் வரும் ஆளை இனங் கண்டு கொள்ள முடியாத கும்மிருட்டு. உருவமும் உடுப்பும்தான் அவுட்லைனாக தெரியும். இருளை கத்தி கொண்டு வெட்டலாம் போலிருக்கும். அவ்வளவு அடர்த்தி.

பகலில் விகற்பமில்லாமல் இயல்பாக இருந்த இடங்கள், பொருட்கள், சத்தங்கள் எல்லாம் சூரியன் மறைந்த பின்பு கொஞ்சம் கொஞ்சமாக ஒரு விகாரமான மாறுதல்களைப் பெற்றுவிடுகிறது. பின்னேரம் குது¡கலமாக விளையாடிய ஆலமரத்தடிப் பிரதேசம் பல கறுப்பு அர்த்தங்கள் பொதிந்த சூனியக்காரிகளின் பிரதேசமாகிவிடும். அரச மரத்தில் தொங்கும் உமல்களுக்குள் ஈன்ற ஆடு மாடுகளின் இளங்கொடிகள். பகலிலேயே இந்த மாமிச சங்கதி பிடிப்பதில்லை. இரவில் என்லோ இவை ஆவிகளுக்கான படையலாகிவிடுகிறது. இந்தப் பிராந்தியத்தைக் கடந்து முச்சந்திக் கடைகள் இருக்கும் வெளிச்சப் பிராந்தியத்திற்குள் செல்வது நடுக் காட்டை கடப்பது போன்ற ஒரு யாத்திரை. வீட்டில் யாருக்கோ வயிற்றுவலி என்று அவசரமாகக் மருந்துக் கடையில் சூரணமும், இஞ்சிச் சோடாவும் வாங்கச் சென்ற ஒரு இரவுதான் இந்த விகற்பமான மாற்றத்தின் முழு பரிமாணத்தையும் என்னால் உணர முடிந்தது.
கவனம் நேயர்களே, கறுப்பண்ணன்மார், நாச்சிமார், கொத்தியாத்தைகள், முனி உலாவரும் இருண்ட யாழ்ப்பாணம் இதுதான்.

கல்யாணத்திற்கு பலகாரம் சுடும் பொழுது முதல் சூடு அடுப்படி நாச்சியாருக்கு படைப்பார்கள். இவை சாம்பலுடன் அடுப்புக்குப் பக்கத்தில் கிடந்து அடுத்த நாள் பல்லிகளுக்கு விருந்தாகும். சில சமயம் அதோ அந்தத் து¡ரத்துப் புளியங்கூடலுக்குள் இருந்து ஆந்தை அலறும் குரல் அடிவயிற்று நரம்புகளை முறுக்கி திகிலு¡ட்டுகிறது.
சில மழை கால இரவுகளில் வேள்வி மடைகள் ( வயிர கோவிலில் படையல் ) நடக்கும் சாமம் சாமமாக பறை மேளம் அதிர்ந்து கொண்டிருக்கும். இந்தச் சூனிய இரவுகளிலிருந்து ஊரைக் காபாற்றுவது எங்கள் குல தெய்வம் தலைசிட்டி வயிரவர்தான். அவரும் அவரது பரிவாரங்களும் ரோந்து செல்லும் சமயமும் இதுதான். வயிரவர் வந்து இளைப்பாறிவிட்டுச் செல்ல புதிய துணி விரித்த கதிரை ஒன்று மரியாதையாக விந்தையில் வைக்கப்பட்டிருக்கும். இவற்றையெல்லாம்தான் காத்துக் கறுப்பு என்பார்கள். யாழ்ப்பாணத்து பாரம்பரிய நம்பிக்கைகள், லஙெநெடஸ, ஒலகலஒர¦ உருவாகும் தளம் இந்த இரவுகள்தான்.

அன்பர்களே, இது ஒரு திகில் கதையல்ல. உங்கள் எதிர்பார்ப்புக்களை ஆரோகணத்தில் ஏற்றிச் சென்று, பின்னர் ¡நதிசலிமாஷ ஆக அவரோகணத்தில் கொண்டுவரும் செப்படி வித்தை எனக்குத் தெரியாது. ஆனால் இந்த யாழ்பாணத்து இரவுகளை பற்றி சொல்வது இந்த இடத்தில் அவசியமாகிறது.

