"To us all towns are one, all men our kin. |
Home | Trans State Nation | Tamil Eelam | Beyond Tamil Nation | Comments |
Home > Tamil Language & Literature > தழைக்குமா தமிழ்? - கவிவேந்தர் கா வேழவேந்தன்
தழைக்குமா தமிழ்? [hear also "டாடி' என்றே அழைக்காதீர் இனிமை தோய தண்டமிழில் "அப்பா' வென்றழைத்திடுங்கள்! "மீடியா' என மொழிய வேண்டாம் நல்ல மென்தமிழில் "ஊடகங்கள்' எனக் கூறுங்கள் "பாடி' என்றே சொல்லாதீர் அழகாய் நந்தம் பழந்தமிழில் "உடலம்' என்றே கூறிடுங்கள்! "சூப்பர்' என்றே ஏன் பேச வேண்டும்? சொந்தச் சுவைத்தமிழில் "மிகநன்றே' என்றால் என்ன? "பேப்பர்' என்றே ஏன் மொழிய வேண்டும்? பேசும் பேச்சினிலே "தாள்' என்றால் தவறா? நாம் "சாஃப்ட்' என்றே ஏன் கூற வேண்டும்? தூய தாய்த் தமிழில் "மென்மை' என்றால் புரிந்திடாதா? "சேஃப்டியில்லை' எனப்புலம்பும் நீங்கள் நல்ல தேன்தமிழில் "காப்பில்லை' என்றால் தப்பா? "மம்மி' என்றே பெற்றவளைப் பிணமாக் காமால் மதுத்தமிழில் "அம்மா' வென்றழைத்தால் என்ன? "டம்மி' என்றே கூறுவதை மாற்றி, நந்தம் தண்டமிழில் "போலி' என்றே சொலக்கூடாதா? "செம்மொழி'யாய் நம்மொழியை அறிவித்தென்ன? சேய்த்தமிழர் தாய்த்தமிழை மிதித்து விட்டுத் தம்மொழியாய்த் "தேம்சுமொழி'யைத் தலையில் வைத்தால் சாகாமல் தீந்தமிழும் தழைப்ப தெங்கே? |