"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Tamilnation > Library > Eelam Section > விழுதாகி வேருமாகி .....போரியல் பதிவுகள் -
TAMIL NATION LIBRARY: Eelam
Book Review by M.Thanapalasingham, 20 February 2005 [see also Selected Writings by M.Thanapalasingham]
கிரேக்க நாகரிகத்தின் இலக்கியச் சாதனையாகவும், மேற்கத்தைய நாகரிகத்தின் அடிப்படை அத்திவாரமாகவும் கொள்ளப்படும் ஹோமர் (Homer) என்னும் கிரேக்க ஆதிக்கவியால் பாடப்பட்ட இலியாட் (Illiad) என்னும் நீண்டபாடல் ஒரு போர் இலக்கியமாகும் அதன் கருவாக அமைந்தது றோயன்(Trojan) போரின் பத்தாவது ஆண்டுப் போர் நிகழ்வுகள் வேகமாகச் செல்லும் பாதங்களைக் கொண்ட அச்சிலியஸ் (swift footed Achilles) கடவுளைப்போன்ற ஹெக்ரர் என்னும் வீரனைக் (God like Hector) கொல்வது இப்போரின் தலைவிதியை நிர்ணயித்தபோதும் இக்காவியத்தில் போரும், மாவீரமும், இழப்புக்களும், மரணங்களும், இளமையின் மரணத்தால் பாதிக்கப்பட்டு தவிக்கும் முதுமைகள் பெண்கள் இளம் சிறுவர்கள் இவற்றிடையே கதைக்கோலங்கள் தொடர்கின்றது. வேத வியாசரின் மகாபாரதத்தைப் போன்று கடவுள்களும், தேவர்களும் மனிதர்களுடன் இந்த யுத்ததில் பங்கேற்பதே இலியாட். கப்டன் மலரவனின் போர் உலா ஒரு போர்ப்பரணியாக 1993 இல் வெளிவந்ததை பலர் அறிந்திருக்கலாம். இது தமழ் மக்களின் போர் இயல் பதிவுகளுக்கு ஒரு முன்னோடி எனலாம். இதன் பின் 2001 ஆம் ஆண்டில் வெளஹவந்த சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள் விடுதலைப்புலிகளின் படையணியின் ஒரு சிறப்புப் பிரிவின் சாதனைகளை விளக்கிநிற்கக் காணலாம். இவற்றில் இருந்து வேறுபட்டு நிற்கும் போரியல் பதிவுகளாக விழுதாகி வேருமாகி விரிவுபெறுகின்றது "எதிரிமட்டும் அறிந்ததை எல்லோரும் அறியட்டும் " என்ற தேசியத் தலைவரின் எழுத்தோவியம் இப் பதிவுகளுக்கான நோக்கத்திற்கு முத்தாரமாகின்றது.
என்னும் தேசியத் தலைவரின் ஆழ்ந்த ஞானத்தின் விளைச்சலே விழுதாகி வேருமாகி என்பதை அழுத்திக் கூறவேண்டிய அவசியம் இல்லை. கேணல் விதுஷாவின் மொழியில் கூறுவதாயின் "வரலாற்றை ஆக்கியோரின் வரலாறு " ஆகவும் இந்நூல் அமைகின்றது. எமது விடுதலைப் போராட்டத்தில் பெண்படையணியில் முதல் வித்தாகிய மன்னாரில் குளித்து எடுத்த மணிமுத்தான 2ஆம் லெப்.மாலதி படையணியின் பதிவாகவும் இது அமைகின்றது. நுஃலாசிரியர்கள் : அ.காந்தா, செ.புரட்சிகா, மலைமகள் என்போராவர். இந்த மாதத்துடன் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையே மூன்றாம் தரப்பான நோர்வே நாட்டின் அனுசரணையுடன் அமூலுக்கு வந்த யுத்த நிறுத்தம் மூன்றாவது ஆண்டை தொட்டு நிற்கின்றது. இதனது ஆரம்ப வைபவங்களில் ஒரு நிகழ்வு இங்கு பதிவாகின்றது.