மீண்டும் தண்ணீர் கட்டும் இடத்திற்கு வருவோம். அப்பொழுதெல்லாம் நீர் இறைக்கும் இயந்திரங்கள் பாவனைக்கு வரவில்லை. தோட்டத்திற்கு இறைப்பதற்கு முவர் தேவை. துலா- ஏற்றம் மிதிப்பதற்கு ஒருவர், துலாக் கொடியில் பட்டை கட்டி இருக்கும். பட்டையில் நீரெடுத்து வாய்க்காலுக்கு விடுபவர். வாய்க்காலில் வரும் நீரை பாத்திகளுக்கு திருப்பி விடுவதற்கு வே¦ருவர். இதையே தண்ணீர் கட்டுவது என்பது. ஆக முன்று ஆட்கள். பொதுவாகவே சிறுவர்கள்தான் தண்ணீர் கட்டுவார்கள். கடினமான வேலையல்ல என்பதால் பூராயம் - பராக்கு பார்ப்பதற்கு அவகாசம் இருக்கும்.
வாய்காலில் சிறகடித்துக் குளிக்கும் காகங்கள், உம்..உம்..உம் என்று முணுமுணுத்தபடி வேலிகளில் புழுத் தேடும் செண்பகங்கள், பயிற்றம் பாத்தியில் மேயும் மைனாக்கள், அபூர்வமாக பூத்த முள் முருங்கை சிவப்புப் பூக்கள், நீர் பட்டதும் வெடிக்கும் வெடிவலவன் விதைகள், அத்துடன் முச்சந்தி தேநீர்கடை §டியோவிலிருந்து மிதந்து வரும் பாடல்கள். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

உணர்வுகள் மழுங்காத வயதில் எல்லாவற்றிலும் ஒரு லயிப்பு. ஒரு அதிசயம் இருந்தது. இப்பொழுதுகூட அன்று பிடித்த மண்வெட்டிபிடியின் வழுவழுப்பை உணருகி§ன். காலில் பற்றிய ஈரச்சேற்றின் ஸபரிசம் பசுமையாக இருக்கிறது.

நேயர்களே கதைக்கு வருவோம். அன்றும் இப்படித்தான் பொழுது போவது தெரியாமல் தண்ணீர் கட்டிக் கொண்டே தோட்டத்தின் எல்லைக்குச் சென்றுவிட்டேன். வீட்டிலிருந்து கூப்படு தொலைவிற்கும் மேலே சென்யிற்று. கையெழுத்து மறைந்துவிட்ட நேரம். நான் இதுவரை ரசித்து வந்த சத்தங்கள், காட்சிகள திடீரென மறைந்துவிட்டதாக உணருகி§ன். கிளி குருவிகள் கூடு தேடிச் சென்றுவிட்டன. சீன்கள் மெதுவாகவே என் உணர்வில் பதியாமல் - ¢மபரெசபெதிறல¦ - ஆக மாறிவிட்ட விஷயம் மெல்லிய அதிர்ச்சியுடன் உறைத்தது. ஒழுங்கையில் ஆளரவம் அடங்கிவிட்டது. பாத்திகள் வடமுகங்கள் சரியாகத் தெரியவில்லை.

உத்தேசமாகவே வெட்டிக் கட்ட வேண்டியிருந்தது. திடீரென தனிமையில் விடப்பட்ட உணர்வு மேலோங்கத் தொடங்கியது. இந்த மாற்றங்கள் கமுக மர ஈரப்பாத்தியில் விழும் பழுத்த பாக்குளின் சளீர் டப் என்ற சத்த்ததால் ஏற்பட்டதா? அங்கு பழந்தின்னி வெளவால்கள் பாக்குகளைப் பதம் பார்க்கின்றன. அல்லது வேலிப் புற்றிலிருந்து சொச்..சொச்..சொச் சொர்ர்ர் என்ற பாம்பு கொறிக்கும் ஓசை எழுப்பிய திகிலா? பாம்புகள் ஏழு முறை இப்படிக் கொறித்துவிட்டு இரை தேட வெளியேறும் என்பதாக ஞாபகம். நான் வெளியே வரப் போகி§ன் கவனம் என எச்சரித்துவிட்டு எலிபிடிக்க வெளியேறுமாம்.

ஒரு குருட்டு வெளவால் முகத்திலடித்துவிட்டு செல்லவும் அது நடந்தது. து¡ரத்தில் கூ ..கூ..கூ என்று கூப்பிடும் குரல். பின்னால் யாரோ வருவது போன்ற உணர்வு. திரும்பிப் பார்த்தேன் யாரையும் காணவில்லை. இப்பொழுது ஒரு பேயைக்காணும் சாத்தியங்கள் நிச்சயமாக உருவாகிக் கொண்டுவருவதை உணர்ந்தேன். அப்பொழுதுதான் அந்த விஷயம் நடந்தது. ஏதோ அமான்ஷயமான நெடி அடித்தது. இது வெளவால் நாற்றமாக இருக்கலாம் என்று நம்ப முயன்றும் சமாதானமாகவில்லை.

கழுத்தில் குளிர்ந்த விரல் எலும்புகள் படும் ஸபரிசம். இது பிரமையா அன்றி உண்மையா என்பதை உறுதிப்படுத்த நான் நின்று நிதானிக்கும் அளவுக்குப் பேயன் அல்ல. நின்றிருந்தால் இந்தக் கதையை உங்களுக்குச் சொல்ல இன்று இருந்திருப்பேனோ தெரியாது. மனதில் பாநிச றஉததஒநஸ அமுக்கப்பட்டு விட்டது. உடம்பெல்லாம் அட்றிலீன் டைர¦லிந பாய்ச்ப்பட்டுவிட்டது. கொழுந்துப் பாத்திகளுக்கூடாக முருக்கம் முள் சிராய்ப்பதையும் பொருட்படுத்தாமல் குதிக்கால் பிடரியில் அடிக்க வீடு நோக்கி ஓட்டம் பிடித்தேன். இடையில் வாய்க்கால்களில் சறுக்கி விழுந்திருக்கலாம். சரியாக ஞாபகம் இல்லை.

வீட்டு முற்றத்தில் இறைத்த பட்டையை காய்ச்சுவதற்கு நெருப்பு முட்டிக் கொண்டிருந்த வேலுப்பிள்ளை பதை பதைத்து எழும்பினார். முதலில் அவர் உறுதிப்படுத்தியது விஷக் கடியல்ல என்பதைத்தான். அதன் பின் அவர் முகத்தில் நமட்டுச் சிரிப்பு. அடக் கடவுளே ஸ்ரீ இடுப்பிலிருந்த துணி என் கையில் எப்படி வந்தது? அப் பொழுததான் என் நிர்வாணநிலையை உணர்ந்தேன். பேசாமல் கொட்டப் பெட்டிக்குள்  இருந்து வைரவ கோவில் விபூதியை என் நெற்றியில் பூசி கவசம் சொன்னார்.

இந்த இடத்தில் நான் உங்களுக்கு ஒரு கர்ண பரம்பரைக் கதையைச் சொல்ல வேண்டும். இது இறைக்கும் பேய் பற்றிய கதை. கமக்காரர்கள் மத்தியில் உலவிய நம்பிக்கை. விடியும் முன்பாக இறைப்புக்கு முறைவைத்து அவரவர் படலைகளுக்கு முன்பாக நின்று கூ..கூகூ. என்று கூவியழைத்துக் கொண்டு இறைக்கப் போவார்கள். ஓரு முறை இப்படி விடிசாமத்தில் தண்ணீர் கட்ட கூட்டிச் செல்லப்பட்டவர், தண்ணீர் காட்டாறுமாதிரி பெருகி வருவதை கண்டு ஏதோ மர்மம் இருக்க வேண்டும் என்று ஊருக்கு ஓட்டம் பிடித்தாராம்.

அவருக்கு நட்சத்திர நிலைகள் கொஞ்சம் தெரியும். நடுநிசி வேளையில் இப்படிக் கூப்பிடுகிர்களே என்ற சந்தேகம் மனதை அரித்துக் கொணடே இருந்திருக்கிறது. பின்னர் ஊரைக்கூட்டிக் கொண்டு தீவட்டிகளுடன் தோட்டக் கிணற்றடிக்குச் சென்றிருக்கிர்கள். அங்கு அவரது நண்பர் இரத்தம் கக்கிய நிலையில் விழுந்து கிடப்பது தெரிந்ததாம். முன்மவராக வந்து கூப்பிட்டது இறைக்கும் பேய் என்பது ஐதீகம்.
அன்றைய கதைக்குத் திரும்புவோம். பரபரப்பு அடங்கியதும், முற்றத்தில் அமர்ந்து லாந்தர் வெளிச்சத்தில் மாட்டுக்கு ஓலை கிழிக்கிர்கள். நல்ல பைம்பல். நீல வானத்தில் அள்ளித் தெளித்தாற் போல் நட்சத்திரங்கள் வைரங்களாக ¦ஐ¡லிக்கின்றன.