ஆ, நல்லது. இந்தப் பாதை திறக்கிறதைப்பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?' பாதை திறக்கப்போகின்றோம் என்று "கதை " விட்டவாறு வவுனியாவில் இருந்து மாங்குளம் வரையும், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம்வரையும் பாதையை மூடிவைத்திருந்த படையினரை முறியடித்து, பாதையை நாம் இன்று திறப்பதைப்பற்றிச் சொல்வதா? சமாதனத்திற்கான போர் என்று பெயர் சூட்டி தமிழர்களை அழித்தொழிக்கும் போரைச் செய்தவர்களின் முகமூடியைக் கிழித்து, உண்மையான சமாதானத்துக்கான கதவுகளை இப்போது நாமே திறந்துவிட்டிருப்பதைச் சொல்வதா? எதைச் சொல்வது? நுஃலாசிரியர்கள் இக்கேள்வியை நூலில் பல இடங்களில் எழுப்புகின்றனர். இந்த பாதை திறப்பிற்காக இவர்கள் நடந்த இரத்தம் தோய்ந்த பாதை, அதில் பெண்போராளிகள் சந்தித்தவை, சாதித்தவை இழந்தவை யாவுமே பதிவுகளாகின்றன. மன்னகுளச் சமரில் இவர்களின் போர்திறம் படிப்போரை திகிலடையவைக்கின்றது. இறந்த சிறி லங்காவின் நூற்றுக்கணக்கான சடலங்களை செஞ்சிலுவைச் சங்கமூலம் ஒப்படைத்ததை கூறிவிட்டு..... "ஆனால் மன்னகுளத்தின் நீண்ட அடர்ந்த காட்டு மரங்களிடையே இழக்கப்பட்ட சிறப்பு அணியினரின் மானம், மரியாதை, கௌரவத்தை எடுத்து ஒப்படைக்க எந்தச்சங்கமும் முன்வரவில்லை " அன்று பனங்காமத்து வன்னிச்சிகள், இன்று அவர்களையும் விஞ்சிநிற்கும் புலிப்பெண்கள். மண்மீட்பு போர் அத்தனையிலும் எமது சகோதரிகள், எங்கள் சொந்தங்கள், எமது உறவுகள் தரையிலும், கடலின் முதுகிலும் சவாரிசெய்து சாதித்தவை இந்நூலில் புதிய போர்த் தமிழில் பதிவாகின்றது. 1999 தைப்பொங்கலை போரின் நடுவிலும் தழுவிய பதிவு நெஞ்சை நெகிழவைக்கின்றது.
மணிவாசகரின் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் என்ற அழகு தமிழில் போரின் நடுவிலும் நடைபெறும் பொங்கலும், எமது பண்பாட்டில் பெண்கள் புரியும் புரட்சியும் இகங்கு அழகாகப் பதிவுசெய்யப்பட்டுள்து. இது போல் குடிநீரும், குளிப்பும, இதற்காக இவர்கள் பட்டபாடுகள் யாவுமே பதிவாகின்றன. போரின் மத்தியிலும் போராளிகளின் கலை நிகழ்வுகள் மேடையேறிய நிகழ்வுகளும் பதிவாகின்றன. அவ்வாறான ஒரு நிகழ்வில் தேசியத்தலைவரும் கலந்து கொள்கிறார். அதில் ஒரு கருத்தாடல். சண்டையொன்றின் வெற்றியை தீர்மானிப்பது பயிற்சியா துணிவா என்பதே பொருள். விறுவிறுப்பான விவாதம். முடிவில் தேசியத் தலைவரின் உரை பதிவாகின்றது.
மொத்தத்தில் விழுதாகி வேருமாகி என்னும் போரியல் பதிவுகள் பெண்போராளிகளின் அபார ஆற்றலை, அவர்தம் அனுபவங்களை இதியாகங்களை அழகு தமிழில் பதிவுசெய்கின்றது. தமிழ் மக்களின் தொன்மையின் பெருமைகளை எல்லாம் பறைசாற்றி நிற்கும் தொல்காப்பியம் பெண்பாற்கு "அச்சமும், நாணமும். மடனும் ....
ஆண்களின் ஏகபோகமாக இருந்து வந்தது. தமிழ் ஈழப்போராட்டம் பெண்ணின் சமத்துவத்திற்கான போராட்டமாகவும் பரிணாமம் பெற்று நிற்கும் பார்வையையும் பதிவுகளையும் விழுதாகி வேருமாகி விளக்கி விரிவுபெறுகின்றது. சங்ககாலத்து ஒளவையின் தகடூர்யாத்திரை பரிசில்பெறுவதற்காக இடம் பெற்றது. இதில் ஆரம்பத்தில் அவள் ஏமாற்றம் அடைந்தாலும், விடாமுயற்சியால் வென்றாள். இன்று எங்கள் சகோதரிகளின் யாத்திரை நடுகற்கள் ஊடாக நடக்கின்றது. நடுகற்கள் இழப்புக்களினதும் சோகங்களினதும் அடையாளங்களல்ல. மாவீரத்திற்கான வீரவணக்க அடையாளங்களாக விழுந்தவர்களை விதையாக்கி, அந்த விதை வேராகியதால்தான் போராட்டம் தொடர்கிறது. இந்த நூலில் பதிவாகியுள்ளவை எதிர் காலத்தில் பிறக்க இருக்கும் வரலாற்று நாவல், காவியம் இபடத்துறை என்பவற்றிற்கு கருவாக அமையும் எனத் துணியலாம். |