 இவர்களிடையே மிகவும் பத்திரமாக இருப்பதாக உணர்ந்தேன். சற்று முன் நடந்த மனப் பிராந்தி முழுவதையும் மறந்து விட்டேன். ஒழுங்கையில் சிலர் கைகளில் தீவட்டிகளுடன் செல்லும் ஓசையரவம். தீவட்டியின் ஒளிச் சுடர் வேலிக்கூடாக எதிரில் இருக்கும் வெள்ளைச் சுவரில பல நிழல் கோலங்களை மாறி மாறி வரைந்து கொண்டு சென்று மறைந்தது. வேலுப்பள்ளையும் விடை பெற்றுச் செல்வது சங்கடம் படலை கிறீச்சிடுவதிலிருந்து தெரிந்தது. நிம்மதியாக கண்முட நித்திரை ஆட்கொண்டது.
வேலுப்பிள்ளை பின்னால் ஒரு புரட்சி செய்து சிறு சரித்திரம் படைத்தவர். முதன் முதலில் ஊருக்கு வூல்ஸலி இறைக்கும் இயந்திரம் வாங்கியவர். காணி அடகு வைத்து மிசின் வாங்கி வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்தவர். அவரைத் தொடர்ந்து பலரும் வூல்ஸலி, ஈசிபிறைம் இயந்திரங்கள் வாங்கினார்கள். இந்த இயந்திரப் புரட்சியைத் தொடர்ந்து விடியுமுன்பு எழுந்து இறைக்கும் பழக்கம் மறைந்து விட்டது. இறைக்கும் பேயின் கதையும் இதன் பிறகு வலுவிழந்து அருகிவிட்டது. பேயும் அத்துடன் மறைந்து விட்டதா? வேறு ருபத்தில் இன்னும் உலாவி வருகிறதா?
பாருங்கள், நான் ஒரு பகுத்தறிவுவாதி.  எனவே எனக்கு பேய்கள் ஆவிகளில் எல்லாம் பகலில் நம்பிக்கை கிடையாது. ஆனால் சாடையான பயம். இப்படித்தான் ஒரு முறை லோவர் ஹட் லிட்டில் தியேட்டருக்கு தமிழ்ச்சங்க விழாவுக்கு போயிருந்தேன். நிகழ்ச்சி கொஞ்சம் போரடிக்கவே அரங்கத்தின் முன்னாலுள்ள இருண்ட மரக் கூடலிலுள்ள பழைய கல்லறைகளை சுவரஸயமாகப் ஆராய்ந்து கொண்டிருந்த சமயம். தெருவிளக்கு ஒரு கல்லறையில் வட்டமாக விழுந்திருந்தது. ஆயிரத்து எண்ணு¡ற்றிச் சொச்சமாம் ஆண்டில் இங்கிலாந்து நடுநாடடுப் பகுதியிலிருந்து எப்படியோ கடல் கடந்து இங்கு வந்து வாழ்ந்து, மடிந்தவர் கல்லறை. அவரின் சரித்திரம் எப்படி?

முன்னோடிகளாக வந்தவர்கள் வாழ்க்கை முறை எப்படி இருந்திருக்கும் என்ற கேள்விகளில் லயித்துக் கொண்டிருக்கையில் யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பிரமை. திரும்பினால், அருகே ஒரு வயோதிபர் உருவம், கையில் தடியுடன். இங்கிலாந்து நடுநாட்டு வாடை பேச்சில் தெறிக்க காலநிலை பற்றி ஒப்புவித்துவிட்டு தான் காற்ட வந்ததாகக் குறிப்பிட்டார். நம்மைப் போல் மனிதர்தான் எனப்பட, பயத்திலிருந்து விடுபட்டதால் உற்சாகம் பீறிட்டது. திடீரென அவர் தோன்றியதில் ஆவியோ என்று நான் திடுக்கிட்ட விஷயத்தை சொன்னேன். அவர் கெக்கட்டம் விட்டு பொல்லைத் நிலத்தில் தட்டியபடி சிரிக்க நானும் சேர்ந்து சிரித்தேன்.

அவர் தொடர்ந்து உரக்கச் சிரித்துக் கொண்டிருந்ததில் என் சிரிப்பு அடங்கி மீண்டும் பயம் வலுத்தது. கந்தர் சஷடி கவசத்தை மனம் ஒரு முலையில் அனிச்சையாக அருளிக் கொண்டிருந்தது. இது காத்தாட எந்த இடத்திலிருந்து எழுந்து வந்திருக்கும் என்பதில் இப்பொழுது சந்தேகம் இருக்கவில்லை. மீண்டும் அது யதார்தமாக கதைத்த தோரணை கொஞ்சம் தைரியம் கொடுக்க, பேயாயிருந்தாலும் ஏதாவது நியாயமான உடன்படிக்கைக்கு வரக் கூடிய பேயாக இருக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்த சுதாரிக்கும் தைரிய இடைவெளியை பயன்படுத்தி கூடுமானவரை நாகரீகமாகப் பின்வாங்கினேன்.

சிறுவயது போல் தலை தெறிக்க ஓடும் சுயாதீனம் இந்த வயதில் கிடைப்பதில்லை. அரங்க முன்றலின் ஒளிவெள்ளத்திற்கு வந்த பிறகுதான் திரும்பிப் பார்க்கத் தைரியம் வந்தது. இருளில் எதுவும் தென்படவில்லை.

அரங்கத்துள் நுளைந்து எனது சீட்டில் அமர்ந்தேன். மனைவியின் உருவப் பொலிவைக் கொண்டு சீட்டைக் கண்டு பிடிப்பது சிரமமாயிருக்கவில்லை. பேயை எதிர் கொள்வதைவிட போரடிக்கும் நிகழ்ச்சி பரவாயில்லைப் போல் இப்¦¡ழுது தோன்றியது.. ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். என்னை உற்று நோக்கிய சகதர்மிணி, ஏ என்ன ஒரு மாதிரி பேயறைஞ்சது போலை இருக்கிறியள், என்ன சங்கதி ஏ என்று தனக்கேயுரித்தான வெண்கலக் குரலில் கேட்க, முன் பின் நாலு வரிசைகளில் இருந்தவர்கள் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்தார்கள்.

நிகழ்ச்சியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள அவர்கள் ஒரு சந்தர்பத்திற்காக காத்திருந்த மாதிரி எனக்குப் பட்டது. இந்த இக்கட்டில், பேயைபற்றிய எனது அபிப்பிராயம் மாறியது, மசானத்தில் இருப்பதுதான் இதைவிடப் பரவாயில்லைப் போல் தோன்றியது. தவிரவும் அது பேய்தான் என்பது ருசுவாகவில்லையே. இச் சமயத்த்தில் தஹ¦ கநஒஞந ட¦வில ¢ஸ றதெதரெ தஹாந தஹ¦ உநகநஒஞந என்ற பழமொழி ஞாபகம் வர நிகழ்ச்சியைக் கவனிக்கத் தொடங்கினேன்.

எனது ஆரம்ப கால உத்தியோக வாழ்க்கை அழகான மலைநாட்டில். இங்கு ஏற்பட்ட இரு அதீத அனுபவங்களைச் சொல்ல முடியும்.

இப்படித்தான், ஒரு முறை கினிகத்தேனையிலிருந்து நோர்ட்டன் பிரிட்ஜ செல்லும் குறுகிய கணவாய் பாதையில் நள்ளிரவுக்கு மேல் தனியக் காரில் வந்து கொண்டிருக்கிறேன். ஒரு அருபமான எதிரி போல பனி வேகமாக படர்ந்து கண்முன் அடர்த்தியாகிக் கொண்டிருந்தது.

இப் பொழுது திக்குத் திசை தெரியாமல் பால் கடலிற்குள் சென்று கொண்டிருப்பது போலிருந்தது. டிஒங லாமபஸ ஊடுருவ முடியாத வெள்ளை யடிப்பு. வீடுகள் இல்லாத வெறுமையான பிரதேசம் இது. தவிர இந்தத் தை மாத பனி முட்டத்திற்கு பெயர் போன பகுதி. கார் கொஞ்சம் §ட்டைவிட்டு இறங்கினாலும் அதல பாதாளம். அந்தியேட்டிக்குக் கூட ஒரு எலும்பு எடுப்பது கஷடம். இங்கு ( மேல் நாடுகள்) போல் §ட்டு விளிம்பை சுட்டும் தடுப்புகளோ, பூனைக் கண்களோ (சாதஎஸ யெ¦) அங்கு கிடையாது. §ட்டு என்ற ஒன்று ஒழுங்காக இருப்பதே பெரிது.

இப்போது யாரோ பின் சீட்டில் இருப்பது போன்ற பிரமை. வெள்ளைச் சேலையில் ஒரு பெண்ணாக இருக்கலாம் என்று தோன்றியது. பனி முட்டமே பெண் உருவம் கொண்டு வந்து பின்னால் இருப்பது போல பட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் கழுத்தில் ஐஸ போன்ற கை படப் போகிறது என மனக் குறளி சொன்னது. அதன் பிறகு என்ன நடக்கும் என்பதில் ஐயம் இல்லை. நாளைக்குத் தான் காரை ஆயிரம் அடி கீழே கெஹல் கமுவ ஓயாவில் கண்டு பிடிப்பார்கள்.

இதற்கும் மேல் காரை ஓட்டுவது முட்டாள்தனம் என உணர்ந்ததுதான் தாமதம், வருவது வரட்டும் என பிறேக் அடித்து நிற்பாட்டினேன். பின்னால் பார்க்காமல் இறங்கி காரைச் சுற்றி வலம் வந்தேன். பனியில் ஒரு ஓவியமாக ஒரு ஓடையின் அருகே ஒரு பாழடைந்த வீடு லேசாகத் தெரிந்தது. பல முறை பகலில் இந்த இடத்தைக் கடந்து சென்றிருக்கிறேன். பேசாமல் கை நடுங்க நெருப்புக் குச்சியை பற்ற வைத்து சிகரட் பிடிக்க எத்தனித்தேன். பல குச்சிகள் வீணாயின. இந்த இடைவெளியில் ஒரு பெண் என்னுடன் கதைக்க எத்தனிப்பது போல அடிக்கடி உணரத் தொடங்கினேன். ஆரம்ப அதிர்ச்சி தணிந்து இப் பொழுது எனது தன்னம்பிக்கை சுமாராக திரும்பியது. நிதானமாக இருப்பதாக பாவனை செய்து காரில் ஏறி ஹாரன் ஒலித்து, உள் லைட்டைப் போட்டு பார்த்தேன்.

இதற்குள் து¡ரத்தே பஸ ஊர்ந்து ஊர்ந்து வருவது தெரிந்தது. சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செய்யும் மாத்தறைக் கூட்டம் ஏ சிறிப்பாதே சமனல ஹந்தபெனே ஆலோக்கய ஏ பாடிக்கொண்டிருந்தார்கள். றைவர் இறங்கி விசாரித்தார். பாதை தெரியவில்லை கொஞ்சம் நிற்பாட்டி செல்கிறேன் என்றேன். இந்த மனுஷய சம்பாஷணையில் அமானுஷயம் முற்க விலகிவிட்டது. நான் வழிகாட்ட பஸ பாடலுடன் பின் தொடர்ந்தது.

அடுத்த நாள் நோட்டன் டிப்பாரட்மெண்ட் கிளப்பில் நந்திரிஸஹாமி - அதுதான் எங்கள் முத்த லைன்ஸமன் ( வயது 60க்கு மேல். பிறப்பு சர்டிபிக்கேட் மாற்றி வைத்து சேவையிலிருப்தாகவும் கூறுவார்கள்). முன்று டிராம் கல் ஓயா சரக்கு ( றைரவஈ டீ¡லஇ ¡ரராசக ரஒம மஒலாஸஸஸெ, பஒஒர மாநஸ டரிநக) இறங்கி¢ய பின் இவர் வாயைக் கிளறினேன். ஒரு கதை சொன்னார். அணை கட்டும் காலத்தில் ஒரு பெண் அந்த இடத்தில் விழுந்து தற்கொலை செய்த கொண்டதாகவும், அவரின் ஆவி உலாவுவதாகவும் கூறினார். இந்த ஆவி அந்தப் பாழடைந்த வீட்டில் குடிகொண்டிருககிறதாம்.

சில இரவுகளில் அழகான பெண் போல் வெள்ளைச் சேலை உடுத்து, கினிகத்தேன வீதியில் வரும் வாகனங்களை நிறுத்தச் சொல்லி கை காட்டுமாம். இப்படி நிற்பாட்டி லிப்ட் கொடுத்த சில லொறிகள் பள்ளத்தில் விழுந்திருக்கின்றன என்ர். ஆனால் நிறுத்தாமல் கத்தரகம தெய்யோவை தோத்தரித்துக் கொண்டு கடந்து சென்ல் ஆபத்து எதுவும் இராது என்ர். மற்றப்படி எதுவும் தொந்தரவில்லாத ஆவி என்ர். காலிப் பகுதியிலிருந்து இஙகு வந்தவர். அப் பிரதேசத்திற்குரிய பேயோட்டும் சடங்குகளில் பரிச்சயம் உண்டு.

பேய்களைக் கண்ட மாத்திரத்தில் அன்றி அவைகளின் தராதரம் அறிந்து பயப்படுகிற ஆசாமி. ஆவிகளுக்கும் பல குறைபாடுகள், அசாத்தியங்கள் இருப்பதாகவும், நாம் பயந்து சாவதைப் போல் அவை எல்லாம் வல்லவைகள் அல்லவாம். தவிரவும் அவைகளின் செயல்பட்டு முறை மிகவும் குறுகியது அதை மீறி அவைகளால் வேறெதுவும் முடியாது என்றும் உத்தரவாதம் அளித்தார். ஏ ஏன் மாத்தையா இரவு அந்தப் பக்கத்தால் வந்தீர்களா ஏ என்று கேட்டார். ஒரு டிராம் வாங்கிக் கொடுத்துவிட்டு பதில் கூறாமல் அகன்றேன்.

நுவரெலியாவுக்கு அண்மையில் ஒரு அருவியும் நீர்வீழ்ச்சியும் சந்திக்கும் ரம்மியமான சூழலில் ஒரு பழைய பங்களாவில் (1890) எதேச்சையாக இரவு தங்க நேர்ந்தது. அருவி சலசலப்பதை அறையிலிருந்தே கேட்கலாம். ஜன்னல் திரைகளை விலக்கினால் அருவி தெரியும். பைன் மரக்கூடலின் கீழிருந்த கராஐ¢ல் காரை விட்டுவிட்டு நடுங்கும் குளிரில் பங்களாவை நோக்கி வருகி§ன். பங்களா முழுவதும் இருட்டில் தோய்ந்து கொண்டிருந்தது. மெலிதான மழைத் து¡றல்.. என பின்னால் யாரோ பின் தொடர்ந்து வருவது போன்று உணருகிறேன். பங்களாவிலிருந்து மேற்கத்திய சாஸதிரீய சங்கீதம் மென்மையாகக் ஒழுகிக் கொண்டிருந்தது. ....

வெளிச்சமான கொழும்பு நகர் நாகரீகத்திடையேகூட அந்த ஜன நெரிசலிலும் ஒரு வெள்ளைகார துரைச்சானியம்மாளின் ஆவி வருடமொருமுறை டாச்சி பிடித்து உலாவருமாம். வருடத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் கனத்தை மயானத்துக்கு அருகே இது டாக்சியை நிற்பாட்டி ஏறி கறுவாக்காட்டு பங்களா ஒன்றன் முன்னால் இறங்கி கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்று மறைகிறது. றைவர் பேச்சுக் கொடுத்தாலும் மெளனமாக அது பாட்டுக்கு இருந்துவிட்டு, கார் நின்றதும் திரும்பிக்கூடப் பார்கரகாமல் போய் விடுமாம். கதவு திறந்து முடிய அசுகையே இருக்காது. வாடகை எடுத்துக் கொண்டு வரத்தான் போயிருக்கிர் என நினைத்து றைவர் காத்திருப்பார்.

கொஞ்ச நேரங் கழிந்து வீட்டிலிருந்து ஒரு துரை வெளியேறி றைவருக்கு நன்றி சொல்லி விட்டு அதிகமாகவே டிப்ஸ் கொடுப்பார். என்னதான் மெளனமாக வந்திறங்கினாலும், ஏதோ வித்தியாசத்தை உணர்ந்த டாக்சி றைவர்கள் என்ன மடம் ஒரு மாதிரி என விசாரிப்பாரகள். துரையோ மிகவும் இயல்பாகவே இன்று தனது மனைவியின் இறந்த தினம். இப்படி நடப்பது வழமை என்று கூறுவாராம். கொழும்பு டாக்சி ஓட்டுனர்களிடையே நிலவி வந்த ஐதீகம் இது.
 

Mail Usup- truth is a pathless land -Home